• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் - 15

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
அத்தியாயம் – 15

இதோ அதோ என்று தீபக்-வித்யாவின் திருமணம் முடிய முழுதாக இரண்டு வாரங்கள் இருந்தது.. இந்த இடைப்பட்ட நாட்களில் சிபி மற்றும் ஷானவியின் வாழ்க்கையில் சில எதிர்பாரா திருப்பங்கள் நடந்து முடிந்திருந்தன.


அறையில் ஒடுங்கி போய் படுத்திருந்தவளை பார்க்க, பார்க்க சிபிக்கு மனம் தாளவில்லை. சிட்டுக்குருவி போல் பறந்து திரிந்தவளின், சிறகை உடைத்து விட்டானே என்று நிஷாந்தின் மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது அவனுக்கு...


ஷானுவை எழுப்ப அருகில் போனவன் அனத்திக் கொண்டிருந்தவளைக் கண்டு நெற்றியில் தொட்டு பார்க்க, காய்ச்சல் அனலாய் கொதித்தது.

“ஷானு இந்தக் கொஞ்சமாவது கஞ்சியைக் குடிமா..” என்று நூறாவது முறையாக அவளிடம் கெஞ்சியிருப்பான் சிபி.


“வேண்டாம் நந்து.. வாமிட் வந்துட்டே இருக்கு... டயர்டா வேற இருக்கு.... நான் தூங்குறேனே ப்ளீஸ்...”என்றாள் ஷானவி சோர்வாய்.


“வாமிட் பண்ணாலும் பரவாயில்லை, கொஞ்சம் குடிச்சிடு அம்மு... அப்போதான் டயர்ட்னஸ் போகும்... சொன்னா கேட்கணும் ஷவிம்மா...” என்று சிறுகுழந்தை என அவளைக் கெஞ்சி, கொஞ்சி சாப்பிட வைத்து, மாத்திரையும் கொடுத்து படுக்க வைத்தான்.


கோவா சென்று வந்ததில் இருந்தே எதையோ பறிகொடுத்ததைப் போல் இருந்தவளைப் பார்க்க அவனுக்கு கலக்கமாய் இருந்தது. ஷானுவாக அந்த விஷயத்தை அவனிடம் சொல்லா விட்டாலும், வித்யாவின் மூலம் அங்கு நடந்த அனைத்துமே தெரிந்திருந்தது சிபிக்கு....
சிபியே இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை... ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், ஷான்வியை நினைத்து மனம் வருந்தத் தான் செய்தது அவனுக்கு.... இப்படி ஒரு வைத்தியம் நடக்கவில்லை என்றாலும், இந்தக் கிருக்கிக்கும் நிஷூ பைத்தியம் தெளிந்திருக்காது.. என எண்ணியவன், சரி செய்து விடலாம் அவளை என்று நம்பினான்.


அவன் நம்பிக்கை சற்று நேரத்திலே பொய்க்கப்போவது தெரியாமல்... உறக்கத்தில் இருந்தவள் ஏதோ தெளிவில்லாமல் புலம்பிக் கொண்டே இருக்க, அவள் மனதில் உள்ள காயங்கள் ஆற இதுவும் ஒரு மருந்து தான் என்று மருத்துவனாய் எண்ணிய சிபி, அங்கேயே அமர்ந்து அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.


அப்போது “என்னை எவ்ளோ சீப்பா நினைச்சிட்டு இப்படி பண்ணிருக்கான்... இவன் விளையாட என்னோட லைப் தான் கிடைச்சிதா... என்னை நம்பி அனுப்பி வச்ச அம்மா, அப்பா- சரண் அண்ணா எல்லாருக்கும் நான் என்ன பதில் சொல்வேன்... எவ்ளோ நம்பினாங்க... எப்படி ஏமாந்தேன்...”


“ஒருத்தனோட உண்மையான குணம் கூட தெரியாம நான் எப்படி அவனை லவ் பண்ணேன்.. என் சரண் அண்ணா இதையா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க... அவங்களுக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவாங்க, அதுக்கு அப்புறம் என்கிட்ட பேசுவாங்களா... அய்யோ தெரியலையே... நான் இனி என்ன செய்வேன்....”


