• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 36

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
68
28
18
Tamilnadu



அத்தியாயம் – 36



அடுத்து பூஜைகளை முடித்து மலர் தூவி வணங்கியவர். வெளியே காத்திருந்த மக்கள் அனைவருக்கும் கற்பூரம் காமித்தார். முதலில் கொடி முன்பு வந்து நிற்க ஈஸ்வரன் தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடி கையில் கொடுத்தவன் தானும் கற்பூரம் எடுத்துக் கொண்டான்.


இன்று அந்த தட்டில் விழும் பணம் பூசாரிக்கு போய் சேரும். மக்கள் அனைவரும் சாமிக்கு கொடுப்பது போல பூசாரிக்கும் அள்ளிக் கொடுத்தனர். பூசாரி கலங்கி போனார் அவ்வளவு பணம் தட்டு நிறைந்து வழிந்தது அவருக்கென்று தனி வருமானம் ஈஸ்வர் வந்ததில் இருந்து தருவதால் தட்டில் விழும் பணத்தை எடுக்ககாமல் விட்டு விட்டார்.


இன்று தட்டில் விழும் பணம் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என முதல் நாளே ஈஸ்வரன் கூறி விட்டான். கலங்கிய விழிகளை துடைத்தபடி சிவனின் பாதத்தை வணங்கியவர் சங்கை எடுத்து முழங்க துவங்கினார். ஊர் முழுவதும் சங்கின் சத்தம் சிவனின் குரலாக ஒலித்தது, மக்கள் பரவசத்தில் தங்களை மறந்து போனார்கள்.


அனைவரும் சிவனை வணங்கி நிற்க, “கொடி நீ சாமி கும்மிடு நான் சமைக்கிற இடத்துக்கு போய்ட்டு வரேன்.” என்றவன் ஒற்றை கையால் வேட்டியை பிடித்தபடி கம்பீரமாக நடக்க துவங்கினான்.


நடக்க கூட வழி இல்லை அவ்வளவு கூட்டம் அன்னதானம் நடக்கும் இடத்தில் மக்கள் வரிசையில் காத்திருந்தனர். ஈஸ்வரன் அதிர்ந்து போனவன் தங்கள் ஊர் வாலிப பசங்களை அழைத்தான்.


“சீக்கிரம் காலியா கிடக்குற எல்லா இடத்தையும் சுத்தம் பண்ணி மேல துணியாள டென்ட் போடுங்க, எல்லாரும் சாப்பிட டேபிள் எடுத்துட்டு வாங்க.” என தனி தனியாக வேலையை ஏவி விட்டான்.


ஈஸ்வரனின் ஒரு வார்த்தைக்கு வேலை காட்டு தீயாக துவங்கியது.


திருவிழா துவங்கிய நாளில் இருந்து ஒரு நிமிடம் கூட கொடி ஏற்றி வைத்த அடுப்பு அணையவில்லை. இன்றும் அலைமோதும் கூட்டத்தை கண்டு திணறாமல் திடமாக சமைத்து பரிமாறபடுகிறது. வாலிபர்கள் வேலையை மட மடவென செய்து கொண்டு இருக்க, ஈஸ்வர் சமைக்கும் இடம் நோக்கி விரைந்தான்.


சமையல் குழுவின் மூத்தவர் ஈஸ்வரனை கண்டதும் ஓடி வந்து, “தம்பி சாப்பிடுறீங்களா?” என்றார்.


“இல்ல எனக்கு எதுவும் வேண்டாம், இன்னைக்கு கூட்டம் அதிகமா இருக்கு உங்களால சாமாளிக்க முடியுமா? ஏன்னா வந்தவங்க யாரும் பசியோடு போக கூடாது.”


“தம்பி எங்களால முடிந்த வரை வேகமா குடுத்து கிட்டு தான் இருக்கோம், இன்னும் ஒரு குழுவை சேர்த்து நாங்க சமைக்கிறோம்.”


“அப்போ அரிசி, பருப்பு, காய்கறி எதாவது இன்னும் வேணுமா?”


