EPISODE - 9
நீ தொலைபேசியில் பேசும்போது
சின்னதாய் உன்குரலில்
மாற்றமென்றாலும்,
நான் துடித்துப்போன காலங்கள்.....
உன் முகம் காணாவிட்டாலும் கூட
உன் முகவாட்டம் அறிந்து
என்னாச்சு என்னாச்சு என்று
இடைவிடாது நலம் விசாரித்த
காலங்கள்...
ஒருநாளாவது உன் குறும்தகவல்
வரவில்லையென்றால்,
செல்லமாய் சின்னச்சின்னதாய்
சண்டையிட்ட காலங்கள்......
இப்படி இன்னும் சொல்லாமல்
மனதோடுமட்டும் பூட்டிவைத்து
அழகுபார்க்கும் சம்பவங்கள்......
இவற்றையெல்லாம் தினம் தினம்
மனதுக்குள் மீட்டிப்பார்ப்பதில்,
எட்டிப்பார்த்த கண்ணீர்த்துளிகளின் ஈரம்
என் விழிவழி வழிந்து
தலையணை நனைத்து
தடாகமாகிப்போக
மிதந்துகொண்டிருக்கிறேன்
தண்ணீரில் அல்ல
என் கண்ணீரில்........!!!!
சின்னதாய் உன்குரலில்
மாற்றமென்றாலும்,
நான் துடித்துப்போன காலங்கள்.....
உன் முகம் காணாவிட்டாலும் கூட
உன் முகவாட்டம் அறிந்து
என்னாச்சு என்னாச்சு என்று
இடைவிடாது நலம் விசாரித்த
காலங்கள்...
ஒருநாளாவது உன் குறும்தகவல்
வரவில்லையென்றால்,
செல்லமாய் சின்னச்சின்னதாய்
சண்டையிட்ட காலங்கள்......
இப்படி இன்னும் சொல்லாமல்
மனதோடுமட்டும் பூட்டிவைத்து
அழகுபார்க்கும் சம்பவங்கள்......
இவற்றையெல்லாம் தினம் தினம்
மனதுக்குள் மீட்டிப்பார்ப்பதில்,
எட்டிப்பார்த்த கண்ணீர்த்துளிகளின் ஈரம்
என் விழிவழி வழிந்து
தலையணை நனைத்து
தடாகமாகிப்போக
மிதந்துகொண்டிருக்கிறேன்
தண்ணீரில் அல்ல
என் கண்ணீரில்........!!!!
இன்றோடு சிபி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து ஐந்து நாட்கள் முடிந்திருந்தது. இந்த ஐந்து நாட்களிலும் இரவு உறங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் சற்றும் அவனுக்கு ஓய்வு கிடைத்திருக்கவில்லை.
உள்ளூர் அரசியல்வாதிகளும், அவர்களுடன் ஒரு கூட்டமும் ஒருபக்கம் என்றால், சொந்தபந்தங்கள், தெரிந்தவர்கள், நட்பு வட்டாரங்கள் மறுபக்கம் என்று அவனை நலம் விசாரிக்கவென எந்த நேரமும் அவனைச் சுற்றி ஆட்கள் இருந்து கொண்டே இருந்தனர்.
இந்தக் கூட்டங்களினால் ஷானவியால் அவனிடம் இயல்பாய் கூட இருக்க முடியவில்லை. அவனோடு பழகிய நாட்களை விட, அவனை விட்டு விலகியிருந்த நாட்களின் ஞாபகங்கள் அடுக்கடுக்காய் அவளுக்குள் எழுந்து அவளை குற்றப்படுத்தியது.
அவனை வேண்டாமென்று ஒதுக்கி வைத்திருந்தாலும், கணவன் தன்மேல் வைத்திருந்த காதலை அறிந்தபோது, அவள் ஒதுக்கி வைத்த செயலை எண்ணி, சொல்ல முடியாத உணர்வுகள் எழுந்து அவளுக்குள் பெரும் பிரளயத்தை உருவாக்கியிருந்தது.
அவள் விலகி இருந்த நாட்களிலும், அவன் தன்னை ஒருநிமிடம் கூட நினைவுகளால் கூட விலக்கவில்லை என்பது அன்று மருத்துவமனையில், அந்த நிலையிலும், அவன் அவளைத் தேடியதை வைத்து புரிந்து, அதிர்ந்து போனாள் பெண்ணவள். அவனது அன்பை எண்ணி..!!
