அத்தியாயம் – 19
யாரும் இல்லாத என் ராத்திரிகள்.... மறுநிமிடம் என் கனவுகளில் மட்டுமே உன்னுடன் நான்...
கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம்.. அதுவும் நிரந்தரமில்ல...
நான்உன்னை பிரியவில்லை நீ என் அருகும் இல்லை... ஆனால்
உன்னை யாசிக்கிறேன்... அதைவிட உன்னை நேசிக்கிறேன்...!!!!!
கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம்.. அதுவும் நிரந்தரமில்ல...
நான்உன்னை பிரியவில்லை நீ என் அருகும் இல்லை... ஆனால்
உன்னை யாசிக்கிறேன்... அதைவிட உன்னை நேசிக்கிறேன்...!!!!!
திருச்சியில் இருந்து கோவை வரை காரில் வந்தவர்கள், கோவையில் இருந்து ஊட்டிக்குட்ரெயினில் பயணம் செய்தனர். மலைப் பாதையில் ரயில் பயணம் அனைவரையும்பரவசப்படுத்தியது. மான்யாவிற்காக மட்டும் தான் இந்த ரயில் பயணம்.. மற்றஐவருக்கும் இந்தப் பயணம் மூன்றாவது முறை. ஒரு முறை கல்லூரியில் இருந்து, மற்றொரு முறை அஸ்வத்தின் வீட்டிற்கு, இது மூன்றாம் முறை.
ஷானவியின் வாய் மொழியால் இந்த ரயில் பயணப் புகழைக் கேட்ட மான்யா இந்தமுறையும் இதையே தேர்வு செய்ய வைத்தாள். ஆண்களும் பெண்களும் எதிரெதிரேஅமர்ந்து கொண்டு இயற்கை அழகை ரசித்தபடியே அரட்டையில் இருந்தனர். வழக்கம்போல தீபக்கும் வித்யாவும் ஜொள்ளை ஒழுக விட மற்ற நால்வரும் அவர்களை வைத்துஓட்டிக் கொண்டிருந்தனர்.
முதல் நாள் கிளம்பும் வரைக் கூட சிபியிடம் எதையும் பேசாத ஷானு இன்று இப்படிமற்றவர்களுடன் சிரித்துப் பேசி விளையாடுவதைப் பார்க்க பார்க்க அவனதுபொறுமை எருமை மீதேறி பறக்க இருந்தது.
‘அன்னைக்கு அவ்ளோ பேசுனோமே, எப்படியெல்லாம் பீல் பண்ணி டைலாக் டெலிவரிபண்ணோம், கேட்குற வரைக் கேட்டுட்டு, இப்போ ஒன்னுமே நடக்காத மாதிரிஇருக்காளே, இவளை என்ன செய்ய….? நந்தா இது நீயா தேடிக்கிட்ட ஆப்பு, பொறுமையாதான் இருக்கனும், அவ என்ன நினைக்குறானு முதல்ல கண்டுபிடி. அப்புறம் நீ பிடில் வாசி….’ என்றுத் தனக்குள்ளே பட்டி மன்றம் நடத்திக்கொண்டிருந்தவன், ஷானவித் தன்னையேப் பார்பதை உணர்ந்து அவளையே இவனும்பார்க்க, இப்போது மற்ற நால்வருக்கும் இவர்கள் அவல் ஆகி போனார்கள்.
“கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக….” என தீபக் ஆரம்பிக்க,
“கண்ணாளன் ஆசை மனதை தந்தானே எனக்காக” என்று வித்யா முடிக்க,
இப்படியே இருவரையும் மாறி மாறி மற்ற இருவரும் ஓட்ட, ஆகாஷும், மான்யாவும்கைத்தட்டலோடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘ஷானவியின் முகத்தைப் பார்த்த சிபிக்கோ, அவளை விட்டு அந்தப்புறம் இந்தப்புறம்பார்வையைத் திருப்ப முடியவில்லை. பார்வை அவளிடமே நிலைக் குத்தி இருந்தது. காரணம் ஷானவியின் முகம் குங்குமமாய் சிவந்து செவ்வரளியை ஒத்திருந்தது.. அவன் இதுவரை அவளை இப்படி பார்த்ததே இல்லை.’
