• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 14

இறுதித் தேர்வு நாட்களும் விரைந்து வந்தது. மதுரவர்ஷினியின் கவனத்தை முழுவதும் தேர்வின் மீது திசைதிருப்பி இருந்தான் சித்தார்த் வர்மன்.

விரும்பி ஏற்ற மருத்துவ பாடத்தை இருவரும் விரும்பியே கற்றனர்.

செயற்கை நீரூற்றின் விளிம்பில் அமர்ந்துகொண்டு படித்த பாடங்களை நினைவு படுத்திக் கொண்டிருந்தாள் மதுரவர்ஷினி.

தன் அருகே நின்றிருந்த அழுத்தமான காலடியைப் பார்த்து, நிமிர்ந்து நோக்கினாள் மதுரவர்ஷினி.

சித்தார்த் வர்மனோ தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு மரத்தின் மீது சாய்ந்தபடி அவளை காதல் பொங்க பார்த்தான்.

தன் தலையை மீண்டும் புத்தகத்திற்கு உள்ளேயே புதைத்துக்கொண்டாள்.

நேரம் கடக்க, எந்த சப்தமும் இல்லாமல் போக மெல்ல விழி உயர்த்திப் பார்த்தாள்.


சித்தார்த் வர்மனோ தன் கைகளை அருகில் இருந்த மரத்தில் குறுக்கே கட்டிக்கொண்டு மதுரவர்ஷினியைப் பார்த்து மலர்ந்து சிரித்தான்.

மரத்தை அணைத்துக் கொண்டு இருந்தவனை பார்த்து, கலகலவென்று நகைத்தவாரே தடாகத்தின் நீரை உள்ளங்கையில் எடுத்து அவன் முகத்தின் மீது தெளித்தாள்.

தெறித்த நீரை தன் கையால் வழித்து எடுத்தபடி, மோகன புன்னகை சிந்தினான் சித்தார்த்.

“ ஹலோ டாக்டர் இது என்ன பார்வை? “ என்றாள் தோரணையாக.

“ மனைவியை எட்ட நின்று ரசிக்கும் துர்பாக்கிய கணவனைப் பார்த்து ஏளனம் செய்கிறாயா? “ என்று கோபமில்லாமல் கோபப்பட்டான் சித்தார்த் வர்மன்.

“ காலமெல்லாம் என் காதலில் உங்களை ஏங்க வைக்கப் போகிறேன்... “ என்றாள் நகைத்தவாரே.

வானில் சென்ற தேவதைகளும் ததாஸ்து சொல்லி துக்கத்துடன் சென்றனர்.

அன்று இறுதித் தேர்வு என்பதால் பரிட்சை முடிந்த உடன் மாலையில் கடற்கரைக்கு வரும்படி மதுரவர்ஷினி, சித்தார்த்துக்கு கட்டளையிட்டாள்.


தேர்வு எழுதி முடித்துவிட்டு மந்தகாசப் புன்னகையுடன் வீடு திரும்பினாள் மதுரவர்ஷினி.

எதிர்ப்பட்ட தன் தந்தையிடம், “ அப்பா.... இன்றுடன் என் அனைத்து தேர்வுகளும் முடிந்து விட்டன. இனி நீங்கள் டாக்டர் மதுரவர்ஷினியின் தந்தை” என்று மகிழ்ச்சியுடன் கூறி, தன் தந்தையின் கைகளை பற்றிக்கொண்டு தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தாள்.

மதுரவர்ஷினியின் கண்கள் இருள, உலகம் சுற்ற, கால்கள் தடுமாறி மயக்கமுற ஆரம்பித்தாள்.

சிவானந்தனோ மகளின் நிலையைக் கண்டு பதறி, கன்னங்களில் பலமாக தட்ட ஆரம்பித்தார். ஓடிச் சென்று அருகில் இருந்த நீரை எடுத்து வந்து முகத்தில் தெளித்தார்.

மதுரவர்ஷினியின் முகமோ தெளிவற்று இருந்தது. பதறியபடி மதுரவர்ஷினியோடு மருத்துவமனைக்குச் செல்ல எத்தனித்தார்.

கடைசி நிமிடம் கண் விழித்து பார்த்தாள் மதுரவர்ஷினி. தன் தந்தையின் பதட்டத்தை எண்ணி அவரை சமாதானப்படுத்தியவாறு எழுந்து அமர்ந்தாள்.

