• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 7

மனம் முழுவதும் அந்த பெரியவர்களின் காதலை நினைத்து மகிழ்ச்சியும், அதே நேரத்தில் ஏக்கமும் நிறைந்திருக்க. வீட்டிற்குள் நுழைந்தாள் தீட்சண்யா.

அங்கு சோஃபாவில் அமர்ந்து இருந்த ஆதர்ஷோ, "எனக்கு முன்னாடி பார்க்கிலிருந்து கிளம்பிட்டு இப்போ தான் வர?" என்று வினவ.

"பரமேஸ்வரி ஆன்ட்டி வீட்டுக்கு போயிட்டு வரேன்." என்றாள்.

" ஓ…" என்றவன் நன்றாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு, " தீட்ஷு ஃபைனலா என்ன சொல்ற? நாளைக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ளாஸுக்கு போறியா? இல்லையா?" என்று அவளைப் பார்த்து வினவினான்.

ஆழ்ந்த பெருமூச்சு விட்ட தீட்சண்யா," ஒன் மினிட்." என்று விட்டு அறைக்குள் சென்றாள்‌.

திரும்பி வந்தவளது கையில் ஒரு பேப்பரும், பேனாவும் இருந்தது.

" என்ன?" என்பது போல் ஆதர்ஷ் பார்க்க.

" முதல்ல இதை பிடிங்க." என்றாள் தீட்சண்யா.

அதை வாங்கிய ஆதர்ஷோ, " சரி இப்போவதாவது சொல்லு… இது என்ன?" என்று அவளைப் பார்க்க.

" உங்க ஃபோன் எங்கே? என்று கேட்ட தீட்சண்யாவிடம், அமைதியாக எடுத்து நீட்டினான்.

அதை வாங்கியவள், " இப்போ உங்களுக்கு பத்து நிமிஷம் டைம். க ங ச தப்பில்லாமல் எழுதணும். நீங்க தப்பில்லாமல் கரெக்டா எழுதிட்டா, நான் நாளையிலிருந்து ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸுக்கு போறேன்."

" ஓகே டன். இது எல்லாம் எனக்கு சப்ப மேட்டர்." என்றவன் எழுதத் தொடங்கினான்.

கடகடவென அவன் எழுதிய வேகத்தைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சியானாள் தீட்சண்யா.

ஆனால் திடீரென்று ஆதர்ஷிற்கு ஒரு அரும்பெரும் சந்தேகம் வந்தது. 'ய' விற்கு பிறகு 'ர' வருமா? இல்லை 'ர' விற்கு பிறகு 'ய' வருமா? என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

"தீட்ஷூ… ஆர்டர்வைஸா தான் எழுதணுமா? இல்லை மாத்தி, மாத்தி எழுதலாமா? என்று வினவ.

" அதெல்லாம் கூடாது. ஆர்டரா தான் எழுதணும்." என்றாள் தீட்சண்யா.

" ஓ…" என்றவனோ அடுத்து எதுவும் செய்யாமல் திருதிருவென முழித்திருக்க.

தீட்சண்யாவோ, அடக்க மாட்டாமல் நகைத்தாள்.

" என்ன சிரிப்பு?" என்று அவளைப் பார்த்து முறைத்தான்.

" அதுவா தி க்ரேட் மிஸ்டர் ஆதர்ஷ். மிஸ்டர் பர்பெக்ட்… ஒரு க, ங, ச எழுதத் தெரியாமல் இருக்குறதைப் பார்த்து கொஞ்சம் பாவமா தான் இருக்கு." என்றவள் மீண்டும் பொங்கி சிரிக்க…

" உன்னை…" என்ற ஆதர்ஷ் அவளைத் துரத்த… அவளோ அவனைப் பார்த்து நாக்கை துருத்தி பழிப்புக் காட்டி விட்டு ஓடினாள்.

அவனுக்கு சற்று நேரம் ஆட்டம் காட்டியவள், கால் சிலிப்பாகி கீழே விழ…

" ஹேய் தீட்ஷு பார்த்து…" என்று அவளைப் பிடிக்க வந்த ஆதர்ஷும் அவள் மேலே விழுந்தான்.

இருவரது விழிகளும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க… ஆதர்ஷோ மற்ற எல்லாத்தையும் மறந்தவன், அவளது இதழ் அழைக்க… அதை முற்றுகையிட முயன்றான்.

பதறிய தீட்சண்யாவோ, முகத்தை திருப்ப… அவளது செவியில், முதல் முத்தம் பதிந்தது. அது மட்டுமல்லாமல் அன்று பார்ட்டியில் அவனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்,' ஆதர்ஷுக்கு போயும், போயும் இந்த பட்டிக்காடா மேட்ச்?' என்று கூறியது ஒலிக்க.

அவனை வேகமாக தள்ளி விட்டு, எழுந்து அமர்ந்தாள். மனதிற்குள்ளோ, ' நமக்குள்ள நிறைய மனஸ்தாபங்கள் இருக்கு. அதை எல்லாம் பேசி, சரி பண்ணதுக்கப்புறம் தான் மத்ததெல்லாம்…' என்று எண்ணினாள்.