‘பெண்களின் அதீத அழகு, அவர்களின் வெட்கம் சுமந்த முகம், அதில் தொலைந்தவன்மீண்டதே இல்லை’ சிபியும் அதில் அழகாய் தொலைந்து போனான். மீளவே முடியாதஷானவி எனும் ஆழிப் பேரலையில்…..
“இந்த லூசுங்க இன்னைக்கு என்னை நல்லா வச்சு செய்ய முடிவு பண்ணிருச்சுங்கபோல, கடவுளே இதென்ன ஷானவிக்கு வந்த சோதனை. 24*7 வாய் மூடாத ஷானவியஇப்படி பெவிகால் போட்டு ஒட்டி வச்சு மாதிரி இருக்க வச்சுட்டுதுங்களே இந்த சூனியம்பிடிச்சதுங்க, நோ… நோ…. ஷானு, நீ மட்டும் தான் மத்தவங்கள ஓட்டனும், உன்னையாரும் ஓட்டனும்னு நினைக்கக் கூட கூடாது…. கமான்…. கமான்…. ஷானு…. கெட் ரெடி.. டேய் இருக்கு உனக்கு…..” என்று தீபக்கை மனதுக்குள் கருவியவள்,
சிபிக்கும் தீபக்கிற்கும் இடையில் சிபியை நெருக்கியடித்தபடி அமர்ந்தாள். அவளின்இந்த செய்கையயை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அனைவரும் “ஆ” வென்றுபார்க்க,
சிபியிடம் திரும்பியவள் அவனின் வாயை தன் கையால் மூடி “பர்ஸ்ட் டோர் க்ளோஸ்பண்ணு, இதெல்லாம் நீ செய்யனும், வேற வழி இல்லாம நான் செய்றேன்….” என்றுஅவனிடம் காய்ந்தவள் தீபக்கைப் பார்க்க, அவனும் அப்படித்தான் அமர்ந்திருந்தான்.
வித்யா மட்டும் “அச்சோ இன்னைக்கு என் டார்லிக்கு எத்தன பஞ்சர் போடனுமோதெரியலையே, காளியாத்தா மலையேறிட்டா…. நம்மளோட டாக்டர் செட் எடுத்துவச்சோமா இல்லையா….” என்றுத் தனக்குள்ளே புலம்பிக் கொண்டாள்.
“என்ன ப்ரோ…. என்ன அப்படிப் பார்க்கிறீங்க…. உங்களுக்கு இப்போ நேரம் நல்லாப்போயிட்டு இருக்குப் போல…?” எனவும்…..,
‘ஆஹா தீபக் உஷார்… உஷார்… இப்போதான் கொஞ்சம் ப்ரைட்டா போகுது உன் லைப், அதை ஆப் பண்ணிடப் போறா இந்த சூனியக்காரி…. இந்த ட்ரிப்பையே கொலாப்ஸ்பண்ணிடுவா, உனக்கு வாச்சவளும் அந்த பிசாசு சொல்றதை அப்படியேக் கேட்பா. சோசடனா அவ கால்ல விழுந்துடு, எதையும் யோசிக்காத…’ என்று அவன் மனதுக்குள் பேசிமுடிக்க,
பட்டென்று ஷானவி எழுந்து நின்று, “சீக்கிரம் விழு தீபக், எனக்கு ரொம்ப நேரம் நிற்கமுடியாது. டைம் இல்ல…. ஐம் சோ பிஸி யூ நோ...” என்று கூற, தீபக் ‘ஙே’ வென்று முழிக்க,மற்ற அனைவரும் அவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.
