• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்த மழை - 19

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,393
433
113
Tirupur
முத்தமழை - 19

வீட்டிற்குள் நுழைந்ததுமே வெற்றி “வல்லி வல்லி..” என அவள் பின்னே செல்ல, வந்தனாவோ திருட்டு முழி முழித்தபடி தன்னறைக்குள் ஓடி விட்டாள்.

“என்ன ண்ணா..” என்றவளிடம் தன் மொபைலில் இருக்கும் படத்தைக் காட்டி “யாரு பாப்பா இவன்.. உன்னையே வெறிச்சு பார்த்துட்டு இருந்தான்.. என்ன ஏதுன்னு விசாரிக்க முன்னாடி அந்த வசந்த் அள்ளிட்டு போயிட்டான்..” என்றான் கோபமாக.

“அய்யோ.. இவன் எப்போ வெளிய வந்தான்..?” என்ற வல்லிக்கு ஷாக் ஆகிப் போனது.

“என்ன பாப்பா.. யார் இவன்.? தெளிவா சொல்லு?” என அதட்ட,

“எல்லாம் நம்ம அம்மினியோட வேலைதான். சும்மா இருந்தவனை சொரிஞ்சி விட்டு, அவன் ரிவெஞ்ச் எடுக்குறேன்னு பிரச்சினை பண்ணி, அது போலிஸ் கேஸ் வரை போயிடுச்சு..” என்றாள் வல்லபி.

“யார் வந்தனாவா.?” என பல்லைக் கடிக்க,

“ஹ்ம்ம்..” என்ற வல்லபி “அவன் யாழி பின்னாடி ரொம்ப நாளா சுத்திட்டு இருந்திருக்கான். அது ஒரு லூசு, வந்தனாக்கிட்ட சொல்லிருக்கா. நம்ம அம்மினி ஆவேசமா போய் நாலு பேர் முன்னாடி சட்டையைப் பிடிச்சி அடிச்சிட்டு வந்துருக்கா. அது அவனுக்கு அவமானமா போய், ரிவெஞ்ச் எடுக்கிறேன்னு வந்தனாவை கடத்த ப்ளான் பண்ணிருக்கான். அதை அவன் ப்ரண்ட் எங்கிட்ட சொன்னான். நான் பிரின்சிபல் கிட்ட சொல்லி போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணோம். அவனை அரெஸ்ட் பண்ணாங்க. அப்புறம் என்ன நடந்தது தெரியல.. இன்னைக்குதான் பார்க்கிறேன்..” என்றாள் வல்லி.

“என்ன பண்ணிட்டு வந்துருக்கீங்க மூனு பேரும். வீட்டுல நாங்க இத்தனை பேர் இருக்கோம். எங்ககிட்ட சொல்லனும்னு தோணலையா?” என அதட்ட,

“அது.. அது நாங்களே மேனேஜ் பண்ணிட்டோம் வெற்றி ண்ணா.” என பாவமாக முழிக்க,

“இப்போ என்ன சொல்றதுனே தெரியல..” என எரிச்சலாகிவிட்டான் வெற்றி.

“ண்ணா.. அவன் ஏற்கனவே ஜெயிலுக்கு போயிட்டு வந்துட்டான். வந்தனா அப்படி ரியாக்ட் பண்ணாம இருந்திருந்தா ஸ்மூத்தா ஹேன்டில் பண்ணிருக்கலாம். சென்னைல இருந்து எதுக்கு இங்க வந்துருக்கானு தெரியல. வீட்டுல சேர்க்கலயோ.. வீட்டை விட்டு அனுப்பிட்டாங்களோன்னு கஷ்டமா இருக்கு.. இப்போ அவர்கிட்ட வேற மாட்டிக்கிட்டான். அவனை எப்படியாவது காப்பத்தனும் ண்ணா.. பாவம் அவன் ஃபியூச்சரே எங்களால போயிடுச்சோன்னு கஷ்டமா இருக்கு..” என்றாள் வருத்தமாக.

“முதல்ல உன் புருசனுக்கு கால் பண்ணி எங்க இருக்கான்னு கேளு.. அப்புறம் நாம போறதைப் பத்தி பேசுவோம்..” என்றான் வெற்றி கடுப்பாக.

“ண்ணா..” என்றவள் அவன் முறைக்கவும், தயக்கமாகவே கர்ணனுக்கு அழைத்தாள்.

