• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் - 18

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
918
481
93
Tirupur
அத்தியாயம் – 18

என்றேனும் வாழ்வின்
ஏதேனும் ஒருநொடி
உனக்கு உணர்த்தும்,
நீ என்னுடன் இருந்த
நிமிடங்களையும், நான்
உன்னை இழந்து தவித்த
நிமிடங்களையும்...!!!
**********************

அவனது எந்த சமாதானங்களும் அவளிடம் எடுபடவில்லை…. அவள் மனதில் இருந்த, இத்தனை நாள் அரித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் இன்று ஒன்றுமே இல்லாமல்போனது. அவளுக்குள் மகிழ்ச்சியைத் தான் கொடுத்திருக்க வேண்டும், மாறாக அவள்மனம் எளிதில் சமாதானம் அடையவில்லை.


“சிபி காதலித்தவள் வேறு ஒருத்தி, தனக்காக அவன் காதலைத் தியாகம் செய்து, தன்வாழ்க்கைக்காக அவன் வாழ்க்கையை கொன்று விட்டான்.” இதுதான் அவளது இத்தனைநாள் ஒதுக்கத்திற்கான காரணம்.

ஆனால் இன்றோ, அதெல்லாம் ஒன்றுமில்லை, அவள் நந்து யாரோ ஒரு பெண்ணின்வாழ்க்கையைக் கெடுக்கவில்லை, என்ற எண்ணம் தந்த நிம்மதி சொல்லில் வடிக்கமுடியாது. காற்றில் பறப்பது போல் மனம் லேசானது. ஆனாலும் ஏன் அவன் தன்னிடம்சொல்ல வில்லை.

ஒரு முறைக் கூட தன்னை ஒரு காதல் பார்வை கூட பார்க்க வில்லை. அப்படி ஏதேனும் சிறுவித்தியாசம் தெரிந்திருந்தாலும், அவள் உண்மையைக் கண்டுப் பிடித்திருப்பாளே…. எப்படி….? எப்படி நான் அவனைக் கவனிக்காமல், அவன் வாழ்க்கையும் தொலைத்து, என்வாழ்க்கையையும் தொலைக்க இருந்தேன்.
இந்த மாதிரியான காரணங்கள் அலை அலையாய்த் தோன்ற ஷானவியால் உடனடியாகசமாதானம் ஆக முடியவில்லை, தனக்கு எதிரே மிகவும் பரிதாபமாக அமர்ந்திருந்தசிபியைப் பார்க்கவும் அவளுக்கு பாவமாய் போயிற்று. ‘என்னை விட அவன் தான்அதிகமாய் வருத்தப்பட்டிருப்பான், என் மேல் தான் தவறு….’

‘என்னை விரும்பும் இவனிடம், நான் நிஷாந்தை விரும்புகிறேன்’ என்று சொன்னது எவ்வளவுபெரிய தவறு. அந்நேரம் இவன் எத்தனைக் காயப்பட்டிருப்பான். இப்போது கோபம் அவள்மேலேத் திரும்பியது. எதுவும் சொல்லாமல் எழுந்தவள், வெளியே செல்லப் போக “அம்மு” என்ற சிபியின் அழைப்பு….

“போதும் நந்து, இன்னைக்கு இது போதும்…. இதுக்கு மேல எதையும் சொல்ல வேண்டாம்…” என்று ஒரு விரக்தியுடன் கூற,

“அம்மு… ப்ளீஸ்… எனக்கும் போதும், இந்த வலி, அது கொடுக்குற வேதனை… மனசெல்லாம்ரணமா வலிக்குது அம்மு…. உன்னை நெருங்கவும் முடியாம, விலகவும் முடியாம, நீ என்னமுடிவு எடுப்பன்னுத் தெரியாம குழம்பித் தவிச்சு, என்னோட முட்டாள் தனத்தால உன்வாழ்க்கையையும் கெடுத்துட்டேனோனு தினம் தினம் மனசு அரிக்குது.


