• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 43

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
68
28
18
Tamilnadu
அத்தியாயம் – 43


தன் மாமனின் உண்மை முகம் கண்டு அரண்டு போனாள். கீழே இறந்து கிடப்பவன் தன் கழுத்தில் தவறான எண்ணத்தில் தொட்டத்தை உணர முடியாத அளவுக்கு முட்டாள் பெண்ணல்ல முல்லை.


ஆனால் முல்லைக்கு தெரியாதே இறந்தவன் தன்னை தொட்டதுக்கும், தவறாக பார்த்ததுக்கும் தான் இறந்து கிடக்கிறான் என்று.


"எவ்வளவு தைரியம் டா உனக்கு?" என பிணத்தை கண்டு உருமியபடி தன் கையில் இருந்த இரத்தத்தை உதறிக் கொண்டு எழுந்தவன் கொலுசு சத்தம் கேட்டு திரும்பினான்.


முல்லை தள்ளாடி மயங்கி விழும் முன்பே மண்டி இட்டு மடியில் தாங்கினான் தன் கொடியை. ஷிவ் முல்லையை தாங்கி பிடித்த பிறகு தான் முல்லை அங்கு இருப்பதையே ஷாருக், துரு இருவரும் உணர்ந்தனர்.


“முல்லை எல்லாத்தையும் பாத்துட்டா போல ஷிவ்!” என துரு கூற,


சட்டென்று திரும்பி துருவை அக்னியாக முறைத்தான் ஷிவ். ஷிவ் பார்வையில் துருவின் வாய் தானாக மூடிக் கொண்டது. ஷாருக் வாயை கூட திறக்க வில்லை பிஸ்னஸ் போட்டியை தாண்டி, முரடனாக இருந்தாலும் ஷிவ் பார்வை முல்லையை தலை முதல் கால் வரை அளந்ததை ஷாருக் கண்டு கொண்டான்.


அதிலும் முல்லை மீண்டும் அதே கிராமத்து கிளியாக, கண்டாங்கி புடவையில் கண்ட பிறகு ஈஸ்வரன் கண்களில் தனி ஒளி தோன்றியது. முல்லை மாடனாக இருப்பதை ஷிவ் விரும்பவில்லை என்பதை ஷாருக்கால் உணர முடிந்தது.


ஷிவ் தன் கொடியை பூ போல் மென்மையாக தூக்க இப்போது ஷாருக், துரு இருவரும் விழிகளை முதலை வாய் போல் விரித்தனர். இவ்வளோ நேரம் வெறிப்பிடிச்ச சிங்கம் மாதிரி இருந்தான். இப்போ அப்பிடியே மொத்தமா மாறிட்டான்.


ஈஸ்வர் கொடியை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைய சில்லு வேகமாக ஸ்கிரீன் பின்னால் ஒளிந்து கொண்டாள் பயத்தில்.


ஈஸ்வரன் பின்னாடியே ஓடி வந்த துரு, "ஷிவ் முல்லையை எங்க தூக்கிட்டு போற? அவ ரூம் இங்க இருக்கு பாரு."


ஈஸ்வரன் திரும்பி நின்றவன் கொடியை ஒற்றை கையால் பிடித்துக் கொண்டு துருவனின் மற்றொரு கன்னத்தில் அறைய ஷாருக் தன்னுடைய இரு காதுகளை இறுக்கமாக மூடிக் கொண்டான். ஆனால் அடி வாங்கியவனோ சிரித்தபடி நின்று இருந்தான்.


"முன்னாடி வாங்குன அறைக்கே ஒரு வாரம் காது கேட்காது, இவன் எதுக்கு கன்னத்தை அவன் கிட்ட காட்டிகிட்டே இருக்கான் லூசு பய." என துருவனை மனதுக்குள் திட்டுக் கொண்டான் ஷாருக்.


ஈஸ்வரன் கொடியை தன் அறைக்கு தூக்கி சென்றவன் அவளை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்தான்.


