• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 17


அதீத மன உளைச்சலில் இருந்த மதுரவர்ஷினி, சித்தார்த்தின் கேள்வியில் நிதானம் இழக்கத் தொடங்கினாள்.

தனக்கும் சித்தார்த்துக்கும் பிறந்த குழந்தையை இழந்து விட்டுத் தான் மட்டும் தவிக்க, மனைவி மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழும் சித்தார்த் வர்மனோ தன்னைக் கிண்டல் செய்வதாகவே நினைத்தாள்.

காதலிக்கும் போது கூட தன்னை ஒரு தவறான கண்ணோட்டத்தில் பார்க்காத தன் சித்தார்த் வர்மன், இன்று வேறு ஒருவளின் கணவனாக இருந்துவிட்டு தன்னையும் சல்லாபிக்க கூப்பிடுவதாகவே நினைத்தாள்.

தன் காதல் பொய்த்தது மட்டுமில்லாமல், தன் பெண்மையை களங்கப்படுத்துவதைக் கண்ட மதுரவர்ஷினி பொங்கி எழுந்தாள்.

“ மிஸ்டர் சித்தார்த் வர்மன், மைண்ட் யுவர் வேர்ட்ஸ்... “ என்றாள் கண்களில் சினம் துளிர்க்க.

“ஆஹான்.... அப்புறம் மது...“ என்றான் உல்லாசமாக.

“ உங்கள் குழந்தையை பற்றி உங்கள் மனைவியிடம் தான் பேச வேண்டும். என்னிடம் வந்து பேசினால்... “ என்றாள் சினத்தில் சிவந்த முகத்துடன்.

“ பேசினால் என்ன செய்வாய் மது? நீயும் என் முதல் மனைவி தானே...“ என்றான் கிண்டலாக.

“ச்சீ.... உங்களிடம் எனக்கு என்ன பேச்சு” என்று கூறியபடி அறையை விட்டு வெளியேற எத்தனித்தாள்.

எழுந்து வெளியே சென்ற மதுவை தன் கரம் நீட்டி தடுத்தான்.

தன் வெட்டும் பார்வையால் சித்தார்த்தை முறைத்துப் பார்த்தாள்.

அவளது பார்வையை அசால்டாக எதிர் கொண்டவன், நீட்டிய தன் கையை மடக்கவே இல்லை.

தன் இரு கரம் கொண்டு சித்தார்த்தின் கைகளை விலக்க முற்படும் வேளையில், கைகளால் மதுர வர்ஷினியின் கழுத்தைச் சுற்றி வளைத்தான் சித்தார்த் வர்மன்.

அதிர்ந்து விழித்தவளின் விழிகளை உற்று நோக்கியபடியே, தன் புருவம் உயர்த்தி என்ன என்று கண்களால் வினவினான்.

சித்தார்த் வர்மனின் நெருக்கத்தில் அச்சம் கொண்டவளோ, தன் மென் பாதங்களை பின் நோக்கி நகர்த்தினாள்.

மெல்ல மெல்ல அவள் பாதம் பின்னே செல்ல, சித்தார்த் வர்மனின் கால்களோ அவளை நோக்கியபடி முன்னேறின.

இனி மதுரவர்ஷினி பின்னே செல்வதற்கு சுவர் தடையாக இருக்க, தன் கைகளை காற்றில் அலைய விட்டவளோ, அவனை தூரத் தள்ள முயன்றாள்.

அவளது முயற்சி அதிகரிக்க அதிகரிக்க, சித்தார்த்தோ இருவரின் இடையே உள்ள நெருக்கத்தைக் குறைத்துக் கொண்டே வந்தான்.

சித்தார்த் வர்மனின் உரசலில் அன்றைய நாளில் அவனுடைய நெருக்கத்தின் தாக்கம் மதுரவர்ஷினியின் மனதில் அதிர, உடல் நடுங்க ஆரம்பித்தது.

