• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மாலைசூடி மஞ்சம் தேடி 31

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"டுமாரோ மார்னிங் நீயும் அந்த பொண்ணும் உங்க வீட்ல இருக்கனும்." அதற்கு மேல் விக்ரம் பேசிடவில்லை... அழைப்பையும் துண்டித்திருந்தான்.

"போச்சு... போச்சு.... எல்லாம் போச்சு... உன்னை யார் எனக்கு வந்த ஃபோன்காலை அட்டென் பண்ண சொன்னா? இப்போ மச்சானுக்கு என்ன பதில் சொல்லுவேன் நான்." என்று புலம்பினான் செம்பியன்.

சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் ஆள்காட்டி விரலை மட்டும் சுழற்றி "உண்மைய சொல்லு... ஹா.. ஹா.. ஹா" என்று அதே பாணியில் கூறினாள்.

அவள் முன்நெற்றியில் தட்டி "லூசா நீ? உண்மையா சொன்னா மட்டும் தப்பிச்சிடுவோம்னு நெனைக்கிறேயா!!! ஐயோ ஊருக்கு வேற வர சொல்லியிருக்குறாரே!!! என்னென்ன ப்ரச்சனை வரப் போகுதோ!!!" என்று மீண்டும் புலம்பினான்.

"யூ டோன்ட் வொரி ச்சாம்.... எல்லாரையும் நான் சமாளிச்சிக்கிறேன்... வா போலாம்"

"எங்க போலாம்?" என்றான் ஆச்சரியமாக,

"அதான் விபா அண்ணா வர சொல்லிருக்காங்கல்ல... வா... வா"

"அதுக்காக உடனே ஜோடி போட்டுட்டு கிளம்பிடுவேயா? இப்போ உன்னை யாரு கூட்டிட்டு போறதா இருக்கா!!!."

"உன் மச்சான் என்னையும் தான் வர சொல்லியிருக்காரு நியாபகம் வெச்சுக்கோ...."

"கொல பன்னிடுவேன் உன்னை... நீ ஒன்னும் வரவேண்டாம்... நான் மட்டும் போறேன்.."

"அதெல்லாம் முடியாது... எனக்கு ஒரு நல்ல ஆப்பர்ச்சுனடி கிடைச்சிருக்கு... நான் அதை மிஸ் பண்ணமாட்டேன்... நானும் வருவேன்."

இப்போது கொஞ்சம் பொறுமையாக சொல்லத் தொடங்கினான். "சொன்னா கேளு வருண்... நான் மட்டும் போறேன்..."

"அதுக்கில்லே ச்சாம்... ஏதாவது ப்ராப்ளனா நீயா தனியா சமாளிக்க முடியாதுல்ல... அதான் சொல்றேன்... நானும் வர்றேன்..."

"இல்லே வருண்... நான் மச்சானை சமாளிச்சிடுவேன்... ஆனா இந்த மலரையும், தாய்கிழவியையும் தான் சமாளிக்க முடியாது.... மச்சானாவது என்ன ஏதுனு கேட்டுட்டு தான் அடிக்கிறதா, அட்வைஸ் பன்றதானு யோசிப்பாரு.... ஆனா அக்காவும், ஆச்சியும் அடிச்சிட்டு தான் அடுத்த கேள்வியே..."

"அப்படினா நான் கண்டிப்பா வர்றேனே! ப்ளீஸ்... உனக்கு பதிலா நான் மலர் அண்ணிக்கிட்ட பேசுறேன் ச்சாம்..." என்று அவனுக்காக உண்மையாகவே வருந்திக் கூறினாள்.

"நீ வந்தா கதை வேற மாதிரி போயிடும் வருண்... நான் மொதோ மச்சான்கிட்ட பேசிட்டு உனக்கு கால் பண்றேன்... மச்சானுக்கு எல்லாம் ஓகே னா கண்டிப்பா அவரோட ஹெல்ப் கிடைக்கும்... சரியா?" என்றான் அவனும் அக்கரையோடு...

"சரி... பாத்து பேசு... என் லவ்வுக்கு பங்கம் வர்றா மாதிரி பேசினே... மவனே சாவடிச்சிடுவேன்..." என்று மிரட்டினாள்.

வேண்டா வெறுப்பாக "ம்ம்... ம்ம்..." என்றான்.

ஆனால் வருணிகாவோ மீண்டும் முதலில் இருந்து ஆரம்பாத்தாள்.

