அத்தியாயம்- 14
--------------------------------
அன்பே உன் பார்வையின் சந்திப்பில்
என் பயணம் துவங்குகிறது..!
எத்தனையோ வழி இருந்தும்
உன் விழி சாயலை நோக்கி
என் பயணம் துவங்குகிறது..!
திரும்பி பார்த்து உன்னுடன்
என்னை சேர்ப்பாயா..
வரும் காலத்தை என்னுடன்
இனிமையாக கழிப்பாயா...!
மனம் குளிரும் வகையாய்
மரணம் வரை உனைக் காப்பேன்.!
ஞபாகம் என்ற ஒன்றை உனக்காக
செலவு செய்வேன்.. நீ எனக்காக
என்றால் என் வாழ்வை எளிதாக
குறைக்க முடியாது எமனாலும்...!
மீண்டும் உன்விழி வழியாக என்னைப் பார்
மீண்டு வருகிறேன் நமக்காக....!!
--------------------------------------------------
--------------------------------
அன்பே உன் பார்வையின் சந்திப்பில்
என் பயணம் துவங்குகிறது..!
எத்தனையோ வழி இருந்தும்
உன் விழி சாயலை நோக்கி
என் பயணம் துவங்குகிறது..!
திரும்பி பார்த்து உன்னுடன்
என்னை சேர்ப்பாயா..
வரும் காலத்தை என்னுடன்
இனிமையாக கழிப்பாயா...!
மனம் குளிரும் வகையாய்
மரணம் வரை உனைக் காப்பேன்.!
ஞபாகம் என்ற ஒன்றை உனக்காக
செலவு செய்வேன்.. நீ எனக்காக
என்றால் என் வாழ்வை எளிதாக
குறைக்க முடியாது எமனாலும்...!
மீண்டும் உன்விழி வழியாக என்னைப் பார்
மீண்டு வருகிறேன் நமக்காக....!!
--------------------------------------------------
பெங்களூர் நோக்கி பறந்து கொண்டிருந்தது அந்தக்கார். காரின் வேகத்திலேயே, அதை ஓட்டுபவனின் கோபம் தெரிந்தது உடன் பயனிப்போருக்கு. கார் தொடர்ந்து அதே வேகத்தில் செல்வதை உணர்ந்து, கொஞ்சமே கொஞ்சம் தைரியத்தை திரட்டி “நந்து ப்ளீஸ் ஸ்பீடைக் குறை, எனக்கு வாமிட் வர மாதிரி இருக்கு” என்றாள் ஷானவி.
அவளின் முனுமுனுப்பிற்கு, முன்பக்கம் இருந்த கண்ணாடியின் வழியிலேயே தீப்பார்வை ஒன்றை அவளை நோக்கி வீசிவிட்டு இன்னும் வேகத்தைக் கூட்டி சாலையில் கவனம் வைத்தான் சிபி.
வண்டியின் வேகம் அதிகம் ஆனதால், நல்ல உறக்கத்தில் இருந்த தீபக் முழித்து சுற்று முற்றும் பார்த்து “ஏன் மச்சான் பார்முலா-1 ல எதுவும் பார்டிசிபேட் பண்ண போறியா...? என்றதும், சிபி அவனையும் முறைக்க... “இப்போ எதுக்கு கண்ணகி ரேஞ்ச்ல லுக்கு.... நான் ஏன் அப்படி கேட்குறேனா மச்சான், இவ்ளோ ஸ்பீடா போறியே அதான் வேற ஒண்ணுமில்ல...” என மீண்டும் அவனை வம்பிழுக்க,
‘இப்படியே பேசிட்டு இருந்தா பாதி வழியில் இறக்கி விட்டுட்டு போயிட்டே இருப்பேன்..’ என்ற லுக்கை தீபக்கை நோக்கி சிபி வீச, அவன் எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்ட நண்பனும், அவனை விட்டு ஷானவியின் புறம் திரும்பி அமர்ந்தான்.