புருவங்கள் சுருங்க தன் நிலையை தானே ஆராய்ச்சி செய்தாள். கேள்விகளின் விடை தன்னவன் தந்த உயிரில் சென்று முடிய, தன் மணிவயிற்றில் கைவைத்தபடி தந்தையை ஆனந்தமும், குற்ற உணர்ச்சியும் கலந்த பார்வையோடு பார்த்தாள்.

மகளின் பார்வையின் பரிணாமம் புரியாது, “என்னடா? “ என்றார் வாஞ்சையாக.

சோபாவிலிருந்து கீழிறங்கி தரையில் சென்று தன் தந்தையின் காலடியில் அமர்ந்தாள். தன் தலையை தந்தையின் மடியில் வைத்து அவரது கால்களை இறுக்கிப் பற்றினாள்.

“ அப்பா.... “ என்ற அவளது குரலோ சிவானந்தத்தின் இதயத்தில் எச்சரிக்கை முரசு கொட்டியது.

“ வந்து..... “ என்று கூறியவளிடம் வார்த்தைகள் வராமல் நின்றன..

“ சொல்லுமா.. “ என்றார் அவள் விரல்களை பற்றிக்கொண்டு. தன் தந்தை தந்த தைரியத்தில் மெல்ல இதழ் பிரித்தாள்.

“ தாய் இல்லாத எனக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்து அன்பு காட்டினீர்கள். அந்த அன்பிலே பங்கு போட இருவர் இப்பொழுது வந்துவிட்டார்கள் “ என்றாள் லேசாக சிரிக்க முயன்றவாரே.

தன் மகளின் அன்பு என்றும் என்றென்றும் தனக்கே முழுவதும் உரியது என்ற மனக் கோட்டைகள் கட்டி இருந்தவரின் கோட்டை உடைந்து, இடிந்து தரைமட்டம் ஆகியது.

தன் மகளின் கைவிரல்களை அழுத்தமாக பற்றிக்கொண்டார்.
யாருக்கும் தன் மகளை பகிர்ந்து தர மாட்டேன் என்ற உறுதியுடன்.

மதுர வர்ஷினி மெதுவாக சித்தார்த் வர்மனைப் பற்றி எடுத்துக் கூறினாள். அவன் எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் சிறந்த மருத்துவராக வருவது உறுதி என்று கூறும்போது கணவனின் வருங்காலத்தில் கர்வம் கொண்டாள்.

மெல்லிய சதையினாலான இதயம், இரும்புபோல் இறுக ஆரம்பித்தது சிவானந்தத்திற்கு.


முகத்தில் எந்த வேறுபாடுகளையும் காட்டாமல் இருக்க கஷ்டப்பட்டு முயன்று கொண்டிருந்தார்.

“ அப்பா..... எதிர்பாராத ஒரு சூழ்நிலையில், சித்தார்த் வர்மனின் உயிரை காப்பாற்றும் போது ஏற்பட்ட பிழையில், நான் இப்போது இப்போது..... “ என்று திக்கினாள் மதுரவர்ஷினி.

மகள் கூறிய பிழை, மகளுக்கு ஏற்பட்ட மயக்கம், நடந்ததை கட்டியம் கூறியது சிவானந்தத்திற்கு.

மேற்கொண்டு எதையும் கேட்க விரும்பாதவராய், மகளின் தோள்களைத் தட்டி சமாதானம் செய்தார். வேறு எதுவும் பேச வேண்டாம் என்று தலையசைத்தார்.

தன்னுயிரை சொந்தம் கொண்டாடும், முகம் காணாத சித்தார்த் வர்மனையும் , உலகம் காணாத அந்த உயிரையும் வெறுக்கத் தொடங்கினார்.

தன்மகள் தன்னிடம் எதையும் மறைக்க மாட்டாள் என்ற பாசத்தில் கர்வம் மிகுந்து இருந்தவருக்கு சர்வமும் நொறுங்கியது.

தன்னை ஏமாற்றிய மகளை வெறுக்கத் தோணாமல், தன்னையே ஏமாற்றச் செய்த சித்தார்த் வர்மனை அடியோடு வெறுத்தார்.


யோசனையுடன் எழுந்தவர், அவளை சோபாவில் அமரச் செய்துவிட்டு, கிச்சனில் சென்று மதுரவர்ஷினிக்கு குடிப்பதற்கு பால் எடுத்து வந்தார்.