“ தேனக்கா, இளாக்கா லைப் பார்த்தும் நான் இப்படி ஏமாந்து இருக்க கூடாது... இதுக்குப் பேருதான் வயசுக் கோளாறா...? நந்துவை நான் எப்படி பேஸ் பண்ணுவேன்... நந்து..” அதுவரை ஒரு டாக்டராக அவளது குமுறல்களை கேட்டவன், தன் பெயர் வரவும், ஒரு காதலனாக மிகுந்த எதிர்பார்ப்புடனும், மனதில் தோன்றிய பரபரப்புடனும் இன்னும் அருகில் சென்று உட்கார்ந்து கேட்க ஆரம்பித்தான்.




“நந்து... நந்து எத்தன தரம் சொன்னான், நான்தான் எதையுமே கேட்கல... இது தெரிஞ்சா எல்லாரும் என்னை விட்டுட்டு நந்துவை தான கேள்வி கேட்பாங்க... உன்னை நம்பி தான அனுப்பினோம்னு, அவனை தான எல்லாரும் திட்டுவாங்க... அவன் என்ன சொல்லுவான்... என்னால அவனுக்கும் கஷ்டம்...”


இன்னும் ரெண்டே வாரத்துல அவனுக்கு போஸ்டிங் வந்துடும்... அவனும் என்னை விட்டுட்டு போய்டுவான். அடுத்து என்னை யாரு பார்த்துப்பா..? வேண்டாம் யாரும் என்னை பார்த்துக்க வேண்டாம்... தப்பு செய்தது நான்... நான்தான் தண்டனை அனுபவிக்கனும்...”

“வீட்ல எல்லாருக்கிட்டயும் நானே சொல்லிடுறேன், சொல்லிட்டு அவங்க என்ன பனிஷ் பண்ணாலும் ஏத்துக்குறேன்.. இல்லன்னா செத்துடுறேன்...அதுதான் எல்லாத்துக்கும் நல்லது...” என்று தன் போக்கில் புலம்பிக்கொண்டே உறங்கி போனாள் ஷானவி.


ஷானவியின் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் சிபிக்குள் பெரும் பிரளயத்தையே உண்டாக்கியிருந்தது.. அவன் செய்த தப்பிற்கு அவள் தண்டனை அனுபவிப்பதா...? என்ற கேள்வி வேறு முணுமுணுத்தது அவனுக்குள்.. நிஷாந்த் பற்றிய உண்மை தெரிந்ததுமே அவன் அவளிடம் பேசி தெளிய வைத்திருக்கலாம். ஆனால் அவளாக உணர வேண்டும் என்று நினைத்து செய்தது, ஷானவியை இப்படி யோசிக்க வைக்கும் என்று நினைக்கவில்லை..


என்ன செய்யலாம் என்ற எண்ணம் தான் அடுத்த இரண்டு நாட்களுமே... இருவரும் அவரவர் சிந்தனையில் இருந்தனர். இரண்டு நாட்களின் முடிவில் சிபி ஒரு அப்ளிகேஷனுடன் வந்து அவளிடம் கையெழுத்து கேட்க... அவளும் எதையும் யோசிக்கும் நிலையில் இருக்கவில்லை. சிறிதும் யோசிக்காமல் தன் கையெழுத்தை இட... அவளது மேற்படிப்பும் லண்டன் பயணமும் அங்கு நிர்ணயிக்கப்பட்டது. அதோடு மற்றொன்றும்..


சரணிடம் சில உண்மைகளை மறைக்காமல் கூறி, அவன் மூலம் ஷானவியின் பெற்றோரிடம் பேசி... ஷானவியின் துணைக்கு என்று வித்யாவிடமும் பேசி அவளையும் லண்டன் அனுப்ப ஒத்துக்கொள்ள வைத்து, தீபக்கிடம் தன் வாலிபமெரிய சாபமும் பெற்று, சரண் மற்றும் ஷர்மி இருவரையும், ஷானவியிடம் அவளது மேற்படிப்பு பற்றி பேச வைத்து, அவளையும் ஏற்றுக்கொள்ள வைத்து, என்று அவளுக்காக அவளுக்கே தெரியாமல் முழு மூச்சாக வேலை செய்தான் சிபி..


நண்பர்களின் திருமணத்திற்கு இருவரும் பெங்களூரில் இருந்தே ஹைதராபாத் வந்தனர். அந்தக் கார் பயணம் தான் சிபி எண்ணிய எண்ணத்தை வலுவாக்கியது என்பதும் உண்மை.... இளையராஜாவின் மெல்லிசையில் கார் மிதமான வேகத்துடன் செல்ல, மற்ற இருவரும் அவரவர் சிந்தனையில்....


