• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
சுமதியின் தந்தை அவளை விட்டு பிரிந்து சென்று ஒரு வாரம் ஆகி இருந்தது….

இந்த ஒரு வாரத்தில் அனைவருக்கும் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தேறியது…அது பிடித்தமோ இல்லையோ மாற்றங்களை மீற முடியாமல் அவரவர் ஓடிக்கொண்டு இருந்தனர்…

சுமதியின் தந்தை இறந்த அன்று வந்து அவளை மடி தாங்கியவள் இறுதி சடங்குக்கு ஆகும் செலவையும் தன் வசம் ஆக்கி இருந்தாள்…

ரவி சீனு இருவரும் அவள் சொல்லும் ஒவ்வொன்றையும் செய்து முடித்தனர்…

ஆயிற்று அனைத்தும் முடிந்து சுமதியின் தந்தை இறுதி யாத்திரையின் பொழுது பெண்கள் இடுகாட்டிற்கு செல்ல கூடாது என கூறிய எவர் வார்த்தையையும் செவிமடுக்காமல் சுமதி அம்மு இருவருமே சென்று அனைத்து காரியங்களையும் செய்தனர்…

அம்மு வீட்டிற்கே செல்லவில்லை…

சிந்து யுவா உள்ளிட்ட அனைவரும் வீடு வந்து சேந்தனர்…அவர்களுக்காக வீட்டை சுத்தம் செய்து அறையை காலி செய்து என அனைத்து ஏற்பாட்டையும் செய்து வைத்து இருந்தாள் அம்மு…

இன்னமும் சிந்துவுடன் அம்முவுக்கு பேச நேரம் அமையவில்லை… அமைத்து கொள்ளவில்லையோ?

சுமதியுடன் இரு தினங்கள் கழிந்த நிலையில் வீடு திரும்பினாள் அம்மு…

"அம்மு"...

"சொல்லுங்க அப்பா"

"இப்போ எப்படி இருக்கா சுமதி"?

"இப்போ பரவாயில்ல பா…இருங்க கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வர்றேன்…"

என உள்ளே செல்ல போனவளை நிறுத்தி தனம்
"அம்மு உனக்கு டிபன் ரெடியா இருக்கு போட்டு சாப்பிடு…நா கொஞ்சம் வெளிய போய்ட்டு வர்றேன்.."

"எங்கம்மா நா கூட்டிட்டு போகவா?" வழக்கமாக எங்கு செல்வதாக இருந்தாலும் தனத்திற்கோ மூர்த்திக்கோ அம்மு வேண்டும் அதிலும் அவளின் என்பீல்ட் வேண்டும்…

"இல்ல அம்மு யுவா கூட்டிட்டு போறேன் சொன்னான்" கொஞ்சம் தயக்கமாக கூறினார்

"ஓ சரிம்மா…" அவள் இருந்த அசதிக்கு எதையும் யோசிக்காமல் கூறினாள் அம்மு…

"சிந்து தூங்குறா எழுந்தா அவ கிட்ட கொஞ்சம் பேசிட்டு இரு…புரியுதா அம்மு?" அங்கு சோபாவில் அமர்ந்து இருந்த யுவாவை கண்களில் காட்டி கூட்டினார் தனம்…

"புரியுதும்மா…நா பாத்துக்கறேன்…நீங்க போய்ட்டு வாங்க…"

அம்மு சாப்பிட்டு ஒரு தூக்கம் தூங்கி எழும் வரையிலும் சிந்து எழுந்துகொள்ளவே இல்லை…

அம்மு இரு முறை சென்று பார்த்து வந்தாள்…

திடீரென ஒக்கரிக்கும் சத்தத்தில் சிந்துவின் அறைக்கு ஓடி சென்று பார்த்து அவளுக்கு தேவையானதை கேட்டு செய்து கொடுத்தாள்…