மறுத்து எதுவும் பேசாத தன் தந்தையை எண்ணி மகிழ்ந்து கொண்டு, அவர் தந்த பாலினை அருந்தத் தொடங்கினாள்.


கண்கள் சுழல சோபாவில் உறங்க ஆரம்பித்தாள். குறுக்கும் நெடுக்குமாக ஹாலில் நடை பயின்ற சிவானந்தன், தீவிர யோசனையில் இருந்தார்.

கருவாய் இருந்தாலும் ஒரு குழந்தையைக் கொல்ல அவருக்கு மனம் வரவில்லை. சித்தார்த் வர்மனோடு மதுரவர்ஷினியை இணைக்கும் எண்ணமும் வரவில்லை.

பணம் பாதாளம் வரை பாயுமே... மகள் கண் விழிக்கும் முன் தன் திட்டங்களை தீட்ட ஆரம்பித்தார்.

அவள் தன்னை வெறுத்தாலும் பரவாயில்லை. தன் மகளின் அன்பை யாரோடும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை அந்த பாசத்தில் பைத்தியமான தந்தைக்கு.

மாலை கவிழும் வேளை வந்ததும், தன்னைக் காண வராத மதுரவர்ஷினியை எண்ணி குழப்பத்தில் ஆழ்ந்தான் சித்தார்த். அவன் எதிரே இரைச்சலுடன் இருந்த கடல் அலைகளை விட அவன் எண்ண அலைகள் அதிக இரைச்சல் போட்டது.

மதுரவர்ஷினியின் எண்ணிற்கு அழைத்தான். அலைபேசியை அணைத்து வைத்திருப்பதாக தகவல் வந்தது. குழப்பம் மிகுந்த மனதுடன் தன் அறைக்குத் திரும்பினான் சித்தார்த்.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளாக மதுரவர்ஷினியை தேடித் தவித்தான். உயிராய் மதித்த மருத்துவப் பணியைக் கூட பாராமல் தன் உயிரைத் தேடி தவித்தான்.

அவனின் மாற்றம் கண்டு குமரகுருபரர் அதிர்ந்து நின்றார். யாரிடமும் தன் மனதை திறக்கவில்லை சித்தார்த் வர்மன். நிமிடத்தை கூட வீணாக்காமல் அவளைப்பற்றிய நினைவுகளிலேயே உழன்றான்.

கேரளாவில் படகு வீடுகளுக்கு மிகவும் பிரபலமான இடம் ஆலப்புழா. ஆலப்புழாவில் படகு வீடு கிடைப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு எளிது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகு வீடுகள் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக உள்ளன.

மூன்று படுக்கை அறைகள் அவற்றுடன் சமையலறை, முற்றம் மற்றும் கழிவறை என சகல வசதிகளும் இருக்கும் படகு வீட்டில் மதுரவர்ஷினி குடியமர்த்தப்பட்டாள் இல்லை இல்லை சிறைப்படுத்தப்பட்டாள் .

உதவிக்கு ஒரு செவிலியரும், அவளுடைய தந்தையும் அவளை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தனர்.

படகின் விளிம்பில் வந்து நின்ற மதுரவர்ஷினிக்கு ஆலப்புழா பேக் வாட்டரில் படகு செல்லும் போது, கடவுள் தேசத்தின் அழகில் தவழ்ந்து மிதந்து வரும் அந்த சூழ்நிலையில் தன் மனதுக்கு நெருக்கமானவனை அவள் மனது தேடித் தவித்தது.

இமையை மூடியவளின் விழிகளின் ஓரம் கசிந்து ஓடியது. தன் எண்ணச் சுழல்களில் பின்னே சென்றாள்.


அன்று அவள் கண்விழித்தபோது அவளின் முன்னே, தூக்க மாத்திரைகளை கையில் குவித்து வைத்திருந்த தன் தந்தையைக் கண்டாள்.

“ என்னப்பா இது?.... கை நிறைய மாத்திரைகளை குவித்து வைத்திருக்கிறீர்கள்“ என்று இலகுவாகப் பேச முயன்றாள்.


எதுவும் பதிலளிக்காமல் தன்னையே அழுத்தத்துடன் பார்க்கும் தந்தையை நோக்கி, “ என்னப்பா..? “ என்றாள் ஏதோ ஒரு விபரீதம் ஏற்படப் போவதை உணர்ந்து.

“ மதுரவர்ஷினி...” அவள் தந்தையின் குரல் அழுத்தமாய் வந்தது.

