• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317

அத்தியாயம் - 5

"முதல்ல நீ என்ன படிச்சிருக்க சொல்லு." என்ற ஆதர்ஷின் வார்த்தை தீட்சண்யாவை வலிக்கச் செய்தது.

உள்ளுக்குள் சினம் பெருக, அவனை நிமிர்ந்து பார்த்தவள்," பிளஸ் டூ பெயில்." என்றாள்.

" பொய் சொல்லாத… இரு இன்விடேஷன்ல பார்க்கிறேன்." என்ற ஆதர்ஷ் வேகமாக அறைக்குள் சென்று அவனது கஃபோர்டில் தேடினான்.

அவன் பின்னே வந்தவளோ," இப்ப தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறீங்க? இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சு வச்சிருக்கணும்." என்று நக்கலாக கூற.

கஃபோர்டில் தலைப் புதைத்திருந்தவன், நிமிர்ந்து அவளை முறைத்து விட்டு மீண்டும் அதற்குள் தலையை விட்டுக் கொண்டான்.

சற்று நேரத்தில் அவன் தேடிய இன்விடேஷன் கிடைக்க. வேகமாக அதில் பார்வையை விட்டவனுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான்.
அவளது பெயருக்கு பின்பு எந்த டிகிரியும் இல்லை. அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷ்.

" என்ன ரொம்ப வருத்தமா இருக்கா? வருத்தப்படாதீங்க. இப்ப நினைச்சாலும் நாம பிரிஞ்சிடலாம். நீங்க டைவர்ஸ் வாங்கிட்டு, உங்களுக்கு பிடிச்ச மாதிரி படிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க." என்று அவள் சொல்லி முடிக்கக் கூட இல்லை, அதற்குள் ஆதர்ஷோ," லூசா நீ? கல்யாணம் என்ன விளையாட்டா? படிக்கலைன்னாலும் நீ தான் என் பொண்டாட்டி. அதை யாராலும் மாற்ற முடியாது. முதல்ல இந்த மாதிரி உளறதை நிறுத்திட்டு, இந்த இடத்தை விட்டு கிளம்பு. என்னை கொஞ்சம் நேரம் தனியா விடு. " என்றான்.

தீட்சண்யா ஏதோ கூற வர, " ப்ளீஸ் லீவ் மீ அலோன். ஜஸ்ட் கெட் அவுட்." என்று கூற.

அவளோ, அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினாள்.

'வீக் எண்ட்ல தான் இவர் வீட்ல இருப்பாரு. இவரோட மனம் விட்டு பேசி, அவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று தெரிஞ்சுக்கலாம் என்று பார்த்தால் இந்த பார்ட்டி வந்து எல்லாத்தையும் சொதப்பிடுச்சு. லஞ்சுக்கு போயிட்டு வந்து தலைவலி வந்தது தான் மிச்சம். இங்கே மொட்டு மொட்டுனு தனியா இருக்கிறதுக்கு பார்க்குகாவது போகலாம்.' என்று எண்ணி பெருமூச்சு விட்டவள் வெளியே சென்றாள்.

அங்கு வழக்கம் போல் சதானந்தம், பரமேஸ்வரி தம்பதியினர் அமர்ந்து இருக்க‌.

" ஹாய் ஆன்ட்டி… ஹாய் அங்கிள்…" என்று அவர்களுக்கு அருகே சென்றாள் தீட்சண்யா.

" எங்க நம்ம நிகில் குட்டி? அவனைக் காணோம்." ஊஞ்சல் பக்கம் பார்வையிட்ட படியே வினவினாள்.