"ச்சாம் நானும் வரட்டுமா?"

"ஏய்... உனக்கு சொன்னா புரியாதா? ஏன் இப்படி என் உயிரை வாங்குறே!!!" என்று தனக்கு இருக்கும் டென்ஷனில் அவளிடம் கத்தினான்.

செம்பியனின் கோபத்தை கண்டிறாதவள், ஒரு நிமிடம் ஸ்தம்பித்து அவனையே வெறித்தாள். செம்பியனும் அதனை உணர்ந்து அவள் கையைப் பிடித்தபடி,

"வருண்... இப்போ என்ன நிலைமைல இருக்கோம்னு புரியுதா உனக்கு? நாம இன்னும் நம்ம ஸ்டடீஸ்-ஐ கம்ப்ளீட் பண்ணலே... இந்த நிலைமைல கல்யாணம்னு பேச்சை எடுத்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க? நீயும் உன் ஃபேமிலிக்காக உன் சிஸ்டர் ஹையர் ஸ்டடீஸ்க்காக வேலைக்கு போகனும்னு சொன்னே தானே!!! அதை மொதோ பாரு... அப்பறம் நானே உன்னை மச்சான்கிட்ட கூட்டிட்டு போறேன்... சரியா?" என்று எடுத்துக் கூறிட,

"உனக்கு தான் என் லவ் விளையாட்டா தெரியுது செம்பியன்" என்று கூறியவள் கண்கள் கலங்கி நின்றாள்.

"இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்கே! வருனும்னு நெனச்சோனே வந்திட முடியுமா? நீ தங்கியிருக்க இடத்துல என்ன சொல்லிட்டு வருவே!"

"ப்ரெண்டு வீட்டுக்கு போறதா சொல்லிட்டு வருவேன்.. அங்கே நான் பெய்டு கெஸ்ட் தான்... சோ ரெம்பலாம் துருவி துருவி கேள்வி கேட்கமாட்டிங்க..."

"இவ்வளவு நேரம் நல்லவளாட்டம் மண்டைய மண்டைய ஆட்டிட்டு இப்போ திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துலேயே வந்து நிக்கிறே!"

"எனக்கு ஒரே ஒரு டைம் விபா அண்ணாவை பாத்து பேசனும். அவ்ளோ தான்... அதுக்கப்பறம் அவங்க என்ன சொன்னாலும் நான் அக்ஸப்ட் பண்ணிக்கிறேன். சரியா?" என்று ஒருவழியாக செம்பியனை பிழிந்தெடுத்து அவன் சம்மதத்தைப் பெற்றாள்.

ஆனால் செம்பியன் சம்மதித்தானே ஒழிய, அவளை அழைத்துச் செல்லும் மனநிலையில் இல்லை. "சரி நீ ரெடியா இரு. நான் பஸ்ல டிக்கெட் புக் பண்ணிட்டு உன்னை வந்து அழச்சிக்கிறேன்..." என்றான்.

வருணிகாவும் தயாராகி செம்பியனுக்காக காத்திருந்தாள். ஆனால் அவன் வந்த பாடில்லை.

மகிழுந்தில் விக்ரமோ செம்பியனைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான்.

"செம்பியன் லவ் பண்றானா?"

"செம்பியனா லவ் பன்றான்?"

"செம்பியனுக்கு லவ் எல்லாம் செட் ஆகுமா?" என்று ஒரு கேள்வியையே பல கோணங்களில் தனக்குள்ளாகவே மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அந்தி சாயும் நேரம், சில்லென்று தென்றல் வீசிட, மகிழுந்தின் குளிரூட்டியை நிறுத்திவிட்டு கண்ணாடியை சற்றே இறக்கி வைத்தான். தென்றல் காற்றின் வருடலோடு, இன்னிசையின் இனிமையை ரசித்தபடி மீதிப்பயணத்தைத் தொடர்ந்தான்.

சற்று தூரத்தில் ஒரு உணவு விடுதி கண்ணில் தென்பட, அதனை விட்டால் அடுத்து இரவு உணவிற்கு திண்டாடத்தான் வேண்டும் என்று நினைத்து மகிழுந்தை நிறுத்தினான்.

சன்னல் வழியே சோழகம் வீச, சூரியையவளின் சிகழிகை தீண்டி, நுதற்கண்ணாய், பிறைநுதலில்
குழல் தவழ்ந்திட அதனை
கடைகண் பார்வையில்
கண்ட ஐயவன், கிரங்கிப் போனான்.