“டேய் துரு உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை அவன் பொண்டாட்டியை அவன் ரூம்க்கு தூக்கிட்டு போனால் உனக்கு என்ன?”


துரு, “அவன் முல்லையை காதலிக்கிறதை ஒத்துக்க மாட்டேங்குறான். தன்னுடைய காதலை ஒத்துக்காதவன் எப்படி அவளுக்கு புரிய வைப்பான் ஷாருக்? அவளுக்கு ஏற்கனவே இவன் சில்லுவை விரும்புறதா குழப்பம் இருக்கு இவனும் அதற்கு தகுந்தா மாதிரி தன்னுடைய காதலை வெளிக்காட்டிக்காமல் இருக்கான். முல்லை ஷிவ்வை விட்டு மொத்தமா ஒதுங்கிட்டா இவன் தாங்க மாட்டான், வாழவே மாட்டான்.


ஈஸ்வர் பிறந்ததில் இருந்து யார் மேலேயும் பாசம் வைக்கல அப்படி பட்டவன் பல பேர் மேல வைக்க வேண்டிய பாசத்தை மொத்தமா முல்லை மேல கடலை விட ஆழமா வச்சி இருக்கான்.


இன்னைக்கு ஒரு நாள் முழுக்க முல்லையை பார்க்க விடலனு எவளோ கோவ பட்டான் தெரியுமா? அப்படி பட்டவன் காதலை வெளிக்காட்டாமல் இருந்தால் முல்லையால எப்படி புரிஞ்சுக்க முடியும்?”


துருவனின் கேள்வி, ஆதங்கம் நியாயமாக தோன்றியது ஷாருக்கு.


“அவனுக்காக அவன் கிட்டையே அடி வாங்குறியா நீ?” துருவனின் நட்பை கண்டு ஷாருவால் வியக்காமல் இருக்க முடியவில்லை.


“உனக்கு உன் நண்பன் அவளோ முக்கியமா துரு?”


“அவன் வெறும் நண்பன் மட்டும் கிடையாது ஷாருக். எனக்கு அம்மாவும் அவன் தான். பிடுங்கி தின்னு வாழ்ந்தாலும் எனக்கு குடுத்துத்து தான் சாப்பிடுவான்.”


“யாருமே வேண்டாம்னு வாழ்ந்தவன் என்னை மட்டும் வேண்டாம்னு விட்டது கிடையாது. இந்த வீடு கட்டி முதல் முதல்ல என்னை தான் உள்ள போக சொன்னான் ஷாருக்.”


“சில்வியா!” என ஈஸ்வரனின் குரல் கர்ஜனையாக ஒலித்தது வீடு முழுவதும்.


ஈஸ்வரன் குரலில் சோயா, கிங்ஸ்லி இருவரும் வெளியே ஓடி வந்தனர்.


சில்லு ஸ்கிரீன் பின்னால் இருந்து வெளியே வந்தவள் நடு ஹாலில் நிற்க அவளை அருவருப்பாக பார்த்தான் ஷிவ்.


“உனக்கு ரெண்டு செகண்ட் டைம் தரேன் போய் இந்த புடவையை கழட்டி எடுத்துட்டு வா.”


“ஷிவ்!” என சில்வியா வாய் திறந்து பேச முனைய,


"நான் சொன்னதை செய்றீயா இல்ல வீட்டை விட்டு வெளிய போறியா?”


சில்லு வேகமாக தன் அறையை நோக்கி ஓடியவள் ஈஸ்வரன் கூறியது போலவே துணி மாற்றி புடவையை கொண்டு வந்து ஈஸ்வரன் முன்பு நீட்டினாள்.


"கீழ போடு." பொத்தென புடவையை கீழே போட்டாள் சில்லு.


