• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
"அப்பா இந்த ஒரு முறை மட்டும் பெர்மிசன் குடுங்க பா… இனி ரொம்ப தொலைவு வேலை எல்லாம் ஒத்துக்க மாட்டேன் பா ப்ளீஸ்…." அவ்வீட்டின் செல்ல மகள் அம்மு தகப்பனிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டு இருந்தாள்...

"அம்மு இது தான் கடைசி முறை இப்டி வெளிய ஊர் போறதெல்லாம்…" கோவமாக ஒத்துகொள்வது போல் ஒத்துக்கொண்டார் மூர்த்தி...

"சரிப்பா.." வாயெல்லாம் பல்லாக சிரித்துக்கொண்டே கூறினாள்...

"சரி அந்த பொடிப்பய உன்கூட வர்ரான் ல…" அடுத்த கேள்வியை கேட்டுவிட்டு மிதப்பாக மனைவியை பார்த்தார் மூர்த்தி...

"ஆமா பா சீனு வராம எனக்கு வேலையே ஓடாதே… " அழகான புன்னகையுடன் கூறினாள்…

"ஹ்ம்ம் ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க… வரும் போது சாக்லேட், தைலம் எல்லாம் வாங்கிட்டு வா…" இதை கூறிவிட்டு காதலாக மனைவி தனத்தை பார்த்தார் மூர்த்தி...

ஒன்றும் அறியாதவள் போல் "யாருக்கு பா" என கேள்வி கேட்டாள் மகள்...

"ஹ்ம்ம் எல்லாம் உங்க அம்மாக்கு தான்… ஏற்கனவே மலை ஏறி உட்கார்ந்து இருக்கா கோவத்துல… இதெல்லாம் வாங்கி குடுத்து கூல் செஞ்சிடு…" தனத்தை பார்த்துக்கொண்டே பேசினார்…

அங்கிருந்து இன்னும் எந்த ரியாக்ஷனும் வராததில் குழம்பி இருந்தனர் இருவரும்..அதனால் அம்மு சட்டென...

"ஹாஹாஹா அப்பா ஒரு சூப்பர் ஐடியா இருக்கு என்கிட்ட ரெண்டு பேரும் என்கூட வாங்க ஊட்டிய சுத்தி பாருங்க… நா என் வேலையை பாக்குறேன் எப்புடி?" என கேட்டுவிட்டு தாயை தான் பார்த்தாள்

"ஹ்ம்ம் இது கொஞ்சம் நல்ல ஐடியா மாதிரி தான் தெரியுது ஆனா அவ ஒத்துக்கணுமே…" சோகம் போல் கூறினார் மூர்த்தி..

"அதெல்லாம் உங்களால முடியும் பா…" கண் அடித்து கூறினாள்..

"ஹேய் வாலு, எங்களையே ஓட்டுறியா நீ… இரு உன் அம்மா கிட்ட சொல்லி உன்னை என்ன செய்றேன் பாரு…" என கூறி அவளின் காதை திறுகினார்...

"தெய்வமே என்னை விட்டுடுங்க… உங்க ரொமான்ஸ்க்கு நா குறுக்க வரமாட்டேன்… ஓகே ன்னா சொல்லுங்க தட்கல் போடறேன்…"

"நா பேசிட்டு சொல்றேன் டா அம்மு…" என தனத்தை பார்க்க….

"யாரும் என்கிட்ட சமாதானம் பேச வேண்டாம்… இது தான் கடைசி இவ வெளிஊர் போறது அப்டினா இந்த பிளான்க்கு நா ஓகே சொல்றேன்…." ரொம்பவும் பிகு செய்யாமல் ஒத்துக்கொண்டார் தனம்...

எப்படியும் பேசி கெஞ்சி கொஞ்சி என ஏதாவது செய்து ஒத்துக்கொள்ள வைத்துவிடுவர் என தெரியும் தனத்திற்கு …

ஏனென்றால் இதுபோல் பல முறை நடந்து உள்ளது இவ்வீட்டில்…எப்பொழுதும் மகளுக்கு இருவருமே நோ சொல்லியது இல்லை...

"அம்மான்னா அம்மா தான்…" என கன்னம் கிள்ளி கொஞ்சி பேசினாள் மகள்…

"போடி… சீக்கிரம் உனக்கு கால் கட்டு போட்டு வீட்ல உட்கார வைக்கணும்…" என தனம் பேசிய நொடி...

