• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்த மழை -24

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,393
433
113
Tirupur
முத்தமழை - 24

இரவு உணவு முடித்து யாழினியோடு அமர்ந்திருந்த வல்லபியைத் தேடி வந்திருந்தான் கர்ணன்.

“ஹேய் இங்க இருக்கியா?” என்றபடியே அவளுக்கு அருகில் அமர,

“ஹான்..” என்றவள் “மாமாவை பார்த்துட்டு வரலாமா?” என்றாள் மெல்ல.

“ஓ ஸ்யூர்.. கம்..” என்றவன் சட்டென எழுந்து, “குட் நைட் யாழி..” என தங்கைக்கு கூறி வெளியில் வர, வல்லியும் தோழியிடம் தலையசைத்து வெளியில் வந்தாள்.

ஹாலில் பாட்டியும், அவருக்கு காலை பிடித்து விட்டபடி வனிதாவும் இருக்க, ராஜலட்சுமி எதிரில் அமைதியாக அமர்ந்திருந்தார்.

இவர்களைப் பார்த்ததும் வனிதா வாய்க்குள்ளே முணுமுணுக்க, “எங்க கண்ணு.?” என பாட்டி கர்ணனிடம் விசாரிக்க,

“அப்பாவை பார்க்க அம்மாச்சி. அவர் தூங்குறதுக்குள்ள பார்த்துட்டு வந்துடுறோம்..” என்றான் கர்ணன்.

“ஹான் அதுவும் சரி தான். இரு நானும் வரேன்..” என்றவர் வனிதாவிடம் “நீ தான் இந்த வீட்டு பொண்ணு.. உங்க அண்ணியை கொண்டு போய் நீதான் விடனும். சும்மா மூஞ்ச தூக்கிட்டு அலைஞ்சன்னு வை, உன் மாமியாருக்கு போன் போட்டு நீ இங்க பண்ற அழிச்சாட்டியத்தை எல்லாம் புட்டு புட்டுனு வச்சிடுவேன்..” என மிரட்டியபடியே கர்ணனுக்கு பின்னே நடந்தார்.

அவர்கள் அகன்றதும் தன் தாயைப் பார்த்து முறைத்து வைத்தாள் வனிதா.

“ம்ச்.. கொஞ்ச நாளைக்கு உன் வாயை மூடிட்டு இருன்னு சொல்றேன் தானே. கேட்டாத்தான் என்ன வனி?”

“ம்மா.. இங்க நடக்குறது எதுவும் எனக்கு சரியா படல. இனி இந்த வீடும், தொழிலும் அவன் கைக்கு கொஞ்சம் கொஞ்சமா போய்டும். எங்களை விடுங்க. எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ஏதோ பொழச்சுப்போம். யாழியை பத்தி யோசிச்சீங்களா? அவளுக்கு இனிதான் எல்லாம் செய்யனும்.”

“ம்ச் இப்போ இந்த பேச்சு தேவையில்ல வனி. அதெல்லாம் எனக்கு தெரியும். நான் பார்த்துக்கிறேன். இப்போ அம்மாச்சி சொன்னதை மட்டும் செய். நமக்கு வேற வழியும் இல்ல.”

“க்கும்… இந்த பரதேசி கூட்டத்துக்கு செய்யனும்னு எல்லாம் என் தலையெழுத்து.” என புலம்பிக்கொண்டே எடுத்து வைத்தாள்.

மகளின் புலம்பல், கோபம் எல்லாம் ராஜலட்சுமிக்கு புரியாமல் இல்லை.

அவருமே என்ன செய்து திருமணத்தை நிறுத்தலாம் என பலவாறு யோசித்து, பலமுறை முயற்சித்தும் பார்த்துவிட்டார்.

ஆனால் அவரின் எந்த திட்டமும் தான் கர்ணனிடம் பலிக்கவில்லையே.

அவரின் பார்வை தன்னாலே வரலட்சுமியின் புகைப்படத்தில் விழுந்தது.

அந்த புகைப்படத்தில் இருந்த வரலட்சுமி தன்னைப் பார்த்து நக்கலாக சிரிப்பது போல் தோன்றியது ராஜிக்கு.