மதுரவர்ஷினியின் காதலை ரசித்தவனுக்கு, அவளது கோபத்தை ரசித்தவனுக்கு, அவளது பயத்தை ரசிக்க முடியவில்லை. காதல் கண்ட அவனது இதயம் காயம் கொண்டது.

“ என் காதலில் என்ன பிழை கண்டாய்? “ விம்மி ஏங்கியது அவனது காதல் நெஞ்சம்.

“ காதலா?..... “ நிமிடத்தில் கனல் கக்கியது அவள் விழிகள்.

பொய்த்துப்போன அவனது காதலைக் கோடிட்டு காட்டியவுடன், எங்கிருந்து அவளது பெண்மைக்கு சக்தி வந்ததோ, ஒரே தள்ளளில் சித்தார்த் வர்மனை தள்ளினாள்.

“உயிர்க்காதலுக்காக என் பெண்மையை உங்கள் காலடியில் பரிசளித்துவிட்டு, உங்களுக்காகவே.... இல்லை இல்லை.... என் சித்தூக்காக காத்திருந்தேன் காதலுடன்.

என் காதல் என் சித்தூக்கு மட்டுமே. நாம் பிரிந்த இந்த நான்கு வருடத்தில் உங்களிடம் மூன்று வயது குழந்தை.

அப்பப்பா உங்கள் காதலின் உறுதியை நினைக்கும்போது புல்லரிக்கிறது.

இதில் மனைவிக்கு துரோகம் செய்து விட்டு என்னிடம் மகளை பெற்றுக் கொள்ளப் போகிறாராம்.

இப்படி பேச உங்களுக்கு வெக்கமா இல்லை? “ சீறி எழுந்தாள் பெண் வேங்கையாக.

என்றும் நயன பாஷை பேசும் தன் காதலி, தன் பயத்தை விடுத்து, வீறுகொண்டு அவனைத் திட்டியதெல்லாம் பூ மழையாய் பொழிந்தது போல் இருந்தது சித்தார்த் வர்மனுக்கு.

இன்னும் தனக்கு தெளிவான உண்மை தெரியாததால், அது தெரியும் மட்டும் மதுரவர்ஷினியை சீண்டிப்பார்க்க நினைத்தான்.

சாந்தமாய் தன்னிடம் பழகியவளை விட தன்னிடம் உரிமையாய் சண்டைபோடும், மதுரவர்ஷினியை மிகவும் நேசிக்க ஆரம்பித்தான்.

ஆதித்திய வர்மன் தனது மகன் என்று தெரிந்தால் நிச்சயம் வெடித்து நொறுங்கி விடுவாள் மதுரவர்ஷினி, அதனால் சிக்கலின் அடி நுனியைத் தேடி தன் அடிகளை எடுத்து வைத்தான்.

காதலிக்கும் போது மதுரவர்ஷினியின் அன்பால் நனைந்த சித்தார்த்துக்கு, அவளை அன்பால் ஆள வேண்டுமென்ற அளப்பரிய ஆசை ஊற்றெடுத்துப் பெருகியது.

மகனைக் காரணம் காட்டி அவள் அன்பைப் பெற அவன் விரும்பவில்லை. தன்னை தனக்காகவே மதுரவர்ஷினி விரும்ப வேண்டும் என்று ஆவல் கொண்டான்.

மதுரவர்ஷினியின் உதறலில் பின்னோக்கிச் சரிந்த சித்தார்த் தன்னை நிலைப்படுத்தி நின்றான்.


“ நான் ஏன் வெட்கப்பட வேண்டும் மது? நான் உன் பழைய சித்தூதான். வேண்டுமானால் என்னைச் சோதித்து பார்.
என்றும் உன் பெண்மையை ஆராதிக்கவே நினைக்கிறேன். அதற்காகவே பெண்குழந்தையை உன்னிடம் கேட்கிறேன் “ என்றான் கன்னக் கதுப்பை நாவால் நிரடியபடி.

