• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 14


காலையில் எழுந்த ஆதர்ஷிடம் காஃபியை நீட்டினாள் தீட்சண்யா.


அதை வாங்கியவன் அவளை பார்வையிட்டவாரே, " நான் ஆணாதிக்கம் பிடிச்சவன் கிடையாது." என்றான்.


" எதுக்கு இப்ப இதை சொல்றீங்க?"


" இல்ல நீ வேலைக்கு போகணும்னு ஆசைப்பட்டா போ… நான் என்னைக்கும் நீ எனக்கு கீழ இருக்கணும்னு நினைக்க மாட்டேன்."


" இல்லை… எனக்கு வேலைக்கு போறதில் இன்ட்ரஸ்ட் இல்லை."


" இவ்வளவு டேலண்ட வச்சுக்கிட்டு எதுக்கு வேஸ்ட் பண்ற? உங்க அப்பாவுக்காக பயப்படுறியா தியா? நான் வேணும்னா அவரை கன்வின்ஸ் பண்றேன்." என்று ஆதர்ஷ் கூற.


லேசாக சிரித்த தீட்சண்யாவோ, "அப்பா மேல பயம் தான். ஆனா அதை விட டெக்னாலஜி மேல எனக்கு வெறுப்பு அதிகம். ஃபர்ஸ்ட், ஃபர்ஸ்ட் ஸ்மார்ட் போன் யூஸ் பண்ணப்ப ரொம்ப ஆச்சரியப்பட்டேன். நிறைய ஃபெசிலிட்டிஸ்… உலகமே நம்ம கையிலேனு ரொம்ப சந்தோஷமா இருந்தேன். ஆனால் போகப் போகத்தான் ஸ்மார்ட் போனே உலகமென மாறி போகுதுனு புரிஞ்சுகிட்டேன். அது ஒரு வித அடிக்ஷன். இது ஒரு பெரிய அழிவுக்கான ஆரம்பம். டெக்னாலஜி பத்தி தெரிஞ்சுக்கணும் ஆசையில படிக்கப் போனேன். ஆனா அதோட விளைவுகளை பார்த்து வெறுப்பாகிடுச்சு.


நம்ம அப்பார்ட்மெண்டையே எடுத்துக்கோங்க. ஒரு சின்ன பையன் கேம் அடிக்ட்டாகி, பத்து வயசுல ஸ்டிரெஸ்ஸா இருந்தான். காட் க்ரேஸ் அந்த அடிக்டிலிருந்து வெளியே வந்துட்டான். நிகிலோட அக்காவோ இன்ஸ்டா மூலமாக ஒருத்தன் கூட பழகி ஓடிப்போயிட்டா. அவ லைஃப் என்ன ஆகும்னு அது வேற பயமா இருக்கு. நம்ம ப்ளோர்ல உள்ள சின்ன பொண்ணு ஃபுட் வ்லாகுன்னு வெச்சி இருக்கு. அதனால இப்போ ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. ஆனா சாப்பிட்டு, சாப்பிட்டு உடம்பு ஹெல்த் வீணாகிடும். அதெல்லாம் சொன்னா அவங்களுக்கு புரியாது.


நிகிலம்மாவோட ஃப்ரெண்ட் நர்மதா நல்லா படிச்சிருக்காங்க, நல்ல வேலையில பொறுப்பா இருக்காங்க. கல்யாணமானவங்க வேற, ஆனா மொட்டை மாடியில இருந்து, புடவை விலகுறதை கூட கவனிக்காமல் டிக்டாக் பண்ணிட்டு இருக்காங்க. அவங்களை யார் திருத்தறது? அவங்களும், ஸ்வேதாவும் படிச்ச முட்டாளுங்க. அவங்க கிட்ட எல்லாம் பேசி பயனில்லை. பட்டா தான் திருந்துவாங்க.