அந்த நொடிதான் அவளுக்குள்ளும் மரத்துப்போனாதாக நினைத்திருந்த அவளின் காதல் உணர்வுகள் ஆழிப்பேரலையாய் பொங்கி பெருகி, அவளை அதற்குள் இழுத்துச் செல்வதை உணர்ந்தாள் சுகமாக.
இத்தனை நாள் அவன்மேல் வைத்திருந்த அன்பு, வெறும் அன்பு மட்டுமல்ல... அதையும் தாண்டி தன் வாழ்நாள் முழுமைக்கும் தன் கணவனுக்கு மட்டுமே கொடுக்க கூடிய உண்மையான காதல் என்பதையும் புரிந்து கொண்டாள்.
அந்த நிமிடம் அவனது காதலின் உறுதியையும், தன்மேல் அவனுக்கு இருந்த அன்பையும் .உணர்ந்து, அவளுக்குள் இருந்த தடைகள் அனைத்தையும் உதறிவிட்டு, அவனுக்காக அந்த நொடியில் இருந்து அவன் விரும்பிய ஷவியாக மாற ஆரம்பித்தாள்.
இதில் அவனை விட்டு ஒதுங்கி அவன் விரும்பிய பெண்ணை மணக்க வைக்க வேண்டும் என்று தான் எடுத்த முட்டாள்தனமான எண்ணத்தை நினைத்து, அவளை நினைத்து அவளுக்கே வெட்கமாகி போய்விட்டது. அவனுக்கு தெரிந்தால் என்ன சொல்வான்....?? என்று யோசித்தவளின் எண்ணம் கணவனை வந்தடைய, அவன் தன்மேல் வைத்த அன்பை விட அதிகமாய் கணவன் மேல் அன்பைக் காட்ட வேண்டும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
ஷானவிக்கு தன் கணவனை நினைத்தும், அவன் செய்த செயலை நினைத்தும் பெருமையாக இருந்தது. அந்த நிலையிலும் ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கிறானே என்று அவனை நினைத்து அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் கரணம் தப்பினால் மரணம் என்ற சொல்லிற்கு ஏற்ப, அவனது செயல் சற்றே திசை மாறியிருந்தாலும் மற்றவரோடு அவனும் திரும்பக் கிடைத்திருக்க மாட்டான்.
அதை நினைத்ததும் அதுவரை அவனைப் பற்றி விலகிச் சென்ற பயமெல்லாம் மொத்தமாக வந்து, மீண்டும் அவளது அடி நெஞ்சில் பெவிகால் போட்டு ஒட்டிக் கொண்டது. அதோடு அன்று சிபிக் கிடைத்த தினமும், அதைத் தொடர்ந்து நடந்தைவகளும் மின்னலென அவளுக்குள் மின்னி மறைந்தது.
அன்று ஷானவி பழைய நினைவில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, திடீரென அந்த ஹாஸ்பிடல் வளாகம் பெரும் பரபரப்பைத் தொற்றிக் கொண்டது. என்ன..? என்ன..? என்ற அத்தனைப் பேரின் கேள்விகளுக்கும் பதில் கூறுவதுபோல், சிபியும் நாகேஷும் இருபது அடி ஆழத்தில், பனிப்புதரில் இருந்து, மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றப் பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக இருவருமே உயிருடன் இருப்பதாகவும், தாமதிக்காமல் முதலுதவியுடன் ராணுவ விமானத்தில் எடுத்து வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்த அந்த நொடி அங்குள்ளவர்களின் உணர்வுகளை வார்த்தையால் வர்ணிக்க முடியாது என்று சொன்னால் அது மிகையில்லை. அதிலும் ஷானு தன்னிடம் செய்தியைக் கூறிய இளமதியை அனைத்துக் கொண்டு அதுவரை அடைத்து வைத்திருந்த அழுகையை பெரும் கேவலுடன் வெளியேற்ற, அதைப்பார்த்த மற்றவரின் கண்ணிலும் கண்ணீரின் சாயல்.
அதன்பிறகு நடந்ததெல்லாம் கனவு போல் தோன்றியது அவளுக்கு. மருத்துவ உபகரணங்கள் புடைசூழ விமானத்தில் இருந்து கொண்டு வந்த இருவரையும், அடுத்த நிமிடத்தில் இருந்து அங்கிருந்த மருத்துவர்கள் தங்கள் கையில் எடுத்துக் கொள்ள, பரபரப்புடன் அவர்களின் சிகிச்சைத் தொடங்கியது.
