முத்தமழை - 18
வல்லபி அதிர்ந்தது எல்லாம் ஒரு நொடி தான். அடுத்த நொடியே தன்னருகில் இருந்தவனை முறைக்க ஆரம்பித்துவிட்டாள்.
“உங்களை என்னால புரிஞ்சிக்கவே முடியல. இப்போ எதுக்கு இவ்ளோ வைலன்ட் ஆனீங்க. உங்களுக்கு என்னதான் பிரச்சினை..” என ஆதங்கமாகவே கேட்டாள்.
அதில் “ம்ச்..” என சலித்தவன் அதற்கு பதில் சொல்லாமல் காரை ஓட்ட,
“உங்ககிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்..” என இப்போது அழுத்தமாக வல்லபி கேட்டாள் பெண்.
“என்ன ப்பா நீ?” என்றவன் “நான் எதுக்கு பயந்து இங்க வராம இருந்தேனோ, இப்போ அதுதான் நடக்குது..” என்றான் வேதனையாக.
வல்லபி புரியாமல் பார்க்க, “அம்மா இறந்த பிறகு எனக்கு அவங்க நினைப்பு அவ்வளவா வந்ததில்ல. அதுக்கு காரணம் ராஜிம்மா தான். எந்த குறையும் சொல்லாத மாதிரி தான் என்னை வளர்த்தாங்க. ஆனா அது எல்லாம் ஒரு காரணத்துக்காகனு புரியும் போது மனசு வலிச்சது. அப்போ அது புரியவும் இல்லை..” என்றான் ஏதோ மாதிரியான குரலில்.
வல்லபி அவன் கரத்தை அழுத்திக் கொடுக்க, “ம்ச் அப்போ நான் சின்னப் பையன் தானே.. அவங்க என்னை ஒதுக்கினது கூட தெரியாம, அவங்களுக்காக அழுதுருக்கேன். அப்பா அவங்ககிட்ட வரனும்னு தான் என்கிட்ட அன்பா இருக்கிற மாதிரி நடிச்சிருக்காங்க. அப்போ எனக்கு அது புரியல. ஆனா அம்மாச்சி இதை சொல்லும் போது ‘அப்படியெல்லாம் இல்லன்னு’ சொல்லவும் முடியல. சுந்தர் பிறந்த பிறகு சுத்தமா என்கிட்ட அவங்க நடந்துக்கிற முறையே மாறிடுச்சு. அதுக்குப் பிறகுதான் அம்மாச்சியும், அப்பாவும் என்னை ஹாஸ்டல்ல விட்டாங்க. அம்மாச்சி இருந்த வரை அம்மா நியாபகம் அதிகமா வந்ததில்ல. ஆனா அம்மாச்சி இறந்த பிறகுதான் அம்மாவை அதிகம் மிஸ் பண்ணேன்.” என்றவனின் சோகம் பெண்ணவளையும் தாக்கியது.
“வீட்டுக்கு வந்தா ராஜிம்மா சுந்தரையும், வனிதாவையும் கீழேயே விடாம பார்த்துப்பாங்க. அவங்க பின்னாடியே சுத்துவாங்க. என்கிட்டயும் பேசுவாங்க தான் ஆனா அது ஒரு ஃபார்மலுக்கா இருக்கும், அதோட ஊர் என்ன சொல்லுமோன்னு ஒரு பயமும் இருக்கும்ல. அந்த மாதிரி. எனக்கு அவங்ககிட்ட எதிர்பார்ப்பே இல்லை. அப்பா எனக்கு நல்ல ஸ்டடீஸ் கொடுத்திருக்கார். யாரையும் நம்பி வாழனும்ங்கிற அவசியம் இல்லாத ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கார்.” என்றவனின் முகத்தில் சொக்கலிங்கத்தை நினைத்து உணர்வு பொங்கியது.
“ஆனாலும் மனசு ஒரு மாதிரி ஏங்கும். ஒரு வயசுக்கு மேல யாருக்கிட்டயும் இந்த ஏக்கத்தையோ, என் வலியையோ ஷேர் பண்ணிக்க முடியல. என்னோட பலவீனத்தை யூஸ் பண்ணிப்பாங்களோன்னு ஒரு பயமும் இருந்தது. ஆஸ்ட்ரேலியால கூட எனக்கு க்ளோஸ் ப்ரண்ட்ஸ் கிடையாது..” என்று எங்கேயும் நிறுத்தாமல் பேசிக் கொண்டே வந்தவன், வல்லபியின் முறைப்பில் அப்படியே நிறுத்திவிட்டான்.
