• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் - 10

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
858
EPISODE -10

நீ மவுனமாய்
நகர்கிறாய்..
என் மனதிற்குள்
இரைச்சலை தந்துவிட்டு !!!
விரதம் கலைத்து
அமைதி கொடுத்திடு... வரம்கேட்டு
வழிமறிக்கிறேன்
முகம் மறைத்து செல்லாதே....!!!



“என்னங்க எல்லாமே எடுத்து வச்சிட்டேன்... வேற எதுவும் வேணுமான்னு பாருங்க, நான் குட்டீஷோட திங்க்ஸ் செக் பண்றேன்...” எனத் துணிகளை பேகில் அடுக்கியவாறே கூறினாள் ஆகாஷின் மனைவி மான்யா.

குட்டிஷோடது எல்லாம் நானேதான் எடுத்து வச்சேன். அதனால எதுவும் மிஸ் ஆகியிருக்காது. நீ டென்சன் ஆகாம மத்ததை எடுத்து வை. நான் ஸ்கூலுக்கு கால் பண்ணி லீவ் சொல்லிட்டேன். தீபாவளி ஹாலிடேசும் இருக்கு. சோ நம்ம ப்ளான்ல எந்த சேஞ்சும் இல்லை. நீ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சுடாதே...” என மனைவியின் தோளில் தட்டிவிட்டு மொபைலை நோண்ட ஆரம்பித்தான் ஆகாஷ்.

“என்னமோ பண்ணுங்க, நான் ஏன் சொல்றேனே உங்களுக்குப் புரியல. இங்க அத்தை மட்டும் தனியா இருப்பாங்க, கூட ஆள் இல்லன்னா சரியா மெடிசின் எடுத்துக்க மாட்டாங்க.”

“மறுபடியும் முடியாம போயிட்டா எவ்வளவு கஷ்டம். அதை யோசிக்க மாட்டீங்களா..” என தான் என்ன சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேங்குறானே என்ற எரிச்சலில் புலம்பினாள்.

சிபியைப் பார்க்க தீபக்கின் குடும்பமும், ஆகாஷின் குடும்பமும் ஒன்றாக சேர்ந்து போகலாம் என்று ப்ளான் செய்திருந்தார்கள். மாமியாரின் உடல்நிலைப் பொறுத்து இந்த ட்ரிப் வேண்டாம் என்று ஆகாஷிடம் பலமுறைக் கேட்டுக் கொண்டாலும், அவன் அதை ஏற்றுக் கொள்வதாயில்லை. கண்டிப்பாக போயே தீர வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறான் ஆகாஷ்.

“ஹேய் இப்போ அதுதான் உனக்கு பிரச்சினை என்றால், அதுக்கு ஆல்ரெடி நான் ஒரு வழி கண்டுபிடிச்சு வச்சிருக்கேன்.. அம்மாக்கிட்டயும் சொல்லியாச்சு... எல்லாமே ஓகே... சோ நோ பிராப்ளம். இது இல்லாம வேற என்ன பிரச்சினை அதை சொல்லு...” என்றான் மனைவியை சமாதானம் செய்யும் பொருட்டு.

“அமுதா அண்ணி வீட்டுலயோ, இல்ல ஆனந்தி அண்ணி வீட்டுலயோ விட வேண்டாம். அந்த ஐடியாவா இருந்தா கண்டிப்பா நான் ஒத்துக்க மாட்டேன்... அது இல்லாம வேற என்ன ப்ளான் பண்ணி வச்சிருக்கீங்க, நீங்க அதை சொல்லுங்க...” என்றாள் அவளும் விடாமல்.

“நீ சொல்றதுக்கு முன்னாடியே அதை நான் யோசிச்சிட்டேன். நானே அங்க விடமாட்டேன்.... அம்மாவும் அதை விரும்ப மாட்டாங்க.. அப்புறம் எங்கம்மாவை நாங்கதான் பார்த்தோம்னு ஊரெல்லாம் சொல்லிட்டு திரிவாங்க ரெண்டு பேரும்.”

“எதுக்கு வீணா அவங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை நம்மலே கொடுக்கணும். ஹ்ம்ப்ச் ரெண்டு பேரும் என்மேல பாசமா, நல்லாத்தான் இருந்தாங்க... எப்படி இவ்ளோ விசமா மாறினாங்களோத் தெரியல,” என்றான் சலிப்பாக.

