• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்த மழை - 20

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,393
433
113
Tirupur
முத்தமழை - 20

கல்யாண வேலை ஜரூராக நடந்தது. கர்ணனுக்குத்தான் வேலை நெட்டி முறித்தது. ஆரம்பத்தில் சுந்தரும் ரமேசும் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் ரமேஷின் வீட்டில் ‘இத்தன வருசம் கழிச்சு இங்க வந்திருக்கான். சொத்து எல்லாம் அவன் பேர்ல இருக்குன்னு சொல்ற.. அவனை அனுசரிச்சுப் போய் பழகு. நீ கொஞ்சம் பாசம் காட்டினாலே உனக்காக அவன் யொசிக்காம உதவி செய்வான். பார்த்து பக்குவமா நடந்துக்கோ, உன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டா தெருவுல தான் நிக்கனும்..” என்ற அவனை அதட்டியிருந்தனர்.

அதனால் “ம்மா.. என் மாமியார் பேச்சைக் கேட்டு அவர் பண்ற கூத்தெல்லாம் பார்க்கும் போது எரிச்சலா இருக்கு. உங்கிட்ட சொன்னா நீயும் அமைதியா இருக்க. என்னதான் ம்மா யோசிக்கிற..” என காலையிலேயே தாய் வீட்டில் வந்து கத்திக் கொண்டிருந்தாள் வனிதா.

“நானும் அதத்தான் யோசிச்சிட்டு இருக்கேன். இனி நாம என்னதான் திட்டம் போட்டாலும் கல்யாணத்தை நிறுத்த முடியாது. எல்லாம் நம்ம கையை மீறி போயிடுச்சு. அதுக்கு தகுந்த மாதிரி உன் புருசனும், உன் அண்ணனும் தேவையில்லாத வேலை பார்த்துட்டு வந்துருக்காங்க. இனி எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு உங்களுக்காக பேசுறது..” என்று மகளிடம் எரிச்சலைக் காட்டினார் ராஜலட்சுமி.

“அதுக்காக என் புருசன் அவன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கனுமா?” என கத்த,

“யார் புருசன் யாருக்கிட்ட கெஞ்சிட்டு இருக்கனும்?” என்றபடியே கர்ணன் வர, அவனை பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வனிதா.

ராஜலட்சுமிக்கோ ஒரு நொடி இதயமே நின்றுவிட்டது. இவர்கள் பேசியதைக் கேட்டிருப்பானோ என்று. அவன் முக பாவனையை ஆராய்ந்தார்.

அவர் பேசியதை அவன் கேட்கவில்லை என்று புரிந்தது. அதன்பிறகே சீராக மூச்சு விட்டார்.

“கேட்டா பதில் சொல்லனும்..” என அழுத்தமாக அதட்டி, “காலையிலேயே இங்க என்ன பண்ற?” என்று கேட்க,

“ஏன் இங்க வரதுக்கு கூட உங்கிட்ட பெர்மிசன் வாங்கனுமா?” என வார்த்தைகளை விட,

“புருசனையும், புள்ளையையும் அங்க விட்டுட்டு, இங்க என்ன பண்றனுதான் என்னோட கேள்வி. உன்னை யாரும் இங்க வர வேண்டாம்னு சொல்லவே இல்லையே. சுமித்ராவும் உன்னை மாதிரி தானே, அவ இப்படித்தான் அங்க வந்து உக்காந்து உன்னை நாட்டாமை பண்றாளா?” என்று முகத்துக்கு நேரே கேட்க,

“ஹான் நான் அப்பாவை பார்க்க வந்தேன்..” என்றாள் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்.

“ஹ்ம்ம்.. வந்து எவ்ளோ நேரமாச்சு. போய் பார்த்தியா?” என்றான் உடனே.

“போவேன்..” என வெடுக்கென அவனுக்கு பதில் சொல்லிவிட்டு, சொக்கலிங்கத்தின் அறைக்கு செல்ல,

“இதெல்லாம் நீங்க சொல்ல மாட்டீங்களா ம்மா..” என ராஜலட்சுமியைப் பார்த்தும் கேட்க,

“கொஞ்சம் செல்லம் கொடுத்தாச்சு ப்பா.. அதுதான் இப்படி. மத்தபடி எந்த குறையும் சொல்ல முடியாது..” என மகளுக்கு வக்காலத்து வாங்க,

“யாழியும் கூட வனி மாதிரி தான். அவளையும் கொஞ்சம் கவனிங்க ம்மா..” என்றவன் டைனிங்க் ஹால் நோக்கி நடக்க, அங்கு காலை உணவை உண்டு கொண்டிருந்தாள் யாழினி.

