• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 1

"மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”என்று புரோகிதர் மந்திரம் உச்சரிக்க… உற்றார், உறவினர் ஆசியுடன் ஆதர்ஷ், தீட்சண்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு, அவளை தனது சரிபாதியாக்கினான்.

அடுத்த நிமிடம் அந்த மேடையில் வெடி வெடிக்க. நுரை போல் சிதறியது. "ஹாப்பி மேரீட் லைஃப் அண்ணா… மாமா… " என்று பலவிதமான குரல்கள் ஒலித்தது.

எல்லோரும் மாப்பிள்ளை ஆதர்ஷின் கசின்ஸ்.

தீட்சண்யா முகம் சுளித்தாள். சரியாக அந்த நிமிடம் ஆதர்ஷ் அவளைப் பார்த்தவன், புருவம் சுருக்கினான்.

அதற்குள், " மாப்பிள்ளை… பொண்ணுக்கு குங்குமம் வச்சு விடுங்க." என்ற குரலில் முகத்தை இயல்பாக்கினான்.

பிறகு அடுத்தடுத்த சடங்குகள் நடந்தது. இருவருக்குமான தனிமை கிடைக்கவில்லை.

நல்ல நேரத்தில் மாப்பிள்ளை வீட்டிற்கு பொண்ணு, மாப்பிள்ளையை அழைத்து வந்தனர்.

வீடு முழுவதும் ஆட்கள் நிறைந்திருக்க… தீட்சண்யாவிற்கோ உறக்கம் கண்களை சுழற்றியது. சமாளித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

புதுப்பொண்ணிடம் பேசும் ஆர்வத்தில், உறவினர்கள் ஏதாவது பேசிக் கொண்டிருக்க. அவளும் முடிந்த வரை அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாள்.

அங்கே எல்லோருக்கும் குடிப்பதற்கு ஜூஸ் கொண்டு வந்த சௌந்தரம், பார்த்ததென்னவோ களைப்பாக இருந்த மருமகளைத் தான்.

" அம்மாடி தீட்ஷூ. கொஞ்ச நேரம் வேணும்னா, அத்தையோட ரூம்ல வந்து படு." என்றார்.

" பரவாயில்லை அத்தை." என்றாள் தீட்சண்யா.

" முன்னமே உன்னை ஓய்வெடுக்க சொல்லியிருக்கணும். வேலை டென்ஷன்ல மறந்துட்டேன். ஒராளா எல்லாத்தையும் பார்கணும்னா முடியலை. ஆதர்ஷுக்கு கூட பிறந்தவ இருந்தா, உன் கூடவே இருக்க சொல்லியிருப்பேன். சரி வா மா." என்று புலம்பிக் கொண்டே அவளை அழைத்துச் சென்றார்.

புன்னகையுடன் சென்றாள் தீட்சண்யா. இது தான் அவளது தாயின் புலம்பலும் கூட. அதுவும் மாப்பிள்ளை வீட்டிற்கு தீட்சண்யாவுக்கு துணையாக பெரியப்பா மக்களை அழைக்க. அவர்களோ, " நாளைக்கு வேலை இருக்கு போகணும் சித்தி." என்று கூறி விட்டு, கல்யாணம் முடிந்த கையோடு கிளம்பிவிட்டனர்.

உலகம் அப்டேட் ஆக, ஆக உறவுகளின் முக்கியத்துவம் பின்னே போய் விடுகிறது.

" அம்மாடி தீட்ஷூ. நான் வரலனு எதுவும் நனைச்சுக்காத டா. எல்லாம் வீட்ல போட்டது போட்டபடியே இருக்கு. எல்லாத்தையும் ஏற கட்டணும். அதுவுமில்லாமல் நாளை மறுநாள் சென்னையில் உங்களை தனிக்குடித்தனம் வைக்கனும்னு சொல்லியிருக்காங்க. உன்னோட திங்ஸ்ஸெல்லாம் பேக் பண்ணனும்." என்று அவர் புலம்ப.