தன் பாக்கெட்டில் இருந்த லைட்டரை ஆன் பண்ணி அந்த புடவை மீது எரிந்தவன் பார்வை துருவன் மீது அழுத்தமாக படிந்தது. புடவை எரிவதை பார்த்துக் கொண்டு இருந்த சில்லு முகத்துக்கு நேராக சொடக்கிட்டவன்


"என் வாழ்க்கைல என்னைக்கும் என் கொடிக்கு மட்டும் தான் இடம், என் மனசுலயும் அவள் மட்டும் தான் இருக்கா. இனி இந்த மாதிரி அசிங்கமா நடந்துக்காத நீ இவ்வளவு பண்ணியும் உன்னை நான் விட்டு வச்சிருக்க ஒரே ஒரு காரணம் மட்டும் தான் இருக்கு, இனி என் முன்னாடி நீ வரவே கூடாது.” என எச்சரிக்கை செய்தவன் தன் அறை கதவை பலமாக மூடினான்.


அனைவரும் ஈஸ்வரனின் மூடிய கதவையே வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தனர். சில்வியாக்கு அவமானமாக இருந்தது அனைவரையும் நிமிர்ந்து பார்க்க, யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் தன் அறைக்குள் ஓடி நுழைந்து கொண்டாள்.


“ஷாருக் நீ கிளம்பு உன் மனைவி வெய்ட் பண்ணுறாங்க.” என துருவன் கூறவும் தான் மனைவி நினைவு வந்தது.


“ஓகே துரு, இனி இந்த முரடன் கிட்ட நான் கேர்ஃபுல்லா இருக்கணும்.” என கூறியவனை கண்டு துரு சத்தம் வராமல் சிரித்தான்.


கட்டிலில் கிடப்பவள் அருகில் அமர்ந்தவன், “உனக்காக நான் என்ன என்னமோ பண்ணுறேன், நீ எதுக்கு தேவை இல்லாதது பண்ணுற. இங்க வந்ததில் இருந்து உன்னை விட்டு நான் விலகி போறா மாதிரி இருக்கு. அது நடக்க கூடாது, நடக்கவும் நான் விட மாட்டேன். நான் இங்க வந்த வேலை முடிஞ்சுது நம்ப கிளம்ப வேண்டியது தான்.


நமக்கு அந்த கிராமம் போதும் டி அங்க உன் கூட கிடைக்கிற நேரம் இந்த மாளிகையில் கிடைக்கல.” என அவள் கழுத்தில் ஒட்டி இருந்த கிரீமை துடைத்த படி பேசிக் கொண்டு இருந்தவன் கண்ணில் சிக்கியது அவள் முந்தானையில் போட்டு இருந்த முடிச்சு.


மெதுவாக முடிச்சை அவிழ்த்தவன் தொடையில் விழுந்தது ஒரு மோதிரம். தன் மனைவியை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். மோதிரத்தை கையில் எடுத்தவன் கொடி முகத்தையே பார்த்தான்.


"என்னை விட்டு விலகியே இருக்க, ஆனா பக்கத்துலயே இருக்க, எனக்கு தேவையான ஒவ்வொன்னும் பாத்து பாத்து செய்ற ஆனா உரிமை எடுத்துக்க மாட்ட. உன்னை என்ன பண்ணுறதுண்ணு தெரியல கொடி. என் வாழ்க்கைல நான் சந்திச்ச பொண்ணுங்களையே நீ தனி, உனக்கு தனி இடம் என் வாழ்க்கைல.”


கொடி முந்தானையில் மீண்டும் அந்த மோதிரத்தை வைத்து முடிச்சு போட்டான் ஈஸ்வரன். நாள் முழுவதும் மனைவியை பார்க்காத ஏக்கத்தை தீர்க்கவே விழி அசைக்காது கொடி முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தான் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி. தன்னை பற்றி அவள் என்ன நினைப்பாள், எப்படி எடுத்துக் கொள்வாள் என்ற கவலை எதுவும் அவனிடம் இல்லை.


