• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 12

இளங்கலை மருத்துவப் படிப்பில் நிறைவை நோக்கி அடி எடுத்து வைத்தாள் மதுரவர்ஷினி.

முதுகலை மருத்துவப் படிப்பு இறுதியாண்டின் இறுதிக்கட்டத்தில் இருந்தான் சித்தார்த் வர்மனும்.

மதுரவர்ஷினிக்கு அது ஹவுஸ் சர்ஜன் காலமென்பதால் மருத்துவமனையில் தினம் தினம் புது அனுபவங்களைச் சந்தித்தாள்.

ஒருமுறை சிறு குழந்தை ஒன்று கையில் வைத்திருந்த நாணயத்தை விளையாடும்போது விழுங்கிவிட்டது. சுவாச பாதையில் நாணயம் அடைபட நீலம் பூத்த அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு அதன் தாய் ஓடி வந்தாள்.

மருத்துவக் குழுவுடன் சேர்ந்து போராடி அந்த சிறு குழந்தையின் உயிரை மீட்டனர்.

சித்தார்த் வர்மனுடன் இந்தச் செய்தியை பகிரும்போது, மதுரவர்ஷினிக்கு கோபம் பெருக்கெடுத்தது.

“சித்தூ.... சிறிய குழந்தை. அதன் தாய் எப்படி அக்குழந்தையை தனியாக விளையாடு என விட்டு விட்டு இருக்கலாம்? அந்தக் குழந்தை அந்தத் தாயை நம்பித் தானே மண்ணில் வந்து பிறந்தது. தாயே அதற்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்றால் பிறகு யார் அளிப்பார்கள்?

நான் என் குழந்தையை ஒரு கணம் கூட விட்டு பிரிந்து இருக்க மாட்டேன்” என்றாள் விதியின் சதியை அறியாத கோபத்தோடு.

“ஓ..... உனக்கு எத்தனை குழந்தை மது? என்னிடம் சொல்லவே இல்லை“ என்று கண்ணோரம் சுருங்கிய கேலியில் அவளையும் இழுத்துக் கொண்டான்.


“சித்தார்த்... “ என்று கூறியபடி அவன் தோள்களில் செல்லமாக அடித்தாள்.

மதுரவர்ஷினியின் மனநிலையை எளிதாக மாற்றினான் சித்தார்த் வர்மன்.


பின் கண்களில் வண்ணக்கனவுகள் மின்ன “உங்களைப்போலவே உரு கொண்ட கருவை நான் சுமக்க வேண்டும்....

என்னுயிர் சேர்ந்த நம் உயிரின் பெயர் ஆதித்திய வர்மன்...

என் ஆதியாய் ஆனவன்.... “ என்றாள் காதல் பெருக்கில்.

“ ஆதி மட்டும்தானா? மீதி? “ என்றான் கிண்டல் குரலில்.

“சித்தூ... தாயை இழந்த ஒவ்வொரு பெண்ணும் தனக்குப் பிறக்கும் முதல் குழந்தை தன் தாயாய் பிறக்க வேண்டும் என்று நினைப்பாள்.

தாயின் பார்வையில் வளராத நான், உங்கள் பார்வையில் கட்டுண்ட நாள் முதல், என் தாயின் பாசத்தை உங்களின் சுவாசத்தில் உணர்கிறேன்.

என் உயிர் காதலை இதய அறையில் பூட்டி வைத்த நான், அந்தக் காதலை என் கருவறையில் சுமக்க விரும்புகிறேன்.


எனக்கு உயிர், உரு கொடுத்தவர்களை விட உங்களையே உயிராய் நினைக்கிறேன். உயிராய் சுமக்கவும் விரும்புகிறேன்” என்றாள் அழுத்தமான குரலில்.

“ நீ உருகி உருகி காதல் செய்யும் என்னில் அப்படி என்ன கண்டாய் மது? “ என்றான் நெகிழ்ந்த குரலில்.

“ என்னை உயிராய் பாதுகாக்கும் என் தந்தையை மீறி என் இதய நதி உங்கள் உயிர்க் கடலில் சங்கமிக்க துடிக்குதே....

இது ஜென்ம ஜென்மமாய் தொடரும் ஆத்மார்த்த பந்தமே...

உங்களில் நான் என்னைக் காண்கிறேன் சித்தூ.
உங்களின் இதயத்துடிப்பை கேட்ட நொடி, என் இதயம் அதன் துடிப்பை நிறுத்தி விட்டு உங்கள் துடிப்போடு கலந்துவிட்டதே...