தீபக் எல்லோரையும் பரிதாபமாய் பார்க்க, வித்யா தான் , “நீங்க மைன்ட் வாய்ஸ்ல பேசுறதா நினைச்சு வெளியே பேசிட்டீங்க” என்றாள் சிரிப்பை அடக்கிய படி…. தீபக்கோ இன்னும் பரிதாபமாய் முழித்தான், காரணம் சூனியக்காரி, பிசாசு என்றுஅடை மொழிக் கொடுத்ததற்கு…..!
அந்த பட்டத்திற்கு தகுந்தாற் போல் ஏதேனும் செய்து விடுவாளோ என்ற பயம் தான். அவனது இந்த பரிதாப நிலையைப் பார்த்து அனைவரும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க, சிபி தான் அவனைக் காக்க முன் வந்தான்.
“ஷ் அம்மு கொஞ்சம் சும்மாயிரு, இங்கேயும் அவனை விரட்டாதே” என அதட்ட, “பர்ஸ்ட்நீ வாயை மூடு, உன்னால தான் இந்த எருமை எல்லாம் என்ன கின்டல் பண்ணுது, எல்லாம் உன்னால தான்” என்று அவனிடம் பாய, இப்போது அதிர்ந்து விழிப்பதுசிபியின் முறை.
ஆகாஷ் ஏதோ சொல்ல வர, மான்யா அவனைத் தடுத்து விட்டாள். இதெல்லாம்அவளுக்கும் புதிதாக இருக்க, அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலோடும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“வித்தி நீ இப்போ என்ன செய்ற, இந்த தீபக்கை டிவோர்ஸ் பண்ணிட்டு ஜோன்ஸை மேரேஜ் பண்ணிக்கிற, ஜோன்ஸ் தான் உனக்கு பெஸ்ட் சாய்ஸ், அவனுக்கும் ஒருசான்ஸ் கொடு, இந்த காமெடி பீஸ் உனக்கு வேண்டாம்” என பெரிய வெடிகுண்டாய்போட, தீபக்கின் நிலையைச் சொல்லத்தான் வேண்டுமா…?
‘மறுபடியும் மைதா மாவா....’ தீபக் மற்றும் சிபி இருவரும் ஒன்றாக நினைத்து ஒருவரை ஒருவர் பார்க்க.... சிபியோ நண்பனை நக்கலாய் பார்த்தான்.
‘ச்சே... ச்சே என் தியா பேபி அவனை அடி பின்னிருக்கா... அப்படியெல்லாம் என்னை விட்டுக் கொடுக்க மாட்டா... உன்னோட இந்த சூனியக்காரி சொன்னா கேட்டுடுவாளா... போடா.. போடா..’ என்ற சிபியின் நக்கல் பார்வைக்கு தீபக் பதில் அளிக்க.... அவன் மனைவியோ அவன் எண்ணத்தில் ஒரு லாரி மண்ணை அள்ளிப் போட்டாள்.
வித்யாவோ “எஸ் பேபி யூ ஆர் கரெக்ட்,” என்று ஷானவிக்கு ஹைபை கொடுக்க, தீபக்அழாத குறைதான். ஆகாஷ் தான் “ ஷானு…. ஏன் இந்த நல்ல எண்ணம்…. அவனேஇப்போ தான் லைப்ல ஆத்திச்சூடி ஆரம்பிச்சுருக்கான், அதுல ஆப்பு வக்கிறியே…. விடுமா…. பாவம் பையன் பொழச்சுப் போகட்டும்…” என
“அண்ணா நீங்க சொன்னா நான் உடனே கேட்பேன் தான், அதுக்காக இவன் பண்றதுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணிட்டு, இவனுக்காக எங்கிட்ட பேசாதீங்க…” என்றுஆகாஷிடமும் காய,
“ஏய் அவன் இவன்னு பேசின அவ்ளோதான் சொல்லிட்டேன், அவன் உனக்கு அண்ணே, நாங்க உனக்கு அவன் இவனா..? என்று தீபக் சண்டைக்கு வர,
“அப்படித்தான்டா பேசுவேன் டால்டா…. போடா பக்கோடா..” என்று வேண்டுமென்றேஅவனை வெறுப்பேற்ற, இருவரின் சண்டையையும் சமாதானம் செய்வதற்குள்மற்றவர்களுக்கு போதும் போதுமென்றாகி பசியே எடுத்துவிட, வெலிங்டன் ஸ்டேசனும்வந்து விட்டது….
