• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் - 16

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
866
அத்தியாயம் - 16
நீ நாம் என்பதில் தொடங்கிய கவிதை இது...
நான் எழுதிய கவிதைகளை விட
நான் படித்த கவிதைகள் அழகு...!
நான் படித்த கவிதைகளை விட
பார்த்த கவிதைகள் அழகு..!
நான் பார்த்த கவிதைகளில்
நீயே முதல் அழகு..!
தேவதைக் கதைகளை உன்னால்
நம்பத் தொடங்கினேன்..
நெல் விதைத்து கோதுமை
அறுவடை தருமா..?
நட்பு விதைத்து காதல் அறுவடை
செய்தவர் நாம்...!
நம் தேடல்களில் தொடங்கி நம்
துயரங்களில் வளர்ந்தது காதல்..!
யாழினிது குழலினிது மழலை சொல்
இனிது என்றேன் தோழி, நீ
அழைக்கும் தொலைபேசி மணி
ஓசை கேட்கும் வரை..!
இடியும் மின்னலும் மலர்வதற்கான இடை
மௌனத்தில் பூக்கும் கனவு
காதலெனும் நட்பு.....!!
----------------------------------------

பழைய ஞாபங்களை வரிசையாய் அசைப் போட்டுக் கொண்டிருந்தவனின்எண்ணங்கள் கடைசியாய் தன் திருமணத்தன்று சரண் தன்னிடம் பேசியதில் வந்துநின்றது.

அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, முதலில் நிதானத்திற்கு வந்தது சரண்தான். இத்தனை வருடத்தில் ஒருமுறைக்கூட கடுமையான வார்த்தைகளை பிரயோகப்படுத்தாதவன், தன் பலம் கொண்ட மட்டும் சிபியை ஓங்கி அறைந்தான்.

சரணின் இந்த தாக்குதலை எதிர்ப்பார்த்தவன் இடியென விழுந்த அந்த அடியைத்தாங்கிக் கொண்டு நேர் பார்வையாய் அண்ணனையேப் பார்த்துக் கொண்டிருந்தான்சிபி.

சரணை இழுத்துப் பிடித்த அஸ்வத்தை, உதறி தள்ளியவன், சிபியின் சட்டையைப்பிடித்து “என்ன பண்ணி வச்சுருக்க...? உனக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது..?நாங்க எல்லாரும் உயிரோட தான இருக்கோம்... ஏன் இப்படி பண்ண..! என்னைநம்பித்தான உன் கூட இவளை அனுப்பி வச்சாங்க, அவங்க முகத்துல நான் எப்படிமுழிக்கிறது..?”

“உன் பக்கம் நீ சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம், ஆனா நீ அவளுக்கு செஞ்சதுஎந்த வகையிலும் நியாயம் கிடையாது..”

“ஏன்டா…. ஏன் இப்படி..? நான் உன்னை பொறுமையா இரு, இருன்னு எவ்வளவு தூரம்சொன்னேன்.... ச்சே.. இப்படி…. இப்படி ஒரு நிலையில எங்க எல்லாரையும் கொண்டுவந்து நிறுத்திட்டீய..! இனி அவளுக்கு நான் என்ன சமாதானம் சொல்றது… நீ ஒருகண்ணுனா, அவ எனக்கு இன்னொரு கண்ணுடா, அவளை கஷ்டப் படுத்திடியே……” என்று அவனை உலுக்கியது மட்டுமில்லாமல் சரமாரியாய் அடிக்கத் தொடங்கினான்மீண்டும்.

சரணது ஒவ்வொரு அடியையும் விலகாமல் வாங்கிக் கொண்டாலும், அவனது முகத்தில்இருந்த தீவிரம் மட்டும் குறையவே இல்லை. பெண்கள் ஒரு பக்கம் அதிர்ந்தபடியேநிற்க, அஸ்வத் தான் சரணைத் தடுத்து இழுத்து வரும் படி ஆனது.

அண்ணனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் குத்தீட்டியாய்ப் பாய்ந்தாலும், எதையும்கண்டு கொள்ளாமல் தன் நிலையிலே நின்றான் சிபி.