“வீட்ல யாரு கூடவும் பேச முடியல, முன்னாடி என் கூட யாரும் பேசல, அவங்க கோபம்தணிஞ்சு வரும் போது நான் பேசல…”

“நீ என்னை அவாய்ட் பண்ண, அந்தக் காரணம் சரிதான்… காலப் போக்கில் மாறி நீஎன்னோட பேசுவன்னு நினைச்சேன்.. எனக்காக இல்லைன்னாலும், நம்ம பேமிலிக்காக, ஆனா எதுவுமே நடக்கல, என்னோட எதிர்பார்ப்புகள் எவ்வளவு பொய்யாப் போயிடுச்சுஅதை என்னால நம்பவே முடியல,”




“என்னோட ‘பாஸ்ட் ப்ரண்ட், கைடு, வெல்விஷ்ர், மை ஹீரோ இப்படி எல்லாமே எனக்கு சரண்அண்ணா தான்.’ அவரும் என்னைப் புரிஞ்சுக்கல, நான் செய்தது சரின்னு சொல்ல வரல, பட்அது தப்பும் கிடையாது.”

“அந்த நேரம் உன்னோட மனநிலையை என்னால யூகிக்க முடியல உன் மைன்டைகண்டிப்பா டைவர்ட் பண்ணியே ஆகணும் என்ற கட்டாயம். சோ, இந்த மேரேஜ் தான் உன்மனசையும், மைன்டையும் டைவர்ட் பண்ணும்னு இப்படி செஞ்சேன்.

அதோட…. அதோட ‘எனக்கும் இனி உன்னைத் தனியா விட பயமா இருந்தது.. மறுபடியும்என்னை விட்டு வேற யாரையும் சூஸ் பண்ணிட்டா.’ அவள் முகத்தில் தீயின் ஜுவாலையாய்கோபம். “இல்ல நீ செய்வன்னு சொல்ல வரல, வீட்ல பேசிட்டாங்கன்னா… நீ மறுக்க முடியாதஅளவுக்குக் கட்டாயப் படுத்தினா….”

“இப்படி ஏகப்பட்ட பயமும், குழப்பமும் எனக்குள்ள, அதனால தான், பின்னாடி வரப்போறபிரச்சினைகள் எதைப் பத்தியும் யோசிக்காம உன் கழுத்தில தாலிக் கட்டினேன். இதுசுயநலம்னு நினைச்சா சுயநலம். பட் எனக்கு அது அப்படி இல்ல. என் பொருளை யாருக்கும்கொடுக்க கூடாதுங்குற ஒரு பிடிவாதம்.”

“எனக்குள்ள காதல் வந்த நொடி இன்னும் பசுமையா இருக்கு. அன்னைக்கு எனக்கு நம்மகாதல்ல எந்த தடையும் இருக்கப் போறதுல்ல பிகாஸ் நம்ம வீட்ல நம்ம ரெண்டு பேருக்கும்விருப்பம் இருந்தா மேரேஜ் பண்ணி வச்சுடலாம்னு ஒரு தாட் இருந்தது,”

“ சோ எனக்கு உன்மேல வந்த காதலைத் தப்பா எடுக்கத் தோனல.. சரண் அண்ணா, அஸ்வத்அண்ணா, ஏன் ரவி அண்ணாக்கு கூட தெரியும், நான் உன்னை லவ் பண்றது.”

“உன் சம்மதம் இருந்தா மட்டும் தான், நான் ஓகே சொல்வேன்னு சரண் அண்ணாசொன்னாங்க. நானும் சரின்னு தான் சொன்னேன், என்னை நம்பினேன், என் காதலைநம்பினேன் அது பொய்யாகப் போயிடாதுனு நம்பினேன்… ஆனால்…” நீண்ட பெருமூச்சுஅவனிடம், “ஆனால் நீ நிஷாந்த் பற்றி என்னிடம் சொல்லவும், அதை என்னால ஏத்துக்கவேமுடியல. எங்க தப்பு செஞ்சேன்னு ஒரே குழப்பம்.”

“உன்னோட ஸ்டடீஸ் முடியட்டும்னு வெயிட் பண்ணது தான் தப்பா…? இல்லை உன் நட்புமேல நீ வச்சுருக்க நம்பிக்கையா…? இப்படி பல குழப்பம், அது கொடுத்த கோபம், உன்பக்கத்துல என்னால வர முடியல.. அப்படி வந்தா என்னையும் அறியாம என் மனசை உன்கிட்ட சொல்லிடுவேனோனு பயம். இதெல்லாம் தான் நான் காதலை மறைக்கக் காரணம்.”

“நிஷாந்த் பற்றி நீ சொன்னதெல்லாம் வச்சு நான் அவனை பத்தி விசாரிச்சேன் அப்பவேஎனக்குத் தெரியும். அவன் ஆல்ரெடி எங்கேஜ்டுனு.. அப்போ என் மனசு எந்த மாதிரிஉணர்ந்துச்சுனு என்னால சொல்ல முடியல. மனசுல ஏறி அமுக்கின பாரமெல்லாம் இறங்கினமாதிரி பீல் பண்னேன்.”

