• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 39

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
68
28
18
Tamilnadu
அத்தியாயம் – 39




ஈஸ்வரன் கம்பீரமாக நடந்து செல்வது போல் காட்டிக் கொண்டாலும் அவன் முகத்தில் இருந்த வேதனையை துருவால் உணர முடிந்தது நண்பன் முகம் பார்க்காமல்.


“அண்ணி நீங்க.” என உண்மையை கூற வந்த சோயா கைகளை அழுத்தமாக பற்றினான் துரு.


"வேணாம்." என கண்களால் கூறியவன்,


“சோயா முல்லைக்கு அறையை காட்டு போய் தூங்கட்டும். முல்லை நீ சோயா கூட போ நல்லா ஓய்வெடு எதுவா இருந்தாலும் அப்பறம் பேசலாம் போ.” முல்லை சரி என தலை அசைத்தவள் சோயா பின்னாடியே சென்றாள்.


“சில்வியா நீ பண்ணுனது மிக பெரிய தப்பு. நீ எதுக்கு கிராமத்துக்கு போன? நம்ப யாரையும் வர கூடாதுன்னு சொல்லிட்டு தானே ஷிவ் கிளம்பினான். போனது மட்டும் இல்லாமல் முல்லையை பார்த்து தேவை இல்லாத வேலை செஞ்சி வச்சி இருக்க? இது என்ன புது பிரச்சனை?”


சில்வியா துருவை முறைத்து படி நின்று இருந்தவள், “உனக்கு இது தேவை இல்லாதது துரு. எனக்கு முக்கியம்னு பட்டதை நான் செஞ்சேன் இதுல எந்த தப்பும் இல்ல, அண்ட் ஷிவ்வும் ஆறு வருஷமா காதலிக்கிறேன்னு முல்லை கிட்ட சொல்லி இருக்கான்.”


“அது நீ இல்ல சில்வியா, ஷிவ் யாரையும் காதலிக்கவே இல்ல அது உனக்கும் தெரியும், முல்லை அப்பாவி அவள் ஈஸ்வரன் மேல எந்த தனிப்பட்ட ஆசையும் வளர்த்துக்க கூடாதுன்னு தான் பொய் சொல்லி இருக்கான்.”


“ஷிவ் தன்னுடைய தேவைக்கு எப்படி வேணாலும் பேசுவான் அது நம்ப எல்லாருக்கும் தெரியும், ஆனா நீ பன்னுனது தப்பு.”


"ஐ லவ் ஷிவ் துரு உனக்கும் தெரியும்.”


“உன்னை ஷிவ் காதலிக்கல சில்வியா, உங்க அப்பா கேட்டதுக்காக தான் உன்னை அவன் பொறுப்புல எடுத்து பாத்துகுறான். அது உனக்கும் தெரியும்.”


இருவரும் வாக்கு வாதம் செய்து கொண்டு இருக்கும் போதே, "சில்வியா!" என ஈஸ்வரனின் குரல் வீடு முழுவதும் எதிரொலித்தது


முல்லை அறைக்குள் இருந்ததால் கதவை தாண்டி அவன் குரல் உள்ளே செல்லவில்லை.


ஈஸ்வரனின் குரலில் சில்வியா உள்ளுக்குள் நடுங்கி போனாள், ஆனால் முகத்தை வெளியே சாதாரணமாக காட்டிக் கொண்டவள் வேகமாக ஈஸ்வரன் அறையை நோக்கி சென்றாள். வெளியவே நின்று கொண்டாள், உள்ளே போக முடியாது ஈஸ்வரனுக்கு பிடிக்காது.


தண்டையை தூக்கி விட்டபடி வந்தவன், "நீ ஊருக்கு வந்தது கம்பன் உதவியால் தானே?" ஆம், இல்லை என இரண்டும் கூறினாள்.


“நான் இந்தியா வந்து கம்பன் கிட்ட அட்ரஸ் கேட்டேன் அவன் அனுப்பி விட்டான்.”