“எல்லாமே என்னாலதான.... நான் வராம இருந்திருந்தா நிச்சயம் அண்ணிங்க ரெண்டு பேரும் உங்களை ஒதுக்கியிருக்க மாட்டாங்க இல்லையா..? என கணவனின் வருத்தமான பேச்சில், கண்ணில் குளம் கட்ட பேசியவளை முறைத்துப் பார்த்தான் ஆகாஷ்.

“உனக்கு எத்தனைத் தடவை சொன்னாலும் புரியாத மானு..? அவங்க என்னை ஒதுக்கல, நான்தான் அந்த ரெண்டு பேரையும் ஒதுக்கி வச்சிருக்கேன். முதல்ல நீ அதை புரிஞ்சுக்கோ.... அதோட இது எல்லாத்துக்கும் நீ காரணம்ன்னு யோசிக்கிறதை நிறுத்து.... எல்லா பிரச்சினைக்கும் நான் தான்... நான் மட்டும் தான் காரணம் புரியுதா..?”

“நான் உன்னை விரும்பித்தான் மேரேஜ் பண்ணிருக்கேன்... ஆனா நீ ஒரு சூழ்நிலைக்கைதியா என்னோடனான மேரேஜுக்கு ஓகே சொன்ன... இதுல உன்னோட தவறு எங்க இருந்து வந்தது....”

“எல்லா விஷயத்துலயும் பெமினிசம் பேசி பொங்குற நீ, பேமிலின்னு வந்தா மட்டும் சராசரி மருமகளா இருக்க... அது ஏன்..?” என்று பொரிந்து தள்ள, கணவனின் கோபத்தை பார்த்தவள் வழக்கம் போல் எதுவும் பேசாமல், அமைதியாக மீண்டும் துணிகளை அடுக்குவதில் கவனமானாள்.

மனைவியின் அமைதி அவனுக்குள் என்னவோ செய்ய, அவளின் பின்புறமாக இருந்து அனைத்து, அவள் தோளில் தன் நாடியைப் பதிக்க, அவளும் அவனுக்கு இசைவாக நிற்க, இருவருக்குள்ளும் சற்று நேரம் அமைதியே ஆட்சி செய்தது.

மனைவி எதுவும் பேசமாட்டாள் என்று உணர்ந்தவன், அவளை முன்புறம் திருப்பி “கோபமா...” என, அவளோ இல்லை எனும் விதமாக தலையை அசைத்துவிட்டு அவன் மார்பிலேயே சாய்ந்து கொள்ள, அவனும் அவளை இதமாக அனைத்துக் கொண்டான்.

இருவருக்குள்ளும் பேச்சற்ற மௌனம் அங்கே ஆட்சி செய்ய, மனதுக்குள் மிகப்பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது. ஆனால் அதை வெளிப்படுத்த இருவருமே முயற்சிக்கவில்லை..

இப்போதுதான் அவர்கள் வாழ்க்கை சற்றே சீராகியிருப்பதாக தோன்றியது.... இதில் மீண்டும் பழையதை பேசி, மறுபடியும் மனதை வருத்திக்கொள்ள இருவருமே தயாரில்லை.. இந்த நிமிடம் இதுதான் நிஜம் என்பதுபோல் அந்த அமைதியை ஆராதித்தனர்.

‘மனம் ஒரு குரங்கு’ என்பதை உண்மையாக்கும் பொருட்டு, தன் சகோதரிகள் நடந்து கொண்டதை நினைக்கும் பொழுது, ஆகாஷால் அதை ஜீரணிக்க கூட முடியவில்லை.
வருடத்திற்கு ஒருமுறை வந்து செல்வதால் வீட்டில் நடப்பது எதுவும் அவனுக்கு தெரியவில்லை. அது தெரிந்த நிமிடமும், தெரிந்த விதமும் இன்றும் அவனால் அதை நினைத்து பார்க்க கூட முடியவில்லை. ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டு அதை மறக்க முயற்சித்தான்.

கணவனின் பெருமூச்சில் நிமிர்ந்தவள் அவன் வேதனையைக் குறைக்க எண்ணி, அவனை இலகுவாக்கும் பொருட்டு, “என்ன Mr.ஆகாஷ் ஸ்டேன்டிங்லையே ஸ்லீப்பிங்கா....?” என்று கண்களைசிமிட்ட,

மனைவியின் எண்ணம் உணர்ந்து, அவள் கூறியது முதலில் புரிந்தாலும், புரியாது போல் விழித்தவன், பின் “ஹாஹா யாருடி உனக்கு இப்படியெல்லாம் பேச சொல்லிக் கொடுக்குறது..” என்று அவளின் மூக்கைத் திருக.....

