தாமோதரனும், ரத்தினமும் தங்களது நெருங்கிய உறவுகளுக்கு அலைபேசி மூலமாக தங்கள் இல்ல விழாவிற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர். அபிராமி ஆச்சி, செண்பகத்துடன் இணைந்து சமையல் ஆட்களிடம் விருந்து உணவிற்கு பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். (வருணிகா வந்தது செண்பகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரில் தான்.)
செம்பியன் ஒருபுறம் தன்னுடைய மற்றும் தன் தமக்கையின் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தான். இடையிடையே வருணிகாவின் தொல்லைகளை தாங்கியபடி அவளது 'விபா அண்ணாகிட்ட எப்போ கூட்டிட்டு போவே?' என்ற கேள்விக்கு ஒரே பதிலை பலமுறை கூறி சமாளித்துக் கொண்டும் இருந்தான்.
விக்ரம் ஆடை அலங்காரத்திற்கு தன் அன்னையுடன் இணைந்து சிறந்த கலைநிபுணர்களை உள்ளூர் சொந்தங்கள் மூலம் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தான்.
இவ்வளவு பரபரப்பிலும், மலருக்கு வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் போனது தான் அதிசயம். அவளது மனதையும் மூளையையும் அவளது ஆருயிர் தம்பியும், வருணிகாவும் ஆக்கிரமித்திருந்தனர்.
இதற்கிடையே விக்ரமிடம் இருந்து அலைபேசி அழைப்பு வர, எடுத்து பேசினாள்.
"பனி, நாங்க எல்லாரும் இன்னும் டுவென்டி மினிட்ஸ்ல உன்னை கூட்டிட்டு போக வர்றோம்... சோ ரெடியா இரு... லேட் பண்ணிடாதே!!!"
"எங்கே மாமா?"
"ட்ரெஸ் எடுக்கப் போறோம்னு சொல்லியிருந்தனே! மறந்துட்டேயா?"
"சாரி மாமா.... சீரியஸாவே மறந்துட்டேன்..."
"அது சரி... உனக்கு கவனம் இங்கே இருந்தாத் தானே!!! சரி சீக்கிரம் ரெடியாகு..." என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
கூறியது போலவே இருபது நிமிடங்களில் ரத்தினத்தைத் தவிர மற்ற நால்வரும் வந்திருந்தனர்... அபிராமி ஆச்சி உள்ளே அழைத்து இருக்கையில் அமரச் சொல்ல,
"ஆச்சி பனி ரெடியா?" என்று பரபரத்தான் விக்ரம்.
"அவ இன்னும் ரூமை விட்டு வெளியேவே வரல தம்பி... காலைல மாடிக்கு ஏறினவே தான் இன்னும் இறங்கவே இல்லே... அப்படி என்ன தான் அவ ரூம்முக்குள்ளே இருக்கோ தெரியலே!..." என்று பேத்தி தன்னுடன் நேரத்தைக் கழிக்காமல் ஒதுங்கி இருப்பதில் ஏற்பட்ட சிறிய மனஸ்தாபத்தோடு கூறினார்.
"சரி நான் போயி கூட்டிட்டு வர்றேன்..." என்று கூறி இரண்டிரண்டு படிகளாக ஏறிச் சென்றான்.
படி ஏறும்போதே "பனி ரெடியா?" என்று கேட்டுக் கொண்டே தான் ஏறினான். மலரும் தனது பழைய உடைகளில் நல்லதாக ஒன்றை எடுத்து உடுத்திக் கொண்டு, கண்ணாடியில் முன்னும், பின்னுமாக திரும்பித் திரும்பி பார்த்து, திருப்தியே இல்லாமல் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள்.
"பனி...." என்று அழைத்தும் திரும்பாமல் கண்ணாடியைப் பார்த்தபடியே "ஹாங்..." என்றாள்.
"டைம் ஆகுது.... நீ உன் அழகைப் பார்த்தது போதும்... கிளம்பு" நிச்சியம் கண்ணாடி முன் நின்றிருந்தவள் ரசித்தாளோ இல்லேயோ அவன் ரசித்து தான் கூறினான்.
"சரி சரி... இதோ வந்துட்டேன்" என்று அப்போது தான் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே வாசலில் ஒரு கையை நிலைக்கு முட்டுக்கொடுத்து மற்றொரு கைகயை தனது ஜீன் பேண்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு, கால்களை க்ராஸ் செய்து ஸ்டைலாக நின்றிருந்தவனைக் கண்டு அசந்து தான் போனாள்.