அப்போதுதான் வசந்த அந்த டேனியை அவன் முன்னே நிறுத்தி “இவன் தான் மேடத்தை வெறிச்சுப் பார்த்துட்டு இருந்தான் பாஸ்..” என்றான்.

“ம்ம்.. யார்ரா இவன். இவன் எதுக்கு வல்லியை முறைக்கனும்..” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவளிடமிருந்து போன் வந்துவிட்டது.

யோசனையாக எடுத்து காதில் வைக்க “நீங்க அந்த டேனியை ஒன்னும் பண்ணல தானே?” என பதட்டமாக கேட்க,

“ஏன் எதாச்சும் பண்ணனுமா?” என கடுப்பாக கேட்டவன் “யாருடி இவன் காமெடி பீஸ்..?” என கத்த,

“எல்லாம் உங்க மச்சினிச்சி உபயம் தான்..” என அவளும் பதிலுக்கு கத்த,

“அந்த குரங்க அள்ளிப் போட்டுக்கிட்டு வெற்றியை கூப்பிட்டு சீக்கிரம் வந்து சேரு..” என்று காலை கட் செய்துவிட்டு லொகேஷனை அவளுக்கு ஷேர் செய்தான்.

“என்னாச்சு பாஸ்..” என்ற வசந்திடம்,

“ஒரு குட்டிச்சாத்தான் ஆர்வக் கோளார்ல செஞ்ச வேலை..” என பல்லைக் கடிக்க,

“ஓ அந்த சோத்து மூட்டையா..?” என வாய்க்குள் முணுமுணுத்தான் வசந்த்.

சில மணி நேரத்தில் பலியாகப் போகும் ஆட்டுக்குட்டி போல பாவமாக இருவருக்கும் இடையில் வந்து கொண்டிருந்த வந்தனாவைப் பார்த்து கர்ணனுக்கும் வசந்திற்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“பாஸ்… எப்படி இவங்களை சமாளிக்கிறாங்க..” என வசந்த் கர்ணனின் காதைக் கடிக்க,

பாவமாக வந்தவள் டேனியைப் பார்த்ததும் தன் பயத்தை மறைத்து “ஏண்டா பக்கி பரதேசி அன்னைக்கு வாங்கினது பத்தலயா?” என எகிறிக் கொண்டு வர,

“டேய் டேய் புடி புடிடா…” என கர்ணன் கத்துவதற்குள்ளாக, வெற்றி சுதாரித்து அவளைப் பிடிப்பதற்குள்ளாகவே வசந்த் அவளை அலேக்காக தூக்கி தனக்குப் பின்னே நிறுத்தியிருந்தான்.

“ஷ்ஷ்..” என்று கர்ணன் நெற்றியைத் தேய்க்க, வெற்றியோ தங்கையை அடிக்க பாய்ந்தான்.

“கொஞ்ச நேரம் தான் சும்மா இருந்து தொலைங்களேன்டா..” என கர்ணன் கத்தி, “டேய் அவளை விடு..” என வசந்திடமும் கூற,

“நோ.. இப்போதைக்கு இந்த இடம் தான் எனக்கு சேஃப்.. நீங்க பேசி முடிச்சிட்டு சொல்லுங்க நான் வெளியில் வரேன்..” என வசந்தின் முதுகுக்குப் பின்னாடி இருந்தபடியே வந்தனா பேச,

“எப்படி டா இவளை சமாளிக்கிறீங்க..?” என வெற்றியைப் பார்த்து சலிப்பாக கேட்க,

“வந்து..” என வல்லபி ஒரு அதட்டல் போடவும், அவளை முறைத்தபடியே வல்லபியின் அருகில் வந்து நின்றாள் வந்தனா.

“இப்படித்தான்.” என வெற்றி கூற, “ஊப்ஸ்…” என நெற்றியைத் தேய்த்து பெருமூச்சு விட்டான் கர்ணன்.

“டேனி.. இங்க என்ன பண்ற நீ.?” என வல்லி கேட்க,

“ம்ம்.. நீங்க செஞ்ச கூத்துல என்னை வீட்டை விட்டு துரத்திட்டாங்க. படிப்பும் போய் வேலையும் இல்லாம தெருவுல நிக்கிறேன். என்னோட இந்த நிலைக்கு நீங்கதான் காரணம்..” என எரிச்சலாக கத்தினான் டேனியல்.

