• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம்- 10

ஆதர்ஷ் பாண்டிச்சேரிக்கு கிளம்பி கொண்டிருக்க. தீட்சண்யாவும் அவனுக்கு உதவி செய்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அவளது முகமோ சோகமாக இருந்தது. அவளது செவியில் நேற்று அக்ஷரா பேசியதே ஓடிக் கொண்டிருந்தது.

ஆதர்ஷோ, கிளம்பும் வரை அவளுக்கு ஆயிரம் அறிவுரைகளை கூறிக்கொண்டே இருந்தான். "யார் கதவு தட்டினாலும் திறக்காதே. ஜாக்கிரதையா இருந்துக்கோ. ஏதாவது ஹெல்ப் வேணும்னா சதானந்தம் அங்கிள் கிட்ட கேளு. நானும் அவர்கிட்ட சொல்லிட்டு போறேன். டேக் கேர்." என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

' ஆதர்ஷ் என்னை இந்த ட்ரிப்புக்கு கூட்டிட்டு போகலை. நான் அவருக்கு பொருத்தமாக இல்லைன்னு நினைக்கிறாரு. அப்படி அவர் நினைச்சாருன்னா நாம இந்த லைஃபை விட்டுட்டு போயிடலாம். அந்த அக்ஷராவை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டும். இதுக்கு ஒரே தீர்வு டைவர்ஸ் தான்.' என்று எண்ணியவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

கீழே சென்ற ஆதர்ஷோ காரில் அமர்ந்து, காரை ஸ்டார்ட் பண்ண முயன்றான். ஆனால் சோகமாக இருந்த தீட்சண்யாவின் முகமே வந்து செல்ல, அவனால் கிளம்பவே முடியவில்லை. பேகை எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்தான். அங்கோ தீட்சண்யாவோ அழுது கொண்டிருந்தாள்.

" ஹேய் தீட்ஷு எதுக்கு அழற?" என்று பதறி வினவினான் ஆதர்ஷ்.

வேகமாக கண்களைத் துடைத்தவளோ, " அழலாம் இல்லை. கண்ல தூசி விழுந்திருச்சு. நீங்க இன்னும் கிளம்பலையா? எதையாவது மறந்து வெச்சிட்டீங்களா? என்ன வேணும்?" என்று கேட்டபடியே எழ.

அவனோ கைகளைக் கட்டிக் கொண்டு," இப்போ ஏன் அழுத சொல்லப் போறியா? இல்லையா?"என்று வினவ.

"நான் தான் அழலைன்னு சொல்றேன்ல. அப்புறம் ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டு இருக்கீங்க? நீங்க இப்ப எதுக்கு வந்தீங்க? அதை சொல்லுங்க…" என்று கோபமாக தீட்சண்யா வினவ.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், நிதானமாக " ட்ரிப்பை கேன்சல் பண்ணிட்டேன்." என்றான்.

"ஓ… உங்க ஃப்ரெண்ட்ஸ் ட்ரிப்பை கேன்சல் பண்ணிட்டாங்களா?"

" நான் தான் போகலை. அவங்க எல்லாம் போறாங்க."

"நீங்க இப்போ எதுக்கு ட்ரிப்பை கேன்சல் பண்றீங்க? நீங்க போங்க… எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை." என்றாள் தீட்சண்யா.

ஆதர்ஷோ தோளில் மாட்டி இருந்த பேக்கை தூக்கி சோபாவில் போட்டவன், அவள் அருகே சென்றான்.

"நீ கேட்ட எல்லா கேள்விக்கும் நான் பதில் சொல்லிட்டேன். இப்ப நீ சொல்லு? எதுக்கு அழுத?" என்று வினவினான்.

அதுக்கு அவளோ பதில் சொல்லாமல் முகத்தை திருப்ப…

அவள் முகத்தை தன்னை பார்க்குமாறு தாடையைப் பிடித்து திருப்பியவன்,"இப்போ சொல்லப் போறியா? இல்லையா?" என்று அழுத்தமாக வினவினான்.