இதுல ஸ்மார்ட் போன் இல்லாம சந்தோசமா இருக்கிறது யாருன்னா நம்ம சதானந்தம் அங்கிளும், பரமேஸ்வரி ஆன்ட்டியும் தான். அவங்களைப் போல சந்தோசமா இருக்கிறவங்க யாருமே கிடையாது. குழந்தை இல்லாததை நினைச்சுக் கூட கவலைப்படாம ஹேப்பியா வாழ்க்கை ரசித்து வாழ்றாங்க." என்றாள்.


" ஓ… நம்ம வாழ்க்கையில ஸ்மார்ட் ஃபோன் எந்த ப்ராப்ளத்தையும் உண்டு பண்ணலையே?" என்று ஆதர்ஷ் வினவ.


" ம்… பேசி, பழகி ஒருத்தவங்கள ஒருத்தவங்க புரிஞ்சுக்கலாம்னு சொல்லிட்டு எங்கேயாவது என்னோட பேசினீங்களா? வீட்டுக்கு வந்தா எப்ப பாத்தாலும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டான்னு ஃபோனில் ஏதாவது ஸ்க்ரோல் பண்ணிட்டே தான் இருந்தீங்க." என்று தீட்சண்யா முறைத்துக் கொண்டே சொன்னாள்.


உண்மை சுட, அமைதியாக இருந்தான் ஆதர்ஷ்.


" இதெல்லாம் விடுங்க.ஸ்மார்ட் போனை விட மெட்டாவெர்ஸ் ஆயிரம் மடங்கு கொடூரமானது. மனித இனத்தையும், மனிதர்களோட வாழ்க்கை முறையையும் அழிச்சிடும். அப்படிப்பட்ட டெக்னாலஜியில் என்னோட பங்கு இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். அதனால தான் வேலைக்குப் போறதுல இன்ட்ரஸ்ட் இல்லை." என்றாள்.


"அப்புறம் ஏன் டெக்னாலஜி பத்தி படிச்ச? அதுல எதுவும் நன்மை இல்லையா." என்றான் ஆதர்ஷ்.


"இருக்கு… ஆனால் அதை நாம் பயன்பத்துற விதத்துல பயன்படுத்தனும். ஏன் செல்ஃபோனையே எடுத்துக்கோங்க… நமக்குத் தெரியாத எல்லா விஷயத்தையும் புரிய வைக்கும். ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுன்ற மாதிரி அதிகமாகவும், தப்பான வழியிலும் பயன்படுத்துனா தான் ஆபத்து.


நானும் முதல்ல அதுல இருக்கிற நல்லது மட்டும் தெரிஞ்சு படிக்க போனேன். படிச்ச பிறகு தானே அதுல உள்ள கெடுதல் தெரிஞ்சது. அதான் அதுல இருந்து நாலேட்ஜ்ஜை மட்டும் கத்துக்கிட்டு, அதைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்னு நினைச்சேன்."


" ஓ… இது நல்ல விஷயம் தான்." என்ற ஆதர்ஷ் குளிக்க சென்றான்.


ஆஃபிஸுக்கு சென்ற ஆதர்ஷோ," ஹாய் தருண்… என் வைஃப்போட இங்கிலீஷ் நாவல் எங்க வாங்கலாம்னு கேட்டு சொல்லவா? இல்லை… இல்லை… நீ என் டியரஸ்ட் ஃப்ரெண்டாச்சே. உனக்கு என் வைஃப் கிட்ட இருந்து ஃப்ரீயாவே வாங்கித் தரேன். நம்ம டி எல் சொன்ன மாதிரி ஈஸியா கிராமர் கத்துக்கலாம்." என்று புருவத்தை ஏற்றி, இறக்கி கேலி செய்தான்.


இவ்வளவு நாள் அவன் செய்ததைத் தான் ஆதர்ஷ் திருப்பி செய்கிறான் என்று தெரியாமல் முறைத்து விட்டு சென்றான் தருண்.


