• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் - 01

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
977
494
93
Tirupur
மென்பனி இரவுகள்

ஓம் விநாயகா போற்றி!

அத்தியாயம் - 1

நான் சொல்ல வரும் வார்த்தைகள் யாவும்
வாய்த் திறப்பதற்கு ஒருநொடி முன்னதாகவே
வேறொருவராலோ கச்சிதமாய்க் கையாளப்பட்டு
கைத்தட்டல்கள் பெற்றுவிடுகின்றன...!

விழுந்ததும் குழந்தைக்காய் நீளும்
என் கரங்களை முந்தியபடி
வேறோர் கரம் தொட்டு தூக்கித்
தோலடனைத்துக் கொள்கிறது....!!

என்காதலை சொல்ல தக்க வரிகளைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கையில்
வீரியமாய் வந்து விழுகின்றன
விரோதியின் கவிதை....!!!

“டேய் மச்சான் ஊர்ல இருக்கும் போது மிலிட்டரி சரக்குமிலிட்டரி சரக்குனு அடிச்சுக்குவானுங்களே, அப்படி என்ன அதுல இருக்குனு நினைச்சிருக்கேன்... ஆனா இப்போதாண்டா தெரியுது.... மிலிட்டரி சரக்குனாலே ஒரிஜினல் சரக்குனு....” என்று தன்கையில் இருந்த க்ளாசை வாயில் சரித்துக் கொண்டான் தீபக்.

“அடக் கருமம் பிடிச்சவனே, ஒவ்வொருவாரமும் தண்ணியடிக்கும் போதெல்லாம் இதே டையலாக்கை விட்டு ஏண்டா கடுப்பைக் கிளப்புற, உங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன் பாரு என்ன சொல்லணும்..”என்று தலையில் அடித்துக் கொண்டான் ஆகாஷ்.

“நீ ஏண்டா பேச மாட்ட.... உனக்கு என்ன கஷ்டம், என்னை மாதிரியா, மேரேஜ் ஆனதும் பொண்டாட்டிக் கூட நாலு நாள் ஹனிமூன் கூட போக விடாமல் யார்மேலையோ இருக்குற கடுப்புல என்னை பழிவாங்கிட்டான்டா இந்தப் பாவி... ஏன் இதையெல்லாம் நீ கேட்கமாட்டியா...”– தீபக்.

“எல்லாம் தெரிஞ்சு தான மேரேஜ் பிக்ஸ் பண்ணீங்க, மேரேஜ் டேட்டுக்கு இரண்டு நாள் கழிச்சு டூட்டியில் சேரனும் என்று தெரியாதா உனக்கு...? அவன் சரியாதான் செஞ்சிருக்கான்.. சும்மா உன்னோட புலம்பலை ஆரம்பிச்சிடாத..”–ஆகாஷ்

“அதுதானே பார்த்தேன்.... எங்கடா இன்னும் நீ இவனுக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பிக்கலையேனு, ஏண்டா இப்படி பண்றீங்க... என்னைப் பத்தி நினைச்சுப் பாருங்க, என் கஷ்டம் உங்களுக்கு புரியவே புரியாதா...? என்னோட டார்லி எத்தனைக் கஷ்டப்படுறாளோ... எல்லாம் இவனால்தான்....”என்று தன்போக்கில் புலம்பினான் தீபக்.

“டேய் கொஞ்சம் சும்மா இரு, அவனே டென்சன்ல இருக்கான், உன்னைப் போட்டு உதைக்கப் போறான், அப்புறம் நான் உங்க சண்டையை விளக்கி விடமாட்டேன்” என்றான் ஆகாஷ்.

“உனக்கு என்ன மச்சான், ஒரு பிரச்சினையும் இல்ல, பொண்டாட்டியோட சேர்ந்து இரண்டு பிள்ளைகளும் இலவசமா கிடைச்சிட்டாங்க... என்னைச் சொல்லு, ஒன்னுக்கே இன்னும் வழி பண்ணாம இருக்கேன்....” என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் முதுகில் ஒரு உதை விழுந்திருந்தது.

“அறிவில்ல உனக்கு... அவன் எத்தனை பெரிய தியாகம் பண்ணிருக்கான், அதைப் பார்த்து பாராட்டாம அவனை நக்கல் பன்றியோ, எங்கே நீ அவனை மாதிரி ஒரு விதவைப் பொண்ணுக்கு வாழ்க்கைக் கொடு பார்ப்போம், முடியாது இல்ல, அப்புறம் எதுக்கு உனக்கு இந்த பேச்சு..., இன்னொரு தடவை இந்த மாதிரி பேசுறதைக் கேட்டேன், பிரண்ட்னு கூட பார்க்காம உன்னை தொலைச்சிட்டேன்..” என்று உறுமி விட்டு அறைக்குள் சென்றான், அதுவரை மற்ற இருவரின் பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்த சிபி @ சிபிநந்தன்.