உங்கள் மார்பில் நான் சாய்ந்த வேளை, என்னுயிரும் உங்கள் உயிரில் சாய்ந்துவிட்டதே...

மின்னல் ஒளியில் மலரும் தாழம்பூ போல்,

உங்கள் கண் ஒளியில் என் காதல் பூவும் மலர்ந்து விட்டதே...” என்றாள் வெட்கம் கலந்த குரலில்.

“ அடேயப்பா மதுரவர்ஷினி மேடம்க்கு ஒரே வெட்கம் தான்...

இந்த வெட்கத்தின் சொந்தக்காரன் நான் எனும்போது என் காதல் மீது எனக்கு கர்வம் தோணுதடி... “ என்றான் தன் நுனி மீசையை திருகியபடி.

சித்தார்த் வர்மன் தன் இறுதி ஆண்டின் காரணமாக முக்கியமான ஆராய்ச்சி கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தான்.

அதற்காக தனது முழு படிப்பு நேரத்தையும் ஆராய்ச்சி கூடத்திலேயே செலவழித்தான்.

அன்று சனிக்கிழமை, தன் ஆராய்ச்சிக்காக முக்கியமான மருந்தினை தலைமை மருத்துவரிடம் கேட்டு இருந்தான் சித்தார்த்.

அந்த மருந்து மருத்துவமனையின் குளிர்சாதன கிடங்கில் உள்ளதாகக் கூறி, அதனை சித்தார்த் வர்மன் பெறுவதற்கு உண்டான அனுமதிக் கடிதத்தையும் கொடுத்து அனுப்பினார்.

கடிதத்தை பெற்றுக்கொண்ட சித்தார்த், மருத்துவக் குளிர்சாதன கிடங்கை நோக்கி விரைந்தான்.


அங்கே உள்ள குளிர்சாதன கிடங்கின் பொறுப்பாளரிடம் , அந்தக் கடிதத்தைக் காட்டி மருந்தினை பெறும் உரிமம் பெற்றான்.

அந்தப் பொறுப்பாளரோ சித்தார்த் வர்மனுக்கு ஏகப்பட்ட அறிவுரைகள் கூறினார்.

"தானியங்கி கதவு உள்ளிருந்து திறக்க இயலாது.

வெளியிலிருந்து மட்டும் திறக்கும் வசதி மட்டுமே கொண்டது.

ஒருவர் மட்டுமே உள்நுழைய வேண்டும் என்றும், மருந்தினை அதற்குரிய சரியான பெட்டியைக் கண்டுபிடித்து ஐந்து நிமிடத்திற்குள் திரும்பி வர வேண்டும்", என்று அறிவுறுத்தினார்.

ஏற்கனவே தலைமை மருத்துவர் எளிதாக மருந்தின் பெட்டியை அடையாளம் காண முன் யோசனைகள் அளித்திருந்தார்.

அவரின் வழிகாட்டுதலின் பெயரில் சித்தார்த் வர்மன் குளிர்சாதன மருத்துவ கிடங்கின் உள்ளே நுழைந்தான்.


அந்த தானியங்கிக் கதவு தானாக மூடிக் கொண்டது. குளிர்சாதன கிடங்கின் பொறுப்பாளரின் அலைபேசி அழைத்தது.

தனது போனை ஆன் செய்து காதில் வைத்தார் . போனில் அவரது மனைவியோ பதட்டமாக “ஏங்க நம்ம பையன் சைக்கிள் ஓட்டும் போது கீழே விழுந்து அடிபட்டு விட்டான்.

தலையில் பலமாக அடிபட்டு விட்டது. நிறைய ரத்தம் போய்விட்டது.

நமது வீட்டின் அருகே உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் நமது மகன் இருக்கிறான்.


சீக்கிரம் வாங்க. எனக்கு மிகவும் பயமா இருக்கு “ என்றார் பெருங்குரலெடுத்து அழுதபடி.

அவசரத்தில் தன் இருக்கையிலிருந்து எழுந்துவரின் கை பட்டு, குளிர்சாதன கிடங்கின் வெப்பநிலையை சமன்படுத்தும் கருவி பின்னோக்கி நகர்ந்தது.

பொறுப்பாளரோ தனக்கு பதில் மற்றொருவரை மாற்றும் கால அவகாசம் கூட இல்லாமல், உள்ளே சித்தார்த் வர்மன் இருக்கும் நினைவும் இல்லாமல் உடனடியாக தன் மகனைக் காண சென்றுவிட்டார்.

சித்தார்த் வர்மனை ஆராய்ச்சிக்கூடத்தில் தேடிய மதுரவர்ஷினி, அவனை அங்கு காணாமல், அவனுடைய வகுப்புத் தோழர்களிடம் சென்று விசாரித்தாள்.