தான் இவ்வளவு பேசிய பிறகும், பேச்சால் எல்லைமீறும் சித்தார்த்தை கண்டு, தன் கைப்பொருளை எல்லாம் இழந்தவள் விரக்தியில் எழுந்த கோபத்தில், இயலாமை கலந்த ஆத்திரத்தில் சித்தார்த் வர்மனை அறைய தன் கையை ஓங்கினாள்.

மதுரவர்ஷினியின் கைகள் தன் கன்னத்தை தீண்டும் முன், அவள் கைகளைப்பிடித்து விரலுக்கு ஒன்றாக முத்தம் பதிக்க ஆரம்பித்தான்.

அவனின் உதட்டு உரசலில் மின்னல்கள் மதுரவர்ஷினியின் காதல் வானில் வெட்டி வெட்டி மறைந்தன.

பனிச் சிற்பம் போல் உறைந்து நின்றவளை, தன் முத்தத்தால் உருக வைக்க முயற்சித்தான்.

அதிர்ச்சியிலிருந்து மீண்டு வராதவளை, விரல்களில் செல்லக் கடி கடித்து மீண்டு வரச் செய்தான்.

“ஹான்.... “ என்ற சத்தத்துடன் தன் விரலை உருவிக் கொண்டு பின் நகர்ந்தாள்.

“ மிஸ்டர் சித்தார்த் வர்மன், உங்களை உங்களை.... “ வார்த்தைகளைத் தேடித் தவித்தாள்.

தன் உணர்வுகளுடன் போராடும் அவனைக் கண்டு எரிச்சல் வந்தது.

தன்னை ஆத்திரம் கலந்த பார்வையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் மதுரவர்ஷினியைப் பார்த்தவன், “ உன் மனதில் நான் இழந்த இடத்தை மீண்டும் பெறுவேன். உன் காதலை உன் வாயின் வழியாகவே வர வைப்பேன். உன் காதலைச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே பெற்றுக் கொள்வேன் “ என்று தன் மனதோடு உரையாடினான் சித்தார்த்.

“ மது உன் வலது கன்னத்தில் என்ன?” என்று தன் சுட்டு விரலை அவளது கன்னம் நீட்டி பதட்டத்துடன் வினவினான்.

அனிச்சையாக தன் கன்னங்களை தடவ ஆரம்பித்தாள்.

“இல்லை.... இல்லை.... “ என்று சித்தார்த் கூறிக்கொண்டே, அவளின் கன்னம் நோக்கி குனிந்து இதழ் பதித்து விட்டு, சன்ன சிரிப்புடன் அறையை விட்டு வெளியேறினான்.

சித்தார்த் வெளியேறியவுடன் அருகில் இருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தாள். இடது கை வலது கன்னத்தை தாங்கி இருக்க, அவன் முத்தமிட்ட கைவிரல்களை திருப்பி திருப்பிப் பார்த்தாள்.

முத்தமிட்ட இடங்கள் அவள் உடம்பில் குறுகுறுத்தது. வேறு ஒருத்தியின் கணவன் என்று தெரிந்தும் அவன் தீண்டலில் உயிர் குழையும் தன்னை எண்ணி நொந்தாள்.

தன் உணவைத் தானம் கொடுத்துவிட்டு, தானம் கொடுத்தவரிடமே மீண்டும் அந்த உணவை கேட்டு வாங்கிப் புசிப்பது போல் இருந்தது மதுரவர்ஷினிக்கு.

தன் மனதில் துளிர்த்த காதலை தொலைத்தவளோ , மீண்டும் அவன் காதலில் தொலையவே தன் மனம் தவிப்பதை உணர்ந்து அதிர்ந்து நின்றாள்.

சித்தார்த் வர்மனின் வெளிப்படையான இந்தப் பேச்சில் அவளது மனம் உடைய ஆரம்பித்தது.