ஆதர்ஷ் கிண்டலாக தருணிடம் பேசுவதை பார்த்த அக்ஷராவும், பவ்யாவும் அவனிடம் மாட்டாமல் அங்கிருந்து வேகமாக செல்ல முயல


அக்ஷராவை சொடக்கிட்டு அழைத்தான் ஆதர்ஷ்.


அவள் அமைதியாக நின்றாள்.


" நீயும் மெட்டாவெர்ஸ் பத்தி தெரிஞ்சுக்கணும் தானே ட்ரை பண்ணிட்டு இருக்க… உனக்கு ஏதாவது டவுட்னா சொல்லு. என் வைஃப் கிட்ட சொல்றேன். உனக்கு அவ நம்பர் வேணுமா? " என்றவன் அவள் பதில் சொல்லாமல் இருக்கவும், " ஓ… உன் கிட்ட தான் இருக்கே. தயங்காம எப்ப வேணும்னாலும் கால் பண்ணு அக்ஷரா. அவ ஹெல்ஃப் பண்ணுவா. அவ எதையும் மனசுல வச்சுக்க மாட்டா? ஷீ இஸ் ஏ ஜெம்." என்றான்.


அக்ஷராவோ, முகம் வாடி போய் நின்றாள். அவளருகே முள்ளின் மேல் நிற்பது போல் இருந்த பவ்யாவை பார்த்தவன், " மிஸ் பவ்யா… நம்ம ஃப்ரெண்ட் தப்பு பண்ணா நம்ம தான் திருத்தணும். அவங்க தப்புக்கு துணை போக கூடாது." என்று அவளை ஆழ்ந்து பார்த்தவன் இறுக்கமான குரலில் கூறினான்.


" ஹான்… நான் ஒன்னும் பண்ணலையே." பதறினாள் பவ்யா.


" ரிலாக்ஸ் பவ்யா… அக்ஷரா கூடவே இருக்கீங்களேனு தான் சொன்னேன்." என்றவனது பார்வையோ, 'நீ ஏதாவது அவளுக்கு சொல்லிக் கொடுத்திருந்தது எனக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்.' என்பது போல் மிரட்டியது.

'அப்பாடா… ஆதர்ஷுக்கு நான் தான் அக்ஷராவை தூண்டி விட்டேனு தெரியலை. நல்ல வேளை.' என்று பெருமூச்சு விட்டவள், அக்ஷராவை இழுத்துக் கொண்டு ஓடினாள்.


தோளைக் குலுக்கிய ஆதர்ஷ் அவனது வேலையில் கவனத்தை செலுத்தினான்.


******************************

பார்க்கில் நிகிலனும், கவினும் விளையாடிக் கொண்டிருக்க.


பரமேஸ்வரி, சதானந்தம் தம்பதியுடன் தீட்சண்யாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.


விளையாடி முடித்த நிகிலனும், கவினும் தீட்சண்யாவிற்கு அருகே வந்து அமர்ந்தனர்.


"விளையாடி முடிச்சாச்சா?" என்று தீட்சண்யா வினவ?


" ஆமாம் ஆன்ட்டி. இனி படிக்க போகணும்." என்றனர்.


" கவின் போன் யூஸ் பண்றது குறைஞ்சிடுச்சா? நவ் ஹவ் டூ யூ ஃபீல்?"


" இப்பல்லாம் ஃபோன்ல விளையாடணும் தோணவே மாட்டேங்குது ஆன்ட்டி. இங்கே நிகிலோட விளையாடிட்டு, வீட்டுக்கு போய் படிக்கத்தான் டைம் சரியா இருக்கு . ரொம்ப நேரம் ஃபோன் யூஸ் பண்ணாததால இந்த தலைவலி, டென்ஷன் இதெல்லாம் இல்லாம ரிலாக்ஸா இருக்கேன். ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி." என்றான் கவின்.