அதுவரை மயக்கத்தில் இருந்த சிபி, விமானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் மாற்றும் போது சற்றே சுயநினைவு அடைய, அதிலும் தன் அருகே நின்றிருந்த தீபக்கின் கைகளைப் பற்றிக்கொண்டு “ஷவிக்கிட்ட சொல்லியாச்சா..” எனத் தனக்கு கிடைத்த முதலுதவியின் பலனாக சற்றே தினறலுடன் கேட்டான்.
கண்ணை மறைத்துப் பொங்கிய நீரை அவசர அவசரமாய் தன் புறங்கையால் துடைத்தவள், மின்னலென தீபக்கிடம் இருந்த அவன் கையை பிரித்து, தன் நெஞ்சோடு அலுத்தியவாறே “நந்து நான் இங்கதான் இருக்கேன்... உனக்கு ஒண்ணுமில்ல, யு ஆர் சேப்....” என மீண்டும் ஆறாய் பெருகிய நீரைகூட துடைக்கக் கூட தோன்றாமல், தான் அழுத்திய கையில் மேலும் அழுத்தத்தைக் கொடுத்து கணவனுக்கு நம்பிக்கையுடன் தன் இருப்பையும் கூறினாள்.
ஒரு நொடிக்கும் குறைவாக அவளையும், அவள் பிடித்திருந்த அவனின் கையையும் பார்த்தவனின் கண்கள் பிரகாசமாக, அது கொடுத்த நிம்மதியில் மனம் ஆழ்கடல் அமைதியை தத்தெடுத்து, தன் இமைக்கதவுகளை தாமாய் மூடிக்கொண்டான்.
அவன் மயங்கியதைக் கண்டு, தானும் ஒரு டாக்டர் என்பதையும் மறந்து பதற, அவளிடமிருந்து சிபியைப் பிரித்து காற்றை விட வேகமாய் அவனுக்கு சிகிச்சைகளைத் தொடங்கினர் அங்குள்ள மருத்துவர்கள்.
ஷானவி தானும் உள்ளே வருவதாக கூற, அங்கு அப்படி யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்று சொல்லி அவளை தடுத்து விட்டனர். மேலும் ஆகாஷும், தீபக்கும் நண்பனின் கூடவே இருப்பதால் பயம் வேண்டாம் எனக் கோரி அவளை ஆறுதல் படுத்தவும் தவறவில்லை..
அதன் பிறகு பலவித சிகிச்சைகளும், பலரின் பிரார்த்தனைகளுமாய் சேர்ந்து நீண்ட, நெடிய போராட்டங்களுக்குப் பிறகு சிபிக்கு மெல்ல நினைவு திரும்பியது.
அவனது உடலில் அடிகள் எதுவும் இல்லை என்றாலும், உறைநிலையில் இருந்த அவனது உடலின் பாகங்கள் அனைத்தும் இயல்புக்கு திரும்ப கடினமாக இருந்தது. இத்தனை மணி நேரத்தில் இவர்களது ரத்தம் எப்படி உறையாமல் இருந்தது என்பது அங்குள்ள மருத்துவர்களுக்கே ஆச்சரியம் தான்.
ஆறு நாட்களுக்கு சிபிக்கு அவசர சிகிச்சைத் தேவையாக இருந்தது. ஐசியுவில் இருந்து ரூமிற்கு மாற்றிய பின்னரும் கூட, அவனது சிகிச்சை மாற்றப்படவில்லை. அன்று ஷானவியிடம் பேசியதைத் தவிர, அவன் மற்ற யாரிடமும் பேசவில்லை என்பதை விட அவனால் பேச முடியவில்லை.
அவன் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை, அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டானே அதுவே போதும் என்று குடும்பத்தினர் அவரவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டனர். அதோ இதோ என்று பதினைந்து நாட்கள் கழிந்து விட, எந்தவித பிரச்சினைகளும் இன்றி சிபியை திருச்சி கிளம்ப தயாரானான்.
இந்த பதினைந்து நாட்களிலும் தேவைக்கு அதிகமாய் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை... இருவருக்குள்ளும் இருக்கின்ற பிரச்சினைகள் எந்த முடிவும் காணாமல் அப்படியே இருக்க, அதைப்பற்றி இப்போது பேசி மீண்டும் ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர்.