‘நீ ஜெயிச்சிட்டன்னு சிரிக்கிறியா? ஹான் உன்னையவே ஜெயிச்சவ நான். உன் மகனும் மருமகளும் எம்மாத்திரம்’ என்பது போல் பதிலுக்கு நக்கலாக சிரித்தபடி கணவரின் அறைக்குச் சென்றார்.

இங்கு தந்தையின் கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த மகனிடம் “நேரமாகுது பாரு… போங்க..” என சொக்கலிங்கம் கூற,

“ஹ்ம்ம்..” என்றானே தவிர்த்து கிளம்பவில்லை.

“ஒன்னும் இல்ல கண்ணு. சீக்கிரம் அப்பா சரியாகிடுவார். உன் கவலை தான் அவருக்கு. அதுதான் இப்போ நீ வந்துட்டியே இனி சீக்கிரமா குணமாகிடுவார்.” என்றார் பாட்டி.

“ம்ம் அம்மாச்சி..” என்றவன் எழுந்து இருவருக்கும் சொல்லிக் கொண்டு வெளியில் வர, மருமகளின் கையைப் பிடித்தபடியே யாசகமாக பார்த்தார் சொக்கலிங்கம்.

வல்லபிக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக பார்க்க, அவருக்குமே இதை எப்படி மருமகளிடம் கூற என புரியாமல் தன் சின்ன மாமியாரைப் பார்த்தார்.

அதை புரிந்து கொண்ட பாட்டி “கர்ணனுக்கு ஏற்கனவே வயசு போய்டுச்சு கண்ணு. அவனுக்கு பிறகு பிறந்தவனுங்க எல்லாம் புள்ளகுட்டியோட இருக்கானுங்க. நீங்களும் அப்படி இருக்கனும்னு தான் எங்க ஆசை. நீ சின்ன பொண்ணுனு எங்களுக்கு புரியுது. ஆனா சீக்கிரம் கர்ணாவோட வாரிசை பார்க்க நாங்க எல்லாம் தவியா தவிச்சிப் போய் இருக்கோம். அதுக்கு மனசு வச்சா போதும். கொஞ்ச நாள் போகட்டும்னு தள்ளி மட்டும் போடாத கண்ணு..” என ஒருவழியாக சொல்லிவிட, வல்லபிக்கு முகமே சிவந்து விட்டது.

அவருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் வல்லபி தலையைக் குனிந்தபடியே நிற்க,

“வராவோட ஆசைதான் இந்த கல்யாணம்னு நீ சொன்னியாம். இதுவும் கூட வராவோட ஆசைதான் கண்ணு..” என்ற பாட்டிக்கு குரல் உடைந்து போக, அதே நேரம் உள்ளே வந்த ராஜலட்சுமியைப் பார்த்ததும் வல்லபிக்கு என்ன தோன்றியதோ “ஏன் பாட்டி குட்டி கர்ணாதான் வேணுமா? ஏன் உங்க பொண்ணு குட்டி வராவா வந்தா வேண்டாம்னு சொல்லிடுவீங்களா?” என புன்னகைக்க, பாட்டியின் முகம் மலர்ந்ததோ என்னமோ சொக்கலிங்கம் முகம் மகிழ்வில் மலர்ந்து விகசித்தது.

இதைக் கேட்ட ராஜலட்சுமிக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் “நேரமாச்சு சித்தி..” என்றார் பாட்டியிடம்.

“ஹான் இதோ வரேன்..” என்றவர் வல்லபியை அழைத்து பூஜையறையில் விளக்கேற்ற வைத்து, வரலட்சுமியின் படத்தை வணங்க வைத்து, வனிதாவோடு கர்ணனின் அறைக்கு அனுப்பி வைத்தார்.

