முத்தமழை - 17
“இப்போ எதுக்குடி உம்முனு உட்கார்ந்திருக்க..?” என அன்றைய நாளின் பத்தாவது முறையாக கேட்டிருப்பான் கர்ணன். ஆனால் பதில்தான் வல்லபியிடமிருந்து வரவில்ல.
இரு குடும்பமும் கோவை ஸ்ரீதேவியில் கல்யாணப்பட்டு எடுக்க வந்திருந்தனர். கர்ணன் வரவே முடியாது என்று சொல்லியிருக்க, வல்லபி அப்போது ஆரம்பித்த மௌன விரதம் இப்போது வரை முடிவுக்கு வரவில்லை.
“வல்லி எனக்கு பொறுமையே கிடையாது. ஆனா உன் விசயத்துல நான் ரொம்ப பொறுமையா இருக்கேன். அந்த பொறுமையை நீயே போக வச்சிடுவ போல..” என பல்லைக் கடித்தான்.
“அதுதான் எனக்குத் தெரியுமே..” என்றவள் சட்டென “ஸாரி..” என்றாள் அவனை நேராகப் பார்த்து.
“ம்ச்.. இப்போ எதுக்கு சாரி. உன்னோட ஆசையும் சரிதான். அதையும் நான் கன்சிடர் செய்யனும்தான், ஆனா என் சிச்சுவேஷன் புரிஞ்சி கேட்டிருக்கலாமேனு குட்டியா ஒரு வருத்தம் அப்போ தோனுச்சு.” என சிரிக்க,
“அப்போ இப்போ..?” என்ற பெண்ணவளுக்கும் புன்னகைதான்.
“இப்போ..” என இழுத்தவன், “என்னைப் பார்த்ததும் உன் கண் விரிஞ்சி, அப்படியே என்னை முழுங்குற மாதிரி பார்த்தியே அப்போ, அந்த சின்ன வருத்தம் கூட காணாம போயிடுச்சு..” என புன்னகைக்க, சட்டென முகத்தை மற்றைய பக்கம் திருப்பிய வல்லிக்கு முகமெல்லாம் செவ்வானமாய் சிவந்து தான் போனது..
“ஷ்ஷ்ஷ்.. இதுக்குத்தான் நான் உன்னை விட்டு தள்ளியே இருக்கிறது, என் முன்னாடி நீ இப்படி சிவந்தாலே என் கையும் வாயும் சும்மா இருக்காது..” என அந்த சேல்ஸ் மேனுக்கு கேட்காதவாறு முனங்க..
“ம்ச் ப்ளீஸ்..” என்றவள் சட்டென அவன் கையை கிள்ளிவிட்டு, தன் முகத்தை அழுந்த துடைத்து தன் சிவப்பை மறைக்க முயற்சித்தாள்.
“ஷ்ஷ் என்னடி..” என கிள்ளிய இடத்தை தேய்த்துவிட்டு, அவளை முறைக்க,
“பின்ன.. இங்க வர வரைக்குமே நீங்க வரலன்னு தான சொல்லிட்டு இருந்தீங்க. எனக்கு உங்க சிச்சுவேஷன் புரியாம இல்ல. ஆனா இது நமக்கான ஒரு பிரீசியஸ் டைம் இல்லையா? அதை நாம மிஸ் பண்ணக்கூடாதுனு நினைச்சேன். சாரி..” என்றாள் மீண்டும்.
“விடு ப்பா.. எனக்கு இதெல்லாம் பெருசா தெரியல. பட் உன்னோட அந்த பார்வையை பார்த்ததும் சம்திங்க் ஸ்பெஷல்னு மட்டும் புரிஞ்சது. இனி இப்படி ஸ்பெஷலான மொமன்ட்ஸ் எல்லாம் நாம மிஸ் பண்ணாம பார்த்துக்கலாம். ஓக்கே..”
“ம்ம் செலக்ட் பண்ணியாச்சா இல்லையா? குடும்பத்துக்கே எடுத்து முடிச்சாச்சு. இன்னும் ஒரு சேலை எடுத்து முடிக்கல..” என்று வந்தாள் வந்தனா.
“எங்க பின்னாடியே தான் உன்னோட கேமரா கண் சுத்துமா?” என கடுப்பாக கேட்டான் கர்ணன்.
