• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
"என்ன உதய் கிளம்பிட்டியா? நேத்து பேசும் போது கூட எதுவும் சொல்லலியே?" என கையில் பயண பையை வைத்து நின்று இருந்தவனிடம் கேட்டு இருந்தாள் அம்மு…

"ஆமா அம்மு வந்தேன் பாத்தாச்சு கிளம்ப வேண்டியது தான்…" என சிரத்தை இன்றி கூறினான்..

அவனுக்கு தன் தங்கையின் பேரில் அத்தனை வருத்தம்.. வெளியில் சொல்ல முடியவில்லை அவனால்…

"சரி வா ஸ்டேஷன்ல விட்டுட்டு கிளம்பறேன்…" என அம்மு கூற..

"இல்லை வேண்டாம் நா கேப் புக் பண்ணிக்கறேன்…. ட்ரெயின்க்கு டைம் இருக்கு அதான் பொறுமையா ட்ரை பண்ணிட்டு இருக்கேன்…" என மறுத்தான் உதய்..

அதெல்லாம் வேண்டாம்…என கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே சுமதியிடம் இருந்து அழைப்பு வந்தது அம்முவுக்கு…

"சுமதி என்னடா? ஏன் அழுவுற? இரு இரு கொஞ்சம் பொறுமையா இரு… அழாம சொல்லுடா புரியல எனக்கு…

சரி சரி கொஞ்சம் மேனேஜ் பண்ணு வந்துடறேன்

என்ன? சரி டா.. நா போன் கட் பண்ணல "என இவள் மட்டும் பேசிக்கொண்டு இருந்தாள்…

"என்ன அம்மு ஆச்சு…" என அவளின் பதட்டத்தை வைத்து கேட்டான் உதய்…

"ஹான் உதய் கொஞ்சம் என் கூட வாயேன் ஒரு எமெர்ஜெண்சி…"

என அவனையும் அழைத்து கொண்டு சுமதி இருப்பிடம் வந்து சேர்ந்தாள்…

அவள் வீட்டு வாசலில் ஒருவன் குடித்து விட்டு ஜன்னல் வழியாக சுமதியை கதவை திறக்கும் படி கூறிக்கொண்டு இருந்தான்.. அதுவும் வேறு யாருடைய கண்ணுக்கும் தெரியாத வகையில் நின்று இருந்தான்…

உதய்க்கு சட்டென நிலவரம் புரிந்து அவனை பின் இருந்தே பிடித்து இரு கைகளையும் வளைத்து முறுக்கினான்..

வலியில் கத்த கூட முடியாமல் போனது அவனுக்கு..

அம்மு அவனின் வாயில் கர்ச்சீப் வைத்து அடைத்து இருந்தாள்…

இதை ஜன்னல் வழி கண்ட சுமதிக்கு போன உயிர் திரும்பி வந்தது போன்ற உணர்வு…

"அம்மு என்ன செய்லாம் இவனை…" என ஆத்திர மிகுதியில் கேட்டு இருந்தான்

"கைய முறிச்சி ரோட்டு ஓரத்துல போடுங்க உதய்.. நாய் கடிச்சி சாகட்டும்…" என அப்போதைக்கு மனதில் தோன்றியதை கூறி இருந்தாள் அம்மு…

அவள் கூறியபடியே வலது கையை மட்டும் நன்றாக உடைத்து விட்டான்…கை தாங்களாக கூட்டி சென்று ரோட்டில் விட்டு கர்ச்சீப்பை எடுத்து காவாயில் தூக்கி போட்டுவிட்டு வந்தான்…

அப்பொழுது சுமதிக்கு தைரியம் சொல்லி கொண்டு இருந்தாள் அம்மு…

"யார் அவன்" என கேட்ட படி உள்ளே நுழைந்தான் உதய்…

அவனை கண்டதும் சுமதி எழுந்து நின்றாள்…

"உட்காரும்மா…ரொம்ப நாளா தொந்தரவு செய்றானா?" என கேட்டான் நேரடியாக சுமதியிடம்…

அம்முவுடன் வந்ததால் அவனுடன் பேசலாமா வேண்டாமா என ஆராயமல் பதில் கூறினாள்…

"ஆமாண்ணா.. அக்காவுக்கும் தெரியும்…"

"என்ன அம்மு நீ இதை இப்படியா விட்டு வைப்ப? உன்கிட்ட இந்த மாதிரி எதிர்பாக்கல..

