• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்த மழை - 22

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,393
433
113
Tirupur
முத்தமழை - 22

“என்ன என்ன பாப்பா? தம்பி ஏன் இப்படி சொல்லிட்டு போகுது..?” என சீதாவும் சிவகுருவும் பதறி கேட்க,

அதுவரை அழுது கொண்டே இருந்தவள், அனைவரும் அவளையே கேட்பதில் கோபம் வந்துவிட “என்கிட்டயே ஏன் கேட்குறீங்க. உங்ககிட்ட யார் சொன்னாங்களோ அவர்கிட்ட கேளூங்க..” என கத்த, பெரியவர்கள் மூவரும் திகைத்து தான் போயினர்.

“ஏய் பைத்தியமா உனக்கு.? நீ ஒன்னும் சொல்லாமத்தான் மாமா அப்படி சொல்லுவாங்களா?” என வந்தனா ஓடிவந்து கேட்க, சட்டென அமைதியாகிவிட்டாள் வல்லபி.

“ம்மா.. இவ தான் அவரை ஏதோ சொல்லிருக்கா? இல்லைனா மாமா அப்படி சொல்ற ஆளே கிடையாது. இந்த பைத்தியத்தை மாமா எவ்ளோ லவ் பண்றாங்க தெரியுமா?” என்று சீதாவிடம் சொன்னவள் பின் நேராக வல்லபியின் எதிரில் நின்று “மாமா ஹர்ட் ஆகுற மாதிரி ஏதாவது பேசுனியா?” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

வந்தனாவிடமிருந்து இவ்வளவு அழுத்தமான கோபத்தை எதிர்பார்க்காத வீட்டுப் பெரியவர்கள் வல்லபியின் மீது தான் தவறு என்று புரிந்து கொண்டாலும், அவள் என்ன சொல்வாளோ என்று பார்த்திருந்தனர்.

“அது.. அது.. ஆமா.. ஆனா அதுக்காக கல்யாணத்தை நிறுத்துன்னு சொல்வாங்கள்ளா. அவங்க மேல எனக்கு இருக்குற குழப்பத்தையும், பயத்தையும் போக்க வேண்டியது அவங்கதான். அதை செய்யாம கல்யாணத்தை நிறுத்துன்னு சொன்னா, நான் என்ன செய்ய? அப்போ என் பயம் எப்படி போகும், என் குழப்பம் எப்படி தீரும்..” என எரிச்சலாக கத்தியவள், உடனே கர்ணனுக்கு அழைத்து விட்டாள். அதுவோ வெயிட்டிங்க் காலில் செல்ல, கடுப்பாகிவிட்டாள்.

வெடிட்டிங்க் காலில் இருந்தாலும் உடனே எடுத்த கர்ணன் “நீ உங்க அப்பாக்கிட்ட சொல்ல கஷ்டப்பட வேண்டாம்னுதான் நானே சொல்லிட்டேன்..” என அமைதியாக கூற,

“பைத்தியமா உங்களுக்கு..? நான் தான் ஏதோ குழப்பத்துல பேசினா, நீங்களும் அதுதான் சாக்குனு கல்யாணத்தை நிறுத்த சொல்வீங்களா?” என கத்த,

“கல்யாணத்தை நிறுத்துவேன்னு எப்போ சொன்னேன்.. உனக்கு விருப்பமில்லன்னு தான் சொன்னேன். கல்யாணம் அதே நாள் நடக்கும். ஆனா எனக்கும் வந்தனாவுக்கும் நடக்கும். உனக்குத்தான் விருப்பம் இல்லையே அப்புறமென்ன..” என்று பேசும் பேதே கர்ணனுக்கு சிரிப்பு வந்துவிட,

“உங்களை ..” என பல்லைக் கடித்தவள், பக்கத்தில் இருந்த வந்தனாவை போட்டு மொத்த,

“யோவ் மாமா… உனக்கு போய் ஹெல்ப் பண்ணேன் பார் என்னைச் சொல்லனும்..” என வந்தனா கத்த,

“நான் தான் சொன்னேனே என் பொண்டாட்டி புத்திசாலி, உன் ஓட்ட ப்ளானை எல்லாம் கண்டுபிடிச்சிடுவான்னு, கேட்டியா?” என அந்தப் பக்கம் கர்ணன் சிரிக்க, பெரியவர்களுக்கு அப்போது தான் மூச்சே சீரானது.