“நீ சொன்ன கதை எப்பவும் உண்மை ஆகாது சில்வியா, உன்னுடைய பாதுகாப்புக்காக தான் நீ இங்க தங்கி இருக்க, என்னுடைய வாழ்க்கைல உனக்கு இடம் இல்ல. என் வாழ்க்கை முழுக்க இனி என் கொடிக்காக மட்டும் தான். உன்னால தான் என் வாழ்க்கை சரி ஆக போகுது, உனக்கு கொடி பத்தி தெரியல, அவள் திருப்பி செய்யும் போது புரியும்.” என்றவன் அவசரம், அவசரமாக கொடி தங்கி இருக்கும் அறையை நோக்கி சென்றான்.


“என்னால முடிஞ்ச வரை முயற்சி பண்ணுவேன் ஷிவ்!” என அவன் முதுகை பார்த்தபடி கூறிக் கொண்டாள் சில்வியா.


முல்லை காட்டுக்குள் விட்டது போல அறையை மலங்க, மலங்க பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள். அவள் வாழ்ந்த முறை முழுக்க முழுக்க பழங்காலம். இங்கு எல்லாமே நவீன முறை, கட்டிலை கண்டே விழி விரித்தாள் அவர்கள் அறையில் இருந்ததை விட இரு மடங்கு பெரியது. முல்லையை பற்றி அறிந்ததால் தான் ஈஸ்வரன் அவ்வளவு அவசரமாக அறைக்குள் நுழைந்தான்.


“கொடி!” என மிருதுவாக அழைத்தவன் அவள் விழித்துக் கொண்டு நிற்பதை கண்டு,


“படுக்காம எதுக்கு நிக்கிற, தூங்க வேண்டியது தானே.”


“மாமா படுக்க பாய் தேடுறேன் கிடைக்கல அதான் நிக்கிறேன்.”


“இங்க பாய் போட்டுலாம் படுக்க முடியாது, குளிரும். நீ கட்டில்ல படு, வா எல்லாத்தையும் எப்படி பயன்படுத்தனும்னு சொல்லி தரேன்.” என கூறியவன் டேபிள் லைட்டை நிறுத்துவதில் துவங்கி, பாத்ரூமை எப்படி பயன்படுத்தனும் என்பது வரை சொல்லிக் கொடுத்தவன்,


“கொடி இங்கேயே ஃப்ரிட்ஜ் இருக்கு மாலைகுள்ள அதுல சாப்பிட வாங்கிட்டு வந்து வைக்கிறேன் இங்க எல்லாமே டிஜிட்டல் முறை தான் நீ போக போக புரிஞ்சுப்ப. உனக்கு இப்போ ஓரளவுக்கு ஆங்கிலம் படிக்க தெரியும்.


எனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு. நான் வெளிய போய்ட்டு வர ரொம்ப தாமதம் ஆகும். கிராமத்தில் காத்திருந்த மாதிரி எனக்காக காத்திருக்க வேண்டாம். நீ சாப்பிடு, சோயா கூடவே இரு சரியா?”


“சரி மாமா நீங்க போய்ட்டு வாங்க.” என அவனை அனுப்பி வைத்தவள், குளித்து புடவை மாற்றிக் கொண்டு வந்து தரையில் படுத்தாள்.


சில நொடிகளில் தரையின் குளிர்ச்சி உடலை நடுங்க செய்தது. அதனால் எழுந்து கட்டிலில் படுத்தவளுக்கு தூக்கம் நீண்ட நேரம் வர வில்லை. முதல் முறை பஞ்சு மெத்தையில் படுப்பவளுக்கு அது சுகமாக தெரியவில்லை. முள்ளு போல் குத்தியது.


“துரு கார் எடு.” என காருக்குள் அமர்ந்த படி கூறினான் ஈஸ்வரன். துரு காருக்குள் அமார்ந்தவன் காரை அதி வேகத்தில் எடுத்தான்.


"எத்தனை மணிக்கு ஏலம் துரு?"