“வயசுபுள்ள இருக்குற வீட்டுல..” என ராஜி மெல்ல முணுமுணுக்க,

“வயசு புள்ளைக்கு ஒன்னுமே தெரியாதா? இதுக்கு முன்னமே ரெண்டு கல்யாணம் இந்த வீட்டுல நடந்தது. அப்பவும் இந்த வீட்டுல வயசு பொண்ணு இருக்கத்தான் செஞ்சா. அதெல்லாம் சுலபமா மறந்துட்டு, ஏதாவது பேசனும்னு பேசிட்டு இருக்காத ராஜி. நான் போய் யாழினி கூட படுத்துக்கிறேன். உனக்கு அந்த கவலையே வேண்டாம்..” என நறுக்கென பேசிவிட்டு பேத்தியின் அறைக்கு சென்றுவிட்டார் பாட்டி.

“கெழவிக்கு குசும்ப பார்த்தியா?” என வனிதா புலம்ப,

“ம்ச் சும்மா இருந்து தொல..” என மகளிடம் எரிந்து விழுந்தவருக்கு வல்லபி பேசியதே மண்டையில் ஓடியது.

‘குட்டி வரா’ அந்த வார்த்தை அவருக்கு எத்தனை ஆத்திரத்தையும் கோபத்தையும் கொடுத்தது என யாருக்கும் தெரியாது.

‘எங்க வாழ்க்கையில இந்த வரா என்ற பேரே இருக்கக்கூடாதுனு நான் ஒவ்வொன்னும் செஞ்சா, இவ குட்டி வராவையே பெத்துப்பாளா? எப்படி பெத்துக்கிறான்னு நானும் பார்க்கிறேன்’ என மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டார்.

இங்கு அறைக்குள் வந்த வல்லபிக்கு அதுவரை இருந்த தைரியமெல்லாம் எங்கோ போய்விட, மிரட்சியுடன் அந்த அறையைப் பார்த்தாள்.

எப்போதும் போல சாதாரணமாக இருக்க, ‘ஷப்பா’ என பெருமூச்சு விட்டு கர்ணன் எங்கே என பார்க்க, அவனோ குளியலறைக் கதவில் சாய்ந்தபடி நமுட்டு சிரிப்புடன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைக் கண்டவளுக்கும் குப்பென முகம் சிவந்துவிட, சட்டென தலையைக் குனிந்து கொண்டவளுக்கு பதட்டத்தில் உடலெல்லாம் நடுங்கத் தொடங்கியது.

தன்னவனின் சிரிப்பே அவளுக்கு வியர்க்க வைக்க, என்ன செய்வானோ என்ற பதட்டத்தில் இருந்தவள் நொடிகள் கரைந்து நிமிடங்கள் ஆகியும் அவனிடமிருந்து எந்த சத்தமும் இல்லாமல் போக, குழப்பத்துடன் அவள் நிமிர்ந்த நேரம் சட்டென பின்னிருந்து இறுக்கமாக, மிக இறுக்கமாக அனைத்திருந்தான் கர்ணன்.

“ஹக்.” என்றவள் அரண்டு போய் விழிக்க,

“அம்மு..” என்றான் குழைந்த குரலில்

“ஹ்ம்ம்..” என்றாள் நெளிந்தபடி

“உனக்கு பயமா இருக்கா.?” என்றான் இடை வருடி

“ஹ்ம்ம்.. பாவா..” என்று நெளிந்தாள் பெண்ணவள்.

“என்கிட்ட என்ன பயம் அம்முவுக்கு?” என்றான் மோகக் குரலில். கைகள் புடவையை விலக்கி தன் தேடலை தொடங்கியிருந்தது.

“ஹ்ம்ம் பாவா.. அது.. அது கொஞ்சம்..” என்றவளுக்கு குரலே எழும்பவில்லை.

“ஹான் அம்முவுக்கு டைம் வேணுமா?” என்றபடியே காது மடலை இதழால் உரசினான்.

“ஹம்ம் ஹ்ம்ம் பாவா.. கொஞ்சம்..” என்றபடியே அவனோடு உருக ஆரம்பிக்க,

“ஆனா எனக்கு வேண்டாமே அம்மு… என்னால இதுக்கு மேல வெய்ட் பண்ண முடியாதே..” என்றவனின் கைகள் அவளின் முந்தானையை மொத்தமாக விலக்கியிருந்தது.

“ஹான் பாவா..” என்றவள், கணவனின் செய்கையில் குழைந்து போயிருந்தாள்.