எந்த முடிவாக இருந்தாலும் கணவன் பூரண குணமடைந்த பிறகு தான் என்பதில் ஷாணவி தெளிவாக இருந்தாள். சிபியோ இப்போது இருக்கும் இந்த நிலையை கெடுக்க வேண்டாம், வீட்டிற்கு சென்றதும் பேசிக்கொள்ளலாம் என்பதில் அவனும் தெளிவாய் இருந்தான்.
வீட்டில் உள்ளவர்களோ இனி என்ன நடந்தாலும், இருவரையும் சேர்த்து வைத்து விட வேண்டும் என்பதில் முனைப்பாய் இருந்தனர். அவரவர்க்கான எண்ணங்களில் அவரவர் உழல... சிபி டிஸ்சார்ஜ் ஆகும் நாளும் இனிதே விடிந்தது.
டெல்லியில் இருந்து நேரடியாக விமானம் மூலம் திருச்சிக்கே வந்தடைந்தனர் அனைவரும்... என்னதான் சிபியை ஹாஷ்பிடலிலே பார்த்திருந்தாலும், அன்றைய நிலையை எண்ணி அவனைக் கட்டிக்கொண்டு அகிலா ஒருபுறம் அழ, அதைப்பார்த்து சரண் மற்ற அனைவருமே உணர்ச்சியின் பிடியில் சிக்கி கண் கலங்கினர்.
அந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற யாரும் முயலவில்லை. அவன் கிடைக்காமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும் என்ற எண்ணமே அங்குள்ளவர்களின் மனதை பிசைந்தது.
அதிலும் ஷானவி நடந்தது அனைத்தும் தன்னால் தான் என்ற குற்ற உணர்ச்சியில் இருப்பவள், மேலும் இதுவும் சேர்ந்தால், அவளது முடிவு என்னவாக இருக்கும் என்று யாராலும் யூகிக்க கூட முடியாது... அவர்களது நலனை எண்ணி பெரியவர்கள் யாரும் அந்தப் பிரச்சினையில் தலையிடவில்லை.
மல்லிகாவின் துணையோடு ஆதிராவும், நிலாவும் ஆர்த்தி எடுத்து, திருஷ்டி கழித்து உள்ளே அழைத்து வநதனர்... அதன் பிறகு அவனுக்கு மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவே நேரம் போதவில்லை... மேலும் ஷானவி என்றொருத்தி தன்னுடன் இருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு தோன்றவில்லை போலும்... அவளை கண்டு கொள்ளவே இல்லை அவன்...
பலமுறை அவனிடம் தனியாக பேச முயற்சித்தும், அதை அவன் தவிர்த்துக் கொண்டிருந்தான். முதலில் கூட்டத்தில் கவனிக்காமல் இருந்தவள், தனியறையிலும் தேவைக்கு அதிகமாய் அவளுடன் பேசாமல் இருந்ததை தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. இதையே தான் மூன்றாண்டுகளாக அவனுக்கு நாம் செய்தோம் என்பதை மறந்தவளுக்கு கணவன் மேல் கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றி திரிய, ஃப்ரிட்ஜின் மேல் சாய்ந்திருந்தவளை மல்லிகா வந்து உலுக்கி.. “ஷானு இங்க என்ன பண்ற, அங்க வந்தவங்களுக்கு ஜூஸ்தான கொண்டு வர சொன்னேன். நீ என்ன பண்ணிட்டு இருக்க, அதோட உன்னோட போனு வேற அடிச்சிட்டே இருக்கு பாரு... கைலதான வச்சிருக்க... அதை கூட உணராம என்னத்த யோசிச்சிட்டு இருக்க....” என்றவாறே ஜூசை கிளாசில் ஊற்றினார்.
“ம்ப்ச்.... ஒண்ணுமில்ல மல்லி.... சும்மாதான்... வித்தி தான் போன் பண்றா.... நான் அப்புறம் பேசிக்கிறேன்...” என்றாள் சலிப்பாக.
“என்ன ஷானு... சிபியை நினைச்சு வருத்தப்படுரியா.... அவனுக்கு ஒன்னும் இல்ல.... அவனும் நம்ம கண்ணு முன்னாடி நல்லபடியா நடமாடுறானே.. அப்புறமும் என்ன..? நீ மனசைப் போட்டு குழப்பாம, வந்தவங்களை கவனி...”