அவள் பேசுவாள் என்று அவன் பார்க்க.... கண்மூடி சாய்ந்திருந்தாலும், உறங்கவில்லை என்பது தெரிந்தது. அவளையே விடாது பார்க்க... தன்னை யாரோ உற்று நோக்குவது போல் அவளுக்கு தோன்ற, அதே நிலையில் விழிகளை மலர்த்த, சிபியின் பார்வையின் பொருள் புரியாமல் விழித்தாள்.




“என்ன நந்து அப்படி பார்க்குற...” மௌனத்தை அவளே உடைத்தாள்.

“ம்ப்ச் ஒண்ணுமில்ல, கொஞ்சநாளா காணாம போன என்னோட அம்முவ தேடுறேன்” என்றான். என்னவென்றே சொல்ல முடியாத குரலில்...

“நந்து நீ யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா...” என்றாள் முன் சாலையைப் பார்த்துக்கொண்டே


அவளையே ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன் “எஸ் த்ரீ இயர்ஷா ஒருத்திய லவ் பண்றேன்..”என்றதும் பட்டென்று திரும்பினாள்.


“எனக்குத் தெரியவே இல்ல... நீ சொல்ல, மறைச்சியா என்ட..”


“அப்படி இல்ல... இன்னும் அவக்கிட்டயும் சொல்லவே இல்ல... உன்கிட்ட சொல்லிருந்தா நீ சும்மா இருப்பேன்னு தோனல, ஹெல்ப் பண்றேன்னு எதையாச்சும் செஞ்சிட்டா... அதோட அவளும் படிச்சிட்டு இருந்தா.. அது அவ ஸ்டடீஷை ஸ்பாயில் பண்ணும்னு தோனுச்சு.. சோ அவக்கிட்ட சொல்லல...”


“நான் தப்பா எதையும் செய்துடுவேன்னு தோணுச்சா... இல்ல எனக்குத் தேவையில்லாத விசயம்னு நினைச்சியா..”


“அப்படி எதுவும் இல்ல... இதை அக்செப்ட் பண்ணிட்டா ஓகே... அவளுக்கு வேற யார் மேலையும் அஃபர் இருந்தா என்ன பண்ண முடியும்.. இதை சொல்லி வீணான மன உளைச்சல் வேண்டாம்னு பார்த்தேன். ஒருவேளை இது ஒன் சைட் லவ்வா இருந்தா, அது என்னோடவே எனக்குள்ளையே முடிஞ்சிடட்டும்னு தோனுச்சு...”

“உனக்குத் தெரிஞ்சா.. எனக்காக நீ பரிதாபப்பட்டா... வீட்ல இருக்குறவங்க கிட்ட சொலி காம்ப்ரமைஸ் பண்ணினா... இப்படி நிறைய காரணங்கள் இருந்தது, உன்கிட்ட சொல்லாம இருந்ததுக்கு...” என்று நீளமாய் பேசினான்.


“லுக் நந்து... எனக்கு நீ இவ்ளோ ரீசன்ஸ் சொல்ல வேண்டியதில்ல... ஐம் ட்ரஸ்ட் பார் யு... தென் இப்போ என்னாச்சு... அந்தப் பொண்ணுக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டியா.... அக்செப்ட் பண்ணிட்டாங்களா..?”


“ம்ம் சொல்லணும் ... நான் போஸ்டிங் போக முன்னாடி சொல்லணும்... அடுத்து எனக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது.. ஏற்கனவே நான் ஒரு சான்ஸ் மிஸ் பண்ணிட்டேன்... திஸ் டைம் கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேன்..”


“என்ன ...? என்ன சொல்ற..? அப்போ... அப்போ நீ சொன்ன மாதிரி அவங்களுக்கு வேற ஒரு அஃபர் இருந்துச்சா..?..!”


“ம்ம்... ஆமாம். ஆனா அதை அபர்னு சொல்ல முடியாது. ஒரு ஈர்ப்பு அவன் மேல அவ்ளோதான்.. அதுவுமில்லாம அவளுக்கும் இது ஒன்சைட் தான். சோ ஈக்குவல் ஆகிடுச்சு.. தட்ஸ் இட்..”


மீண்டும் சிறு அமைதி அந்தக் காருக்குள்.. அடுத்து என்ன பேசுவதென அவன் யோசிக்க..... “உன்னோட லவ்வாச்சும் சக்ஸஸ் ஆகணும் நந்து..’ என்றவாளின் குரலில் கரகரப்பு.