"ஹாஹாஹா நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது…"

அம்முவும் மூர்த்தியும் ஒன்றாக கோரஸ் பாடினர்….

ஏனென்றால் அவள் தொழிலில் முழுதாக ஈடுபட அவர் தான் காரணம்… அவரே அவளை முடக்கி போட எண்ணுவாரா என்ன?

இதெல்லாம் அடிக்கடி வீட்டில் நிகழும் சம்பவங்கள்…

அளவான அழகான சிறிய குடும்பம் அம்முவினுடையது…

அந்த நேரம் சீனுவும் வந்து சேர்ந்தான்… இவளின் ராயல் என்பீல்ட் உடன்…

"வண்டி சர்விஸ் எடுத்திட்டியா? ஒன்னும் பிரச்சனை வராதுல… மலை மேல ஏறணும் டா…" என தன் காதல் வாகனத்தை தடவிய படி பேசினாள்

"அதெல்லாம் சூப்பர் ஹா ரெடி கா… இமயமலைக்கே போகலாம்கா இதுல…" சீனு அவளின் வடக்கை…

படித்து முடித்து வேலை தேடிக்கொண்டு இருந்தவனை அதுவும் ஒருநாள் சாப்பிடாமல் மயங்கி கீழே விழுந்து கிடந்தவனை மருத்துவமனையில் சேர்த்த பொழுது டாக்டர் கூறிய பசி மயக்கம்… இவளின் மனதை உளுகியதால் இன்று இவளுடன் சீனு… அவனின் குடும்பத்துக்கு இவனின் சம்பளம் மட்டுமே ஆதாரம்…

தாய் தந்தை இருவருமே வயதானவர்கள்... அக்கா ஒருவள் திருமணம் முடிந்து வெளி ஊரில் உள்ளாள்…

அவன் கூறிய இமயமலை அம்முவின் கண் முன் வந்து போனதும்...

"ஆசை தான் டா போகணும்னு.. ஒருநாள் நிறைவேத்திடலாம் டா…" கனவுகள் சுமக்கும் கண்களுடன் கூறினாள்...

"ஹாஹாஹா சரி கா… ஆமா அம்மா ஏன் என்னை இவ்ளோ பாசமா பாத்து வைக்குறாங்க கா…." தனம் சீனுவை முறைத்ததை தான் கூறுகிறான்...

"அதுவா அவங்க ட்ரெயின்ல ஊட்டி வராங்க.. நாம மட்டும் பைக்ல போறோம்ல அந்த பொறாமைல உன்னை பாசமா பாக்குறாங்க… வா நாம எஸ்கேப் ஆகிக்கலாம்… வேலை நிறைய இருக்கு…."

இதுதான் அம்மு என எந்த வரைமுறைக்குள்ளும் திணிக்க முடியாத பெண்…அப்பா மூர்த்தி ஒரு அலுவலகத்தில் மார்க்கெட்டிங் துறையில் துணை மேலாளராக இருந்தவர் இரு வருடத்திற்கு முன் தனத்திற்கு உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட வேளையில் இருந்து விலகி விட்டார்…

மனைவிக்கும் பெண்ணுக்கும் எல்லாவற்றிலும் துணையாக இருந்து வருகிறார்…

"அக்கா ஸ்டூடியோல இருக்க பொண்ணு இன்னைக்கு லீவ் சொல்லுச்சு கா…" என அன்றைய தின அலுவல் பற்றி பேச தொடங்கினான் சீனு ...

"ஏன்டா என்னவாம்…"

"தெரியல கா… குரல் ஒன்னும் சரி இல்ல அதுக்கு…"

"ஹ்ம்ம் வரட்டும் பாத்துக்கலாம்…"

என பேசிக்கொண்டே வெளியில் வந்து தன் முதல் காதலனை தொட்டு தடவி ஒரு ஆழ்ந்த மூச்சு இழுத்து விட்டு ஒரே உதையில் அதை கிளப்பினாள்…

"டேய் சீனு.."