“ம்ம்ம் சரி மல்லி... கொடு... நான் போய் கொடுக்குறேன்..” என்று மல்லி சொன்னதை ஏற்றுக்கொண்டாலும், அவள் குரலில் சுரத்தே இல்லாததை கண்ட பெரியவர் “என்னம்மா நீ இன்னும் சிபி மேல கோபமாத்தான் இருக்கியா....? உனக்குள்ள என்ன ஓடுது...? நீ இப்போ என்ன யோசிச்சிட்டு இருக்க...? அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட வேண்டும் என்ற வேண்டுதலுடன் ஷானவியைப் பார்த்தார்.
மல்லியின் பேச்சைக் கேட்டு ஒரு நிமிடம் அமைதியான ஷானு “நான் அவன் மேல கோபப் படுவேன்னு நீ நினைக்கிறியா மல்லி, என்னால அது முடியுமா சொல்லு..? கோபம் தான்... ரொம்ப கோபம் தான்... ஆனா அது கண்டிப்பா அவன் மேல இல்லை... என்மேல்தான்.... அவனை இப்படி ஒரு நிலைக்கு தள்ளிவிட்ட என்மேல்தான் கோபம்.... நான் சரியா இருந்திருந்தா, அவனுக்கு இப்படி ஒருநிலையே வந்துருக்காது இல்லையா...? தப்பு எல்லாம் நான் செஞ்சது.... ஆனா தண்டனை அவனுக்கு.... இந்த குற்ற உணர்ச்சியே என்னை கொல்லுது....”
அவன் விரும்பின பொண்ணை விட்டு எனக்காக என வாழ்க்கையை காப்பாற்ற, அவன் வாழ்க்கையை விட்டுக் கொடுத்துட்டானே என்று தான் எனக்கு கோபம் மல்லிம்மா.... தான் உயிரா விரும்பின பொண்ணை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது, அதுதானே உண்மையான அன்பு, நேசம், காதல்...”
“ஆனா சிபி....? உயிரா நேசிச்ச அவளை எப்படி விட்டான் மல்லி....? எப்படி கஷ்டப்பட்டுருப்பா அந்தப் பொண்ணு.... ஒரு பொண்ணோட பாவம் நம்மளை சும்மா விடுமா மல்லி..? அவன் இப்படி செய்ததை என்னால் ஏத்துக்க முடியல மல்லிம்மா....” என்று குரல் உடைய கூறியவளின் மனம் அவருக்கும் புரிந்தது.
அவனை ஏற்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் அவள் மனதுக்குள்ளே பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள் என்பதும், அவளை இப்போது அதில் இருந்து மாற்றி வேறு கோணத்தில் யோசிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
தெளிவில்லாத அவளது முகத்தையும், பேச்சையும் பார்த்த மல்லிகாவிற்கு மிகுந்த வருத்தமாய் போய்விட்டது. அதன் பொருட்டு அவளிடம் மேலோட்டமாக அவர்களின் உறவுப் பற்றி விசாரிக்க, அவரின் அனைத்து கேள்விகளுக்கும் ஒருவித சலிப்புடனே பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
என்னதான் இருவரின் உறவிலும் எந்த முன்னேற்றமும் இல்லையென்று தெரிந்தாலும், தனியாக இருக்கும் போதும் கூட அதையே தொடர்வது சரியில்லை என்றே அவருக்குத் தோன்றியது.
இருவருமே அவர் பார்த்து வளர்ந்த பிள்ளைகள் தான். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஆளுக்கொரு துருவமாய் இருந்தது, அவர்களைப் பெற்றவர்களை விட வளர்த்த அவருக்கு அதிக வருத்தம் தந்தது.
அந்த வருத்தத்தை பலமுறை நிலாவிடமும், சரணிடமும் மனத்தாங்கலுடன் தெரிவிப்பார். இப்போது இருக்கும் சூழ்நிலையில், இந்த விபத்திற்குப் பிறகு இருவரும் தங்கள் வாழ்க்கையில் தவறான எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினார்.
அதோடு ஷானவி சிபியை நெருங்க முயல்வதும், அவன் அதை தவிர்ப்பதும் என்று அவரே சிலமுறை அவரே கண்டிருக்கிறார். அன்று அதை சரியாக புரிந்து கொள்ளாமல், சிபியை தவறாக நினைத்தவர், இன்று அவனின் செயலை மிகவும் சரியான கோணத்தில் புரிந்து கொண்டார்.