தீட்சண்யாவோ, " பரவாயில்லை மா. நான் பார்த்துக்கொள்கிறேன்." என்று சமாதானப் படுத்தினாள்.' அதை நினைத்துக் கொண்டே அவள் உறங்கி விட்டாள்.

சௌந்தரம், வேதாச்சலத்தின் ஒரே மகன் தான் ஆதர்ஷ். பி.ஈ முடிச்சிட்டு சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலைப் பார்க்கிறான்.

வேதாச்சலம் கும்பகோணத்தில் ஒரு தனியார் பேங்க்ல மேனேஜரா வொர்க் பண்றார்.

மல்லிகா, ராமநாதனின் ஒரே மகள் தீட்சண்யா. ராமநாதன் கும்பகோணத்தில் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்திருக்கிறார்.

நன்கு அசந்து உறங்கிய தீட்சண்யாவை வந்து எழுப்பினார் சௌந்தரம். "தீட்ஷு மா. மணியாயிடுச்சு எழுந்துருடா. முகம் கழுவிட்டு வந்து விளக்கேற்று." என.

தீட்சண்யா முகம் கழுவிட்டு வருவதற்குள் காஃபி கொண்டு வந்தார்.

" இந்தா டா. இது குடிச்சிட்டு போய் விளக்கேத்து. எப்போ சாப்பிட்டது?" என்று கரிசனையாக கூறினார் சௌந்தரம்.

" தேங்க்ஸ் அத்தை."

" உதை வாங்கப் போற தீட்ஷு. நான் உனக்கு அம்மா மாதிரி. இப்படி ஒவ்வொன்னத்துக்கும் உங்க அம்மா கிட்ட தேங்க்ஸ் சொல்வியா?" என்று அதட்ட.

" தேங்க்ஸ் வாபஸ்." என்றவள் மனம் விட்டு சிரித்தாள்.

கல்யாண பேச்சை ஆரம்பித்திலிருந்து, அடிக்கடி சௌந்தரம் வந்து போக, தீட்சண்யா அவரிடம் நன்கு நெருங்கியிருந்தாள்.

மாலை மயங்கி இரவு புலர, அவளைத் தயார் செய்து அனுப்பினார் சௌந்தரம்.

உறவு பெண்கள் அவளை கேலி செய்துக் கொண்டே, மாடியிலிருக்கும் ஆதர்ஷின் அறைக்கு அழைத்து சென்றனர்.

சற்று பதட்டத்துடனே உள்ளே நுழைந்தாள் தீட்சண்யா.

ஆதர்ஷைப் பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் நேற்று தான் அவள் முதல் முறையாக அவனை நேரில் பார்த்ததே.

பொண்ணு பார்க்கும் சடங்கு, நிச்சயதார்த்தம் எதற்கும் அவன் வரவில்லை. வெளிநாட்டில் ஆன் சைட்டிற்காக சென்றதாக தகவல்.

இதுவரை ஃபோனில் பேசவும் இல்லை.
ஆதர்ஷை பற்றி ஒன்றும் தெரியாமல், சற்று பயத்துடனே அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே ஆதர்ஷோ, முகம் முழுவதும் புன்னகையுடன் தலை குனிந்து இருந்தான். இவள் வந்ததைக் கூட கவனிக்காமல் செல்போனில் மூழ்கியிருந்தான். காலையில் எடுத்த திருமண ஃபோட்டோவை ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்திருக்க. அதற்கு எல்லோரும் வாழ்த்துக் கூறியிருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தான்.

தீட்சண்யாவின் முகம் ஒரு கணம் வாடியது. பின் சமாளித்தவள் தொண்டையை கணைத்தாள்.

அவளது சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன், " ஹாய் வெல்கம் டூ அவர் ரூம்." என்றான்.

லேசாக வெட்கப் புன்னகை சிந்தியவள், பாலை அவனிடம் நீட்ட.

" இன்னும் இந்த பழக்கமெல்லாம் மாறலையா?" என்று வினவியபடியே வாங்கினான்.

குவளையில் இருந்த பாலில் பாதியை குடித்து விட்டு அவளிடம் நீட்ட… அவளும் அருந்தினாள்.

