• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317

அத்தியாயம் - 4


தீட்சண்யா ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க…


ரூமில் இருந்து வெளியே வந்த ஆதர்ஷோ, " குட்மார்னிங் தீட்ஷு." என்றான்.


" குட்மார்னிங் இல்லை… குட்ஆப்டர்நூன். இப்போ டைம் ட்வெல் ஓ க்ளாக்."


அதிர்ந்த ஆதர்ஷோ, கண்களை தேய்த்துக் கொண்டு ஹாலில் இருந்த வால்க்ளாக்கை பார்க்க..


அதிலோ பெரிய முள்ளும், சின்ன முள்ளும் ஒன்றாக இணைந்து காட்டியது.


" ஓ காட்… லஞ்சுக்கு வேறு ஃப்ரெண்ட்ஸுங்களை இன்வைட் பண்ணியிருக்கேன். நாமே லேட்டா போனா எப்படி. நான் போய் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வரேன். நீயும் ரெடியாகு தீட்ஷு." என்றவன் அவளது பதிலை கேட்காமல் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.


வேகமாக தயாராகி வந்த ஆதர்ஷ் இன்னும் அதே இடத்தில் நகராமல் இருந்த தீட்சண்யாவைப் பார்த்து டென்ஷனான்.


" தீட்சண்யா… உன்னை கிளம்ப தானே சொன்னேன். ஏற்கனவே ரொம்ப லேட்டாயிடுச்சு." என்று கோபமாக வினவ.


" நான் ரெடியாக தான் இருக்கேன்." என்றாள் தீட்சண்யா.


" ரொம்ப சிம்பிளா இருக்க. இதோட தான் வரப் போறீயா? மேக்கப் எதுவும் பண்ணலையா?" என்று அவளை ஆராய்ச்சியாகப் பார்த்து வினவினான்.


அவனுக்குத் தெரியவில்லை அவள் கட்டிருப்பது இருபதாயிரம் மதிப்புள்ள மைல்டான சாஃப்ட் சில்க் சேரி.


" எனக்கு மேக்கப் பண்ண பிடிக்காது. அப்புறம் இது நியூ சாரி தான். எனக்கு இது தான் கம்ஃபர்டபுளா இருக்கும்." என்று முடித்து விட.


அவளை பார்த்தவனோ, பார்ட்டிக்கு நேரமானதால் அவளுடன் வாக்குவாதம் செய்யாமல்," சரி வா." என்று கீழே அழைத்துச் சென்று காரில் ஏறினான்.


காரில் மௌனமாக ஓட்டிக் கொண்டு வந்தான். மனதிற்குள்ளோ, ' இந்த பார்ட்டி நல்லபடியா நடக்குமா? என் ஃப்ரெண்ட்ஸோட மிங்கிள் ஆவாளா? இவளும்‍, இவளோட ட்ரெஸ்ஸிங்சென்ஸும்… இவ ஏன் தான் இப்படி இருக்காளோ?' என்று யோசித்துக் கொண்டிருந்தான்.


அவசர அவரசமாக கிளம்பினாலும் ஆதர்ஷும், தீட்சண்யாவும் எல்லோருக்கும் முன்பாக ஹெவன் லுக் ஹோட்டலுக்கு சென்று விட்டனர். ஏசி ஹால் புக் செய்து இருந்தான்.


சற்று நேரத்தில் அவனது தோழர், தோழியர் பட்டாளமும் வந்தது.


எல்லோரையும் பார்த்து புன்னகையுடன் வரவேற்ற ஆதர்ஷ், " ஹாய் கைஸ். மீட் மை வைஃப் தீட்சண்யா." என்று அறிமுகப்படுத்தினான்.


தீட்சண்யாவிற்கு அருகில் நின்றிருந்த பவ்யா, " ஹாய்…" என்று அவளை அணைக்க போனாள்.


தீட்சண்யாவோ சற்று விலகி,"வணக்கம்." என்று கை கூப்பினாள்.


ஒரு நிமிடம் அதிர்ந்த பவ்யாவோ, தனக்கு அருகே இருந்த அக்ஷராவை பார்த்து கண்ணால் சிரித்தாள்.


அங்கிருந்த எல்லோரும் சற்று கிண்டலாக பார்த்தனர்.


அதை கண்டும் காணாதது போல்,"சரி வாங்க கைஸ். டேக் யுவர் ஸீட்." என்று பேச்சை மாற்றி அவர்களைஅழைத்துக் கொண்டு சென்றான் ஆதர்ஷ்.


ஒவ்வொருவரிடமும் என்ன வேண்டுமென்று கேட்டவன், தனது சரிபாதியிடம் மட்டும் எதுவும் கேட்கவில்லை. 'அவளிடம் கேட்டால் ஏதாவது சொல்லி மானத்தை வாங்கி விடுவாளோ.' என்று அஞ்சியவன் அவனாகவே அவளுக்காக சிக்கன் செஸ்வான் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்தான்.