ட்ரெயின் நின்றதும் அனைவரையும் தள்ளி விட்டு முதலில் இறங்கிய ஷானு அங்குநின்றிருந்த தன்வீர் குடும்பத்தைப் பார்த்து அவர்களிடம் ஓடினாள்.. (இது யாரு புதுசான்னு எல்லாம் கேட்க கூடாது... புதுமலர்கள்ல அஸ்வத் எபில வர தன்வீர்)
“டேய் நிஜமா கேட்குறேன் இன்னும் இந்த பெட்டர்மேக்ஸ் லைட்டே தான் வேணுமாஉனக்கு…! அப்பப்போ பார்க்குற என்னையவே இந்த போடு போடுறாளே, எப்பவுமேபார்க்குற உன்னை என்ன பண்ணுவா…? அதை நினச்சாலே பக்குனு இருக்கு மச்சான்…. எதுக்கும் ஒன் டைம் கன்சிடர் பண்ணேன் டா….” என்று அழாக் குறையாக சிபியிடம்புலம்பிக் கொண்டிருந்தான் தீபக்….
“ச்சு சும்மா இருங்க தீபு…. அவளைப் பத்தி தெரியும் தானே, நீங்க இப்போ பேசுறதுதெரிஞ்சா இன்னும் திட்டுவா…? விடுங்க எல்லாம் ஒரு ஜாலி தான..” என கணவனைவித்யா சமாதானப் படுத்த,
“நீ பேசாத, அவ என்னை டிவோர்ஸ் பண்ண சொல்றா நீ ஹைபை கொடுக்குற…” எனஅவளிடமும் முகத்தை தூக்க…,
“ம்ப்ச்… தீபு ப்ளீஸ்.. அது சும்மா உங்களை வெறுப்பேத்த, அப்போ தான் ஷானு நார்மல்ஆவா, அதனால தான்... உங்களை ஹார்ட் பண்ண இல்ல, சாரி தீபு, சாரி... வெரி சாரி..” என கணவனிடம் கெஞ்ச,
மான்யாவும் ஆகாஷும் அவர்களையே ஒரு புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். சிபியோ வெளியே ஓடியவளைத் தேடிக் கொண்டிருந்தான்.. அதற்குள் எல்லோரும் அவர்களைத் தேடி வர, ஷானவியின் கையில் சாப்பாட்டுக்கூடை… “இதுக்குத் தான் இந்த ஓட்டமா…” என்று மனத்திற்குள் புலம்பியபடியேதலையிலடித்துக் கொண்டான்.
உள்ளே வந்தவள் தீபக்கிடம், ‘தீபுண்ணா உனக்குப் பிடிச்ச பன்னீர் கட்லட் செய்யசொல்லிருந்தேன் ஆன்டிகிட்ட, அப்புறம் முந்திரி கேக், இந்தா எடுத்துக்கோ.. இந்தரெண்டு டிஷ்ஷும் நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான். மத்ததெல்லாம் எல்லாரும்ஷேர் பண்ணிக்கலாம் எப்பூடி….!”
“சின்ன தங்கம் என் செல்லத் தங்கம் என் கண்ணு கலங்குது” என்று வராத கண்ணீரைஇரண்டு புறமும் சுண்டி விட்டு, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு தீபக் பாட, அந்தஇடமே சிரிப்பால் நிறந்தது….
தன்வீர் குடும்பத்தினரிடம் இருந்து விடை பெற்றவர்களின் பயணம் அதன் பிறகுஅமைதியிலேயே கழிய ஒரு வழியாக ஊட்டி வந்து சேர்ந்தனர்….