“ஒரு மணிக்கு ஷிவ்!”


கார் ஓர் வெள்ளை கட்டிடத்தின் முன்பு நின்றது. கார் கதவை திறந்து கொண்டு ஸ்டைலாக இறங்கியவன் தனிக்காட்டு ராஜாவாக அங்கு கூடி இருந்த கூட்டத்தை கண்டு கொள்ளாமல் நடந்தான்.


“ஷிவ் ஷிவ் வந்துட்டான், இவன் இனி வர மாட்டான்னு நினைச்சா, திரும்பவும் வந்து நிக்கிறான்.”


*இன்னைக்கு நமக்கு இந்த ஏலம் கிடைக்காது.”


“போச்சு இவனை மீறி ஏலம் எடுக்கவும் முடியாது, அப்படியே எடுத்தாலும் எடுத்தவனை கொன்னு திரும்பவும் அவனே ஏலம் எடுத்துடுவான்.”


“இவனை மீறி ஏலம் எடுத்து உயிரை விட நான் தயாரா இல்லை.“ என சிலர் அவன் உள்ளே நுழையும் போதே வெளியேற துவங்கினர்.


தன்னை தாண்டி செல்பவர்களை ஓர் திமிர் பார்வை பார்த்து விட்டு தன் கையில் இருந்த தண்டையை தடவி பார்த்தபடி உள்ளே நுழைந்தவன் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் முதல் ஆளாக அமர்ந்தான்.


அவனுக்கு அருகில் அவனை முறைத்தபடி நக்கல் சிரிப்போடு அமர்ந்து இருந்தான் ஷாருக். இருவருக்கும் முதல் சந்திப்பில் இருந்தே முட்டிக் கொண்டது இன்று வரை தொழில் முறை எதிரியாக தொடர்கிறது.


“முரடன் வந்துட்டான், இன்னைக்கு மூக்கு உடைந்து போக போறான்.” என ஈஸ்வரன் காதில் விழ வேண்டும் என சத்தமாக கூறினான் ஷாருக்.


ஈஸ்வரன் நாக்கை தட்டி டொக் என சத்தம் விட்டவன், “பாக்கலாம் டா முட்டாள்.” என சத்தமாக கூற,


“இவனுங்க ஆரம்பிச்சிட்டாங்க இனி ஒரே போராட்டம் தான்.” என்ற புலம்பலோடு ஈஸ்வரன் அருகில் அமர்ந்தான் துரு.


ஷாருக் துருவை பார்த்து சினேகமாக சிரிக்க துருவனும் மிதமாக சிரித்தான். ஏலம் துவங்கியது,


“கட்டாயம் இந்த கான்ட்ராக்ட் நமக்கு தான் இந்த வருஷம் இந்த எக்சிபிசன் என் கைக்கு தான்.” என சந்தோஷமாக அமர்ந்து இருந்த ஷாருக் மூக்கு உடைந்து போகும் படி இந்த ஆண்டும் எக்சிபிசன் ஈஸ்வரன் கைக்கே சென்றது.


ஷாருக் கண்கள் சிவக்க முன்னாள் அமர்ந்து இருந்த அதிகாரிகளை முறைக்க, “நீ எப்பவுமே முட்டாள் தான் டா.” என ஈஸ்வரன் நக்கலாக கூறி விட்டு அங்கிருந்து சென்றான்.


ஷாருக் அந்த அதிகாரிகளை நெருங்கினான். ஷாருக்கை எச்சில் விழுங்கியபடி பார்த்துக் கொண்டு இருந்தனர் அதிகாரிகள். அவர்கள் முன்னால் இருந்த டேபிளை எட்டி உதைத்தவன்,


“என் கிட்ட காசு வாங்கிகிட்டு என்னையே ஏமாத்திட்டீங்க இல்ல!” நரம்புகள் புடைக்க கேட்டவனை கண்டு பயந்தவர்கள்,


“சார் உங்க பணத்தை திரும்ப தந்துடுறோம் நாங்க, நீங்க பணம் குடுத்து எங்களை விலைக்கு வாங்குனீங்க, ஷிவ் எங்க குடும்பத்தை தூக்கிட்டான், எங்களுக்கு பணத்தை விட எங்க குடும்பம் தான் சார் முக்கியம், எங்களுக்கு வேற வழி இல்லாமல் தான் இந்த முறையும் கான்ட்ராக்ட் அவர் கிட்ட கொடுக்க வேண்டியதா போச்சு.”