"என் வாழ்க்கை என்னாகுமோனு நினைச்சு அழுதேன் போதுமா…" என்றவள் வேகமாக அவன் கையை தள்ளி விட்டாள்.

சோஃபாவில் விழுந்தவன், "என்னடி சொல்ற?" என்றான்.

" ம்… நேத்து உங்க ஆஃபீஸ்ல இருந்து அக்ஷரா போன் பண்ணுனாங்க."

" அவ எதுக்கு உனக்கு ஃபோன் பண்ணினா?"

"எதுக்கு பண்ணாங்களா? நீங்க எனக்கு ட்ரிப் பிடிக்காதுன்னு சொன்னீங்களாமே. அதை சொல்றதுக்காக தான் பண்ணி இருக்காங்க. உங்களுக்கு என்னை உங்க கூட வெளியில கூட்டிட்டு போறது பிடிக்கலை. அப்படி என்ன பிடிக்காதவங்களோட வாழ எனக்கு விருப்பம் இல்லை. என்னை டைவர்ஸ் பண்ணிட்டு உங்களுக்கு பிடிச்ச மாதிரி உள்ள அக்ஷராவையே கல்யாணம் பண்ணிக்கோங்க.

மீண்டும் அவளருகே வந்த ஆதர்ஷோ," எனக்கு அக்ஷராவை பிடிச்சிருந்தா, அவளையே கல்யாணம் பண்ணியிருப்பேன். உன்ன கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன், பட் அவ ஏன் உனக்கு ஃபோன் பண்ணானு தெரியாது. நான் ஏன் இந்த ட்ரிப்புக்கு உன்னை கூட்டிட்டு போகலைன்னா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் குடிப்பாங்க. அப்படி குடிக்கிறவங்க இருக்குற இடத்துல என் வைஃபை கூட்டிட்டு போறதுல்ல எனக்கு விருப்பமில்லை."

" உங்க ஆஃபிஸ்ல உள்ள பொண்ணுங்களும் தானே வர்றாங்க." என்றாள் தீட்சண்யா.

" ஆமாம் வருவாங்க தான். ஆனால் எனக்கு மத்த பொண்ணுங்களைப் பத்தி கவலை கிடையாது‌. எனக்கு என் வைஃப் மேல மட்டும் தான் அக்கறை. அவளோட பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம். அப்புறம் இன்னொரு விஷயம் நான் உன்ன டைவர்ஸ் பண்ண மாட்டேன். உனக்கு விருப்பம் இருந்தா வேணும்னா டைவர்ஸ் தரேன். அப்படி சொல்லுவேன்னு கூட எதிர்பாக்காத. நான் எப்ப உன் கழுத்துல தாலி கட்டினேனோ அப்போதிலிருந்து நீ தான் என் வைஃப். உனக்கு பிடிச்சாலும் சரி, பிடிக்கலைனாலும் சரி,
நான் சாகுற வரைக்கும் இந்த உறவு மாறாது.நீ தான் என்னுடைய வைஃப்‌" என்றவன் ரூமிற்கு சென்றான்.

ஏதோ தோன்ற திரும்பி அவளிடம் வந்தவன், " உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து… கொஞ்ச நாள் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்னு நினைத்தேன். அதனால தான் உனக்கு இந்த வாழ்க்கையில பிடிப்பு வரலையோ. நான் உன் கணவன்றதும் உன் மனசுல பதிய மாட்டேங்குது. அதையும் சரி செய்துடலாம்." என்றவன் அவளை தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்றான்.

மெத்தையில் அவளை படுக்க வைத்தவன், அவளருகே சரிந்தான். மெல்ல அவள் முகத்தை வருடியவன் அவளது உதடருகே தனது முத்திரையை பதிக்க சென்றான்.

அவளோ, " ப்ளீஸ் வேண்டாம்… நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்." என்று கெஞ்ச.