“ஆளிஸ் பத்தி இப்போ சொல்ற மூட் இல்ல ப்பா.. உன்னோட மூட் ஸ்பாயில் ஆகும். எனக்கும் அது டென்சன். சோ ஒரு நாள் கண்டிப்பா சொல்றேன். ஆனா இப்போ இல்ல..” என நிறுத்தி கெஞ்சும் பார்வை பார்க்க, வல்லியும் ஒன்றும் சொல்லவில்லை.
“ராஜிம்மாவுக்கு நான் இங்க வரவே கூடாது. அவங்க பசங்களோட வாழ்க்கைதான் அவங்களுக்கு முக்கியம். அப்போ நான் யார்.? அவங்க சொன்ன மாதிரி அநாதை தானே..” என முடிக்கும் முன்னே, தன் கையை பலம் கொண்ட மட்டும் முன்னாடி இருக்கும் டேஷ் போர்டில் அடித்தாள் வல்லபி..
அதில் கர்ணனின் கையில் காரே ஒரு முறை குழுங்கி நின்றது.
“ஏய் பைத்தியக்காரி என்னடி பண்ணிட்டு இருக்க?” என வல்லபியின் கையைப் பிடித்துக் கொண்டவன் கத்த,
“நீங்க இப்படி பேசினா நானும் இப்படித்தான் செய்வேன். ஏற்கனவே சொல்லிருக்கேன். நான் இருக்கும் போது இந்த வார்த்தையை சொல்லக்கூடாதுனு.. ஆனாலும் சொல்றீங்க. அப்போ நான் சொன்னதை நீங்க சீரியசா எடுத்துக்கலன்னு தானே அர்த்தம்..” என அவளும் கத்த,
“பைத்தியம்.. பைத்தியம் தான் பிடிச்சிருக்கு..” என்றவனின் குரல் கரகரத்துப் போக, அவள் கையைப் பிடித்து ஆராய்ந்தான். ஓரிடத்தில் மட்டும் லேசான சிவப்புத்தடம் மட்டும் இருந்தது. கண்டிப்பாக வலி இருக்கும் என அவனுக்கும் புரிந்தது.
“என்ன டி நீ?” என ஆதங்கமாக பேசியவன், காரை வேகமாக எடுத்து பக்கத்தில் இருந்த பேக்கரியில் நிறுத்தி ஐஸ்வாட்டரை வாங்கி ஒரு டவலை நனைத்து கையில் கட்டிவிட்டான்.
“இன் இப்படி பேசமாட்டேன் சொல்லுங்க..” என்றாள் கோபமாக.
“சொல்லமாட்டேன்.. சொல்லவே மாட்டேன் போதுமா? நீயும் இப்படி சடனா ரியாக்ட் பண்றதை நிறுத்தித் தொலை..” என கத்த, அவனின் கோபத்தில் அமைதியாகிவிட்டாள் வல்லபி.
அடுத்து கிளம்பவேண்டும் என்று கூட தோன்றாமல் சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.
‘என்ன பேச வந்து, என்ன பேசிக் கொண்டிருக்கிறோம்.’ என ஒரு வித சலிப்பே வந்துவிட்டது கர்ணனுக்கு.
“ஸாரி.. ப்ளீஸ் உடனே அப்செட் ஆகாதீங்க. மம்மி பிராமிஸ் இனி இப்படி பண்ணமாட்டேன்.” என வல்லபி இறங்கி வந்த பிறகே அவனும் மனம் இளகிப் போனான்.
“ஸாரி ப்பா..” என்றான் அவனும்.
“நம்ம ரெண்டு பேரும் அதிகமா சாரிதான் சொல்லிட்டு இருக்கோம்..” என புன்னகைத்தவள் “சரி அதை விடுங்க.. நீங்க சொல்லுங்க..” என அவனை பேச வைக்க,
“இப்போ வேண்டாம் வல்லி. பட் அம்மாவும் வனிதாவும் கண்டிப்பா டார்ச்சர் பண்ணுவாங்க. அன்ட் சுமி அமைதிதான் என்றாலும், வனி என்ன சொன்னாலும் அப்படியே செய்ற கேரக்டர். உன்னால மேனேஜ் பண்ணிக்க முடியுமா?” என்றான் யோசனையாக.