“ம்ம்.. எஸ் அஃப்கோர்ஸ்.. ஆல்ரெடி ரெண்டு பேருமே ஹாஜியா சுத்துறீங்க. உங்களை தனியா விட்டு கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை சித்தியாக்கிட்டா.? என் மானம் மரியாதை என்னாகுறது.. அதனால தான் இப்போ புதுசா வாட்ஸ்வுமன் வேலை செய்றேன். ஸ்பெஷல் ஃபார் உங்களுக்கு மட்டும்..” என கண் சிமிட்ட,
“வாட்ஸ்வுமனா? என்ன பேச்சு பேசுற.. இரு உன்னை சீதாம்மாட்ட சொல்றேன்..” என வல்லபி எழுந்துக்கொள்ள,
“ஆள விடு தாயி..” என வந்தனா கையெடுத்து கும்பிட, அவள் தலையில் தட்டியபடி வந்து நின்றான் வெற்றி..
“ஹேய் வெற்றி ண்ணா வரேன்னு சொல்லவே இல்ல..” என அப்போதுதான் வந்து நின்ற வெற்றியின் கையை வல்லபி பிடித்துக் கொள்ள, வந்தனாவோ தன் தலையை ஒரு கையால் தேய்த்துவிட்டபடியே, வெற்றியின் தலையில் குட்டுவதற்கு எம்பி எம்பி குதித்து முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
அதைக் கண்டு சிரித்த கர்ணன், அவளைப் பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டே “இதுக்குத்தான் கொஞ்சமாவது வளரனும்னு சொல்றது..” என கிண்டலடிக்க,
“என்னை இப்படி பாடி ஷேமிங்க் பண்ணா ரொம்ப கோபம் வரும்…” என அவனை முறைக்க,
“இல்லாட்டினாலும் நீ பனை மரத்துக்கு பாதி உயரம் தான்..” என கிண்டலடிக்க, அப்போது அவர்களை நெருங்கி வந்தான் வசந்த்.
“பாஸ்.. உங்க ஒர்க் முடிஞ்சா கிளம்பலாம்.. அங்க இருந்து கால் வந்துட்டே இருக்கு. சுபாவால சமாளிக்க முடியல..” என அவன் காதைக் கடிக்க,
“எது சுபாவா? அது யார் சுபா?” என முணுமுணுத்தவள், “வல்லிக்கண்ணு இங்க பாரு சுபான்னு யாருக்கிட்டயோ மாமா பேசிட்டு இருக்கார்..” என கத்த,
“யார் பாஸ் இது லூசு மாதிரி.. சுபான்னா சுபாஷ்..” என வசந்த் அவளை முறைத்தபடியே கேட்க,
“ஹேய் மலமாடு யாரை லூசுங்கிற, நீதாண்டா லூசு..” என்ற போது வெற்றியும் வல்லியும் அவர்களிடம் திரும்பியிருந்தனர்.
வெற்றி தங்கையை என்ன என்பது போல் பார்க்க, “இந்த மலமாடு என்னை லூசுன்னு சொல்றான் டா..” என உதட்டை பிதுக்க,
“உண்மையை ஏத்துக்கிறது கஷ்டமாத்தான் இருக்கும். பட் வேற என்ன செய்ய..? அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..” என வெற்றி சிரித்துக் கொண்டே சொல்ல, அதில் கடுப்பான வந்தனா அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.
அனைவரும் சிரிப்புடன் பார்க்க, “ஓக்கே நான் கிளம்பறேன்.. என்னோட ஃபிட் சைஸ் உனக்கு தெரியுமில்ல, மத்த எல்லாம் நீ எடுத்துடு… கண்டிப்பா நான் அங்க இருந்தே ஆகனும் எப்படியும் இன்னைக்கு கார்மெண்ட் ப்ராப்ளம் சால்வ் பண்ணனும். இல்லைன்னா அந்த எக்ஸ்போர்ட் பண்ண முடியாது.. பிரச்சினையும் வேற மாதிரி போயிடும். நீ பார்த்துக்கோ..” என்று விடைபெற, வல்லபியும் நல்ல மனநிலையிலேயே விடை கொடுத்தவளுக்கு அன்று சட்டென கர்ணன் போனை வைத்த நிகழ்வுதான் வந்தது.
அன்று இரவு கர்ணன் போனை வைக்கவும் பெண்ணவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அதன்பிறகு அழைத்தும் எடுக்காமல் போக, மிகவும் பயந்து போய்விட்டாள். தூக்கமும் அவளை நெருங்கவில்லை.
