• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் - 17

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
அத்தியாயம் – 17

நித்திரைத் தொலைந்த
ஒரு நீள ராத்திரியில்
நடைபயணம் செய்கிறேன்....
பத்திரப்படுத்திய நினைவுகளுடன்
தொலைந்த என்காதலைத்தேடி...!!!

******************


“ஹாய் ஜோன்ஸ்…. எப்படி இருக்க…?” என்ற ஷானவியின் குரலில் நிகழ்வுக்கு வந்தான் சிபி.

தனக்கு எதிரே அமர்ந்து ஸ்கைப்பில் பேசிக் கொண்டிருந்தாள்… அவளது ப்ரண்ட் போல’என்று நினைத்துக் கொண்டான். பார்வை அவளிடத்திலே இருந்தது.

அவள் இவனைக் கண்டு கொள்ளவில்லை லேப்பில் தெரிந்த ஜோன்ஸிடம் அரட்டையடித்துக்கொண்டிருந்தாள்.

“ஹே மேன் செமையா தமிழ் பேசுற…! எப்படி? எங்கே கத்துகிட்டே…. சூப்பர்டா…”

“எஸ்… எஸ் தேங்க் யூ பேபி… உனக்காக மட்டும் தான் நான் தமிழ் கத்துக்கிட்டேன், இங்க ஒரு தமிழ் செண்டர் இருக்கு, அங்க போனேன். உனக்குப் புடிச்சிருக்கா… நான் எப்படிபேசுறேன்.”

“வாவ்….! லவ்லி…! எனக்காகவா…! நெஜமா..! நான் அங்க இருக்கும் போது நீ செய்யமாட்டேன் சொன்ன… இப்போ மட்டும் ஏன் செஞ்ச..?

“பிகாஸ் ஐ மிஸ் யூ பேபி…. யூ மிஸ் மீ” என்ற இவர்களின் அரட்டையில் சிபி நொந்தே போனான்.. அட ஆண்டவா எங்கிட்டு இருந்துடா எனக்குன்னு இப்படி மைதா மாவு வில்லனுங்களா வந்து மொளைக்கிறீங்க என்று மனதில் கடு கடுவென பொரிந்தவன், வெளியே அவள் என்ன சொல்வாளோ என்ற தவிப்புடன் அமர்ந்திருந்தான் பாவமாய்.

“எஸ் ஜோன்ஸ் ஐ மிஸ் யூ டெரிபிலி.! உன்னோட சாம்பார் இட்லி, அப்புறம் அந்த எக் ஆப்பம், ஆனியன் குழிப்பணியாரம், என் பேவரைட் பட்டர் சிக்கன் ரைஸ் எல்லாத்தையுமே மிஸ்பன்றேன்....” ஷானவியின் பதிலைக் கேட்டு சிபி எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கேத் தெரியவில்லை... ‘ச்சே’ என்றாகிவிட்டது அவனுக்கு....

இவ எங்க திருந்த போறா....? இவ திருந்தி... என் லவ் புரிஞ்சி.... அடுத்து ஹனிமூன் போகணும்னா ஸ்ட்ரெயிட்டா அறுபதாம் கல்யாணம் முடிஞ்சு தான் போகனும். லண்டன் சிட்டி போயே இவ மாறலைன்னா, இனி ஜென்மத்துக்கும் மாற மாட்டா... உன் பாடு மிகவும் கவலைக்கிடம் தான் போல சிபி.

‘ஏண்டா நந்தா இத்தன வருஷம் அவ கூட குப்பைக் கொட்டிருக்க, அவளைப் பத்தி தெரியாம இப்படி பல்பு வாங்கிட்டியே... உன் அம்மு எங்க போனாலும் சோறு தான் முக்கியம்னு சொல்றவ... அவளைப் போய் தப்பா நினைசிட்டியேடா நினைச்சிட்டியே..’ என்று நடிகர் திலகம் பாணியில் வசனம் பேசிக்கொண்டிருந்தான் மனதுக்குள்...