“டேய் லூசு பைத்தியமே.. அவளுக்கு ஒரு பிரியாணி வாங்கி கொடுத்திருந்தா அவளே உன் கூட வந்திருப்பா, இவளுக்கு போய் கடத்துறதுக்கு ஸ்கெட்ச் போட்டு, உன் லைஃபை வேஸ்ட் பண்ணிருக்க.. உன்னை தான் டா மிதிக்கனும்..” என கடுப்பாக கத்தினான் வெற்றி.

“நீயெல்லாம் ஒரு அண்ணனாடா..” என வந்தனா அவனிடமும் எகிற

“இப்போ உனக்கு என்னடா வேணும்.. இவளை பழிவாங்கனுமா?” என கர்ணன் வந்தனாவை அவன் முன்னே தள்ளிவிட

“எத..” என அரண்டடித்து வசந்த் பின்னே வந்து நின்றவள் “திஸ் இஸ் டூ மச் மாமா..” என கர்ணனைப் பார்த்து கத்தினாள் வந்தனா.

“அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல. எனக்கு யாழினியை ஒரு தடவைப் பார்க்கனும். அவக்கிட்ட என் லவ்வை சொல்லனும் அவ்ளோதான்..” என்று முடிக்கும் முன்னே வந்தனா வெற்றியையும், கர்ணனையும் பார்த்து நக்கலாக சிரித்தாள்.

“டேய் எங்க வந்து என்ன பேசிட்டு இருக்க? அவ யார் தெரியுமா?” என வெற்றி டேனியின் சட்டையைப் பிடிக்க,

“தெரியுமே யாழினிதான? இன்னும் சிங்கிளாதான் இருக்கானு கேள்விப்பட்டுத்தான் வந்துருக்கேன். இன்னும் எனக்கு ஒரு சான்ஸ் இருக்குனு தோனுச்சு. சோ வாட் ட்ரை பண்ணலாம்னு தோனுச்சு..” என்றான் மிக கேசுவலாக.

அதைக் கேட்டு வெற்றி பல்லைக் கடிக்க, “ம்ச் இதை வந்ததும் சொல்லியிருந்தா நானே அவளைக் கூப்பிட்டு வந்திருப்பேன். என்ன டேனி நீ பொழைக்கத் தெரியாம.. ச்சே..” என வெற்றியைப் பார்த்தபடியே டேனியின் அருகில் வந்து வந்தனா பேச,

“வசந்த் அவளைப் பிடிச்சு வை டா..” என்ற கர்ணன், டேனியிடம் திரும்பி “யாழிக்கு எங்கேஜ்மென்ட் ஆகிடுச்சி. அவ லைஃப் ஸ்மூத்தா போகனும். நீ இப்படி இடைல வந்து குழப்பாம இருக்கனும். தேவையில்லாம இன்னொரு தடவை இப்படி வந்து நின்னா, நான் இவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்கமாட்டேன்..” என்றான் கர்ணன் கட்டளையாக.

“இந்த பைத்தியம் மட்டும் இடைல வராம இருந்திருந்தா யாழினி எனக்கு கிடைச்சிருப்பா..” என்றான் டேனி சற்று தாங்கலாக.

“இவ்ளோ சொல்றோம்.. மறுபடியும் அங்கேயே வந்து நிக்கிற..” என்ற வெற்றியிடம்,

“நீங்க எதுக்கு இவ்ளோ வைலன்ட் ஆகுறீங்க..” என டேனி கேட்க,

“ம்ம் அவனுக்கு எங்கேஜ் பண்ண பொண்ணைப் பத்தி பேசினா அவனுக்கு கோபம் வராதா.?” என்றான் கர்ணன்.

“அப்போ நிஜமாவே கமிட்டேடா..” என சுருதி குறைந்து போனது டேனிக்கு..

“ம்ச்.. இவ மட்டும் தான் இப்போ சிங்கிளா இருக்கா.. வேணும்னா சொல்லு வீட்டுல பேசி முடிச்சு வைக்கிறேன்..” என்றான் கர்ணன் சிரித்துக்கொண்டே.

“சும்மா கொடுத்தா கூட எனக்கு வேண்டாம் சார். வேலியில போறதை எடுத்து வேட்டியில விட எனக்கென்ன பைத்தியமா?” என எரிச்சலாக கூறியவன், வல்லபியிடம் வந்து நின்றான்.