காரை ஓரமாய் நிறுத்தியவன் அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான். அவள் கைகளைஎடுத்துக்கொண்டு, “என்ன நடந்ததுனு கேட்டு உன்னை வருத்தக்கூடாதுனு நினைச்சேன். எனக்கு எல்லாமே தெரியும். ஆனாலும் இப்போ நீ சொல்லு உன் மனசுல என்ன ஓடுது”.






நீ சொல்லியே ஆக வேண்டும் என்ற கண்டிப்பு இருந்தது அவன் குரலில்.. “அவன் என்னை ஏமாத்திட்டான் நந்து..... என்னை அவன் உயிரோட கொன்னுட்டான்”.. என்றவள் முகத்தை மூடி அழ,

“ம்ப்ச் பர்ஸ்ட் அழறதை ஸ்டாப் பண்ணு.. சொல்லி முடிக்கிற வரை அழவே கூடாது சொல்லு என்னாச்சு” என்று அதட்டினான். அந்த அதட்டலில் அவளது விழிநீர் விழிகளிலேயே தேங்கியது.


“அவன் ஆல்ரெடி என்கேஜுடு நந்து... அவன் என்னை லவ் பண்ணலன்றது கூட தாங்கிக்கலாம், ஆனா ரெண்டு பொண்ணுங்களை ஏமாத்திட்டு இருக்கோம்கிற ஒரு குற்ற உணர்ச்சி கூட இல்லாம ரெண்டு பேருக்கிட்டையும் நடிச்சிருக்கான்னு நினைக்கும் போது தான் என்னால தாங்கிக்கவே முடியல,”

“ஒருத்தன் பொய்யா நடிசிருக்கான்னு கூட என்னால கண்டுபிடிக்க முடியல... நான் என்ன பொண்ணு... உங்களோட வளர்ப்பை நான் அசிங்கப்படுத்திட்டேனா... எல்லாத்துக்கும் ப்ரீடம் கொடுத்த சரண் அண்ணா இதை எப்படி எடுத்துக்குவார். உங்க முகத்தை எப்படி பார்ப்பேன்... ஒரு தப்பானவனை அடையாளாம் காண முடியாத நான் ஒழுக்கமான பொண்ணா..? அவன் லவ் சொன்னதும் ஓகே சொன்னேனே, அப்போ நான் தப்பான பொண்ணா...? முடியல நந்து.... எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு... செத்துடலாம் போல இருக்கு... அவன் ஏமாத்தினது கூட வலிக்கல, நான் ஏமாந்துட்டேன்னு தான் வலிக்குது...” என்றவள் அவன் மேலேயே விழுந்து கதறினாள்.


அவள் கதறலை கண்களில் வழியும் நீரோடு பார்த்தவன் இதிலிருந்து அவளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று நினைத்தவன்... தன்னிடமிருந்து அவளைப் பிரித்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தான். அதிர்ந்து விழித்து அவனையே பார்க்க...


“என்னடி உன் பிரச்சினை, நானும் பார்க்குறேன் சும்மா சாகுறேன், சாகுறேனுட்டு, செத்துட்டா எல்லாம் சரியாயிடுமா...? உன்னை ஏமாத்தினவன் ஜாலியா அவளைக் கல்யாணம் செஞ்சுட்டு சொகுசா இருக்கப்போறான் யு.எஸ்ல.. நீ சாகப்போறியா.... போயேன்... போய் செத்துப்போயேன்.. எங்களைப் பத்தி உனக்கென்னம்மா கவலை... உன் கவலைதான் உனக்கு பெருசு...”


“அத்தை மாமா, சரண் அண்ணா யாரைப்பத்தியும் உனக்கு கவலை இல்லை அப்படி தான.... ஒரு பொருக்கிக்காக நீ இவ்வளவு பீல் பண்றது உனக்கே அதிகமா தெரியல....”

“போதும்... எல்லாம் போதும்... உன் இஷ்டத்துக்கு விட்டது எல்லாம் எங்க தப்புதான்.. இனி அதை செய்ய நாங்க யாரும் தயாரா இல்லை... இந்த விஷயம் நம்மளைத் தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது... அதை நான் விரும்பல...”


“இங்க இருந்தா நீ இதையேதான் நினைச்சிட்டு தேவையில்லாம உளறிட்டு இருப்ப.. சோ நீ லண்டன் போறதுதான் உனக்கு நல்லது.. நான் எடுத்த முடிவும் சரிதான்...”