அனைவரும் இருவரையும் முறைத்துவிட்டு செல்ல, “வல்லி.. நீ ரொம்ப தெளிவான பொண்ணு.. உனக்கே குழப்பம் வருதுன்னா, அது யோசிக்க வேண்டிய விசயம் தான். அப்போ இன்னும் நீயும் மாமாவும் சில விசயங்களை தெளிவா பேசிக்கலன்னு எனக்குத் தோணுது. முதல்ல அதை பேசி தெளிவு பண்ணிக்கோங்க. அப்போதான் இந்த மாதிரி மிஸ் அன்டர்ஸ்டேண்டிங் வராம இருக்கும்..” என வந்தனா கூற, அது இருவருக்குமே புரியத்தான் செய்தது.

அந்தப் பக்கம் லைனில் இருந்த கர்ணனுக்கோ, ஆளிஸைப் பற்றின குழப்பம் தான் அவளைப் போட்டு வருத்துகிறது என்று புரிய, விரைவில் அதை தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

அதோடு இனி திருமணம் முடியும் வரை இவளிடம் பேசவேக் கூடாது என்றும் முடிவு செய்துவிட்டான்.

அதனால் “தனா.. இனி இவக்கிட்ட நான் பேசுறதா இல்ல.. இனி எந்த விளக்கமும் கல்யாணத்துக்கு அப்புறம் தான். அதுக்கு ஓகேன்னா, என் மேல நம்பிக்கை இருந்தா கல்யாண வேலையை பார்க்கச் சொல்லு.. இல்லைனா இது இப்படியே போகட்டும்..” என்று அழுத்தம் திருத்தமாக கூற, இப்போதும் வல்லபியின் விழிகள் கலங்க ஆரம்பித்தது.

ஆனால் உடனே “அதை என் கழுத்துல தாலியை போடும் போது யோசிச்சிருக்கனும்னு சொல்லு வந்து..” என கத்தியவள், “இனி நானா வந்து எதுவும் கேட்கமாட்டேன். அவரா எப்போ சொல்றாரோ அப்போ சொல்லட்டும்..” என அழுதுகொண்டே பேச,

“ம்ச்.. என்ன ரெண்டு பேரும் விளையாடுறீங்களா? சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க. நான் வேற மேரேஜ் ஷாப்பிங்க் போகனும்..” என்றதும் வல்லி முழிக்க,

கர்ணனோ “அண்ணன் எப்போ போவான்.. திண்ணை எப்போ காலியாகும்னே இருப்பியாடி..” என கத்த, அதைக் கேட்டுத்தான் வல்லபிக்கும் புரிந்தது.

‘இது திருந்தவே திருந்தாது’ என்ற பார்வையோடு தன் அறைக்குச் சென்று விட்டாள் வல்லபி.

“மாம்ஸ்.. பாவம் வல்லி ரொம்ப அழறா..?”

“ம்ம்.. நீ கூட இருந்து பார்த்துக்கோ தனா.. நாளைக்கு யாழியை கொண்டு வந்து விடுறேன். அவளும் ஒன் வீக் அங்க இருக்கட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்.”

“ம்ம் சரி.. ஆனா நீங்க ரெண்டு பேரும் பேசாம இருப்பீங்களா?”

“ஏன் உனக்கு சந்தேகமா இருக்கா?”

“இல்ல… ஆல்ரெடி நீங்க ஹாஜி கபிள்ஸ்.. அதெப்படி பேசாம..” என முடிக்கும் முன்னே வல்லபியின் அறையில் இருந்து சென்ட் பாட்டில் பறந்து வர, ‘அம்மா’ என கத்தியபடியே போனை எடுத்துக் கொண்டு வந்தனா வெளியில் ஓடிவிட்டாள்.

அன்றைய நாளுக்குப் பிறகு கர்ணன் வல்லபியிடம் பேசவே இல்லை. ஆனால் வல்லபி அவனுக்கு அழைத்துப் பார்த்து ஓய்ந்து பின் மெசேஜாக அனுப்பிக் கொண்டிருந்தாள்.

தன் அன்றாட நிகழ்வுகளை அவனிடம் பட்டியலிட மறப்பதில்லை.

அவனின் பாரா முகம் வலித்தாலும், அதற்கு தன்னுடைய தவறுதானே என்று நினைத்து அமைதி கொண்டாள். வல்லியின் தாய் வீட்டு ஆட்கள் வந்து போக, அவளுக்கும் கல்யாண கலை வந்துவிட்டது.

கர்ணனுக்கு உண்மையில் நிற்க கூட நேரமே இல்லை. சுந்தரும் ரமேஷும் என்னதான் கூட இருந்தாலும், அனைத்தையும் அவனே பார்க்க வேண்டி இருந்தது.

அதோடு அவனுக்கு இங்கு அனைத்தும் புதிது வேறு, ஒவ்வொன்றிற்கும் பலமுறை யோசித்து செய்ய வேண்டி இருந்தது.