"தேங்க்ஸ் அம்முக்கா…" சிந்து முகத்தை துடைத்தவாறு கூறினாள்

அம்மு சிந்துவை விட இரு வயது பெரியவள்.. யுவாவை விட நான்கு வயது சிறியவள்…

"ஹே பரவாயில்ல உடம்பு முடியாத போது ஹெல்ப் பண்றதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லணும்னு இல்லை.. அதுவும் இப்போ நாம ஒரே குடும்பம்…" சாதாரணமாக உரைத்தாள்

"நீங்க ரொம்ப நல்லவங்க அதான் எதையும் மனசுல வச்சிக்காம செயிரிங்க பேசுறீங்க…ஆனா நா அப்படி இல்லைல…சாரிக்கா…."

"நீ ரொம்ப யோசிக்காம ரெஸ்ட் எடு உனக்கு ஜூஸ் கொண்டு வர்றேன்…குடி தெம்பு வரும் அப்போ பேசலாம் சரியா?"

"ஹ்ம்ம்" …"தட்ஸ் குட்" என அவளின் தோளில் தட்டி சென்றாள் அம்மு…

இவ்வாறாக ஓரளவுக்கு சிந்து குடும்பத்தில் இணைந்துகொண்டாள்…

ஒரு வாரம் கழிந்த நிலையில் சிந்துவின் உடல்நிலையில் வெளியில் தெரியும் அளவிற்கு நல்ல முன்னேற்றம் வந்து இருந்தது…

இப்பொழுது தான் அவளுக்கு யார் யார் வீட்டில் என்னென்ன செய்கிறார்கள் என உற்று நோக்கவே ஆரம்பித்து இருந்தாள்…

அம்மு பெரும்பாலும் சாப்பிடவும் தூங்கவும் மட்டுமே வீட்டிற்கு வருகிறாள்…அதுவும் சில இரவுகளில் வீட்டிற்கே வருவதில்லை என்பதும் தெரிந்து கொண்டாள்…

"அத்தை…"

"என்னம்மா?"

"அம்மு அக்கா எங்க இன்னும் வரல வீட்டுக்கு?"

"அவ சுமதி வீட்டுக்கு போய் இருக்காம்மா…"

"எங்க அந்த ஏரியாக்கா அத்தை? நீங்களாவது சொல்ல கூடாதா?" முகத்தை ஒருமாதிரியாக வைத்துக்கொண்டு கூறினாள் சிந்து

"ஏரியால என்ன இருக்கு.. அங்க இருக்கவங்களும் மனுஷங்க தான் சிந்து…அம்மு கிட்ட இப்படி எதுவும் பேசிடாத.."

"ஐயோ நா தப்பா எதுவும் சொல்லல அத்தை…நைட் வீட்டுக்கு வராம இருக்கறது பத்தி யாராவது ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு தான் சொன்னேன்…"

"அவளுக்கு இது புதுசா என்ன? நைட்ல ரிசெப்சன் கவரேஜ் போகும் போது நைட் வீட்டுக்கு வந்து தூங்கி எழுந்தா போக முடியும்…அவ அவளை பாத்துப்பா.. நீ போய் ரெஸ்ட் எடு"...

என கொஞ்சம் அழுத்தம் திருத்தமாக கூறி அவளின் வாயை அடைத்தார் தனம்…

வாயை அடைத்ததாக நினைத்து கொண்டார் தனம் என தான் கூற வேண்டுமோ…

ஏனென்றால் அடுத்து அடுத்து வந்த தினங்களில் மாமனாரிடமும் யுவாவிடமும் பேசி அம்முவின் இந்த செய்கைக்கு அவளால் ஒரு அனு அளவுக்கு கூட எதிர்ப்பை கொண்டு வர முடியவில்லை….