“தீபக்... டேய்தீ பக்.... பார்த்து.... பார்த்து எழுந்திரு... நான்தான் சொன்னேனே... கொஞ்சம் அடக்கிவாசினு, சொன்ன பேச்சையே கேட்காதே.... அப்புறம் அவன்கிட்ட உதைவாங்கு.... உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுடா.... இனியாவது திருந்து..”என்று உதை வாங்கி கீழே கிடந்தவனை எழுப்பி உட்காரவைத்தான் ஆகாஷ்.

“டேய் மச்சான் என்னை அடிச்சிட்டாண்டா....”- போதையில் உளற ஆரம்பித்தான் தீபக்.

“ஆமாண்டா..”- ஆகாஷ்

“இவன் என்னை அடிச்சிட்டாண்டா...”

“ஆமாண்டா... விடுடா..”

“நியாயமா பார்த்தா நீதாண்டா அடிக்கணும்.... அவன் ஏண்டா செஞ்சான்.... ஒரு நண்பனை, உயிர் தோழனை போய் அடிசிட்டாண்டா....”

“ஒரு புள்ள பூச்சிய அடிக்கிற பாவம் எனக்கெதுக்குனு யோசிச்சேன்.. ஆனா அவன் யோசிக்கல, சரிவிடுடா... விடுடா..... நம்ம பிரண்டதானே..”

“என்னை அடிச்சிட்டான்டா, என்னை எப்படிடா அடிச்சான்...”பொறுமை பறந்து போன ஆகாஷ் “இப்படி தாண்டா...”என்று அவனும் அவன் பங்குக்கும் உதைக்க....

கீழே விழுந்த தீபக் “டேய் நீயும் அடிச்சிட்டியா.... நீயுமாடா என்னை அடிச்ச..” என்று மறுபடியும் ஆரம்பிக்க...... நொந்துபோன ஆகாஷ் “மச்சான் இப்போ அமைதியா உள்ளே போய் உன் பெட்ல படுக்கல, இப்போவே வித்யாவுக்கு போன் செய்து உன்னைப்பத்தி எல்லாம் சொல்லிடுவேன்..” என்று மிரட்டினான்.

“ஐயோ என் தியா செல்லம் எப்படி இருக்காளோ... நான் இல்லாம கஷ்டப்படுவாளே..... சாப்பிடமாட்டாளே.... தூங்கமாட்டாளே...” என்று புலம்ப ஆரம்பிக்க..... “டேய் நீ அடங்கவே மாட்டியா..... இரு உள்ளே போய் அவனைக் கூப்பிட்டு வர்றேன்.... அவன் தான் உனக்கு சரியான ஆளு.....” என்று ஆகாஷ் மீண்டும் மிரட்ட.....

“வேண்டாம்.... வேண்டாம் நான் போய் படுக்கிறேன்.... இனிமேல் அவன் முகத்துல கூட முழிக்க மாட்டேன். இது உன் மேல..” என்றதும் “ஐய்யோ....” என ஆகாஷ் அலற, “சரி இந்த டீப்பாய் மேல சத்தியம்....” என்று விட்டு அந்த ஹாலிலேயே உருண்டு புரண்டு உறங்க ஆரம்பித்தான்.

“யப்பா சாட்டர்டே வந்தாலும் வருது.... இந்த பன்னாடை சரக்கு அடிக்கிறேனு எல்லாரையும் போட்டு சாவடிக்கிறான்.... என் பிள்ளைங்க கூட இப்படி அலும்பு பண்ணாதுங்க....”என்று நினைத்துக் கொண்டே சிபியைப் பார்க்க அவன் அறைக்குள் நுழைந்தான் ஆகாஷ்.

“டேய் மாப்பிள்ளை என்னடா..... இங்கவ ந்துட்ட.... என்னாச்சு.. ஏன் ஒரு மாதிரியா இருக்க... மார்னிங் வீட்டில் இருந்து போன் வந்தது... அப்போ இருந்து இப்படித்தான் இருக்க.... என்ன பிரச்சினை...” என்று அவன் தோளைத் தொட.....

அதில் திரும்பியவன் உனக்குத் தெரியாதா என்பது போல் ஒருபார்வை பார்த்தவன், உடனே அதை மறைத்து “எனக்கு என்ன பிரச்சினை.... எல்லாருமே பேசினாங்க... குட்டீஸ் கூட பேசினாங்க... சித்து சித்துன்னு அவ்வளவு ஹேப்பியா பேசுறாங்க... அவங்க கூட இருக்க முடியல இல்லையா... அதான் கொஞ்சம் மூட்அவுட்....”என்றான் சிபி.

“அது மட்டும் தானா... இல்லை வேறெதுவும் இருக்கா....”அவன் முகமாற்றத்தை பார்த்தவாறே கேட்டான் ஆகாஷ்.