“தம்பி அரிசி மட்டும் ஆறு மூட்டை இருக்கு போதும்னு நினைக்கிறேன்!” என மூத்தவர் தயக்கமாக கூறிட,


“இல்ல நினைக்கிறேன் சொல்லி கடைசி நேரத்துல சிரம பட கூடாது, கம்பன் கிட்ட சொல்லி இன்னும் பதினைந்து மூட்டை இறக்க சொல்லுறேன், இன்னும் சிலரை சமையலுக்கு சேர்த்துக்கோங்க சாயங்காலம் கூட்டம் இன்னும் அதிகமா வரும், யோசிச்சு சமைக்காதீங்க, மீதம் ஆகாது, நம்பிக்கையா சமைங்க.” என்றவன் சமையல் நடக்கும் இடத்தை முழுவதும் பார்வை இட்டவன் அதற்குள் முழு இடத்தை சுத்தம் செய்து முடித்து இருந்த வாலிபர்களை பாராட்டினான்.


“நீங்களும் பரிமாற உதவி பண்ணுங்க, இன்னைக்கு கடைசி நாள் திருவிழா இத்தனை நாள் எந்த குறையும் இல்லாமல் நல்ல படியா முடிந்தா மாதிரி இன்னைக்கும் நடக்கணும்.” என்றான்.


“ஐயா எந்த குறையும் இல்லாமல் பார்த்துகிறோம்.” என அனைவரும் ஒரே குரலில் கூறி முடிக்க ஈஸ்வரன் கம்பனை தேடி சென்றான்.


ஈஸ்வரனை எதிர்த்து வந்த ராஜேந்திரன் பார்வை ஒரு சதவிகிதம் கூட நல்ல முறையில் ஈஸ்வரன் மீது படவில்லை. நனி நல்வழி கூறியும் அவன் திருந்த நினைக்கவில்லை. ஈஸ்வரன் ராஜேந்திரன் பார்வையை உணர்ந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் சென்றான்.


“கம்பா டவுனுக்கு போய் அரிசி வாங்கிட்டு வந்து இறக்கிடு.” என பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து கொடுத்தவன் உடல் சூட்டை உணர்ந்து அதிர்ந்து போனான் கம்பன்.


“ஈஸ்வரா என்ன டா இவ்வளவு சூடா இருக்கு உடம்பு, காய்ச்சல் இருக்கும் போது நீ வீட்டுல ஓய்வெடுக்க வேண்டியது தானே?”


“ஓய்வு.” என கூறிய ஈஸ்வரன் பார்வை பெண்களுடன் பேசிக் கொண்டு இருந்த மனைவியை தழுவியது.


“கம்பா நான் வீட்டுல இருந்தா என் கூட கொடியும் தங்கிடுவா, அதான் இங்கேயே இருக்கேன், அவள் பாக்கனும்னு ஆசைப்பட்ட திருவிழா நல்லா சந்தோஷமா ரசிச்சு பார்க்கட்டும் அவளுக்காக தானே இது எல்லாமே பண்ணுறேன் இன்னைக்கு என்னால அவளுடைய சந்தோஷம் கெடவே கூடாது, நீ கிளம்பு, நான் இதை விட அதிகமா கஷ்ட பட்டு இருக்கேன்.” என்றவன் பார்வை ஒரு துளி கூட கொடியை விட்டு நகரவில்லை.


மனம் முழுவதும் அவளே அடிங்கி இருக்க இவனால் எப்படி பார்வையை விலக்க முடியும்.


கொடி எதார்த்தமாக திரும்பியவள் தன் மாமன் பார்வை உணர்ந்து என்னவென்று கண்களால் கேள்வி எழுப்பினாள். அவள் விழி அசைவில் ஈஸ்வரனின் செல்கள் அனைத்தும் அடங்கி போகிறது.


அன்று முழுவதும் மாமனை விட்டு அலைமோதும் கூட்டத்தையும், கடைகளையும் சுற்றி வருவதும், தெய்வங்களை வழிபடுவதும் என முல்லை இருந்தாள். ஈஸ்வரன் கோவில் வேலைகளை முழுதாக பார்த்துக் கொண்டு சுற்றிக் கொண்டு இருந்தான். மாலை தேர் திருவிழா இருப்பதால் கண் கொத்தி பாம்பாய் அனைத்து இடங்களையும் வட்டமிட்டான்.