இவ தான் உதய் போலீஸ்ல சொல்லலாம் இல்ல அவன் வீட்ல சொல்லலாம்னு எவ்ளோ சொல்லியும் கேட்கல..

இப்போ வீடு வரைக்கும் வந்துட்டான்…" என சுமதியிடம் தொடங்கி உதயிடம் முடித்தாள் அம்மு…

"ஏம்மா? தனியா இருக்கன்னு நினைக்கிறன்…பாதுகாப்பா இருக்க வேண்டாமா?" என வீட்டை அளந்த படி கேட்டான்…

"இது மட்டும் தான் எனக்குன்னு இருக்க ஒரே சொத்து அண்ணா.. நா வேற எங்க போவேன்" என கேட்டு அப்படி ஒரு அழுகை அழுதாள்…

"சரிம்மா நீ ரெடி ஆகி வேலைக்கு கிளம்பு…நீ தங்க ஏதாவது ஏற்பாடு செய்லாம்…

என்ன அம்மு அமைதி ஆகிட்ட…" என சுமதியிடம் துவங்கி அம்முவிடம் முடித்தான்

"சீனுக்கு மெசேஜ் போட்டுட்டேன் உதய் அவன் இப்போ வருவான்…நீ அவன் கூட அவன் வீட்டுக்கு போ அம்மு .. நா இந்த ட்ரிப் முடிச்சிட்டு வந்து என்ன செய்லாம்னு பேசலாம்…" என இருவரிடமும் அடுத்து என்ன என்பதை கூறினாள் அம்மு…

"சரிக்கா"…என கூறி தேவையானதை எடுத்து வைக்க தொடங்கினாள்…

"சாரி உதய் உன்னோட பிளானும் சொதப்பிட்டேன்…இரு நைட்டுக்கு ஏதாவது பஸ் இருக்கான்னு பாக்குறேன்…" என கேட்க…

"அதெல்லாம் வேண்டாம் அம்மு.. எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் தேவை படுது…அதான் இங்க கிளம்பினேன்…ஆனா சிந்து நடத்தையாள என்னால சாதாரணமா இருக்க முடியல…அதனால உனக்கு ஓகேன்னா நா உன்கூட வரட்டுமா?" என தயக்கமாக இருந்தாலும் கேட்டு இருந்தான்….

அவனை பார்த்து ஒரு புன்னகை சிந்தி இரு கண்களையும் ஒருசேர மூடி திறந்து சம்மதம் கூறினாள்..

அந்த நேரம் சரியாக சீனு உள்ளேன் நுழைந்தான்

மனதில் டேய் இங்க என்னடா நடக்குது இது அம்மு அக்கா தானா என வியந்து கொண்டான்…

" டேய் என்னடா அங்கேயே நின்னுட்ட உள்ள வர உத்தேசம் இருக்கா இல்லையா…?

" அக்கா எங்க சுமதி"?

" உள்ள தேவையானதை எடுத்து வைக்க போயிருக்கிறாள். இப்ப வந்துடுவா…"

" சரிக்கா" என அமைதியாக நின்று விட்டான்…

" சீனு இன்னைக்கு நீ என் கூட வர வேண்டாம்.."என்றாள் அம்மு…

" நான் இல்லாம உங்களால எப்படிக்கா மத்த அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் எப்படி செய்ய முடியும் உங்களால்?தனியா என்ன செய்வீங்க நான் கண்டிப்பா வருவேன் உங்க கூட.. உங்களை தனியா எல்லாம் அனுப்ப முடியாது…" என கராராக கூறினான்…

"டேய் சீனு நான் போறேன்… நீ இங்க இருந்து சுமதி கவனிச்சுக்கோ.." என உதய் கூற…

"ஐயோ அண்ணே நீங்க எப்படி இதெல்லாம் செய்வீங்க…"?