"சொல்லுங்க கா…"

"டிஸ்பிலேல இருக்க பிக்ஸ் எல்லாம் மாத்து டா இன்னைக்கு… ரொம்ப பழசா இருக்கு… இன்னைக்கு டெலிவரி குடுக்க வேண்டிய ஆல்பம்க்கு எல்லாம் கஸ்டமர் கால் பண்ண சொன்னேனே செஞ்சியா?"

"சரி கா செஞ்சிடறேன்….அப்புறம் நேத்தே சொல்லிட்டேன் கா… பெரும்பாலும் நாம ஊட்டி போகும் முன்னாடி டெலிவரி எடுக்க வேண்டிய எதுவும் நம்ம கைல இருக்காது…"

"அதுக்குன்னு காசு வாங்காம குடுத்துட போற டா…"

"ஹாஹாஹா கைல காசு வாயில பீசு.. நா பாத்துக்கறேன் கா…"

"ஹாஹாஹா சரி தான்…

"அக்கா…"

"என்ன டா.. இழுக்கற…."

"அது ஊட்டி ட்ரிப் ஏன் கா இத்தனை நாள் ஒத்துக்கிட்ட.,.. இதனால எவ்ளோ அவசரமா வேலை செஞ்சிட்டு இருக்கோம்…"

"சீனு இது ஒரு பெரிய பணக்கார வீட்டு பொண்ணு கல்யாணம் டா… இந்த மாதிரி ஆடர் எல்லாம் நமக்கு வர்றது பெரிய விஷயம் டா…."

"அதான் கா என் டவுட்… ஊட்டில இருக்க அவ்ளோ பெரிய பணக்காரவங்க… இந்த சென்னைல குரோம்பேட்டை ல இருக்கற இந்த குட்டி ஸ்டூடியோவ கண்டுபிடிச்சி வந்து ஆடர் கொடுக்கறாங்கன்னா என்னவா இருக்கும்ன்னு மண்டை காயுது கா…"

"நீ யோசிக்கும் போது நா யோசிக்க மாட்டேனா டா… கல்யாண பொண்ணோட பிரண்ட் கல்யாணத்துக்கு நம்ம தான் போன மாசம் பிக்ஸ் அண்ட் வீடியோ எடுத்தோம்… அவங்க சொல்லி இவங்க வந்து இருகாங்க…

அதுவும் இல்லாம நம்மள மீறி என்ன நடந்துட போகுது… இப்டிலாம் பயந்து ஒரு இடமா இருக்க கூடாது டா…"

முகத்தை ஒரு மாதிரி வைத்து கொண்டு "சரிக்கா…உங்க பிரண்ட்ஸ்யும் வரங்களா?"

"ஆமான்டா… வீடியோ எடுக்க ஆள் வேணும் டா… பிக்ஸ் நா எடுத்துப்பேன்… ஆனா கல்யாணத்துக்கு வீடியோ கண்டிப்பா வேணுமே… அதான் கூப்டு இருக்கேன்… அவங்களும் பைக்ல நம்ம கூட தான் வராங்க…"

"என்னவோ கா… எனக்கு அவங்களை பிடிக்கவே இல்ல…" அதை அப்டியே முகத்தில் காண்பித்தான் சீனு

"அவங்க ரெண்டுபேரும் எப்படியோ ஆனா வெளிய வந்துட்டா அவ்ளோ ப்ரோபசனல் ஹா பிஹேவ் பண்ணுவாங்க டா.."

பேசிக்கொண்டே தனம் ஸ்டூடியோ வந்து சேர்ந்தனர்…

ஆம் தாயின் பெயரையே ஸ்டூடியோவிற்கு வைத்து தாயை பெருமை கொள்ள செய்தாள் அம்மு… அதையும் விட கடந்த இரண்டு ஆண்டுகளில் இவளின் வளர்ச்சி நிலையானது… ஒரேடியாக மேலே செல்லவும் இல்லை… வேலை இல்லை என சோம்பி இருக்கவும் இல்லை…

எப்பொழுதும் ஏதாவது சிறிய நிகழ்ச்சியாவது இருந்து கொண்டே இருக்கும்…

தொழில் பக்தி நேர்த்தி என எதிலும் குறை காண முடியாது அம்முவிடம்…

ஸ்டூடியோவில் இருக்கும் வேலைகளை சீனுவிற்கு விளக்கி விட்டு தன் கேமராவை சர்விஸில் இருந்து எடுக்க டி நகர் சென்றாள்…

