• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் -21

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
918
481
93
Tirupur
அத்தியாயம் – 21
*************************************

உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டுவதில்லை...
நிலத்தில் வீழ்ந்த மழைத்துளி மீண்டும்
மேகத்துடன் இணைவதில்லை..
சிந்திய தண்ணீரை மீண்டும் அள்ள முடிவதில்லை
பேசிய வார்த்தைகளை மீண்டும் பெற முடிவதில்லை
ஆனால் காதலில் மட்டும் எதற்கும் முடிவதில்லை..!
கடந்த தவறுகளை மன்னித்து,
முடிந்ததை முடிந்ததாய் மறந்து...
அதை ஊடல் எனும் ஒற்றை சொல்லில் அடக்கி
மீண்டும் கூடிக்கொள்ள முடிகிறது காதலில் மட்டும்...!!
*********************************************

கூடல் முடிந்ததும், அவள் கூந்தலை ஒதுக்கிய படியே, ‘அம்மு உனக்கு இதில் வருத்தம்இல்லையே…. நான் உன்னை போர்ஸ் பண்ணிட்டேனா….? என்க, அவன் மார்பில்புதைந்திருந்தவள் இன்னும் அழுத்திக் கொண்டே இல்லை எனும் விதமாய்த் தலையாட்ட, அவனுக்குள் மகிழ்ச்சியின் நீருற்று….

பேசித் தீர்க்க ஆயிரம் விசயங்கள் இருந்தாலும், நடந்து முடிந்த செயலை என்ணி சிறிதும்வருத்தமில்லை இருவருக்கும்…. எதிர்பாராமல் நடக்கும் சில விபத்துகள் அவர்கள்வாழ்க்கைவே மாற்றிவிடும். இவர்களது வாழ்க்கையிலும் அப்படித்தான் நடந்தது.

இப்போது நடந்த இந்த விபத்தும் அதுபோல் தான். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைநோக்கி நகர வைத்தது…. மார்பின் ஓரம் ஈரத்தை உணர்ந்தவன், குனிந்து மனைவியைப்பார்க்க, அவள் அழுது கொண்டிருந்தது தெரிய, அவன் எழுந்து, அவளையும் தூக்கி தன்மடியில் அமர்த்தி, “என்னம்மு….. ஏண்டா…. உனக்குப் பிடிக்கலையா….” என,


“நந்து…. நான்….. நான்… ஐ ஆம் சாரி நந்து….. ரியலி வெரி சாரி….. உன்னைப் பத்திதெரியாம, உன் மனசைப் புரிஞ்சிகாம, சொல்ல வந்த யாரையும் சொல்லவிடாம, உன்னைரொம்ப ஹார்ட் பண்ணிட்டேன். ப்ளீஸ் நந்து என்னை மன்னிச்சுடு ப்ளீஸ்….” என்றவள் கதற,


“ஏய் என்னடா... என்னென்னமோ பேசுற..? நம்ம பாஸ்ட் எதுவுமே நியாபகத்துல இல்ல. எல்லாமே மறந்துட்டு, இப்போ இந்த நிமிசம் நான் வேர்ல்ட்லயே ரொம்ப ஹாப்பியானபையன்….. சோ அது இதுனு எதையும் உளறாம, ரிலாக்ஸ்டா இருடா… ப்ளீஸ்..”


“இல்ல நீ யாரையோ லவ் பண்றதா நானா நினைச்சு, எனக்காக அவளை விட்டுட்டனுநினைச்சுட்டேன். லவ் பண்ற பொண்ணுங்களை விடுறவன் எல்லாம் மனுசனே இல்லைன்னுஎனக்குள்ள ஒரு தாட் ஆழமா பதிஞ்சுட்டு, அதுதான் என் மனசை மாத்த விடாம செஞ்சது. அதுவும் நீ…. நீ….. போய் லவ் பண்ண பொண்ணை விட்டுட்டன்னு தெரிஞ்சதும் தான் என்கோபம் அதிகமாயிட்டு…..”


“அப்போ நான் உன் கழுத்துல தாலி கட்டினதுக்கு உனக்கு கோபம் வரலையா அம்மு….” மனம் லேசான நிம்மதியுடன் அவன்.