“ சித்தார்த் தலைமை மருத்துவரை, காலையில் பார்த்ததை மட்டும் தான் பார்த்தேன் பிறகு அவனை நான் பார்க்கவில்லை “ என்றான் அவர்களுள் ஒருவன்.


நண்பகல் பொழுதும் முடிந்து விட்டது. சித்தார்த் வர்மனை காணாமல் தவித்தாள் மதுரவர்ஷினி.

தன் தைரியத்தை தன்னோடு அழைத்துக்கொண்டு, தலைமை மருத்துவரை சென்று பார்த்தாள்.

“ சார்... சித்தார்த் வர்மனிடம் சில பாடக்குறிப்புகள் கேட்டிருந்தேன். காலை முதல் அவரை காணவில்லை. உங்களைத்தான் காலையில் பார்த்ததாக அவரது வகுப்புத் தோழர்கள் கூறினார்கள். வரும் தேர்வுக்கு எனக்கு அந்த குறிப்புகள் மிகவும் அவசியம் “ என்றாள் ஒருவாறு தன்னை சமாளித்தபடி.

“ சில மருந்துகள் வேண்டி மருத்துவ குளிர்சாதன கிடங்கிற்குச் சென்றான். அதன்பிறகு சித்தார்த் வர்மனை நானும் பார்க்கவில்லை “ என்று கூறிவிட்டு சென்று விட்டார்.


மதுரவர்ஷினியின் கால்கள் மருத்துவ குளிர்சாதனக் கிடங்கை நோக்கி விரைந்தன.

கிடங்கின் தானியங்கி கதவில் உள்ள விளக்கின் ஒளி சிகப்பு நிறமாய் ஒளிர்ந்ததைக் கண்டு திடுக்கிட்டாள்.


தனக்குத் தெரிந்த மட்டும் மேக்ஸிமம் லெவலில் இருந்த திருகை நார்மல் லெவலுக்கு மாற்றினாள்.

தானியங்கி கதவைத் திறந்துகொண்டு பதட்டத்துடன் உள்ளே நுழைந்தாள்.

அங்கே உறை குளிரில் உடல் விரைத்தபடி இருந்த சித்தார்த் வர்மனைக் கண்டு அதிர்ந்தாள்.


மதுரவர்ஷினியின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த மருத்துவர் விழித்தெழ, சட்டென சித்தார்த் வர்மனின் கன்னங்களைத் தட்டி அவன் நினைவுகளை திரும்பப்பெற முனைந்தாள்.

மதுரவர்ஷினி குளிர் நிலையை நார்மல் லெவலுக்கு மாற்றி இருந்ததால் உறைநிலைக் குளிர் சற்று மட்டுபட்டிருந்தது.

அவன் உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்த்து அவன் உடல் நிலையின் வெப்பநிலையை அதிகரிக்க முயற்சி செய்தாள்.

நிலைமை தன் கை மீறிப் போவதை உணர்ந்த மதுரவர்ஷினி தானியங்கி கதவினைத் திறக்க முயல, அதுவோ உள்ளிருந்து திறக்க வழி இல்லாமல் இருந்தது.

பதட்டத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தாள்.

சித்தார்த் வர்மனை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவனை விழித்தெழச் செய்ய பலமுறை முயன்றாள்.


அவளுடைய எந்த முதலுதவிக்கும், அவனுடைய உடல் பதிலளிக்கவில்லை.

இயலாமையில் மதுரவர்ஷினியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழியத் தொடங்கியது.
அவளின் சூடான கண்ணீர் அவன் இதழ்களில் பட்டுத் தெறிக்க அவனது உதடு துடித்ததைக் கண்டாள்.

நெஞ்சம் முழுவதும் அவன்மீது நேசத்தை சுமந்தவள், அவன் இதழோடு தன் இதழைச் சேர்த்தாள்.


அவன் உடலிலிருந்து உயிர் வெளியேறாமல் இருக்க தன் உயிரினும் மேலான மானத்தைக் கொடுத்து அவனை மீட்டெடுக்க துணிந்தாள்.

அவள் எடுத்த முடிவிற்கு அவள் உடல் அதிர்ந்தது. உள்ளமோ தன் உயிரைக் காப்பாற்ற துணிந்தது.

அவர்களின் கூடலுக்கு அவளுடைய கண்களிலிருந்து பொழிந்த கண்ணீர் மழையே சாட்சியானது.