பைக் சர்விஸ் எடுக்க சீனுவை அனுப்பும் அம்மு… கேமராவை எப்பொழுதும் தன் கை அணைப்பில் வைத்து கொள்ளுவாள்…

பைக் காதலன் என்றால், கேமரா தான் எல்லாமே…

சர்விஸ் சென்டர் போய் சேர்ந்தாள்…

"வாங்க மேடம் உங்க கேமரா ரெடியா இருக்கு… டெஸ்ட் பண்ணி எடுத்துக்கோங்க… ஓனர் நீங்க வந்தா சொல்ல சொன்னாரு இருங்க சொல்லிட்டு வர்றேன்…"என உள்ளே ஓடினான் கடை பையன்

"கேமரா குடுத்துட்டு போங்க…"

"இந்தாங்க மேடம்.."

"ஹ்ம்ம்"….என கையில் வாங்கி கேமராவை ஒவ்வொரு சிறப்பு தகுதிகளையும் ஒவ்வொரு கிளிக் செய்து செக் செய்ய தொடங்கினாள்…

"ஹாய் அம்மு…"
ரவியின் ஆர்ப்பாட்டமான அழைப்பில் புன்னகையுடன் திரும்பி பார்த்தாள் அம்மு…

"ஹாய் ரவி… சர்விஸ் பக்கா…"கட்டை விரலை தூக்கி காட்டி புன்னகை செய்தாள் அம்மு…

"இல்லனா உங்களை மாதிரி பெரிய பெரிய கஸ்டமர் கிடைப்பாங்களா?' பவ்யமாக கைகளை கட்டிக்கொண்டு கேட்டான் ரவி …

"உனக்கும் தெரிஞ்சி போச்சா? எப்படி பா ஒரு விஷயம் இப்டி காட்டு தீ மாதிரி பரவுது…" ஆச்சர்யம் போல் பாவனை காட்டி கேட்டாள்…

"ஹாஹாஹா எல்லாம் உன்கூட ஒரு ஓட்ட வாய் வச்சி இருக்கியே அவனின் உபயம் தான்…."

"அது சரி… அவன் உன்கிட்ட சொல்லலன்னா அதிசயம்… அப்படி என்னடா செஞ்ச.. அவன் உனக்கு கொடி சின்னம் எதுவும் இல்லாமையே உன்னை புகழ்ந்துகிட்டு இருக்கான்….
நீ எனக்கு பிரண்ட் ஹா இல்ல அவனுக்கான்னு சில சமயம் எனக்கே டவுட் வருது…"

"ஹாஹாஹா என்னவோ அவனுக்கு என்னை பிடிச்சி இருக்கு… விடு எனக்கும் கூட பிறந்தவங்கன்னு யாரு இருக்கா… அவன் தான் அண்ணா அண்ணான்னு கூப்டுகிட்டு இருக்கான்…"

"சரி சரி நோ செண்டிமெண்ட்ஸ்… அம்மா உன்னை வீட்டுக்கு வர சொன்னாங்க அப்புறம் போய் பாரு… எனக்கு வேலை இருக்கு… நாளைக்கு மார்னிங் ஊட்டி கிளம்பனும்….என்னமோ ஒருமாதிரி எக்சைடேட் ஹா இருக்கு…"

"ஏன்…?"

"தெரியல… அதான் அதையும் அனுபவிக்கலாம்னு விட்டுட்டேன்… ஆராய்ச்சி எல்லாம் பண்ணல…"

"சரி என்னை வண்டில ஏத்திக்கோ பக்கத்துல ஒருவேலை இறங்கிக்கறேன்…"

"வண்டிய தான் டா உன்மேல ஏத்தணும், உன்னை எல்லாம் வண்டில ஏத்த கூடாது…" சிரியாமல் கூறினாள் அம்மு..

"ஹீஹீஹீ ஜோக் தான சிரிச்சிட்டேன் வண்டிய எடு…"

அட கஞ்சபயலே எனும் பாச பார்வையை அவனின் மீது வீசி வண்டியை கிளப்பினாள்..