“டேய் உனக்காக இவக்கிட்ட சப்போர்ட் பண்ணேன் பாரு என்னை சொல்லனும் டாபரதேசி, நான் அத்தனை தடவைக் கேட்டேனே டா, சொதப்ப மாட்டியே, சொதப்பமாட்டியேனு…! இப்படி மொத்தமா சொதப்பி வச்சுருக்கியே… வேணும்னே தான்டாபிளான் பண்ணிருக்க” என்று கொலை வெறியுடன் தீபக்கை துரத்திக்கொண்டிருந்தான் ஆகாஷ்.
கோபமே வராத ஆகாஷிற்கு இவ்வளவு கோபம் வரக் காரணம் தீபக்கின்திருவிளையாடல் தான், காலை பத்து மணியளவில் ஊட்டிக்கு வந்தவர்கள் தீபக் முன்பதிவு செய்யப்பட்டிருந்த காட்டேஜ்குள் நுழைய, அனைத்து வசதிகளையும் கொண்டஅழகான வுட்டன் ஹவுஸ் அது. வெளித் தோற்றத்தைப் பார்த்து அசந்து போனவர்கள், உள்ளே செல்ல அங்கே இருந்த அறையைப் பார்த்து அப்படியே அதிச்சியாகி விட்டனர்.
ஹாஸ்டலில் இருக்கும் மூன்றடுக்கு கட்டில்கள் இரண்டு அந்த அறையில் அம்சமாய்மெத்தை விரிப்புடன் சிரித்துக் கொண்டிருந்தது.. முதலில் ஒன்றும் புரியாமல்விழித்தவர்கள், புரிந்தவுடன் தங்கள் இணையை பரிதாபமாக பார்த்துக் கொள்ள, சிபிக்கும் ஆகாஷிற்கும் நண்பனின் இந்த செயலில் கொலை வெறியே மூண்டது.
சிபியால் சட்டென்று ஓட முடியாமல் போக, ஆகாஷ் அவனைத் துரத்திக்கொண்டிருந்தான். பெண்கள் மூவரும் இவர்களின் செயலில் கலகலத்தனர். ஒருவழியாக தீபக்கை மொத்தி அவனை இழுத்து வந்த ஆகாஷ் மற்றவர்களிடம் விட, அவர்களும் தங்கள் பங்கை செவ்வனே செய்ய, தீபக்கும் இன்முகமாய் பெற்றுக் கொண்டான். நண்பர்களின் கலாட்டாக்கள் முடிந்ததும் தீபக் அந்த வீட்டின் பின்புறம்சிறு குடில் போல் அமைந்திருந்த அந்த வீடுகளை அவர்களுக்காய் காட்டினான்…
சிறு முறைப்புடன் தங்கள் அறைக்குள் நுழைந்த நண்பர்களைப் பார்த்து இழித்துக்கொண்டேத் தன் தியாவை இழுத்துக் கொண்டு அவர்களுக்கான அறைக்குள்நுழைந்தான் தீபக்.
தான் கொண்டு வந்த பெட்டிகளை அப்படியே போட்டவன் தன் மனைவியைஅணைத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தான். அவன் மேல் விழுந்தவள் முடியைப்பிடித்து ஆட்டிக் கொண்டே, “எத்தனை நாள் ப்ளான் இது, யாரைப் பழிவாங்க இப்படிசெஞ்சீங்க, கண்டிப்பா என் நண்பிய தான் நீங்க மைன்ட்ல பிக்ஸ் பண்ணிருப்பீங்க, அவ உங்களை அந்த போடு போடுறா? அப்பவும் அடங்காம ஏன் இப்படி பன்றீங்க, உங்களையெல்லாம் திருத்தவே முடியாது…..” என்ற படியே அவனை மொத்த,
அவனோ அவளது அடிகளைத் தடுத்தபடியே, “அடியேய் ஜாங்கிரி கொஞ்சம் அடங்குடி, இதெல்லாம் ஒரு கலாட்டாக்கு, மேரேஜ் முடிஞ்ச கையோட, உன்னை எங்கிட்ட இருந்துபிரிச்ச அந்த சதிகாரன், அவனுக்காவும், எப்பவும் என்னை டேமேஜ் பண்ற அந்த சண்டிராணிக்காகவும் தான் நான் இந்த பிளானைப் போட்டதே… விதி வசத்தால பாவம் நம்மஆகாஷ் மாட்டிக்கிட்டான். சும்மா இது எல்லாம் லுல்லாய்க்கு தாண்டி தங்கம்… இந்தமாதிரி கேம்ஸ் இல்லண்ணா லைப் போரடிக்கும் தியா பேபி..” என்று கொஞ்சியவன்அவளில் கணவன் எனும் தன் வேலையைக் காட்ட,
“தீபு… நாம இப்போ அவுட்டிங் போகப் போறோம், நீங்க என்ன பண்றீங்க, விடுங்க…” என்று அவனிடம் கூறினாலும், அவளும் நெகிழ்ந்து குழைந்துக் கொண்டுதான்இருந்தாள்.
