• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 46

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
68
28
18
Tamilnadu
அத்தியாயம் – 46



ஈஸ்வரன் குளித்து விட்டு வர சில்வியா உள்ளே நுழைந்தாள். அடுத்த ஐந்து நொடிகளில் அம்மா என்று அலறல் சத்தம் தான் கேட்டது.


முல்லை பதறி அடித்து ஓட, "எங்க போற கொடி?"


"மாமா சில்வியா கத்துறாங்க, நான் போய் என்னன்னு கேக்குறேன்."


"பச்சை தண்ணி உடம்புல பட்டதும் கத்துறா, அதுக்கு எல்லாம் நீ போக தேவை இல்ல விடு."


ஈஸ்வரன் கூறியது போலவே கோழி குஞ்சு போல் நடுங்கி கொண்டு வந்து நின்றாள் சில்லு.


“சில்வியா தலைக்கு தண்ணி ஊத்தலையா?”


"இல்ல ரொம்ப குளுருது."


"தினமும் பூஜை பண்ணனும், கட்டாயம் தலைக்கு குளிக்கணும் சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்க, வேலை எல்லாம் அப்படியே கிடக்கு."


‘மறுபடியும் குளிக்கணுமா?’ என நினைத்தவளுக்கு கண்கள் கலங்கியது. எப்படியோ குளித்து விட்டு வந்து நின்றவள் கையில் ஒரு பக்கெட்டை நீட்டினாள் முல்லை.


“சில்வியா இதுல சாணி கரைத்து வச்சி இருக்கேன் வாசல்ல தெளிங்க, முதல்ல எப்படி தெளிக்கணும்னு நான் பண்ணி காட்டுறேன்.” என முல்லை முதலில் தெளித்து காட்டினாள்.


“இன்னைக்கு நானே சாணி கரைச்சுட்டேன், நாளைக்கு நீயே கரைச்சு தெளிக்கணும். இப்போ செய்.” என்றதும் சில்வியாக்கு குமட்டி கொண்டு வந்தது.


“ஐயோ இது ரொம்ப நாறுது, என்னால முடியாது.”


“சில்வியா அப்படி சொல்ல கூடாது, செய்.” என முல்லை மிரட்டலாக கூறினாள்.


ஈஸ்வரன் வாசலில் நிற்பதை கண்ட சில்வியா மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு செய்தாள். அதற்கே உடலில் பாதி ஊற்றிக் கொண்டாள். முகத்தை சுழித்தபடி நின்று இருந்தவளை கண்ட கொடி,


“இன்னைக்கு நான் கோலம் போடுறேன் நீ பாரு நாளைக்கு நீ செய்யனும்.”


கொடி வாசல் கூட்டி கோலம் போட்டு முடித்தவள் அடுத்ததாக பூஜை அறைக்குள் நுழைந்து பூஜை செய்தாள். எப்போதும் போல் ஈஸ்வரன் நெற்றியில் பொட்டு வைக்க அவன் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி. இத்தனை நாள் நமக்குள் இருந்த திரை விலகியதடி என நினைத்துக் கொண்டான்.


சமையல் அறைக்குள் நுழைந்து மோர் கலக்கி எடுத்து வந்தவள் மாமா மோர் என நீட்ட


ஈஸ்வரன் வாங்கி ஒரே வாயில் சருக்கிக் கொண்டான். சமையல் வேலை, வீட்டு வேலை என முல்லை சொல்லிக் கொடுத்துக் கொண்டே சில்வியாவை பாதி வேலை செய்ய வைத்துக் கொண்டே இருந்தாள்.


பாதி வேலை கூட செய்ய வில்லை சில்லுக்கு மூச்சு முட்டியது. வேண்டா வெறுப்பாக அனைத்தையும் செய்து கொண்டு இருந்தாள். அப்போதே அவள் மனதில் தப்பித்து ஓட தோன்றியது.


அவள் ஈஸ்வரன் மனதில் இடம் பிடிக்க முல்லையை காக்கா பிடித்து வந்தாள். முல்லை குடும்ப பழக்க வழக்கங்களை பழக்க அழைத்து வந்தாள். இப்போது மாட்டிக் கொண்டு முழிக்கிறாள் சில்லு.


வேட்டி சட்டையில் கையில் கிடந்த தண்டையை மேலே தூக்கி விட்டபடி படிகளில் இறங்கி வரும் தன் மாமனை இமைக்க மறந்து ரசித்தாள் முல்லை.