“ம்கூம்…….” எனும் விதமாய் தலையாட்டியவள், “நிஷாந்த் மேல எனக்கு காதல்னு ஒன்னுவரவே இல்லைன்னு, அவன் போன கொஞ்ச நாள்லயே எனக்கு புரிஞ்சது. என்னோடகோபமெல்லாம் என் மேல தான். எப்படி ஒரு சீட்டேடு பெர்சனை நம்பினேன் என்று தான். அதோடு அந்தக் கார்ல நீ பேசுனதையும் வச்சுப் பார்க்கவும் அவன் என்னை நம்ப வச்சுஏமாத்திட்டு போயிருக்கானும், நானும் அவன் காதல்னு சொன்னதை நம்பிஏமாந்திருக்கேனும் தெரிஞ்சது… நீங்க என்னை வளர்த்த வளர்ப்பு தப்பா போயிடுச்சோனுஒரு கில்டி ஃபீல்… அவன் என்னை விட்டுப் போனதுல எனக்கு துளியும் வருத்தம் வரல…….”

“அந்த கில்டி ஃபீல் தான் நான் எல்லாரையும் அவாய்ட் பண்ண ஆரம்பிச்சேன், நீ அனுப்பினஆடியோ நான் இப்போ வரைக்கும் கேட்கல, அதைக் கேட்டா நான் சமாதானம் ஆகிடுவேனுஎனக்குத் தெரியும். அப்படி சமாதானம் ஆகிட்டா, அப்புறம் எப்படி உன்னோட லவரோடசேர்த்து வைக்கிறது…. அதனால தான் நான் கேட்கல, ஒருவேளை அப்பவே அதைக்கேட்டிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது இல்ல, எல்லாம் என்னோட முட்டாள் தனம்தான்….. நீ என்னைத் தான் லவ் பன்றனு கூட தெரியாத லூசு….. நான் எப்படி உனக்கு செட்ஆவேனு உனக்குத் தோணிச்சு, என் மேல உனக்கு கோபம் வரலையா……?”


“இல்ல…… கோபம் அது எப்பவும் வராது…… உன் மேல...! ஆனா வருத்தம் அது நிறையஇருந்தது….. சொல்ல வர்ரதை புரிஞ்சிக்க மாட்டேங்குறாளேனு தான் அதுவும்….. அப்புறம்எனக்கும் தெரியும், நீ அந்த ஆடியோக் கேட்டா என் கிட்ட வந்துடுவனும் தெரியும்…… ஏன்கேட்காம இருந்தனு எனக்கு கொஞ்ச நாளா புரியல……”


“வித்யா இப்படியும் இருக்குமோனு சொல்லவும் தான் நானே கெஸ் பண்ணேன், அவ்ளோகோபம் உன் மேல, அப்போ தான் அஸ்வத் அண்ணா எங்கூட பேசினாங்க, வீட்ல எல்லாரும்எப்படி நம்மளை நினைச்சு வருத்தப் படுறாங்கனு சொன்னாங்க, அந்த டைம் இன்டோதிபெத் பார்டர்ல போஷ்டிங் ரெபர் பண்ணாங்க… அங்க என் நம்பர் கொடுக்கலாம்னுயோசிச்சேன், அதுக்குள்ள வீட்ல இருக்கறவங்களுக்கு தெரிஞ்சு, ஆளாளுக்கு போன் செய்துஅட்வைஸ்….. சரி இந்த ஹாலிடே ட்ரிப் முடியட்டும், பிறகு யோசிக்கலாம்னுவிட்டுட்டேன்……”


“நீயும் அந்த கான்ட்ராக்ட் அக்ரீமென்டஸ்ல சைன் பண்ணிட்டதாவும், ரெட்க்ராஸ்ல ஜாயின்பண்ண பேப்பர் கொடுத்ததாகவும், வித்யா சொன்னா, நீ எந்த மைன்ட் செட்ல இதெல்லாம்செய்றேனு எனக்கு யூகிக்கவே முடியல…. உன்னைக் கட்டாயப் படுத்தி மேரேஜ்பண்ணிட்டேனு தான் உனக்கு கோபம்னு நான் நினைச்சது தப்போனு தோனஆரம்பிச்சது…… உன் கூட பேசியே ஆகனும்னு முடிவு எடுத்தேன்….. எந்த முடிவாஇருந்தாலும், இந்த ட்ரிப்ல கன்பார்ம் பண்ணிடனும்னு நினைச்சேன்.


