• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரணே என் பனிமலரே -16

kalaisree

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2024
Messages
31
கிட்டத்தட்ட இரண்டு வருடம் முயற்சிக்கு பிறகு அவர்கள் பள்ளியில் ஆங்கில வழி கல்வியை சேர்ப்பதற்கு அனுமதி கிடைத்தது. என்னதான் அருணாச்சல வேந்தருக்கு அந்த ஊரின் எம்எல்ஏ வரை நன்கு பரிச்சியம் என்றாலும் அத்தனை சுலபத்தில் ஆங்கில கல்வியை சேர்க்க முடியவில்லை.ஏற்கனவே பல அரசு பள்ளிகளிலும் ஆங்கில கல்வியை அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் போது பல காரணங்களால் அவர்கள் ஊர் பள்ளிக்கு மட்டும் சலுகை கிடைக்காமல் போகவே தனது சொந்த பணத்தில் அவர்கள் கூறிய அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து பள்ளி கட்டிடத்தையும் சீர்படுத்தினான். ஆயினும் இரண்டு வருடங்கள் கழித்து இறுதியில் இப்பொழுது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தான்.

ஆனால் சமர்ப்பிக்க வேண்டிய நாள் அவனின் நிச்சயத்திற்கு முதல் நாளாக போய்விட சிறிது தயக்கம் இருந்தாலும் கிடைத்திருக்கும் வாய்ப்பை விட மனமில்லாமல் பனி மற்றும் அருணாச்சலம் வேந்தனிடம் பேச அவர்களும் முழு மனதுடன் சம்மதிக்க சென்னை ஹெட் ஆபீஸ்க்கு சென்றான்.

இரண்டு நாட்கள் அலைச்சலின் பிறகு அனைத்தும் சமூகமாக முடிந்து விட மனநிறையுடன் சென்னை விட்டு கிளம்பினான்.இன்னும் ஒரு நாள் தான் பாக்கி அதற்கு அடுத்த நாள் பனி தனக்கு உரிமையானவளாக மாறிவிடுவாள் என பல இனிய கற்பனை உடன் வந்து கொண்டிருந்தவன் பாதி வழியை கடக்கும் வேளையில் திகழிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று பேசியவன். தன் வண்டியின் பாதையை மலரின் ஊரை நோக்கி செலுத்தினான்.

மலர் காதலை ஒப்புக்கொண்ட உடனே திகழ் தனது அண்ணனிடமும் தாத்தாவிடமும் காதலை உரைத்து விட படிக்கும் வயதில் என்ன இது என சிறு அதிருப்தி இருந்தாலும் அவர்களின் நம்பிக்கையை குலைக்காமல் அவன் பார்த்துக் கொண்டதில் அவனின் காதல் முழுமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.பனி மற்றும் பாட்டியிடம் கூறலாம் என்று கூறியதற்கு கூட பனியுடன் உங்கள் திருமணம் நடந்த பிறகு அறிமுகப்படுத்துகிறேன் என மறுத்து விட ஆண்களும் சம்மதித்தனர்.

மலரை இரு முறை பார்த்திருந்தாலும் இதுவரை நேரடியாக பேசியது இல்லை. பார்த்த அளவில் தம்பிக்கு ஏற்ற துணைவி என்பதில் அவனுக்கு திருப்தியாகவே இருந்தது. இரண்டு நாட்களாக அலைபேசியை எடுக்கவில்லை என திகழ் கலங்கிய குரலில் கூறியதுமே மகிழுக்கும் நெருடலாக இருந்தது.மலருக்கு தாய் தந்தை இல்லை என்று தெரிந்ததிலிருந்து அவளின் மீது ஒரு வித பரிவு ஏற்பட்டு இருந்தது. எனவே வண்டியை விரைந்து செலுத்திய போதிலும் இடையில் ஒரு பெரும் ஆக்சிடென்ட் ஏற்பட்டதில் அதை கடந்து வருவதற்குள் நல்லிரவு ஆகியிருந்தது.

ஊரே முழுவதும் அடங்கியிருக்க தற்போது மலரின் வீட்டின் வெளியே ஜிப்பை நிறுத்தியவனுக்கு சிறிது தயக்கம் தான். எவ்வாறு சென்று விசாரிப்பது என்று புரியாமல் அவன் குழம்பிக் கொண்டிருந்தான். பெரும் கேட் மூடப்பட்டு இருக்க வாட்ச்மேன் இருப்பதற்கான அரவமே தெரியாமல் இருக்க நீண்ட நேரம் வெளியிலே காத்திருந்தவன்.