சிபியின் முறைப்பை கிடப்பில் போட்டுவிட்டு, பாவமாய் அமர்ந்திருந்த ஷானவியைப் பார்க்க, அவள் தீபக்கை பார்த்து ஒரு அப்பாவி லுக் விட... என்ன முயன்றும் அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை... அவளைப் பார்த்து பக்கென்று சிரித்து விட்டான்....
‘டேய் ஏதோ தெரியாம ஒரு தப்பு செஞ்சுட்டேன்... அதுக்கு இவன் பண்ற அலப்பறை பத்தாதுன்னு நீயும் சிரிக்கிரியா, சிரிடா.... நல்லா சிரி, உன் டார்லிங்க வச்சு உன்னை மடக்குறேன்டா... இப்போ சிரிச்சதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உன்னை புலம்ப விடுறேன்டா...நீ புலம்பறதைக் கேட்டாதான் டா எனக்கு ஹேப்பி...’ என்று மனதிற்குள்ளேயே தீபக்கிற்கு சபதம் எடுத்தவள் வெளியே மட்டும் தன் அப்பாவி பார்வையை மாற்றவே இல்லை...
பின்னே உள்ளே நினைத்ததெல்லாம் வெளியில் சொன்னால், ஏற்கனவே அவன் கோபத்தின் உச்சியில் இருக்கிறான்.. இதையும் கேட்டால் என்ன செய்வானோ என்ற பயத்தில் அமைதியாக இருக்க, தீபக்கிற்கு இது வசதியாகிப் போனது.
ஷானவியின் அமைதி சிபிக்கு, அவள் மனதிற்குள் நண்பனுக்கு சாபம் விடுகிறாள் என்று புரிந்தது, நண்பனின் நிலையையும், அவளிடம் மாட்டி அவன் படப்போகும் அவஸ்தையையும் எண்ணி லேசாக சிரிப்பு கூட வந்தது.
இது எதையும் அறியாத தீபக் அவளை பார்த்து “ஏன் குள்ளச்சி இப்படி போற இடத்துல எல்லாம் மானத்தை வாங்குற, அப்போவே சொன்னேன் சிபிகிட்ட இவ வேண்டாம்னு. கேட்டாதானே...”
“போயும் போயும் ஒரு சின்ன புள்ளைக்கிட்ட பறிச்சு சாப்பிட்டுருக்கியே வெக்கமா இல்ல... அந்த குட்டிப்பொண்ணு பாவம் தான.... நல்ல வேளை அவங்க அம்மா பார்க்குறதுக்குள்ள மேனேஜ் பண்ணிட்டோம். பார்த்திருந்தா என்ன ஆகி இருக்கும்... அசிங்கமா போயிருக்கும்...” என்று மேலும் மேலும் அவளை கடுப்படிக்க,
அதில் காண்டானவள் “இதோ பாரு... இப்போ நீ வாயை மூடிட்டு வரியா, இல்ல அப்படியே கீழே தள்ளிவிடவா... நானும் தப்பு செஞ்சுட்டேமேனு அமைதியா வந்தா ரொம்ப பேசிட்டு இருக்க... என்ன நடந்ததுன்னு தெரியாம நீயா ஏதாச்சும் புலம்பாத சரியா... நானே ஒரு குட்டிச்சாத்தான் கிட்ட மாட்டி எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாம முழிச்சிட்டு நின்னப்போ தான் நீங்க வந்தது...” என்று பொரிய... நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இதெல்லாம் அவர்களுக்கு தெரியாது, அவர்கள் நினைத்தது அந்தக் குட்டிப்பெண்ணிடம் இருக்கும் ஐஸ்க்ரீமை இவள் பிடுங்கி சாப்பிட்டாள். அதனால் அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்தது என்பது மட்டுமே... இவள் கூறியது புதிதாக இருக்க, இருவரும் அவளையேப் பார்க்க, அவளோ தன் இமேஜ் எப்படி அந்த சின்னப்பெண்ணிடம் டேமேஜ் ஆனது என்று கூறினாள்.
