• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
சென்னையில் உள்ள தங்கையின் வீட்டிற்கு வந்து காலிங் பெல் அடிக்கும் சமயம் பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பி பார்த்தான் உதயணன்…

"ஹாய் உதய்…நீயா இது.? வா வா உள்ள போலாம்…"

"ஹாய் அம்மு…நானே தான் இது "...என சிரித்துக்கொண்டே கூறினான் உதய்…

இவர்களின் பேச்சு குரல் கேட்டு வந்து கதவை திறந்தது என்னமோ சிந்து தான்…

தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தவளுக்கு வெளியில் பேசுவது இன்னது என தெரியாவிட்டாலும் குரல்கள் வைத்து வந்து இருந்தாள்…

இருவரையும் ஒரு சேர கண்டவளுக்கு தலை சுற்றாத குறை தான்…

அதனால் அண்ணனை வா எனவும் அழைக்காமல் நின்றாள்…

"உதய் உள்ள வா…உன் தங்கச்சி இந்நேரம் நல்லாவே கற்பனை குதிரியையை தட்டி விட்டு இருப்பா…"

என கொஞ்சம் நெருங்கி நின்று கூறினாள் அம்மு…

உதயணனுக்கு மூச்சு முட்டியது அவளின் நெருக்கத்தில்…அதனால் ஒன்றும் கூறாமல் அது எந்த மாதிரியான கற்பனை குதிரை எனவும் ஆறாயாமல் தங்கையை தாண்டி உள் நுழைந்தான்….

"வந்தவங்களை வான்னு கூட கூப்பிடாம என்ன பராக்கு பாத்துட்டு இருக்க சிந்து?" என உதயணன் கேட்க…

"இல்லை நீ வர்றேன்னு சொல்லவே இல்ல…கூடவே அம்முவும் வரவும் "...என இழுத்து கூறிய நேரம் முகத்தை துடைத்து கொண்டே அவ்விடம் வந்து பக்கத்து ஒத்தை சோபாவில் ஆசுவாசமாக உட்கார்ந்தாள் அம்மு…

"உதயை நா நம்ம வீட்டு கேட் கிட்ட தான் பாத்தேன் சிந்து…

பெல் அடிக்க போனாரு…எல்லாம் தூங்குவீங்க எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டு என் கிட்ட இருக்க சாவி கொண்டு உள்ள வரலாம்னு அவரை நிறுத்தினேன்…"போதுமா விளக்கம் எனும் வகையில் இருந்தது அம்முவின் பேச்சு…

சிந்துவிற்கு இது தேவை தான் எனும் விதத்தில் அமர்ந்து இருந்தவன்

"எப்படி இருக்க சிந்து? ஹெல்த் கண்டிஷன் இப்போ தேவலியா?"

"நான் நல்லா இருக்கேன் அண்ணா.. நீ எப்படி இருக்க?"

"நான் நல்லா இருக்கேன்ம்மா…எங்க எல்லாரும்?"

"எல்லோரும் தூங்குறாங்க…எனக்கு தான் தூக்கம் பிடிக்கல…"

"இப்போ அப்டித்தான் இருக்கும் போக போக சரி ஆகிடும் டா…
நீ எப்போ வேலைக்கு போக போற?"

"போகணும்" என கூறிக்கொண்டு இருக்கும் நேரம் கையில் சில்வர் டம்ளரில் ஆவி பறக்க காபியும் பிஸ்கட்களும் கொண்டு வந்து கொடுத்தாள் அம்மு…

"தேங்க்ஸ் ஆனா கொஞ்சம் பிரெஷ் ஆகணும் அம்மு…"

"அண்ணா ரூம்ல தூங்கிட்டு இருப்பான்…அது என் ரூம் அங்கேயே பிரெஷ் ஆகிக்கோங்க உதய்…"

"ரொம்ப தேங்க்ஸ்…"

"எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிய உபசரிக்க வேண்டாமா?" என சிரித்துகொண்டே கூறினாள்…