தான் இழந்த தன் உடல் வெப்பத்தை மீட்டெடுத்த சித்தார்த் வர்மன், மெல்ல கண்விழித்துப் பார்த்தான்.

தரையில் அமர்ந்த நிலையில் தன் முழங்கால்களை கட்டிக்கொண்டு, தலையினை புதைத்திருந்த மதுரவர்ஷினியைக் கண்டான்.

அதீத குளிரில் தான் மயங்கி விழுந்த கணத்தை நினைவுகூர்ந்தான்.


மதுரவர்ஷினியின் கலைந்த ஆடையும், தனது தோற்றமும் நடந்த கதையை அவனுக்கு விளக்கின.

“மது..... “ என்று மெல்லிய குரலில் சித்தார்த் வர்மன் அழைக்க.

“சித்தூ.... “ என்று கூறியபடி தாவி ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.


தன் பெண்ணவளை மார்பில் சாய்த்துக்கொண்டு, அவளது கூந்தலை நீவி விட்டான்.

“ உன் உயிர் காதலுக்கு ஈடாக கொடுப்பதற்கு இனி என்னிடம் எதுவும் இல்லை மது. இனி இந்த உயிரும் நீ கொடுத்தது தானே...” என்றான்
நெஞ்சமெல்லாம் காதல் தழும்ப.

விடாமல் கதறி அழுதவளின் மனநிலை புரிய, நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் ஆறுதலாய்.

காலையில் சென்ற பொறுப்பாளர் தன் மகனின் உடல்நிலை சரியானவுடன் மருத்துவமனைக்கு பணம் கட்டுவதற்காக தனது பாக்கெட்டுக்குள் கை விட்டார். சித்தார்த் வர்மனின் அனுமதி கடிதத்தைக் கண்டு அதிர்ந்தார். விரைந்து மருத்துவமனைக்கு வந்தார்.

குளிர்சாதன கிடங்கின் கதவை திறக்க உள்ளேயிருந்த சித்தார்த் வர்மன் மற்றும் மதுரவர்ஷினியைக் கண்டு மேலும் அதிர்ந்தார்.

கதவு திறக்கும் ஓசை கேட்கும் போதே தன்னை சுதாரித்துக் கொண்ட மதுரவர்ஷினி, அந்த பொறுப்பாளரிடம் “சித்தார்த் வர்மனை தேடிவந்தேன். கதவைத்திறந்து உள்ளே மட்டுமே செல்ல முடிந்தது.

தானியங்கி கதவை உள்ளிருந்து என்னால் திறக்க இயலவில்லை.


உங்களின் பொறுப்பற்ற தனத்தினால் ஒரு உயிர் போக இருந்தது.

தலைமை மருத்துவரிடம் உங்களைப் பற்றி கண்டிப்பாக புகார் அளிப்பேன் “ என்றாள் கோபத்துடன்.

“ ஐயோ இல்லை அம்மா. எனது மகன் மிகவும் மோசமான உடல்நிலையில் இருப்பதாக தகவல் வந்ததும் அப்படியே கிளம்பி விட்டேன். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.

தலைமை மருத்துவரிடம் கூற வேண்டாம். என் வேலையே பறிபோய்விடும். தயவு காட்டுங்கள் இருவரும்“ என்றார் கையெடுத்துக் கும்பிட்டபடி.


நடந்த நிகழ்ச்சியின் தாக்கத்திலிருந்து வெளிவராத சித்தார்த் வர்மன் பதில் பேச இயலாமல் தவித்தான்.

மதுரவர்ஷினியோ “ இனி ஒரு முறை இந்த தவறினை செய்து விடாதீர்கள்” என்று அவரை எச்சரித்துவிட்டு சித்தார்த் வர்மனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.


மின்னல் வெட்டும்...
 
Last edited:

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️

மருத்துவ குளிர்சாதன கிடங்கு 👇
 

Attachments

  • images (18).jpeg
    images (18).jpeg
    22.2 KB · Views: 30

Kavi priya

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 6, 2022
Messages
25
கதையின் போக்கு அருமையாக உள்ளது சகோதரி. வாழ்த்துக்கள் ,
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
ஒன்றில் ஒன்றாக கலந்தவள், அவன் உயிர் காத்தாள் அவன் மீதான அதீத நம்பிக்கையில் ☺️☺️☺️

காதலை கொடுத்தாள், உறவை கொடுத்தாள், இப்போது தன்னவன் உயிரையும் மீட்டுக்கொடுத்தாள்.
பின் ஏன் இந்த விலகல் :unsure::unsure::unsure:
 

kothaihariram

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 27, 2023
Messages
56
சூப்பர்
 
Top