சிபிக்கு இப்போது இருக்கும் இந்த மனக்கிலேசத்தை மாற்ற ஷானவியால் மட்டுமே முடியும் என்பதையும் உணர்ந்தார். அது இப்போது இருக்கும் இந்த ஷானவியால் முடியாது, குறும்புத்தனம் மிகுந்த அருந்தவாழு ஷானவியால் மட்டுமே முடியும் என்பதையும் உணர்ந்தார்.
அவளுக்குத் தெளிவு வரும் வகையில், சிபியின் கோபத்தையும், இப்போது அவன் இருக்கும் நிலையையும் ஷானுவிடம் கூறி அவளை யோசிக்க வைத்தவர், போறபோக்கில் “சிபி அவன் லவ் பண்ண பொண்ணை விட்டுட்டான்னு உனக்கு யார் சொன்னா....? அவன் யாரை விரும்பினான்னு உன்கிட்ட சொன்னானா..? நீயா எதையாவது யோசிச்சு கிறுக்குத்தனம் பண்ணாத... ஹ்ம்ம் கொஞ்சம் யோசிச்சா உனக்கே புரியும்..!” என்று அவர் தலையில் வெடியைக் கொளுத்திப் போட்டுவிட்டு சென்றார்.
அவர் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டவள், கடைசியில் கூறியதைக் கேட்டதும், மனம் சொல்ல முடியாத வலியைத் தொட்டது. ஆனால் மல்லி ஏதோ பொடிவைத்து பேசியதுபோல் இருந்ததே... ஒருமுறை யோசியாமல் செய்த தவறை இந்தமுறையும் செய்யக்கூடாது... என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள் மூளையைக் கசக்கினாள்.
தனக்கு இன்பார்மர் வேலை பார்த்த ஆகாஷ் கூட இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என நினைத்துவிட்டு, யாரிடம் கேட்டால் சரியான பதில் கிடைக்கும் என்று நிதானமாக் யோசித்தவளின் மூளையில் பளிச்சென்று பல்ப் எரிய, தன் கையில் இருந்த போனில் வித்யாவை அவசரமாக அழைத்தாள்.
அவளது அவசரம் புரியாத வித்யாவின் அலைபேசியோ தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக கூறி அவளை மேலும் வெறுப்பேற்றியது... இரண்டு முறை அழைத்து பார்த்துவிட்டு உர்ரென்று நின்றிருந்தவளின் காதில் குழந்தைகளுடன் கணவன் பேசிச் சிரிப்பது தேனாய் வந்து விழுந்தது.
அவனைப் பார்க்கும் இடத்தில் வந்து நின்றுக் கொண்டவள், அவன் மேல் இருந்த கோபத்தையெல்லாம் விட்டுவிட்டு, முதன் முதலாய் மனைவியாய், காதலியாய் தன் கணவனை ரசிக்க ஆரம்பித்தாள் திருட்டுத்தனமாய்.
எதிரே இருந்த டீப்பாயின் மேல் கால்கள் இரண்டையும் தூக்கி வைத்துக்கொண்டு, குழந்தைகளோடு குழந்தையாக அமர்ந்து போகோ சேனலில் பீமின் வீர சாகசங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் சிபி.
(ஏன்பா டாக்குடரு உனக்கு எவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்து வச்சிருக்கேன்.... நீ என்னடான்னா சோட்டா பீம் பார்த்துட்டு இருக்க.... உன் குழந்தை பார்க்க வேண்டியதை நீ பார்த்துட்டு இருந்தா, நான் இந்தக் கதையை படிக்கிற மக்களுக்கு என்ன பதில் சொல்றது..? உன்னை ஹீரோவா போட்டு நான் படுற பாடு இருக்கே... அப்பப்பா முடியலடா சாமி....
ஹுஹும் இனி இவனை நம்பி பிரயோஜனம் இல்ல, நம்ம சிங்கத்தை களம் இறக்கிட வேண்டியதுதான்.. ‘Lets starts singam dance... ஹீஹீ நம்ம சிங்கத்தோட ஆட்டம் ஆரம்பம்....)