"ஹாஹாஹா அது சரி" என கூறி சென்றான்…

சிந்து தான் மிகுந்த குழப்பத்தில் நின்று இருந்தாள் உதய் தன்னை சீர் செய்து வரும் வரை…

அவனுக்கு தோன்றியது ஒன்றே ஒன்னு தான் இவளை வைத்துக்கொண்டு கண்டிப்பாக இவர்கள் கஷ்ட படுகிறார்கள் என்று…காரணம்,எதையும் அவள் சாதாரணமாக எடுத்துகொள்ளாமல் பெரிது படுத்தி யோசிப்பது தான்…

இதை பற்றி அவளிடம் நிறைய பேசி விட்டான்…பேசிய பின்னர் என்னை நீ பைத்தியம்னு சொல்றியா என இவனின் சொற்பொழிவுகளை துட்சம் என தள்ளி தனக்கு தோன்றியதை பேசி இருக்கிறாள்…

"ஏன் அப்டியே நிக்குற சிந்து உட்காரு…இந்தா உனக்கும் தான் காபி இருக்கு குடி…"

"நா காபி குடிக்க மாட்டேன்…" சிந்து அண்ணனுக்கு ஒரு காபி கூட போடாமல் நின்றதெல்லாம் கணக்கில் வைக்காமல்…சட்டென கூறி இருந்தாள்…

"அடடா இது டீ தான் நா தான் தெரியாம சொல்லிட்டேன்" என சமாதானம் செய்த பிறகு குடித்தாள்…

உண்மையில் அது டீ தான் வாய் தவறி கூறி இருந்தான்…

அதற்குள் வீட்டில் உள்ள ஒவ்வொருவராய் வந்து அவனுடன் அமர்ந்தனர்…

ஒருவாராக அனைவரும் பேசிய பின்னர் குளிக்க செல்ல வேண்டி அம்முவின் அறைக்குள் நுழைய போனான் உதயணன்…

அம்முவோ கதவின் அருகிலேயே அவனின் பயண பையை வைத்து சென்று உறங்கி இருந்தாள்…

இதற்கு சிந்து மட்டுமே தன் அண்ணனை வித்தியாசமாக பார்த்தாள்…

அதற்கும் அவன் எல்லோருக்குமாக "காலையில பிரெஷ் ஆக அம்மு அவ ரூம் யூஸ் பண்ணிக்க சொன்னா நான் தான் பேக்க அங்கேயே வச்சிட்டு வந்துட்டேன் அத்தை "…

"நாங்க எந்த விளக்கமும் கேட்கல உதய்…போய் எங்க ரூம்ல குளிச்சிட்டு வா.. உனக்கு சூடா டிபன் ரெடி பண்ணி வைக்குறேன்" என தனம் கூறியதை அடுத்து சிந்துவை ஒரு பார்வை பார்த்து சென்றான்….

எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு முடிக்கும் வரையிலும் அம்மு வெளியே வரவில்லை….

யுவா ஆபிஸ்க்கும், மூர்த்தி தான் உருவாக்கிய தோட்டத்தை கவனிக்கவும், சிந்துவும் கூட அறைக்கு சென்று உறங்கி இருந்தாள்…

தனமும் உதயணனும் சிறிய குரலில் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர்…

ஸ்டூடியோ செல்ல முழுதாக கிளம்பி வந்தவள் உதயணை "சாப்பிட்டாச்சா சாரி கொஞ்சம் லேட் ஆகிடிச்சி "என தன்னிலை விளக்கம் கொடுத்தாள்…

தனம் அவளுக்கு அத்தனை நற்பன்புகளையும் கூறி அதையே பழக்கமாக மாற்றி இருந்தார்…யுவாவுக்கும் கூட அதையே தான் கற்பித்தார்…

இருவரும் இருமாதிரி எல்லாவற்றிலும்…அன்பு பாசத்தை காட்டுவதில் மட்டுமே தனத்தையும் மூர்த்தியையும் கொண்டு இருந்தனர்…

நன்றாக உறங்கி சாப்பிட்டு முடிந்ததால் இப்பொழுது சாவகாசமாக தனத்தின் பக்கத்தில் இடித்துக்கொண்டு அமர்ந்தாள்…