ராஜலட்சுமிக்கு வனிதாவை சமாளிப்பதே பெரிய வேலையாக இருந்தது. சுமித்ரா கூட பொறுமையாக இருந்தாள். ஆனால் தொட்டதெற்கெல்லாம் குறை கூறி ஒவ்வொன்றிற்கும் பிரச்சினை செய்து கொண்டிருந்தாள் வனிதா.

மாப்பிள்ளை வீட்டில் இருந்து பொதுவில் பெண்ணுக்கு நகை கொடுக்கும் நேரம் வனிதாவின் வாயை அடக்கவே முடியவில்லை.

“இதெல்லாம் எங்க பெரியம்மா நகை. எங்க அம்மாச்சியோட நகை. சொல்லப்போனா அது எங்களுக்குத்தான் வரனும். போனா போகுதுன்னு எங்க அம்மாதான் உனக்கு கொடுக்குறாங்க..” என வல்லபியிடம் கூற, அவளிடம் சிறு முகச்சுளிப்பு கூட இல்லை.

அந்த நகையை அணியும் எண்ணமும் இல்லை அவளுக்கு. தன்னிடமே அத்தனை நகைகள் இருக்க, இதெல்லாம் தேவையே இல்லை என்ற எண்ணம் தான். ஆனால் கர்ணனின் மனம் வருந்தக் கூடாதே என்றுதான் அமைதி காத்தாள்.

வல்லபி ஏதேனும் பேசுவாள், அல்லது முகத்திலாவது தன் கோபத்தைக் காட்டுவாள் என்று எதிர்பார்த்த ராஜலட்சுமிக்கு இது மிகப்பெரும் தோல்விதான்.

அப்போதே அவருக்கு புரிந்து போனது, இவளை சமாளிப்பது சாதாரணம் அல்ல என்று.

இந்தப் பக்கம் சிவகுருவும் ராமசாமியும் ஓடிக் கொண்டே இருந்தாலும் வெற்றி வந்து வேலையை தன் கைகளில் எடுத்த பிறகே அவர்களுக்கும் சற்று ஆசுவாசமானது.

ஒரு வழியாக அனைத்தும் சரியாக நடக்க, இதோ பெண்ணழைப்பு முடிந்து, மாப்பிள்ளை அழைப்பும் முடிந்து விட்டது.

கர்ணனின் நண்பர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்க, அதில் ஆளிஸும் இருக்க அவர்களை அறிமுகப்படுத்தி விடலாம் என்றுதான் வல்லபிக்கு அழைத்துக் கொண்டே இருந்தான் கர்ணன்.

இத்தனை நாள் அவன் போனை எடுக்காததினால் தான் இப்போது அவள் எடுக்கவில்லை என நினைக்க, இங்கு பெண்ணுக்கோ சட்டென ஒரு கூச்சமும், ஒருவித பயமும் வந்துவிட அதனாலே அவன் அழைப்பை எடுக்க யோசித்தாள்.

அந்த அறையின் வாசலிலேயே கர்ணன் நின்றிருக்க, வாடமல்லி வண்ணத்தில் மெருண் வண்ண ஜரிகையிட்ட பட்டுப்புடவையில் அன்னமாய் நடந்து வந்தவளை விழி விரித்து பார்த்தான் கர்ணன்.

‘ப்பா..’ என அவன் உதடுகள் முணுமுணுக்க

“பாப்பாவோட அத்தைங்க எல்லாம் சுத்தி இருக்கவும், எப்படி வர்ரதுனு தெரியாம தவிச்சிட்டு இருந்தது தம்பி..” என சிவகுரு விளக்கம் கொடுக்க, “ம்ம்..” என்றானே தவிர வேறு பேசவில்லை.

இருவருக்கும் தனிமை கொடுத்து அவர் நகர்ந்துவிட, தலையை நிமிர்த்தாமல் நின்று கொண்டிருந்தவளைப் பார்க்க, பார்க்க அவன் உள்ளமும் உடலும் சூடேறியது.

சட்டென கதவைத் திறந்து அந்த அறைக்குள் சென்றுவிட, வல்லிக்கு திகைப்பு. இப்போது உள்ளே போகவா வேண்டாமா என்று?

இரண்டு வாரங்களுக்குப் பிறகான இருவரின் சந்திப்பு. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் அவனிடம் பேசியே ஆகவேண்டும் என்பதையும் தாண்டி அவனின் அனைப்பை அத்தனை நாடியது பெண்ணின் மனம்.