நீல நிற ஜீன் பேண்ட்டும், சிவப்பு வண்ண டீ-ஷர்ட்டும், அதன் மேல் ஜீன் ஷர்ட் பட்டன் போடாமல் திறந்துவிட்டபடியே, தலை முடியை ஜெல் கொண்டு நிறுத்தி, அடர் பழுப்பு நிற கூலர்ஸ் அணிந்தபடி பந்தாவாக நின்றிருந்தான் விக்ரம்.
அவனை ரசித்தபடியே அருகே சென்றவள், அவன் துளியும் எதிர்பார்த்திடாத நேரத்தில் தலையைக் கலைத்து டீ-ஷர்ட்டை கசக்கிவிட்டு,
"நான் மட்டும் பழைய ட்ரெஸ் போட்டிருக்கேன்... உங்களுக்கு ஸ்டைல் கேக்குதா!!! நீங்களும் என் ரேஞ்ச்-க்கு லோக்கலாவே வாங்க..." என்று கூறியபடி அவன் கூலர்ஸ்-ஐயும் கழட்டினாள்.
அவளது செய்கையில் எப்போதும் போல் கோபம் கொண்டு, "ஏய் சண்டகாரி... உனக்கென்னடி!!! அழகா தானே இருக்க!!! கொஞ்சமாச்சும் உனக்கு ஈக்குவலா நானும் அழகா இருக்க வேண்டாமா?" என்று முறைத்துக் கொண்டே கூறினாலும், தலை முடியை மடக்கிவிட்டு, அவள் கையில் இருந்த கூலர்ஸ்ஸை பிடிங்கி தன் டீ-ஷர்ட்டில் மாட்டிக்கொண்டான்.
சொல்லப் போனால் மலரது உடையும் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் இறுக்கமாக இருந்தது. அந்த உடை மட்டும் அல்ல, அதற்கு முன்னதாக அணிந்து பார்த்து கழற்றி எறிந்திருந்த பத்து உடைகளும் இறுக்கமாகத் தான் இருந்தது.
இரண்டு வருடங்களாக ட்ரிப்ஸ் மட்டுமே ஏறியதில் குறைந்திருந்த உடம்பை, இரண்டே மாதத்தில் பழச்சாறும், சூப்பும், சத்தாகரமுமாக செண்பகத்தை செய்து தரச்சொல்லி உடம்பை ஏற்றியிருந்தான் விக்ரம். அதில் கூடுதலாக மெறுகேறி இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்...
"இப்பவும் ஸ்டைலா தான் இருக்கிங்க... இன்னும் கம்மி பண்ணுங்க" என்று அவளும் முறைத்துக் கொண்டே கூறினாள். மேலும் அவனருகே வந்து நின்ற உடனேயே புதுத் துணியின் மணம் நாசியைத் துளைக்க,
"உங்களுக்கு எப்படி புது ட்ரெஸ் கிடைச்சது?... எப்போ வாங்கினேங்க..." என்று மேலும் ஒரு முறை அவன் அணிந்திருக்கும் சட்டையை பிடித்து இழுத்து நுகர்ந்து பார்த்தாள்.
அவள் அருகாமையை ரசித்தபடி, "இது உதியோடது டி.... பிடிங்கி போட்டுக்கிட்டேன் போதுமா?" என்று கடுகடுத்துவிட்டு, "இப்போ ட்ரெஸ் எடுக்கத் தானே போறோம்... அங்கே இதை விட அழகான ட்ரெஸ் உனக்கு வாங்கித் தரேன்... இப்போ கிளம்பு" என்றான்.
இப்போதெல்லாம் அவனது சிடுசிடுப்பு பழகிவிட்டதோ என்னவோ! சர்வ சாதாரணமாக... "இல்லே இல்லே நீங்க மட்டும் ரெம்ப ஸ்மார்டா அழகா இருக்கிங்க... சோ நானும் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன். ஒரு டென் மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க... சாரி கட்டிட்டு வரேன்..." என்று கூறி அவனை வெளியே தள்ள முயற்சிக்க, அவனோ சற்றும் நகராமல் அவளை கொலைவெறியோடு நோக்கி,
"அல்ரெடி லேட் ஆகிடுச்சு டி... இப்போ வந்துட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணப் போறேன்னு சொல்றே!" என்று குரலைத் தாழ்த்தி திட்டினான்.