சரணின் இரட்டையர்கள் இருபுறமும் அமர்ந்திருக்க, அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும், சரியான பதில்களைக் கூறி அவர்களது சிகையைக் கலைத்து விளையடியவனின், சிகையை தன் கையால் கலைத்து விடத் தூண்டிய ஆசையை அடக்க பெரும்பாடு பட்டுப் போனாள் பாவையவள்.
இத்தனை வருடங்கள் பார்த்து பழகியவன் தான் என்றாலும், இன்றுதான் முதன் முறையாகப் பார்ப்பது போல் தன் கணவனையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனோ இது எதையும் கவனிக்காமல் டிவியில் கவனத்தை பதித்திருந்தான். அப்போது மீண்டும் ஷானுவின் போன் அலற... அதை எடுத்தவள் சிபி தன்னைக் கண்டு கொள்ளாத கோபத்தை அங்கு காட்டினாள்.
“என்னடி.... உன் டார்லிங் கூட இருக்கவும் எங்களை எல்லாம் மறந்துட்ட போல... மறுபடியும் சகுனி வேலை பார்க்கனுமா உனக்கு....? கால் பண்ணா கூட எடுக்க மாட்டேங்குற..?. என்ன மேட்டர்...? ஒரே ஜாலியோ ஜிம்கானதானா..? ஹனிமூன் ட்ரிப் எப்போ..? எந்த ப்ளேஸ் சூஸ் பண்ணிருக்கீங்க....?” – ஷானவி.
“ஹே போதும்... போதும் நிறுத்து..... என்ன தான் ஆனாலும் உன்னோட வில்லி புத்தி போகுதா பார்த்தியா.... உனக்கு திருந்துற ஐடியாவே இல்லையா..? உன் தொல்லை விட்டு இப்போதான் கொஞ்சம் என் டார்லிங்கோட நிம்மதியா இருந்தேன்... உடனே உனக்கு மூக்குல வேர்த்துடுச்சு.... பர்ஸ்ட் திருந்துடி....? பாவம் எங்கண்ணன்.... எப்படி உன்னை சமாளிக்கப் போறாரோ தெரியல...?- வித்யா
“என்ன வார்த்தை சொல்லிட்ட மச்சி... நான் திருந்திட்டா உலகம் என்னத்துக்கு ஆகுறது சொல்லு.... அதோட எல்லாரும் நல்லவங்களா போயிட்டா அந்த காட் பாவமில்ல, பிறகு நரகத்துல வேலை செய்றவங்களுக்கு என்ன வேலை இருக்கும், அதோட சொர்க்கத்துல இருக்குறவங்க ஓவர் டைம் ட்யுடி பார்க்கணும்... தேவையா இது... சொல்லு...? – ஷானவி
“அப்போ நீ நரகத்துக்குத்தான் போகப்போறன்னு உனக்கே கன்பார்மா தெரியுது அப்படித்தானே... ஹாஹா.... சூப்பர் மச்சி.... உன்னை மாதிரி எல்லாரும் இருக்க மாட்டாங்க டி....? – வித்யா
“ஹா..ஹா... நீ சரியா சொன்ன மச்சி...” – ஷானு
ஹேய் நிறுத்து... நிறுத்து... நீ சிரிக்கிறதே சரியில்லையே... என்னடி.... ஏதோ வில்லங்கம் இருக்கு போலயே நீ சிரிக்குறதுல... சொல்லிட்டு சிரி எரும... வழக்கம்போல எனக்குத்தான் பல்ப் கொடுத்தியா....” – வித்யா
“ஹாஹா மச்சி.... நான் கெட்டவன்னா.... உன்னையும் கெட்டவளாக்கி என் கூடவே நரகத்துக்குத்தான் கூட்டிட்டு போவேன்னு தெரியாதா உனக்கு... அப்புறம் நீ வந்தா உன் டார்லிங், என் அருமை புருஷன்.... இப்படி எல்லாரும் தானே வருவீங்க.... இதை நீ யோசிக்கவே இல்லையே மச்சி..” – ஷானு
“அட திமிர் பிடிச்சவளே..... எவ்வளவு வில்லத்தனமா யோசிக்கிற நீ.... உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.... எப்படியோ போய் தொல... உனக்கு ப்ரென்ட் ஆனதுக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்.... இனி என்ன என்ன கேட்க வேண்டி வருமோ தெரியல..... ரொம்ப பாவம் டி.. என் அண்ணனும், அவங்க பிள்ளைகளும்.....” – வித்யா
“அதுவந்து மச்சி... நான் மட்டும் அங்க போய் என்ன செய்றது சொல்லு அதுவும் தனியா...? சரி விடு மச்சி.... இதெல்லாம் புதுசா நமக்கு.... ஆமாம் அதென்ன உங்கண்ணன் பாவம், பாவம்னு சொல்லிட்டு இருக்க... அப்போ நான் பாவமில்லையா..? என்னமோ என் மேல ரொம்ப பாசம் அது இதுனு சொல்லிட்டு இப்போ என்னன்னா கண்டுக்க கூட மாட்டேங்குறான் உங்க நொண்ணன்..”