வல்லியும் அவனையே பார்க்க, “அந்த வீட்டுல எனக்கு அதிகமான மெமரிஸ் இல்ல ப்பா.. அம்மா இருந்த வீட்டை விட்டு வெளிய வரனும்னு கூட எனக்கு தோணல. அன்ட் அப்பாவை விட்டுட்டு வந்தா, அவர் உடைஞ்சி போயிடுவார். அம்மாவை அப்பா எந்தளவுக்கு விரும்பினார்னு அம்மாச்சி சொல்லி கேட்டிருக்கேன். அப்படிப்பட்டவரை அந்த வீட்டை விட்டு கூட்டிட்டு வர முடியாது..” என நிறுத்த,
இது இன்று நேற்று யோசித்த விசயம் அல்ல என்று வல்லபிக்கு புரிந்தது. பல நாட்களாக இதைப்பற்றியே யோசித்து, என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் தவிக்கிறான் என்றும் புரிந்தது.
“என்ன ப்பா நீங்க?” என அவனை தேற்றியவள் “குடும்ப வாழ்க்கையைப் பத்தி எனக்கும் ஓரளவுக்குத் தெரியும். சமாளிக்கலாம். ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ப்ளான் பண்ணி ஆரம்பிக்க இதென்ன ப்ராஜெக்டா.. ஹ்ம்ம் லைஃப் போற போக்குல நாமளும் போவோம். அப்போதான் சில இன்ட்ரெஸ்ட் மெமரிஸ், நாமளே மறக்க முடியாத அளவுக்கு சில மெமரிஸ் கிடைக்கும்..” என்றதும் அவளின் கையைப் பிடித்து தன் இதயத்திற்கு நெருக்கமாக வைத்துக் கொண்டான்.
“எனக்குத் தெரியும்.. நம்ம லைஃப் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்..” என்றான் மலர்ந்த புன்னகையோடு.
“ம்ம்.. இந்த சிரிப்பை பார்க்க எவ்ளோ நேரம் ஆச்சு..” என்ற வல்லபிக்கும் மலர்ந்த புன்னகைதான்.
“அவங்க என்னை வெறுத்தாலும் என்னால அவங்களை வெறுக்க முடியாது வல்லி. சொந்தங்களோட அருமை அது இல்லாதவங்களுக்குத் தான் புரியும் சொல்வாங்க. ஆனா இருந்தும் இல்லாத மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்றாங்க பார், அவங்களுக்குத் தான் அதோட உண்மையான அருமை புரியும்..” என்றான் சட்டென
“பாஸ்.. போதும் பாஸ்.. நீங்க அவங்களை விடவே வேண்டாம். நானும் விடுங்கன்னு சொல்லவே மாட்டேன். இப்போ அந்த பேச்சே வேண்டாம். டைம் ஆச்சு. இனி வீட்டுக்கு போகத்தான் டைம் இருக்கும்.. கிளம்பலாம்..” என ஒரே பிடியாக நின்று வீடு திரும்பி விட்டனர்.
அந்த நேரத்திற்கு வல்லி அப்படி கூறி விட்டாலும், அந்த வீட்டு ஆட்களை நினைத்து அத்தனை கோபம் அவளுக்கு. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவர்களை ஒருவழி செய்யும் அளவிற்கு வேகம் இருந்தது.
ஆனால் அதற்கு ராஜலட்சுமி வாய்ப்பு கொடுக்க வேண்டுமே!
அடுத்த நாளே குலதெய்வ கோவிலுக்கு சென்று நாள் குறித்து வந்தனர்.
ஒரே மாதத்தில் திருமணம் செய்தே ஆகவேண்டும், இல்லையென்றால் கர்ணனுக்கு ஐந்தாண்டுகள் கழித்து தான் குரு பார்வை உண்டு என ஐயர் கூறிவிட, மறுத்துப் பேச யாராலும் முடியவில்லை,
ஒரே மாதம்.. மிக குறுகிய கால இடைவெளி.. ராஜலட்சுமியால் எதையும் தடுக்க முடியவில்லை.
