• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீன் வறுவல்

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
மீன் வறுவல்
1628234241243.png

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையானபொருள்கள் -

வஞ்சீரம் மீன் - 1/4 கிலோ

மிளகாய்த் தூள் - 1 மேஜைக்கரண்டி

மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையானஅளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை -

முதலில் மீனை நன்றாக கழுவி வைக்கவும். பிறகு சிறிதும் தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும்.

மீன், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகுத் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறி 2 மணி நேரம் ஊற விடவும்.

1628234275489.png


மீன் நன்றாக ஊறியதும் அடுப்பில் கடாய் அல்லது தோசைக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து 2 அல்லது 3 மீன் துண்டுகளைப் போட்டு வறுக்கவும்.

5 நிமிடம் கழித்து மீனை திருப்பி போட்டு வறுக்கவும். இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.

1628234360972.png


இதே போல் மற்ற மீன் துண்டுகளையும் வறுத்து எடுக்கவும். சுவையான மீன் வறுவல் ரெடி.

 
Top