“உங்கிட்ட சொல்லாம்னா, நீ எதையும் நம்பத் தயாரா இல்லை, சோ நீயே அவனைப் பத்திதெரிஞ்சு வெளியே வரணும்னு நினைச்சேன், ஆனால் அதுக்கு இவ்வளவு நாளாகும்னுஎதிர்பார்க்கல. இப்போ தோணுது. அன்னைக்கே நான் உன்னை அலார்ட்பண்ணிருக்கணும்னு. காலம் கடந்த யோசனை இல்லையா…. இது..?”




“நிஷாந்தோட உண்மைகள் தெரிஞ்சதும் நீ முதல்ல வருத்தப்பட்டாலும் அப்புறம்சரியாகிடுவனு நினைச்சேன். உன் கிட்ட எந்த மாற்றமும் இல்ல, அதோட வித்யாக்கிட்டையும்நீ ரெட்க்ராஸ்ல ஜாயின் பண்ணப் போறேனும் சொல்லிருக்க, இது எல்லாம் தான் என்னைஅப்படி ஒரு முடிவு எடுக்க வச்சது.”

“என்னோட தவறு உன்னை சரி பண்ணும்னு நினைச்சேன். அதுக்கு உனக்கு அவகாசம்வேணும்னு புரிஞ்சது, சோ உன்னை லண்டன் யுனிவர்சிட்டில எம்.எஸ்க்கு சேர வச்சேன், தீபக்கை காம்ப்ரமைஸ் செஞ்சு வித்யாவையும் அப்ளை பண்ண வச்சேன்.”

“ஆனாலும் ஒரு பயம், நீ போன மாதிரியே திரும்பி வந்துடனுமே அப்போ தான், அந்தக்கார்ல நம்மளோட விவாதம்…? இதுவா அதுவானு ஊஞ்சல் ஆடிட்டுருந்த மனம், அப்படியேநின்னது. நான் வேற எதையும் யோசிக்காம நீ மேரேஜ் பண்ணித்தான் லண்டன்போகணும்ன்னு முடிவு பண்னேன்.”

“ஆனா அதுக்கு முன்னாடியே எம்.எஸ் அப்ளிகேஸன்ஸ் ஃபில் பண்ணும் போதே, மேரேஜ்ரிஜிஸ்ட்ரேசனுக்கும் சைன் வாங்கிட்டேன். அப்போ இப்படி மேரேஜ் பன்ற ஐடியாவே இல்ல, அந்த சண்டைக்கு அப்புறம் தான் நானே கன்பார்ம் பண்னேன். செய்யவும் செஞ்சேன், தீபக்அப்பாக்கிட்டயும், வித்யா அப்பாக்கிட்டயும் உண்மையை சொன்னேன்.”

“அது தான் அவங்க எனக்கு சப்போர்ட் பண்ணக் காரணம். என்ன என்ன காரணம்சொன்னாலும், எவ்வளவு காரணம் ஏற்படுத்திக் கிட்டாலும் உன்னோட பெர்மிசன் இல்லாமமேரேஜ் பண்ணது என்னோட மன்னிக்க முடியாத தப்பு…. அதை நான் இல்லைன்னு சொல்லமாட்டேன்..”

“எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுக்கலாம். அது நீ மட்டும் தான்கொடுக்கணும், வேற யாருக்கும் அந்த முடிவை நான் கொடுக்கல. எதை விட்டேன், எதைசொன்னேன் எல்லாம் தெரியல. உன் கிட்ட சொல்லிட்டேன், இனி நீ தான் சொல்லணும்…” என மிக நீளமாய் பேசி முடித்தவன் தொய்ந்து அமர்ந்து விட,

கணவனின் இத்தனைப் பேச்சிற்கும் எதுவும் பேசாமல், அமைதியாக வெளியே சென்றுவிட்டாள் ஷானவி. அவள் என்ன நினைக்கிறாள், எப்படி உணர்கிறாள் என்று அவளுக்கேத்தெரிய வில்லை. தனிமையின் துணையை நாடியவள் அது இங்கே இத்தனைக் கூட்டத்தில்முடியாது என்று நினைத்து, எதிர் வீடானத் தன் வீட்டிற்குள் இருந்த தன்னறைக்குள்அடைந்தாள் நீண்ட நாட்களுக்குப் பிறகு....