அண்ணனைப் பார்த்ததும் மலர்ந்து புன்னகைத்தவளைத் தலையைத் தடவிக் கொடுத்தவன் அவளுக்கு அருகில் அமர, சுமித்ரா கர்ணனுக்கு பரிமாற வந்தாள்.

“பரவாயில்ல சுமி.. நானே போட்டுக்குறேன்…” என்றதும்,

“இருக்கட்டும் மாமா..” என அவனுக்கு உணவை வைக்க, ‘பொழைக்க தெரிஞ்சவ’ என ராஜலட்சுமி மருமகளைப் பார்த்து பல்லைக் கடித்தார்.

“ம்மா சாப்பிட்டீங்களா?” என்று சத்தமாக கேட்க,

“ஆச்சு ப்பா..” என்றபடியே டைனிங்க் ஹாலுக்கு வந்தார்.

“யாழி உன்னோட ட்ரெஸ் பார்த்தியா? அளவெல்லாம் கொடுக்கனும், உனக்கும் கொஞ்சம் நகை வாங்கனும் எப்போ லீவ் போடுற..” என்ற ராஜலட்சுமியிடம்,

“இப்போதான் மா ஜாயின் பண்ணிருக்கேன். உடனே எப்படி லீவ் கேட்க..” என முணங்கியவளிடம்,

“ஒரு நாள் மட்டும் கேளு யாழி, எப்படியும் டெய்லர் ஷாப் போகனும், அப்படியே ஜ்வெல் எடுத்துட்டு வந்துடலாம்..” என்ற கர்ணன் ராஜலட்சுமியிடம், “ம்மா மூனு பேருக்கும் ஒரே மாதிரி ஒரு செட் எடுங்க. அப்புறம் அவங்களுக்கு பிடிச்சது எடுங்க. உங்களுக்கு ஒரு டைமென்ட் செட் சொல்லிருக்கேன். அது ஓகேவான்னு பாருங்க. இல்லைன்னா மாத்திடலாம்.” என்றவாறே சாப்பிட்டு எழ,

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் ப்பா.. பொண்ணுக்கு எடுக்க வேண்டிய நகைக்கு நீ ஒன்னும் சொல்லலயே..” என ராஜி கேட்டார்.

“என்ன எடுக்கனும், எப்படின்னு மட்டும் எனக்கு சொல்லிடுங்க ம்மா.. நானும் வல்லியும் போய் எடுத்துக்கிறோம். மாங்கல்யம் தான் ஆல்ரெடி செய்ய கொடுத்தாச்சுல்ல..”

“இல்ல ப்பா.. அப்பா தான் நாமளும் எடுக்கனும் சொன்னார். நான் ஒரு இருபத்தஞ்சு பவுனுக்கு மட்டும் எடுக்கறேன். மீதி நீ எடு..”

“அம்மா.. சுமி அண்ணிக்கு நீங்க ஐம்பது தானே போட்டீங்க..” என யாழினி இடையில் கேட்க,

“ஆமா யாழி.. எப்படியும் அண்ணனும் எடுப்பான். எல்லாம் சேர்ந்து அவ்ளோ வந்துடும் இல்லையா? ஒரு மருமகளுக்கு கம்மியா, ஒரு மருமகளுக்கு அதிகமா எடுக்க முடியாது. நாளைக்கு அது பிரச்சினையா வந்து விடியும்..” என்று கூற,

கர்ணனுக்கும் அதுவே சரியெனப்பட, “சரி ம்மா.. அப்போ சுமிக்கு செஞ்ச மாதிரியே செஞ்சிடலாம்.” என்று முடித்தவன் “யாழி கிளம்பலாமா?” என்றதும்,

“ம்ம் ண்ணா அப்பாக்கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்..” என தந்தையின் அறைக்குச் செல்ல, யாழியைப் பார்த்ததும், வேகமாக வெளியேறினாள் வனிதா.

“ப்பா.. நான் போயிட்டு வரேன்..” என தந்தையின் கைப்பிடித்து பேச, அதே நேரம் உள்ளே வந்தான் கர்ணன்.

இருவரையும் பார்த்ததும் பெரியவருக்கு முகமெல்லாம் மலர்ந்தது. இருவரையும் ‘போயிட்டு வாங்க’ என்று கூற, அவர்களும் கிளம்பி விட, வீட்டில் ஒரு ருத்ர தாண்டவமே ஆடிவிட்டாள் வனிதா.

அவளை சமாளிப்பதே பெருங்கலையாகிப் போனது ராஜலட்சுமிக்கு.