அவள் அங்கிருந்த பாத்ரூமில் கழுவி விட்டு வரும் வரை அமைதியாக இருந்தவன், " அப்புறம்?" என்றான்.

அவளோ புரியாமல் அவனைப் பார்த்தாள்.

" சாரி… ஃபர்ஸ்ட் என்ன பேசுறதுன்னே தெரியலை. உன்னோட பேர் சூப்பர். இன்ஃபாக்ட் உன்னோட பேரே இன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன்." என்று அசட்டு சிரிப்பு சிரிக்க.

அவளோ இப்போது வியப்புடன் பார்த்தாள்.

" உண்மையிலே என் பெயர் தெரியாதா? என் ஃபோட்டோவாவது பார்த்திங்களா?"

" இல்லை." என தலையசைத்தான்.

" என்ன பார்க்காமல் எப்படி கல்யாணத்துக்கு ஒத்துகிட்டீங்க. நானும் உங்க கிட்ட இருந்து ஃபோன் வரலையேன்னு குழம்பி போய் தான் இருந்தேன்." என்று தயக்கத்தையெல்லாம் விட்டு நேரடியாக அவனை பார்த்து கேட்டாள்‌.

" சாரி தீட்சண்யா. உன் ஃபோட்டோ அம்மா அனுப்பி தான் வச்சாங்க. பட் நான் பார்க்கலை. உண்மையிலேயே ஆஃபீஸ்ல கொஞ்சம் வொர்க் அதிகம். சீக்கிரமா அதை முடிச்சா தான் இந்தியாவுக்கு வர முடியும். அது வேற பிரஷரை அதிகமாக்கிடுச்சு. ஏற்கனவே நான் அம்மா கிட்ட சொல்லிட்டேன். உங்களுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு பாருங்கனு சொல்லியிருந்தேன். அதான் பார்க்காமலே சம்மதம் சொல்லிட்டேன்." என்றவன் தோளைக் குலுக்க.

" ஓ." என்ற தீட்சண்யாவோ அமைதியானாள்.

"அப்புறம் தீட்சண்யா… முதல்ல நாம ரெண்டு பேரும் பேசி பழகி ஒருவரை ஒருவர் புரிஞ்சிக்கலாம் அப்புறம் நம்ம வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்ற?" என்று வினவினான்.

" சரி." என்றாள் தீட்சண்யா.

" ஓகே… என்னை பத்தி உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். உன்னை பத்தி சொல்லு." என்று அவளைப் பார்த்து வினவ.

" அது… என்ன பத்தி சொல்ல என்ன இருக்கு… ஒன்னுமில்லை. நானும் உங்களைப் போலவே எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு. அப்பா கொஞ்சம் ஸ்டிரிக்ட். அம்மா தான் எனக்கு எல்லாமே. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்க வா." என்று தீட்சண்யா கேட்க.

" சரி தூங்கு. "என்றவன் தனது லேப்டாப்பை எடுத்தான்.

பேசி பழகி ஒருவரை, ஒருவர் புரிந்துக் கொள்ளலாம் என்று சொன்னவன் அதற்கான முயற்சிகளை எடுக்க போவதில்லை என்பதை அறியாமல் தீட்சண்யா நிம்மதியாக உறங்கினாள்.

மறுநாள் காலையில் நேரத்தோடு எழுந்த தீட்சண்யா குளித்து விட்டு வெளியே வந்தாள். அங்கு சௌந்தரம் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தார்.

" வா மா. இந்தா காஃபி. நீ குடிச்சிட்டு, ஆதர்ஷுக்கு கொண்டு போ. அவனையும் சீக்கிரமா குளிச்சுட்டு வர சொல்லு. அப்புறம் அம்மா, அப்பா கிளம்பிட்டாங்களானு கேளு‌. நேத்தே இங்கே வந்து காலை டிஃபன் சாப்பிட்டுக்கலாம்னு சொன்னேன். என்னாச்சுனு பாரு மா. நேரத்தோடு சாப்பிட்டு கிளம்பினால் தான் சென்னைக்கு போவதற்கு சரியாக இருக்கும். வழியில் மதிய சாப்பாடு பார்த்துக்கலாம். நாளைக்கே ஆஃபிஸ் போகணும்னு ஒத்த கால்ல நிக்குறான்‌.
இல்லைன்னா ஆற, அமர போலாம். " என்று படபடவென பேச.