-------

“மாயூ எல்லாம் ரெடியா…? அப்புறம் அது இல்லை.. இது இல்லனு சொல்லக் கூடாது…”

“‘மூணு நாளா இந்த ஒரே கேள்விதான்…? கொஞ்சம் கேள்வியைத் தான் மாத்திக்கேட்குறது…”

“ஹா ஹா… என்னை கிண்டல் பண்ணலன்னா உனக்குத் தூக்கம் வராதா…? கிண்டல்எல்லாம் போதும், உனக்கு டைமாச்சு பாரு, கிளம்பு, உன்னை க்ளாஸ்ல விட்டுட்டு, நான் நம்மஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரைக்கும் போயிட்டு சொல்லிட்டு வந்துடுறேன்.”

“ம்ம் சரி சரி.. கிளம்பிட்டேன், அத்தைக் கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன், நீங்க போங்க.’




“‘வண்டியை எடுக்குறேன் நீ வா…” என்றதோடு ஆகாஷ் வெளியேற, தன் மாமியாரிடம்சென்றவள், “அத்தை குட்டித் தூங்குறா… அவ எழறத்துக்குள்ள நாங்க வந்துடுவோம்…. வேலை எல்லாம் முடிஞ்சது, நீங்க எதையும் இழுத்துப் போட்டு செய்யாதீங்க, உங்களுக்குவேற எதுவும் வேணுமா அத்தை….” என்று மான்யா கேட்க,
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், ‘நீங்க போயிட்டு வாங்க, நான் பார்த்துக்குறேன்…” என்றவர் டிவியில் கவனமாகி விட, மான்யா வெளியே ஓடினாள்.

“சீக்கிரம் வாங்க பொண்டாட்டி, அப்புறம் டைம் ஆச்சு டைம் ஆச்சுனு புலம்புவீங்க, சரிநம்மாளு டென்சன் ஆகுறாளேனு ஸ்பீடா போனா, இன்னும் டென்சன் ஆகறீங்க…”

“ம்ம்… டைம் ஆச்சுன்னா ஸ்பீடா போகனுமா என்ன…? கொஞ்சம் சீக்கிரம் கிளம்பவேண்டியது தான…. மிஸ்டர் ஆகாஷ் இப்போ குடும்ப இஸ்திரன். உங்களை நம்பி நாங்கநாலு பேர் இருக்கோம். சோ இந்த மேட்டர்ல நோ காம்ப்ரமைஸ் பார் மீ…”

“ஹா ஹா….பொண்டாட்டி சொன்னா கேட்கனும்னு ஒரு பெத்த சாமியார் சொல்லிருக்கார், அதனால நீ என்ன சொன்னலும் ஆமாம் சாமி போட்டுற வேண்டியது தான். ஆனாலும் நீசொன்னதுல இந்த விசயத்துல எனக்கு நோ காம்ப்ரமைஸ்.”

“நான் சொன்னதுலயா நோ காம்ப்ரமைஸா…. அது எதுல…?


“அது தான்… அது தான்பா… அந்த மேட்டர்… நாலு பேருனு சொன்னீங்களே, அது வந்து ஐந்துபேரா இருந்தா தான் நோ காம்ப்ரமைஸ், இதுக்கு டீலுன்னா… அதுக்கும் டீலுதான்…”

‘அய்யோ கடவுளே… எப்போ என்ன பேசுறீங்க பர்ஸ்ட் வண்டியை ஒழுங்கா ஓட்டுங்க, அதான்

ஓகே சொல்லியாச்சே அப்புறம் என்ன….? சும்மா அதையேக் கேட்குறது…”

‘ஹா ஹா…. ஒரு க்ளாரிபிக்கேஷன் தான் மிஸஸ் ஆகாஷ்… பிறகு இந்தப் பச்சப் புள்ளையைஏமாத்திட்டா… என்ன பண்றது. சோ அலார்ட் பார் மீ…

“உங்களை….!!!” என்று அவன் முதுகில் அடித்தவள் அவன் மீதே சாய்ந்து கொள்ள, மனைவியின் வெட்கம் ஆகாஷிற்கு ஆண்மையின் கர்வத்தைக் கொடுத்தது. மான்யாவின்இந்த மாற்றத்திற்குத் தானே அவன் அத்தனைக் கஷ்டப்பட்டது.