“பேபி … நான் என்ன கேட்குறேன், நீ என்ன சொல்ற….” என்றான் ஜோன்ஸ் அவளை முறைத்த படி...

“வை ஜோன்ஸ்…. வை..? எதுக்கு இப்போ முறைச்சுபையிங்..? நான் எதை மிஸ் பன்றேனோ அதைத் தான சொல்ல முடியும்….” கூலாக ஷானவி பதில் சொல்ல

“ ம்ப்ச் போ ஷான்ஸ்…” என்றான் சலிப்பாக….

“ சரி விடு டா…. இப்போ சொல்லு, எப்படி போகுது உன் லைப்…? அந்த வெனிஷா என்னசொல்றா….”

“நோ ஷான்ஸ் அவளைப் பத்தி மட்டும் பேசாத…. ஐ ஹேட் வெனிஷா…. இன்னோரு பாய்ப்ரண்டோட போயிட்டா….” என்றான் எரிச்சலாய்

“ ஹா ஹா…. டேய் லூசுப் பையா என் பின்னாடி சுத்தினதுக்குப் பதிலா அவ பின்னாடி சுத்தியிருந்தாலும் செட் ஆகிருப்பா… இப்போ பாரு… பாய் ப்ரண்டோட பறந்துபோயிட்டா….”

“நோ ஷான்ஸ் அவ போனா போகட்டும் அவ வேண்டாம் எனக்கு, நீ இன்னும் எனக்கு ஆன்சர் பண்ணவே இல்ல…. சே எஸ் ஆர் நோ ஷான்ஸ்…. ஐ ஆம் வெயிடிங் பார் யுவர் ஆன்சர்….”

இந்த மைதா அடங்க மாட்டேங்குறானே.... இவன என் கையாள ஒரு அடியாச்சும் அடிக்கணும்... நல்ல ஷோ ரூம்ல வைக்குற பொம்மை மாதிரி இருந்துக்குட்டு, இவனுக்கு என் அம்மு கேட்குதா.... கைல கிடைக்கட்டும் அப்போ இருக்கு அவனுக்கு...’ என்று வயிறெரிய சபித்துக் கொண்டிருந்தான் சிபி.

“நோ ஜோன்ஸ் நீ இப்படியெல்லாம் காமெடி பண்ணக் கூடாது, எனக்கு சிரிப்பே வரமாடேங்குது, நானும் என் ப்ரண்ட் ஜோக் சொல்லிட்டான்னு கஷ்டப்பட்டுச் சிரிச்சா…. பக்கத்துல இருக்கறவங்க பயந்துக்க மாட்டாங்க…. சோ இனிமே இப்படியெல்லாம்பேசப்பிடாது ஒகே... ஜோன்ஸ் குட் பாய் தானே….”

“ஹா… ஹா.. சான்ஸ்லெஸ் ஷான்ஸ்...... யூ நோ… உன்னோட ப்ரண்ட் ஷிப் அன்ட் இந்த காமெடி சென்ஸ் எல்லாத்தையும் ரொம்ப மிஸ் பன்றேன் பேபி….! நீ எப்போ வர…”

“ஹேய் ஜோன்ஸ்… நோ பீலிங்கு… நான் வரலன்னா… என்ன…? நீ இங்க வா… உன்னோட எனிமியையும் மீட் செய்யலாம் என்ன சொல்ற…?

“ம்ப்ச் போப்பா… இங்கேயே என்னை அந்த முறை முறைப்பா… அங்க வந்தேன் அவ்ளோதான் அவ ஹப்பிட்ட சொல்லி என்னை டெரரிஸ்ட்னு போலீஸ்ல மாட்டி விட்டுடுவா… அந்தலூசு டாக்டரும் அவ சொல்றதை அப்படியே செய்வான்….! நான் வரலப்பா…. அங்க வந்தாஎன் உயிருக்கு நோ கேரண்டி….”

‘அடப்பாவி அவனவன் ஒன்னுக்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டு அவ பின்னாடி நாயா அலையுறான். இந்த செம்பட்ட மண்டையன் லைன் கட்டி ப்ரொபோஸ் பண்ணிருப்பான் போலையே... வித்யாவையும் விட்டு வைக்கலயா... ஹாஹா அவக்கிட்ட அடியும் வாங்கிருக்கானா... இப்போதான் நிம்மதியா இருக்கு...