ஆகாஷ் அப்படிக் கேட்டதும் அவன் முகத்தில் ஒருவலி வந்து போனது.... அந்த வலியை உணர்ந்த ஆகாஷும் நண்பனின் தோளில் தட்டிக் கொடுக்க..... அதில் நெகிழ்ந்தவன் “நாளைக்கு அம்லுக்கு பர்த்டே டா மச்சான்... நான் இல்லாம அவளோட பொழுதே விடியாது.... நான் இல்லாம ஒரு பர்த்டேவும் செலப்ரேட் பண்ணது இல்லை... ஆனா இந்த மூணு வருஷம் என்னைப்பத்தி அவ யோசிக்கிறது கூட இல்லைடா... நான் மெசேஜ், கால் எது பண்ணாலும் ரெஸ்பான்ஸ் பண்றதே இல்லை....”

“அவ இப்படியெல்லாம் என்னை அவாய்ட் பண்ணும் போது தான் புரியுது. நான் அவளை ரொம்ப நோகடிச்சிட்டேன் என்று, எத்தனை கெஞ்சினா... நான் உன்னை விட்டுபோகமாட்டே ன்என்று.... எங்கே நான் தான் அறிவில்லாமல் அவளை அத்தனை தூரம் தனியாக அனுப்பி வச்சு கஷ்டப்படுத்தி விட்டேன்....” என்றான் கண்களின் வலியோடு....

“ம்ப்ச்..... என்ன சிபி.... மறுபடியும் மறுபடியும் அதேவா.... நீ அவளோட நல்லதுக்குத்தான் பண்ண... அது அவளுக்கு இப்போ நல்லா புரிஞ்சிருக்கும்..... நீ பஸ்ட் அப்படி யோசிக்கிறதை நிறுத்து.... ஆனாலும் நீயும் அவளை கேட்காம உன்னோட ஆசையை அவகிட்ட திணிச்சது தப்புத் தானே... நீயும் யோசிடா.... அவ பெங்களூர் வந்து படிச்சதே உனக்காகத்தான்.... அவளுக்கு பிடிக்கலைனாலும் உனக்காக உன்னோட ஆர்மி ஆசையை அவ ஏத்துக்கிட்டா தானே...... ஆனா நீ என்ன பண்ண.....”

“அவ வேதனையில் இருந்து வெளிவர கூட நீ டைம் கொடுக்கல, அவளோட விருப்பமே இல்லாம அவள் கழுத்துல தாலியைக் கட்டினதும், லண்டன் அனுப்பினதும் எவ்வளவு பெரிய தப்பு.... அவ தரப்பிலும் என்ன நியாயம் வச்சிருக்கானு நமக்கு தெரியாதுல்ல..... இந்த மூணு வருஷத்துல நீயே யோசிச்சிருப்ப..... உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை.... உனக்கே எல்லாம் புரியும்.... அதோட அவளும் இன்னும் ட்வென்டிடேஸ்ல வரப் போறா இல்லை... அவக்கிட்ட பேசு... உன்னோட மனசையும் சொல்லு.... எந்த ஒரு நிலையிலையும் அவ உன்னை வெறுக்கமாட்டா... அதை மறந்துடாதே..”–ஆகாஷ்

“அந்த ஒரு நம்பிக்கையில் மட்டும் தான் நான் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கேன்.... என் அம்லு எந்த சூழ்நிலையிலும் என்னை வெறுக்கமாட்டா....?” என்றான். இது ஆகாஷிற்காக சொன்னானா... இல்லை அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டானா.... அது அவனுக்கே வெளிச்சம்.

அன்று மட்டும் சிபி அவள் கழுத்தில் தாலி கட்டாமல் விட்டிருந்தால்.... அவள் அவனுக்கு கிடைக்காமல் போகவும் வாய்ப்பிருந்தது.... அவள் வேண்டும் அவனுக்கு... எவ்வளவு கால தாமதம் ஆனாலும்... அவன் காத்திருக்க தயார் தான் நெஞ்சு முட்ட காதலுடன்.... ஆனால்அவள்...? அதனால் தான் தன்காதலையும் மறைத்து, அவளின் அதிர்ந்த பார்வையை கண்டு மனம் வலித்த போதும்... எதையும் கண்டு கொள்ளாமல் மூன்று முடிச்சை இட்டு தன்னில் பாதி ஆக்கி கொண்டான்......

ஆனால்அவள்......?

பனி பொழியும்...

Attachments

  • 152461791_3515512901910541_6544305294457990829_n.jpg
    152461791_3515512901910541_6544305294457990829_n.jpg
    11.5 KB · Views: 41

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
514
150
43
Dindugal
அருமை க்கா.
ஹாஹா ஆனாலும் குசும்பு பிடிச்சவனுங்க தான் மூனு பேரும்
 
  • Love
Reactions: Vathani

Tamil elakkiyam

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 1, 2022
9
2
3
Karaikudi

தளிர் என்ன ஆச்சு mam
 
  • Love
Reactions: Vathani

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
மென்பனி இரவுகள்.....

மென்பனி இரவில்
மெல்ல அவளின் நினைவு....
இதயம் முழுவதும் காதல்
மனதின் ஓரம் கவலை.....
நட்புக்களின் கலாட்டாவில்
நல்லதொரு ஆரம்பம் 👍👍👍👍👍
வாழ்த்துக்கள் சகி
💐💐💐💐