நான் இப்படி தான் அதில் மாற்றம் இல்லை, என்னை மாற்றிக் கொள்ளவும் முடியாது. அதற்காக நீ என்னை விட்டு போகவும் முடியாது என்ற முடிவை கொடியை தூக்கி வரும் போதே எடுத்து விட்டான். அதனால் சிறு கலக்கமும் இல்லாமல் தெளிந்த மனதோடு மனைவியை கண்களில் மொத்த காதலை தேக்கி ரசித்துக் கொண்டு இருந்தான்.


முல்லை மெதுவாக கண்களை திறந்தவள் தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கும் மாமனை தான் கண்டாள். இமை சிமிட்டாத அவனின் விழிகளை கண்டவள் மனம் நூறு மடங்காக துடித்தது. அவன் கண்களை விட்டு கொடியால் பார்வையை அகற்ற முடியவில்லை. அவன் கண்களுக்குள் தான் சிக்கிக் கொண்ட உணர்வு. இருவர் விழிகளும் மனதில் எழுந்த புது வித உணர்வோடு ஒன்றோடு ஒன்று கலந்து கொண்டது. பார்வையை பிரிக்க இருவருக்குமே விருப்பம் இல்லை.


அதிலும் தன் மாமன் கண்களில் எழும் உணர்வை படிக்க பெண்ணவள் முயன்று கொண்டு இருந்தாள். அவள் தன் பார்வையோடு கலந்தது, தன்னோடு கலந்தது போன்ற உணர்வு ஈஸ்வரனுக்கு. அவள் கன்னத்தை தட்டி கொடுத்தவன் ஆள் காட்டி விரலால் அவளின் முகத்தில் கோலம் வரைந்தான். முல்லை கூச்சத்தில் பார்வையை தாழ்த்தி கொண்டாள்.


"என்ன கொடி ரொம்ப பயந்துட்டியா?"


அவன் கேள்வியில் சுய உணர்வுக்கு வந்தவள் தான் இருக்கும் அறையை சுற்றி பார்த்தாள். மெதுவாக எழுந்து அமர்ந்தவள், “மாமா நான் உங்க அறையில் இருக்கேனா?”


"இல்ல கொடி, நம்ப அறையில் இருக்க, நீ இங்க தான் இருக்கணும்."


வார்த்தைகளை அழுத்தியே கூறினான். அவன் கோவத்தின் அளவை நேரில் கண்ட பிறகு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மனதுக்குள் பல கேள்விகள் சுனாமி போல் எழுந்தது. பல குழப்பங்கள் தெளிவு கிடைக்காமல் மனதை கல் விழுந்த குட்டை போல் கலங்க வைத்துக் கொண்டே இருந்தது.


தன் கொடியின் தெளிவு இல்லாத முகத்தை கண்ட ஈஸ்வரன் பெருமூச்சு விட்டான். என்ன சொல்லியும் இவளை தெளிவு படுத்த முடியாது என்பது ஈஸ்வரனுக்கு புரிந்து போனது. அவள் வழியில் தான் இனி செல்ல வேண்டும் என முடிவு செய்தவன் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.


கொடி தன் புடவை முந்தானையை இழுத்தாள். முந்தானை ஈஸ்வரன் கையில் இருக்கவே திரும்பி ஈஸ்வரன் கையை பார்த்தாள். மீண்டும் தன் முந்தானையை இழுத்து பார்க்க ஈஸ்வரன் விட வில்லை.


"மாமா முந்தானையை விடுங்க." என மெதுவாக வார்த்தைகளை உதித்தவளை
வித்தியாசமாக கண்டான்.


"முடியாது கொடி என்ன பண்ணுவ?"


அவளோ அமைதியாக இழுத்துக் கொண்டே இருந்தாள் முந்தானையை. அவளிடம் எதோ மாறுதல் தெரிவதை கண்டவன் அவள் முந்தானையை விட்டான். மெதுவாக தன் பக்கம் இழுத்துக் கொண்டவள் அதில் போட்டு வைத்திருந்த முடிச்சை அவிழ்த்து மோதிரத்தை கையில் எடுத்தாள்.