(சோழியம்- தென்திசையிலிருந்து வீசும் காற்று, சூரியை- தலைவி, சிகழிகை- கூந்தல், நுதற்கண்- நெற்றிக்கண், பிறைநுதல்- பிறை போன்ற நெற்றி, குழல்- ஒற்றைக் கூந்தல், ஐ- தலைவன்.)

'எப்படி பாத்தாலும் இவ்ளோ அழகா இருக்காளே!!! குழந்தை மாதிரி பப்பறப்பேனு தூங்குறதைப் பார்...' என்று மனதிற்குள் ரசித்தபடி, இருக்கை பட்டையை தளர்த்தி அவளருகே நகர்ந்து,

"பனி..." என்று மென்மையாக அழைத்தான்.

கண்களைத் திறவாமல் தன் கையை நீட்டி காற்றில் அவனைத் தேடியபடி அலையவிட்டாள். அவனது புஜங்கள் சிக்கிடவே இறுக்கமாக பிடித்துக் கொண்டு மீண்டும் தன் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

தன் தோள்பட்டையில் தலை வைத்து உறங்கியவளின் உச்சிவகிட்டில் தன் முகம் பதித்து அவளது கன்னம் தட்டி மீண்டும் அழைத்தான்.

"பனி..."

அப்போதும் கண் திறவாமல், "மாமா... என்னை தூக்கிட்டு போறிங்களா?" என்றாள்.

"பனி நாம வெளியே இருக்கோம் மா..."

"பரவாயில்லே... நம்ம வீடு தானே... செண்பா க்கா தப்பா நெனச்சிக்க மாட்டாங்க..." என்று அப்போதும் தூக்க கலக்கத்தில் பேசினாள்.

"பனி.... நாம ஹைவே-ல ஒரு ஹோட்டல் வாசல்ல இருக்கோம்..."

சட்டென கண்களைத் திறந்தவள் அவன் கூறியது உண்மை என்றவுடன், சூழ்ந்திருக்கும் இருளைக் கண்டு, 'மாலை ஸ்டூடியோவில் இருந்து புறப்பட்டது, இப்போது மணி எப்படியும் எட்டு இருக்கும் போலவே!' என்று யோசித்தபடி,

"மாமா... சாப்பிடுறதுக்காகவா இவ்ளோ நேரம் ட்ராவல் பண்ணி இங்கே அழச்சிட்டு வந்திங்க!!!" என்று அதிசயித்துக் கேட்டாள்.

ஏனென்றால் விக்ரம் இதுவரை சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. புதிவிதமாக ஏதேனும் சமைக்கிறேன் என்று கத்துக்குட்டியாய் அவள் எதை சமைத்து வைத்தாலும் அவனுக்கு மட்டும் அளவு தான். நன்றாக இருக்கும் பட்சத்தில் அவள் ஊட்டிவிட்டால் சற்று அதிகமாக உண்பான். அப்படிப்பட்டவன் இரவுணவிற்காக இவ்வளவு தூரம் வரமாட்டானே என்று ஆச்சிரியம் தான் அவளுக்கு.

"இதுக்கப்பறம் சாப்பாடு கிடைக்கிறதே டவுட் தான். அதான் உன்னை எழுப்ப வேண்டாயதாகிடுச்சு.... வா சாப்பிட்டுட்டு வரலாம்..." என்று கூறி மகிழுந்தைவிட்டு இறங்கினான்.

அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை. "இன்னைக்கு என்ன ஸ்பெஷல் மாமா? ஏன் ஹோட்டல் அழச்சிட்டு வந்திருக்கிங்க?" என்று மேலும் கேள்விகளை அடுக்கினாள்.

"ஒரு ஸ்பெஷலும் இல்லே... கொஞ்ச நேரம் தொனதொனனு கேள்வி கேட்காம வர்றியா?" என்று மெதுமெதுவாக கோபக்கார விக்ரம் எட்டிப்பார்க்கத் தொடங்கினான்.

ஆனால் பனிமலர் இப்போது வெறும் மலரல்லவே!!... அவனது பனியாயிற்றே!!! "நான் அப்படி தான் கேள்வி கேட்பேன்... நான் கேட்டா நீங்க பதில் சொல்லி தான் ஆகனும்..." என்று ஆணையிட்டவள், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்.