இரண்டடு கொண்ட அந்த வீட்டின் மாடியில் ஒரு அறையில் மட்டும் விளக்கு விட்டு விட்டு எரிவதை கண்டவனுக்கு ஏதோ தோன்ற கேட்டின் மீது கை வைத்ததும் திறந்து கொண்டது. அதன் பிறகு தயக்கம் காட்டாமல் உள்ளே செல்ல நுழைவாயிலோ பூட்டப்பட்டு இருந்தது. ஐந்து நிமிடம் முயற்சிக்குப் பிறகு சரியாக பராமரிப்பு இல்லாத அந்த தாள்ப்பாழ் திறந்து விடவே உள்ளே நுழைந்தவனுக்கு மாடியில் இருந்து கேட்ட இரஞ்சல் மற்றும் அழுகை சத்தத்தில் விபரீதம் புரிய பதறி அங்கு சென்றான்

அதே நேரத்தில் அவ்வழியே சென்ற சந்திர பாண்டியன் மலரின் வீட்டின் வெளியே நின்றிருந்த கருநிற ஜீப்பை புரியாமல் பார்த்தவன். கேட்டும் திறந்து இருக்கவே சத்தம் இல்லாமல் உள் நுழைந்தான். மகிழ் சத்தம் வந்த அறையில் நுழைந்தபோது கண்டதோ ஒரு மூலையில் உடை எதுவும் இல்லாமல் நடுங்கியபடி இருக்கும் மலரையும் அவளின் முன் மேலாடை இல்லாமல் நின்றிருந்த நான்கு ஆண்களையும் தான்.

நான்கு பேருமே நிதானம் இல்லாமல் அவளிடம் வக்கிரமாக பேசிக் கொண்டிருப்பது புரிய கோபத்தில் கழுத்து நரம்புகள் புடைக்க அவர்களிடம் விரைந்து சென்றவன் நால்வரையும் வெளுத்து வாங்கினான். நால்வரும் திருப்பி அடிக்க பார்க்க காப்பு காய்த்த அவனின் வலிமையான கரங்களைத் தாண்டி அவர்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

அதில் ஒருவன் மட்டும் பதுங்கி அங்கிருந்த தனது போனை எடுத்து ஏதோ செய்து கொண்டிருக்க கோவத்தில் இருந்த மகிழோ அதை கவனிக்காமல் போனான். அப்பொழுது அறைக்குள் நுழைந்த சந்திர பாண்டியன் நடக்கும் கூத்தை ஆழ்ந்து கவனித்தவனுக்கு ஒரு மூலையில் மேலே போர்த்தியிருந்த பெட்ஷீட்டை இறுக பற்றிய படி நடுங்கி கொண்டிருக்கும் மலரையும் சண்டையிட்டுக் கொண்டிருந்த மகிழையும் மற்ற நால்வரையும் பார்த்தவனுக்கு என்ன நடந்திருக்கும் என புரிந்ததும் கண்களில் மின்னல் வெட்டியது.

மூவரையும் வெளுத்து வாங்கியவன் அப்போதுதான் இன்னொருவன் இல்லை என்பது புரிய அவனை கவனித்து அருகில் செல்வதற்கு முன் அங்கிருந்த ஜன்னல் வழியே கீழே குதித்து ஓடி விட மகிழு க்கு ஏதோ நெருடியது.அதே நேரத்தில் குளியல் அறையில் இருந்து வெளிவந்த முத்துப்பாண்டியோ "என்னடா ஓவர் சத்தமா இருக்கு பால்காரன் வர நேரம் சத்தத்தை குறைங்கடா அந்த நாயை என்ன வேணா பண்ணுங்க சத்தம் இல்லாமல் பண்ணுங்க "என லுங்கியை ஏற்றி கட்டிய படி வந்த முத்து பாண்டியனையும் வெளுத்து வாங்கினான்.

மலை மாமிசம் என இருந்தவரை அடுத்து நொறுக்கியதில் ஒரு மூலையில் சென்று முத்து பாண்டியன் விழ அதற்குள் தெளிந்த ராகவனும் அவனின் இரு நண்பர்களும் மகிழை மலரின் புறம் தள்ளிவிட்டு தந்தையை தூக்கிக்கொண்டு ஓட தற்போது மலரின் நிலையே பிரதானம் என்பதால் அவளை கவனிக்க அருகில் செல்ல அவளோ மகிழை கண்டு இன்னும் பதட்டத்தில் சுவரோடு ஒன்றினாள்.