" இன்னைக்கு வீக்கெண்ட். அவனோட அம்மா வீட்ல தான் இருப்பாங்க. அதனால அவன் வர மாட்டான். நீயும் வரமாட்டேன்னு நினச்சேன்." என்ற பரமேஸ்வரி அவளை கிண்டலாக பார்க்க.
' நானும் தான் வரமாட்டேன்னு நினைச்சேன். ஆனால் நாம நினைக்கிறதெல்லாமா நடக்குது. அவருக்கு தனிமை வேணுமாம். வேற என்ன பண்ண?' என்று உள்ளுக்குள் பெருமூச்சு விட்டவளோ," அவருக்கு ஒரு முக்கியமான ஆஃபிஸ் வொர்க் வந்துடுச்சு. அவர் லேப்டாப்போட போராடிட்டிருக்காரு. எனக்கு போர் அடிச்சது, அதான் நான் வந்துட்டேன். சரிங்க அங்கிள், ஆன்ட்டி நீங்க என்ஜாய் பண்ணுங்க. உங்கள நான் டிஸ்டர்ப் பண்ணலை."என்றவள் அவர்களை கேலி செய்து கொண்டே ஊஞ்சல் இருக்குமிடம் சென்றாள்.

***************************

ரூமில் இருந்து வெளியே வந்த ஆதர்ஷோ,"தீட்சண்யா." என்று அழைக்க…

அவளது மறுமொழி வராமல் இருக்கவும் பதட்டமாக ஒவ்வொரு இடமாக தேடினான். வீட்டில் எங்கும் அவள் இல்லை. நெற்றியில் வியர்வை சுரக்க,"ஓ காட்… கோவமா பேசுனேனு எங்கேயும் கிளம்பி போயிட்டாளா? ஏற்கனவே லூசு மாதிரி டைவர்ஸ் தரேன்னு சொன்னா. ஒரு வேளை இந்த சின்ன விஷயத்திற்காக கோச்சுக்கிட்டு இங்கிருந்து கிளம்பி போயிட்டாளா? இந்த ஊருக்கு வேற அவ புதுசாச்சே. இங்கே அவளுக்கு எதுவும் தெரியாதே. இப்போ என்ன பண்றது. ஒன்னும் புரியலையே." என்று புலம்பியவன், வேகமாக கதவை திறக்க.

ஆட்டோமேட்டிக் லாக் ஆகிருந்த கதவு திறக்கவில்லை. நெற்றியில் தட்டிக் கொண்டவன், தான் வைத்திருக்கும் கீயை தேடினான்.

பதட்டத்தில் அவன் கண்ணில் சிக்கவே இல்லை. திடீரென்று தான் இன்று வெளியே சென்றது ஞாபகம் வர, பாக்கெட்டில் இருக்கிறதா என்று பார்க்க, சாவியோ அங்கிருந்தது.

ஒரு வழியாக கதவைத் திறந்தவன், வெளியே சென்று அவளைத் தேடினான்.

முகம் முழுவதும் பதட்டத்துடன் ஒவ்வொரு இடமாக தேட, அவளோ பார்க்கில் ஒட்டு மொத்த சந்தோஷமும் முகத்தில் கூத்தாட ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாள்.

அதை பார்த்ததும் அவன் முகத்தில் ஒரு நிம்மதியும், அதே நேரத்தில் கோபமும் வந்து சென்றது.

அவளை முறைத்துக் கொண்டே வந்தவனோ, அங்கு அமர்ந்து இருந்த வயதானவர்களைப் பார்த்ததும் அவர்கள் அருகே சென்றான்.

" ஹாய் அங்கிள்… ஹாய் ஆன்ட்டி… நான் ஆதர்ஷ். ஐடி கம்பெனியில் வொர்க் பண்றேன். " என்று தன்னை அறிமுகபடுத்திக் கொண்டான்.

" ஓ… தெரியுமே தீட்சண்யாவோட ஹஸ்பெண்ட் தானே."என்று அவர்கள் கூற.

அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. " யா அங்கிள்… நானே தீட்ஷுவை பத்தி பேசலாம்னு தான் வந்தேன். அவ இன்னும் இந்த சிட்டி லைஃபுக்கு அப்டேட் ஆகலை. நீங்க கொஞ்சம் அவளைப் பாத்துக்கோங்க." என்று சொல்ல.

" நாங்க பாத்துக்குறோம் பா. நீ கவலைப்படாதே."என்று பரமேஸ்வரி கூற.

" ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி. வரேன் அங்கிள்." என்று இருவரிடமும் விடைபெற்றவன், நேராக தீட்சண்யா இருக்குமிடம் வந்தான்.