அதே நேரம் ஊட்டியில் :

"யேய் இப்ப எதுக்கு கண்ண கசக்கி கிட்டு இருக்க…" உதய் தன் தங்கையை அதட்டி கொண்டு இருந்தான்…

"நீ அவங்கள எதுவும் செஞ்சிட மாட்டியே…" கொஞ்சம் பய பார்வையுடன் கேட்டாள் சிந்து …

"நல்ல எண்ணம் தான் உன் அண்ணன் மேல… அவள ஏதாவது செஞ்சா அவ அண்ணன் எனக்கு சங்கு ஊதிடுவான்…அப்டித்தான மாப்ள…?" என அருகே அமர்ந்து இருந்த யுவராஜ் ஆன தங்கை கணவனிடம் கேட்டான் உதய்…

"கண்டிப்பா செய்வான் மச்சான் அவன்…" யுவராஜ் தீர்கமாக உரைத்தான்…

"உங்க ரெண்டு பேரையும் ஏத்துக்க சொல்ல தான் இந்த பிளான்.. வேற ஒரு இன்டென்ஷன்யும் இல்ல எனக்கு இத நீங்க கண்டிப்பா நம்பனும்…"

"ஹேய் உன்னை நம்பாம இல்ல… அவங்க கொஞ்சம் ஒரு வார்த்தை அதிகம் பேசினா கூட உனக்கு கோவம் வருமே அதான் என் பயம்…" என சிறிதான குரலில் கூறினாள் சிந்து…

"அவ என்ன அவ்ளோ பெரிய ஆளா? அதையும் பாக்க தான போறேன்…"

"இதோ இதோ இந்த பேச்சு தான் எனக்கு பயம் தருது அண்ணா…"

"சரி சரி பயப்படாத… அவளை கன்வின்ஸ் பண்ணி இங்க கூட்டிட்டு வர்றது மட்டும் தான் என் வேலை அப்புறம் நீங்க தான் பேசி சமாதானம் ஆகிக்கணும்…"

"சரிண்ணா…"

"ஹ்ம்ம் அவளை பாத்து எத்தனை வருஷம் ஆச்சு… இப்போ எப்படி இருக்கானு எப்படி தெரியும் எனக்கு… போட்டோ ஆச்சும் குடுக்கலாம்ல…" மாப்பிள்ளையிடம் கேட்டான் உதய்…

"நீ போய் நின்னினா அவளே உன்னை போட்டோ எடுப்பா மச்சான்…"

"ஹாஹாஹா ஆமால நானே போய் கண்டுபிடிச்சி பேசிக்கறேன்…."

இவன் உதயணன்… ஊட்டியில் ஒரு ஹோட்டலை லீஸ்க்கு எடுத்து நடத்தி கொண்டு இருக்கிறான்… பெற்றோர் கடந்த வருடம் கடந்து விட்டதால் இவன் அவனின் கனவுகளை விடுத்து இங்கே வந்து முதலில் இருந்து தன் தொழிலை தொடங்கி இருக்கிறான் தன் தங்கைக்காக...

பாசக்கார அண்ணன்… யுவராஜ் அவனின் மாப்பிளை.. சிறு வயதில் அக்கம் பக்கம் வீட்டினர் இவர்கள்… சிந்து தான் உதயணின் தங்கை…

மருநாள் மாலை ஊட்டியில் அந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டாண்டிங் கேமராவில் மணமக்களின் ஒவ்வொரு மகிழ்ச்சியையும் தெளிவாக உள்வாங்கி பதிந்து கொண்டு இருந்தாள் அம்மு…

சீனு லைட்டிங் மற்றும் அட்டை பிடிப்பது போன்ற உதவி வேலைகளை செய்து கொண்டு இருந்தான்… எந்த வேலைக்கும் அம்மு அவனை இதை செய் அதை செய் என கூறாமலே அவள் கண் அசைவில் செய்பவன்…

வீடியோ கவரேஜ்க்கு இரு நபர்கள்.. இருவருமே இவளின் தோழர்கள் தான்…

நல்ல தோழர்களாக இருந்தவர்கள் வாழ்க்கையிலும் இனைந்து வாழ்கிறார்கள்…. வசந்த் மற்றும் ஆகாஷ்…

அடிக்கடி செவி வழியாக எங்கு என்ன நடக்கிறது எப்படி கவரேஜ் செய்ய வேண்டும் என்பதை கான் கால் மூலமாக பேசி கச்சிதமாக செய்து கொண்டு இருந்தனர் அம்முவின் குழு….

