• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் - 07

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
873
அத்தியாயம் –7


அவளிடம் காணவில்லை மாற்றத்தை...
என்னுள் கண்டுவிட்டேன் ஏமாற்றத்தை...
அவனிடம் பேசக்கூடாது, இவனிடம்
பேசக்கூடாது, எவனையும் பார்க்கக் கூடாது....
அவள் பார்வை, பேச்சு என்னிடம் மட்டும்தான்...
அவள் உரிமை, அவள் உணர்வு, எனக்குத்தான் சொந்தம்...
அவள் நடை, உடை, நான் சொல்வதைத்தான்
கேட்கவேண்டும், எனக்காக மட்டும்தான்
வாழவேண்டும்........
இப்படியொரு அபரிமிதமான காதலின்
வெளிப்பாடுதான் முதல்
பிரிவின் தொடக்கம்....!




ஜம்மு காஷ்மீரில் நேரிட்ட பனிச்சரிவில் ராணுவத்தினர் பத்து பேர் சிக்கிக்கொண்டனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 19 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் மலைப்பகுதியில் அதிகாலை பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சிபிநந்தன் உட்பட பத்துபேர் சிக்கிகொண்டதாகராணுவத்தலைமையிடத்தில்இருந்துதகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்து புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த பாதுகாப்பு துறை செய்தியாளர் ஆதில் லதீஃப், சியாச்சின் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.


வீரர்களை மீட்கும் பணி தற்போது நடந்து வருகிறது என்றும் இதுவரை யாரும் மீட்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.



அவர்களை மீட்கும் பணியில் ராணுவமும், விமானப்படையும் ஈடுபட்டுள்ளது... தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்சிபிநந்தனின் தந்தையும் கார்கில் போரில் நாட்டுக்காக உயிர்நீத்த ஒரு மருத்துவர் ஆவார்.



தந்தையின்மேல்அவருக்குஇருந்தஅன்பும், மதிப்பும்தான்அவரையும்ஒருராணுவமருத்துவராகஉருவாககாரணமாகஇருந்திருக்கிறது.சிபிந்தனுக்காகவும், அவரதுகுடும்பத்திற்காகவும்தமிழகத்தில்ஆங்கங்கேமக்கள்தங்கள்கடவுள்களைபிரார்தித்துவருகின்றனர்என்றும்தெரிவித்தார்.



இதையேநியூஸ்சேனல்- ஒவ்வொன்றும்தங்களTRPமார்க்கெட்டைஏற்றிக்கொள்ளவெவ்வேறுகோணங்களில்ஒளிபரப்பிக்கொண்டிருந்தன.



மீடியாக்களில்முதல்நாள்தலைப்புச்செய்தியாகவந்தது.அடுத்தடுத்தநாட்களில்அவர்களதுவரலாற்றையேநடுநாயகமாகபந்திவிரித்து, இவரால்தமிழகத்திற்கேபெருமைஎனும்வாக்கியதோடுதங்களின்விவாதமேடைகளைமுடித்துவைத்தனர்ஒன்றும்தெரியாதஅரசியல்வாதிகள்.


முகாமிற்கு சென்ற குழுவில் இருந்தவர்களின்குடும்பத்தினருக்கும்தகவல் அனுப்பப்பட, சிபியின் வீட்டில் உள்ளவர்கள் முற்றிலும் உடைந்தே போனார்கள். இதற்கிடையில், விடுமுறைக்கு என்று சென்றிருந்த ஆகாஷும் செய்தியைக் கேட்டு திரும்பி வந்து விட, சரண், அஸ்வத், ரவி, மற்றும் தீபக் அனைவரும் செய்வதறியாது டெல்லி ராணுவ மருத்துவமனையில் கூடியிருந்தனர் .


ஒவ்வொரு நாளும் யுகமாக கழிய அனைவரின் முகத்திலும் பயமும், இயலாமையும் போட்டி போட்டு கொண்டு வந்தமர்ந்தது. அவன் நல்ல முறையில் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் முதலில் ஷானவியிடம் இதை தெரிவிக்காமல் விட, இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் அவர்களுடைய நம்பிக்கை சற்றே ஆட்டம் கண்டது.