"ஹோ…" என்று அதற்கு எல்லோரும் ஆரவாரம் செய்தனர்.


" பரவாயில்லை ஆதி. இப்பதான் மேரேஜ் ஆனது. ஆனா அதுக்குள்ள சிஸ்டருக்கு பிடிச்சதெல்லாம் உனக்கு அத்துப்படி ஆயிடுச்சு. சூப்பர். குடும்பஸ்தன் ஆகிட்ட." என்று தருண் அவனைப் பாராட்டினான்.


அவனைப் பார்த்து முயன்று புன்னகைத்தான் ஆதர்ஷ்.


அவனை காப்பது போல் ஆர்டர் செய்த உணவுகள் வந்துவிட, எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர்.


தீட்சண்யா மட்டும் சாப்பிடாமலேயே அமர்ந்திருந்தாள். அவளை முதலில் கவனித்து, " ஏன் சாப்பிடாமல் இருக்கீங்க சாப்பிடுங்க?" என்றாள் அக்ஷரா.


" ஹான்." என்ற தீட்சண்யா, அடுத்து என்ன சொல்லுவது என்று தெரியாமல் முழித்தாள்.


அக்ஷராவோ இனிமையாக புன்னகைத்து, " சாப்பிடுங்க மிஸஸ் ஆதர்ஷ்." என்றாள்.


அவளோ தயங்கித் தயங்கி அவளை ஒரு பார்வை பார்ப்பதும், எல்லோரிடமும் நாசுக்காக சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ஆதர்ஷை ஒரு பார்வை பார்ப்பதுமாக இருந்தாள்.


அவளது பார்வையை கண்டுக் கொண்ட அக்ஷரா, " ஆதி… சொன்னா தான் சாப்பிடுவீங்களா? நான் வேணும்னா கூப்பிடட்டுமா?" என்றாள்.


" இல்லை… வேண்டாம்… நான் சிக்கன் சாப்பிட மாட்டேன்." என்று தயக்கத்துடன் கூறினாள்.


அந்த இடமே அமைதியானது. ஆதர்ஷோ, முகம் இறுக அவளை வெறித்து பார்த்தான். ' என்னை இன்சல்ட் பண்ணனும்னே இப்படி பிகேவ் பண்றா. ஸ்டூப்பிட். கொஞ்சம் கூட மேனர்ஸே தெரியாமல் இருக்கா.' என்று மனதிற்குள்ளே திட்டிக் கொண்டிருந்தான்.


ஆதர்ஷை ஒரு பார்வை பார்த்த அக்ஷரா, "ஈப் யூ டோண்ட் மைன்ட். எனக்கு ஆர்டர் பண்ணுன எக் ப்ரைட்ரைஸை சாப்பிடறீங்களா? நாம ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாமா?" என்று வினவ.


ஆதர்ஷோ ஒரு நிமிடம் அக்ஷராவை ஆழ்ந்து பார்த்தான். பிறகு தோளைக் குலுக்கிக் கொண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டே உணவருந்தினான்.


" ஏன் டா ஆதி? நம்ம டீம் லீடரை கூப்பிடலையா?" என்று தருண் வினவ.


அதுவரை டென்ஷனாக இருந்த ஆதர்ஷின் முகமோ இப்போது மலர்ந்தது.


" கூப்பிட்டேன் டா. அவரும் வரேன்னு தான் சொன்னார். அப்புறம் திடீர்னு ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சாம்‌. அதான் அவரால வரமுடியலைன்னு ரொம்ப பீல் பண்ணார். பட் அவரோட வீட்டுக்கு என்னை இன்வைட் பண்றேன்னு சொல்லி இருக்காரு. ஐ அம் வெயிட்டிங் ஃபார் த ப்ரிஷீயஸ் மொமண்ட்." என்று முகமெல்லாம் புன்னகையுடன் எக்சைடாக கூறினான்.


பழக்கதோஷத்தில் இந்த உரையாடல் எல்லாம் ஆங்கிலத்திலே பேசிக் கொண்டிருந்தனர்.


தீட்சண்யாவோ, "யாரு டீம் லீடர்?" என்று தமிழில் வினவினாள்.


தருணோ," சிஸ்டருக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியும் போல இருக்கு." என்றவன் கிண்டலாக நகைத்தான்.


அவள் ஆங்கிலத்தில் பேசாமல், தமிழில் பேசியதை நாசுக்காக கிண்டலடிக்க…


ஆதர்ஷின் முகமோ கருத்தது.


ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தவர்கள், ஹேண்ட் வாஷ் செய்வதற்காக செல்ல…


அங்கே சென்று கையை கழுவி விட்டு, நாப்கினை எடுத்து துடைத்த பவ்யாவோ, " பார்த்தியா அக்ஷி… உன்னை போய் வேண்டாம்னு சொன்னானே ஆதர்ஷ். அவனுக்கு நல்லா வேணும்‌. உன்னுடைய அழகென்ன… ஸ்டைலென்ன… அவனுக்கு எவ்வளவு மேட்ச்சா இருப்ப. ஆனால் உன் லவ்வை ரிஜெக்ட் பண்ணிட்டு, போயும், போயும் அவனுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாத இந்த மாதிரி லோ க்ளாஸ் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவனுடைய கெத்துக்கு ஏத்த பொண்ணு நீ தான். அவன் அளவுக்கு டேலன்டான பர்ஸன் நீ தான். ‌ ஆனா உன்ன வேணாம்னு சொல்லிட்டு எப்படித்தான் அந்த பட்டிக்காட்டை கல்யாணம் பண்ணிக்கிட்டானோனு தெரியலை. கொஞ்சம் கூட மேனர்ஸே தெரியலை." என்று புலம்பி தீர்க்க.


" தேவையில்லாம பேசாதே பவி." என்று அடக்கினாள் அக்ஷரா.


" பாரு அக்ஷி இப்ப கூட நீ என்ன அடக்கிட்டு அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க. உன் அளவுக்கு நான் எல்லாம் நல்லவ இல்லை டி." என்று படபடவென்று பொறிய.


" ஷ்…" என்ற அக்ஷரா சுற்றுமுற்றும் பார்த்து விட்டு அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.


அங்கிருந்த ரெஸ்ட் ரூமில் இருந்த தீட்சண்யா எல்லாவற்றையும் கேட்டு விட்டாள் என்பதை அவர்கள் அறியவில்லை.


வெளியே வந்த தீட்சண்யாவோ முகம் வாடியிருந்தாள்.


ஒவ்வொருவரும் விடைபெற்றுப் போக இறுதியாக தீட்சண்யாவும், ஆதர்ஷும் கிளம்பினர்.


காரில் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது. ஆதர்ஷோ முகம் இறுக கோபத்துடன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

தீட்சண்யாவோ, சற்று முன்பு அவனது அலுவலக நண்பர்கள் பேசியதை நினைத்து கலங்கிப் போயிருந்தாள். அங்கு நிலவிய மௌனம், அவளை இன்னும் குழப்ப… அவளே ஆதர்ஷிடம் பேச்சு கொடுத்தாள். " பார்ட்டி நல்லா இருந்துச்சுல. சாப்பாடும் சூப்பர்." என்று சொல்ல.


அவனோ அவளை பார்த்து தீயென முறைத்தான். அவனது கோபத்தை பார்த்த தீட்சண்யாவோ, வாயை இறுக மூடிக் கொண்டாள்.


வெளியே மட்டும் தான் அமைதியாக வந்தாள். மனதிற்குள்ளோ அவனை தாளித்துக் கொண்டு தான் வந்தாள். 'நாம் தான் கோபப்படணும். என்ன ஆர்டர் பண்ணனும்னு என் கிட்ட கேட்காமல் இவர் இஷ்டத்துக்கு ஏதாவது பண்ணிட்டு, எனக்கு தான் தர்மசங்கடமா போயிடுச்சு. நானே அமைதியா இருக்கேன். இவரு என்னமோ மூஞ்சுல முள்ளை வச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்காரு. ' எண்ணிக் கொண்டிருந்தவளை நிகழ்காலத்திற்கு இழுத்து வருவது போல், திடீரென்று ப்ரேக் போட்டான்.


ஒரு பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் முன்பு கார் நின்றது.


என்ன என்பது போல் பார்த்தாள் தீட்சண்யா.


" இறங்கு." என்று சைகை செய்தான் ஆதர்ஷ்.


" நான் தான் மளிகை சாமான் எல்லாம் இருக்குன்னு நேத்தே சொன்னேனே." என்று இறங்காமல் தீட்சண்யா சொல்ல.


" அதான் உங்க அப்பா, அம்மா மூட்டை, மூட்டையா அனுப்பினாங்கனு ஏற்கனவே சொல்லிட்டியே. வீட்டுக்குத் தேவையான பொருள் வாங்கலை தாயே. முதல்ல கீழே இறங்கு." என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற.


தன் பெற்றோரை பற்றி அலட்சியமாக பேசியதில் கோபமாக இருந்த தீட்சண்யாவோ கீழே இறங்காமல்," நான் வரலை. நீங்க போய் என்ன வேணுமோ வாங்கிட்டு வாங்க." என்றாள்.