அடிக்கடி அவர்களுக்கு தேவையான குடிக்க சாப்பிட கொடுக்கவும் ஏற்பாடு செய்து விடுவாள்.. பசியோடு நிற்கவோ வேலை செய்யவோ கூடாது அவளுக்கு…

"மிஸ்.அருணா ரெண்டு பேரும் ரொம்ப டையர்ட் ஹா தெரியறீங்க… கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்டியே டச் அப் பண்ணிட்டு வாங்க…"

"நாங்களும் இத யார்னா சொல்வாங்களான்னு இருந்தோம் மேம்… தேங்க்ஸ்…" மணமகள் லேசாக அம்முவை அணைத்து விடுவித்தாள்…

"ஹ்ம்ம்" என ஒரு மென்சிரிப்புடன் தன் கேமரா முன் அமர்ந்து எடுத்ததை பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது…

"அம்மு….அம்மு தான நீ…" என உதய் அம்முவின் முன் சென்று நின்றான்…

"ஹான்"… என சட்டேனே நிமிர்ந்து பார்த்தவள் அவனை எதிர்பார்க்கிவில்லை என்பதை மட்டும் முகத்தில் காட்டி "ஹாய் உதய்"… என கூறி இருந்தாள்…

"வாவ் அம்மு உனக்கு என்னை நியாபகம் இருக்கா?" உண்மையான ஆர்ச்சர்யம் உதயனிடத்தில்…

ஏனென்றால் தெரிந்தாலும் தெரியாதது போல் இருந்துவிடுவளோ என எண்ணி தான் வந்து இருந்தான்…

"மறக்க கூடிய அளவுக்கு நம்ம பழக்கம் இல்லனு நினைக்கறேன்… ஓ ஒருவேளை நீ மறந்துட்டியோ?"

"அடடா மறந்து இருந்தா தேடி வந்து இருப்பேனா?"

"சோ நா இங்க இருக்கேன்னு தெரிஞ்சி தான் வந்து இருக்க…"

"ஹ்ம்ம் புத்திசாலி தான்…"

"ஏன் எப்பவாவது நா முட்டாளா இருந்ததை நீ பாத்து இருக்கியா?"

"நீ இப்டி பேசற ஆள் கிடையாதே…"

"நம்மளோட பேச்சை எதிர்க்க இருக்கறவங்க தான தீர்மானம் செய்றாங்க…"

"உண்மை தான்"…என அவள் கூறுவதை ஏற்றுக்கொண்டு "நா எதுக்கு வந்தேன்னு கேட்கவே இல்லியே…"?

"வந்துட்டு எதுக்கு வந்தேன்னு சொல்லமையா போக போற… ஆனா எனக்கு இப்போ டைம் இல்ல… உன் போன் நம்பர இதோ இவன் கிட்ட குடு… நாளைக்கு நானே கால் பண்றேன்…." என சீனுவை கை காட்டி விட்டு விட்ட இடத்தில் இருந்து பணியை தொடங்கினாள் அம்மு…

"ஹ்ம்ம் சரி…" என உதய் அவ்விடம் விட்டு நகர்ந்து சென்று மாப்பிளையிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றான்…

உதயணின் எண்ணம் ஈடேருமா? அம்மு அவனுக்கு ஈடு கொடுப்பாளா?

தொடரும் மூன்றாவது கண்…

















 

ஆனந்த ஜோதி

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
92
அருமை சிஸ்டர்,

அழகான ஆரம்பம். சரியான குறும்புக்கார பொண்ணு போலத் தெரியுது அம்மு.

உதய் என்ன அங்கே சீறி விட்டு, இங்கு வந்து இப்படி பேசுறான்.

சம்திங் சம்திங் ...
 

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
அருமை சிஸ்டர்,

அழகான ஆரம்பம். சரியான குறும்புக்கார பொண்ணு போலத் தெரியுது அம்மு.

உதய் என்ன அங்கே சீறி விட்டு, இங்கு வந்து இப்படி பேசுறான்.

சம்திங் சம்திங் ...
ஹாஹாஹா ஆமா சம்திங் 😜
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,939
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️ நல்ல சுறுசுறுப்பு அம்மு
inCollage_20220318_042832449.jpg
inCollage_20220318_042832449.jpg
 
Top