"டேய் நான் ஒன்னும் பொறந்ததுல இருந்தே ராயல் ஃபேமிலி எல்லாம் ஒன்னும் கிடையாது டா… எல்லா வேலையும் நானும் செய்வேன்.."

"அப்ப சரி அக்காவை பத்திரமா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வாங்க…" என பெரிய மனிதன் தோரணையில் சீனு கூற…

"சரிங்க சீனு சார் "என பவ்யமாக கூறினான்…

அவன் செய்த பாவனையில் அனைவரும் சிரித்தனர்..

சுமதியை சீனு உடன் அனுப்பி வைத்துவிட்டு இவர்களும் ஏற்காடு நோக்கி பயணம் புறப்பட்டனர்…

இருவரும் பயணத்தை வெகுவாக ரசித்தனர் பழைய நினைவுகளை பேசி பேசி கலைத்தனர்…

வண்டியை இருவரும் மாறி மாறி ஒட்டிக்கொண்டனர்…

உதயனுக்கு அம்முவின் மேல் இருந்த எண்ணம் ஈர்ப்பாக மாறிக்கொண்டிருந்தது..

ஆனால் அம்முவிடம் இப்படியான எந்த எண்ணங்களும் இருப்பதாக தெரியவில்லை.. அவள் சாதாரணமாக இல்லை மிக சாதாரணமாக அவன் உடன் உரையாடிக் கொண்டு இருந்தாள்..

இடையிடையே சாப்பிடுவதற்கும் நீர் அருந்துவதற்கும் வண்டியை நிறுத்தினர்..

அப்போதெல்லாம் அவன் செய்ய வேண்டிய வேலைகளை பற்றி அவனிடம் கலந்துரையாடினாள் ..

அவனுக்கு கஷ்டம் தரும் வகையிலான வேலைகளை மிக சுலபமாக சொல்லிக் கொடுத்து அதை அவன் செய்தே ஆக வேண்டும் என்பது போல் பேசினாள் ..

அவனும் அவள் கூறுவதை சிரத்தையாக கேட்டுக் கொண்டான்…

ஏற்காட்டில் இவர்களுக்கு முன்னரே வசந்தும் ஆகாஷும் நின்று இருந்தனர்…

உதயணனையும் அம்முவையும் பார்த்து சிரித்தனர்…

இவர்களும் சிரித்து விட்டு "இவர் உதயணன் என் அண்ணியோட அண்ணன் "என முறையாக அறிமுகம் செய்து வைத்தாள்…

"ஓ அப்போ நா உனக்கு நண்பன் இல்லியா "என கேட்டு முறைத்தான் உதய்…

"அடடா உன்னைய பத்தி ஏதாவது சொல்ல ஆரம்பிச்சா இவனுங்க கதை கேக்குற மாதிரி நின்னு பாங்க.. அதனாலதான் இப்படி சொன்னா அதோட நிறுத்திக்குவானுங்க… அப்படித்தான ஆகாஷு" என கேட்டு சிரித்தாள்…

அவளின் சிரிப்பை மூன்று ஆடவருமே ரசித்தனர்.. அவரவரின் எண்ண போக்கில்…

"சரி சரி வசந்த் லொகேஷன் செலக்ட் பண்ண சொல்லி இருந்தேனே என்ன ஆச்சு"?

"அதெல்லாம் நேத்தே வந்து பக்காவா ரெடி பண்ணியாச்சு நம்ம அவங்க கிட்ட இந்த லிஸ்ட்ட காமிச்சி அவங்களுக்கு எந்தந்த இடம் வேணுமோ அந்த அந்த இடத்துக்கு நம்ம கூட்டிட்டு போனா முடிஞ்சிடுச்சு? என வசந்த் கூறினான்..

"அவங்க ரெண்டு பேரும் வந்துட்டாங்களா"?