அப்படியே கூளிங்கா சரக்கடிச்ச பீல் வருது... ஆனாலும் என் நண்பனைப் பார்த்து லூசு டாக்டர்னு சொல்லிட்டானே.... டேய் Mr.ஜோன்ஸ் உன்னோட கிரைம் லிஸ்ட் கூடிட்டே போகுது... இதுக்கெல்லாம் உனக்கு என்ன தண்டனைன்னு தீபக்கிட்டயே கேட்குறேன்... அவன் தான் உன்ன மாதிரி மங்கூஸ் மன்டயனுக்கு சரியான ஆளு...’ என தன் போக்கில் வறுத்தெடுத்தான் மீண்டும் மனதிற்குள்.

“ஹா… ஹா.. நான் கூட எங்கடா ‘வள்ளியே சக்கரவள்ளியே’ ன்னு சாங் போட்ருவீங்க போலன்னு நினைச்சேன்... பட் அவ ரியல் மறத்தமிழச்சி பாரு.. அதான் அந்த அடி... நீஅவக்கிட்ட புரபோஸ் பண்ணும் போது இந்த பயம் பயந்துருக்கனும், அதை விட்டுட்டுஅவக்கிட்ட அடியும் வாங்கிட்டு இப்படி பேசக்கூடாது….”

“எஸ் ஷான்ஸ்….. அன்னைக்கு மட்டும் நீ அவளைப் பிடிக்காம விட்டுருந்தா இன்னேரம்,எனக்கு ரிப் போட்டு போட்டோல மாலையும் போட்டுருப்பாங்க எல்லாரும்…. என்னா அடி…” என்று மனதிற்குள் அதை நினைத்து ஒரு நிமிடம் சிலிர்த்தவன், சட்டென்று உடலைக் குலுக்கிவிட்டு, ஒன்றுமே நடவாது போல் “ஓகே ஷான்ஸ், அதை விடு நீ ஹனிமூன் எங்க ப்ளான் பண்ணிருக்க...! இன்னும் எங்கேயும் பிளான் பண்ணலன்னா... இங்க வாயேன்… நான்உனக்காக டிக்கெட்ஸ் போடவா…?

“இல்லைடா…. இங்க கொஞ்சம் வேலையிருக்கு, அதை முடிச்சிட்டு சொல்றேன். டூ டேஸ்கழிச்சு எங்க ப்ரண்ட்ஸ் மட்டும் ஊட்டிக்கு போகலாம்னு பிளான் பண்ணிருக்கோம்… ஒருகெட்டுகெதர் மாதிரி, அப்புறம் வீக்கெண்டு மொத்த பேமிலியும் ஊருக்குப் போறோம், ஊர்லஒரு திருவிழா…”

“இங்க இன்னும் நிறைய ரிலேடிவ்ஸ் வீட்டுக்குப் போகனும்.. இப்போதான் நந்துக்குகொஞ்சம் பரவாயில்லை.. ஸோ லாங் ஜார்னி வேண்டாம்னு யோச்சிச்சேன்… அப்படியேஇருந்தாலும் இந்த மந்த் முடியாது… நந்துக்கு இன்னும் டூ மந்த்ஸ் லீவ் இருக்கே, அதுக்குள்ளவர முடியுதா பார்க்குறேன் சரியா…. நீயும் இந்த டைம்ல ஒரு பிகரை செட் செய்டா….” என்றுநீளமாகப் பேச, முதலில் பேசியதையெல்லாம் பொறுமையாய் கேட்டவன், அவளின் பிகர்செட் செய் என்றதில் அலறி விட்டான்.

“ஷான்ஸ்….! என்றுப் பல்லைக் கடிக்க,

“ஏன்டா நான் என்னத் தப்பா சொன்னேன் இடியட்….”