அவளின் அழுகை கன்று சிவந்திருந்த முகம் ஆங்காங்கே இருந்த கீறல்கள் அனைத்தும் மகிழையும் பதற செய்தது. "இங்க பாருமா என்னை பார்த்து பயப்படாதே உனக்கு ஒன்னும் இல்ல நான் திகழோட அண்ணன்" என்ற போதும் அவளின் நடுக்கம் சிறிதும் குறையாமல் இருக்கவே கண்களை மூடி திறந்தவனுக்கு அவளின் நிலையை பார்க்கவே உள்ளம் கலங்கியது.

"இங்க பாருமா எனக்கு திகிழ் பையன் மாதிரி அதே மாறி தான் நீயும் உன்னை நான் பொண்ணா தான் பாக்குறேன் நீ என்னை வேற்று ஆணா பார்க்காமல் உன் அப்பாவா நினைச்சுக்கோ.சரியா இப்போ உன்னோட உடை எல்லாம் எங்கே இருக்கு "என வினாவியவனுக்கு இப்பொழுதே மலரை இங்கிருந்து அழைத்து செல்லும் வேகம். முத்துப்பாண்டியன் கூறியதிலிருந்து ஊர் ஆட்கள் வருவதற்கு முன் இங்கு இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் புரிந்தது."எல்லா துணியையும் தூக்கி போட்டாங்க" என அவமானத்துடன் கூறியவளை பார்த்தவனுக்கு அவளை இந்நிலைக்கு ஆளாக்கிய நால்வரையும் கொன்று போடும் அளவு கோபம் கிளர்ந்தது.

அறையிலையே இருந்த இன்னொரு பெட்ஷீட்டை அவள் மேல் நன்றாக போர்த்திவிட்டு அப்படியே அவளை தூக்க அதில் அவள் உடல் அப்பட்டமாக நடுங்கினாலும் தற்போது இருக்கும் நிலையில் அவளால் நடக்க முடியாது என புரிந்ததாலேயே பாத்ரூமில் இறக்கி விட்டவன். நடந்த எல்லாத்தையும் அந்த தண்ணிரில் கரைச்சிட்டு வா மலர் எனக் கூறி வெளியே வந்தவனுக்கு என்ன செய்வதென்றே புரியாத நிலை.

திகழிடம் தற்போதே கூற வேண்டிய அவசியம் புரிந்தது. அதற்குள் மலரின் அலறல் சத்தத்தில் பதறி அறைக்குள் நுழைந்தவன் அங்கிருக்கும் சந்திர பாண்டியனை கண்டு புரியாமல் கோபத்துடன் முறைக்க அவனோ முகம் கை கால் கழுவி விட்டு வந்த மலரை தான் ஏளனமாக பார்த்தபடி "நடந்த எல்லாத்தையும் நான் பாத்துட்டேன்".

இங்கு நடந்த எதுவும் யாருக்கும் தெரிய கூடாதுன்னு நினைத்தால் ஏய் மலரு புள்ள ஒழுங்கா என்ன கல்யாணம் பண்ணிக்கோ இல்லைன்னா அந்த நாலு பேரையும் கூட்டா வச்சு இதை இவன் தான் பண்ணினேன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன். இந்த ஊருக்குள்ள என் செல்வாக்கு என்னனு உன் அத்தை கிட்ட கேளு சொல்லுவா பொம்பளை சொல்லு இந்த ஊருக்குள்ள அம்பலம் ஏறாதுன்னு தெரியும் தானே " என்று இளக்காரமாக கூறி முடிப்பதற்குள் மகிழ்விட்ட அறையில் அப்படியே தரையில் சரிந்தான். அப்பொழுதும் அவன் பேசிய வார்த்தைகளால் உண்டான கோபத்தில் விடாமல் அடிக்க மலரோ நடுங்கிய உடலை திட படுத்த முடியாமல் அப்படியே அமர்ந்தவளுக்கு கண்ணீர் விடாமல் பெருகியது.