பங்க்ஷன் முடிந்து எல்லோரும் ஓய்வாக அமர்ந்திருக்க, காவேரியின் நச்சரிப்பால் அவளது வீட்டிற்கு சென்றாள் ஷானவி யாரிடமும் சொல்லாமல். அங்கு சென்று வீட்டில் அனைவரிடமும் பேசி, அவர்கள் வீட்டிலும் ஜூஸ், ஸ்நேக்ஸ் என்று எல்லாத்தையும் ஒரு பிடி பிடித்து விட்டாள்.
அது இதெல்லாம் சேர்ந்து அவளுக்கு ஏதோ செய்ய, வாமிட் எடுத்தால் நன்றாக இருக்கும்போல் இருக்க... வீட்டின் பின்புறம் சென்று ஓங்கரித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த அந்த குட்டி சுபி “அக்கா உங்களுக்கு என்னாச்சு... வாந்தியே வரல, ஆனா வந்தி எடுக்குற மாதிரி செய்றீங்க” என,
திரும்பி அந்த சுபியை ஒரு பார்வை பார்த்து விட்டு “ஏதோ சாப்பிட்டது சேரல போல பாப்பா... வாந்தி வர மாதிரி இருக்கு வரல..”எனவும்
“அக்கா இருங்க.. இப்போ வரேன்... என்று ஓடிய சுபி கையில் ஒரு லெமனைக் கொண்டுவந்து கொடுத்து “இதை நல்லா மூக்குல வச்சு உறிங்க... அந்த வாசனைக்கு வாந்தி வராது, எங்க பாட்டி சொல்லிருகாங்க...” என்றதும் ஷானவி அதை வாங்கி முகர்ந்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் நன்றாக இருப்பது போல் தோன்ற சுபியைப் பார்த்து புன்னகைத்த படியே “தேங்க்ஸ் குட்டி...” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“அக்கா உங்களுக்கு வாமிட் வராம செஞ்சேன் இல்ல. அதுக்காக நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா... ப்ளீஸ்.”
குழந்தையின் பேச்சில் சிரிப்பு வந்துவிட, சிரித்துக்கொண்டே “ஹெல்பா...? உனக்கா..? என்ன செய்யணும் சொல்லு, கண்டிப்பா செய்றேன்..” என்றாள் ஷானவி.
“எங்க வீட்டு ப்ரிட்ஜ்ல ஒரு ஐஸ்க்ரீம் இருக்கு அதை எடுத்து தறீங்களா....”
“ஐஸ்க்ரீமா.... அதும் உங்க வீட்லையா.... அப்போ உங்க வீட்ல யாரும் இல்லையா.... நான் வந்தா திட்ட மாட்டாங்களா...?” சற்றே அதிர்ச்சியாகக் கேட்டாள்.
“ஹ்ம்ம் க்கா.... யாரும் இல்லை, அம்மா தான் எடுத்துக்க சொன்னாங்க... இப்போ அம்மா இல்ல, வெளிய போய்ட்டாங்க, அந்த டோர் ஓபன் பண்ண முடியல, நீங்க வந்து எடுத்து கொடுங்க... ஒன்னும் சொல்ல மாட்டாங்க அம்மா...”
“ஓ.... ஓகே ஓகே.... நான் வந்து எடுத்து தரேன்... உங்க அம்மா எடுத்துக்க சொன்னாங்கதானே..” என்றதும் குழந்தை எல்லா புறமும் தலையை உருட்டியது. குழந்தையின் ஆட்டலில் சிரித்தபடியே அவளின் தலையை பிடித்து செல்லமாக முட்டியபடி சுபியின் வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
அதன்பிறகு எதுவும் சொல்லாமல் ஷானவி அமைதியாகி விட, தீபக் தான் “அவளுக்கு வச்சிருந்ததை தான் நீ பிடிங்கி சாப்பிட்டியா...? என்று ஆர்வம் தாளாமல் கேட்க...