ஒன் பைன் மார்னிங் ஹாஹாஹா அப்படித்தான் கூற வேண்டும் சிந்துவிற்கு…

அன்றைய காலை நேரத்தில் எந்த பரபரப்பும் இன்றி அமைதியாக கால்களை நீட்டி தரையில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்து கொண்டு இருந்தாள் அம்மு…

"ஹாய் அம்மு…"

அந்த அக்காவை ஓ எல் எக்ஸ் இல் விற்று விட்டு அம்மு என கூறி அழைத்தாள் சிந்து…

நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு "ஹாய் சிந்து" என அவள் போலவே பேசி காட்டினாள் அம்மு…

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் "எங்க உன்னை பாக்கவே முடியல அவ்ளோ பிஸியா இருக்க போல? அதுவும் ராத்திரி வீட்டுக்கு வராம கூட "என கேட்டுவிட்டு அவள் எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்தாள் சிந்து…

அந்த நேரம் அங்கு வந்த தனத்தை கண்களால் நா பாத்துக்கறேன் நீங்க போங்க என கூறி இருந்தாள் அம்மு…

கேள்வி கேட்டுவிட்டு மெதப்பமாக அமர்ந்து கை விரல் நகங்களை ஆராய்ந்து கொண்டு இருந்த சிந்துவிற்கு இது தெரிய வாய்ப்பில்லை தான்..

"ஹான் என்ன கேட்ட சிந்து?" என அவளின் கண்களை நேராக நோக்கி கேட்டாள் அம்மு..

"உங்க கிட்ட பேசவே முடியறது இல்லியே அதான் கேட்டேன்" என கொஞ்சம் சுருதி இறக்கி கூறினாள் சிந்து…

"ஆடி மாசம் வந்தாச்சு இனி எங்கயும் போகல இங்கயே வீட்லயே உங்க கூடவே இருக்க போறேன் பேசிட்டே இருப்போம்…ஓகேவா சிந்து?"

"ஏன் உனக்கு ஆடி மாசம் வேலை இல்லையா?"

"ஆடில யாரும் கல்யாணம் பண்ண மாட்டேங்குறாங்களே சிந்து?"

"ஓ…அப்போ நீ அந்த பொண்ணு வீட்டுக்கும் போக மாட்டியா?"

இப்பொழுது நிஜமாகவே கோவம் வந்து விட்டது அம்முவிற்கு…இருந்தும் நிதானம் இழக்காமல் "எந்த பொண்ணு "என கேட்டு இருந்தாள்…

"அதான் உன்கிட்ட வேலை செய்யுற பொண்ணு…"

"என்கிட்ட எந்த பொண்ணும் வேலை செய்யலியே?"

"என்ன?"

"ஆமா, சுமதிக்கு சம்பளம் அதிகமா வர்ற வேற வேலைக்கு அனுப்பிட்டேன்…"

"ஓ.. அப்புறம் எதுக்கு அவ வீட்டுக்கு போய் வர்ற?"

"அவ வீட்ல தனியா இருக்க பொண்ணுன்னு யாருக்கும் இளக்காரமா இருக்க கூடாது.. துணைக்கு எப்பவும் ஆள் இருகாங்கன்னு காட்டணுமே அதுக்கு தான்…"

"நீயும் பொண்ணு தான அப்புறம் நீ எப்படி அவளுக்கு துணை?"

"சிந்து என் பொறுமையோட அளவு ஆயுள் ரெண்டுமே கம்மி.. புரிஞ்சிப்பன்னு நினைக்கறேன்…

அம்மா வெளிய போறேன் நீங்களும் வர்றீங்களா? "என இதுக்கு மேல உன்கிட்ட பேச்சு இல்லை என்பதை போல தனத்திடம் பேசினாள்…

"எங்க போக போற அம்மு?"

"உங்களுக்கு எங்க போகணுமா அங்க போகலாம்மா…"

"ஹான் என்னை விட்டுட்டா?"