“பிளீஸ் சார் புரிஞ்சுக்கோங்க இன்னமும் எங்க குடும்பம் அவன் கட்டுபாட்டில் தான் இருக்கு, ஷிவ் வர மாட்டாருன்னு சொல்லி தான் எங்களுக்கு பணம் குடுத்தீங்க, ஆனா அவர் வந்துட்டாரே.”


“உங்களுக்கே ஷிவ் பத்தி நல்லா தெரியும்.”


“நீங்க போடுற சண்டைக்கு நாங்க எங்களுடைய குடும்பத்தை இழக்க முடியாது.” என்றவர்கள் தங்களின் குடும்பத்தை தேடி ஓடினர்.


ஷிவ் தன்னுடைய கம்பனியில் தான் அவர்களின் குடும்பத்தை கடத்தி வைத்திருந்தான். ஷிவ் அனுப்பிய லொக்கேஷனுக்கு வந்தவர்கள் கார் பார்க்கிங் ஏரியாவுக்குள் நுழைந்தனர்.


ஷிவ் தன்னுடைய காரின் முன்புறம் கையில் துப்பாக்கியை பிடித்தபடி மல்லாக்க படுத்து இருந்தான். வேகமாக வந்தவர்களோ ஷிவின் கோவத்தை கண்டு பவ்வியமாக அவன் முன்பு கை கட்டி நின்றபடி,


"சார் நீங்க சொன்னபடி செஞ்சிட்டோமே இன்னும் எதுக்காக எங்க குடும்பத்தை விடாமல் இருக்கீங்க?"


ஒவ்வொரு முறையும் நான் சொல்லாமலே செய்யனும், ஷிவ் கம்பனிக்கு தான் எப்பவும் இந்த கான்ட்ராக்ட் கிடைக்கணும், அது நான் இருந்தாலும் சரி, இல்லனாலும் சரி.” என்றான் துப்பாக்கியை சுழற்றியபடி.


“சார் அதுக்கு ஒத்துக்க முடியாது. எனக்கு என் பொண்டாட்டியே தேவை இல்லை, இனி உங்களுக்கு இந்த கான்ட்ராக்ட் கிடைக்காது.” என ஒருவன் எகிறிக் கொண்டு நிமிர


அவனின் தொண்டையில், நெற்றியில் என யோசிக்காமல் குண்டுகளை இறக்கினான் ஈஸ்வரன். எகிறியவன் பிணம் மண்ணில் பொத்தென்று விழ மற்றவர்களுக்கு பயத்தில் பாதி உயிர் பிரிந்து போனது.


“சார் சார் எங்களை எதுவும் பண்ணிடாதீங்க, இனி வேற யாருக்கும் தர மாட்டோம், எங்களையும், எங்க குடும்பத்தையும் விட்டுடுங்க.” என ஈஸ்வரன் காலில் விழுந்து விட்டனர்.


ஈஸ்வரன் துருவுக்கு கண் காட்ட துருவன் காருக்கு பின்னால் சென்றவன் திரும்பி வரும் போது அவனை தொடர்ந்து சிலர் மூட்டையை சுமந்த படி வந்தனர். வந்தவர்கள் மூட்டையை தொப்பென்று போட்டு விட்டு செல்ல, "மூட்டையை பிரிச்சி பார்த்து குடும்பத்தை சரியா அழச்சிட்டு போங்க." என துருவன் கூறி முடிக்க அவசரம் அவசரமாக அவர்கள் மூட்டையை பிரிக்க துவங்கினர்.