அவளின் தயக்கம் எல்லாம் நொடி நேரம் தான். பின் தயங்கியே என்றாலும் மெதுவாக அந்த அறைக்குள் செல்ல, பட்டென பின்னிருந்து கதவை அடைத்தவன், அதே வேகத்தில் தன்னவளையும் அனைத்து “எங்கிட்ட வர உனக்கு இவ்ளோ தயக்கம்.. ம்ம்” என்றபடியே கழுத்தில் முகம் புதைக்க,

“ஹக்..” என்று அதிர்ந்தவள் பின் அவன் அனைப்பில் உருகிக் கரைந்தாள்.

பெண்ணவளின் நெருக்கம் அவனுக்கு தீரா போதையாக மாற, அனைப்பில் நெருக்கத்தைக் கூட்டினான்.

“ம்ம்.. பாவா..” என்றாள் முணுமுணுப்பாக.

“ம்ம்… பாவா தான்.. அதை சொல்ல இவ்ளோ நாளாகிருக்கு..” என்றான் கழுத்தோரமாய் இதழ் பதித்து.

அதில் பெண்ணின் காதோர முடிகள் எல்லாம் சட்டென கூசி சிலிர்க்க, தன்னவளின் வெட்கமும், கூச்சமும் கர்ணனுக்கு வேறு உலகத்தைக் காட்டத் தொடங்கியது.

அவனின் அனைப்பில் வித்தியாசத்தை உணர்ந்தவள் மெதுவாக அவனிடமிருந்து விலக, அவனுமே இதற்கு மேல் தாங்கமாட்டாள் என்று புரிய விட்டுவிட்டான்.

மலர்ந்து சிவந்து நின்றவளை விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு மேலும் மேலும் முகம் சிவந்து தான் போனது.

பெண்ணை இழுத்து கட்டிக் கொண்டவன் “சாரி..” என்றான் மெல்லிய குரலில்.

“ஹ்ம்ம்..” என்றாள் அவன் நெஞ்சில் முட்டியபடி.

“உனக்கு என் மேல கோபம் இல்லையா?” என்றான் நெற்றியில் முட்டி..

“ஹ்ம்ம்…” என்றாள் இப்போதும் அவன் நெஞ்சில் முட்டி..

“ஆனா எனக்கு இருக்கு..” என்றான் பட்டென.

சட்டென பெண்னவளிடம் ஒரு அதிர்வு. அவன் கோபம் எதற்கென்று தெரிந்ததினால் கலக்கமாக அவனை நிமிர்ந்து பார்க்க, அந்த கலங்கிய விழிகளில் தேங்கிய நீரில் தன்னை மொத்தமாக பறி கொடுத்தவன் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

“இது அந்த கோபம் இல்ல..” என்றதும் நெற்றிச் சுருக்கி குழப்பமாய் அவனைப் பார்க்க,

அவள் மூக்கில் முத்தமிட்டவன் ‘நீ இன்னும் என்னை கிஸ் பண்ணவே இல்ல.. நான் தான் கிஸ் பண்றேன்..” என்றான் அவள் உதட்டை உரசி.

அதில் பெண்ணுக்கு அந்த உதட்டின் மேலே வியர்த்தது.

“கிஸ் மீ..” என்றான் குழைந்து..

“பாவா..” என்றாள் திணறலாக..

“ம்ம் கிஸ் மீ..” என்றான் மீண்டும். இப்போது அவள் பேசினாள் நிச்சயம் இரு உதடுகளும் ஒட்டிக் கொள்ளும். அவள் திணறி அவனையேப் பார்க்க, அந்த விழிகளில் இருந்த ஏக்கமும், மோகமும் அவளையும் கரைக்க, விழிகள் தானாக மூடிக் கொள்ள, இதழ்களோ தன் இணையை காந்தமாய் இழுத்துக் கொண்டது.

ஆரம்பம் மட்டுமே அவளாக இருக்க, முடிவில்லாமல் நீட்டிக் கொண்டு சென்றதோ அவன் தான்.
அவளில் அவன் எடுத்துக் கொண்ட கவனம் வல்லபியை விழி திறக்க விடாமல் சொக்க வைத்தது.

முத்தத்தின் பித்தம் அவள் தலைக்கேற, கைகள் தானாக அவன் இடையை அனைத்துக் கொண்டது. இதுதான் சாக்கென இன்னமும் வாகாக அவளை தனக்குள் எடுத்துக் கொண்டான் கர்ணன்.

நீண்ட சில நிமிடங்கள் கழித்து அவளை விடுவித்தவன் தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டு அவள் முதுகை வருடிவிட,

“ஹை சர்ப்ரைஸ்..” என கத்தியபடியே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த வந்தனா, இவர்கள் நிலையைப் பார்த்து ‘அம்மாடியோ’ என மயக்கம் போட்டு கீழே விழுந்திருந்தாள்.





 
  • Haha
Reactions: shasri