“நீங்க பெரிய கோடிஸ்வரவங்க மாமா நான் வாங்கி தர பரிசு சாதாரணம் ஆனாலும் எதோ என்னால முடிந்த சின்ன பரிசு.” என ஈஸ்வரன் முன்பு நீட்டினாள்.


ஈஸ்வரன் அதை கையில் வாங்காமல் கையை அவள் முகத்துக்கு நேராக நீட்டியவன், “போட்டு விடு.” என்றான்.

முல்லை மறுக்காமல் தன் மாமன் விரல்களில் மோதிரத்தை போட்டுக் கொண்டே, "பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா." என்று கூற சரியா பனிரெண்டு மணி அடித்தது கடிகாரத்தில். எப்படியோ அவள் ஆசை பட்டது போல பிறந்தநாள் முடிவதற்குள் வாழ்த்தை கூறி பரிசை கொடுத்து விட்டாள்.


அவள் போட்டு முடித்ததும் அவளின் கையை விலக்கும் முன்பே தன் கையை திருப்பி அவள் கைகளை பற்றி தன் அருகில் இழுத்தவன் அவளுக்காக தான் வாங்கி இருந்த ஒற்றை கல் பதித்த மோதிரத்தை அவள் கையில் போட்டு விட்டவன்.


“விலை பார்த்து பரிசு வாங்குற ரகம் நான் இல்ல கொடி. நீ கொடுக்குற எல்லாமே விலைமதிப்பு இல்லாதது உன்னை போல. நான் கோடீஸ்வரனாக இருந்தா நீயும் கோடீஸ்வரி தான் கொடி மறந்துடாத.”


அவன் கூறியதற்கு எந்த பதிலும் கூறவில்லை கொடி. “மாமா நான் என்னுடைய அறைக்கு போறேன்.” என கூறியவள் எழுந்து வேகமாக ஓடி விட்டாள்.


முதல் முறை தன் கண்ணை பார்த்து பேசாமல் செல்பவளை வேதனையோடு பார்த்தான் ஈஸ்வரன். ‘நான் இவ்வளவு கூறியும் உனக்கு புரியவில்லையா? இல்லை புரிந்தும் புரியாதது போல் இருக்கியா?’ என வலியோடு அவளை பார்த்துக் கொண்டு இருந்தான் ஈஸ்வரன்.


கொடி வெளியே வரும் போதே தண்ணீர் தாகம் அவளுக்கு தொண்டையை அடைத்தது. போய் தண்ணீர் குடிச்சிட்டு வருவோம் என யோசித்துக் கொண்டே மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவள் துரு, கிங்ஸ்லி, சோயா மூவரும் குடித்துக் கொண்டு இருப்பதை கண்டாள்.


இவுங்களுக்கும் தண்ணீர் தாகம் எடுத்து இருக்கு போல என நினைத்துக் கொண்டே அவர்களை நெருங்கியவள் மூவரும் கொடியை கவனிக்கும் முன்பே வெள்ளை நிறத்தில் இருந்த பாட்டிலை எடுத்து வாய்க்குள் சரித்தாள்.


முதலில் சோயா தான் முல்லையை கண்டவள் அவள் குடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து, “அண்ணி” என அதிர்ச்சியாக கத்தினாள்.


சோயா கத்திய பிறகு தான் துரு, கிங்ஸ்லி இருவரும் முல்லையை கண்டனர். இருவருக்கும் அடித்த போதை மொத்தமாக இறங்கியது. சோயா பாட்டிலை பிடுங்கும் முன்பே மொத்த பாட்டிலை காலி செய்து விட்டாள் முல்லை.


"ஐயோ ஆண்டவா இன்னைக்கு நமக்கு நேரமே சரி இல்ல கிங்ஸ்லி."