அதன் பொருட்டு அவளிடம் முழு உண்மையும் கூறாமல் பாதியை மறைத்து தெரிவித்தனர். இப்போது அவளும் வந்து கொண்டு இருக்கிறாள் அவனை நோக்கி.


பனி இடுக்குகளில் சிக்கி இருப்பவர்களை கண்டுபிடிக்கும்நவீன கருவிகளுடன் விமானம் மூலமாக தேடுதல்கள் தொடர்ந்தன. குடும்பங்களை பிரிந்து, அவர்களின் சந்தோசத்தை, தன் நிம்மதியாய் உணர்ந்து நாட்டுக்காய் போராடும் வீரர்கள், மகிழ்சியுடன் பேசி சிரித்து கொள்வது மிகவும் அரிது. அதிலும் எல்லை படையில் இருப்பவர்களின் நிலையை சொல்லில் அடக்க முடியாது .


அன்று மகிழ்ச்சியாக சென்ற வீரர்களில் இரு வீரர்கள், இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாய் கிடந்ததை எண்ணி பார்க்கையில் இதயமே கனத்து போனது அவர்களுக்கு.மூன்றாம் நாள் பனிப்பொழிவு சற்று சீராக தேடுதல் துரிதபடுதப்பட்டன, சில வீரர்கள் பெருங்காயத்துடன் மீட்கபட்டனர்.


அந்த குழுவில் சிபிமட்டும்டிரைவர்நாகேஷ்இருவரைத் தவிர மற்ற அனைவரும் சடலமாகவும், உயிருடனும் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் டெல்லி ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.விபத்து நடந்து ஐந்து நாட்களாகி விட்ட நிலையில் மற்ற இருவரைப் பற்றியும் எந்தஒரு தகவலும் கிடைக்கவில்லை.


12௦ மணி நேரங்கள் –௦ டிகிரி செல்சியசில் எந்த ஒரு மனிதனாலும் உயிர் வாழ முடியாது என்று மருத்துவக்குழு அறிவிக்க, தொடர்ந்து நவீன கருவிகளுடனும், மருத்துவ உபகரணங்களுடனும் தேடி கொண்டிருந்தாலும், மற்ற இருவரும் இறந்து விட்டதாகவே அரசு அதிகாரப் பூர்வமான அறிவிப்பை அறிவிக்க முனைந்தது.


ஷானவியும் இந்தியா வந்து மூன்று நாட்களாகிவிட்ட நிலையில் எந்த ஒரு சாதகமான பதிலும் கிடைக்காமல் போக, தீபக்கும், ஆகாஷும் ஸ்பெசல் பெர்மிசனில் சியாச்சின் சென்று மீட்பு குழுவோடு இணைந்து நண்பனைத் தேடும் வேலையில் இறங்கினர்.


அஸ்வத் மற்றும் சரண் இருவரும் அடுத்து என்ன செய்வதென்றுத் தெரியாமல் தகவல் வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். லண்டனில் இருந்து நேரே டெல்லி வந்தவள் தான், இன்னும் யாரிடமும் எதுவும் பேசவில்லை. உணர்வற்ற ஓவியமாய் அமர்ந்திருந்தவளைப் பார்க்க, பார்க்க அங்குள்ள அனைவருக்கும்துக்கம்தொண்டையைஅடைத்தது.


அதிலும்சரண்,தான்உயிரைவளர்த்தஇரண்டுசெல்லங்களுக்கும்இப்படியொருநிலைவந்ததைஎண்ணிஉள்ளுக்குள்ளேநொருங்கிப்போய்விட்டான்.இப்போதுஅவளுக்குஆறுதல்சொல்லவேண்டும்என்றுதெரிந்தாலும், அவனுக்கேஅந்தஆறுதல்தேவைப்பட்டதை யார்உணர்ந்துகொள்வார்கள்.


குழந்தைகளைஅகிலாவிடம்விட்டுவிட்டு, நிலாவும், இளமதியும்டெல்லிவந்திருந்தனர். கடந்துபோனகாலங்கள்தான்கஷ்டங்கள்என்றாலும், இனியாவதுஇருவரும்ஒன்றுசேர்ந்துதங்கள்வாழ்க்கையைஇன்பமாய்கழிப்பார்கள்என்றுநினைத்திருக்கஇப்படிஒருபேரிடியைஅவர்கள்கனவிலும்நினைத்திருக்கவில்லை...