“வனி.. நீ புதுசா எதையும் ஆரம்பிக்காத. எல்லாம் கொஞ்ச நாள்தான். முதல்ல அவ இந்த வீட்டுக்கு வரட்டும்.அதுக்குப் பிறகு நம்ம வேலையை பார்த்துக்கலாம். இப்போ எதுவும் செய்ய வேண்டாம்..” என மகளிடம் கெஞ்சிப் பேசித்தான் அனுப்பியிருந்தார் ராஜலட்சுமி.

அப்படியொரு சோர்வு அவர் முகத்தில். விழிகள் தன்னாலே ஹாலில் மாட்டியிருக்கும் வரலட்சுமியின் புகைப்படத்தைப் பார்த்தது.

புகைப்படத்தில் இருந்த வரலட்சுமியின் புன்னகையும், பார்வையும் அவரை குற்றம் சாட்டியதோ? தொய்ந்து போய் அமர்ந்தார் அந்த சோபாவில்.

காரில் செல்லும் போது தான் “நேத்து வல்லி டேனி பத்தி சொன்னா ண்ணா.. உங்ககிட்ட சொல்லக்கூடாதுனு எல்லாம் நினைக்கல. நீங்க அங்க இருந்தீங்க. உங்களுக்கு இது ப்ரெசராகிடக் கூடாதுனு நினைச்சேன். அப்புறம் வந்தனா தான்..” என இழுக்க,

“அது முடிஞ்சி போச்சு. இனி அதை பேசாத யாழி. டேனி இனி இங்கதான் இருப்பான். நீ அவனை பார்த்து சங்கடப்பட தேவையில்ல. அது உனக்கும் அவனுக்குமே நல்லதில்ல, வெற்றியா இருக்கப் போய் அமைதியா போயிட்டான். வேற யாராவது இருந்தா உன்னை சந்தேகப்படக்கூட வாய்ப்பிருக்கு. இனி என்ன நடந்தாலும் என்கிட்ட சொல்லனும் சரியா?” என்றான் கட்டளையாக.

“ஹ்ம்ம் ண்ணா..” என்றவளுக்கு குரல் உள்ளே போய்விட,

“நான் அங்க இருந்தாலும், உங்க எல்லாரையும் நான் வாட்ச் பண்ணிட்டு தான் இருப்பேன். அங்க இருந்து என்ன செய்ய முடியுமோ அதையும் செஞ்சிருப்பேன். நீ எனக்கு கஷ்டம் நினைச்சு எதையும் சொல்லாம இருக்காத சரியா?” என்றான் அனுசரனையாக.

“சரி ண்ணா.” என்றவளுக்கு நேற்று நடந்ததை சொல்லிக் கொண்டு வந்தான் கர்ணன்.

அதே நேரம் கர்ணனுக்கு அழைத்தான் வெற்றி.

“சொல்லு டா..” என்றதும்,

“நீங்க வீட்டுக்கு வரீங்களா, இல்ல நாங்க ஜிஆர்டி வந்துடட்டுமா?” என்றான் வெற்றி.

“நீங்க கடைக்கே வந்துடுங்க.. நான் யாழியை விட்டுட்டு அங்க வந்துடுறேன்..”

“பாஸ்.. பாஸ்… நீங்க வீட்டுக்கு வாங்க. யாழியை நான் ட்ராப் பண்றேன். வந்ததுல இருந்து அவளைப் பார்க்கவே இல்லை. இன்னைக்கு நைட் நான் கிளம்பனும்..”

“ஹோ.. அப்போ உனக்கு லாங்க் லீவ் இல்லையா?”

“நோ பாஸ்.. இப்போ போனாதான் கல்யாணத்துக்கு லீவ் எடுக்க முடியும். கொஞ்சம் கருணை காட்டுங்க…”

“ம்ம் சரி வெற்றி.. ஆல்ரெடி லேட்.. நீயும் லேட் பண்ணிடாத..” என்றவன் தங்கையிடமும் அதை கூற,

“ஏன் ண்ணா ஓகே சொன்னீங்க. கண்டிப்பா ஆஃபிஸ் விடமாட்டார்..” என்றாள் அரண்டு போய்.

“அப்போ நான் வர வேண்டாம் சொல்லவா?” என கிண்டலாக கேட்க,

“ஹான் அதெல்லாம் வேண்டாம் ண்ணா.. ஆனா நீங்க கொஞ்சம் மிரட்டி என்னை ஆஃபிஸ்ல விட சொல்லுங்க..” என பாவமாய் கூற,

“ஹாஹா.. யாழி உன்னை வச்சு அவன் பாவம் போ.. அந்த வந்தனா கூட இருந்தும் நீ எப்படி இவ்ளோ அமைதி..” என சிரித்தான்.