"சிந்து இப்போ நீ எங்கயும் போக முடியாது…யுவாக்கு இன்னைக்கு லீவ் தான வீட்ல தான் இருக்கான்.. பக்கத்துல இருக்க பார்க் போய்ட்டு வாங்க…நாங்க வீட்டுக்கு திங்ஸ் வாங்கணும் உன்னால அலைய முடியாது…"என அவளை பேச விடாமல் பேசி முடித்தார் தனம்…

"சரிம்மா ரெடி ஆகுங்க போலாம்…"

"அப்போ எனக்கு சாப்பாடு எல்லாம்" என அப்பொழுதும் விடாமல் பேசினாள் சிந்து….

"செஞ்சிட்டேன் சிந்து போட்டு சாப்பிடுங்க…உங்க மாமா வீட்ல தான் இருப்பார்…."

அடுத்த ஒரு மணி நேரத்தில் அம்முவின் ராயல் என்பில்ட் மஹாபலிபுரம் சாலையை நோக்கி சென்று கொண்டு இருந்தது….

சிலு சிலுவென்று உடலை தழுவிய கடல் காற்று தனத்திற்கு உண்மையாகவே தேவைப்பட்டது…

வீட்டில் இருந்த வெம்மை மனதையும் உடலையும் புழுங்க செய்து இருந்தது அவரை…

சிந்துவின் மேல் அவ்வளவு கோவம் அவருக்கு…எதையும் காட்டாமல் ஒரே வீட்டில் வலைய வருவது சற்று கடினமாகவே இருந்தது அவருக்கு…

பேச ஆல் கிடைத்து விடவே ஒரு வாரமாக வீட்டில் நடந்த அனைத்தையும் கொட்டி இருந்தார்…

"என்ன செய்லாம்மா இதுக்கு?
நீங்க எதாவது யோசிச்சு வச்சி இருந்தா சொல்லுங்க செய்யலாம்…"

"ஒன்னும் செய்ய முடியாது அம்மு…அவ பிரசவம் முடியற வரைக்கும் பல்ல கடிச்சிட்டு இருக்க வேண்டியது தான்…"

"ஏன் யுவா வீட்ல என்ன தான் செய்யுறான்.. அவன் எதையும் கண்டுக்கறது இல்லியா?"

"அவன் கிட்ட விழுந்த கேப் கொஞ்சம் அப்படியே நின்னு போச்சு அம்மு.. என்னால கடந்து வர முடியல.."

"ஹ்ம்ம்…காலம் எல்லாத்தையும் மாத்தும்மா…பாத்துக்கலாம் விடுங்க…சரி இப்போ எங்க போலாம் நேரா பீச் போய்டலாமா?"

"கோயில் போய்ட்டு போலாம்…"

ச!ரிம்மா சியர் அப் ம்மா.."

"சரி சரி வண்டிய எடு…பேச ஆரம்பித்ததும் ஓரம் கட்டிட்ட…"

"ஹாஹாஹா வண்டி ஓட்டும் போது பேசிட்டே போக முடியாதும்மா…ஹெல்மெட் குள்ள சரியா கேட்காது…"

!அது சரி…கிளம்பு…"

இருவரும் அன்று முழுவதும் சுற்றி விட்டு வரும் பொழுது இரவு உணவையும் வாங்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தனர்…

அடுத்த ஒரு மாதம் எந்த பிரச்சனையும் ஆகாமல் பார்த்து நடந்து கொண்டனர் குடும்பத்தினர்….

ஒரு நாள் காலை அம்மு ஸ்டூடியோ கிளம்பி சென்ற பின்னர்…

"அத்தை…"

"என்ன சிந்து"

"அம்முவுக்கு ஏன் இன்னும் வரன் பாக்காம இருக்கீங்க?"