உணர்வுகளைத்தொலைத்துஅமர்ந்திருப்பவளிடம்என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்று கூடத் தெரியாமல் தவித்தனர்.


அவர்கள் பேசினாலும், அவள் பேச வேண்டுமே.... அமைதி அமைதி அமைதி மட்டுமே அவளிடம்.... அவள் மனதில் என்ன ஓடுகிறது என்றும் கூட யாராலும் அறிய முடியவில்லை.


வீட்டில் உள்ளவர்களுக்கு அவள் நம்பிக்கயளிக்க வேண்டும் என்றுஅந்தநேரம்நினைத்தாலும்நொடிகள்கடந்துமணிகள்நாட்களாககரையஅவளால்அவளுக்கேதைரியம்அளித்துக்கொள்ளமுடியவில்லை. பின் எங்கே மற்றவர்களுக்கு கொடுக்க.....


ஏதோ கொடுத்ததைக் கொறித்து, குடித்து என்று இருந்தாலும் அது என்ன ..? எப்போதுக் கொடுத்தார்கள் என்றுக் கேட்டால் தெரியாது.

அந்த பழனி முருகனின் பாதங்களை மனக்கண்ணில் கொண்டுவந்து, அதிலே தஞ்சம் புகுந்திருந்தாள்.



அவன் வாழ்க்கையை பணயம் வைத்து தன்னையும் தன் வாழ்க்கையையும் காப்பாற்றியவனுக்கு என்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே.... அவன் நெருங்கி வரும் நேரமெல்லாம், நான் ஒதுங்கிப் போக, இப்போது அவன் மொத்தமாக என்னை ஒதுக்கிவிட்டானே...!



அன்று அவன் தன் கழுத்தில் கட்டியத் தாலிக் கட்டாயமானது என்றாலும், இந்த மூன்று ஆண்டுகளில் அவள் அதற்காக வருந்தியதே இல்லையே........ கணவன் அவன் காதலை தியாகம் செய்துவிட்டு காதலித்த பெண்ணுக்கு துரோகம் செய்து விட்டானே என்ற கோபம் தான் அவளுக்குள்.



ஒரு பெண்ணாக, காதலில் தோல்வியடைந்த பெண்ணின் வேதனை எப்படி இருக்கும் என்று அவளால் உணர முடிந்தது. அவளும் காதலித்தவள் தானே ஒரு தகுதியற்றவனை.....



அந்த வலியை உணர்ந்ததால் வந்த குற்ற உணர்ச்சியில் சிபியுடன் பேசுவதையும், பழகுவதையும் முற்றிலுமாக நிறுத்தியிருந்தாள்.




கல்லூரியில்அவளிடம் எத்தனையோ ஆண்கள் புரபோஸ் செய்திருகிறார்கள், அவள் அதையெல்லாம் மிகவும் சாதரணமாக எடுத்து கொண்டு, இன்முகவாகவே அவர்களுக்கு நோ சொல்லிவிட்டு சென்று விடுவாள்.




அதே நேரம் அன்று நடந்ததை அவனிடம் மறைக்காமலும் கூறி விடுவாள். பின் இருவரும் அதை வைத்து கேலியும் கிண்டலுமாய் பேசிக் கொள்வார்கள். அழகாய் சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்கையில் அபஸ்வரமாய் வந்தவன் தான் நிஷாந்த்.



அவனைப்பற்றி நினைத்ததுமே மனம் கசந்து போனது.. ஒருவன் தன்னிடம் பொய்யாக நடித்திருக்கிறான் என்பது கூட தெரியாத முட்டாளாய் இருந்த தன் மடத்தனத்தை எண்ணி வெட்கிப்போனாள். அந்த நினைவே வேண்டாம் என்றாலும், மனம் கொசுவர்த்திச் சுருளாய் கடந்த காலத்தை நினைவு படுத்த ஆரம்பித்தது..




நிஷாந்த்.....?அவர்கள் கல்லுரியில் ரெசிடென்சியல் புரபசராக பணிக்கு சேர்ந்தவன். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அவனது வகுப்புகள் இருக்கும்.