மனைவியின் நிலையை உணர்ந்தவன் அவளைத தனக்கு கீழே கொண்டு வந்து, “பேபியோட வாய்தான் வேண்டாம், போகலாம்னு எனக்கெதிரா போராட்டம் செய்யுது, ஆனா….” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்து, கேலி செய்தவனை, பற்கள் பதிய அவள்கடிக்க, அவள் இதழ்களை தன் விரல்களால் வருடியவன், “பர்ஸ்ட் என்னை டெம்ப்ட்பன்ற இந்த வாயை மூடுறேன்..’ என்ற படி அவள் இதழ்களை மூடினான்…
கதவை அடைந்ததும் வாயை மூடி கேலியாகச் சிரித்த மனவியை கடுப்புடன்முறைத்தான் ஆகாஷ்… “Mrs.ஆகாஷ், நீங்க தப்புக்கு மேல தப்பா பண்றீங்க… உங்கதண்டனையோட அளவும் கூடிட்டே போகுது…. என்னைப் பகைச்சிக்கிட்டா அப்புறம்சேதாரத்திற்கு நான் பொறுப்பில்ல….” என்று பேசியபடியே, மனைவியைத் தன்கைவளைவுக்குள் கொண்டு வந்தான்.
“ஹாஹா… நீங்க ரியாக்ட் பண்ணதுக்கு சிரிக்காம என்ன செய்றது, ஹாஹா அப்போஉங்க முகத்தைப் பார்க்கணுமே பியூஸ் போன பல்ப் மாதிரியே இருந்துச்சு….”
“ம்ம்… ஆமாம், ஆமாம், நாங்க பியூஸ் போன பல்ப் மாதிரி இருந்தோம், நீங்க ஏன்மாஅப்படி இருந்தீங்க, உங்க முகமும் அதை விட மோசமா இருந்துச்சே, அதுக்கு என்னஅர்த்தமாம்…”
“ஹம்ம்…. அதெல்லாம் இல்லப்பா…. நான் ஒன்னும் பீல் பண்ணவே இல்லை….” என்றுஅவன் கழுத்தில் கைகளை மாலையாக்கி அவன் மார்பில் அழுந்தப் புதைய,
“வாய் ஒன்னு பேசுது, கை ஒன்னு பேசுது…, இப்படி பேசுற இந்த வாய்க்கும், கைக்கும்தண்டனைக் கொடுக்கலாமா, பர்ஸ்ட் உன்னோட இந்த அழகான வாய்தான் நான் சூஸ்பண்றேன் என அவளை அடுத்து பேச முடியாமல் இதழைச் சிறை செய்தான்மான்யாவின் மன்னவன்.
“நீண்ட நெடிய முத்ததிற்குப் பிறகு அவளை விடுவித்தவன் தன் கையணைப்பிலேயேஅவளை வைத்துக் கொண்டான் அவளும் சுகமாய் அவன் மேல் சாய்ந்து கொள்ள, மனைவியின் உச்சந் தலையில் அழுந்தி முத்தம் பதித்து, அதிலேத் தன் தலையையும்சாய்த்துக் கொண்டான்….