" அதெல்லாம் பரவாயில்லை விடு. ஆனா நீயும், நிகிலும் ஃப்ரண்ட் ஆனதும், என்ன டீல்ல விட்டுட்டல்ல… என்னோட மறுபடியும் ரேஸ்ல கலந்துக்குறேன்னு சொன்ன. இப்போ அது பத்தி மூச்சே காணுமே."என்று கிண்டலாக கேட்க.


" ஓகே ஆன்ட்டி… இப்ப வேணும்னாலும் பந்தயம் வைச்சுக்கலாம்." என்றான் கவின்.


"அப்போ ஓகே." என்ற தீட்சண்யா, அவனுடன் ஓட தயாரானாள்.


இந்த முறையும் தீட்சண்யாவே ஜெயிக்க…


"போங்கா ஆன்ட்டி… நீங்க என்னோட பெரியவங்க, அதான் ஜெயிக்கிறீங்க." என்றான் கவின்.


" அதெல்லாம் ஒன்னும் இல்ல கவின். நீ இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணா என்னை ஜெயிச்சிடலாம்." என்றாள்.


" அப்படியா… அப்போ நெக்ஸ்ட் டைம் உங்களை ஜெயிக்க டிரை பண்றேன்." என்றான் கவின்.


அவன் தலையை லேசாக கலைத்து விட்டாள் தீட்சண்யா.


அவர்கள் அங்கே சிரித்து பேசிக்கொண்டிருக்க.


வெளியே இருந்து வந்த நிகிலனின் அம்மாவோடு, நிதிஷா கெஞ்சி கொண்டே வந்தாள்.


"மம்மி ப்ளீஸ் மம்மி. என்னை காப்பாத்துங்க. நான் நம்பி போன ஆளு என்னை ஏமாத்திட்டான். என்ன எங்கோ வெளிநாட்டுக்கு அனுப்ப ட்ரை பண்ணான். நான் தப்பிச்சு வந்துட்டேன். ப்ளீஸ் மம்மி… என்னை வீட்ல சேர்த்துக்கோங்க." என்று அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் நிதிஷா.


அவளது அம்மாவோ, " நீ போனது, போனது தான்… உன்னால எனக்கும், உங்க டேடிக்கும் எவ்வளவு அவமானம் தெரியுமா? எங்களைப் பத்தி கொஞ்சமாச்சும் நினைச்சியா? ஓடிப் போனவ, எதுக்கு திரும்பவும் இங்க வர? உனக்கு வெட்கமா இல்லையா? இல்லை எங்களை வேணும்னு அசிங்கப்படுத்தணும்னு நினைக்கிறியா?" என்று திட்டிக் கொண்டிருந்தார்.


நிகிலனோ, " அக்கா…" என்று ஓடி வர. அவனை தடுத்து நிறுத்தினார் ஸ்வேதா.


"இங்கே பாரு… என்னைக்கோ நீ செத்துப் போயிட்ட. நிகிலன் மட்டும் தான் எங்களுக்கு பையன். முதல்ல இந்த எடத்தை விட்டு காலி பண்ணு."


" மம்மி எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா? ப்ளீஸ் மம்மி என்னை விட்டுடாதீங்க. எனக்கு வேற யாரையும் தெரியாது."என்று நிதிஷா அழுக.


" ஓடிப் போகும்போது இதெல்லாம் தெரியாதா? இப்போ எதுக்கு இங்க வர? எங்கேயோவது போய் தொலை." என்றவர் நிகிலனை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றார்.


" நிகிலம்மா… எல்லா தப்புக்கும் நீங்க தான் காரணம். எப்பப் பாரு சோசியல் மீடியாவில் இருந்துட்டு‍, பிள்ளைகளை கவனிக்கலை. அதான் அவங்களும் அதிலேயே இருந்துட்டாங்க. நீங்க ஃப்ரெண்ட்லியா பசங்கக் கிட்ட இருக்காமல், படி, படின்னு எப்ப பார்த்தாலும் சொல்லிக்கிட்டு இருந்தா, அவங்க எப்படி உங்கக் கிட்ட ஃப்ரீயா பேசுவாங்க.