“மாமா உங்களுக்கு வேட்டி சட்டை தான் அழகா, கெத்தா இருக்கு.” என மனதில் உள்ளதை வெளிப்படையாக அவன் கண்களை பார்த்து கூறினாள்.


அவள் வாங்கிக் கொடுத்த நூறு ரூபாய் கண்ணாடியை கண்ணில் மாட்டியவன், “இனி இது தான் நிரந்தரம் கொடி நான் கோவில் வரைக்கும் போய்ட்டு கொல்லைக்கு போறேன், நீயும் அங்க வந்துடு.” என்றவன் தன்னுடைய புல்லட்டில் அமர்ந்து கம்பீரமாக சென்றான்.


ஈஸ்வரன் வீட்டுக்கு வந்தது கூட தெரியாமல் மொத்த குடும்பமும் தூங்கிக் கொண்டு இருந்தது.


“சில்வியா சீக்கிரம் வேலை எல்லாம் பழகிக்கோங்க. வேண்டா வெறுப்பா எதையும் பண்ண கூடாது, முழு மனதோடு பண்ணனும். வாங்க கொல்லைக்கு போகலாம்.” என அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.


அங்கு அடித்த வெய்யலில் சில்லு தோள்கள் பற்றிக் கொண்டு எரிந்தது. ஒரு நாள் கூட முழுதாக ஆக வில்லை அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இந்த வாழ்வு தனக்கு ஒத்து வராது, கட்டாயம் ஈஸ்வரன் மனதில் இடம் பிடிக்க முடியாது, இப்படி கஷ்ட படுவதை விட அங்கே சந்தோஷமாக வாழலாம் என முடிவு செய்தாள்.


உச்சி வெய்யலில் சாதாரணமாக நிற்க்கும் முல்லை அருகில் சென்றவள், "முல்லை என்னை மன்னிச்சிடுங்க எனக்கு இந்த வாழ்க்கை ஒத்து வராது. நான் உங்க கூட வந்து தப்பு பண்ணிட்டேன். இவ்வளவு கடினமான வாழ்க்கை வாழ்ந்து எனக்கு பழக்கம் இல்லை முல்லை. இந்த பாதி நாளுக்கே எனக்கு உடம்பு முழுக்க வலிக்குது.


நான் உங்க ஈஸ்வரனை காதலிக்கவும் இல்ல எனக்கு ஷிவ் பிடிக்கும் அவ்வளவு தான் அதுக்காக நான் கஷ்ட பட தயாரா இல்ல. ஷிவ் உங்க கிட்ட பொய் சொன்னார். ஷிவ் இதுவரைக்கும் யாரையும் காதலிக்கல, என்னை சத்தியமா அவர் காதலிக்கல நானும் உங்க கிட்ட பொய் தான் சொன்னேன்.


இந்த வாழ்க்கை நான் நினைத்த அளவுக்கு ஈசியா இல்ல ரொம்ப கடினமா இருக்கு. என்னால முடியாது. உங்க மாமா மனசுல நான் இல்ல, ஷிவ்வும் சரி, நானும் சரி உங்க கிட்ட பொய் சொன்னோம். ஷிவ் அவன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லியும் முட்டாள் தனமா நான் கிளம்பி வந்துட்டேன்.

ஆனா இவ்வளவு பொறுமையா ஷிவ் இருந்ததே இல்ல கட்டாயம் அதுக்கு ஒரு காரணம் இருக்கும். இனியும் நான் முட்டாள் தனம் பண்ண விரும்பல.” முல்லை அதிர்ச்சியாக பார்த்தாள் சில்லுவை.


“என்ன சொல்லுற நீ ஒருவேளை இந்த வேலை செய்ய முடியாமல் இப்படி சொல்லுறீயா, கொஞ்ச நாள் கஷ்டமாக தான் இருக்கும் போக போக பழகிடும் உனக்கு. மாமா ஊர் தலைவர் அவருக்கு நிறைய பொறுப்புகள் இருக்கும். அதுல பாதி அவருடைய மனைவிக்கும் இருக்கும். இது அவளோ கஷ்டம் இல்ல சில்வியா.”


அவள் வேலை செய்ய பயப்டுவதால் பொய் கூறுகிறாள் என்று நினைத்துக் கொண்டாள் முல்லை.


நான் இவ்வளவு கூறியும் முல்லை புரிந்து கொள்ள மறுக்கிறாள் என்ற கோவத்தோடு சில்லு வேகமாக வீட்டுக்கு வந்தவள் அறைக்குள் அடைந்து கொண்டாள்.