"துரு நான் டிக்கெட் புக் பண்ணி ஓடி போய்டவா?"


“ஷிவ் அடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா எங்க போய் ஒளிந்தாலும் அடிப்பான். இங்கேயே இருந்தா பொண்டாட்டி முன்னாடி மட்டும் தான் அடி வாங்குவ எப்படி வசதி உனக்கு.”


“நான் இங்கேயே அடி வாங்கிக்கிறேன்.” என கூறிய கிங்ஸ்லி தன் மனைவி சோயாவை பாவமாக பார்த்தான்.


அதற்குள் கொடி தள்ளாட துவங்கி விட்டாள் போதை ஏறி ஒரு பாட்டிலை தண்ணீர் குடிப்பது போல் அல்லவா குடித்து இருக்காள்.


முல்லை முழுதாக குடித்து முடித்தவள், மூக்கை சுருக்கியபடி, “தண்ணி என்ன கசப்பா இருக்கு, நல்லாவே இல்ல.”


“ஏம்மா அது முழு பாட்டில் குடிச்ச பிறகு தான் உனக்கு தெரிஞ்சுதா?” தன் அண்ணியை கிண்டல் செய்த கணவன் இடுப்பில் கிள்ளிய சோயா,


"அண்ணி வாங்க நம்ப ரூம்க்கு போவோம்." என பதட்டமாக அழைத்தாள். எங்கே அண்ணன் வந்து பார்த்து விடுவாரோ என்ற பயம் சோயாக்கு.


முல்லை சோயா கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்டவள், “இல்ல நான் வரல.” என கூற மூவரும் அதிர்ச்சியாக முல்லையை பார்த்தனர்.


“அப்படிலாம் சொல்ல கூடாது முல்லை, உன் புருஷன் வெளிய வந்து உன் நிலமையை பார்த்தான் எங்க மூணு பேரையும் கார் ஏத்தி கொன்னுடுவான் டா, நீங்க சமத்தா நல்ல பொண்ணா சோயா கூட போங்க.” என துரு கதறினான்.


“இல்ல போக மாட்டேன்.” என கூறிய முல்லை வாசலை நோக்கி ஓடினாள்.


“டேய் துரு முல்லையை பிடி டா.” என கிங்ஸ்லி கத்த, "இங்க என்ன நடக்குது?" என கேட்டபடி மூவரையும் முறைத்துக் கொண்டு நின்றான் ஈஸ்வரன்.


மூவருக்கும் நெஞ்சே அடைத்தது, மூவரும் வாயை திறக்காமல் இறுக்கமாக மூடிக் கொண்டு நிற்க, ஈஸ்வரன் காதுகளுக்கு எட்டியது முல்லை கொலுசு சத்தம்.


மூவரையும் விட்டு பார்வையை திருப்பியவன் முல்லை வெளியே ஓடுவதை கண்டு அதிர்ந்தான். வெளியே பனியாக இருந்தது.


“கொடி!” என சத்தமாக அழைத்ததும் முல்லை ஓட்டம் சட்டென தடைபட்டது.


நின்று நிதானமாக திரும்பி தன் மாமன் முகத்தை பார்த்தவள், ஒரு மார்க்கமாக சிரித்தாள். அவள் முகமும், அவள் சிரிப்பும் சரி இல்லாததை கண்டு திரும்பி மூவரையும் அழுத்தமாக பார்த்தான் ஈஸ்வரன்.


“ஷிவ் முல்லை தண்ணினு நினைச்சு ஒரு பாட்டில் முழுக்க குடிச்சிட்டா?” என அவள் குடித்து முடித்த பாட்டிலை தூக்கி காட்டினான் துரு, ஈஸ்வரன் கேட்காமலேயே.

ஈஸ்வரன் விழிகள் சிவக்க மூவரையும் நெற்றிக் கண் திறந்து பார்த்தவன் காதுகளை நிறைத்தது முல்லையின் சத்தமான சிரிப்பு.



தொடரும்...