மதுரவர்ஷினியின் கைகள் தன் கழுத்தில் கிடந்த சங்கிலியை இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்தது. ஆரவாரமாய் ஆரம்பித்த உறவு அர்த்தமற்றுப் போய்விட்டது எண்ணி மனம் இறுகினாள்.

மறுநாள் முதல் காலை பார்க்கிற்கு செல்வதைத் தவிர்த்தாள். ஆதித்ய வர்மனை பார்க்கவும் மறுத்து மருகினாள் .

சித்தார்த்தை முற்றிலும் தவிர்க்க தன் வாழ்க்கை பயணப் பாதைகளை மாற்றி வகுத்தாள்.

மதுரவர்ஷினியின் நடவடிக்கைகளை இரண்டு நாட்கள் தொடர்ந்து கவனித்தான் சித்தார்த். அவளின் மனநிலையை துல்லியமாக புரிந்து கொண்டான். மனதிற்குள் சிரித்துக் கொண்டவன். அன்று தனக்கும் இரவு நேர வேலையாக மாற்றிக் கொண்டான். உடன் வரும் போது ஆதித்ய வர்மனையும் தன் கைகளில் அள்ளிக் கொண்டு வந்தான்.

தன் மகனோடு சேர்ந்துக் கொண்டு மதுரவர்ஷினி என்னும் தென்றலை புயலாய் மாற்ற சதித் திட்டம் தீட்டினான். தன் தந்தை அபிநயத்துடன் கூறும் திட்டங்களை சிரித்துக்கொண்டே, தலையை ஆட்டிக்கொண்டே கவனித்தான் ஆதி.

தாயை தங்கள் வலையில் சிக்க வைக்கும் திட்டத்திற்கு தந்தையுடன் ஹை பை கொடுத்துக்கொண்டான் குட்டி ஆதித்.

மருத்துவமனை வராண்டாவில் மதுரவர்ஷினி நடந்து வர, எதிரே சித்தார்த் வர்மன் தன் மகனோடு புன்னகை ததும்பும் முகத்துடன் வந்து கொண்டிருந்தான்.

சித்தார்த் வர்மனைக் கண்டால் சலனப்படக் கூடாது என்ற மன திடத்துடன் வந்தவள், தன் எதிரே வந்தவனைக் கண்டு உணர்ச்சிகளற்ற முகத்துடன் கடக்க எத்தனித்தாள்.

சித்தார்த் தன் மகனுக்கு கண்களால் ஜாடை காட்ட, தங்கள் அருகே கடந்து சென்றவளின் சுடிதார் துப்பட்டாவை தன் பிஞ்சுக் கரங்களால் பிடித்துக் கொண்டான் ஆதித்ய வர்மன்.

சித்தார்த் தான் தன்னிடம் விளையாடுகிறான் என்று எண்ணி மது, முறைத்தபடி திரும்ப அங்கேயே, முத்துப் பற்களை காட்டி சிரித்துக் கொண்டிருந்தான் ஆதித்ய வர்மன்.

அவன் சிரிப்பில் மயங்கிய மதுரவர்ஷினி, தான் எடுத்த உறுதியை மறந்துவிட்டு, ஆதியை பார்த்து கண்களை சுருக்கி தன் விரல்களை தாமரை மொட்டு போல் குவித்து “ப்ளீஸ்..... “ என்று உதடு அசைத்தாள் சத்தம் வராமல்.

அப்பா-மகன் இருவருமே புருவத்தை மத்தியில் சுருக்கி, கண்களால் வினா எழுப்பினர்.

இருவரின் ஒருசேர செயலில் பிரமித்து நின்றாள் மதுரவர்ஷினி. இனி இது சரி வராது என்று நினைத்தவள், தனது துப்பட்டாவை அழுத்தமாக உருவ முயன்றாள்.