ஈஸ்வரன் விழிகள் சிவக்க கோவிலை சுற்றி உள்ள தன் நிலத்தில் நின்று இருந்தான். நிலத்தில் பல இடங்களில் குழி தோண்ட பட்டு இருந்தது.


“வா ஈஸ்வரா, வர மாட்டேன்னு நினைச்சேன். நீ முன்னாடி சொன்னதை வச்சி.”


“இது என்னுடைய ஊர் கம்பா, இந்த மண்ணு என்னுடையது, நானும் என் அப்பாவை மாதிரி இருக்க மாட்டேன். அதான் வந்துட்டேன்.”


“உண்மை தான் ஈஸ்வரா நீ உன் அப்பா மாதிரி கிடையாது. காதலுக்காக திரும்பவும் வந்து இருக்க. உன் காதலை யாருக்காகவும் விட்டு கொடுக்க தயாரா இல்ல.”


“உண்மை தான் கம்பா என் கொடிக்காக மட்டும் தான் இந்த ஊருகுள்ள வந்தேன். இந்த வாழ்க்கையே இனி அவளுக்காக வாழ போறேன் அதான் எங்க ஆரம்பித்தேனோ அங்கேயே வந்துட்டேன். அதுக்காக என் கடமையை தவற மாட்டேன்.”


“நீ ஊருக்குள்ள திரும்ப வந்ததும் தெரிஞ்சு கிட்டேன் ஈஸ்வரா, ஆனா உன் கடமையை நீ செய்யனும்னா நீ லிங்கத்தை வெளிய எடுக்கனும்.”


“வேற எதை வேணாலும் சொல்லு, அதை மட்டும் சொல்லாத. என்னுடைய அனுமதி இல்லாமல் யார் என்னுடைய இடத்தில் குழி தோண்டுனது கம்பா?”


“உன் சித்தப்பா தான், இந்த நிலத்துல விவசாயம் பண்ண போறாராம். அதுக்கு போர் போட ஆளுங்களை அழைச்சிட்டு வந்து குழி தோண்ட்டிட்டு இருக்காரு. ஐந்து அடிக்கு மேல ஒரு பிடி மண்ணு கூட அவரால எடுக்க முடியல.”


‘இங்க போரா, இத்தனை வருஷம் எப்படி விவசாயம் செய்தார்கள் நீர் இல்லாமல்.’ என யோசித்தபடி, “எதுக்கு என் கிட்ட நீ இதை சொல்லல கம்பா?”


“அவரால எதுவும் செய்ய முடியாது, அவரால முல்லை இல்லாமல் லிங்கத்தை எடுக்க முடியாதுன்னு தான் உன் கிட்ட சொல்லல. ஆனா மனுஷன் உஷார் ஆகிட்டார். மூக்குத்தி, அம்மன் சிலை, அம்மன் நகை எல்லாமே உன் கைக்கு கிடைத்தது போல லிங்கமும் உன் கைக்கு கிடைக்க கூடாதுன்னு யோசிக்கிறார். நீ திரும்ப வர மாட்டேன்னு நினைத்து கொல்லையில் கால் வச்சிட்டாரு ஈஸ்வர்.”


“இந்த இடத்துல கால் வைக்க அவருக்கு உரிமை கிடையாது கம்பா இது எனக்கு உரிமையான இடம்.”


“அது உங்க பிரச்சனை ஈஸ்வர் நான் தலை இட முடியாது. நீ என் கிட்ட ஒப்படைத்த பொறுப்புகளை நான் சரியா பாத்துகிட்டேன் அவ்வளவு தான்.”


“இந்த மண்ணுல திரும்பவும் விவசாயத்தை துவங்க போறேன் கம்பா.” கம்பனின் சிரிப்பு சத்தம் எட்டு திக்கும் ஒலித்தது.


"முயன்று பார் ஈஸ்வரா, நீ ஆரம்பித்த நாளில் இருந்து லிங்கம் உன்னையே சுற்றி வரும். நீ நினைத்த காரியம் நிறைவேறி விட்டால் சந்தோஷமே!"


"என்னால முடியாதுன்னு நினைக்கிறீயா கம்பா, இந்த ஈஸ்வரன் நினைச்சு எதையும் முடிக்காமல் விட்டது கிடையாது. இந்த மண்ணுல விவசாயம் செய்து காட்டுறேன். அடுத்த திருவிழாவுக்கு அரிசி வாங்குறது இல்ல இந்த மண்ணுல விலையுற நெல்லு தான் அரிசியா சமையலுக்கு பயன்படும்."