“பிறகு அந்த கேம்ப், ஆக்ஸிடன்ட்னு லைப் இப்போ மாறிடுச்சு….. ஒரு வகையில அந்தஆக்ஸிடன்ட் நடந்தது நல்லதுக்குத்தான்…. இல்லைன்னா நீ இப்படி என்னைத் தேடிவருவியா.. உன் மனசு தான் உனக்கேத் தெரிஞ்சுருக்குமா சொல்லு……”


“எனக்கு எந்த விளக்கமும் காரணமும் வேண்டாம் அம்மு, நானும் சொல்லப் போறதில்ல, நீயும் சொல்ல வேண்டாம்….. இனி நம்ம லைப் ஹேப்பியா இருக்கனும், அதுக்கு என்னபேசனுமோ, செய்யனுமோ அதை மட்டும் செய்யலாம்…… வேற எதையும் பேசி நம்ப இந்தஹேப்பி மொமன்ட கெடுத்துக்க வேணாம்….. என்னடா சொல்ற, உனக்கு வருத்தமா……?


“ஹம்ம்…… இல்ல நந்து, எனக்கும் எதுவும் தெரிய வேண்டாம்…… நான் துளியும் இனிஉன்னை வருத்த மாட்டேன்….. ப்ராமிஸ்…… ஆனா, உன் கூட வம்பிழுக்காம, சண்டைபோடாமா இருக்க முடியாதே……. இந்த மூனு வருசம் தினமும் உன் கூட சண்டைபோடுவேன்…. கண்ணாடி முன்ன நின்னு... சில நேரம் என் மேலையே கோபம் வரும்…. என்ன பொண்ணு நீ இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்துறன்னு……”



“இப்போ அது எதுவுமே இல்ல…… அவங்க என் மேல எவ்வளவு பாசமும் நம்பிக்கையும்வச்சுருக்காங்கனு நினைக்கும் போது அதுவும் சரண் அண்ணா என் கிட்ட காண்பிச்ச பாசம், இது எல்லாம் சேர்ந்து எனக்கு குற்ற உணர்ச்சியா போயிடுச்சு, அவங்களுக்கு நான் நன்றிசெலுத்தனும்னா அது உன் கூட நான் வாழ்ற வாழ்கையில் காட்டனும்னு முடிவுஎடுத்தேன்……”


“அம்மா, அப்பாக்கு என்னை நினைச்சு கொஞ்சம் கூட பயமோ வருத்தமோ இருக்கல.. உன்மேல அவ்வளவு நம்பிகை, நீ என்னை விடவே மாட்டேனு அவங்களுக்கு அவ்வளவுதீர்மானமா தெரிஞ்சுருக்கு…… எனக்கே அது சில சமயம் பொறாமையா இருக்கு, நாம நம்ம லைப்ல எவ்ளோ மிஸ் பண்ணிட்டோம் இல்லையா... ஆனாலும் இதுவும் நல்லாதான் இருக்கு..?என்று மேலும் அவன் மேல் சாய,


“எது நல்லாருக்கு மேடம் இதுவா…..” என்று அவன் மேலும் அவளை இறுக்கித் தன்தீண்டல்களைத் தொடர, “ஹேய்…… என்ன பண்ற…” என்றாலும் அவனது தீண்டல்களில்அவள் கரைந்து தான் கொண்டிருந்தாள்.


“ம்ம்….. என்ன பன்றேன்னு தெரியலையா….. மூனு வருஷ கேப்பை எப்படி பில் பன்றதுன்னுதெரியாம பில் பண்ணிட்டு இருக்கேன்….. நீ உதவி செய்யலை என்றாலும் பரவாயில்லை,என் வேலைக்கு உபத்திரமா இருக்காத….. நான் எப்போவாச்சும் பீல் பண்ணி எதாவதுசொல்லனும்னு நினைக்கும் போது இந்த தீபக் இப்படித் தான் இடைஞ்சல் பண்ணுவான்……” அவளை சீண்டியவாறே அவன் முன்னேற, அவளோ தீபக் என்ற பெயரில் சிபியைத்தள்ளிவிட்டு எழுந்து, தன் மொபைலை நோக்கி ஓடினாள்…..



“ஏய் என்னடி பன்ற……” என்றான் அவள் எழுந்தக் கடுப்பில்,


“ம்ம்…. என்ன பன்றேன்னு, செஞ்ச முடிச்சுதும் சொல்றேன்… வெயிட் அண்ட் வாட்ச்.” என்றவள் தீபக்கின் நம்பருக்கு அழைத்து, அந்தப் பக்கம் அவன் எடுக்கவும், “தீபுண்ணா… தீபுண்ணா…” என்று அழுது கொண்டே பேசுவது போல் பேச,


அங்கே தீபக்கிற்கோ முகம் பயத்தில் வெளுத்தது…. வேறு எதற்கு ஷானு அழுகிறாள் என்றுதான்….. அவள் தானே எல்லாரையும் அழ வைப்பாள்….. இவள் ஏன் இப்போது அழுகிறாள்என்ற யோசனையும் வர மனைவியிடம் இருந்து பிரிந்தவன், “என்ன ஷானு என்னாச்சு..” எனபதட்டமாக வினவ,