"அவங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்து இறங்கினாங்க போயிட்டு பிரஷ் ஆயிட்டு வரேன்னு சொல்லிட்டு போயிருக்காங்க.."

" சூப்பர் வசந்து

"என்ன உதய் சைலன்ட் ஆயிட்ட ஏற்காடு பார்த்ததும் உன்னோட ஊட்டி ஞாபகம் வந்து இங்க ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சா என்னன்னு தோண ஆரம்பிச்சிடுச்சா"? என அவனையும் பேச்சிற்கு அழைத்தாள்…

"ஆஹா அதெல்லாம் ஒன்னும் இல்ல கிளைமேட் ரொம்ப நாளுக்கு அப்புறம் என்ஜாய் பண்றேன்"

"சரி வா உதய் போயிட்டு பிரஷ் ஆயிட்டு நம்மளும் ரெடி ஆவோம்…"

அம்மு முன்னே நகர்ந்ததும் உதயை கைப்பிடித்து நிறுத்தினர் இருவரும்..

"ஏய் என்ன என்னை போய் கைய புடிச்சு இழுத்து நிக்க வைக்கிறீங்க"? என சிரித்தான்..

" பாஸ் உங்க பார்வையை நாங்க கண்டுபிடிச்சிட்டோம் அம்முகிட்ட இதெல்லாம் செல்லாது.. நேரடியா எதையும் பேசாதீங்க அவ கிட்ட" என பிரீ அட்வைஸ் செய்தான் ஆகாஷ்…

"அடப்பாவிங்களா நீங்க என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கர்களா கண் பார்வை வைத்து கண்டுபிடிக்கிறீங்க"?

" ஹா ஹா பாஸ் அதெல்லாம் அப்படித்தான் சீக்கிரம் போங்க.. ஏ ஆகாஷ் இன்னைக்கு நமக்கு நல்ல என்டர்டைன்மென்ட் இருக்குடா இவங்க ரெண்டு பேரையும் வச்சு.." என வசந்த் ஆகஷுக்கு ஐபை கொடுத்தான்…

"டேய் உங்க என்டர்டைன்மென்ட்க்கு என்ன பலிகடா ஆக்கிடாதீங்க ப்ளீஸ்"

"சரி சரி பாஸ் ரொம்ப கெஞ்சாதிங்க நாங்க பாத்துக்குறோம்"

அவர்கள் இருவருக்கும் ஒரு கும்பிடு போட்டு விட்டு அம்முவை நோக்கி வேகமாக நடந்தான்..

அறையின் கதவு அருகே சென்றவள் திரும்பி உதயை பார்த்து உதய் நீ முதல்ல போய் ஃபிரஷ் ஆயிட்டு வா நான் போயிட்டு மாப்பிள்ளையும் பெண்ணையும் பார்த்துட்டு பேசிட்டு வந்துடறேன்…"

சரி எனக்கூறி சென்றான்..

" ஹாய் கைஸ், ஹாப்பி… ஆல் குட்.. அண்ட் ரெடி?" என கேட்டு கொண்டே அறையினுள் நுழைந்தாள்..

"எஸ் மேம்… எப்ப கிளம்பலாம்"?

"இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ்ல கிளம்பலாம் …

அந்த நேரம் அறையில் இருந்த பெண்ணின் தாயார் "அம்மாடி இந்த போட்டோ எல்லாம் கொஞ்சம் பார்த்து எல்லாரும் பாக்குற மாதிரியான போட்டோவா எடுங்கம்மா… இந்த பேஸ்புக்ல இன்ஸ்டாகிராம் எல்லாம் காமிக்கிற மாதிரியான போட்டோஸ் எதையும் எடுத்துறாதீங்கம்மா… அப்புறம் வேற சொந்த பந்தம் யாராவது பார்த்தாங்கன்னா தப்பா நினைப்பாங்கம்மா.." என தயக்கத்துடன் கூறினார்..

"அம்மா நீங்க ரொம்ப கவலைப்படவே வேண்டாம் நான் ரொம்ப அழகா எடுத்து தரேன் நீங்க பாத்தீங்கன்னா முகம் சுளிக்காம பாக்குற மாதிரியான போட்டோஸ் தான் இருக்கும் என்னை நம்புங்க…" என கூறி புன்னகை செய்தாள்..