மைதா மாவில் முக்கி எடுத்தது போல் வெள்ளை நிறமும், அடர்ந்த கருமையான கேசமமும், பார்மலாய் அதே நேரம் அவனுக்கு மிகவும் பொருத்தமாய் அமையும் அவனது உடைகளும், அவனுக்கு அழகா, அல்ல அந்த கண்ணாடிக்கு அழகா எனும் விதமாக அவன் அணியும் ரிம்லெஸ் கண்ணாடியும் கழுத்தைச் சுற்றி மாட்டியிருக்கும் ஸ்டெதஸ்கோப்பும், ஒரு பக்கம் கையில் தொங்க விட்டிருக்கும் அவனது வெள்ளை நிறக் கோட்டும் என ஒரு பாலிவுட் ஹீரோ போல் வந்து செல்பவனை பார்க்கும்கல்லூரியின் பாதிப் பெண்கள் மயக்கத்தில் இருந்தனர் என்றால் அது பொய்யில்லை.



முதலில் இதையெல்லாம் பார்த்துக் கிண்டலடித்த ஷானவியும், தோழிகளின் பேச்சுகளில் உண்டான ஒரு ஆர்வக்கோளாரில் தன்னையும் அறியாமல் அவனை பார்க்க ஆரம்பித்தாள். அதுவே அவளுக்கு வினையாகிப் போனது.




எந்த ஆணுக்கும் தன்னை சுற்றி வரும் பெண்களைக் கண்டால் உள்ளுக்குள் ஒரு கர்வமும், வெளியில் அவர்களின் மேல் ஒரு அலட்சியமும் உண்டாகும்.




அதே நேரம் அந்த ஆணை ஒரு பெண் கண்டு கொள்ளாமல் இருந்தால், அந்தப் பெண்ணின் மீது தான் அந்த ஆணின் பார்வை மொத்தமாய் படியும்.



அப்படிதான் ஆனது ஷானவியின் விசயத்திலும், எல்லாப் பெண்களும் அவன் மேல் ஒரு ஈர்ப்புடன் பழக, இவளோ அவனை ஒரு அலட்சியத்துடன் கடந்து சென்றாள். அவள் அமைதியாக போயிருந்தால் கூட அவன் விட்டிருப்பானோ என்னவோ ...?



அவளின் அந்த அலட்சியம் தான் அவனுக்கு கோபத்தை கொடுத்து, அவளை தன் காலடியில் விழ வைக்கும் சவாலை எடுக்க வைத்தது. அதனால் அவளின் பார்வை தன்மேல் விழும் வரை அவளுக்காகக் காத்திருந்தான்.



இது எதையும் அறியாத ஷானு, தோழிகளின் பேச்சால் அவனைப் பார்க்க தொடங்க, அங்கே ஆரம்பித்தது அவளது பிரச்சனை. அவள் பார்க்கும் வரை அமைதியாய் இருந்தவன். அதன் பிறகு அவளிடம் சிறு புன்னகையில் தொடங்கி, நேரடியாகவேப் பேச ஆரம்பித்தான்.



பேச்சு என்றால் அது முழுக்க முழுக்க படிப்பு சம்பந்தமாக தான்இருக்கும். ஆனால் மற்றவர்களின் பார்வைக்கு அது தவறானதாகவே தோன்றும் படியான ஒரு தோற்றத்தை உருவக்கினான்.



நாளடைவில் கல்லூரியில் இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் உலா வர, அது ஒரு நண்பனின் மூலம் சிபிக்குத் தெரிய வந்தது. அப்போது அவன் தன் பயிற்சியில் இருந்ததால்ஷானவியிடம் அதிகம் பேசக் கூட மாட்டான். அதனால் அவர்களது கருத்து பரிமாற்றங்களும், பேச்சுக்களும் கூட குறைந்திருந்தது.



அந்த இடைவெளியில் தான் நிஷாந்த் உள்ளே நுழைந்தான். அவளின் மீது கவனம் செலுத்தாத தன்னையே நொந்து கொண்டு, அவளிடம் அதைப்பற்றி விசாரித்தான்.




அவளோ இதுதான் சமயம் என்று அவனிடம் நிஷாந்தைப் பற்றி அனைத்தையும் கொட்டிவிட, அதைக் கேட்டவனுக்கு சற்று யோசனையாய் இருந்தது. ஷானுவைப் பற்றித் தெரியும். முழு நம்பிக்கை இருந்தது அவள் பேரில்.. ஆனால் நிஷாந்த்.... அவனைப்பற்றி ஒன்றும் தெரியாதே என்ன செய்ய என்று யோசிக்க ஆரம்பித்தான்.....