அன்றைய நிலையில் நண்பர்கள் மூவரின் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் தான். தீபக்வித்யா வாழ்க்கை சுமூகமாகி இருந்தாலும் மூன்றாண்டு பிரிவை எண்ணிக் கலக்கம்இருந்தது.




மான்யா தன்னையும் தன்னுடனான இந்த வாழ்க்கையையும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளவேண்டும், அதற்கு இந்தப் பிரிவு அவசியம் என்று நினைத்தான் ஆகாஷ்.

சிபியோ தன் பழைய ஷானவி திரும்பக் கிடைக்க இது தான் சரியான வழி என்று இந்தப்பிரிவை எண்ணினான்.

காலங்கள் அதன் போக்கில் கடந்து போக, இதோ இந்த மூன்றாண்டுகளில் மூவரின்வாழ்க்கையும் அழகாய் மாறி விட்டது.

ஆகாஷின் தந்தை உடல்நலமில்லாமல் இறந்து விட, அதுவரைத் தன் தாய் வீட்டில்குழந்தைகளுடன் இருந்து வந்த மான்யா, மாமியாருக்குத் துணையாக இங்கு வந்தாள். ஆகாஷின் தங்கைகள் அதற்கு உடன்பட வில்லை என்பது தெரிந்தும் அவர்களைப் பற்றியும், அவர்களது பேச்சிற்கு மதிப்பளிக்காமலும் மான்யாவைத் தன்னுடனே வைத்துக் கொண்டார்ஆகாஷின் தாய்.

அவரும் மகன் படும் பாட்டைக் கண் கொண்டு பார்க்கிறாரே. மகள்களைப் பற்றி இனி என்னகவலை… ஒரே மகனின் வாழ்வு வளமாக வேண்டுமே என்ற எண்ணமும் பிராத்தனையும் சிலநாட்களிலையே கை கூடி வந்தது. ஆம்…! மான்யா தன் வாழ்க்கையை ஆகாஷோடுஇணைந்து வாழ முயற்சி செய்தாள். அவளின் தனிமையைப் போக்க, அவள் பாதியில் விட்டதன் மேற்படிப்பை தொடர வைத்துப் பட்டம் வாங்க வைத்தான். மேலும் அவளதுப் படிப்புவீணாகமல் வாரம் மூன்று நாட்களுக்கு ரெசிடன்ஷியல் ப்ரபொஷ்ர் வேலையும் வாங்கிக்கொடுத்தான். அவளுக்குப் பிடித்த வேலையான பெண்ணியம் பற்றிய கட்டுரைகளை எழுதிவெளியிட வைத்தான்.

இப்படி அவளது மனதை திசைமாற்றி அதில் தான் மட்டும் அரியாசனம் அமைத்துமகாராஜானாய் அமர்ந்துக் கொண்டான். இதோ இப்போதும் கூட அவளைக் கல்லூரியில்விட்டு வர சென்றான். அவனது கனவும் அழகாய் அவன் வாழ்வில் பலித்தது.

“ஆகாஷ்…. ஆகாஷ்…” என்ற மனைவியின் உலுக்கலில் நினைவுக்கு வந்தவன், அவளைப்பார்த்து அசடு வழிந்தான்…. “என்ன…. சாரோட நினைப்பு எங்க இருக்கு, வண்டி நின்னுஎவ்ளோ நேரமாச்சு, நானும் கூப்பிடுறேன், அப்படி ஒரு மயக்கம் கண்ணுல…” என மான்யாகிண்டலடிக்க….

“ஹா… ஹா… அதுவா அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி….” என்று அவன் சிரித்துக்கொண்டே பாட…..

“ப்ச் பப்ளிக்ல என்ன பண்றீங்க…. போங்க நான் போறேன்….” என்று தன் வெட்க முகத்தைஅவனுக்கு காட்ட முடியாமல் ஓடினாள்…. மனைவியின் வெட்கமும், அவளது ஓட்டமும், ஆகாஷிற்கு புன்னகையை வர வைத்தது. அவனது உலகில் அவன் இன்பமாய் லயித்திருக்க, அபஸ்வரமாய் செல் போனின் அழைப்பு, எரிச்சலோடு எடுத்துப் பார்த்தான் அதில் ஒலித்த நம்பர் தீபக்குடையது.….

‘ச்சே…. இவனா…. எப்படித்தான் மூக்கு வேர்க்குமோ...? கரடி வேலையை மட்டும் சரியாசெய்வான்…’ என்று மனதுக்குள் திட்டியபடியே “சொல்லுடா மச்சான்..” என்றான் சலிப்பாக….