அடுத்தநாள் காலை குளித்து வீட்டில் விளக்கு போட்டதோடு அல்லாமல் கோணியம்மனையும் காண வந்திருந்தாள். அவளது இன்பம் துன்பம் அனைத்திலும் அந்த அம்மன் இல்லாமல் இருந்ததில்லை.
இப்போதும் அவன் வருத்தம் அவள் வருத்தமாகிவிட, அதற்கான தீர்வைத் தேடி அம்மன் பாதம் சரணடைய வந்துவிட்டாள்.
தரிசனம் முடிந்து பிரகாரத்தில் அமர்ந்திருந்த நேரம், அவளுக்கு எதிரே சிறு புன்னகையுடன் வந்தமர்ந்தான் கர்ணன்.
அவனைப் பார்த்ததுமே விழிகளில் நீர் இறங்க “ஸாரி.. ரொம்ப டென்சன் பண்ணிட்டேனா.?” என வலிய புன்னகைக்க,
“அப்படின்னு யார் சொன்னா.?” என அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “ஆக்சுவல்லா நான்தான் சாரி சொல்லனும்..” என அவனும் புன்னகைக்க,
“இல்ல ப்பா.. நான் தான் சாரி சொல்லனும். நேத்து தேவையில்லாம பேசி, நீங்க மறந்த எல்லாத்தையும் நியாபகப்படுத்தி, டென்சன் பண்ணிட்டேன். ஐ நோ.. அது உங்களுக்கு எவ்ளோ வலிச்சிருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. சாரி. ரியல்லி வெரி சாரி.. பட் அதுக்காக இப்படி ஒன்னுமே சொல்லாம போனை வைக்காம இருந்திருக்கலாம். நான் ரொம்ப பயந்துட்டேன்..” என்றவளுக்கு அழுகை விசும்பலாக மாறியது.
“வல்லி என்ன இது கோவில்ல வச்சு.. எல்லாரும் பார்க்கிறாங்க பார்..” என அதட்டியபடியே எழுந்தவன், அவளுக்கு கை கொடுத்து எழுப்பி வெளியில் அழைத்து வந்தான்.
“நீங்க சாமி கும்பிடல..”
“கும்பிட்டேன்..” என்றவன் “அம்மா கூட இங்க சில டைம் வந்திருக்கேன். என்னோட மெமரிஸ்ல இந்த கோவிலும் இருக்கு. அம்மாவுக்கு இந்த அம்மன் பிடிக்கும்னு தெரியும். அப்பா, அம்மாச்சி எல்லாம் கூட சொல்லிருக்காங்க.” என்றான் மென்மையாக.
வல்லி யோசனையாக கர்ணனைப் பார்க்க, “எனக்கு சாப்பிடனும், பயங்கர பசி. மார்னிங்க் எழுந்ததுமே உன்னைப் பார்க்கணும்னு யாருக்கிட்டயும் சொல்லாம கூட வந்துட்டேன். ஆசையோட இங்க வந்தா, நீ கோவிலுக்கு வந்துட்டன்னு ஆன்டி சொல்றாங்க. சரி நானே போய் பார்த்து கூட்டிட்டு வரேனு வந்துட்டேண்..”
“ம்ம்.. அண்ணப்பூர்ணா ஓகே வா..”
“ம்ம் போலாம்.. வேற என்ன ப்ளான் உனக்கு. ஆஃபிஸ்ல பேசுனியா? என்ன சொன்னாங்க?”
“ம்ம்.. காச்சு மூச்சுனு கத்தினாங்க. அப்பவே நோ சொல்லிருந்தா இது இன்னொரு இன்டெர்னுக்கு போயிருக்கும். அவங்க ஃபியூச்சர் ப்ரைட்டா இருந்திருக்கும். இனிமேலாவாது செல்ஃபிஸா பிகேவ் பண்ணாம இரு.. அப்படி இப்படினு கத்திட்டாங்க. ஓகே தப்பு நம்ம பேர்ல தான். அதேநேரம் அவங்க சொல்றதும் வேலிட் பாயின்ட். கேம்பஸ்ல செலக்ட் ஆகுறது எத்தன பேரோட கனவு.. அதுல யாருக்காவது கிடைச்சிருந்தா சந்தோசப்பட்டிருப்பாங்க..” என்றாள் ஒரு பெருமூச்சோடு.
“சாரி ப்பா..”
“ம்ச்.. இப்போ எதுக்கு சாரி.. இப்படியெல்லாம் சடனா என் லைஃப்ல நடக்கும்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும். அவங்க பேசினது கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. பட் ஓக்கே தான் விடுங்க..”