நீங்க மட்டும் அவ கிட்ட ஃப்ரெண்ட்லியா இருந்தா‍, அவ லவ் பண்ணது உங்க கிட்ட தானே முதல்ல சொல்லிருப்பா. நீங்க அவ செய்றது தப்புன்னு புரிய வச்சிருக்கலாம். எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்." என்று தீட்சண்யா சொல்ல…


" ஹேய் ஸ்டாப் திஸ் நான்ஸன்ஸ்… கிராமத்தில் இருந்து வந்த படிப்பறிவில்லாத நீ, எனக்கு வந்து அட்வைஸ் பண்றியா? முதல்ல உனக்கு புள்ள இருக்கா? புள்ளை வளர்ப்பை பத்தி பேச வந்துட்ட… உன் வேலையை பாத்துட்டு போ." என்றவர் வீட்டிற்கு செல்ல‌.


' இவங்களையெல்லாம் திருத்தவே முடியாது.' என்று மனதிற்குள் நொந்துக் கொண்டவள், தளர்ந்து நடையுடன் வெளியே செல்ல முயன்ற நிதிஷாவிடம், " நிதிஷா‌…" என்று மென்மையாக அழைத்தாள்.


அவள் திரும்பி பார்க்க…


"இங்கே வா. கொஞ்ச நேரம் உட்காரு." என்று அவளை பெஞ்சில் அமர வைத்த தீட்சண்யா, " ஆன்ட்டி பாத்துக்கோங்க." என்று பரமேஸ்வரியிடம் கூறி விட்டு வீட்டிற்குச் சென்றாள்.


உள்ளே சென்று நிமிடத்தில் வெளியே செல்வது போல் கிளம்பி வந்தாள் தீட்சண்யா. கையில் பர்ஸ், ஃபோன் எடுத்துக் கொண்டவள், "வா நிதிஷா…" என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.


"எங்க போற?" என்பது போல் பெரியவர்கள் பார்க்க.


"வந்து சொல்றேன்…" என்று விட்டு, நிதிஷாவை அழைத்துச் சென்றாள்.


ஆபீஸிலிருந்து வந்த ஆதர்ஷ் வீட்டில் தீட்சண்யாவை காணாமல் பயந்து போனான்.


' எங்க போயிருப்பா? ஒன்னும் புரியலையே!'

என்று அவன் திகைத்து போய் அமர்ந்து இருந்தான்.


திடீரென்று தான் கீழ் வீட்டு அங்கிள், ஆன்ட்டி ஞாபகம் வர, அங்கே ஓடினான்.


அவர்கள் வீட்டு காலிங்பெல்லை அடிக்க…


கதவை திறந்த சதானந்தம் ஆச்சரியமாக அவனைப் பார்த்து, " வா பா…" என்றார்.


" அங்கிள்… தீட்சண்யாவை பார்த்தீங்களா? அவளைக் காணோம்." என்று படபடத்தான்.


" ரிலாக்ஸ் ஆதி… " என்றவர், நிதிஷாவுடன் தீட்சண்யா வெளியே சென்றதைக் கூறினார்.


" ஓ… சாரி… உங்களை வேற தொந்தரவு பண்ணிட்டேன்." என்று மன்னிப்பு கேட்க.


" இதுல என்னப்பா இருக்கு. முதல்ல உள்ள வா, இந்த காஃபியை குடி." என்றார் பரமேஸ்வரி.


காஃபியை குடித்து முடித்த ஆதர்ஷ், "வரேன் அங்கிள்… வரேன் ஆன்ட்டி…" என்று கூறி விட்டு வீட்டிற்கு வந்தான்.


உள்ளுக்குள் கோபம் பெருகியது.


சோர்வாக வந்தாள் தீட்சண்யா.


" வந்துட்டீங்களா ஆதி." என்று சோர்வாக புன்னகைத்தாள்.