அதில் வலி எடுத்து அவன் கையைத் தட்டி விட்டவள் “எத்தனைத் தடவை சொல்லியிருக்கேன் ‘டோன்ட் டச் மை நோஸ்ன்னு’, கேட்க மாட்டீங்களா...? என்றாள் தன் மூக்கைத் தடவியபடி.

“ஹ்ம்ம் நீ சொல்றதைக் கேட்கனும்னு தான் நினைக்கிறேன், ஆனா நான் என்னடி பண்ணட்டும். உன்னோட இந்த அழகான நிலா முகத்துல இந்த மூக்கு மட்டும் கொஞ்சம் பெருசா தெரிஞ்சி என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது..”

“என்னை டிஸ்டர்ப் பண்ற உன்னோட நோசை நான் டிஸ்டர்ப் பண்றேன். இதுல எனனத் தப்பு இருக்கு...” என அவளை சீண்டியபடியே மீண்டும் மூக்கை தொட வர, கணவனின் எண்ணம் புரிந்து, அவன் கையைத் தட்டிவிட்டவள்....

“உங்க விளக்கத்தைக் கேட்டு எனக்கு மெய் சிலிர்க்குது போங்க, செய்யாதீங்கன்னா... செய்யக்கூடாது, அதைவிட்டுட்டு வியாக்கினம் பேசிட்டு இருக்கீங்க.... உங்களை மாதிரியே உங்கப் பிள்ளைகளும்... சொன்ன பேச்சைக் கேட்குறதே இல்லை.” எனக் குறைப்பட்டாலும் அதில் பெருமையே இருந்தது.

“ஹாஹா இதுக்கு ஏண்டி கோபம்...? என் பிள்ளைங்க என்னை மாதிரி இருக்குறது உனக்கு கஷ்டமா இருக்கா..? இருந்தாலும் பரவாயில்லை கஷ்டப்பட்டுக்கோ..”

“அதுக்காக பிள்ளைகளை மாத்தணும்னு நினைக்காத ஓகே.... அவங்களை மாத்த நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்.... சரி அந்த பேச்சை விடு, மேட்டருக்கு வா... யாருக்கிட்ட கத்துக்கிட்ட இப்படி பேச.. ரொம்ப முன்னேற்றமா இருக்கே...” – ஆகாஷ்

“ம்ம் இதுக்கெல்லாம் ட்யுஷன் போயா கத்துக்குவாங்க..? தானா வருது... ஹாஹா.. அப்புறம் உங்க பாசமலர் சிஸ்டர்கிட்ட பேசிபேசியும் தான் நான் இப்படி ஆகிட்டேன்.. நானாவது பரவாயில்லை... உங்க பொண்ணுங்க கிட்ட அவ பேசி, இப்போ அதுங்க அவளையே மிஞ்சிடுவாங்க போல, அவ்ளோ வாய் பேசுதுங்க...” என்றாள்

“ஓகோ.... ஷானுவோட ட்ரெயினிங்கா.... அப்போ பிரச்சினையே இல்லை.. உன்னைக் கன்பார்மா, நான் பர்ஸ்ட் டைம் பார்த்த, என்னோட புரட்சிப்பெண் மான்யவா மாத்திடுவா... ஹா ஹா.. இதை முன்னாடியே செய்யாம விட்டுட்டேனே... செய்திருந்தா இந்நேரம் ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம் எங்கையோ போயிருப்போம்...” என்று பெருமூச்சு விட,

“ச்சீ... உங்களுக்கு விவஸ்தையே இல்லையா, இரண்டு குழந்தைக்கு அப்பா மாதிரி பேசுங்க...” என வெட்கத்தில் சிவந்த முகத்தை முறைக்க அவன் மேலேயே சாய....

“ம்ம் இதில் என்னடி விவஸ்தைக் கெட்டு போயிருச்சு... நமக்கு ஒரு சிங்கக்குட்டி வேண்டாமா...? என் பொண்ணுங்க வேற தம்பி பாப்பா கேட்டுட்டு இருக்காங்க, நானும் ரெடி பண்ணிட்டாப் போச்சு என்று ப்ராமிஸ் பண்ணிருக்கேன்..”

“புருஷன் கொடுத்த வாக்கை பொண்டாட்டி காப்பாத்தனுமா..? வேண்டாமா..? உன் ஹஸ்பன்ட் அசிங்கப்படுறதை உன்னால தாங்கிக்க முடியுமா சொல்லு... நான் வருத்தப்பட்டா நீயும் வருத்தப்படுவ...”