தீட்சண்யாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. " சரிங்க அத்தை. நான் போய் அவரை எழுப்புறேன்." என்று விட்டு அவனுக்காக காஃபியை எடுத்துக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அறைக்குள் நுழைந்தவளோ, " ஆதர்ஷ்…" என்று அவனை எழுப்ப.

அவனோ திரும்பி படுத்துக் கொண்டான். இம்முறை சற்று பலமாக அவனை உலுக்க. " மா… இப்போ தான் தூங்குனேன். அதுக்குள்ள ஏன் மா எழுப்புறீங்க." என்று முணங்கினான்.

" அம்மா இல்லை. நான் தீட்சண்யா. ஆனால் அம்மா தான் எழுப்ப சொன்னாங்க. சென்னைக்கு கிளம்பணுமாம். டைமாயிடுச்சு." என்றாள்.

அவளது கேலி குரலில் வாரி சுருட்டி எழுந்தான் ஆதர்ஷ்.

" சாரி‌. டென் மினிட்ஸ்ல வந்துடுறேன்."

" டீபாய்ல உங்க காஃபி இருக்கு." என்றவள் எதையோ தேட.

காஃபியை எடுத்து அருந்தியவன்," என்ன தேடுற தீட்சண்யா?" என்று வினவினான்.

ஃப்ரெஷ் பண்ணாமல் காஃபி அருந்தும் ஆதர்ஷை முகம் சுளிக்க பார்த்தவள், " என் ஃபோனை காணும். அம்மாவுக்கு கால் பண்ணனும்." என்றாள்.

" தீட்சண்யா… என்ன மூஞ்சு சுளிக்கிற… ஒரு நாள் பெட் காஃபி குடிச்சு பாரு‌. அப்புறம் விடவே மாட்ட."

" அதெல்லாம் எனக்கு பிடிக்காது." என்றவள், அவளது ஃபோனை தேடுவதில் கவனம் செலுத்தினாள்.

" சரி விடு. உன் ஃபோன் நம்பர் சொல்லு. கால் பண்றேன்." என.

அவனை ஒரு பார்வை பார்த்தவள், அவளது நம்பரை சொல்ல…
அதை தனது செல்போனில் பதிவு செய்தவன், அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

ரிங்டோன் ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்து வந்தது. "அதோ அங்கிருந்து சத்தம் வருது." என்றவன் அங்கு பார்க்க.

அங்கிருந்ததோ பேசிக் மாடல் ஃபோன்.

" தீட்சண்யா… இந்த மாடல் எல்லாம் இன்னும் வந்துட்டு தான் இருக்கா?" என்று அதிர்ச்சியாக வினவியவன், தனது கையிலிருந்த லேட்டஸ்ட் மாடல் ஐபோனை பார்த்து விட்டு, அவளையும் பார்த்தான்.

" ஏன் கடையில இருக்கிறதால தான் வாங்கிருக்கிறேன்." என்றாள்.

" டச் ஃபோன்லாம் யூஸ் பண்ண மாட்டியா?" என்று வினவ.

" அது வந்து… எனக்கு அது தேவையில்லைனு தான் வாங்கலை. போன் பேசுவதற்கு மட்டும் தான் யூஸ் பண்ணப் போறோம். அதற்கு இதுவே போதும். இது தான் வசதியும் கூட." என்றவள் தனது அம்மாவிற்கு அழைத்துக் கொண்டே அவ்விடத்தில் இருந்து அகன்றாள்.

' ஓ காட். முதல்ல படிச்சிருக்காளானு கேட்கணும்.' என்று எண்ணிக் கொண்டே குளிக்க சென்றான்.

ஆதர்ஷ் குளித்து ரெடியாகி கீழே வருவதற்குள் தீட்சண்யாவின் பெற்றோர் வந்துவிட்டார்கள்.

அதற்கப்புறம் அவர்களுக்கு விருந்து உபச்சாரம் நடந்தது‌.