தீட்சண்யாவோ, அவன் பார்க்கிற்கு வந்ததிலிருந்து சதானந்தம், பரமேஸ்வரியிடம் பேசுவது வரை கவனித்துக் கொண்டு தானிருந்தாள்.

அவளருகே வந்தவன் தீட்சண்யா ஆடுவதற்கு சிரமப்படுவதை பார்த்து அவனே ஆட்டி விட.

ஆனந்தமாக ஆடிக் கொண்டிருந்தாள் தீட்சண்யா. ஆனால் அந்த ஆனந்தம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சற்று நேரத்திலேயே அவனுக்கு ஒரு ஃபோன் கால் வந்துவிட‌… ஃபோன் பேசுவதற்காக சற்று நகர்ந்து சென்றவன், மீண்டும் வரவே இல்லை. இவளும் வருகிறானா என்று திரும்பித் திரும்பி பார்க்க. அவனோ வருவதாகவே இல்லை.

இவ்வளவு நேரம் மலர்ந்திருந்த அவளது முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. முக வாட்டத்துடன் எழுந்தவள், நைட் டின்னர் செய்யவேண்டுமென்று பெருமூச்சுடன் கிளம்பினாள்.

அவளைப் பார்த்த அந்தப் பெரியவர்களோ, " கவலைப்படாதே தீட்ஷு. எல்லாம் சரியாகிவிடும்." என்று ஆறுதலாக கூறினர்.

அவர்களும் இவ்வளவு நேரம் நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்கள்.

தீட்ஷு சின்ன பெண்‌. புதிதாக திருமணமானவள். கணவன் தன்னோடு அதிக நேரம் இருக்க வேண்டும் என்று எண்ணிருக்க. ஆதர்ஷோ வேலை, வேலை என்று இருக்கிறான் என்பதும் அவர்களுக்குப் புரிந்தது. அவனுக்கு தீட்ஷு மேல் அக்கறை இருப்பதால் சீக்கிரம் புரிந்து கொள்வான் என்று எண்ணியவர்கள் அவளுக்கு ஆறுதல் அளித்தனர்.

தீட்சண்யாவும் முயன்று அவர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு வீட்டிற்கு சென்றாள்.

அவன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டே டின்னர் செய்து முடித்தாள்.

இன்னும் ஆதர்ஷ் வந்தபாடில்லை. சரி அவன் வருவதற்குள் ரெஃப்ரஷ் ஆகிட்டு வரலாம் என்று அறைக்குள் சென்றாள்‌.

தீட்சண்யா சிறு குளியல் போட்டு விட்டு வருவதற்குள் ஆதர்ஷ் உணவருந்திக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்தவளோ, ' நம்ம வர வரைக்கும் கூட வெயிட் பண்ணாமல் சாப்பிடுறாரே.' என்று மனதிற்குள் புலம்பியவள், மௌனமாக அவனருகே வந்தமர்ந்து தட்டு எடுத்து வைத்து உணவருந்தினாள்.

சாப்பிட்டு முடித்ததும் எல்லாவற்றையும் எடுத்து வைக்க. ஆதர்ஷோ பாத்திரங்களை கழுவினான்.

" நான் கழுவுறேன். நீங்க போங்க." என்று அவள் தடுக்க.

" டெய்லி நீ தானே செய்யுற. ஆபீஸ் போறதால என்னால எதுவும் செய்ய முடியாது. பட் வீக்கெண்ட் கண்டிப்பா நான் ஹெல்ஃப் பண்ணுவேன். இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. நீ போ." என்று அவளை வற்புறுத்தி அனுப்பி வைத்தான்.

ஹாலில் வந்து அமர்ந்த தீட்சண்யாவோ,' இவர் ஒரு நேரம் மனசு கஷ்டப்படும் படி ஏதாவது செய்யறார், ஒரு நேரம் சந்தோஷப்படவும் வைக்கிறார். இவரோட கேரேக்டரையே புரிஞ்சுக்க முடியலையே.' என்று ஆதர்ஷைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்திருக்க.

பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வந்த ஆதர்ஷோ தீட்சண்யாவிற்கு அருகில் அமர்ந்தவன், " கிரிக்கெட் பார்க்கலாமா?" என்று அவளைப் பார்த்து வினவியவாறே டீவியை ஆன் செய்தான்.

தனக்குள் யோசித்துக் கொண்டிருந்த தீட்சண்யாவோ அவன் கூறியதை கவனிக்கவில்லை.

டிவியை போட்டவன் அவ்வப்போது அவளை பார்த்தான். 'ஒருவேளை இவளுக்கு கிரிக்கெட் பிடிக்கவில்லையோ? நமக்காகத் தான் சும்மா உட்கார்ந்து இருக்கிறாளோ?' என்று எண்ணிய ஆதர்ஷ், " தீட்சண்யா." என்று சத்தமாக அழைக்க.

" ஹான்…" என்று யோசனையிலிருந்து மீண்டவள்," என்ன?" என்பது போல் பார்த்தாள்.

" தீட்ஷு நான் மேட்ச் முடியவும் தான் வருவேன்.உனக்கு தூக்கம் வந்தா போய் படு."

"ம்." என்றவளோ மனதிற்குள், ' நாம அவர் பக்கத்துல இருக்கிறது பிடிக்கல போல. அதான் இன்டைரக்டா இந்த இடத்தை விட்டு போக சொல்றாரு.' என்று எண்ணி கொண்டே அறைக்குள் சென்று உறங்க முயன்றாள். ஆனால் அவளுக்கு தூக்கம் வருவேனா என்று இருந்தது. " இது சரி வராது."என்றவள் எழுந்து டேபிள்சைட் லாம்ப்பை போட்டுக் கொண்டு டைரியை எழுத ஆரம்பித்தாள்.

' மெட்டாவெர்ஸில் காவ்யா

மாடியில் மெட்டாவெர்ஸிற்காக பெரிய ஹால் உருவாக்கப்பட்டிருந்தது. எல்லாம் ஷீத்தல் படிப்பிற்காக என்று காவ்யாவை சமாதானம் செய்து நிரஞ்சன் செய்தவை.

அங்கு தான் ஸ்மார்ட் கிளாஸை போட்டுக் கொண்டு ஷீத்தல் சென்றாள்‌. மெட்டாவெர்ஸிற்காக பவுண்டரி லைனை செட் செய்தவள், மெட்டாவெர்ஸ் உலகத்திற்கு சென்றாள்.

அந்த உலகத்தில் நடந்துக்கொண்டிருக்கும் போது நிஜ உலகத்தில் எங்காவது இடித்துக் கொள்ளவோ கீழே விழவோ வாய்ப்பியிருக்கு. பவுண்டரி லைனை செட் செய்தால், நாம் அந்த லைனை விட்டு வெளியே வரும்போது மெட்டாவெர்ஸ் உலகத்திலிருந்து நாம் வெளியே வந்துவிடுவோம். ஸ்மார்ட் கிளாஸில் இருக்கும் நான்கு கேமரா மூலம் நிஜ உலகத்தை பார்க்கலாம். மீண்டும் பவுண்டரி லைன் உள்ளே வந்தால் மெட்டாவெர்ஸ் உலகத்திற்கு வந்துவிடாலாம்.

மெட்டாவெர்ஸ் உலகத்திற்குள் ஷீத்தலின் அவதார் வந்தது. நிஜத்தில் அவள் அந்த பெரிய ஆள் இல்லாத ஹாலில் தான் இருந்தாள்.

ஷீத்தலின் அவதார் ராயல் ஒன் ஹோட்டலிற்குள் சென்றது. அங்கு விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல… அங்கோ தர்ஷினியின் அவதார் ஷீத்தலின் அவதாரைப் பார்த்ததும் வேகமாக அவள் அருகே வந்தாள்.

"ஷீத்தல்… யூ லுக் கார்ஜியஸ். அம்மா எங்க டா?"

"தேங்க்ஸ் ஆன்ட்டி. உங்களுக்கு தெரியாதது இல்லை அம்மா பத்திதான் தெரியுமே. அவங்க வரலை.நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க ஆன்ட்டி."