“பாரு அஸ்வத்… எப்படி மலை மாதிரி நிக்கிறான்னு…. இவனால, என்னோடமரியாதையே போயிடுச்சு….. இந்த பொண்ணுக்கு என்ன பதில் சொல்லப் போற…. அவளே உன்னை மன்னிச்சாலும், நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன்…. எப்பவும்...” என சரண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“போதும் நிறுத்துங்கண்ணா….” என்றது சிபியின் குரல்… “இதுக்கும் மேல எதுவும்யாரும் பேசக்கூடாது… நான் செஞ்சது தப்பாவே இருந்தாலும், அதை நான் தெரியாமசெய்யல, இதனால என்ன பின் விளைவுகள் வரும்னு எல்லாதையும் யோசிச்சுத் தான்செஞ்சிருக்கேன்..” என்றவன்

“எனக்கு பிடிக்காமலோ…. இல்லை அவளுக்குப் பிடிக்காமலோ.. ஏன் உங்க யாருக்கும்பிடிக்காமலோ இந்த “மேரேஜ்” நடந்திருந்தாலும் எனக்குத் துளியும் கவலை இல்லை..!இனி அவள் தான் என்னோட வைப்..!. என்னோட லைப்.! இதை நீங்களே நினைச்சாலும்மாத்த முடியாது.” என்றான் இறுமாப்பாய்….

இப்படியொரு சிபியை யாரும் இதுவரைக் கண்டதில்லை போலும், அத்தனைஇறுக்கமும் திடமும் அவன் பேச்சில்.

தீபக்கின் தந்தையும், வித்யாவின் தந்தையும் அவனுக்கு சப்போர்டிற்கு வர, இதையும்யாரும் எதிர்பார்க்கவில்லை. சிபியின் செய்கையை சரணால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. குடும்பதில் உள்ள அத்தனை பேரும் அதிர்ச்சியில் அப்படியே நிற்கஷானவியைக் கவனிப்பார் யாரும் இல்லை.

தாலியைக் கட்டிவிட்டு, அவள் அருகே நின்றிருந்தவன், சரணிடம் எதிர்வாதம்செய்தாலும், அவளது முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முகத்தில தோன்றிய கலவையான உணர்ச்சிகளை கண்டாலும் அது அவனுக்குமே வலித்தாலும், அமைதியாய் நின்றிருந்தவன், ஷானவி சட்டென சாயவும் அவளைத் தாங்கிப்பிடித்தான். அதிர்சியில் மயங்கி இருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது, ஆனால்மற்றவர்களுக்கு அப்படி இல்லையே….

ஷானவி மயங்கியதும் சூழ்நிலை சட்டென்று மாற, அவளை அப்படியே அள்ளியவன்தீபக்கிடம் “வெரி சாரி மச்சான், நீ இங்க பாரு, நான் கிளம்புறேன், அப்புறம் பார்க்கலாம்... சாரி வித்யா..” என்றவாறே கிளம்ப, ஆகாஷ் உடன் வர, அவனையும்அங்கயே இருக்க வைத்து விட்டு புயலென விரைந்தான் யாரையும்பொருட்படுத்தாமல்…..



ஷானவியின் பெற்றோர், சிபியோடே கிளம்ப, சரணும் அஸ்வத்தும் பெண்களை அங்கேயேவிட்டு விட்டு தீபக்கின் வீட்டாரிடம் மன்னிப்பையும் வேண்டிக்கொண்டு, மருந்துவமனைநோக்கி பறந்தனர்.

சிபியின் கைகளில் இருந்த ஷானவியைப் பார்த்த பெற்றோருக்கு, இது என்ன மாதிரியானசூழல், இதை எப்படிக் கையாள்வது, என்று புரியவில்லை. யாரைக் குறை சொல்ல தன்மகளையா..? அல்லது மகனைப் போல் வளர்த்தவனையா..? யாரை…? ஒன்றும் புரியவில்லை…

ஏற்கனவே இருவருக்கும் தான் திருமணம் செய்வது என்பது உறுதியாகியிருந்தது. இதுசிபிக்கும் தெரியும், அப்படி இருக்க ‘இவன்
ஏன் இப்படி செய்தான்’ என்ற குழப்பம். அப்படியானால் ஷானவியிடம் ஏதோ தவறு இருக்கவேண்டும் எண்ற நினைப்பு வந்ததும் தான், இது வேற ஏதோ பிரச்சனை, அதை சிபி சரிசெய்ய நினைக்கிறான் என்று எண்ணம் தோன்றியது. ஆனலும் மகளின் இந்த நிலைஎதனால்…? என்ற கேள்வி குடைய ஆரம்பித்தது.