அதை பார்த்ததும் ஒரு மென்னகை உதயணனுக்கு…

"என்ன பிளான் இன்னைக்கு? எங்கயாவது போகணுமா?" என உதையை நேராக பார்த்து கேட்டாள் அம்மு…

"ஆமா அம்மு இங்க ஒரு டீலர் கிட்ட பேசணும்.. முக்கியமா சிந்துவையும் உங்க எல்லோரையும் தான் பாக்க வந்தேன்…"

"ஹாஹாஹா நம்பிட்டோம் இல்லம்மா "?என தன் தாயிடம் ஹைபை குடுத்ததும் இருவரும் சேர்ந்து சிரித்தனர்…

"சரி உதய் வண்டி விட்டுட்டு போறேன் யூஸ் பண்ணிக்கோ…"

தனத்திற்கு இந்த தருணம் தோன்றியது…இதுதான் யுவாவிற்கும் அம்முவிற்கும் உள்ள வித்தியாசம்…

அவன் இவனை பற்றி எதுவும் கேட்காமல் சென்று விட்டான் இவளோ தன் வண்டியை கொடுத்து செல்கிறேன் என்கிறாள்…

மகளை நினைத்ததும் முகத்தில் ஒரு பெருமிதம் தனத்திற்கு…

"இல்ல அம்மு நா கேப் புக் பண்ணிக்கறேன்… அந்த டீலர் பேச்சை முடிச்சிட்டு உன் ஸ்டூடியோ பாக்க வரலாம்னு இருக்கேன்…"

"சாரி உதய் நான் உன்னை இன்வைட் பண்ணவே இல்லை…கண்டிப்பா வா…
ஆனா ஒரு கண்டிஷன்" என கேட்டு ஒரு நொடி அமைதிக்கு பின் "நான் தான் கூட்டிட்டு போவேன்…சின்ன வயசு கதைகள் நிறைய பேசணும் "என கூறி சிரித்தாள்..

உடனே தனம் "அப்டினா நீங்க வெளிய சாப்பாடு சாப்பிடுங்க"

இல்லம்மா டெய்லி ஹோட்டல் சாப்பாடு சாப்பிடறவங்களுக்கு வீட்டு சாப்பாடு தான் சொர்கம்…நீங்க செஞ்சிடுங்க.. கரெக்ட்டா நேரத்துக்கு வந்துடுவோம்…"

"சரிம்மு…"

"சரி அத்தை போய்ட்டு வர்றேன்…"

"இந்தா உதய் கீ.."

"ஏன் என்னை வச்சி ஓட்ட மாட்டியா என்ன?"

"ஓட்டிட்டா போச்சு…"

முதலில் உதய் கூறிய அட்ரஸ்க்கு சீக்கிரமே சென்று விட்டனர்…

இவள் வெளியே வெயிட் செய்வதாக கூறியதை ஏற்காமல் கூடவே டீலரிடம் பேசி முடிக்கும் வரை அவனுடனே அமர்த்தி இருந்தான் அவளை..

அவளுக்கும் போர் அடிக்கவில்லை தொழில் முறை பேச்சு சுவாரசியமாக கேட்டு இருந்தாள்… உதயணின் தொழில் பற்றி நிறையவே தெரிந்து கொள்ள முடிந்தது…

ஒரு மணி நேரத்தில் பேசி முடித்து வெயிலுக்கு இதமாக ஒரு சர்பத்தும் குடித்து ஸ்டூடியோ சென்றனர்…

ஸ்டூடியோவில் சுற்றி பார்க்க பெரிதாக ஒன்றும் இல்லை…சீனுவும் பேச்சில் கலந்து கொண்டதால் பேச்சு சிரிப்பும் அரட்டையுமாக ஆகியது…

உதயணனுக்கு எப்போது கடைசியாக இப்படி இருந்தோம் என்பதே மறந்து இருந்தது…

சீனுவுக்கு கொஞ்சம் பொறாமை கூட வந்தது உதயணன் மேல்… ஏனென்றால் அம்முவையும் அவன் இப்படி கண்டது இல்லை…