அவனோ அவளை நிதானமாக பார்த்து, "அப்போ இனிமே டைவர்ஸ்ங்கற வார்த்தை உன் வாயிலிருந்து மட்டுமில்ல, உன் எண்ணத்துலக் கூட வரக் கூடாது. அப்புறம் நீ சொல்லலைன்னாலும் நான் ஒன்னும் உன்னை பண்ணியிருக்க மாட்டேன். உன் விருப்பம் இல்லாமல் தொட நான் ஒன்னும் சைக்கோ கிடையாது. புரியுதா?" என்றவன் தலைக்கு அடியில் இருகைகளையும் வைத்துக் கொண்டு அவளை ஆழ்ந்து பார்த்தான்.

அவளோ பெருமூச்சு விட்டுக் கொண்டு எழுந்தவள், வெளியே சென்றாள்.

வெளியே செல்லும் தீட்சண்யாவையே பார்த்துக் கொண்டிருந்தவனோ," ஓ காட். ஜயம் லூஸிங் மை கண்ட்ரோல். கொஞ்ச நாளைக்கு இவகிட்ட இருந்து விலகி இருக்கணும். இல்லைன்னா நான் சைக்கோவாகிடுவேன் போல…" என்று புலம்பினான்.

தீட்சண்யாவோ கிச்சனுக்குள் சென்று மதிய உணவை செய்ய ஆரம்பித்தாள்.

எல்லா வேலைகளையும் முடித்தவள், அறைக்குச் செல்லாமல் ஹாலிலே எதை எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள்.

மதிய உணவிற்கு வெளியே வருவான் என்று அவள் பார்க்க… அவனோ வராமலே இருந்தான்.

கொஞ்ச நேரம் காத்திருந்தவள், அவன் வருவதாக தெரியவில்லை என்றதும் அறைக்கு சென்றாள்.

கதவருகே நின்றுக் கொண்டே, " சாப்பிட வாங்க." என்று அழைத்தாள் தீட்சண்யா.

அவள் வந்தது தெரிந்தும் வேண்டும் என்று கண்டு கொள்ளாமல் ஃபோனில் கவனத்தை வைத்திருந்தான் ஆதர்ஷ்.

அவன் கவனிக்கவில்லை என்றதும், இன்னும் கொஞ்சம் உள்ளே வந்தவள் சத்தமாக அழைத்தாள்.

அப்பொழுது தான் அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவளை இழுத்து உதட்டில் முத்தம் வைத்தான்.

தீட்சண்யா அதிர்ந்து விழிக்க…

"நான் சும்மா இருக்கணும்னு நினைச்சாலும் நீ விட மாட்டாங்குற தியா. நீ என்னை அவாய்ட் பண்ண, பண்ண‌… எனக்கு உன் கிட்ட நெருங்கணும்னு தோணுது. சோ நீ எப்பவும் போல இரு. இல்லைன்னா என்ன குறை சொல்லாத…" என்றவன் அவளது கன்னத்தில் தட்டினான்.

அவளோ அதிர்ச்சியில் அப்படியே நிற்க.

" ம் வா தியா. சாப்பிடலாம்." என்று நமட்டு சிரிப்புடன் அவளை அழைத்துக் கொண்டு வந்தான்.

கைகள் வெலவெலக்க, பரிமாற தடுமாறினாள் தீட்சண்யா.

" தியா… நீ உட்காரு." என்று அவளை அமர வைத்தவன், அவளுக்கு தட்டில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தவன், " சாப்பிடு." என்றான்.

அவள் சாப்பிட ஆரம்பிக்க, அவனும் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

ஆதர்ஷ் அவளை பார்த்துக் கொண்டே உணவருந்த, அவளுக்கோ உணவு தொண்டைக்குள் இறங்கவில்லை. அவளை காப்பது போல் அவனுக்கு ஃபோனில் மெசேஜ் சவுண்ட் வர வழக்கம் போல் அதில் கவனத்தை செலுத்தினான்.

தீட்சண்யாவோ நிம்மதியடையாமல், சஞ்சலமடைந்தாள்.

 
Top