இங்கேயோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “அது அதுண்ணா நானும் நந்துவும் இங்கேகார்டனுக்கு வந்தோம், சும்மா வாக் போகலாம்னு, அப்படியே பேசிட்டே உட்கார்ந்துட்டோம், இப்போ ரூமுக்கு போகலாம்னா…. நந்துவால நடக்க முடியல, கால் பெயின் எடுக்குது போல, அவனால பேலன்ஸ் பண்ண முடியலண்ணா, ஆகாஷ் அண்ணாக்கு கால் பண்ணிட்டேன், நீங்களும் வரீங்களா..” என்றாள் தேம்பியபடி.. “ஹேய் அம்மு... அம்மு வேண்டாம்டி... சொன்னாக்கேளு..” என்ற சிபியின் பேச்சையும் கேட்காமல்...


ஷானவியின் அழுகையும், சிபியின் பதட்டமும் தீபக்கிற்கு ஏதோ விபரீதம் என்று தோன்றியது.. மேலும் இப்போது போய் ஷானவி தன்னிடம் விளையாடுவாள் என்று நினைக்கவில்லை அவன்.


வித்யாவிடம் கூறி, அவர்கள் இருந்த நிலையையும் மறந்து, அவசரமாகப் பிரிந்து ஷானு கூறிய அந்த கார்டனுக்குள் கணவன் மனைவி இருவரும் நுழைந்தனர்..


“அம்மு எதுக்கு இப்படியெல்லாம் பண்ற, பாவம் தீபக்..! அவன் விட்ட சாபம் தான் போல, நாம சேர இத்தன நாளாச்சு. இப்போதான் அவனும் லைப்பை என்ஜாய் பண்றான். அதை ஏன் கெடுக்குற...? அதுவும் இந்த நேரம்..? ஏண்டி... இப்படி இருக்க... அவன் வந்து கத்தித் தீர்க்கப் போறான் பாரு.. நானெல்லாம் சப்போர்ட் பண்ணமாட்டேன் பார்த்துக்கோ.. நீயாச்சு.. அவனாச்சு...” ஏகத்திற்கும் கடுப்பாய் அவன்.





“தோடா... பிரண்டுக்கு சப்போர்ட்டு.... அவன் வரட்டும் நான் பார்த்துக்குறேன்... ட்ரைன்ல என்னையவே கலாய்ச்சிட்டு வர்றான்.. சார் சும்மா பார்த்துட்டு வரீங்க.. உனக்கும் பனிஷ்மென்ட் கொடுத்து இன்னும் கொஞ்ச நாள் சுத்தல்ல விட்டுருக்கனும்.. பாவமே நம்ம பார்த்து வளர்ந்த பையனாச்சேனு சும்மா விட்டு வச்சிருக்கேன். சோ டோர் க்ளோஸ் பண்ணிட்டு அமைதியா வேடிக்கை மட்டும் பாரு... ஓகே...” என்று தன் கெத்தை சற்றும் இறக்காமல் அவள்.



“அடிப்பாவி.....! எவ்வளவு நாளா இந்த ப்ளான் உனக்கு..? அவனை இப்படி இரிடேட் பண்ண..? ஆகாஷும் இருக்கானே... உன் பாசமலர்... அவனையும் கோர்த்து விட வேண்டியதுதானே...” அவளது அதிரடியில் பாவமாய் சிபி..


“நோ... நோ ஆகாஷ் அண்ணா... மை டியரஸ்ட் வெல்விஷர்....சோ நோ டேமேஜ்... ஒன் அண்ட் ஒன்லி பார் தீபக் வாஸ் மை டார்கெட்..” என்றாள் அசால்ட்டாய் ஷானவி..