" எங்க போன தியா? சொல்லிட்டு போக மாட்டியா? உன்னை காணும்னு ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா? ஒரு பத்து நிமிஷம் என்ன ஏதுன்னு புரியாம தவிச்சிட்டேன். அப்புறம் அந்த அங்கிள், ஆன்ட்டி கிட்ட கேட்டேன். ‌ அவங்க தான் சொன்னாங்க. "


" சாரிங்க… எனக்கு பதட்டத்துல ஒன்னும் புரியலை. நான் நினைச்ச மாதிரியே நிதிஷாவை அந்த பையன் ஏமாத்திட்டான். அவ கிட்ட இருந்து பணம், நகையெல்லாம் வாங்கிக்கிட்டு அவளை வெளிநாட்டுல விக்க ட்ரை பண்ணியிருக்கான். அவன் கிட்ட இருந்து எப்படியோ தப்பிச்சு வந்துட்டா. ஆனா அவங்க அம்மா சேர்த்துக்க மாட்டேன்னுட்டாங்க. அவ மறுபடியும் போய் யார்கிட்டயாவது மாட்டிக்க கூடாதுன்னு எனக்கு தெரிஞ்ச ஒரு லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுட்டேன். அங்க பாதுகாப்பா இருப்பா. பார்ட் டைம் ஜாப்புக்கும் ஏற்பாடு பண்ணி இருக்கேன். அவ படிப்பை கண்டினியூ பண்ணி, அவ வாழ்க்கையை பார்த்துப்பா. இப்போ தான் நிம்மதியா இருக்கு. இந்த டென்ஷன்ல சொல்லிட்டு போக மறந்துட்டேன். சொல்லாமல் போனது தப்பு தான்… சாரி." என்று மீண்டும் அவள் மன்னிப்பை வேண்ட.


"பரவாயில்ல. இனி மேல் எங்க போனாலும் சொல்லிட்டு போ. ஆனாலும் தியா நீ ரொம்ப நல்லவ. நீ சொன்ன போதே நான் அவங்க அம்மா கிட்ட பேசியிருக்கலாம். பாவம் அந்த பொண்ணு." என்று வருத்தப்பட்டான் ஆதர்ஷ்.


"பரவாயில்லை விடுங்க. நீங்க சொன்னாலும் அவங்க அம்மா கேட்கிற கேட்டகரி இல்ல. இப்ப தான் எனக்கு புரியுது. இனி நிதிஷா நல்லா தான் இருப்பா. நீங்க எதுவும் கவலைப்பட வேண்டாம்." என்று கூறினாள் தீட்சண்யா.


" சரி தியா… நாளைக்கு காலைல நாம ஊருக்கு கிளம்பணும். ரெடியா இரு. ஒரு வாரம் இருக்கிற மாதிரி இருக்கும்." என்று கூற.


அவளது முகமோ மலர்ந்தது. " என்ன திடீர்னு ஊருக்கு போகற ப்ளான்." என்று மகிழ்ச்சியாக வினவினாள்.


" மறு வீட்டுக்கு இன்னும் போகல இல்ல. அதான்… அப்புறம் எத்தனை நாளைக்கு தான் உன் சாப்பாட்டையே சாப்பிடுறது. என் மாமியாரோட சாப்பாட்டையும் ஒரு கை பார்க்க வேண்டாமா ?" என்று வினவ.


அவளோ, அவனைப் பார்த்து முறைக்க முயன்று விட்டு பிறகு சிரிக்கலானாள்.


அவள் சிரிப்பதை ரசித்துக் கொண்டே மனதிற்குள், 'தியா… காலையில் நீ சொன்னது சரி தான். உன் கூட நான் டைம் ஸ்பெண்ட் பண்ணவே இல்லை. அதுக்குத்தான் இந்த ஒரு வார ட்ரிப்.' என்று நினைத்தான்.
 
Top