இதற்கிடையில் வித்யா – தீபக் வீட்டிலும் காதல் தெரிந்து விட, பிரச்சினை மிகவும் பெரிதாகி, இப்போது வித்யா இரண்டு பாதுகாப்பாளர்களுடன் தான் கல்லூரிக்கு வருகிறாள்.




அவளிடம் ஷானவி மட்டும் தான் பேச முடியும், வேறு யாரும் அவளை நெருங்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு இருந்தது.




தீபக் ஒருபக்கம் இதை நினைத்து வருந்திக் கொண்டிருந்தான். அவர்களின் காதலுக்கு முழு உதவியும் செய்வதாக வாக்கு கொடுத்திருந்தான் சிபி, அதற்கு வித்யாவின் படிப்பு முடிய வேண்டும் என்ற கட்டளையுடன்....



ஷானவியின் மேலிருந்த நம்பிக்கையில் அவளுக்கு பெரிதாக எந்த அறிவுரையும் கொடுக்காமல் அவள் போக்கிலே விட்டான். அறிவுரை என்ற பெயரில் அவளிடம் பேச, ஒருவேளை மற்றவர்கள் பேசுவது போல் எதுவும் இல்லாமல், இவன் பேசியதும் வீம்புக்கென்றே செய்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் அமைதியாகி விட்டான்.



ஆனால் அவனுக்குத் தெரிந்த நிர்மல் எனும் ஒரு ஜூனியர் பையனிடம் நிஷாந்தைக் கவனித்துக் கூறும் பொறுப்பைக் கொடுத்தான்,



ஆனாலும் மனது தாங்காமல் அவளைக் காலையும் மாலையும் அழைத்துச் செல்லும் பொறுப்பை எடுத்துக் கொண்டான் அவனின் வேலை பளுவிலும்.... நாட்கள் சிபிக்கு பயத்திலேயே கழிய ஷானவிக்கு உrசாகமாய் கழிந்தது .



அன்றொருநாள் கல்லூரியில் இருந்து தாமதமாக வந்தவளை பார்த்து அவன் புருவம் உயர்த்த “ சாரி நந்து லேட்டாயிடுச்சு, நிஷாந்த் கூடப் பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல, நீ வந்து ரொம்ப நேரமாச்சா.... எனக்கு பசிக்குது சாப்பிட என்ன இருக்கு" என்று கேட்க, அவளைப் பார்த்து “ம்ம்ம் “ என்று வெறுமையாய்த் தலையை மட்டும் அசைத்துவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.




அப்போது தான் அவன் கோபமாக இருக்கிறான் என்று உணர்ந்தாள். அதன் பிறகு அவனிடம் பல சாரிகளைக் கூறி சில வசவு சொற்களை வாங்கி என்று அவனை சமாதானப் படுத்தி தன் வேலையான சாப்பிடுவதை முடிப்பதற்குள் அவளுக்கு போதும் போதுமென்றானது.




இப்படியே நாட்கள் கழிய, ஷானவியிடம் மாற்றங்கள் அதிகமாக, அவர்களுக்கு இடையே பிரச்சனைகளும் வளர ஆரம்பித்தன.




இதனால் இருவருக்குள்ளும் இடைவெளி உண்டாக ஆரம்பித்தது, சிபியின் வேலைப் பளுவும், தீபக்கின் பிரச்சனையும் அவனை அழுத்த, ஷானவியின் பிடிவாதத்துக்கு அவனால் மருந்திட முடியவில்லை.




அவள் மீது காதல் கொண்ட மனமோ அவளது இந்த செயலில் உருக்குலைந்து போனது என்பது தான் நிஜம். எனக்கு தோன்றியது போல் அவளுக்குத் தன்மேல் எந்த ஒரு ஈர்ப்பும் ஆசையும் ஏற்ப்படவில்லையே. அவளிடம் தன் காதலை மறைத்தது தவறோ ... அவள் படித்து முடிக்கும் வரை பொறுமை காக்கலாம் என்று நினைத்த தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டான்.