ஆதர்ஷோ, ஆழ்ந்த மூச்சு விட்டவன் எழுந்து நின்று அவளைப் பார்த்து சிரித்தான்.

இதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்ட தீட்சண்யாவோ, " இங்க பாருங்க… தாய்மொழியான தமிழ் தெரியாமல் இருக்கிறது உங்களுக்கு அசிங்கமா இல்லையா? நீங்க முதல்ல தமிழ் கத்துக்கிட்டு வாங்க. அப்புறமா நான் இங்கிலீஷைக் கத்துக்குறேன்." என்றவளோ அறைக்குள் சென்றாள். "எனக்கு தமிழ் நல்லாவே தெரியும். நீ திடீர்னு எழுத சொன்னதும் கொஞ்சம் குழம்பிடிச்சு." என்று அவன் கூற.

அதை காதில் வாங்காமல் கதவை அடைத்தாள் தீட்சண்யா.

*************************

மறுநாள் வாரத்தின் முதல் நாள் அல்லவா? சோம்பலாக விடியும் பொழுது, பின்பு வேகமாக ஆரம்பிக்கும். ஆதர்ஷுற்கும் அப்படி தான் விடிந்தது. தாமதமாக எழுந்து விட்டு, பரபரவென அலுவலகத்திற்கு கிளம்பினான்.

தீட்சண்யாவோ, அவனுக்கு தேவையானவற்றை செய்து வைத்து விட்டு, துணி காயப் போடுவதற்காக மாடிக்குச் சென்றாள்.

" ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…" என்று பாடலுக்கு ஒரு பெண் ஆடிக் கொண்டிருந்தாள்.

அதை பார்த்த தீட்சணாயா முகத்தை சுளிக்க.

அந்தப் பெண்ணோ, அதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை.

துணியை காய போட்டுவிட்டு கீழே இறங்கிய தீட்சண்யாவோ, ' என்ன இப்படி இருக்காங்க. கல்யாணம் ஆகிடுச்சு. இப்படி புடவை விலகுறதை கூட கவனிக்காமல் ஆடுறாங்க.' என்று எண்ணியவளுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது.

'சில நாட்களுக்கு முன்பு நிகிலன் அம்மாவோடு சேர்ந்து நம்மளை கேலி செய்தது இந்த பெண் தானே. செகண்ட் ப்ளோர்ல இருக்குற நர்மதானு பரமு ஆன்ட்டி கூட சொன்னாங்களே.' என்று எண்ணியவாறே கீழே இறங்கினாள்.

***********************
ஆஃபீஸுக்கு சென்ற ஆதர்ஷுக்கோ வேலைகள் சூழ்ந்து கொள்ள. மதிய உணவு நேரம் வந்ததைக் கூட கவனிக்காமல் வேலையில் ஆழ்ந்தான்.

" ஆதி… லஞ்ச் டைம் ஸ்டார்ட் ஆகிடுச்சு. சாப்பிட வரலையா?" என்று தருண் வினவ.

" ஓ… டைமாகிடுச்சா… கவனிக்கவே இல்லை. டூ மினிட்ஸ் தருண்." என்ற ஆதர்ஷ் சிஸ்டமை ஷட் டவுன் செய்து விட்டு, அவனுடன் கிளம்பினான்.

ஆதர்ஷ் டிஃபன் பாக்ஸை ஓபன் பண்ணவும் வெஜிடபிள் பிரியாணியின் வாசம் வீச…

" ஆதி… என்ன லஞ்ச்? வாசமே ஆளைத் தூக்குது. எனக்கு கொஞ்சம் கொடு." என்று ஆளாளுக்கு கேட்க.

எல்லோருக்கும் கொஞ்சம், கொஞ்சம் எடுத்து வைத்தான் ஆதர்ஷ்.

சாப்பிட்டுவிட்டு எல்லோரும் சூப்பராக இருக்கு என்று பாராட்ட.

தருணோ, "ஆதி… சிஸ்டருக்கு இங்கிலீஷ் பேச தெரியலைன்னாலும், நல்ல சமைக்கிறாங்க.பேசாம நம்ம ஆஃபிஸ்லயே கேட்டரிங் வச்சிடலாம்." என்று கேலி செய்தான்.

அதைக் கேட்ட ஆதர்ஷின் முகம் மாறியது.

மற்றவர்கள் எல்லோரும் அதைக் ஜாலியான பேச்சாக எண்ணி, " ஆமாம் ஆதி…இங்கே கேண்டின் வச்சா, நாங்க லஞ்ச் எடுத்துட்டு வராமல், இங்கேயே நல்லா சாப்பிடுவோம்." என்று சிரித்து விட்டு எழுந்து சென்றனர்.