ஈஸ்வரன் வேகமாக காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர, ‘அடுத்த சம்பவம் தயார்.’ என்று நினைத்த படி ஈஸ்வரன் அருகில் அவசரமாக அமர்ந்து கொண்டான் துரு. கொஞ்சம் தாமதம் ஆனாலும் யோசிக்காமல் விட்டு விட்டு சென்று விடுவான்.


ஈஸ்வரனின் கார் கம்பெனியை விட்டு வெளியே போகும் போதே ஒருவனை அடித்து வீசியது. ஈஸ்வரன் காரில் மோதி இரத்தம் கக்கி கீழே கிடப்பவனை திரும்பி பார்த்த ஈஸ்வரன் இன்னும் அவன் சாகல என முனகி கொண்டே காரை ரிவர்ஸ் எடுத்து அவன் மீது ஏற்றி, இறக்கி விட்டு சாதாரணமாக கிளம்பினான்.


துருவன் ஈஸ்வரன் முகத்தை கூர்மையாக பார்த்தவன், "முல்லைக்கு உன்னை பத்தி முழுசா தெரியுமா?"


“தெரியாது, நான் சொன்ன மொக்க பொய்யை நம்பி என்னை பத்தி அவள் தெரிஞ்சிக்க விரும்பல.”


“எதுக்கு அவ கிட்ட பொய் சொன்ன?”


“கட்டுன தாலிக்கு அவள் என் மேல எந்த விருப்பத்தையும் எடுத்துக்க கூடாதுன்னு தான், நான் அந்த ஊரை விட்டு, அவள் வாழ்க்கையை விட்டு விலகியதும் அவள் வேதனை பட கூடாது, வேற வாழ்க்கையை தேர்வு பண்ணனும்னு தான் துரு.”


“பொய் சொல்லிட்டு நீ ரொம்ப வேதனை படுற போல?” ஈஸ்வரனின் பதிலை அறிந்து கொள்ள ஆவலாக கேட்டான் துரு.


“இல்ல எனக்கு எந்த வேதனையும் இல்ல.” என பொய் கூறியவன் அறியவில்லை துரு ஈஸ்வரனை வைத்து செய்ய போவதை.


*நீ திரும்பவும் கிராமத்துக்கு போக மாட்ட தானே ஷிவ்?” ஈஸ்வரன் வாயை திறக்க வில்லை.


கார் சாலையில் சீறி பாய்ந்து செல்வதை கண்ட துரு, “இவ்வளோ வேகமா எதுக்கு போற ஷிவ். ரோட் லிமிட் ஸ்பீட் தாண்டி போற நீ.”


“கொடி காத்திருப்பா, சீக்கிரம் போகனும், எனக்கு எந்த ரூலும் கிடையாது, எந்த ரூல்சும் என்னை தடுக்க முடியாது துரு.” என்றவன் கவனம் முழுவதும் சீக்கிரம் வீட்டிற்கு செல்வதிலேயே இருந்தது.


சோயா கிட்சன் மேடையில் அமர்ந்து இருக்க முல்லை சமைத்துக் கொண்டு இருந்தாள் சோயாவுடன் பேசிய படி. “சோயா நம்ப இப்போ எந்த ஊர்ல இருக்கோம்?”


முல்லை கேட்ட கேள்வியில் சாப்பிட்டு கொண்டிருந்த பாதாம் கீழே விழுந்தது,


“அண்ணி ஊர் இல்ல எந்த நாட்டுல இருக்கோம்னு கேளுங்க.”


“நீங்க ஆஸ்திரேலியால இருக்கீங்க. நம்ப எல்லாருமே வேற நாட்டுல இருக்கோம்.”


வாணலில் கேரட்டை கிளறிக் கொண்டு இருந்தவள் கைகள் அப்படியே நின்று போனது.


“வேற நாடா? அப்படிலாம் இருக்கா சோயா எனக்கு தெரியல, வெளிநாட்டுல இருக்கேனா நான்?”