உள்ளம் அதிர்ந்தாலும், தன் தந்தை தானே என்று அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.

“ நீ உன் குழந்தை பிறக்கும் வரை என்னுடன் நான் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும். சித்தார்த் வர்மனை பார்க்க, தொடர்பு கொள்ள முயற்சி செய்யக் கூடாது. உனது காதல் உண்மையாக இருந்தால் அது உன்னைத் தேடி வரும்போது நான் மறுக்க மாட்டேன்.

நீ மண்ணில் வந்த நாள் முதல் நான் உன் மேல் நான் வைத்த பாசம் ஜெயித்து விடும். நிச்சயம் மாதக்கணக்கில் தோன்றிய உன் காதல், கண்ணை விட்டு மறைந்ததும் தோற்றுவிடும்.

இதை நீ ஒத்துக் கொள்ளாத போது... உன் தந்தையை இழந்து விடுவாய்” என்றார் மாத்திரைகளை கண்ணால் காட்டி மிரட்டியபடி.

மதுரவர்ஷினி குழப்பம் மிகுந்த மனதுடன் தன் தந்தையை ஏறிட்டாள். “உன் தந்தைக்கு உன்னை இப்படி காயப்படுத்த தெரியுமா?” அவள் உள்ளம் அதிர்ந்து அவளை கேட்டது.

ஆனால் அவள் காதல் உள்ளம் விழித்தெழுந்தது. “அப்பா இரவின் பின்னே விடியல் வருவது எப்படி உறுதியோ அதைப்போல என்னைத்தேடி சித்தார்த் வர்மன் வருவதும் உறுதி.

சுற்றி கடல் நீர் இருந்தாலும் தாகம் தணிக்க உள்ளங்கை நீர் வேண்டும். கடல் போல நீங்கள் என்மீது அன்பு வைத்தாலும், உள்ளங்கை நீராய் சித்தார்த்தின் காதலையும் என் உள்ளம் தேடுதே.

நான் உங்கள் மகள் மதுரவர்ஷினி. என் காதலை நிரூபிக்க இதுதான் வழி என்றால் நிச்சயம் நான் ஏற்றுக் கொள்வேன்.

உங்கள் அன்பின் மீதும் சித்தார்த் காதலின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

இப்பொழுது உங்களுக்கு என்ன வேண்டும்? நான் சித்தார்த்தை தேடி போக கூடாது. என்னைத்தேடி சித்தார்த் வரும்போது நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். அவ்வளவுதானே?

நிச்சயம் என் காதல் என்னைத் தேடி வரும். இதற்காக நீங்கள் எப்படி மிரட்டல் விடுக்க வேண்டாம் அப்பா... “ என்று கூறிக்கொண்டு விரைந்து சென்று அவர் கைகளில் இருந்த மாத்திரைகளை தட்டிவிட்டாள்.

தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, தந்தை ஏற்றிய காதல் வேள்வித் தீயில் பிரவேசிக்க தயாரானாள் மதுரவர்ஷினி.

அந்த வேள்வித்தீ தன்னை மட்டுமல்லாது சித்தார்த் வர்மனையும் சேர்த்து எரிக்கும் என்பதை அந்தப் பேதை அந்த கணத்தில் மறந்தே போனாள்.

தன் காதலை மட்டுமே பெரிதாக நினைத்தவள், தன் மன்னவனின் மனதை கணிக்க தவறினாள்.

தன் மகளுக்கு பார்த்து பார்த்து செய்தார் சிவானந்தன். மகளின் முகத்தில் மலர்ச்சியை காண தன்னாலான அனைத்தையும் செய்தார். பலன்தான் பூஜ்ஜியமாக இருந்தது.

எங்கே சித்தார்த் வர்மனின் காதலுக்கு முன் தன் பாசம் தோற்று விடுமோ என்று பதைபதைக்கத் தொடங்கினார்.

சித்தார்த் வர்மனுக்கு தவறான தகவல்களை பரப்பி அவனை அலைக்கழிக்கச் செய்தார். மதுரவர்ஷினியை அவன் நெருங்காதவாறு நெருப்புக் கோட்டையாய் அவளை பாதுகாத்தார்.

தந்தையின் சூதினை அறியாத மதுரவர்ஷினி, சித்தார்த்தை தேடித் தவித்தாள்.