ஈஸ்வரனை தாண்டி அவன் முன்னால் ஈஸ்வரனுக்கு முதுகு காட்டி நின்று இருந்த கம்பன், "முயன்று பார், ஊருக்கு நல்லது நடக்கட்டும்." என்றவன் அந்த மண்ணை வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தான்.


“சில்வியா வந்து இருக்கா போல ஈஸ்வரா?”


“கொடியோட அப்பாவி தனத்தை பயன்படுத்தி வந்துட்டாள். ஆனா இந்த வாழ்க்கை, இந்த ஊர் அவளுக்கு ஒத்து வராதுன்னு இந்நேரம் தெரிஞ்சு இருக்கும்.”


“உனக்கும் ஒத்து வராதுன்னு தான் நினைத்தேன் ஈஸ்வரா, ஆனா நீ இந்த ஊர்ல பிறந்து, வளர்ந்த மாதிரி மாறிட்ட. ஒருவேளை சில்லு மாறிட்டா?”


“அதுக்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பு இல்ல கம்பா, என்னுடைய கணிப்பு படி கொடி சொன்ன வேலைகளை கேட்டு லக்கேஜ் பேஜ் பண்ணி இருப்பாள்.”


“ஒரு வேளை நீ சொன்னது நடக்கலனா என்ன பண்ணுவ ஈஸ்வரா?”


"அவளை கொன்னுடுவேன்."


“இதுக்கா இத்தனை நாள் அமைதியா இருந்த?”


“கம்பா நான் எவளோ சுயநலமானவன்னு உனக்கே தெரியும், எனக்கு என் கொடி முக்கியம் எங்களுக்கு நடுவுல யார் வந்தாலும் அவுங்க உயிர் இருக்காது. சில்வியா விஷயத்தில் நான் ஏன் பொறுமையா இருக்கேன்னு உங்களுக்கும் தெரியும். அந்த பொறுமை ரொம்ப நாள் நீடிக்காது.”


ஈஸ்வரனை நேர்கொண்ட பார்வை பார்த்தான் கம்பன். ஈஸ்வரனும் கம்பனை அதே போல் கம்பீரமாக நேர்கொண்ட பார்வை பார்த்தான்.


“உன் கொடி மேல நீ இவ்வளவு அன்பு வைப்பன்னு நான் எதிர்பார்க்கல ஈஸ்வரா.”


கம்பன் கட்டாந்தரையாக கிடக்கும் நிலத்தை பார்த்தவன், "ஈஸ்வர் இந்த நிலம் மாதிரி தான் முல்லை வாழ்க்கை இத்தனை வருஷம் இருந்துது, எவ்வித வாசனையும் இல்லாமல். பண் படாத நிலத்தில் விவசாயம் பார்ப்பது எவ்வளவு கடினமோ அதே போல் தான் முல்லைக்குள் காதலை வரவைப்பது."


அவன் வாழ்ந்த வாழ்வை நீ அறிந்தும் அவளிடம் முதலில் காதலை தேடாதே அந்த வார்த்தைக்கு அர்த்தம் அறியாதவள் உன் கொடி. கணவன், மனைவி உறவை கொண்டு அவளுடன் இணக்கமாக வாழ பார். அதன் பின்பு அவளே காதலை உணர்வாள்.


நீ சொன்ன பொய் முல்லை மனதில் ஆழம் வரை பதிந்து விட்டது. அதை முதலில் அழி. நீ கையாளும் பொறுமை உனக்கு நல்ல பலனை கொடுக்கும் ஈஸ்வர். நீ பொறுமை இழந்தால் நாட்கள் விரையம் தான் அதிகம் ஆகுமே தவிர, வாழ்வில் ஒரு அடிக் கூட முன்னேற்றம் இருக்காது. உனக்கு புரியும் என நம்புகிறேன்.” என்ற கம்பன் சாலையை நோக்கி நடக்க துவங்கினான்.


“சீக்கிரம் வாழ்க்கையை துவங்கி விடு ஈஸ்வர், காலம் கடத்தினால் எவ்வித சந்தோஷமும் கிடைக்காமல் போய்விடும்.” என மெதுவாக கூறியபடி சென்றான் கம்பன்.


கம்பன் எதுக்கு எப்பவும் புரியாத புதிராக இருக்கான் என வழக்கம் போல் மனதில் நினைக்க மட்டுமே முடிந்தது ஈஸ்வரனால் வாய் விட்டு கேட்க முடியவில்லை.



தொடரும்...