“மானு…. இந்த நொடி, இந்த நிலை நீ என்மேல உரிமையா சாஞ்சுருக்கிறது, இப்படிஎதையுமே என்னால நம்ப முடியலடா..” என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறியவன்தீடீரென அருகில் இருந்த மெத்தையில் “ஆ” என்ற அலறி விழ, மான்யா கலகலவெனமலர்ந்து சிரித்தாள்…
“ஹேய்… ராட்சசி… ஏண்டீ இப்படித் தள்ளி விட்ட, என்றபடியே அவளது துப்பட்டாவைப்பிடித்து இழுக்க, மலர் போல் அவன் மேல் விழுந்தவள், “பின்ன இப்படி இருக்குறதுநம்பவே முடியல, கனவு என்று டயலாக் எல்லாம் விட்டீங்க… அதான் கனவு இல்லைநீங்கள் பார்ப்பது நிஜம்… நிஜம்…. நிஜத்தைத் தவிர வேறொன்றுமில்லை….” என்று ஜட்ஜ்போல் பேசி அவனது முகத்தில் முத்திரைப் பதிக்க, மனைவியின் செய்கையில் உள்ளம்பூரித்தவன், அவள் செயலை தனதாக்கிக் கொண்டான் இன்பமாய்….!
இதழ்களின் போரில் வெற்றியும் தோல்வியும் பாடுபாடின்றி இனிதே தொடர, முத்தப்போர்களத்தில் யுத்தங்கள் இன்றி இருவரும் சரிக்கு சமமாய் தன் இனைக்கு ஈடுகொடுக்க, காமனின் அம்புகள் அவர்களை நோக்கிப் பாய, அந்தோ பரிதாபம், ரதிக்குஅப்படியென்ன கோபமோ மன்மதன் மீது, அவன் வீசிய அம்புகளை திசை மாற்றிவிட்டாள்.
ஊரையே உலுக்கும் அளவுக்கு இடித்த இடியில் திடுக்கிடலுடன் சுயம் பெற்றவர்கள், இருவருக்குள்ளும் உண்டான வேகத்தைப் பார்த்து இருவரும் மாறி மாறி சிரித்துக்கொள்ள, ஆகாஷின் கேலிச் சிரிப்பில், அவனைத் தள்ளி விட்டு குளியலறைக்குள் ஓடிப்போனாள் அவனின் ஆசை மனைவி மான்யா.
மனைவியின் மாற்றம் அவன் அறிந்ததே, ஆனால் இந்த அதீத மாற்றம் அவனேஎதிர்பாராதது. அவன் நினைத்ததைப் போல் இந்த மூன்றாண்டு கால பிரிவு, அவன்வாழ்க்கையை அழகோவியமாய் வரைந்திருக்கிறது என்றால் அது பொய்யில்லை. சுஷாந்தின் மேல் மான்யா வைத்திருந்த அன்பை பற்றி தெரிந்தாலும் இப்போதுமான்யாவின் இந்த மாற்றம் அவனுக்கு நம்பிக்கையை அளித்தாலும் சிறு பயத்தைக்கொடுக்கவும் தவறவில்லை…
தனக்காக, அவள் மாறிவிட்டாள் என்றாள் சரிதான், ஆனால் தன்னைக் கஷ்டப்படுத்தி, அவனுக்காக தன் உணர்வுகளை வெளிக் காட்டாமல் நடந்துக் கொள்கிறாளா…? என்றும் தோன்றியது. இதுவரை இறுகிய அணைப்பு, நீண்ட முத்தங்கள், சிறுசீண்டலுடன் கூடிய தீண்டல்கள் என்ற நிலையில் தான் அவர்களது திருமண வாழ்க்கைபோய்க் கொண்டிருந்தது. ஆனால் இன்று….?