“பிகர் செட் செய்னா… அப்போ இருக்குற பிகரை என்ன செய்ய…? என்றான் கடுப்பாக

“இருக்குற பிகரா… அப்போ ஆல்ரெடி செட் செய்துட்டியா… சொல்லவே இல்லை ஃபூல்…”என்று அவள் திட்டிக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பக்கம் ஜோன்ஸின் மண்டையில் நங்,நங்கென்று கொட்டு விழுந்தது…

“நோ… வெனிஷா…. நோ… நோ.. நான் சும்மா தான் சொன்னேன் ஜஸ்ட் காமெடிஅவ்ளோதான்…” என்று அடித்தவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்க,

இங்கே ஷானவியோ, “அடப்பாவி...! அப்போ அவளைப் பக்கத்துல வச்சி தான் நீ இவ்வளவுபேசுனியா, உனக்கு இதெல்லாம் பத்தாது. நிஷா இன்னும் நல்லாப் போடு அவனை…” என்றுதன் பங்கிற்கும் ஏத்திவிட்டுக் கொண்டிருந்தாள்….

“ஏய் நீயெல்லாம் ஒரு ப்ரண்டா, அவ அந்த அடி அடிக்குறா, அடிக்க வேண்டாம்னுசொல்லனும் அதவிட்டு இன்னும் அடிக்க சொல்ற… துரோகி…! ஒரு விஷக்கிருமியை மூனுவருசம் சோறு போட்டு வளர்த்திருக்கேன் நான்.. என்னை என்ன செய்ய….? என்று அடிவாங்கிய படியே ஜோன்ஸ் புலம்ப,

அவனது பேச்சில் கலகலவென்று ஷானவி சிரிக்க ஆரம்பிக்கவும் அதுவரை அவர்களதுஉரையாடலில் கலந்து கொள்ளாமல், பார்வையாளனாக மட்டும் இருந்தவன்,மனைவியவளின் சிரிப்பில் தலைவலியெங்கும் பறந்து போனது போல் உணர்ந்தான். அவன்முகத்திலும் அழகான புன்னகை ஒன்று வந்ததது..

ஜோன்ஸிடம் பேசிக் கொண்டிருந்தாலும் ஷானவியின் பார்வை முழுவதும் சிபியின் மேலேதான் இருந்தது, சிபியின் முகத்தில் தோன்றிய எரிச்சலையும், கோபத்தையும் பார்த்தவள்மனதுக்குள் குத்தாட்டம் போட்டாள்.

அவளின் ஒரு மனமோ ‘ஹா ஹா டேய் நந்து என்னையவே நீ சீண்டுவியா, கண்டுக்காமபோவியா… வேணும்டா… வேணும்... நல்லா வேணும்.... இந்த ஒரு மாசமா என்னை சுத்தல்லவிட்டீயே அதுக்கு இதுதான் பனிஷ்மன்ட்’ என்று ஆட்டம் போட,

மற்றெரு மனமோ, ‘ஏண்டீ மூனு வருசம் அவனை நீ கண்டுக்கல, இந்த ஒரு மாசம் உன்னைகண்டுக்காம விட்டதுக்கு இந்தப் பாடா’ என்று அவளையே வசைபாட,… ‘இது ஒன்னு கண்டநேரத்துல வந்து என்ட்ரி கொடுத்துட்டு’ என அது தலையைத் தட்டி உள்ளே அனுப்பி விட்டுமீண்டும் சிபியையேப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். சிந்தனை மட்டும் வேறு எங்கோ….?

‘இப்படி லோ நெக் டீ- ஷர்ட், பெர்முடாஷ் போட்டு அவனுக்கு ஆப்போசிட்ல உட்கார்ந்துட்டுஇருக்கேன், இந்தப் பக்கி என்னைப் பார்க்காம எதைப் பத்தி யோசிச்சுட்டு இருக்கோ… ச்சே’என்று மீண்டும் அவனைத் திட்டியவள்,

இப்போ நேரடியாக முறைக்க, அதற்குள் தீப்க்கிடம் இருந்து அவனுக்குப் போன்வந்திருந்தது… போன் அலறலில் சுயத்திற்கு வந்தவன், ஷானவி தன்னை முறைப்பதைபார்த்துக் குழம்பியவன், ‘மனசுக்குள்ள கவுண்டர் கொடுக்குறதா நினைச்சு வெளியேஉளறிட்டமோ..? என்று யோசித்துப் பார்த்தான்… இல்லையே வாயைத் திறக்கவேஇல்லையே…. இது வேறதுக்கோ…’ என்று சமாதானம் ஆனவன் போனைப் பார்க்க அதுஅடித்து ஓய்ந்திருந்தது.