"என் பட்டு மாமால.... உங்க லட்டு பொண்டாட்டி சீக்கிரம் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடுவாளாம்... நீங்க கோவிச்சுக்காம அவளுக்காக ஹால்ல வெய்ட் பண்ணுவிங்கலாம்...." என்று கெஞ்சி கொஞ்சி அவனை மீண்டும் வெளியே தள்ளினாள்.
அவள் தள்ளியதில் இரண்டடி பின்னால் நகர்ந்தவன், நான்கடி முன்னால் வந்து அவளையும் சேர்த்துத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து கதவை தாழிட்டான்.
"என்ன பண்றிங்க?" என்று பதறியவளிடம்,
டெரர் லுக்கை மாற்றாமல், "நீயெல்லாம் பத்து நிமிஷத்துல சாரி கட்டிக்கமாட்டே... விட்டா நாள் முழுசும் கண்ணாடி முன்னாடி நின்னு சாரி நல்லா இருக்கானு இப்படியும், அப்படியுமா திரும்பித் திரும்பிப் பார்த்துட்டே இருப்பே.... நான் இங்கேயே வெய்ட் பண்ணுறேன்... போ சீக்கிரம் மாத்திட்டு வா" என்றான்.
"எஎ..ஏது? உங்களை உள்ளே வெச்சிக்கிட்டு மாத்தவா? அஅ அதெல்லாம் முடியாது... நீங்க மொதோ.... வெளியே போங்க.... நான் கண்டிப்பா டென் மினிட்ஸ்ல வவ...வந்திடுவேன்..." என்று படபடத்தாள்.
"இல்லே... நீ எப்படி சொன்னாலும் நான் உன்னை நம்பமாட்டேன்... லேட் ஆகுது... ம்ம்ம்... கெட் ரெடி.... க்விக்..." என்றபடி அங்கே பேடப்பட்டிருந்த ஒற்றை மூங்கில் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
அதனைக் கண்டவள் மேலும் படபடப்புடன், "இல்லே... இல்லே... நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலே... இந்த ட்ரெஸே போதும்... வாங்க போலாம்..."
"ச்சீ... ஓஓவ்வேவே... என்ன டி ட்ரெஸ் இது?!!... கேவளமா இருக்கு... சட்டுபுட்டுனு ஒரு சாரி எடு, நானே கட்டி விடுறேன்..."
"ஹாங்" என்று வாய்பிளந்து விழிகள் பிதுங்க அவனையேப் பார்த்திருந்தாள். அதற்குள் விக்ரமோ கடகடவென வாட்ரோப்பைத் திறந்து அவனது உடைக்குப் பொறுத்தமான, சிவப்பு மற்றும் நீல நிற டிசைனர் சேரி கண்ணில் பட அதனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு, "வா" என்றான்.
"விளையாடாதிங்க மாமா... எனக்கு ட்ரெஸ் ச்சேஞ் பண்ண வேண்டாம்... போலாம் வாங்க..."
"ஏய் என்னை பாத்தா வேலைவெட்டி இல்லாம உன் கூட வம்பு பண்ற மாதிரி தெரியிதா!!!" என்று அதி தீவிரமாக வினவிட,
மலரால் விக்ரமின் குரலில் இருந்து, விளையாட்டுக்குச் சொல்கிறானா அல்லது உண்மையாகவே சொல்கிறானா? என்று கண்டறிய முடியவில்லை...
"மாமா...." என்று கண்களால் கெஞ்சி கைகளைக் கூப்பி இறுதியில் இறைஞ்சிடவே செய்தாள். அப்போது தான் அவனது முகத்தில் மெல்லிய புன்னகையே விரியத் தொடங்கியது. அதனையும் அவள் கவனிப்பதற்கு முன்பாகவே மறைத்திருந்தான்.
அவள் அருகே வந்து "இவ்ளோ கெஞ்சுறதுனால உனக்காக ஒன்னே ஒன்னு வேணா செய்யிறேன்... நான் என் கண்ணை கட்டிக்கிறேன்... ஓகே வா?" என்றிட, பல போராட்டங்களுக்குப் பிறகு சம்மதம் தெரிவித்தாள்.
கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஆடவனின் நுனிவிரல் தேடலினால் உண்டான தீண்டலில் ஆடவள் மதிமயங்கி பலமுறை வார்த்தைகளற்ற உயிருள்ள சிலையாகினாள். உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமே அவளது வேக மூச்சுகள் மட்டுமே தான் என்றாகிப்போனது.
பற்றாகுறைக்கு இவ்வளவு நேரம் இருந்த அவனது முரட்டுக்குரல் இப்போது தேனினும் இனிமையாக மாறி "இங்கேயா?", "சரியா?" என்று கேட்கும்போதெல்லாம் மானினியின் குரல்வளை செயலிழந்து போனது.
சேலை அணிந்து முடித்து கண்கட்டைத் திறந்து பார்த்தவன், அவளது சிவந்த முகத்தைக் கண்டு, மேலும் கொஞ்சம் போதை ஏறிவிட, 'இனிமே இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுக்கவே கூடாது டா சாமி....'என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, உச்சி முதல் பாதம் வரை தன்னைத் தானே ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டான்.
மலர் தயாராகி வந்ததும், அனைவருமாக புறப்பட்டனர். அபிராமி ஆச்சி மட்டும் வீட்டில் இருப்பதாகக் கூறிவிட, செம்பியன், வருணிகா உட்பட அனைவருமே கிளம்பினர்.
செம்பியன் வருணிகாவிடம் சில கண்டிஷன்களை முன்வைத்து அவள் அதற்கு எல்லாம் சம்மதித்தப் பின் தான் அவளுடன் புறப்பட்டான். அதே போல் வினோ செம்பியனிடம் சில கண்டிஷன்களை முன் வைத்தான்.
"செம்பியா... ஷாப்ல ரெண்டு பேரும் ஒன்னா சுத்தினிங்க கடைனு கூட பாக்கமாட்டேன், வாய்க்கு வந்தபடி திட்டிவிட்றுவேன்... அதே மாதிரி ரெண்டு பேரும் சேந்து என்னை வம்பு பண்ணினா அடிச்சாலும் அடிச்சிடுவேன் சொல்லிட்டேன்..." என்றிட
"இதையே வருண்கிட்ட சொல்லிப் பாருங்களேன்..."
உடனே வினோவின் முகம் சிவந்து நெற்றியைச் சுருக்கி, "அவ நான் சொன்னா கேக்கமாட்டா..."
"நான் சொன்னா மட்டும் கேப்பாளா!!! இப்போதைக்கு அக்காவோ மச்சானோ சொன்னா தான் கேப்பா!!! வேணுனா உண்மைய சொல்லி அவங்களை கண்டிச்சு வைக்க சொல்லுங்க..." என்று கூறிவிட்டு கொஞ்சமும் மதிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான் செம்பியன்.
"இந்த அசிங்கம் உனக்குத் தேவையா!!!"என்றபடி அங்கே வந்து நின்றான் உதி...
"எதிர்த்து பேசினாலும் பாசமான பையன் டா...." என்று வினோ சென்டிமெண்டலாகக் கூறிட,
உதியோ 'இவன் மட்டுமா பாசக்காரப் பையே... இவங்க வீட்ல பாப்பா, அவங்க அப்பா, ஆச்சி எல்லாரும் அப்படித் தான் இருக்காங்க....' என்று தன் மனதில் நினைத்துக் கொண்டு வினோத்தைப் பார்த்தான்.
நண்பனின் முகத்தில் டன் கணக்கில் வடிந்த பாசமழையை, நேசப்பசையைக் கண்டு, 'அதுக்காக இவ்ளோ பாசமா.... சிக்கினோம்.... சென்டிமெண்டா பேசியே காதுல ரத்தம் வர வெச்சிடுவான்... எஸ்கேப்' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு,
"ரெம்ப பாசத்தை பொழிஞ்சிடப் போறான் டா... பாத்து இருந்துக்கோ.... ஹச்... ஹச்" என்று இரண்டு முறை தும்மிக் காண்பித்து, 'இவனுங்க பக்கத்துல வந்தாலே நமக்கு ஒட்டிக்கும் போல... வைரஸை விட வேகமா பரவுது...' என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
உதி, வினோ, செம்பியன், வருணிகா என நால்வரும் ஒரு வாகனத்திலும், மலர், விசாலி, விக்ரம் மூவரும் ஒரு வாகனத்திலும் என இரண்டு வாகனங்களில் புறப்பட்டனர்.