"சொல்லுங்க? இன்னைக்கு ஏன் ஹோட்டல் அழச்சிட்டு வந்திருக்கிங்க?" என்று அவன் முழங்கையோடு தன் கைகோர்த்து நடந்து வந்தாள்.

அவளது பேச்சிலும், உரிமையிலும் ஒரு பரவசம் அவனுக்குள் தோன்றிட, அதில் கர்வம் கொண்டு, அவளது கேள்விக்கு பதில் கூறினான்.

"இன்னு சிக்ஸ் ஹவர்ஸ் ட்ராவல் பண்ணனும்... அதான், டின்னர் சாப்பிட்டுட்டு நைட் பசிச்சா லைட்டா சாப்பிடுற மாதிரி பார்சல் வாங்கிட்டு போகலாம்..."

"இன்னு சிக்ஸ் ஹவர்ஸா!!? எங்கே போறோம்..."

"போனதும் தெரிஞ்சுக்கோயேன்..."

"அவ்ளோ நேரம்லா வெய்ட் பண்ண முடியாது... இப்போவே சொல்லுங்க..." என்று இருவருமாக பேசியபடி கை கழுவிக்கொண்டு, குளிரூட்டப்பட்ட தனியறை உணவு மேசைக்குச் சென்றனர்.

"சொல்றேன்... ஆனா நீ தான் கண்டுபிடிக்கனும்" என்று கூறியபடி தன் திறன்பேசியை அவள் கையில் கொடுத்தான்.

மறுக்காமல் வாங்கிக் கொண்டவள், அவனை கவனிக்கத் தொடங்கினாள்.

"இந்த உலகத்துலேயே நீ போகனும்னு ஆசைப்படுற இடத்தை ச்சூஸ் பண்ணு... அங்கே போலாம்" என்று சின்ன சிரிப்போடு கூறினான்.

தூங்கி எழுந்தவளுக்கு தான் எந்த இடமும் நினைவில் வரவில்லை. அதற்குள் பேரர் வந்து நிற்க, ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தான்...

"தெரியலே மாமா"

"சரி நானே சொல்றேன்... இந்த உலகத்துலேயே என் பொண்டாட்டிக்கு ரெம்ப பிடிச்ச இடத்துக்கு தான் அவளை கூட்டிட்டு போயிட்டு இருக்கேன்..."

"எனக்கு ரெம்ப பிடிச்ச இடம்!!!!!" என்று மீண்டும் யோசித்துவிட்டு, "இப்போதைக்கு நீங்க எங்கே இருக்கிங்களோ அங்கே இருக்கத் தான் எனக்கும் பிடிச்சிருக்கு.." என்று அவனை நெருங்கி அமர்ந்து மீண்டும் அவன் புஜத்தில் தலை சாய்த்துக் கொண்டாள்.

"அப்போ இதுக்கு முன்னாடி... ஐ மீன் பனிமலர் விக்ரம் பார்த்திபன்-னு சொல்லிக்கிறது முன்னாடி வரைக்கும்" என்று அவன் பாதி கேட்டுக் கொண்டிருக்கும் போது அவளுக்குத் தெரிந்துவிட்டது.

கண்கள் விரிய, முகம் பூரித்தபடி, "எங்க வீட்டுக்கா!!?" என்றாள்.

"ம்ம்ம்..."

"ஓ காட்... எப்படி மறந்தேன்!!!.... தாங்க் யூ சோஓஓஓஓஓஓ மச் மாமா..." என்று அருகில் இருந்தவனின் கன்னம் பற்றி இடவலமாக ஆட்டினாள்.

"போதும் விடு டி" என்று சிடுசிடுத்தான்.

அதையெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் அவள் இல்லை. "இப்படி திடீர்னு அழச்சிட்டு போறிங்களே!!! ஃபஸ்ட்டே சொல்லிருக்கலாம்ல, ஆச்சிக்கு வாங்கி வெச்சிருந்த சாரி எடுத்துட்டு வந்திருப்பேன்... நமக்கு தேவையானதும் எடுத்துட்டு வரலே.... இப்போ உடுத்து மாத்துக்கு கூட எதுவும் இல்லயே!!!..."

"நாளைக்கு எல்லாமே வாங்கிக்கலாம்... என்னென்ன வேணுமோ எவ்ளோ வேணுமோ வாங்கிக்கோ... ஹாப்பியா இரு... ஊருக்கு போறது உனக்கு ஓகே தானே..."