அவள் கண் விழித்த நேரம் முழுவதும், தன்னவன் தந்த உயிரோடு பேசிக்கொண்டிருந்தாள்.
ஓசையின்றி ஆசையாய் பேசுபவளின் குரலை அவள் சிசுவும் கேட்டது.
உடலால், உணர்வால், தன் அன்பைத் தன் சிசுவிற்கு பரிமாறினாள்.

நாட்கள் செல்லச் செல்ல சித்தார்த் வர்மனைக் காணாது அவளது கண்களில் வெறுமை குடிபுக ஆரம்பித்தது.

பெண்மையின் தாய்மையின் போது ஏற்படும் உளவியல் தூண்டுதலில் , சித்தார்த் வர்மன் தன்னைத் தேடி வராமல் இருப்பது கண்டு அவன் மீது கோபம் கொண்டாள். எந்த சூழ்நிலையிலும் தன் காதலின் மீது துளி சந்தேகம் வரவில்லை மதுரவர்ஷினிக்கு.

பிரிவு என்ற ஒன்று இல்லை என்றால் காதலின் முக்கியத்துவம் யாருக்கும் தெரியப் போவதில்லை.


இணைந்து விட்டோம் என்ற இறுமாப்பில் இருந்தவனின், ஒவ்வொரு உயிர் மூச்சிலும் மரண வலியை அனுபவித்தான். தன் வகுப்புத் தோழர்களின் உதவியோடு அவளைத் தேடாத இடமில்லை.

தினமும் மதுரவர்ஷினியின் வீட்டு வாசலில் சென்று அவள் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

மொத்தத்தில் சித்தம் கலங்கி தன் காதலை தேடித் தவித்தான் சித்தார்த் வர்மன்.

மதுரவர்ஷினியின் பிரசவ நாளும் நெருங்கியது. இனி அவளைப் படகு வீட்டில் வைத்திருக்க முடியாது என்பதை உணர்ந்த சிவானந்தன் ஆலப்புழாவில் உள்ள மருத்துவமனைக்கு அவளைக் கொண்டு சென்றார்.

மின்னல் வெட்டும்....
 
Last edited:

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,935
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இப்போ தான் புரியுது ஆதித்யா எப்படி ன்னு, ஏதோ இந்த மட்டும் ஆதி தாத்தா கருணை காட்டினார். பிறந்ததும் என்னமோ சிக்கலா சொல்லி குழந்தையை பிரிச்சு அப்பாகிட்ட குடுத்திருப்பாரோ,, இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இப்போ தான் புரியுது ஆதித்யா எப்படி ன்னு, ஏதோ இந்த மட்டும் ஆதி தாத்தா கருணை காட்டினார். பிறந்ததும் என்னமோ சிக்கலா சொல்லி குழந்தையை பிரிச்சு அப்பாகிட்ட குடுத்திருப்பாரோ,, இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔
அனைவரையும் பாராட்டும் பரந்த மனது யாருக்கும் வராது. அற்புதமான அன்பு மனம் கொண்ட பாரதி சிவக்குமார் அவர்களுக்கு என் உளம்கனிந்த நன்றிகள் 🙏🙏🙏
 

Kavi priya

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 6, 2022
Messages
25
சித்தார்த் வர்மனுக்கு மதுரவர்ஷினி பின் நிலைமை எப்போது புரியும்?
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சித்தார்த் வர்மனுக்கு மதுரவர்ஷினி பின் நிலைமை எப்போது புரியும்?
விதியின் பிடியில் இருவரும் 😔
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
606
பைத்தியகார அப்பா வேறென்ன சொல்ல.
 

Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
அவங்க அப்பா... 🙄

பொண்ண கட்டி கொடுக்க மாட்டிங்களா?

இது என்ன எண்ணம்?

பாவம் மது... அவர பத்தி தெரில...☹️

ஆனா சித்தார்த் க்கு ஒன்னுமே தெரில... அவங்கள எப்படி தேடிருப்பாரு... 🥺

இப்படி ஒரு அழகான காதல் ஜோடிய பிரிஞ்சிட்டாரு... 😡
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
சிவானந்தனின் சதிகளை முறியடிக்க வருவானோ வர்மன்🧐🧐🧐

தன் மகளின் மனம் ரணமானதை அறியா தந்தை, பாசம் வைத்து என்ன பயன் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சாதிக்க வேண்டியவன், அவளுக்கான தேடலில் 🥺🥺🥺
 
Top