பிறகு இவனே அவனை அழைக்க.. ஒரே ரிங்கில் எடுத்தவன், “ஏண்டா போன் எடுக்கஇவ்வளவு நேரம், உன் மங்கியோட ஒரே ரொமான்ஸா… நான் போன் பண்ணி டிஸ்டர்ப்பண்ணிட்டேனா…? என்று நேரம் காலம் தெரியாமல் எரிச்சல் செய்ய…


“டேய்… என்று கெட்ட வார்தைகளில் கண்டபடித் திட்டிய சிபி, “ என்னைப் பார்த்தா உனக்குஎப்படித் தெரியுது… என்ன…? நீ ஜாலியா இருக்கேனு நக்கல் பண்றியோ….? இரு இருஇப்போ
போன் செஞ்சி வித்திக்கிட்ட உன்னைப் பத்தி எல்லாத்தையும் போட்டுக் கொடுக்குறேன்.”எனத் தன் கடுப்பை அவனிடம் காட்ட,

“தெய்வமே…. தெய்வமே… நீங்க நல்லா இருங்க... ஏதோ உங்க புண்ணித்துல நான்பொழச்சுப் போனதா இருக்கட்டும்… இப்படி அடிமடியிலேயே கை வைக்காதீங்க…”பயந்தபடியே தீபக் அலற,

இங்கு சிபியோ வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருதான்… “டேய் உன் காமெடிக்கு அளவேஇல்லையா… ஹா… ஹா… இந்த பயம் பயக்குற, அடி ரொம்ப பலமோ...? என்று சிரித்துவிட்டு, “சரி அதை விடு என்னாச்சு..? எப்போ கிளம்புறீங்க…? நாளைக்கு மார்னிங் இங்கஇருக்க மாதிரி வந்துடுங்க… என்ன…?” என்றதும்..

“உஷ்ஷ்…, முடியலடா சாமி, புருஷன் பொண்டாட்டி எதுல ஒற்றுமையா இருகீங்களோ…?இல்லையோ…? என் பொழப்பைக் கெடுக்குறதுல செம ஸ்ட்ராங் ஒற்றுமை… நல்லாவருவீங்க ரெண்டு பேரும்.”

“நானும் என் டார்லியும் எஞ்ஜாய் பன்றோம்னு உங்களுக்கு பொறாமை, அந்தப் பொறாமைதான் இப்படி ரிலீஷ் ஆகுது. நல்லவங்களுக்கு இதெல்லாம் சகஜம் தான், அதனால இதைஇப்படியே விட்டுர்றேன், ஆனா ஒன்னு சொல்றேன் மச்சான், உன் மங்கிட்ட மட்டும் ரொம்பஜாக்கிரதையா இரு, அவ ப்ளாக் பெல்ட் வேற மறந்துடாத..”
“டேய்…… அதை நான் பார்த்துக்குறேன் நீ பீல் பண்ணாத, நான் என்னக் கேட்டேன் நீ என்னசொல்லிட்டு இருக்க…”?

“ம்ம்… சரி சரி, டென்சன் ஆகாத…, நாங்க கிளம்பிட்டோம், ஸ்டெரெயிட்டா ஆகாஷ் வீடு,நைட் அவங்களைப் பிக்கப் பண்ணிட்டு மார்னிங்க் திருச்சி வந்துடுவோம், அதைச்சொல்லத்தான் கால் பண்ணேன்…. சரிடா மச்சான், ஆகாஷ் வீட்டுக்குப் போயிட்டு உனக்குகால் பன்றேன். ஓகே வா….”