“உன்னைப் பார்த்து அம்மா... அப்புறம் நம்ம மூணு பேரையும் பார்த்து என் பொண்ணுங்க... இப்படி லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகும்... இதெல்லாம் தேவையா சொல்லு...? எனத் தன் முகத்தை அப்பாவியாக்கி கேட்டான் ஆகாஷ்.

“அடப்பாவி புருஷா... எதுக்கும் எதுக்கும் மேட்ச் பண்றீங்க... ஹாஹா உங்களை எல்லாம் சான்சே இல்லைங்க... எப்படி இதெல்லாம் யோசிக்குறீங்க...”

“யாருமே வருத்தப்பட வேண்டாம் என்றுதான் ஏற்கனவே நாம பேசி முடிவு பண்ணியாச்சே... அப்புறம் எதுக்கு இந்த வெட்டி டயலாக்ஸ்... ஹ்ம்ம் இப்போதான் டீனேஜ் பையன்னு நினைப்பு...” என அவனை கிண்டல் செய்ய,

“கள்ளி டீ நீ... ஐ நோ... ஐ நோ... நீ இப்படித்தான் சொல்லுவன்னு.. ஆனாலும் ப்ளான் எல்லாம் பண்ணிட்டு வேஸ்ட்டா போயிட்டா மாமன் மனசு உடைஞ்சி போயிடுமில்ல, அதான் கன்பார்ம் பண்ணிக்கிட்டேன்... ஹீஹீ...” என அவன் அசடு வழிய,

“ஹா..ஹா என் செல்லம், என் கண்ணை பட்டுடும் போல, அவ்ளோ அழ்க்கா இருக்கீங்க, அப்படியே ரொம்ப வழியுது அதையும் துடைங்க..” என மேலும் அவனை வம்பு செய்ய...

“நீ தான கிண்டல் பண்ற பண்ணிக்கோ... உனக்கு இல்லாத உரிமையா... அப்படியே அக்கறை இருந்தா அதை நீயே துடைக்குறது...” என அவன் மேலும் வழிய..

“ம்ம் இப்படி பேசி பேசியேத்தான் என்ன உங்க மேல பைத்தியமாக்கிட்டீங்க...” என அவளும் குழைய....

“ஹ்ம்ம் அப்படியா... நீ இப்படி பேசி பேசித்தான் என்னை டெம்ப்ட் பண்ற..” என்றவன் அவளது இடையை அழுத்தியவாறே, கழுத்தில் முகம் புதைக்க....

“என்ன பண்றீங்க.... விடுங்க, அத்தையும் சின்னக் குட்டியும் வீட்லதான் இருக்காங்க..” என்றது அவளுக்கே கேட்கவில்லை எனும்போது அவனுக்கு எப்படிக் கேட்கும்.

அவளது இடையில் பதிந்த கரங்கள் சற்றே எல்லை மீற, அவனது உதடுகள் தன் துணையத் தேடி பயணிக்க, இருவருக்குள்ளும் இருந்த தேடல் மெல்ல மெல்ல வெளிப்பட, அதைத் தடுக்கும் பொருட்டு கடிகாரத்தின் ஓசை மணி மூன்று என்பதை ஒலித்துக் காட்டியது.

அதில் சுயநினைவு வந்து அவனைவிட்டு விலகும் முயற்சியை எடுத்துக் கொண்டே “என்னங்க ஸ்கூலுக்கு டைமாச்சு... இப்போ போனாதான் டைம் சரியா இருக்கும்..” என

“ம்ம் போறேன்... போறேன்... ஒரு டூ மினிட்ஸ்...” என்று முனகியபடியே மீண்டும் மனைவியின் கழுத்தில் முகம் புதைத்தான் ஆகாஷ்....

“டூ மினிட்ஸ்ன்னா.... இந்த டூ மினிட்ஸ் நூடுல்ஸ்ல செய்ற இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி, இன்ஸ்டன்ட் கிஸ்ஸா....? இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் எல்லாம் ஹெல்த்துக்கு நல்லது இல்லையாமே... அதுமாதிரி இந்த இன்ஸ்டன்ட் கிஸ்ஸும் உடம்புக்கு ஒத்துக்காது... உங்களுக்குத் தெரியாதா..?” என குறும்புக் குரலில் அவனை வம்பிழுக்க....