வித்யாவின் தந்தை முன்னரே போன் செய்திருந்ததால், மருத்துவமனையில் இவர்களிடம்எந்தக் கேள்வியும் முன் வைக்கவில்லை.. ட்ரீட்மென்ட் தொடர, வெளியே இருந்தவனிடம்எந்தப் பிரதிபலிப்பும் இல்லை. உணர்ச்சியற்றுக் கல்லாய் நின்றிருந்தான்.

சில மணி நேரங்களில் ஷானவியின் இயல்பு திரும்ப மீண்டும் சரணின் கோபம்அதிகமாகியது. ஆனலும் எதுவும் பேசாமல் முறைத்துக் கொண்டே நின்று விட, அஸ்வத்தான் சிபியிடம் சென்று பேசினான்.

“என்னடா இது..... நாங்க எல்லாம் உன் கிட்ட என்ன சொன்னோம்... நீ என்ன பண்ணிவச்சுருக்க..? அவளோட பேரன்ட்ஸ பாரு, எப்படி இருக்காங்கனு.. அவங்களுக்கு நீ என்னசமதானம் சொல்ல போற...?” என்றான் ஆதங்கமாய்..

“அண்ணா… ப்ளீஸ் … நான் ஒன்னும் டீனேஜ் பையன் கிடையாது… எனக்கும் கொஞ்சமேகொஞ்சம் யோசிக்கவும் தெரியும். நான் இதை எனக்காக செய்யல... அவளுக்காக… அவளுக்காக மட்டும் தான் செஞ்சிருக்கேன்.. அவ எனக்கு வேணும் தான், அதுக்காக நான்எவ்வளவு நாளானாலும் வெயிட் செய்வேன் தான். ஆனால் அவ இருக்க மாட்டா…? என்னமுடிவு எடுப்பா…? என்ன பண்ணுவா எதுவும் எனக்குத் தெரியல…”

“நீ சொன்ன மாதிரி தானே லண்டன் போக ஒத்துக்கிட்டா, அப்புறம் ஏன் இப்படி செஞ்சேனுநீங்க கேட்கலாம்...! அது சரியும் தான். இப்பவே ரொம்ப மனசு விட்டுட்டா... இனி பழையமாதிரி அவ மாற வாய்ப்புகள் கம்மி... சூடுபட்ட பூனையா ஒதுங்கதான் பார்ப்பா, அதுக்குஇது ஒகே…”

“என்னோட மனைவியா போகட்டும், இதுவரைக்கும் இருந்த சிபி வேற, இனி இருக்கும் சிபிவேறனு அவளுக்குப் புரியட்டும்.. இனி இதைப்பத்தி யாரும் எதுவும் பேச வேண்டாம். ஏற்கனவே பிக்ஸ் பண்ண டேட்ல, நெகஸ்ட் வீக் அவ லண்டன் போவா, த்ரீ டேய்ஸ்ல நான்டெல்லி போவேன் அதுல எந்த மாற்றமும் இல்ல..” என்றான் உறுதியான இறுகிப் போனகுரலில்.

என்ன நடந்தது என்று எதையும் கூறாமல், இப்படி பேசுவனிடம் கோபம் வந்தாலும் இந்தமுடிவு எடுக்கவும், வீட்டில் உள்ள அத்தனைப் பேரையும் எதிர்த்துப் பேசவும், அவனும் நிறையவருத்தப்பட்டிருப்பான் என்பதும் புரிந்தது. இனி எதுவும் பேச முடியாத இப்படி பேசுவனிடம்,என்று நினைத்து சிபியின் தோளில் ஆதரவாய் தட்டியபடி நின்றிருந்தான் அஸ்வத்.