ஈஸ்வரனின் உடல் சற்று தடுமாற துவங்கியது, நடுக்கம் பிறந்தது. காய்ச்சலின் உச்சத்தில் இருந்தாலும் இன்றைய திருவிழா நல்ல படியாக நடந்து முடிய வேண்டும் என்ற எண்ணத்தில் பல்லை கடித்து தன்னுடைய துன்பங்களை தாங்கிக் கொண்டு சுற்றி வந்தான்.


மாலை அம்மனுக்கு அலங்காரம் சிறப்பாக துவங்கியது, அம்மன் அலங்காரம் முடியும் வரை திரை போட்டு சிலையை மறைத்து இருந்தனர். மக்கள் அனைவரும் சிவனை வழிபட்டு அம்மனை தரிசிக்க காத்திருந்தனர்.


“கொடி வா வீட்டுக்கு போய் துணி மாத்திட்டு வருவோம்.” என மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பியவன், அவளுக்காக ஆசைப்பட்டு வாங்கி வைத்திருந்த சிகப்பு வண்ண காஞ்சி பட்டு புடவையும், அதனுடன் ஒரு ஹாரத்தையும் எடுத்து டேபிள் மீது வைத்தவன், “இதை கட்டிக்கோ.” என்றான்.


முல்லையும் தன் மாமனுக்காக வாங்கி வைத்திருந்த பட்டு வெள்ளை வேட்டி சட்டையை எடுத்து வைத்தவள் தன் மாமன் வாங்கி கொடுத்த புடவையை எடுத்துக் கொண்டு திரைக்கு மறைவில் சென்றாள். ஈஸ்வரன் அங்கேயே மாற்றிக் கொண்டான். ஈஸ்வரன் தயாராகி கொடிக்காக காத்திருக்க அவளின் சலங்கை சத்தம் அவன் அருகில் ஒலித்தது, நிமிர்ந்து பார்த்தவன் விழிகள் ஆச்சர்யத்தில் சாசர் போல் விரிந்தனர்.


எப்போதும் போல் இல்லாமல் இன்று மின்னும் அழகுடன் ஜொலித்துக் கொண்டு இருந்தாள் அம்மனை போல், அதிலும் அவள் தலையில் கொண்டை ஊசி உடன் சேர்த்து ஒரு சங்கிலி கழுத்து வரை தொங்கி கொண்டு இருக்க அது அவளை மேலும் அழகு படுத்திக் காட்டியது.


அவளை முழுவதுமாக கண்களால் ஸ்கேன் செய்து தனக்குள் அழுத்தமாக பதிய வைத்துக் கொண்டவன், “வா கொடி.” என வேட்டியை தூக்கி பிடித்தபடி கம்பீரமாக கீழே இறங்கி வந்தான்.


அம்மன் தயாராகி விட முதலில் சிவ பூஜை முடிக்க வேண்டும், சங்கு முழக்கம் எழுப்ப வேண்டும் என பூசாரி பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்தார். ஈஸ்வரன் தன் புல்லட்டை நிறுத்தி விட்டு கொடியுடன் கோவிலுக்குள் நுழைய இன்று ஈஸ்வரனின் கம்பீரத்தில் பலர் தொலைந்தார்கள் என்றால் அவர்கள் இருவரின் பொருத்தத்தை இன்று ஊரே வியந்து கண்டது. எப்போதும் கடந்து போவது போல் இல்லாமல் இன்று முல்லை மணம் வீசி கொண்டிருந்தாள் ஈஸ்வரன் அருகில்.


அவள் முகத்தில் ஒரு தெளிவு, சந்தோஷம், அவள் நடையில் இருந்த துணிவு அனைத்தும் முல்லைகொடியை புது மனிதியாக காட்டியது. இருவரும் வந்து நின்றதும் பூசாரி சிவன் பூஜையை துவங்கினார், சிவன் பூஜைக்கு காரணம் அம்மன் ஊர்வலம் கிளம்பும் முன்பு சிவனின் சங்கு முழக்கம் முக்கியம் அதனால் பூஜையை முடித்த வேகம் சங்கை எடுத்து வந்து ஈஸ்வரன் முன்பு நீட்டினார் பூசாரி.