சாப்பாடு வேலை முடிந்ததும், கிளம்புவதற்குத் தான் நேரம் சரியாக இருந்தது.

பெரியவர்கள் நால்வரும் ராம்நாதனின் காரில் வர.

ஆதர்ஷும், தீட்சண்யாவும் ஆதர்ஷின் காரில் வந்தனர்.

ஆதர்ஷ் வழக்கம் போல செல்ஃபோனில் கவனம் செலுத்த… தீட்சண்யாவோ, அவனை அடிக்கடி திரும்பி பார்த்து விட்டு, பிறகு வெளியே வேடிக்கை பார்த்தாள். அதுவும் சற்று போரடிக்க கண்களை மூடினாள்.

' திருமணம் முடிந்ததும் சென்னையில் தனிக்குடித்தனம் வைப்பதாக முன்பே முடிவானதால், வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களையும் தீட்சண்யாவை கேட்டு, கேட்டு சௌந்தரம் வாங்கி வைத்தார்.

ஃபர்னிச்சர் வாங்க போகும் போது, மல்லிகா, " சம்மந்தி… ப்ரிட்ஜ், டிவி மிக்ஸி வாஷிங்மெஷின் இதெல்லாம் தான்… நீங்க வாங்கிட்டீங்க. அட்லீஸ்ட் கட்டில், மெத்தை, ட்ரெஸிங் டேபிள் இதையாவது நாங்க வாங்கிக் கொடுக்குறோமே. எங்களுக்கும் எங்க
பொண்ணுக்கு வாங்கிக் கொடுக்கணும்னு ஆசையாக இருக்காதா?"

" அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் சம்மந்தி. என் பையனுக்கு இதெல்லாம் பிடிக்காது." என்று மறுத்து விட்டார்.

சற்று மனத்தாங்கலுடன் இருந்தார் மல்லிகா.

" சரிங்க சம்மந்தி… வீட்டுக்கு தேவையான மளிகை சாமான் எல்லாம் உங்க டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலிருந்து எடுத்துட்டு வந்துடுங்க. இப்ப சந்தோஷம் தானே." என்று சௌந்தரம் வினவ.

" ஆமாம்… " என்று சந்தோஷமாக தலையாட்டினார் மல்லிகா.

" சரி வாங்க வீட்டுக்கு போய் சாப்பிட்டு விட்டு போகலாம்." என்று சௌந்தரம் அழைத்தார்.

" அது இப்போ எதுக்கு சம்மந்தி? கல்யாணம் முடிந்ததும் நாங்க வர்றோம்." என்றார் மல்லிகா.

" நிச்சயம் முடிஞ்சதுமே தீட்சண்யா எங்க வீட்டு மருமகள் தான். அப்புறமென்ன தயக்கம். அது அவ வீடு சம்மந்தி வாங்க." என்று சௌந்தரம் வற்புறுத்தினார்.

" அதுக்கில்லை சம்மந்தி… கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்குள்ள வந்தா யாராவது ஏதாவது சொல்லுவாங்க." என்று தனது பயத்தை தெரிவித்தார்.

" இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு? மூச். வேற எதுவும் பேசக் கூடாது.நீங்க வாங்க. " என்று அழைத்துச் சென்றார்.

இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஆதர்ஷிடமிருந்து போன் வந்தது.

" டேய் இப்படி திடுப்திடுப்னு சொன்னா என்னடா பண்றது?" வேதாச்சலம் படத்தார்.

" அப்பா… ரொம்ப அர்ஜென்ட் வொர்க்.நான் உடனே ஆபீஸ்ல போய் முடிக்க வேண்டிய வேலை." என்றான் ஆதர்ஷ்.

" அதுக்கு கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாளேவா கிளம்புறது‌. மறுவீட்டுக்கு போக வேணாமா? கல்யாணத்துக்கு வர முடியாதவங்க வீட்டுக்கு வருவாங்க. அதுக்காக தானே ஒரு வாரம் கழிச்சு புது வீட்ல பால் காய்ச்சும்வோம்னு முடிவு பண்ணோம்."