இல்லை எனும் விதமாக தலையாட்டிவிட்டு... “அந்த வீடே அந்த குட்டிச்சாத்தான் வீடு இல்லையாண்டா...” என்றாள் அழுகுரலில். என்ன... என்று இருவரும் அதிர்ந்து விழிக்க, அவளோ “அது அவ அத்தை வீடாம்..... அதோட அவ எனிமியும் அங்கதான் இருக்காளாம். அந்த எனிமியோட ஐஸ்க்ரீமாம்... அவ ஏமாந்து போகணும்னு... யாருக்கும் தெரியாமா எடுக்க ட்ரை பண்ணிருக்கா..... டோர் ஓபன் ஆகல.. அதுக்காக என்னை யூஸ் பண்ணிருக்கா...”
“நானும் அவ சொன்னதை நம்பி எடுத்துக் கொடுத்த நேரம் அவங்க ஆன்டி வந்துட்டாங்க, அவங்ககிட்ட இருந்து தப்பிக்க என்னை கோர்த்துவிட்டுடுச்சு.... அப்புறம் எல்லாரும் என்னை திருடி ரேஞ்சுக்கு பேச, காவேரிக்கா வந்து தான் என்னைப்பத்தி சொல்லி காப்பாத்தினாங்க...”
“அதெல்லாம் கூட ஓகே தான், ஆனா கடைசியில ஒன்னு சொல்லுச்சு பாரு அந்த கேபி... அக்கா உங்களுக்கு சாப்பிடறதுக்கு இருக்குற அறிவு வேற எதுலையும் இல்ல... நீங்க எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டீங்க’.. அப்படின்னு கலாய்க்குதுடா.... எனக்கு வந்த கோபத்துல அது மண்டையிலேயே ஒரு கொட்டு வச்சிட்டு, அந்த ஐஸ்க்ரீமையும் பிடுங்கி சாப்பிட்டுட்டேன்... எப்படி இந்தமாதிரி பிள்ளைங்க டிசைனாகுறாங்க...” என்றாள் தீவிரமாய் யோசித்தபடி..
“உன்னை மாதிரி ஒரு டிசைன் இருக்கும்போது, அந்த மாதிரியும் இருக்கலாம் தப்பில்லை... போயும் போயும் ஒரு சின்னபிள்ளைக்கிட்ட ஏமாந்து பல்ப் வாங்கிட்டு வந்துட்டு, அதையும் வெட்கமே இல்லாம சொல்ற.. நீயெல்லாம் என்ன டிசைன்...” என்று மேலும் அவளை சீண்டி வம்பிழுக்க...
நண்பனின் கிண்டலில் சிபிக்கும் சிரிப்பு வந்து விட்டது... ‘இவ எப்போ வளர்ந்து, எப்போ என் லவ்வை புரிஞ்சு... ஷப்பா... இப்போவே கண்ணை கட்டுதே’ என்று மனதிற்குள் புலம்பிய நேரம்..
“டேய் இன்னைக்கு உன்னை என்ன பண்ண போறேன் பாரு, நானே எவ்ளோ பீலிங்ல இருக்கேன். ஒரு குட்டிச்சாத்தான் என்னை ஏமாத்திட்டான்னு... நீ என்னையவே கலாய்க்குரியா... இடியட்.. இனி நீ வாயைத்திறந்து பாரு... உன்னை ஸ்ட்ரைட்ட சொர்க்கத்துக்கு பார்சல் பன்றேன்..” என்று அவன் கழுத்தைப் பிடிக்க பாய்ந்தாள்.
“அய்யோ கொலை.. கொலை..” என்ற தீபக்கின் சத்தத்திலும், பின்சீட்டில் இருந்து முன்னே பாய்ந்த ஷானவியின் செயலிலும் சிபியின் கையில் கார் தடுமாற்றம் கண்டது. பெருமுயற்சி செய்து கண்ட்ரோலில் கொண்டுவந்து சாலையின் ஓரம் வண்டியை நிறுத்திவிட்டு இருவரையும் திட்டி தீர்த்துவிட்டான்.