“ம்ம்.. எனக்கு ரவா தோசை.. உனக்கு என்ன வேணும், நீயே ஆர்டர் பண்ணு..”
“எனக்கு மினி டிபன்.. அதுவே ஓகே.” என இருவருக்கும் உணவை ஆர்டர் செய்துவிட்டு அமர,
‘வல்லி எனக்கு சாம்பார் இட்லி, தயிர் வடை, நெய் ரோஸ்ட் பார்சல்’ என வந்தனாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்து விழ, வல்லியின் முகம் புன்னகை பூசியது.
“என்னாச்சு..?” என கர்ணன் புருவம் தூக்க,
“சும்மாவே சொக்கிப் போய் அலையுறேன், இதுல இப்படியெல்லாம் மேனரிசம் காட்டினா மொத்தமா விழுந்துடுவேன்..” என வல்லி முணுமுணுக்க,
“அப்போ மேடம் இன்னுமே மொத்தமா விழல.. மொத்தமா விழுந்தாதானே எழுந்துக்க கஷ்டமா இருக்கும். நானும் தூக்கி விடுற சாக்குல அப்படி இப்படி ஏதாவது ரொமான்ஸ் நடக்கும்..”
“ஹா..ஹா.. அப்படி இப்படி ரொமான்ஸ் நடக்க, சார் அப்படி இப்படி ஏதாவது பெர்ஃபார்மன்ஸ் பண்ணனும், ஒன்னும் பண்ணாம..” என வல்லி இழுக்க,
“அடிப்பாவி..” என வாயில் கை வைத்த கர்ணன், “இந்த 2k கிட்ஸே ஒரு மார்க்கமா தான்டி இருக்கீங்க..” என சிரிக்க,
“பிறகு உங்களை மாதிரி கல்யாணமே கனவாகிடுமோன்னு ஃபீல் பண்ற 90S கிட்ஸுன்னு நினைச்சீங்களா?” என அவளுமே சிரித்துவிட்டாள்.
இருவரும் சாப்பிட்டு, வந்தனாவிற்கான உணவை டோர் டெலிவரிக்கு சொல்லிவிட்டு இருவரும் வெளியில் வந்தனர்.
“உன் ப்ளான் என்னனு கேட்டேனே..?”
“ம்ம் இன்னைக்கு வேற ப்ளான் இல்ல..”
“ஹ்ம்ம் அப்படியே ஒரு ரைட் போலாமா? பாலாக்காடு வரை. டூ அவர்ஸ்தானே.. ஈவ்னிங்க் வந்துடலாம்..”
“அப்பா என்ன சொல்வார் தெரியல. நேத்தே பேசல.. இப்போ பெர்மிசன் கேட்டா..” என இழுக்க,
“ஓகே விடு.. நான் பேசுறேன்” என்றவன் ராமசாமியிடமும், சிவகுருவிடமும் பேசி சம்மதம் வாங்க, வல்லி சீதாவிடம் பேசி சம்மதம் வாங்கியிருந்தாள்.
“நாலு மணிக்குள்ள வீட்டுல இருக்கனும்னு சீதாம்மா சொல்றாங்க..” என்ற வல்லியிடம்,
“ம்ம் பார்த்துக்கலாம் ப்பா..” என்றவன் தன் ஆடியை பாலாக்காட்டு ஹைவேயில் திருப்பினான்.
சிட்டியைத் தாண்டும் வரைக்குமே இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.
“என்னாச்சு..? ஏன் ரெஸ்ட்லெஸா இருக்கீங்க?”
“பார்ரா.. நான் எப்படி இருக்கேன்னு எல்லாம் கண்டுபிடிக்க முடியுதா உங்களால.?”
“ம்ச் டோன்ட் ப்ளே வித் மீ.. என்னாச்சு..?”
“என்னாச்சு என்னாச்சுன்னா? நான் என்ன சொல்லனும்? உனக்கு என்ன தெரியனும்.. இத்தனை நாள் மனசுக்குள்ள தேங்கி கிடந்த என் அம்மாவோட நினைவுகளைத் தூண்டி விட்டுட்டு இப்போ வந்து என்னாச்சு என்னாச்சுனு கேட்டா? என்ன பதில் சொல்ல, அவங்களை ரொம்ப மிஸ் பண்றேன்னு எல்லாருக்கும் தெரியிற மாதிரி உன்கிட்ட சொல்லனுமா?” என கத்த, கண்களில் மிரட்சியுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வல்லி..