சிபிக் கூறியதை, சரணும், ஷானவியின் பெற்றோரும் கேட்டுக் கொண்டுதான் இருந்தனர். ஷானவியின் நிலை ஒருபக்கம் கவலை அளித்தாலும், சிபியின் முடிவுக்கு மௌனமாய்தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர் சரணைத் தவிர்த்து.



குடுமபத்தினர் ஷானவிக்கு கொடுத்த எந்த சமாதானமும் எடுபடவில்லை. சிபி அவளிடம்தான் செய்த காரியத்தைப் பற்றின எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இப்போது அதைஅவள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்று எண்ணினானோ? என்னவோ…? எந்தபேச்சும் இருவரிடத்திலும் இல்லை… ஷானவியிடம் மௌனம் மௌனம்…. மௌனம்…. மட்டுமே….!

அடுத்து வந்த மூன்றாவது நாளில் சிபி மற்றும் அவன் நண்பர்கள் மூவரும்போஸ்டிங்கிற்காக டெல்லி செல்ல, அதற்கடுத்த வாரத்தில் ஷானவியும், வித்யாவும் லண்டன்கிளம்பியிருந்தனர்.

அன்றைய கார் பயணம் தான் ஷானவி சிபியிடம் கடைசியாகப் பேசியது. அவ மனநிலைமாறட்டும், புது இடம், புது நண்பர்கள் எல்லாம் அவளை மாற்றும் என்று நம்பி சிலநாட்களுக்கு அவளை எந்தவித தொந்தரவும் செய்யவில்லை சிபி.

ஆனால் அவளது ஒவ்வொரு அசைவும் வித்யாவின் மூலம் அவனுக்குத் தெரிந்துகொண்டுதான் இருந்தது. முதன் முதலில் சேர்ந்த வேளையில் உள்ள சிரமங்களின் பேரிலும்,தான் பேசுவதைத் தள்ளி வைத்திருந்தான். அடுத்து அவனது தொடர் போன்கால்ஸ், மெசேஜஸ், எதையுமே அவன் மனையாள் கண்டு கொள்ளவில்லை.

இடைப்பட்ட இந்த மூன்று வருடங்களில் எல்லோர் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள். சரண் - தேன்நிலா தங்கள் அடுத்த வரவை ஆவலுடன் எதிர்பார்துக் கொண்டிருந்தனர். அஸ்வத்இளமதி குடும்பம் தேனியில் குடிபெயர்ந்திருந்தனர். ரவி மற்றும் ஆதிரா அவர்களின்வாழ்க்கை சிங்கபூரில் வண்ணமயமாய் ஜொலித்தது.

ஆகாஷ் மான்யாவின் இல்லறமும் இனிமையாய் சிறந்தது. மான்யா ஆகாஷை ஏற்றுக்கொண்டு தன் வாழ்க்கையை எந்தவித இன்னலுமின்றி அழகாய் கொண்டு சென்றிருந்தாள். வண்ணத்துப் பூச்சிகளாய் சிறகடித்துப் பறந்து, பிரிவெனும் துயரில் ஆழ்ந்தாலும், இனிமையை மட்டுமே சுகித்த தீபக் – வித்யாவின் வாழ்வும் இதோ பன்னீர் பூக்களாய் பூத்துமனம் பரப்பியது. எல்லோர் வாழ்விலும் இனிமை மட்டுமே இருக்கத் தன் வாழ்வு…? என்ற கேள்வி ஆயாசமாய் வந்து விழுந்தது அவனுள்...

அவளிடமும் சில மாற்றங்கள் இந்த சில நாட்களில்... ஆனால் அது அவன் மேல் கொண்ட காதலினாலும், அவனையும், அவனது காதலையும் புரிந்து கொண்டு வர வேண்டும்... அனுதாபத்தினாலோ... இல்லை வேறுவழியின்றி கட்டாயத்தினாலோ இருக்க கூடாது. அவனது இந்த மூன்றாண்டுகள் தவமும், காத்திருப்பும் அவளை சரியாக்கி விடும்… இல்லையென்றால் சரியாக்கி விடுவேன்….! இதோ என் சண்டி ராணி என்னிடம்வந்துவிட்டாள். என்று நினைத்தவனின் முகத்தில் மறையாத புன்னகை வந்தமர்ந்தது.

பனி விழும்....
 
Top