இதற்கிடையில் தான் நிஷாந்த் பற்றிய உண்மையும் தெரியவந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் கோவாவில் இரு குடும்பத்தினர் முன்னிலையில் அவனுக்கு திருமண நிச்சயம் மிகவும் சிம்பிளாக முடிந்ததாகவும், பெண்ணும் மெடிசின் படிப்பதால், அவள் படிப்பு முடியவும் திருமணம் நடைபெறும் என்றும் பேசி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.



அதை தெரிந்து கொண்டவனுக்கு, நிஷாந்தின் மேல் கொலைவெறி ஏற்பட்டது என்றாலும், அவனது மனதிற்கு அந்த செய்தி மகிழ்ச்சியைக் கொடுத்தது என்று சொன்னால் அது பொய்யில்லை. இருந்தாலும் ஒரு சின்ன பெண்ணின் மனதில் எதற்கு இப்படி ஒரு எண்ணத்தை விதைக்கவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.



அப்படி அவன் யோசித்ததில், ஷானு பேசிய வார்த்தைகள் எல்லாம் உலா வர ஆரம்பித்தன. “நிஷி எப்படித்தான் இவ்வளவு டேலண்டா இருக்காரோத் தெரியல, எவ்ளோ டவுட்ஸ் கேட்டாலும் உடனே கிளியர் பண்ணிடுறார் தெரியுமா.. என் பிரண்ட்ஸ் எல்லாரும் கேட்குறாங்க, நாங்கெல்லாம் தான் அவர் பின்னாடி சுத்துறோம் . ஆனா அவருக்கு உன்னை மட்டும் தான் தெரியுது.

உன்கிட்ட மட்டும் தான் ஜாலியா பேசுறார், சிரிக்கிறார் . உங்க ரெண்டு பேருக்குள்ள, அப்படி என்ன இருக்கு என்றெல்லாம் கேட்குறாங்க, என்னைப் பார்த்து அவங்களுக்குப் பொறாமை.”



அவள் கூறிய வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு சில சந்தேகங்களை கொடுக்க, அதை உறுதிப்படுத்த, நிர்மலை அழைத்தான். அவனும் சிபிக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் சரியே என்று உறுதிப்படுத்தினான்.




இனியும் தாமதிக்காது ஷானவியிடம் நிஷாந்த் பற்றிய உண்மைகளை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து அவளிடம் கூற, அவளோ அது எதையும் காதில் வாங்கவும் இல்லை, அவன் சொன்னதை நம்பவும் இல்லை..... அங்கே ஏற்பட்டது இருவருக்கும் விரிசல், அதன் பிறகு சின்ன சின்ன விசயத்திற்கும் கூட, பெரியளவில் விவாதங்கள் நடந்தன.




அடுத்து வந்த நாட்களில் ஆளுக்கொரு மூலையில் அவர்களது வாசம் தொடர, கலகலப்பான அந்த வீடு களையிழந்து அமைதியாக காட்சியளித்தது.



ஒருவாரம் கடந்த நிலையில், நள்ளிரவில் வித்யாவிடம் இருந்து ஷானுவுக்கு போன் வர, பதறியடித்து என்னவென்று கேட்க, வித்யாவின் அப்பா தீபக்கைக் கடத்திவிட்டதாகவும், அவளையும் ஹைதராபாத்திற்கு இரவோடு இரவாக அழைத்து வந்து, அவர் பார்த்த ஒரு மாப்பிள்ளையுடன் திருமணம் நடத்தப் போவதாகவும் கூறி அழ, கேட்டவளுக்கோ அடுத்து என்ன செய்வது என்றுத் தெரியாமல், வழக்கம்போல் சிபியை நோக்கி ஓடினாள்.



அவனோ கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்து, முகம் இறுகி, இதுவரை அவள் பார்த்திராத ஒரு தோற்றத்தில் இருந்தான். அதைக்கண்டவள் திகைத்துபோய் அப்படியே நிற்க, அவனோ அங்கு ஒருத்தி இருக்கிறாள் என்ற உணர்வே இல்லாதது போல, தன் நண்பர்களிடமும், சரணிடமும் தீபக் பற்றிய செய்தியைக் கூறி, அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை கூறிக் கொண்டிருந்தான்.

 
Top