"எல்லாம் ஓகே தான். பட் மொதோவே தெரிஞ்சிருந்தா செம்பியாவையும் அழச்சிருப்பேன்? அவனை வர சொல்லட்டுமா?"

செம்பியனைப் பற்றி பேச்சு எழுந்ததுமே வருணிகாவின் நினைவு வந்தது விக்ரமிற்கு.... அந்த பெண்ணை அழைத்து வருவானா! என்று சந்தேகம் எழுந்தது. அவனிடம் பேசினாள் இது பற்றி கேட்கலாம் என்று யோசித்தபடி,

"ம்ம்ம்... கால் பண்ணு எங்கே வந்துட்டு இருக்கான்னு கேளு..."

"அப்போ அவனை வரச் சொல்லியிருக்கிங்களா? அவனுக்குத் தெரியுமா!!!"

"இப்போ கார்ல வரும்போது தான் சொன்னேன்... மார்னிங் வந்திடுவான்..."

"அப்போ ஓகே... நாமலே கூட்டிட்டு வந்திருக்கலாமே! ஏன் அவனை தனியா வர சொன்னிங்க?"

"அவன் ஃப்ரெண்டோட வர்றான்... இனி சாப்ப்பிட்டு முடிக்கிற வரைக்கும் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது... மூச்ச்ச்..." என்றிட, அதன் பலனாக ஒரு ஐந்து நிமிடம் அமைதி நிலவியது...

அதன்பிறகு பெண்ணவள் மீண்டும் வாய் திறந்தாள். "அப்பாவுக்கும், ஆச்சிக்கும் சொல்லிட்டிங்களா? திடீர்னு போயி நின்னா என்வோ ஏதோனு நினைக்கப் போறாங்க?"

"எல்லாருக்கும் சொல்லியாச்சு டி... கொஞ்ச நேரம் கம்முனு இறேன் டி" என்று கடுப்படித்தான்.

இப்போது குழைந்தபடி வந்தது அவளது குரல். "என்னை நீங்க சகிச்சிக்கிட்டு தான் ஆகனும்..." என்றவள் தான் சாய்ந்திருந்த அவனது தோளில் பற்கள் பதிய கடித்து வைத்தாள்.

"ஸ்ஸ்... ஆஆஆஆ... அடியேய்" என்று வெளியே கேட்காதபடி சன்னமாக கத்தியவன், அவளது தாடையைப் பிடித்து,

"நான் கடிச்சா என்னாகும்னு தெரியும்ல?" என்று அவள் இதழ்களைப் பார்த்தபடியே மிரட்டும் தோரணையில் வினவினாலும் கண்கள் வேறுவிதமான உணர்வைக் காட்டியது...

சரியாக கரடியைப் போல் தன் இருப்பைக் காட்டியது அவனது திறன்பேசி, குறுந்தகவல் வந்ததன் அடையாளமாக, அதிர்வுடன் ஒலி எழுப்பிட, விக்ரமின் கவனம் அதன்புறம் திரும்பியது.

அவன் எடுப்பதற்கு முன்பாகவே மலர் எடுத்து, "மொதோ உன்னை உடைக்கிறேன் பாரு... எப்போ பாத்தாலும் என் புருஷன் கையில சிணுங்கிக்கிட்டே இருக்கே நீ" என்று அதனுடன் தர்க்கம் செய்து கொண்டிருந்தாள்.

எங்கே தூக்கி எறிந்திடுவாளோ என்று அஞ்சி அவளது தோளைப் பிடித்து, "ஏய்... கொடு டி..." என்று மற்றொரு கையால் அதனைப் பறிக்க முயன்றான்.

இவர்களது சண்டையில் குறுந்தகவல் வந்த நபருக்கு அழைப்பு சென்றிருக்க, மறுமுனையில் "ஹலோ" என பெண்ணின் குரல் கேட்டதும், மலர் காதில் வைத்து,

"நீங்க அழைத்த நபர் தற்சமயம் மனைவியுடன்.." என்று கூறிக்கொண்டிருக்கும் போது விக்ரம் அவளது வாயை மூடினான்.

"ஹலோ யாரா இருந்தாலும் ஒரு டூ மினிட்ஸ்ல கால் பண்றேன்..." என்று விக்ரம் கத்தினான். மறுமுனை அழைப்பு துண்டிக்கப்படும் என்று எதிர்பார்க்க, மாறாக

"அண்ணி.... நான் அண்ணிக்கிட்ட பேசலாமா?" என்றாள் அவள்.