"அவ கல்யாணம் வேண்டாம்னு சொல்லுறாம்மா…"

"அவங்க அப்படி சொன்னா அப்படியே விட்டுடறதா? என்னால தானன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அத்தை…"

"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா"

"இப்பவே இருபத்தி அஞ்சு ஆச்சு.. அதான் கேட்டேன்.. தப்பா எடுக்காத்தீங்க அத்தை"
என நாயமாக பேசினாள் சிந்து…

"அவ வேலைக்கு ஒத்து போகிற மாதிரி வரன் வந்தா அவ கிட்ட பேசலாம்…இல்லன்னா பேசவே முடியாது…"

!அவ்ளோதான எனக்கு தெரிஞ்சவங்க அம்முவை பாத்துட்டு கேட்டாங்க…நா பேச சொல்லவா அத்தை…"

"சரிம்மா மாமா கிட்ட நம்பர் குடு பேசுவார்.."

"சரி அத்தை…"

தன் திட்டம் வெற்றி அடைந்து விட்டது என உள்ளம் சத்தமாக மத்தளம் இட முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியுடன் கிளம்பினாள் சிந்து…

"என்னாம்மா உன் மருமக ரொம்ப சந்தோஷமா போறா?"

!அவளுக்கு என்னை ஏத்தி விட்டு அம்முவை கல்யாணம் பண்ண நெருக்குவேன்னு நினச்சு பேசிட்டு போறா…"

"ஓ…"

"பாக்கலாம்ங்க இவ வாய் முகூர்த்தம் பளிச்சு அம்முவுக்கும் குடும்ப வாழ்வு அமைஞ்சா சந்தோஷம் தான்…"

"ஹ்ம்ம்…"என சத்தம் செய்து விட்டு போனார் மூர்த்தி…

"அக்கா…"

"என்னடா இழுக்குற அக்கான்னு?"

!அது நாம்ம நிறைய கல்யாணம் போட்டோ எடுக்கறோமா?"

"ஆமா.. அதுக்கு என்ன?"

"உன் கல்யாணத்துக்கு நானே போட்டோ எடுக்கறேன் கா…சீக்கிரம் நானும் கத்துக்கிட்டு புது கேமரா வாங்கிடுவேன்க்கா…"

ஹாஹாஹா என்னடா திடீர்னு கல்யாணம் பத்தி எல்லாம்? நா எதுவும் யோசிக்கல டா.. எனக்கு அதெல்லாம் செட் ஆகாது …இப்படியே ஹாப்பியா நா என் பைக் என் கேமரான்னு இருந்துப்பேன் டா…"

"ஐயையோ"

"என்னடா ஆச்சு "

"என்ன இப்படி சொல்லிட்டீங்க? என்னோட முதல் கல்யாண ஆர்டர் உங்களுக்கு தான் அப்படின்னு பிக்ஸ் பண்ணிட்டேனே…"

"ஹாஹாஹா ஆல் தி பெஸ்ட் டா சீனு…"

"அக்கா சிரிக்காத கா…"

"ஹாஹாஹா சரி டா…"

"போக்கா…." என சீனு கோவமாக செல்வது போல எழுந்து சென்றான்….

"ரெண்டு நாள் உங்களால பாத்துக்க முடியுமா சரவணன்?" கொஞ்சம் தயக்கமாக கேட்டான் உதயணன்…

"கண்டிப்பா சார்...நீங்க போய்ட்டு வாங்க...இப்படியே எங்கயும் போகாம இருக்க முடியாது.... அப்புறம் கல்யாணம் குழந்தை எல்லாம் வந்துட்டா இவ்ளோ நேரம் இங்கயே சுத்திட்டு இருக்க முடியாது" என கூறி சிரித்தான் சரவணன்...உதயின் ஹோட்டல் மேனேஜர்...

கல்யாணம் குழந்தை இரண்டு வார்த்தைகளும் காதுக்குள் ஒலித்தது...

சும்மா இருந்த 80'ஸ் கடைசி குழந்தையை இப்படி உசுப்பி இருக்க வேண்டாம் இந்த சரவணன்…

மூன்றாவது கண் காதலி தொடரும்…. 😍
 
Top