"சரி விடு. நீ வந்ததே சந்தோஷம். வா வா மேடையில் இருக்கும் தம்பியை பார்க்கலாம்." என்ற தர்ஷினி ஷீத்தலின் கையை பிடித்து அழைத்துச் செல்ல.

நிஜத்திலும் ஷீத்தலின் ஒரு கை பாதி தூரம் உயர்ந்திருக்க தனியாக நடந்து சென்றாள். அதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் காவ்யா.

ஷீத்தலின் அவதார் தொட்டிலில் இருந்த தம்பியை ஆசையாக பார்க்க.

குழந்தை அவதார் அப்படியே உண்மையான குழந்தையை போல் கண்ணை விரித்து ஷீத்தலை பார்ப்பதும், சிரிப்பதும் உடனே அழ தயாராவதுமாக முகபாவனையை மாற்றிக் கொண்டிருந்தது.

"ஆன்ட்டி… ஹீ இஸ் சோ கியூட். என்ன நேம்?"

"யாதவ்"

"நைஸ் நேம்."

"தம்பியை பிடிச்சிருக்கா?"

"ரொம்ப பிடிச்சிருக்கு ஆன்ட்டி. இனி யாதவை பார்க்க உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவேன்."

"மெட்டாவெர்ஸ்ல நம்ம வீடு பக்கத்தில் தானே இருக்கு. நீ அடிக்கடி வரணும். அக்கா தான் என்னை‌ புரிஞ்சிக்கலை. நீ வந்தது மனசுக்கு அவ்வளவு ஆறுதலா இருக்கு."

அமைதியாக புன்னகைத்தாள் ஷீத்தல்.

"சரி போய் சாப்பிடு. ஆன்ட்டி கெஸ்ட் எல்லார் கிட்டையும் பேசிட்டு வந்து உன்னோட ஜாயின் பண்ணிக்கிறேன்." என்றாள் தர்ஷினி.

முன்பே எடுத்து வந்திருந்த உணவை கையில் எடுத்தாள் ஷீத்தல். இங்கு அவள் சாப்பிட மெட்டாவெர்ஸில் அவளின் அவதார் சாப்பிட்டு கொண்டிருந்தது.

கடைசியாக யாதவின் கன்னத்தை லேசாக கிள்ளி முத்தம் கொஞ்சிய ஷீத்தல் தர்ஷினியிடமிருந்து விடைப்பெற்று ராயல் ஒன் ஹோட்டலிலிருந்து வெளியே வந்தாள்.

ஸ்மார்ட் கிளாஸை கழட்டி நிஜ உலகத்திற்கு வந்த ஷீத்தல் கீழே சென்றாள்.

டைனிங் டேபிளில் காவ்யா, நிரஞ்சன் சாப்பிட்டுக் கொண்டிருக்க. அவர்கள் அருகில் சோர்வாக வந்து உட்கார்ந்தாள் ஷீத்தல்.

"ஏன் டா இவ்வளவு டயர்டா இருக்க?" என்றுக் கேட்டார் நிரஞ்சன்.

"டாடி நான் பங்க்ஷன் அட்டன் பண்ணிட்டு வரேன். ஐ எம் சோ டயர்டு." என்றாள் ஷீத்தல்.

"நாங்களாம் ரெண்டு மணி நேரம் மூணு மணி நேரம் பயணம் செஞ்சு பங்ஷனுக்கு போவோம். அங்க எல்லோரையும் பல மாசம் கழித்து பார்த்து பேசுறப்ப மனசுக்கு அவ்வளவு நிறைவா இருக்கும். ஊர் கதை பேசுனா எங்க டயர்டெல்லாம் பறந்தே போயிடும். மாடி ஹாலுக்கு போயிட்டு வந்துட்டு டயர்டா இருக்குன்னு உங்க பொண்ணு சொல்லுறதை கேட்டா சிரிப்பா வருது." என்றாள் காவ்யா.

ஷீத்தலின் முகம் மாறியது. நிரஞ்சன் காவ்யாவை குற்றம் சொல்லும் பார்வை பார்க்க.