அவன் முகம் மிகவும் சீரியசாக இருந்தது. சுற்றி நின்றவர்களுக்கும் சற்று பதட்டம் வந்துவிட்டது.

“அன்னைக்கு நீ எவ்ளோவோ சொன்ன, நான் தான் கேட்கல. நான் அடிக்கடி யோசிப்பேன். அன்னைக்கு நீ சொன்னதை கேட்டிருக்கலாமேனு. கேட்டிருந்தா இப்போ என் ஃபேமிலியை விட்டுத் தனியா வந்து கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்..” என்ற போது அவன் குரல் உடைந்து போனது..

“ஸாரி வல்லி..” என்றான் உளமார்ந்து..

“ஹேய் என்ன டா நீ..?” என அவன் கையைப் பிடித்துக் கொண்ட வல்லி கர்ணனைப் பார்க்க,

அவனோ “டேனி கொஞ்ச நாள் இங்கேயே இரு.. உன்னோட ஸ்டடீஸ் க்கு நான் ஏற்பாடு பண்றேன். உனக்கு ஓக்கேன்ன ஒர்க் பண்ணிட்டே படிக்கலாம். எல்லாம் என்னோட பொறுப்பு.. இது என் வல்லிக்காக. அதோட மட்டும் இல்ல, மத்த பசங்க மாதிரி ஆசிட் ஊத்துவேன், கொல்லுவேன் னு கிளம்பாம, யாழினியோட சூழ்நிலையை அப்படியே ஏத்துக்கிட்ட பார்த்தியா அதுக்காக..” என்றான் பெருமையாக.

“நீங்க எப்படி நம்புறீங்க. நான் மறுபடியும் யாழினியை தொல்லை பண்ணா.?” என சிறு குரலில் கேட்க,

“டேய் அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டன்னு எங்களுக்கு புரிஞ்சிடுச்சு. இல்லைன்னா இந்த சில்வண்டுகிட்ட சிக்கி சின்னபின்னமாகிருப்பியா..” என வெற்றி கூற, அந்த இடமே சிரிப்பில் நிறைந்தது.

“க்கும்..” என்ற வந்தனா.. “இவ்ளோ நேரம் பேசினது பசிக்கிது… சாப்பிட்டு போகலாம்..” என கட்டளையாக கூற,

‘இதெல்லாம் திருந்தவே திருந்தாது’ என அனைவரும் அவளை கொலைவெறியில் பார்க்க, ‘சரியான சோத்து மூட்டை’ என்று வசந்தும் நினைக்க,

“அப்புறம் டேனி உங்கூடவே சுத்துவானே அந்த பாய்கட் மண்டையன், அவன் இப்போ எங்க இருக்கான். எனக்கும் அவனுக்கு ஒரு பெட் வச்சு, அதுல நான் வின் பண்ணேன். அதுக்கு சிக்கன் பிசா வாங்கித் தரேன்னு சொல்லி ஏமாத்திட்டான் டா..” என யாரையும் பொருட்படுத்தாமல் வந்தனா அவனிடம் பேசியபடியே வெளியில் செல்ல,

“சத்தியமா முடில டா இவளோட..” என தலையிலேயே அடித்துக் கொண்டான் கர்ணன்.

“ஒரு நாளைக்கே இப்படியா?” என வெற்றியும், வல்லபியும் சிரிக்க, அவர்களோடு வசந்தும் சேர்ந்து கொண்டான்.

“வசந்த் அவனோட ஃபேமிலி டீடைல்ஸ் விசாரி. அப்படியே அவனோட செர்டிஃபிகேட்ஸும் வாங்கிடு. நம்ம சிட்பன்ட்ஸ்க்கு ஒரு ஆள் தேவைன்னு சுந்தர் சொல்லிட்டு இருந்தான். அங்க இவனை அனுப்பு. எப்படியும் நமக்கு ஃபேவரா ஒரு ஆள் அங்க வேணும் தான..” என அவனுக்கு வேலை சொல்லிவிட்டு,

“ஓக்கே நான் போய் யாழியை பிக்கப் பண்ணிட்டு கிளம்பறேன். நீங்களும் சீக்கிரம் கிளம்புங்க. பார்த்துடா அவனை எங்கேயும் வித்துட்டு வந்துட போறா..” என்ற கர்ணனை இருவரும் முறைக்க, சிறு புன்னகையுடனே அங்கிருந்து அனைவரும் கிளம்பியிருந்தனர்.