“சரி பேசலாம்னு போனா பேயைப் பார்த்த மாதிரி ஓடுறான்.... இதெல்லாம் சரியே இல்ல சொல்லி வை... நான் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் பார்த்துக்கோ.... அப்புறம் உங்கண்ணனுக்கு செய்கூலி சேதாரம் ஆச்சுன்னா நான் பொறுப்பு கிடையாது... என்னை யாரும் கேட்க கூடாது சரியா..” – ஷானு
“ஹேய்.. ஹேய் ரிலாக்ஸ் டி.... இப்போ எதுக்கு மூச்சு விடாம டைலாக் விடுற.... நீ நம்பினாலும் நம்பலைனாலும்எங்க அண்ணா பாவம் தான்..” – வித்தி
“அடியேய்...... என் கைல கிடைச்ச செத்தடி மகளே.... ஒழுங்கா அவன் யாரை லவ் பண்ணான், அநதப் பொண்ணு யாரு...? எந்த ஊரு..? எப்படி பழக்கம் எல்லாம் எனக்கு மெயில் பண்ணு..? இல்ல உனக்கு சகுனி வேலை பார்க்க கூட தயங்க மாட்டேன் நான்..” ஷானு
“ஏய் எருமைப் பிசாசே.... எப்பவும் இதே வேலையாத்தான் சுத்துரியா... போற போக்குல என் குடும்பத்துல கும்மியடிச்சிடாதே குண்டம்மா உனக்கு புண்ணியமா போகட்டும்... அப்புறம் அந்த பொண்ணு யாருன்னு அண்ணாக்கிட்ட தான் கேட்கணும்.... அது நீங்க ரெண்டு பெரும் பேசி தீர்த்துக்க வேண்டிய ப்ராப்ளம் குண்டுஸ்..”
“இதுல என்ன ஏன் கோர்த்து விடுற.... நான் யாருக்கிட்ட கேட்க முடியும்... காசிக்கு போனாலும் கருமம் போகாதுன்னு சொல்லுவாங்க, அது போலத்தான் இப்போ என் நிலைமையும்.... தீபக்கிட்ட கேட்டு பார்க்குறேன்... அவர் சொன்னா ஒகே.... இல்லைன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது சொல்லிட்டேன்...” – வித்யா
“ஹலோ... ஹலோ.... என்ன ரொம்ப பேசுற... பழசெல்லாம் மறந்துடுச்சா... என்னம்மா இப்படி சொல்ரீங்களேம்மா.... நீ கேட்டு உன் டார்லிங் ஒன்னு இல்லைன்னு சொல்லிடுவாரோ... இதை நாங்க நம்பனும்.... சும்மா நடிக்காதடி.... கேட்டு சொல்லு மச்சி... இந்த கிறுக்கன் ஓவரா பண்றான்... எப்போ பார்த்தாலும் ஒரு கிளாஸ் கஞ்சிய குடிச்ச மாதிரி விரைப்பா அலையுறான்...”.
“இவனை எப்படி அப்ரோச் பன்றதுனே தெரியல... ஆனா ரொம்ப பண்ணான்னு வை, நான் காண்டாகிடுவேன்... அப்புறம் அவன் பழைய ஷானவியத்தான் பார்க்க வேண்டி வரும் சொல்லிட்டேன்... மை பொறுமையை யுவர் ப்ரதர் ஓவர் சோதிச்சிங் மச்சி.....” – ஷானு.
“ஹாஹா என்ன மச்சி இப்படி புலம்புற... இப்போதான் சிபிண்ணா சரியான வழியில போறாருன்னு தோணுது... பட் ஐம் சோ ஹேப்பி டா... நீ இப்படி பேசி எவ்ளோ நாளாச்சு தெரியுமா... அண்ணா சீக்கிரம் உன்னை புரிஞ்சிப்பார்...”