பேசுவாள் சிரிப்பாள் அதற்கும் மேல் அரட்டை எல்லாம் இதுதான் முதல் முறை…

அவனின் பார்வையை கவனித்து கண்களில் என்ன என கேட்ட உதய்க்கு ஒண்ணுமில்லை என தலை ஆட்டி இருந்தான்…

"ஐயோ மணி ரெண்டு ஆச்சு உதய் வா சீக்கிரம் வீட்டுக்கு போகலாம் இல்லனா உன் அத்தை திட்டுவாங்க "என சட்டென எழுந்து இருந்தாள்…

அதனால் சீனுவிடம் எதுவும் கேட்க முடியாமல் போனதும் நல்லது தானோ…

வீட்டிற்கு செல்லும் போது இரண்டரை மணியை தொட்டு இருந்தது…

அனைவரும் அப்பொழுது தான் உண்டு முடித்து எழுந்தனர்….

"என்ன அம்மு இது சாப்பாட்டுக்கு நேரத்தோட வர்றேன்னு அவ்ளோ சொல்லிட்டு போன…இப்போ பாரு தம்பி முகம் வாடி கிடைக்கு.. வாங்க முதல்ல சாப்பிடுங்க…."

பதிலே கூறாமல் இருவரும் இரு அறைகளில் சென்று பிரெஷ் ஆகி வந்து உண்ண தொடங்கினர்…

சிந்துவிற்கு இங்கு என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள முடியவில்லை..

சாப்பிட்டு முடித்ததும் தனம் "அம்மு நீ எப்போ கிளம்பனும் ஏற்காட்டுக்கு?"

"நாளைக்கு இயர்லி மார்னிங் கிளம்பினா போதும்மா…"

"ஓ யாரெல்லாம் போறீங்க?"

"சீனு வசந்த் ஆகாஷ் எல்லோரும் வராங்கம்மா பயப்பட வேண்டாம்…"

"இது என்ன ட்ரெண்டோ தெரியல.. கல்யாணத்துக்கு முன்னாடியே ஜோடி ஜோடியா போஸ் குடுத்துகிட்டு… அதுலயும் இந்த பாட்டி தான் போஸ் சொல்லி குடுக்கறாலாம் " என அம்முவை முறைத்துக்கொண்டே கூறினார் தனம்…

"ஹாஹாஹா அம்மா இதெல்லாம் இப்போ சகஜம் ஆகிடிச்சிம்மா…. நானெல்லாம் சொல்லி கொடுக்கறது இல்லைம்மா என கூறி கண் அடித்து விட்டு அதுக்கு தான் என் பிரிஎண்ட்ஸ் வர்ராங்களே " என்றாள் …

"அது தான் டி இன்னும் வயித்தெரிச்சலா இருக்கு…" என முகத்தை ஒருமாதிரி வைத்துக்கொண்டு கூறினார்..

"ஹாஹாஹா அம்மா கூல் போங்க போய் தூங்குங்க நானும் ரெஸ்ட் எடுக்க போறேன்…செம்ம வெயில் இன்னைக்கு…"

"எதையும் பேச விடாம செய்ற நீ…"

"அம்மா நீங்க என்னை பத்தி பேசினா நா பதில் பேச முடியும்…நீ மதவங்களை பத்தி பேசினா நா எப்படி பேசணும்னு தெரியலம்மா…"

"சரி சரி போ "என தனம் கூற உள்ளே நுழைந்தாள் அம்மு…வெளியே…

"ஏன் அத்தை அவ பிரின்ட்ஸ் தான?"

"பிரிஎண்ட்ஸ் தான் ஆனா ரெண்டும் லவ் பண்ணுதுங்கலாம்….

"வாட்?"

"என்ன உனக்கே ஷாக்கா இருக்கா?"