“ஓகே டா….. பார்த்து பத்திரமா வாங்க பாய்…” என்றதுடன் போனை வைத்துவிட்டு பார்க்க,அப்போதும் ஷானவி அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். மிகவும் தீர்க்கமானபார்வை….

அந்தப் பார்வையில் எந்த விளையாட்டுத்தனமும் இல்லை. எதையோ அறிந்து கொண்டதன்விளைவாய், நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை என்ற குற்றம் சாட்டும் பார்வை. சிபியால்அதை எதிர்கொள்ள முடியவில்லை. ‘இவ்வளவு நேரம் நல்லாத்தான சிரிச்சுப் பேசிட்டுஇருந்தா… அதுக்குள்ள என்ன நடந்திருக்கும்’ என்ற யோசனையோடு அவனைப்பார்த்திருந்தான்..

அவனுக்குத் தெரியாது வித்தியாவிடம் அவள் கேட்ட கேள்விகளுக் கெல்லாம் அவள்மூலமாகவேப் பதில் கிடைத்து விட்டதென்று, அதைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்யத்தான்தீபக் அழைத்தது, வித்யா அவனிடம் இதை சிபியிடம் சொல்லக் கூடாது என்றுசண்டையிடவும் தான், பயணத்தைப் பற்றி பேசி, எதை எதையோ உளறி வைத்தது.

ஷானவியின் பார்வையின் பொருள் புரியாமல் சிபி விழிக்க, அதேப் பார்வையோடு அருகில்வந்தவள் “நந்து… நீ லவ் பண்ணியே ஒரு பொண்ணு,. அவங்க பேரைச் சொல்லு, இப்போஅவங்க என்ன பன்றாங்க…” என்றாள் நேரடியாக, அவளின் இந்தக் கேள்வியைச் சற்றும்எதிர்பாராத சிபி என்ன சொல்வது என்றுத் தடுமாற…,

“எனக்கு பதில் வேணும், அதுவும் உண்மையான பதில்….”

அவள் இதைச் சொன்னதும், பதில் சொல்ல முடியாத கையாளாகத் தனம் அவனைஅவளிடம் கோபம் கொள்ளச் செய்தது.



“ஏய் அறிவில்லை… எப்போ வந்து என்னக் கேள்வி கேட்குற, அதை தெரிஞ்சு நீ என்னசெய்யப் போற, அவ என்னோட பாஸ்ட், அதைப் பத்திப் பேச எனக்கு கொஞ்சமும் விருப்பம்இல்ல, இனி எப்பவும் இந்த மேட்டர் பேசாத..” என்றான் அடக்கப்பட்ட எரிச்சலில்….”

தன்னிடம் மறைத்துவிட்டான் என்ற கோபம், இத்தனை வருடங்கள் உடன் இருந்தும் அவனது எண்ணங்களையும், செயல்களையும் கவனிக்கவில்லையே என்ற ஆதங்கம்... உண்மையான நேசத்தை விட்டுவிட்டு கானலாய் மாறிப்போகும் ஒருவனின் செய்கையை நம்பி, அவன் காதலை ஏற்றது... அவன் தன்னை ஏமாற்றியது, இப்படி எல்லாமும் சேர்த்து அவளுக்குள் பெருத்த நடுக்கத்தை கொடுத்திருந்தது.

இன்று எல்லாம் தெரிந்த பிறகும் தன்னிடம் உண்மையை மறைக்கிறானே என்ற எரிச்சல், அன்று அவளிடம் தன் காதலை சொல்லியிருந்தால் இன்று இப்படி நடந்திருக்காதே என்ற ஆதங்கம் எல்லாம் சேர்ந்து அவளை கோபம் கொளள வைக்க... அவை தந்த கோபம் சிபியின் பேச்சில் மேலும் ஏற, அவனது நிலைக் கூட அறியாமல் தன் பலம் கொண்ட மட்டும் அவன் கன்னத்தில் அறைந்தவள் “ஓ… நான் உனக்கு ஃபாஸ்டா..? அப்படின்னா ப்யூச்சர் யாருன்னுசொல்றியா….” என்றாள் வெகு நிதானமாக ஷானவி….!