இறங்கி அவள் பக்க கதவை திறந்தவன்," ஹேய் … இப்போ நீ வர்றீயா? இல்லையா?" என்று சினத்துடன் அவள் கையை பிடிக்க வர…


அவனை நிமிர்ந்து பார்த்த, தீட்சண்யாவோ, " இல்லை… நானே வரேன்." என்று அவனுடன் சென்றாள்.


அந்த டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குள் நுழைந்தவன், அங்கிருந்த பணியாளரிடம், " காஸ்மெட்டிக் ஐட்டம் எங்க இருக்கு?" என்று வினவ


" ஸ்ட்ரெயிட்டா போங்க சார்." என்றாள் அந்த பெண்.


விறுவிறுவென உள்ளே நூழைந்தவன்," மேக்கப் திங்ஸ் வாங்கிக்கோ." என்று சொல்லி விட்டு ஃபோனில் கவனத்தை செலுத்தினான்.


அவளோ அங்கிருந்த பணியாளரிடம், " மென்ஸ் மேக்கப் திங்ஸ் எங்கே இருக்கு?" என்று கேட்டு தேவையானவற்றை வாங்க.


அவள் கேட்டு வாங்கியதைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தவன், பிறகு அவளை பார்த்து முறைத்து, " ஹேய் என்ன வேணும்னே கிண்டல் பண்றியா? நான் உனக்கு தான் வாங்க சொன்னேன்." என்றவன் அவளிடம் பதில் எதுவும் எதிர்ப்பார்க்காமல், அவனே அவளுக்கான காஸ்மெட்டிக் ஐட்டத்தை தேர்ந்தெடுக்கலானான்.


அவன் தேர்ந்தெடுக்கும் வேகத்தைப் பார்த்த தீட்சண்யா வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல்," நிறைய அனுபவம் இருக்கோ?" என்றாள்.


" வாட்?" என்று புரியாமல் அவளை கூர்ந்து பார்த்தான் ஆதர்ஷ்.


" இல்லை… நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸுக்கு வாங்கி கொடுத்து பழக்கம் இருக்கோ? இப்படி தடுமாற்றமே இல்லாமல் எடுத்து வைக்கிறீங்களேன்னு கேட்டேன்." என்று நக்கலாக அவனைப் பார்த்தாள்.


கோபமாக அவளை முறைத்தவன், அவளது கையைப் பற்றி அழுத்தி, " கொஞ்சம் வாயை மூடுறீயா?" என்றான்.


அவளோ அவனது முதல் தொடுகையில் தடுமாறி வாயை மூட.


அவனோ, அவர்களுடன் வந்து எடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்த பெண்ணிடம், "இதெல்லாம் பில் போட்ருங்க." என்றான்.


" ஓகே சார்." என்ற அந்த பெண்ணோ," இதையும் பில் போட்டுடவா சார்?" என்று சற்று முன்பு தீட்சண்யா எடுத்து வைத்த ஆண்களுக்கான அழகு சாதனப் பொருட்களை காண்பித்து வினவினாள்.


அதைப் பார்த்ததும் தீட்சண்யாவிற்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வர, கலகலவென நகைத்தாள்.


அவள் சிரிப்பை பார்த்து ஆதர்ஷுக்கும் சிரிப்பு வந்தது. லேசான புன்னகையுடன், "வேண்டாம். மத்ததை மட்டும் பில் போடுங்க‌." என்றான்.


ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தனர்.


வீட்டிற்கு வந்ததும் மீண்டும் அவன் முருங்கை மரம் ஏறினான்.


" தீட்சண்யா… உன் கிட்ட இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னை வேணும்னே ஃப்ரெண்ட்ஸுங்க முன்னாடி இன்சல்ட் பண்ணிட்ட. ஒரு இடத்தில தமிழ்ல பேசுனா, நாமளும் தமிழ்ல பேசலாம். அங்க இங்கிலீஷ்ல பேசிட்டு இருக்கும் போது, உன்னை யாரு வந்து தமிழ்ல பேச சொன்னா? உனக்கு இங்கிலீஷ் தெரியலைன்னா பேசாமல் இருந்திருக்கணும். வேணும்னே என்ன அசிங்கப்படுத்திட்ட. என்னை பார்த்தாலே பயப்படுறவங்க எல்லாம் இனி என் முதுகுக்குப் பின்னாடி என்னை கிண்டல் பண்ணி பேசிட்டு இருக்கப் போறாங்க? என்னோட மூடையே ஸ்பாயில் பண்ணிட்ட. முதலில் நீ என்ன படிச்சிருக்க? அதை சொல்லு." என்று கோபமாக வினவினான் ஆதர்ஷ்.
 
Top