குரலைக் கொண்டே அது வருணிகா என்று அறிந்து கொண்ட விக்ரம், 'அண்ணினு முறை சொல்லித் தர்ற அளவுக்கு டெவலப் ஆகிட்டான் பையன்!!!!' என்று செம்பியனின் நினைவுக்குச் சென்றான் விக்ரம்.

"ஹலோ... யார் நீங்க உங்களுக்கு யார்கிட்ட பேசனும்?" என்றாள் மலர்.

"நீங்க மலர் அண்ணி தானே! செம்பியன் அக்கா?"

"ம்... சொல்லுங்க?"

"நான் செம்பியனோட ஃப்ரெண்டு... அந்த ராஸ்கல் என்னை உங்க ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஏமாத்திட்டான் அண்ணி."

அவளது அண்ணி என்ன அழைப்பிற்கு இப்போது தான் அர்த்தம் புரிந்தது மலருக்கு. விக்ரமைத் திரும்பிப் பார்த்து திருதிருவென முழித்தாள் மலர்.

அதற்குள் விக்ரம் ஃபோனை வாங்க, "வருணிகா நீ இருக்குற அட்ரஸ் எனக்கு அனுப்பி வை. நான் என் வீட்ல இருந்த கார் வர சொல்றேன்... சரியா?" என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டான்.

இங்கே தன்னிடம் பல கேள்விகளால் படுத்தி எடுத்துக் கொண்டிருந்த மலருக்கு, விக்ரம் எந்த பதிலும் சொல்வதாக இல்லை.

"உங்ககிட்ட தானே கேட்குறேன்... ஏன் என்கிட்ட சொல்லலே? எப்போ தெரியும் உங்களுக்கு?"

"நீ இன்னும் எத்தனை டைம் கேட்டாலும் என்னோடு பதில் இது தான், எனக்கு எதுவும் தெரியாது"

"பின்னே எப்படி உங்க நம்பர் அந்த பொண்ணுக்கு கெடச்சது?"

"அதை அந்த பொண்ணுகிட்ட கேளு... இல்லே கொடுத்த உன் தம்பிக்கிட்ட கேளு..."

"இப்போவே கேட்குறேன்" என்று திறன்பேசியை எடுத்திட, அதனைப் பறித்தவன்,

"இப்போவே இல்லே... மார்னிங் ரெண்டு பேரும் வருவாங்க... ரெண்டு பேரையும் ஒன்னா நிக்க வெச்சு கேளு... அதை வரை கம்முனு இரு..." என்று அவளை அடக்கினான்.

இரவு உணவு முடித்துவிட்டு மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர, மலருக்கு இப்போது தூக்கம் துளியும் இல்லை. விடியவிடிய முழித்துக் கொண்டே தான் வந்தாள்.

"பனி தூங்கலேயா?"

"தூக்கம் வரலே... தம்பி தம்பினு சொல்லி சின்னப் பையனாவே நெனச்சுட்டேன்... அவன் எவ்ளோ பெரிய காரியம் பண்ணிருக்கான் பாருங்க..." என்று புலம்பிட

"நீ நினைக்கிற அளவுக்கு பெரிய தப்பெல்லாம் இல்லே... அதுவும் இல்லாம அவனை கேட்டா தானே தெரியும்! எது உண்மைனு!" என்று அவளை மனதளவில் ஏற்க வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டான்.

இல்லம் வந்து சேரும் போது அவளும் அவனது மனநிலைக்கு மாறியிருந்தாள். அபிராமி ஆச்சி முதன்முதலாக இல்லம் திரும்பிய பேத்திக்கு ஆலம் சுற்றி உள்ளே அழைத்துச் சென்றார்.

அடுத்த ஒருமணி நேரத்திற்குள் சில நிமிட இடைவேளையில் மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து நின்றது.

முதலாமதில் ரத்தினமும் விசாலியும் வர, அடுத்ததில் உதியும், வினோவும் வந்தனர். சற்று நேரத்தில் செம்பியனும் வந்து நிற்க, மலர் அவனிடம் எதுவும் பேசிடவில்லை.

மூன்றவதாக வந்து நின்ற மகிழுந்தில் வருணிகா வந்து நிற்க, வினோ தான் ஆடிப்போனான்.

-தொடரும்.
 
Top