“ஓ... இங்கையும் கரடி வேலைப் பார்த்துட்டேனா…. ஹாஹா... சாரி டா மச்சான்….” என்றவனின் குரலில் இருந்தக் கிண்டலை உணர்ந்த ஆகாஷ், வாய்விட்டு சிரித்தபடியே…… “ஏன் மச்சான் இப்படி இருக்க, வித்திக்கூட சேர்ந்தும் நீ இன்னும் திருந்தலையா…. ஹாஹா….. உன்னை அவன் சும்மா விட்டானா….? என்ன…? இல்ல என் பாசமலர் சும்மா விட்டாளா….?”எனவும்….






“அவன் சும்மா விட்டுருப்பானு நினைக்கிறியா…? அதோட அந்த சண்டக்காரி இல்ல போல, இருந்திருந்தா இந்நேரம் எனக்குப் பஞ்சர் ஓட்டிருக்கணும், என் குடும்பத்துல கும்மிஅடிச்சிருப்பாளே அவ….” என்று தீபக் சிரிக்க ஆகாஷும் அவனுடன் இணைந்துகொண்டான்.

“சரி மச்சான் நான் உனக்கு கால் பண்ண விஷயத்துக்கு வர்றேன்”

“அடேய் என்னன்னு சொல்லித் தொலையேன்டா நல்ல மூடை ஸ்பாயில் பண்ணிட்டு” என்று சலித்தான் ஆகாஷ்.
“இன்னுமாடா மூடோட சுத்திக்கிட்டு இருக்க, நீ உருப்பட மாட்ட” என்று சாபம் போல் சொன்ன தீபக் நேரில் இருந்தால் செம மாத்து வாங்கியிருப்பான் ஆகாஷிடம்.

“சரி சரி நீ ரெஸ்லிங்க்கு ரெடி ஆகிட்டன்னு தெரியுது. மன்னிச்சிருப்பா உன்னோட பூஜையில நான் இடையில வந்ததுக்கு. நான் போன் பண்ண விஷயம் என்னன்னா...” என்று இழுத்தான்.

தீபக்கின் கிண்டலை பொருட்படுத்தாத ஆகாஷ் “டேய் மச்சான் ப்ளானெல்லாம் பக்கா தான, எதுவும் சொதப்பிட மாட்டியே... உன்னை நம்பிதாண்டா வர்றேன்....” என தன் பயத்தை சந்தேகமாய் கேட்க,

“மாப்பிள்ள தீபக் இப்போ தீயா வேலை செய்றான் தெரியுமா..? சோ கூல்... எவ்ரிதிங் இஸ் பெர்பெக்ட்... சூப்பரா ப்ளான் பன்னி அசத்திருக்கேன், நீயே பார்த்துட்டு ஜெர்க் ஆகப்போற, அதனால பயப்படாம உன்னோட பேமிலியை பேக் பண்ணு.... இன்னும் த்ரீ ஹவர்ஸ்ல அங்க இருப்போம்..” என்றுத் தன் வழமையான கிண்டலுடன் முடித்தான் தீபக்.

“ஏதோ நீயும் சொல்ற, நானும் கேட்குறேன்... ப்ளான்ல ஜஸ்ட் சொதப்பல் இருந்தாலும் நீ செத்தடா... பார்த்துக்கோ... ஒகே நீங்க பார்த்து வாங்க... நாங்க வெயிட் பண்றோம்..” என்று ஆகாஷ் வைத்துவிட, தீபக்கின் முகத்தில் குறும்பு புன்னகை...

‘அவனவன் ஒரு பேபி வச்சிட்டு கண்ணு முழி பிதுங்கிட்டு இருக்கான்.. எனக்கு இங்க ஒன்னுக்கே இன்னும் வழி ஆகல, சாருக்கு மூணாவது கேட்குது.... ஹீஹீ மச்சான் நீ வந்து என்னோட பிளானை பார்த்தா எப்படி ஷாக் ஆகப்போறியோ... இப்போ நினைச்சாலே எனக்கு சிப்பு சிப்பா வருது... ஹாஹா என்று விழுந்து விழுந்து சிரித்தான் தீபக்...

தீபக்கே ஷாக் ஆகும்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று நினைத்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டானோ...?

பனி விழும்..!!!
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
251
158
43
Theni
next epi pls