“ஹ்ம்ம்.. கண்டிப்பா முடியாது அம்மு.. ஐ கான்ட் கன்ட்ரோல் மை செல்ஃப்..” என்றவன் சட்டென பெண்ணவளை முன் பக்கம் திருப்பி மீண்டும் இறுக்கமாக அனைத்துக் கொண்டான்.

“ஆனா பாவா..” என அவன் வேகத்தில் திணறியவள் பிடிமானத்திற்காக தன் கரங்களை அவன் முதுகோடு இறுக்கிக் கொள்ள,

“ஹ்ம்ம் ப்ளீஸ் அம்மு…” என்றவன் அவளைக் கைகளில் அள்ளிக்கொள்ள,

“பாவா..” என்றவளின் கரங்கள் தன்னிச்சையாக அவன் கழுத்தைச் சுற்றி வளைத்துவிட, முகம் அவனின் முகத்தோடு ஒட்டிக் கொண்டது.

ஈர்ப்பு விசையின் விதிப்படி இரண்டும் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொள்ள, தன் கன்னத்தை அவள் கன்னத்தோடு உரசியபடியே ‘செம சாஃப்ட்’ என்றான் முணுமுணுப்பாக.

“ப்ளீஸ்..” என்றவளின் வார்த்தைகள், அதன்பிறகு அவன் காதை எட்டியதாக தெரியவில்லை.

பெண்ணவளை அள்ளிக்கொண்டு அந்த அறையின் ஓரத்திலே இருந்த அறைக் கதவை தன் காலால் தள்ளி திறக்க, குப்பென ஜாதி மல்லி வாசம்.

அதில் வல்லபியின் முகம் திகைப்பில் விரிய, வேகமாக தன்னவனை விழி விரித்துப் பார்த்தாள்.

“நமக்கான ஸ்பெஷல் டே இன்னைக்கு. அது ஸ்பெஷலா இருக்கனும் ஆசைப்பட்டேன். என் வல்லிக்கு எது பிடிக்குமோ, அதுவே ஸ்பெஷலா இருக்கனும்னு நினைச்சு அரேஞ்ச் பண்ணேன். உனக்கு பிடிச்சிருக்கா?” என்றான் கண்களில் காதல் வழிய,

அதுவரை இருந்த தயக்கம், பயமெல்லாம் எங்கோ ஓடிவிட, அவன் கரங்களில் இருந்தபடியே அவனை இழுத்து இதழில் அழுத்தமாக இதழ் பதித்தாள் வல்லபி..

‘வாவ்..’ என கர்ணனின் விழிகள் கூறினாலும், அங்கிருந்த ஜாதி மல்லிப்பூவின் வாசம் அவனை வேறு உலகுக்கு இழுத்தது.

மனைவியானவளை கட்டிலில் கிடத்தியவன் “அம்மு..” என்றான்.

புடவை இன்றி இருந்தவளை கணவனின் பார்வை தீயாய் மாற, உள்ளுக்குள் நடுங்கினாலும், அந்த நடுக்கத்தைக் காட்டாமல், தன்னவனை தன்னோடு இழுத்துக் கொண்டாள் பெண்.

அடுத்து நடந்த அனைத்தும் கணவன் மனைவிக்கு மட்டுமே உண்டான ரகசிய பரிபாஷைகள்.

தொடங்கியது வேண்டுமானால் அவளாக இருக்கலாம். ஆனால் அதனை வழிநடத்தி அவளின் இன்பத்தை ருசித்து, பெண்ணவளை ஆனந்தத்தில் மூர்ச்சையாக்கி, தன் உயிர் காற்றை அவளுக்கு கொடுத்து, தன் காதலை அதில் கலந்து.. என் ஆயுள் வரை நீயடி என தன்னவளுக்கு வார்த்தைகள் தாண்டி, தனக்கான உரிமையையும் அவளிடம் காட்டியே நிமிர்ந்தான் கணவன்.

முத்தம் ஒன்னு நான் கேட்கும்
நேரத்தில்
ரத்தத்துல சூடேறும்..

 
  • Like
Reactions: saru

Anandi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2025
13
1
3
Chennai
When will you post next episode?