"ஆமா அத்தை இதெல்லாம் கண்ணுக்கு தெரியாம நடந்துட்டு இருந்தது இப்போ வெளிய தெரிய செய்யறாங்க…ஹ்ம்ம் நல்ல முன்னேற்றம்…"

"என்னமோ போ" என அவரும் சென்று விட்டார்…

சட்டென அவளுக்கு அவனும் அவளும் கல்யாணத்துக்கு முன் நாள் ரேசெப்சனில் மாலையும் கழுத்துமாக நின்று யாரோ ஒரு போட்டோக்ராபர் எடுத்த போட்டோகளுக்கு போஸ் கொடுத்தது கண் முன் வந்தோடியாது…

அதோடு அதற்கும் பின்னான சம்பவங்களும் கண் முன் வர தொடங்கியது…

'ச்ச என்ன கருமம் இது…இதெல்லாம் மறந்துட்டேன்னு நினைச்சிட்டே இருந்து இருக்கேன்…அம்மு நீ ஒரு முட்டாள் டி…'

'இது இறந்த காலம்… இறந்தவர்களின் நினைவுகளுடன் வாழலாம்… இறந்தவர்களுடன் வாழ முடியாது….' இது தனம் அடிக்கடி கூறுவது…

அதற்கும் மேல் அங்கு இல்லாமல் வெளியே சென்றுவிட்டாள்…செல்லும் போது சிந்துவும் உதயும் ஏதோ மும்முரமாக பேசிக்கொண்டு இருந்தனர்…இவள் வரும் போது பேச்சை நிறுத்தியதையோ இவளின் முகத்தை ஆராய்ச்சி செய்ததையோ கவனிக்கும் நிலையில் இல்லை அவள்…

வண்டி எடுத்துக்கொண்டு நீண்டதொரு பயணம் பெசன்ட் நகர் பீச்சில் முடிந்தது…

மாலை நான்கை தொடும் நேரம் பெரிதாகா கூட்டம் எல்லாம் இருக்காது….

கால் நனையும் அளவில் சென்று அமர்ந்து இலக்கில்லாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் அம்மு….

எவ்வளவு நேரம் சென்றதோ..பேண்ட் பாக்கட்டில் இருந்த போன் போட்ட சத்தத்தில் கை தன் போக்கில் எடுத்து "அம்மா " என்று கூறி இருந்தாள்….

"என்னடி அம்மா…? சொல்லிட்டு போக மாட்டியா? எங்க இருக்க இப்போ?"

"அது அது வந்தும்மா கொஞ்சம் மூட் அப்செட் அதான் பெசன்ட் நகர் பீச் வந்தேன்…"

"ஓ…எதுவா இருந்தாலும் நின்னு பேஸ் பண்ணு அம்மு…இப்படி நிம்மதி தேடி அலைய கூடாது…எங்க இருக்கோமோ அங்கேயே நம்ம நிம்மதிய உருவாக்கிக்கணும்…"

"புரிஞ்சதும்மா…ஸ்டூடியோ போய்ட்டு நைட் வர்றேன்…"

"அதெல்லாம் போக வேண்டாம் ஒழுங்கா வீடு வந்து சேறு…"

"சரிம்மா…"

இது அத்தனையும் கூடத்தில் அமர்ந்தே பேசினார் தனம்….

"என்ன அத்தை அம்முவுக்கு ஏதாவது பிரச்சனையா?"

"பிரச்சனை எதுவும் இல்லை உதய்…இருந்தாலும் அவளே ஹாண்ட்ல் செஞ்சிடுவா…"

"ஹ்ம்ம்" என அமைதி ஆகிவிட்டான் ஆனால் மனது என்ன என்ன என கேட்டுக்கொண்டே இருந்தது…

சிந்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை… அதை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை…

அம்மு வீட்டுக்கு வந்த பிறகு மிக சாதாரணமாக பேசினார் தனம்…பின்னர் அனைவரும் அமர்ந்து சீட்டுகட்டு வைத்து விளையாடி அன்றைய மாலை பொழுதை கழித்தனர்…

மறுநாள் அதிகாலை அம்மு கிளம்பி வெளியே வரும் போது உதயணனும் கிளம்பி நின்று இருந்தான்…



 
Top