“ண்ணா..” என சினுங்க, வல்லபியின் வீடும் வந்துவிட்டது.

வீட்டிற்கு வெளியவே நின்றிருந்த வெற்றி, கர்ணனிடம் கார் சாவியை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

“வாங்க தம்பி..” என்ற சீதாவிடம், தலையசைத்தவன் அங்கிருந்த சிவகுருவிடம் செல்ல,

“ராமுவும், வல்லியும் அவங்க வீட்டுக்கு போயிருக்காங்க தம்பி. நேத்து பார்வதியோட அண்ணனும் தம்பியும் பாப்பாக்கிட்ட பேசிருப்பாங்க போல, நகையும் அவங்ககிட்டதான் ராமு கொடுத்து வச்சிருக்கான். அதை எடுத்துட்டு இன்னைக்கு அவங்க வராங்க. அதை கேட்டதுல இருந்து வல்லி முகமே சரியில்ல. அதனால இன்னைக்கு போய் விளக்கு போடனும் சொல்லிட்டு இருந்தா பாப்பா. ராமுவும் எதுவும் சொல்லாம அழைச்சிட்டு போயிருக்கான்..” என சிவகுரு விளக்கம் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டான் கர்ணன்.

“வல்லி வல்லி என வந்தான் வடிவேலன் தான்” என சத்தமாக பாடிக்கொண்டு வந்த வந்தனாவை அனைவரும் முறைக்க,

அதைக் கண்டு கொள்ளாமல் “ஹாய் மாம்ஸ்..” என கர்ணனின் அருகில் அமர்ந்தாள்.

‘என்ன?’ என்பது போல் பார்த்தவனிடம்,

“அந்த பிரியாணி பிசினஸ் சொன்னீங்களே.. அது ரெடியா இருக்கா?” என்றவளை பார்த்து முறைத்தான் கர்ணன்.

பின் “அப்போ நீ நிஜமாவே அதுல ஃபிக்ஸ் ஆகிட்டியா?” என்றான் சிரிப்போடு.

“மாம்ஸ் நமக்கு எது வருமோ அதுதானே செய்யனும், வராததைப் பிடிச்சு வா வான்னா வருமா? சோ எனக்கு அது செட் ஆகும்னு தோணுது. அதனால அதை செய்யலாம்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு ஒர்கிங்க் பார்ட்னர் கூட கிடைச்சிட்டாங்க தெரியுமா?” என குதுகலிக்க,

“அது யாரு வெட்டி ஆஃபிசருக்கே வெட்டி ஆஃபிசர்..”

“ம்ச் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நாளைக்கே எங்க பிரியாணி கடை இந்த கோயம்புத்தூரே திரும்பி பார்க்கிற அளவுக்கு பெரிய லெவல்ல வரலாம். அப்போ இந்த மூஞ்சை எங்க கொண்டு போய் வைப்பீங்க..”

“நாளைக்கே…. இந்த கோயம்புத்தூரே.. உங்க பிரியாணி கடையை.. திரும்பி பார்க்கும்.. ஆனாலும் உனக்கு இருக்குற நம்பிக்கை லெவலை பாராட்டியே ஆகனும்..” என விடாமல் கிண்டலடித்தவன், அவள் முறைக்க ஆரம்பிக்கவும், “அந்த வெட்டி ஆஃபிசர் யாருன்னு இன்னும் சொல்லல மேடம் நீங்க..” என அதே கிண்டலுடன் கேட்க,

“ஹான் வேற யாரு.. எனக்கு சிக்கின ஒரே அடிமை டேனி தான். நேத்தெல்லாம் உட்கார்ந்து எங்க பிசினஸ் பத்தி தான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம். அவனும் ஒரு புரோட்டா கடைல வேல செஞ்சிருக்கானாம்..” என சீரியசாக சொல்ல, அவளை நோக்கி வந்து விழுந்தது சீப்பு.

சீதா தான். “எந்திருச்சு போய் கிளம்பற வேலையைப் பார்..” என அதட்ட,

“மம்மி.. வர வர நீ சொர்ணாக்காவா மாறிட்டு இருக்க, வல்லி வரட்டும் உன்னை சொல்றேன்..” என அவரையும் விடாமல் கலாய்த்தவளைப் பார்த்து சிரிப்பு வந்து கொண்டே இருந்தது கர்ணனுக்கு.

அப்போது “வாங்க தம்பி..” என ராமசாமி அவசரமாக வர, அவருக்கு அருகில் சோக சித்திரமாய் நடந்து வந்து கொண்டிருந்தாள் வல்லபி.



 
  • Like
  • Love
Reactions: shasri and saru