கடையிலும் நாலாபுறமாகப் பிரிந்து உடைத் தேர்வு செய்யத் தொடங்கினர். அப்படிச் செய்தால் தான் முடியும் என்ற நிலையில் இருந்தனர்.
உதி, வினோ, செம்பியன் மூவரும் ஆண்களுக்கான உடை தேர்விலும், வருணிகாவும், விசாலியும் பெண்களுக்கான உடை தேர்விலும், மலரும் விக்ரமும் தங்களுக்கான உடை தேர்விலும் இறங்கினர்.
"எதுக்கு மாமா இவ்ளோ காஸ்ட்லியா பாக்குறிங்க? இங்கே என்ன தான் நடக்குது!!! எல்லாரும் வந்திருக்கோம்! காலைல இருந்து வீட்ல ஏதேதோ சத்தம் கேட்டுட்டே இருக்கு? உங்ககிட்ட கேட்க நேரமே கிடைக்கலே!!! இதுல செம்பியன் ப்ரச்சனை வேற... என்னால அதை யோசிக்காம இருக்கவே முடியலே!" என்று தன் ஒட்டுமொத்த மனக்குழப்பத்தையும் அவனிடம் அடுக்கினாள்.
"உனக்கும் எனக்கும் கல்யாணம்... அதுக்கான வேலை தான் நடக்குது... என் மேல நம்பிக்கை வெச்சு செம்பியன் விஷயத்தை என்கிட்ட விட்டுடு... இப்போ நீ கல்யாண பொண்ணா சந்தோஷமா இரு..."
கண்கள் இரண்டையும் விரித்து முகத்தில் ஆச்சரியத்தை நிறைத்து "மார்னிங் சும்மா தான் கேக்குகறிங்கனு நெனச்சேன்!!! நிஜமாவே வா கல்யாணம்?" என்று கேட்டாள்.
"ம்ம்... நாளைய முகூர்த்தத்தை விட்டா, நெக்ஸ்ட் ஒன் மன்த்-க்கு நல்லநாள் இல்லேயாம்... அதான் இந்த அவரச கல்யாணம்.
"ஆனா எதுக்கு இப்போ...?"
"மத்த கேள்விக்கெல்லாம் இப்போ பதில் கிடைக்காது... வந்த வேலையைப் பார்..."
பதிலுக்கு மலர் உதடு சுழித்து "ரெம்பவே ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் தான்...." என்று பொய்க்கோபமாய் முக்ததைத் திருப்பிக்கொண்டு, "அண்ணே... அதோ அந்த சேரி காமிங்க ண்ணே..." என்று கடைக்காரரிடம் கவனத்தைத் திருப்பினாள். அதனையும் பார்த்து கள்ளச்சிரிப்பு சிரித்துவிட்டு அவனும் ஆடை தேர்வில் மூழ்கினான்.
மலரும் விக்ரமும் தங்களுக்கான ஆடையை தேர்வு செய்துவிட்டு விசாலியிடம் சென்றனர்.
"ம்மா... எங்களுக்கு செலக்ட் பண்ணிட்டோம்... மத்தவங்களுக்கு எடுத்துட்டு நீங்க இவங்களோட வந்திடுங்க... நான் பனிய பார்லர் கூட்டிட்டு போறேன்..."
"சரிடா பார்த்தி... அப்பறம் வேலையாட்களுக்கு பணமா கொடுத்திடலாமா?"
"ம்ம்ம்... சரிமா... செண்பக அக்காவுக்கு மட்டும் இப்போவே ஒன்னு எடுத்திடுங்க... பணமாவும் கொடுத்துக்கலாம்..."
"சரி தம்பி" என்று மகனிடம் முடித்துக் கொண்டு, "மலர் இந்த கலர் ஆச்சி உடுத்துவாங்கலா?" என்று அபிராமிக்கு எடுத்து வைத்ததைக் காண்பித்தார்.
"போடுவாங்க அத்தே... சரியா தான் ச்சூஸ் பண்ணிருக்கிங்க.." என்று கூறிவிட்டு இருவரும் விடைபெற்றனர். விக்ரம் பனியை பார்லரில் விட்டுவிட்டு, மேடை அலங்காரத்திற்கு ஏற்பாடு செய்யச் சென்றான். கையோடு கலைஅலங்கார நிபுணர்களை மண்டபத்திற்கு அழைத்துச் சென்று, வேலையேத் தொடங்கச் செய்திருந்தான்.