“என்னைக்கு நீயா உன்னை புரிஞ்சிட்டு, இது லவ் இல்ல இன்பாச்ஷுவேஷனு உனக்கு புரியுதோ அன்னைக்கு வந்தா போதும்... அதுவரை நீ அங்கதான் இருக்கணும்... உன் லைப் ஒரு அயோக்கியன் கிட்ட இருந்து சேவ் ஆகிருக்குனு புரியலையா... ஒரு பச்சோந்திக்காக உன் லைபை ஸ்பாயில் பண்ணிக்கிறியா...? இதை நீ எப்போ உணரப்போற...” என்று அவளிடம் கத்தியவன் தான் அதன் பிறகு அவளிடம் எதுவும் பேசவில்லை அந்த பயணம் முழுவதும்....


தான் விரும்பியவனையே பல இன்னல்களுக்கு பிறகு மணம் முடிக்கப்போகும் மகிழ்ச்சி வித்யாவின் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது. வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் தீபக்கின் வீட்டிலும் தன் ஒரே மகனின் திருமணத்தை அதகளப் படுத்தி விட்டனர்.


சிபி – ஷானவி, ஆகாஷ் – மான்யா மற்றும் சரண் குடும்பம், அஸ்வத் குடும்பம் என்று மொத்தக் கூட்டமும் தீபக் – வித்யாவின் திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.


ஷானவி ஒரு தோழியாய் வித்யாவை விட்டு எங்கும் நகரவில்லை என்றாலும், அவள் முகத்தில் அதற்கான மகிழ்ச்சிக் கொஞ்சமும் இருக்கவில்லை. ரெடிமேட் புன்னகை ஒன்றை ஒட்டவைத்துக் கொண்டு அலங்கார பொம்மையாய் நின்றிருந்தவளைப் பார்க்க பார்க்க சிபியின் மணம் கனமானது. அவன் எடுத்த முடிவின் இறுக்கமும் கூடியது.


தீபக்கின் அருகில் இருந்தபடியே கீழே இருந்த மொத்தக் குடும்பத்தையும் பார்த்தான். அத்தனை மகிழ்ச்சி அவர்களிடத்தில்.... தேனுவும், இளாவும் மான்யவிடம் எதுவோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவளால் அவர்களிடம் ஒட்ட முடியாமல் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்து சிரிப்பு வந்தது.


அப்படியே சரணைப் பார்த்தான்... அஸ்வத் எதுவோ கூறுவது தெரிந்தாலும், அவள் கவனம் அதிலில்லை என்பதும் புரிந்தது. ஷானவியையும் சிபியையும் தான் சரணின் பார்வை மாறி, மாறி ஆராய்ந்துக் கொண்டிருந்தது.

அவன் பார்த்து,வளர்த்த அவன் செல்லத் தங்கையை அவளிடம் தேடினானோ.. என்னவோ..?அவளையே விடாது பார்த்தவன், சட்டென சிபியின் முகத்தைப் பார்த்தான். அதில் தெரிந்த தீவிரமும், பிடிவாதமும், பதட்டமும் அவன் ஏதோ தப்பு செய்யப் போகிறான் என்பதை அவனுக்கு எச்சரித்தது.


என்ன செய்யப் போகிறான்.? பெரிய இடத்து கல்யாணம். இதில் ஏடாகூடமாய் எதையும் செய்து விடக்கூடாது என்ற பயம் வேறு... முதலில் அவனிடம் பேச வேண்டும்... தவறாக எதுவும் நடக்கும் முன் தடுக்க வேண்டும் என்று எண்ணியவன், அஷ்வத்திடம் எதையோ கூறி அவனையும் அழைத்துக் கொண்டு, சிபியின் இடம் நோக்கி நகர.....


சரணின் எண்ணம் உணர்ந்தானோ என்னவோ... அவர்கள் அவனை நெருங்கும் முன் தீபக்கின் பின்னே நின்றவன் வித்யாவின் அருகில் நின்றிருந்தவளின் பக்கமாய் சென்று ‘அம்மு’ என்றழைக்க, அவள் திரும்ப சிறிதும் யோசிக்காமல் தன் கையில் இருந்த மாங்கல்யத்தை அவள் கழுத்தில் நிதானமாக கட்டினான் அத்தனைப் பேர் முகத்திலும் தெரிந்த அதிர்ச்சியைக் கண்டு கொள்ளாமல்......
 
Last edited:
Top