எதாவது ஆகியிருந்தால் நினைக்கவே பயமாய் இருந்தது... இரவு நேரம் வேறு... உதவிக்கு கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள். கோபமாக திரும்பி ஷானுவைப் பார்த்தால், திகைத்த பார்வையுடன் உறைந்து போய் அமர்ந்திருந்தாள். அவளது பயந்த பார்வையைப் பார்த்தபிறகு அவனும் வேறெதுவும் பேசவில்லை.
தீபக்கை கார் எடுக்க சொல்லிவிட்டு, ஷானவியின் புறம் அமர்ந்து அவளை அணைவாக பிடித்துக்கொண்டான் சிபி. “சாரி நந்து... நான் இப்படியாகும்னு நினைக்கல... சாரி..” என அழுகுரலில் கூறவும்...
“பரவாயில்லை விடு... இனி இப்படி டிரைவிங்ல விளையாடாதே புரியுதா...” என்றதும், “ஹ்ம்ம்...” என்றபடி அவன் தோளிலே சாய்ந்து கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். இதை எதிர்பார்க்காத அவனும், சிறு தயக்கத்துடனே அவளை லேசாக அணைத்துக்கொண்டான் இதழில் தோன்றிய புன்னகையுடன்.
“ஒரு சின்ன பையன் இருக்கேன் பக்கத்துல, பார்த்து உன் ஜொள்ளை கொஞ்சம் ஸ்டாப் பண்ணு.....” என்றான் கடுப்புடன் தீபக்.
நன்பனின் பேச்சில் சிரிப்பு வந்துவிட.... “ஹாஹா நீ சின்ன பையனா.... அன்னைக்கு மட்டும் விட்டுருந்தா இந்நேரம் ஒரு புள்ளையே பெத்திருப்ப.... நீ பச்ச புள்ளை.... நம்பிட்டேன்... அதோட என்னைப் பார்த்து வயிரெறியாத... உன்னோடது கன்பார்ம்... என்னோடது...” கட்டைவிரலை கீழ்நோக்கி காட்டிவிட்டு “எனக்கு இப்படித்தான் எப்பவாச்சும் சான்ஸ் கிடைக்கும். அதை எப்படி மிஸ் பண்ண....” விளையாட்டாய் ஆரம்பித்து மனதில் தோன்றிய வலியுடன் முடித்தான் சிபி.
“ம்ப்ச்... விடு.... நாங்க எல்லாம் இருக்கும்போது அப்படி விட்டுருவோமா என்ன..? நீயும் இன்னும் எதனை நாளைக்கு இப்படி இருக்க போற... எல்லாத்தையும் மீறி இவ போயிட்டா என்ன பண்ணுவ... இந்த லூசுக்கு எப்போ அந்த நிஷாந்த் பைத்தியம் தெளியும்..” என்றான் தீபக் எரிச்சலாக.
நண்பனின் பேச்சில் இருந்த உண்மை புரிந்ததால், அவனிடம் இருந்து ஒரு பெருமூச்சு வெளியேறியது. “சீக்கிரம் எல்லாம் சரியாகும்... இல்லைன்னா சரியாக்கிடுவேன்... என் சவி என்னை விட்டு போகமாட்டா... போகவும் விடமாட்டேன்” ஒருவித இறுக்கத்தில் உறுதியாய் கூறினான் சிபி.
சிபியின் உறுதியை எண்ணி வியந்த தீபக் எப்படி என்பது போல் பார்க்க, “அவன் ஆல்ரெடி என்கேஜ்ட் மச்சி... இன்னும் டூ மந்த்ஸ்ல அவனுக்கு மேரேஜ். உன்னோட வெட்டிங்க்கு 3 வீக்ஸ் அப்புறம் தான் அவனோடது. பொண்ணு கோவா... பெரிய இடம்...” என்று சொல்ல
“உனக்கெப்படி தெரியும்....” என்றான் ஆர்வம் தாளாமல் தீபக்.