கையில் காயம் பட்டது போல் ஓவென்று சத்தமிட்டு அழ ஆரம்பித்தான் ஆதித்ய வர்மன். தாய்மையின் இதயம் பதற வெடுக்கென்று சித்தார்த் கையிலிருந்த ஆதித்திய வர்மனை பிடுங்கிக் கொண்டாள்.


அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உள்ளங் கைகளை விரித்து, உதடு குவித்து தன் உயிர் காற்றை ஊதினாள்.

ஆதித்தோ இன்னும் அதிகமாக வலிப்பது போல், நேரம் கூடக்கூட சப்தம் செய்து கொண்டே இருந்தான். பதட்டத்தில் மழலையின் நடிப்பைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை மதுரவர்ஷினியால்.

மது தலையை குனிந்தபடியே அவன் கைகளை ஆராய்ந்து கொண்டிருக்க, தன் தந்தையைப் பார்த்து கண்ணடித்தான் ஆதித்திய வர்மன்.

“ம் மா.... வலிக்குது “ என்ற மழலைக் குரல் கேட்டவுடன், அவளது உள்ளங்கையில் ஆயிரம் முத்தங்களைப் பதித்தாள் மதுரவர்ஷினி.

அவளின் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகள் அந்த பிஞ்சுக் கரத்தின் உள்ளங்கையில் பட்டுத் தெறித்தது.

தாயின் கண்ணீரைக் கண்டதும் ஆதித்ய வர்மன் தன் மலர்க்கரத்தால் அவளின் கண்ணீரைத் துடைத்தெடுத்தான்.

மழலையின் உலகத்தில் தன்னை மறந்து நின்றவளின் இடது கன்னத்தில் ஆதித்ய வர்மன் இதழ் பதித்தான்.

தன் கண்கள் மின்ன இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த் வர்மனின் சட்டையை ஆதித்ய வர்மன் பிடித்து இழுக்க நிலைதடுமாறியவனோ மதுரவர்ஷினியின் வலது கன்னத்தில் தன் இதழ் பதித்தான்.

அதிர்ந்து விழித்தவளின் கண்கள், அன்பின் ஆழ்ந்த சுகத்தில் தாமாக மூடிக்கொண்டன.

மின்னல் வெட்டும்...
 
Last edited:

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 

Kavi priya

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 6, 2022
Messages
25
நிறைவான பதிவு. மதுர வர்ஷினியின் நிலை எப்போது மாறும்?
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️ஏ யப்பா அப்பாவும் பையனும் சரியான தந்திர காரனுங்க 😄😄😄😄😄😄😄😄😄
உண்மை தெரியும்போது மதுவின் பதிலடியும் damaal-dumeel 🤣🤣🤣🤣🤣
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
நிறைவான பதிவு. மதுர வர்ஷினியின் நிலை எப்போது மாறும்?
காதலிக்கும் போது மதுரவர்ஷினியே அதிகமாக காதலைப் பொழிந்தாள்....
இப்போது சித்தார்த் வர்மனின் ஆட்டம்.. காதல் சதிராட்டம் 🤣🤣🤣🤣
 

Priyakutty

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 28, 2022
Messages
112
மது உண்மையா பாவம்... 🥺

அவங்க அப்பா.... 😡😡😡😡

அவர் பொண்ணு பிரிய கூடாது னு நெனச்சி ஒரு பிஞ்சு கொழந்தை கிட்ட இருந்து அம்மா அஹ் பிரிச்சிட்டாரு... 😤😤

ரெண்டு பேரும் பேசியிருக்கலாம்... வாய்விட்டு பேசிருந்தாலே பிரச்சனை முடிஞ்சிருக்குமோ... 😔

உண்மை தெரிஞ்சு என்ன ஆகுமோ... எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோ...
 

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
செல்ல சீண்டல்களும் சேட்டைகளும் இனிதே ஆரம்பமோ 🤣🤣🤣 இதில் மகனுடன் கூட்டு வேறு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

காதலும் சதிராடுகின்றதே ஆத்தரே 🤭🤭🤭
 
Top