முல்லை அப்பாவி தனத்தை கண்டு மென்மையாக சிரித்த சோயா, “ஆமா அண்ணி உங்களுக்கு இது வெளிநாடு தான். அண்ணன் உங்க கிட்ட எதையும் சொல்லலையா?”


*இல்ல சோயா.”


“நீங்க கேட்க வேண்டியது தானே?”


“உங்க அண்ணன் எப்பவுமே எனக்கு நல்லது மட்டும் தான் செய்வாரு, மாமா ரொம்ப நல்லவரு, அதனால அவுங்க கிட்ட நான் எந்த கேள்வியும் கேட்கல.”


முல்லை கூறிய, "மாமா ரொம்ப நல்லவரு." என்பதை கேட்டு சோயாக்கு நெஞ்சு வலியே வந்து விடும் போல இருந்தது.


“என் அண்ணன் நல்லவன், நீங்க பாத்தீங்களா?”


“ஆமா சோயா கிராமத்துல எல்லாருக்கும் எவளோ உதவி செய்றாங்க தெரியுமா? மாமாவை எல்லாரும் தெய்வமா பாக்குறாங்க. திருவிழாவுக்கு மாமா தான் முழு செலவையும் பாத்தாங்க, என்னை மாதிரி நிறைய பொண்ணுங்களை படிக்க வைக்கிறாங்க, சொல்லிகிட்டே போகலாம் சோயா.”


‘அட ஆண்டவா அந்த பணம் எல்லாத்தையும் ஒரு பணக்காரனை போட்டு தள்ளிட்டு அவன் சொத்து எல்லாத்தையும் வித்து போட்டு விட்டதுன்னு சொன்னா அண்ணி கேவலமா நினைப்பாங்க, நமக்கு பழகிடுச்சி அண்ணன் அண்ணி பார்வையில் நல்லவனா இருக்கட்டும். எதுக்கு அதை நம்ப கெடுத்துக் கிட்டு,


“ஆமா ஆமா அண்ணி அண்ணன் உழைச்சு சம்பாதிச்சது எல்லாம். உங்களுக்காக ஷிவ் என்ன வேணாலும் செய்வான், இப்போ உயிரை கேட்டாலும் குடுப்பான்.”


“காமெடி பண்ணாத.” என சிரித்த முல்லைக்கு தெரியவில்லை சோயா உண்மையை கூறுகிறாள் என்பது.


ஈஸ்வரனை விட்டு விலகி போகும் எண்ணத்தில் இருப்பவளுக்கு அனைத்தும் மாயையாக தெரிகிறது. எதையும் நம்ப முடியவில்லை, நம்பவும் முயற்சி செய்யவில்லை.


“அண்ணி உண்மைய சொல்லனும்னா அண்ணன் நிறைய மாறி இருக்கான். அதுக்கு நீங்க தான் காரணம். நீங்க மட்டும் இல்லன்னா ஷிவ் எப்பவும் போல முரடனா தான் இருந்து இருப்பான். அவன் அப்படி இருக்க என் அப்பாவும் ஒரு காரணம் அண்ணி. என் அப்பாவும் முரட்டு தனமான ஆள் தான். அண்ணா பிறந்ததும் அப்பா அண்ணனை ஆசிரமத்தில் சேர்த்துட்டாரு.


அப்பாக்கு மகன் இருக்கதே யாருக்கும் தெரியாது. அவருக்கு குழந்தைகள் இருக்காங்கன்னு யாருக்குமே தெரியாது. நான் பிறந்ததும் சில்வியா அப்பா கிட்ட என்னை குடுத்துட்டாரு.


ஏன்னு தெரியலை, என்னை பத்தி அண்ணனுக்கு தெரியல, அண்ணனை பத்தி எனக்கு தெரியாது. தனி தனியா அனாதை மாதிரி வளர்ந்தோம்.


அண்ணன், தங்கை இருவருக்குமே அறிமுகம் இல்லாமல் செய்து இருந்தார்.




தொடரும்...