சிறிது நேரத்திலேயே தீபக்கிடம் இருந்து இரண்டு மூன்று போன் கால்கள் வர, அதை எடுக்காமல் சிரித்துக் கொண்டிருந்தாள் ஷானவி.. அதற்கு பிறகு அவன் சிபியின் நம்பருக்கு அழைக்க, அதை எடுத்த ஷானவியோ “ஹல் லோ யாரு இந்த நேரத்துல..?” என்று தூக்கத்தில் கேட்பது போல கேட்க,


தீபக்கிற்கு அனைத்தும் புரிந்தது.. இந்தக் குட்டிப்பிசாசு தான் ஏதோ ப்ளான் பண்ணி நம்மளை அலைய விட்டிருக்கா...? என்று நினைத்தவன் “உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா இல்லையாடி...? நாடு ராத்திரில பேய் மாதிரி போன் செஞ்சு கொடுமை பண்ணிட்டு இருக்க.. நீ சாதாரண பேய் இல்லடி... கொள்ளிவாய் பிசாசு... அதுதான் இப்படி எல்லாம் வில்லங்கமா யோசிக்கும்.. எங்க உன்ன கட்டின அந்த பாக்கியவான், அவன்கிட்ட கொடு..” எனக் கடுப்பாய் பொரிய


“ஹேய்ய் தீபுண்ணா நீயா.... என்ன இந்த நேரத்துல.. அமாம் மனசாட்சி எந்த கடைல கிடைக்கும்...சொன்னா நானும் உங்க தியா பேபியும் போய் வாங்கிட்டு வருவோம்..” என்று அவனை மேலும் கடுப்படிக்க...


“கடவுளே... இந்த பேய்க்கிட்ட இருந்து காப்பாத்துப்பா...” என்று அவன் பல்லைக் கடிக்க, இங்கு ஷான்வியோ சிரித்துக்கொண்டே போனை வைத்தாள்.


“என்னாச்சு தீபு.. சிபிண்ணாவுக்கு என்ன..?” அங்கு நடந்த உரையாடளைக் கேட்டு தீபக் வாங்கிய பல்பில் அவன் முகம் சிவந்து கிடந்ததைப் பார்த்து, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு பாவம் போல் வித்யா கேட்க... அவனோ மனைவியைப் பார்த்து அனல் பார்வையை வீசி, “இனி அந்தக் குட்டிச்சாத்தான் கூட நீ சேருரதைப் பார்த்தேன்... இம்மேடியட்டா டிவோர்ஸ் தான்..” என்றான் எரிச்சலும் கடுப்புமாய்..


‘ஆஹா..! என்ன செஞ்சு தொலைச்சாலோ தெரிலயே... மிலிடரி இவ்ளோ கோவமோ போகுதே... அடியேய் சகுனி எனக்கே ஆப்பைத் திருப்பிட்டியே நாளைக்கு இருக்கு உனக்கு...’ என்று மனதிற்குள் ஷானவியை வறுத்தப்படியே... “தீபு... தீபு..” என கத்திக்கொண்டே அவன் பின்னே ஓடினாள் வித்யா.


“ம்ப்ச் பாவம் டி தீபக்... பாரு எவ்ளோ கோவமா போறான்... நாளைக்கு அவன் கண் முன்னாடி போயிடாத... கடிச்சு வச்சிட போறான்.. அவ்ளோ கடுப்பா இருக்கான்.. நீ அவன இப்படி எரிச்சல் பண்ணாத அம்மு, கொஞ்சம் வாய் ஜாஸ்தி, அதுதான் அவனுக்கு எதிரியும் கூட, அதுக்காக அவனை இவ்வளவு டென்சன் பண்ணாத... அவன் சீரியசா எடுத்துட்டா என்னாகும்... எதையும் யோசிச்சு செஞ்சுப் பழகு..” என்று ஜன்னல் வழியே அவர்களை பார்த்துக் கொண்டிருந்த சிபி கூற...


“ஹா ஹா.. இதெல்லாம் ஜஸ்ட் ஒரு என்ஜாய்தான... ஐ நோ டாக்டர் சார்.. எனக்கும் கொஞ்சமே கொஞ்சம் காமன்சென்ஸ் இருக்கு... இப்போதான் அவனுக்கு வாட்ஸ் ஆப்ல மெசேஜ் பண்ணேன் சாரி சொல்லி... நாளைக்கு அவனே வந்து பேசுவான் பாரு...” என்று சிபியை அடக்கியவள் “நான் தூங்க போறேன் பா..” என்றபடியே மெத்தையில் விழ, “என்ன தூக்கமா..?” என்ற அலறியவன், “அதெப்படிமா முடியும் உன்னால?” என,


“டேய் என்ன பண்ற விடுடா...? என்று சிலிர்த்தவளையும் இழுத்து தன்மேல் போட்டபடியே அங்கிருந்த ராஜாயை இருவருக்குமாய் சேர்த்து மூடினான். மீண்டுமொரு காதலரங்கம் இனிதே தொடங்க, காமனவன் தன் மெய்க்கனைகளை மெல்ல பாய்ச்சத் தொடங்கினான் அவர்களை நோக்கி..


பனி விழும்....