“தியா உனக்கு இது சரியா வரும்னு தோனுதா… சிபி பாவம், இனியும் ஷானவி அவாய்ட்பன்றதை அவனாலத் தாங்கிக்க முடியாது….”

“போதும் தீபக், சிபிண்ணா கஷ்டம் இதோட முடியட்டும்.. ஷானு இப்போ நார்மல் ஆயிட்டா, அவ மனசுக்குள்ள சிபிண்ணா தன்னோட ஹஸ்பண்ட் அப்படிங்கிற தாட்டை வச்சுட்டா, இதுதான் சரியான டைம், அவக் கிட்ட நாம உண்மையை சொல்றதுக்கு, பர்ஸ்ட் கொஞ்சம்கஷ்டமா தான இருக்கும். பட் அவ சரி பண்னிருவா… எனக்குத் தெரியும் ஷானுப் பத்தி,செஞ்சத் தப்பை சரி பண்ண நினைக்கிறா… அவ தாட்டும் சரி தானே…. இந்த மூனுவருஷத்துல அவளுக்குள்ளையும் சில மாற்றங்கள் இருந்தது.”

“அண்ணாவோட ஆக்ஸிடன்ட்க்கு அப்புறம் முழுசா மாற்றம் வந்துடுச்சு. நாம் எல்லாம்எதிர்பார்த்த மாதிரி அவங்க லைப் மாறும். அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்….”நீளாமாய் வித்யா பேசவும்,

“ அதுவும் சரிதான், அவங்க லைப் அவங்க பார்த்துக் கட்டும், நம்ம ஒரு ஆக்ஸனும் எடுக்கவேண்டாம், அதிரடி ராணி அவளே முடிவு பண்ணட்டும். என்ன என் நண்பனைநினைச்சாதான் கவலையா இருக்கு.” என தீபக் பேச,

“ம்ம்ம்… இப்படியே பேசிட்டு இருங்க, அவக்கிட்ட சொல்றேன், அப்போத் தெரியும் அவளோடஅதிரடி….”

“ஹா ஹா… ஆனாலும் தியா டார்லிங்க், மாமாவைப் பார்த்து பொசுக்குனு இப்படிப் பேசக்கூடாது. எவ்ளோ நாள் கழிச்சு இப்போ தான் நம் வாழ்க்கை அழகா போகுது, அதுக்குள்ள ஒருநாரதரை ரெடி செய்யாத…”

“ஹேய் என் ப்ரண்ட் உங்களுக்கு நாரதரா இதெல்லாம் டூ மச் சொல்லிட்டேன்…” பதிலுக்குப்பதில் பேசியவள் தலையனையை எடுத்து அவனை விரட்ட, அவன் ஓட, சிறிது நேரம் தவிக்கவிட்டவன் பிறகு சுகமாய் அவளுக்குள்….

“ மிகவும் நெருக்கமான, இறுக்கமான ஓர் அனைப்பு அவனது.. கைகள் கணவனுக்கானதேடலைத் துவங்க அவள் மொத்தமாய் நெகிழ்ந்து குழைந்து அவனுக்குள்….”

“தியா…. மிகவும் மெல்லிய கிசுகிசுப்பான குரல் மனாளனது.”

“ம்ம்..” சத்தம் வந்ததா?... இல்லையா…? மங்ககையனது…!

“ஐ லவ் யூ சோ மச்...” அவளது இதழ்களுக்குள் மொத்தமாய், முத்தமாய் அவனின்வார்தைகள்.

பதில் சொல்லா நிலையில் அவள் சர்வமும் சரீரமும் அவனுக்குள்...!

ஆண்மைக்குள் அடங்கினாள் ஆனந்தமாய்….!

பெண்மையை வென்றான் பேரின்பமாய்….!

மூன்றாண்டுகளின் பிரிவும், தனிமையும் அது கொடுத்த தாபமும் குறையுமா என்ன…..?



பனிவிழும்....
 
Top