“ஓசி சரக்கு கிடைச்சா போதும்னு எல்லா பார்டியும் அட்டென்ட் செய்யக்கூடாது.. ஏன்..? எதுக்குன்னு..? கொஞ்சமே கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கணும்..” என்று தோழனை வாரியவன், “அந்த பொண்ணோட அப்பா யாரு தெரியுமா..? நம்ம RMO தான்..” என்று புன்னகைக்க...
தீபக்கின் முகத்தில் பல்ப் பிரகாசமாய் எரிந்தது... “எஸ் ஐ காட் டிட் மச்சான். அந்த வழுக்கைத் தலையன் பொண்ணு சுஷ்மியா.. ஓ மை காட்... நம்மளையும் இன்வைட் பண்ணிருக்கார் தான... பட் இந்த மைதா மாவு தான் அந்த ஹீரோனு உனக்கெப்படி தெரியும்...” அதே ஆர்வத்துடன் கேட்க....
“அந்த பார்டில மைதாவைப் பத்தி சிலர் பொறாமையும், சிலர் பெருமையாவும் பேசுறதைக் கேட்டேன்.. எனக்கும் அந்த நல்லவனை பார்க்கணும் போல ஆர்வம்.. அதான் ஆபிஷர் கிட்ட கேட்டு அந்த போட்டோவை பார்த்தேன்... அப்போ நான் எப்படி பீல் பண்ணேன் தெரியுமா..? ஐ வாஸ் சோ ரிலாக்ஸ்ட்.... இப்போ கொஞ்சம் தைரியம்மா இருக்கேன்... பார்ப்போம்...” என்றவனின் குரல் உள்ளே போயிருந்தது.
“ஹே மேன்... என்ன நீ... கிட்டத்தட்ட சக்ஸஸ் ஸ்டேஜ்க்கு கொண்டு வந்திட்ட... ஏண்டா இன்னும் பிடில் வாசிக்கிற...”
“நீ நினைக்கிற மாதிரி இல்ல, இனிதான் ப்ராப்ளமே ஸ்டார்ட் ஆகப்போகுது.. நிஷாந்தைப் பத்தின உண்மைகள் அவளுக்கு தெரிய வரும்போது ஷானுவோட ரியாக்சன் எப்படி இருக்கும். அவ எப்படி பீல் பண்ணுவா... ஈசியா அதிலிருந்து வெளியே வந்துடுவாளா...? இல்லை வேறமாதிரி முடிவெடுப்பாளா...? எனக்கே தெரியல...”
“என்ன மச்சான் இப்படி சொல்ற, அவ என்ன செய்றா, அடுத்து என்ன செய்ய போறா, எல்லாமே உனக்கு அத்துப்படி... அப்படி இருக்கும் போது நீயே நெகடிவா யோசிச்சா என்ன செய்ய....”
“ஹ்ம்ப்ச்... எல்லாம் தெரிஞ்சும் நிஷாந்த் விஷயத்தில் கோட்டை விட்டு, என்னோட எண்ணத்துல மண் விழல.... அதுமாதிரி எதுவும் நடந்துட்டா..? இனி எதுவும் பேச வேண்டாம்... அவ கோவா டூர் போயிட்டு வரட்டும்... அப்புறமா அந்த நிஷாந்த் மேட்டர் டீல் பண்ணிடுவோம்..”
“அதுவும் சரிதான்.... வெயிட் பண்ணித்தான் பார்ப்போமே...” என்று தீபக்கும் அந்த பேச்சை அத்தோடு முடித்து விட்டு சாலையில் கவனமானான். காலம் யாருக்கு என்ன வைத்திருக்கிறதோ... அவனையன்றி யாருக்குத் தெரியும். கோவா பயணம் சிபிக்கு சாதகமா...? பாதகமா..?
தொடரும்......