ஈஸ்வரன் புருவம் உயர்த்தி பார்க்க, “ஐயா இப்போ சங்கை நீங்க மட்டும் தான் ஊதனும்.” அது தான் முறை என்றார்.


ஈஸ்வரன் வேற எதுவும் மறுத்து பேசாமல் சங்கை கையில் வாங்கியவன் தன் முழு பலத்தை கொண்டு சத்தமாக ஊத காது கேளாதவர்கள் காதுகள் கூட திறந்து இருக்கும் போல. பழக்கம் இல்லாதவன் எதோ சிவ பக்தன் போல் ஆழ்ந்து சங்கை முழங்குவதை கண்டு கம்பன் மின்னல் கீற்றாக சிரித்துக் கொண்டான்.


ஐயா நீங்க தான் அம்மன் சிலையை எடுத்து வந்து தேர்ல வைக்கணும் என பூசாரி கூற,


சங்கை அதற்குரிய தட்டில் வைத்தவன் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டான். நேராக அம்மன் சன்னதி நோக்கி நடந்தவனை பரவசமாக பின் பற்றினாள் முல்லை.


அம்மன் சன்னதி இன்னமும் திரை கொண்டு மூட பட்டு இருக்க திரையை விளக்கி கொண்டு ஈஸ்வரன் மட்டும் உள்ளே நுழைந்தான். முல்லை புடவை முந்தானையை கையில் சுற்றியபடி அம்மனை தரிசிக்க காத்திருந்தாள், ஈஸ்வரன் திரையை விளக்கி கொண்டு வெளியே வர அம்மன் முகம் பட்டு துணி கொண்டு மூடப்பட்டு இருந்தது.


அனைவரையும் தாண்டி வேக எட்டுகளுடன் ஈஸ்வரன் சிலையை தாங்கி பிடித்தபடி கம்பீரமாக நடந்தவன் யார் உதவியும் இல்லாமல் சிலையுடன் தனியாக தேரில் ஏறி சிலையை அதற்குரிய மேடையில் அலுங்காமல், குலுங்காமல் நிதானமாக வைத்தான். கொத்து கொத்தாக கூடிய மக்களின் பல்லாயிர கணக்கான விழிகள் அம்மனை தரிசிக்க ஏங்கி நின்று தவித்து பார்த்துக் கொண்டு இருந்தது.


சாமி சிலையை வைத்தவன் முகத்தை மூடி இருந்த துணியை விளக்க ஆஹா அம்மனின் கம்பீரத்தையும், அழகையும் காண இரு விழிகள் பத்தாது போல. கொடி அப்படியே உறைந்து நின்று இருந்தாள். அம்மனின் புடவையும், கொடி புடவையும் ஒரே மாதிரி இருந்தது.


அதிலும் உடல் முழுவதும் நகையை தாண்டி மூக்குத்தி அம்மன் என்ற பெயருக்கு தகுந்தாற் போல அவள் முகத்தில் மின்னி ஜொலித்துக் கொண்டு அம்மனை மேலும் அழகாக காட்டிக் கொண்டு இருந்த மூக்குத்தியை பார்க்கவே இந்த ஜென்மம் போதும் என தோன்றியது.


இத்தனை வருடங்கள் கவரிங் நகை போட்டுக் கடவுளையே ஏமாற்றியவர்களின் மத்தியில் உண்மையான நகை கிடைத்தும் அம்மனுக்கு தான் வாங்கிய நகை போட்டு அழகு பார்த்து, அதை மற்றவர்களையும் பார்க்க செய்த ஈஸ்வரனின் உயர்வான குணத்தின் மீது பெரும் மதிப்பு உண்டானது.


அலங்கரிக்க பட்ட வண்டியில் பூக்கள் தோரணங்கள் தொங்க நடுவில் சிரித்த முகமாக, கம்பீரமாக நடுநாயகமாக நம் நாயகி மூக்குத்தி அம்மன் அனைவரின் கண்களை பறித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.