இன்றைய நிலையை நினைத்தால் பதட்டம் ஒரு பக்கமும், சந்தோசம் ஒரு பக்கமும் எனஅவன் உணர்வுகள் அவனுக்குள் பேயாட்டம் போட்டன, அவளிடம் மனம் விட்டுஅனைத்தையும் இன்று பேசி விட வேண்டும் என்று உறுதி எடுத்தவன் அவள்வரவிற்காய் காத்திருந்தான்.
மலைப் பாதையில் நீண்ட பயணம் சிபிக்கு அசதியைக் கொடுக்க அறைக்குள்வந்தவன் அப்படியே கட்டிலில் விழுவதைப் பார்த்ததும் பதறிக் கொண்டே “என்னநந்து…? என்ன..? பெயின் எடுக்குதா, எங்கே காலைக் காட்டு ஸ்வெலிங்க் இருக்காபார்க்கலாம், நான் தான் சொன்னேனே காலைத் தொங்க விடாதேனு, கேட்டா தானேஇப்போ பாரு...” அவனும் ஒரு டாக்டர், அதுவும் ஒரு எலும்பு முறிவு சம்மந்தமான டாக்டர்என்பதை மறந்து அவன் காலை எடுத்து இப்புறம் அப்புறம் திருப்பிக் கொண்டேபுலம்பித் தீர்த்தாள் ஷானவி.
ஷானவியின் இந்தப் பதட்டம் அவனுக்கு பூமழையைத் தூவ இதழ்கள் சிரிப்பில்விரிந்தன. அவளை சகஜமாக்கும் பொருட்டு அவளை இழுத்து தன் மேல் விழ வைக்க, இதை எதிர்பார்க்காத அவளோ, “அச்சோ கால்… கால்…” என்று கத்திக் கொண்டே பதற, ‘ஷ் சும்மா இருடி கொஞ்ச நேரம், காலு காலுனு ஊருக்கே கேட்குற மாதிரி கத்துறா, என்காலுக்கு ஒன்னும் இல்ல, லைட்டா பெயின் தான், நீ இப்படி பீலிங்ஸ் படம்ஓட்டுறளவுக்கு எதுவுமில்லை, நானே இப்பதான் டச்சிங் வேலையை ஆரம்பிச்சிருக்கேன்...”
“இனி அடுத்தடுத்து ஒவ்வொரு ஸ்டெப்பா எடுத்து வைக்க வேண்டாம்...” என்றபடியே இடையில் கைகொடுத்து இன்னும் தன்மேல் நன்றாக இழுத்து விட... அவள் உடல் முழுவதும் அவன் மேல்..
“என்ன டச்சிங்... என்ன ஸ்டெப்.... இப்போ நீ என்ன பண்ற..?” குரலே வெளிவராமல், அவனின் செய்கையில் நெளிந்து கொண்டே கேட்க.....
“ஷ்....இப்போ அமைதியா இல்லைன்னா.... இங்க இருக்குற என்னோட கை வேற இடத்துக்கு போகும்... உனக்கு எப்படி வசதி..?” சட்டென்று மிரட்டல் தொனியில் கேட்க.... ஷானவி ‘அடப்பாவி’ என்ற அதிர்ச்சியுடன் விழி விரித்தாள். ‘நம்ம கர்ட் ரைஸா இது..’ என்ற ஆச்சரியமும் அதில் கலந்திருந்தது.
“24*7 வாய் மூடாம பேசுற ஷானவி எங்க போனாங்கப்பா.... அவங்களை காணோம்.... பார்த்தா கொஞ்சம் உன் ஹஸ்பெண்ட் உனக்காக வெய்டிங்னு சொல்லுங்கப்பா..” என்று கிண்டலடித்தபடியே, அவளது இடையில் இன்னும் அழுத்தம் கொடுக்க.... அதில் உணர்வு பெற்றவள், தன் வெட்கத்தை மறைக்க அவனிடம் இருந்து கோபம் எனும் சாயம் பூசி விலகப் போக.... மனைவியின் முகத்தில் நொடியில் தோன்றி மறைந்த வெட்கத்தை கண்டவன், மேலும் மேலும் அவளைத் தன்னுடன் இறுக்கினான்.