" அப்பா. புரிஞ்சுக்கோ… இப்போ வேலையிருக்கு. நைட் கால் பண்றேன். ஓகே சொல்லிடுங்க." என்று ஆதர்ஷ் ஃபோனை வைத்து விட்டான்.

ராமநாதன்," மாப்பிள்ளை என்ன சொல்றார் சம்மந்தி?" என்று வினவ.

"அது வந்து…." என்ற வேதாச்சலம், ஆதர்ஷ் கூறியதை சொல்ல.

ராமநாதனோ, "மாப்பிள்ளை சொல்றதும் சரி தான்.வேலை தான் முக்கியம். மறு வீட்டு சடங்கை அடுத்த முறை வரும் போது பார்த்துக்கலாம். நாம கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாள் காலைல சென்னைக்கு கிளம்பிடலாம். ஏற்கனவே எல்லாம் அங்கே அரேஞ்ச் பண்ணியாச்சே. மளிகை சாமனை போகும் போது எடுத்துட்டு போயிடலாம். முக்கிய தேவையான பால், காய்கறிகள் பக்கத்தில் உள்ள கடைகளில் வாங்கி கொள்ளலாம். அப்புறம் என்ன? " என்று மாப்பிள்ளைக்காக வக்காலத்து வாங்கினார் ராமநாதன்.'
அதை நினைத்து பார்த்துக் கொண்டே வந்தாள் தீட்சண்யா.

திடீரென்று வண்டி நிற்கவும் நிகழ்வுக்கு வந்தவள்," என்ன? " என்பது போல் ஆதர்ஷை பார்த்தாள்.

" காஃபி குடிக்கிறியா? உனக்கு ரெஸ்ட் ரூம் போகணும்னா போய்ட்டு வந்திடு‌." என்றான்.

இப்படி காஃபி குடித்து, மதிய உணவிற்காகவும் நிறுத்தி பின் அவர்கள் அப்பார்ட்மெண்ட் இருக்கும் சிறுச்சேரிக்கு போகும் போது மாலைப்பொழுதானது.

அவன் வேலைப் பார்க்கும் ஆபிஸுக்கு பக்கம் என்று சிறுச்சேரியில் லக்சுரி அப்பார்ட்மெண்ட் வாங்கியிருந்தான்.

அந்த அப்பார்ட்மெண்டில் மொத்தம் ஆறு வீடுகள். அதில் செகண்ட்ஸ் ப்ளோரில் ஆதர்ஷின் வீடு இருந்தது.

இதேபோல் மூன்று அப்பார்ட்மெண்ட் அந்த காம்பவுண்டிற்க்குள் இருந்தது. பொதுவாக பிளேகிரவுண்ட், ஜிம் போன்ற வசதிகளும் இருந்தது.

லக்கேஜ்ஜை எல்லாம் பிரித்து அடுக்கிய சௌந்தரம், " தீட்ஷு மா. நம்ம அப்பார்ட்மெண்ட்ல உள்ள ஐந்து வீட்டுக்கும் போய், நாளைக்கு பால் காய்ச்சுறோம். வாங்கனு." சொல்லிட்டு வா மா." என்றார்.

" அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எல்லோரும் வேலை, படிப்புனு பிஸியா இருப்பாங்க. டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்." என்றான் ஆதர்ஷ்.

முகம் இறுக அவனை பார்த்தாள் தீட்சண்யா.

 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️ஆண்டவா ஆதரஷ் நடந்துகிரதை பார்த்தா தீட்சன்யாவை புலம்போ புலம்புன்னு புலம்ப விட போறான் 🤔🤔🤔🤔🤔🤔வேலை தான் முக்கியம் போல 🤨🤨🤨🤨
 

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️ஆண்டவா ஆதரஷ் நடந்துகிரதை பார்த்தா தீட்சன்யாவை புலம்போ புலம்புன்னு புலம்ப விட போறான் 🤔🤔🤔🤔🤔🤔வேலை தான் முக்கியம் போல 🤨🤨🤨🤨
ஆதர்ஷ் தான் புலம்ப போறான் சிஸ்.
 
Top