அத்தனை அடிகளை வாங்கிய போதும் விடாமல் "ஹே நான் சல்லி பையன் தான் ஆனால் ஒரு நாலு பேரை சேர்த்தப்படி நான் சொன்னால் இந்த ஊரே கேட்கும் இங்க நடந்ததை அப்படியே சின்னதா மாத்தி சொன்னனேனா போதும் உங்க ரெண்டு பேரோட மானமும் கப்பல் ஏறி போயிடும்.. அடியே அவனுங்க சீரழிச்ச உடம்பு தானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டால் கௌரவமாவது வாழலாம். இல்லை உங்க ரெண்டு பேரையும் சந்தி சிரிக்க வெச்சிடுவேன் "என கூறவும் அவன் வாயிலே மிதித்த மகிழ் "சில்லற பையன் நீ என்னை மிரட்டுறியாடா? "என எகிற சில்லற பையன் தான் ஆனால் இந்த ஊர்ல என் பேச்சு எடுபடும் நாதன் பொண்ணு நாசமா போனதை கேட்டு ஊரே சிரிக்கட்டும்" வலியிலும் இளக்கரமாக சிரிக்க அவனை அப்படியே போட்டுவிட்டு மலரின் அருகில் வந்த மகிழோ " நீ அவன் சொல்றதெல்லாம் காதிலே வாங்கிக்காத உன்னை பத்திரமா கூட்டிட்டு போறது என்னோட பொறுப்பு. இங்கு நடந்த எதுவும் யாருக்கும் தெரியாது. என் தம்பி உனக்காக காத்துட்டு இருக்கான் உனக்காக நாங்க இருக்கும் பயப்படாதே "என அவளின் அருகில் செல்ல போக மலரோ பதறி அறையின் மூலையின் ஒடுங்கிக் கொள்ள அவளின் அருகிலே செல்ல முடியவில்லை.

அப்படியே மண்டியிட்டு அமர்ந்தவள் ஏதோ முணுமுணுக்காகவும் அவளின் அருகில் மெல்ல சென்றவன். காதுகளை கூர்மையாக்க "இந்த அசிங்கம் பிடித்தவ என் பாவாவுக்கு வேண்டாம் நான் வேண்டாம். அசிங்கம் நான் அசிங்கம் என்னோட திகழுக்கு நான் தகுதியில்லாதவளா மாறிவிட்டேன் "என முணுமுணுத்துக் கொண்டவள் வெறிவந்தது போல் சாய்ந்திருந்த சுவற்றிலே பின்ன தலையை அழுத்தமாக விடாமல் மோத ஆரம்பிக்க பதறி அவளின் அருகே சென்று அவள் தலையை சுவரில் படாமல் தடுத்து நிறுத்தி அவளை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றானது.

"பைத்தியமா பிடிச்சிருக்கு ஏன் இப்படி நடந்துக்கிற மலர் எதுவா இருந்தாலும் பொறுமையா பார்த்துக்கலாம்.உன் மேலே எந்த தப்பும் இல்லை "என அழுத்தமாக அவளின் மூளையில் பதிக்க பார்க்க அவள் விழிகள் ஒரே இடத்தை வெறித்த படி அப்படியே இருக்க அவள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்தான்.

அவளை எவ்வாறு சமாளிப்பது என்று புரியாமல் குழம்பி போனான். அவளையே பார்த்துக் கொண்டிருந்த பொழுதில் அவள் எதையோ எடுத்தவள் கழுத்தில் குத்திக் கொள்ள போக நொடியில் சூதாரித்து அவள் கரம் கழுத்தை தொடும் முன்னே தடுத்து அவள் கையை அழுத்தமாக பிடித்து முறுக்கியதில் உள்ளங்கையில் மறைத்து வைத்திருந்த கூர்மையான பீங்கான் துண்டு தூரம் போய் விழுந்தது. மலரை அதிர்வுடன் பார்க்க அவளோ " நான் வாழவே மாட்டேன் எனக்கு வேண்டாம் இந்த அசிங்க புடிச்ச உடம்பு வேண்டாம் என்னை விடு விடு "என அவன் மார்பை சரமாரியாக தாக்கினாள்.போர்த்தியிருந்த போர்வை விலகியதை கூட உணராமல் அந்த பீங்கானை தூண்டை எடுப்பதிலே குறியாக இருக்க நழுவிய போர்வையை அவள் உடலோடு இருக்க கட்டியவனின் கண்களோ கலங்கியது.

அவளோ ஏதேதோ பிதற்றி கொண்டே தலையை முட்டிக் கொள்வது கரங்களை கீறி கொள்வதாக இருக்க அவளை சமாளித்து நிலைப்படுத்தவே அவனுக்கு அரை மணி நேரம் மேலானது. இறுதியில் அவளின் ஒரே உறவு தன் தம்பி என்பது புரிய "நீ செத்துட்டா என் தம்பி சந்தோஷமா வாழ்ந்துருவானா அவனும் உன் கூடயே வந்துருவான் பரவாயில்லையா அவனும் செத்துப் போறதை தான் நீ விரும்புறியா?" என அதட்ட அப்பொழுது தான் திகழைப் பற்றி எண்ணியவள் மலக்க மலக்க விழித்தவள்.கால்கள் இடையே முகத்தை புதைத்து கொண்டு கதறியழ ஆரம்பித்தாள்.
 
Top