" போட்டோகிராபர் லேடின்னு சொன்ன பிறகுதான் எனக்கு உயிரே வந்துச்சு.. இப்ப உன்ன பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு நிம்மதியாகவே இருக்கு…"

"கவலையே படாதீங்க எது உங்களுக்கு புடிக்கலையா அத சொல்லுங்க நம்ம கட் பண்ணிக்கலாம்…"

இவ்வாறு அம்மு மனபெண்ணின் அம்மாவிடம் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரை ஒருவரை பார்த்து சோகமாக முகத்தை வைத்துக் கொண்டனர்…

அதை கவனித்தவள் சிறு புன்னகையை சிந்தி விட்டு "ரெடியாயிட்டு வெளியே வாங்க நானும் வந்துடறேன்" அப்படின்னு சொல்லிவிட்டு வெளியே வந்தாள் …

" என்ன உதய் ஃப்ரெஷ் ஆகிட்டியா…"?

" அப்பவே முடிஞ்சிடுச்சு நீ போய் சீக்கிரம் ரெடி ஆகு…"

பின் ஆகாஷ் வசந்த் அம்மு உதய் நால்வருமாக இணைந்து அங்கு தேவைப்படும் ஒவ்வொரு சாமான்களையும் பார்த்து பார்த்து வண்டியில் ஏற்றினர்…

மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் அடிக்கடி உடைகள் மாற்ற தேவைப்படும் சிறு கூடாரத்தையும், அட்டைகள் லைட் சேர்ஸ் இன்னும் பல இடம்பெற்றன அவ்வண்டியில்…

இயற்கை எழில் கொஞ்சும் அந்த ஏற்காட்டில் ஓடைகள் சலசலக்கும் அமைதியான ஒரு இடத்தை தேர்வு செய்து இருந்தனர்..

அங்கு ஒவ்வொருவரும் இறங்கி தத்தம் வேலைகளை வேகமாக செய்ய ஆரம்பித்தனர் சட்டென உதய்க்கு நாம் இங்கு என்ன வேலை செய்ய முடியும் என தோன்றி விட்டது…

அவ்வாறு அவனைத் தோன்ற வைத்தது வசந்தும் ஆகஸும் தான்.. அவனை ஒரு வேலை செய்ய விடாமல் இவர்களே அனைத்தையும் செய்து முடித்தனர்…

இவன் தெர்மாகோல் அட்டையை தூக்கிப் பிடிக்க போக வசந்த் வந்து கையில் வாங்கிக் கொண்டு "நீங்க கொஞ்ச நேரம் வேடிக்கை பாருங்க அதுக்கு அப்புறம் என்ன வேலைன்னு புரிஞ்சிடும் அப்புறம் நீங்க செய்யுங்க அதுவரைக்கும் நான் ஹெல்ப் பண்றேன்…" என அவனை வேலை செய்ய விடவில்லை..

அம்மும் எதுவும் கூறாமல் வசந்திடம் வேலைகளை ஏவிக் கொண்டு இருந்தாள் …

முதலில் மணமக்களின் விருப்பப்படி அவர்கள் கேட்ட ஒவ்வொரு போஸ்களையும் எடுத்து முடித்தாள் …

பின்னர் வசந்த் ஆகாஷும் இணைந்து இன்னும் எவ்வாறெல்லாம் போஸ் கொடுக்க முடியும் என செய்து காட்டினர்….

உதய்க்கு அவ்விருவரையும் பார்த்து எந்த ஒரு வித்தியாசமான எண்ணங்களும் ஏற்படவில்லை ஏனெனில் அவர்களின் உடல் மொழியும் கண் ஜாடையும் அப்படியாக இருந்தது… மேலும் மனதில் பக்கா ப்ரொபஷனல் எனும் எண்ணத்தை உருவாக்கி இருந்தது…


காதலி வருவாள்….







 
Top