நேற்று நிரஞ்சன் சொல்லிய அறிவுரை நினைவுக்கு வர. காவ்யா ஷீத்தலிடம்," ஷீத்தல் உனக்கு பிறந்த நாள் வருது. நம்ம இரண்டு பேரும் ஷாப்பிங் போலாம் வர்றியா." என்றாள்.

"மம்மி டிரஸ் எடுக்க எதுக்கு வெளிய போகணும். வாங்க நம்ம மெட்டாவெர்ஸ்ல ஷாப்பிங் பண்ணலாம். அங்க என்னோட அவதார் எல்லா டிரெஸ்சும் போட்டு காண்பிக்கும். அதுல எனக்கு எது நல்லா இருக்கும்னு கண்டுபிடிச்சிடலாம். அதையே ஆர்டர் பண்ணா நம்ம வீட்டுக்கே டெலிவரி பண்ணிடுவாங்க. அவதாருக்கு மட்டும் இல்லை நமக்கும் மெட்டாவெர்ஸ்ல டிரஸ் வாங்கலாம்." என்ற ஷீத்தல் காவ்யாவை மெட்டாவெர்ஸிற்கு அழைத்து செல்ல தயாராக.

காவ்யா மறுத்து பேச நினைக்க. நிரஞ்சன் அவளை ஷீத்தலோடு செல்லுமாறு செய்கை செய்தான். வேறு வழி இல்லாது காவ்யா ஷீத்தலோடு மெட்டாவெர்ஸ் சென்று அவளுக்கு பிடித்த டிரஸை ஆர்டர் செய்துட்டு வந்தாள்.

"நிரஞ்சன்… நான் அவளோடு ஃப்ரண்ட்லியா மூவ் பண்ண தான் நினைக்குறேன். ஆனா ஷீத்தல் இந்த அளவுக்கு மெட்டாவெர்ஸ்ல அடிக்ட் ஆகியிருப்பானு நான் எதிர்ப்பார்க்கலை. எதுக்கு எடுத்தாலும் மெட்டாவெர்ஸ் மெட்டாவெர்ஸ்னு சொல்லிட்டு இருக்கா. வெளிக்காற்றை சுவாசிப்பதே இல்லை. எப்பவும் நாலு சுவருக்குள்ளே இருக்கா. இது கண்டிப்பா ஷீத்தலுக்கு நல்லதில்லை." என்ற காவ்யாவிற்கு ஷீத்தலை எப்படி மெட்டாவெர்ஸ் அடிக்டிலிருந்து வெளிக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை‌.'

அடுத்து என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்த தீட்சண்யா அப்படியே உறங்கி விட்டாள்.

****************************

மேட்ச் முடித்துவிட்டு வந்த ஆதர்ஷ், கட்டிலில் தீட்சண்யாவை காணாமல் புருவம் முடிச்சிட சுற்றிப் பார்த்தான்.

தீட்சண்யாவோ, ரைட்டிங் டேபிளில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

லேசான புன்னகையுடன் வந்தவன், அவள் தலை கவிழ்த்திருந்த இடத்தில் இருந்த டைரியை எடுத்து மூடி வைத்து விட்டு, அவளை லாவகமாக தூக்கியவன் பெட்டில் படுக்க வைத்தான்.

"தூங்குமூஞ்சி." என்று முணுமுணுத்தவன், அவள் தலையை லேசாக வருடி விட்டு உறங்க முயன்றான்.

 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
ஆதர்ஷ புரிஞ்சுக்கிடுறது கஷ்டம் தான் 🤔🤔🤔🤔🤔தீட்சண்யா கதை ரெம்ப அட்வான்ஸ்டா இருக்கு டைம் ட்ராவெல்லிங் போல 🙄🙄🙄🙄🙄🙄
 

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
ஆதர்ஷ புரிஞ்சுக்கிடுறது கஷ்டம் தான் 🤔🤔🤔🤔🤔தீட்சண்யா கதை ரெம்ப அட்வான்ஸ்டா இருக்கு டைம் ட்ராவெல்லிங் போல 🙄🙄🙄🙄🙄🙄
Thank you so much sis 💕
 
Top