கொடி விழிகள் காரணம் அறியாமல் உணர்ச்சி பெருக்கில் கலங்கியது, விவரம் அறிந்த வயதில் இருந்து இந்த அம்மனை தான் தாயாக நினைத்து வாழ்ந்தாள், வணங்கினாள் இன்று தன் தாய் இப்படி கம்பீரமாக பார்க்க உள்ளம் குளிர்ந்து போனது. மக்கள் அனைவருக்கும் அது சிலை என்பதை தாண்டி அங்கு அமர்ந்து இருப்பது உயிர் உள்ள ஒரு தாயாகவே தோன்றியது.


ஏன் ஈஸ்வரனே அது வெறும் சிலை தானா என சந்தேகமாக பார்த்துக் கொண்டு இருந்தான். கண்களை பறிக்கும், மனதை உருக்கும் தத்ரூபமான அலங்காரத்தை தாண்டி அம்மன் முகத்தில் இருந்த ஒளியும், அமைதியும் அவனையே யோசிக்க வைத்தது. குட்டியாக இருந்த வாளை கொண்டு வந்து அம்மன் கையில் வைத்தவர், பூஜையை துவங்கினார்.


பூக்களால் மந்திரங்கள் கூறி பூஜை செய்தவர் ஆரத்தி காமிக்க துவங்கினார். மக்கள் இமை கொட்டாமல் பார்த்து மகிழ்ந்தனர், பல வருடங்களாக நடக்காதா என ஏங்கிய நிகழ்வு அல்லவா இது, முல்லை தன்னை மறந்து அம்மனை மட்டுமே பார்த்தபடி நின்று இருந்தாள்.


ஆரத்தி காமித்து முடித்த அடுத்த நொடி, “தேர் இழுங்கப்பா, சங்கை முழங்குங்க.” என பூசாரி சத்தம் குடுக்க.


"அம்மா, தாயே!" பல குரல்கள் ஓங்கி ஒலிக்க அனைவரின் குரலை தாண்டி சங்கின் சத்தம் கிழித்துக் கொண்டு கிளம்பியது எட்டு திக்கும் சங்கீதமாக, தீயவர்களின் எமனாக.


வானத்தை வண்ண வண்ண வெடிகள் சத்தமாக அடைத்து கொண்டது.இளைஞர்கள் தேரை ஒரு அடி இழுத்து நிறுத்தினர். தேர் கிளம்பியதும் முல்லை தன்னை அறியாமல் ஈஸ்வரனின் புஜங்களை இறுக்கமாக பற்றிக் கொண்டவள் மனம் முழுவதும் சந்தோஷம் நிறைந்து இருந்தது.


தன் புஜங்களை பற்றி நிற்ப்பவளின் உணர்வை புரிந்து கொண்டவன் அவளை பார்த்த படி அமைதியாக நின்று இருந்தான். ஈஸ்வரனை பொறுத்த வரை இந்த மக்கள், இவர்களின் ஆர்பாட்டம், உணர்வு, சந்தோஷம் இவை பெரிது கிடையாது ஏதோ கூட்டத்தில் ஒருத்தனை போல் நின்று இருந்தான். ஆனால் கொடியின் ஒவ்வொரு உணர்வும் ரொம்பவே முக்கியமானது அதனால் அவளின் அசைவையும் கவனித்து விடுவான்.


வான வேடிக்கைகள், பக்தி கோஷங்கள் முடிந்து அம்மன் கிளம்பினாள் ஊரை ஒரு முறை சுற்றி வர, அவளின் தேர் பின்னாடியே மக்கள் அனைவரும் கிளம்பினர், முல்லையும் கிளம்ப ஈஸ்வரன் தடுக்க வில்லை.


ஈஸ்வரன் போகவில்லை, அவன் யோசனையாக அப்படியே நின்று விட்டான்.


கொடி ஈஸ்வரனை கவனிக்க தவறிவிட்டாள். ஊரில் யாருமே கோவிலில் கிடையாது அனைவரும் அம்மன் பின்னாடியே எதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் சென்று விட்டனர்.



தொடரும்...