வல்லபி ஆசைப்பட்டதை போல, கரூரே திரும்பி பார்க்கும் அளவிற்கு திருமணத்தை நடத்த வேண்டும் என்ற ஆசை கர்ணனுக்கு.
அது அவளின் ஆசை தான் என்றாலும், அது தனக்காகவும், தன் தாய்க்காகவும் தானே கேட்டாள்.
அன்று அவள் பேசி முடித்த நொடி, அவனுக்கு அவள் மேல் காதல் பலமடங்காகிப் போனது.
சொக்கலிங்கத்திடம் பேச, அவர் விழிகள் மகிழ்ச்சியில் கலங்கிப் போனது.
என்ன செய்ய வேண்டும், யாரைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் அவரே கூற, அந்த வீட்டு ஆட்களின் ஒத்துழைப்பே இல்லாமல் கல்யாண வேலைகள் துரிதமாக நடக்க ஆரம்பித்தது.
கல்யாணப் பட்டு எடுக்க இரண்டு நாட்களாக வல்லபி அழைக்க, கர்ணனுக்கு நகர கூட முடியாத அளவிற்கு வேலை. அதனால் முடியாது என்று சொல்லியிருக்க, உடனே முகத்தை தூக்கி வைத்தாயிற்று மேடம்.
ராஜலட்சுமியிடம் பணத்தைக் கொடுத்து போய் வர சொல்ல, அவருக்கோ எரிச்சல் தான். ஆனால் திருமணத்தில் ஏதாவது குளறுபடி செய்தால் சொத்து முழுவதையும் கர்ணன் பெயரில் எழுதி வைத்து விடுவேன் என சொக்கலிங்கம் மிரட்டியிருக்க, வாயை மூடிக்கொண்டு அமைதியாகவே கிளம்பினார்.
வனிதாவும், சுமித்ராவும் அவர்களுக்கான ஆடை எடுப்பில் இருக்க, யாழினிக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்பதால் ராஜலட்சுமியே மகளுக்கு எடுத்தார்.
அன்றைய பொழுதின் கடைசியில் சீதாதான் இவ்வளவு தூரம் வந்து வீட்டிற்கு அழைக்கவில்லை என்றால் மரியாதையாக இருக்காது என நினைத்து ராஜலட்சுமியிடம் “வீட்டுக்கு வந்துட்டு போங்க சம்மந்தி..” என அழைக்க,
“என்ன இது? உங்களுக்கு பழக்க வழக்கம் எதுவும் தெரியுமா? தெரியாதா? நிச்சயம் பண்ணாம நாங்க எப்படி கை நனைக்க முடியும்.” என வீஞ்சிக்கொண்டு வனிதா வர, அவளுக்கு எதிரில் வந்து நின்றான் வெற்றி.
அவனின் உடல்வாகைப் பார்த்தே ஓரடி பின் சென்ற வனிதா, வல்லபியை முறைக்க, “அம்மா.. அதுதான் அவங்க சொல்றாங்களே.. இனி கல்யாணம் முடிஞ்ச பிறகு வீட்டுக்கு அழைச்சா போதும். ஷாப்பிங்க் முடிஞ்சா கிளம்பலாம்..” என சீதாவைப் பார்த்து கூற, பல்லைக் கடித்தார் ராஜலட்சுமி.
அந்த இடத்தில் அவர் பேசியே ஆகவேண்டிய கட்டாயம் வேறு.. இந்த நிலையை உண்டாக்கின மகளை முறைத்தவர் “பர்வால்ல ப்பா.. இன்னொரு நாள் கண்டிப்பா வரோம். அவரை தனியா விட்டுட்டு வந்துருக்கோம். பசங்களும் ஸ்கூல் விட்டு வந்துருப்பாங்க. ரொம்ப நேரமெல்லாம் வேலைக்காரங்களால சமாளிக்க முடியாது..” என நாசுக்காக மறுக்க,
சீதா தான் “சரிங்க சம்மந்தி.. இன்னொரு நாள் கண்டிப்பா வாங்க..” என கூற, அனைவரும் அங்கிருந்து கிளம்ப, வல்லபியையே இரு விழிகள் குரோதமாய் உருத்து விழித்தது.