“அடிப்பாவி பொண்டாட்டி.... நீயாடி இது....” என்று மனைவியின் முகத்தை பார்க்க, அவளோ குறும்புக் கொப்பளிக்கும் குரலில் “அடப்பாவி புருசனுக்கு, அடிப்பாவி பொண்டாட்டி... எப்படி...? இப்போ மேட்ச் ஆகுதா..? எனவும்

“ஹா ஹா... சான்சே இல்லடி, என் புரட்சி பொண்டாட்டி.... இப்போதாண்டி நீ என் மானுக்குட்டி...” என்றவன் அவளை மோகப் பார்வையுடன் தன்னருகே இழுத்தணைக்க,

தன் இடையை பற்றியிழுத்த ஒரு கையில் அழுத்தம் அதிகமாவதையும், மற்றொரு கை மெல்ல மெல்ல தவழ்ந்து கூந்தலுக்குள் நுழைவதையும் உணர்ந்தவளுக்கு, தன்னையும் மீறி உணர்வுகள் சிலிர்க்கத் தொடங்கின.

கூந்தலுக்குள் நுழைந்த கை, அவளது தலையை நகரவிடாமல்பற்றிக்கொள்ள, அவனுடையை இதழ்கள் தன்னுடையதை நெருங்குவதைக் கண்டாள்.

கண்களோடு கண்கள் கலந்து கொண்ட வேளையில், மயக்கத்தில் சிக்கிகொண்டவளின் இதழ்கள், தன் துடிப்பின் மூலமாக சம்மமதத்தை தெரிவித்தன. அவள் கைகளும் அவனுடைய கழுத்தை வளைத்து, தன் முகத்தை நோக்கி மேலும் இழுத்தன.

மிக மிக மென்மையாக நெருன்கியவனின் இதழ்கள், பட்டுப் போலத் தடவ தடவ, அதில் ஏற்பட்ட பரவசத்தால் அவளது கண்கள் தாமாக மூடிக் கொண்டன. அவளையும் அறியாமல் ரசனையான அம்முத்தங்களுக்கு பதிலளிக்க தொடங்கினாள்.

பிணைந்தும், பிரிந்தும் இதழ்கள் செய்த யுத்தத்தில் விவரிக்க முடியாத மென்மையும், காதலும் கலந்திருந்தது. இருவரும் அவர்களுக்கே உண்டான உலகில் சஞ்சரிக்க, அவனது அலைபேசி அழைத்து அதன் இருப்பைக் காட்டியது....

உலகத்தில் உள்ள அத்தனை சாபத்தையும், அழைத்த நபருக்கு கொடுத்துவிட்டு, தன்னிடமிருந்து விலகியவளை மீண்டும் ஒருமுறை இறுக்கி அணைத்துவிட்டுக் கிளம்பினான்.

“என்னங்க ஸ்பீடா போகாதீங்க, வரும்போது பாப்பாவோட டிரஸ் கலெக்ட் பண்ணிட்டு, நான் சொன்ன மத்த திங்க்சும் வாங்கிட்டு வந்துடுங்க. ஒரே வேலையா முடிஞ்சிடும்..” என்றவளுக்கு, கணவன் கொடுத்த முத்தம் தந்த இதத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை.

மனைவியின் நிலைப் பார்த்து குறும்பாய் நகைத்தவன், அவள் எதிர்பாரா நேரம் கண்சிமிட்டி, ஒரு பறக்கும் முத்தத்தையும் பரிசளித்து விட்டு பறந்தான் அந்தக் காதல் கணவன்.

கணவனின் செயலில் மேலும் மேலும் சிவந்தவள், அவனிடம் இருந்து தன் முகத்தை மறைக்கும் பொருட்டு தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள்.

அவளை நினைத்து அவளுக்கே சிரிப்பு வந்தது... நானா இது..? வயதுப்பிள்ளை போல, விவரம் தெரியிற அளவுக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, அதையெல்லாம் மறந்துட்டு என்ன ரொமான்ஸ் கேட்குது என்று ஒரு மனம் வசை பாட, மறுமனமோ இப்போதான் நான் அவரை சரியா புரிஞ்சி நடந்துக்குறேன்.

நான் இப்படி இருக்குறது தான் அவருக்கு சந்தோசம்... ஆகாஷும் இதைத்தானே விரும்பினார். என்னை மேரேஜ் பண்ணதைத் தவிர, வேற எந்த தப்பும் செய்யலையே... இதுவரை அவரை கஷ்டப்படுத்தியதெல்லாம் போதும்...

இனியும் ஒரு கஷ்டம், அது என்னால கண்டிப்பா அவருக்கு வரக்கூடாது... என்று நினைத்தவளின் மனம் தான் அவனை மணந்த நிகழ்வை மனதுக்குள் ஓட்டி பார்த்தது.
 
Top