அமைதியாக கை கழுவும் ஆதர்ஷைப் பார்த்த பவ்யாவோ, " ஃபீல் பண்ணாத ஆதி. நீ பேசாம உன் கிட்ட ப்ரோபஸ் பண்ண என் ஃப்ரெண்ட் அக்ஷராவையே கல்யாணம் பண்ணியிருக்கலாம். அவ தான் உனக்கு பர்ஃபெக்ட் மேட்ச்." என்று கூறினாள்.

அவள் கூறியதற்கு எதுவும் பதில் சொல்லாமல் தனது கேபினுக்கு வந்து சிஸ்டத்திற்கு முன்பு அமர்ந்தான் ஆதர்ஷ்.

மனதிற்குள்ளோ, ' அவசரப்பட்டுட்டோமோ… அம்மா, அப்பா யோசிச்சுதான் முடிவு எடுப்பாங்கனு விசாரிக்காமல் விட்டது தப்போ… கொஞ்சம் நிதானமாக விசாரித்து இருக்கலாமோ?' என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்ததவன் அமைதியாக அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

தீட்சண்யாவோ, அவனது லஞ்ச் பேக்கை எடுத்துக் கொண்டு சென்றாள். லஞ்ச் பாக்ஸை தேய்க்க எடுத்து போடுவதற்காக திறந்தாள். லஞ்ச் பாக்ஸோடு, புது ஃபோன் ஒன்றும் இருந்தது.

மனதிற்குள்ளோ, ' ஒரு ஃபோன் இருக்கும் போதே, என் கிட்ட பேசுறது இல்லை. இதுல இன்னொரு ஃபோன் வேறையா? கிழிஞ்சது…' என்று எண்ணிக் கொண்டு அவனிடம் சென்று நீட்டினாள்.

அதை வாங்காமல், " இது உனக்கு தான்." என்றான்.

" ஸ்மார்ட் போன் எனக்குத் தேவை இல்லை." என்ற தீட்சண்யா ஃபோனை சோபாவில் வைத்து விட்டு உள்ளே செல்ல முயன்றாள்.

அவள் முன்னே வந்து நின்ற ஆதர்ஷோ, "இங்க பாரு தீட்ஷு… நான் இப்போ க, ங, ச தப்பில்லாமல் எழுதுறேன். அது மட்டுமில்லாமல் தமிழில் உள்ள எல்லா எழுத்துக்களையும் வேணும்னாலும் எழுதுறேன். உனக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ளாசுக்காக வெளில போய் படிக்க விருப்பம் இல்லைன்னா விடு. ஆன்லைன் க்ளாஸ்ல கத்துக்கலாம். அதுக்கு தான் இந்த ஃபோன்." என்று சொல்ல.

" நான் ஸ்மார்ட் போன் யூஸ் பண்ண மாட்டேன்."

"சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்காத தீட்ஷு‌‌. இந்த சிட்டில இங்கிலீஷ் பேசாமல் சரி வராது புரிஞ்சுக்கோ." என்று தன்மையாக எடுத்து சொன்னான்.

" நான் இங்கிலீஷ் கத்துக்க மாட்டேன்."

" உன்னால எனக்கு எவ்வளவு பிரச்சனை தெரியுமா? என்னோட பிரஸ்டீஜையே டோட்டலா டேமேஜ் பண்ணிட்ட.இன்னைக்கு கூட உனக்கு இங்கிலீஷ் தெரியலைன்னு என்னை கேலி பண்ணாங்க தெரியுமா? எனக்கு ஒரே அசிங்கமா போயிடுச்சு."

" இங்கிலிஷ் தெரியாம இருக்கிறது ஒன்னும் அசிங்கம் கிடையாது. எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாமலே நேத்து ஆர்டர் பண்ணீங்களே, அது தான் தப்பு. ஒரு வைஃப்க்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்காம இருக்கிறது தான் அசிங்கம். கல்யாணத்துக்கு முன்னாடியே ஒவ்வொருத்தவங்க வருங்கால மனைவிக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிறாங்க. அப்படி இல்லைன்னாலும் கல்யாணத்துக்கு அப்புறமாவது தெரிஞ்சுக்க முயற்சி பண்ணணும். அட்லீஸ்ட் நான் சாப்பிடுவதை நீங்கள் பார்த்திருந்தால் கூட நீங்க கண்டு பிடித்திருக்கலாம். எங்க சாப்பிடும் போது ஃபோன்ல தான உங்கள் கவனம் இருக்கு." என்று பல நாளாக இருந்த கோபத்தை எல்லாம் கொட்டியவள், பால்கனிக்கு சென்று விட்டாள்.

டென்ஷனாக இருந்த தீட்சண்யா பார்வையை வெளியே அலைய விட.
அங்கு கேட்டருகே நிகிலனின் சகோதரி, சுற்றும், முற்றும் பார்த்துக் கொண்டே ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.

' இந்த பொண்ணு அவங்க அம்மாவோடவே வந்துட்டு, அவங்களோடவே போய்டுமே. யார் கிட்டயும் பேசாதே. இன்னைக்கு என்னடான்னா ஒரு பையன் கிட்ட, அதுவும் யாருக்கும் தெரியாமல் பேசிட்டு இருக்கா…' என்று யோசனையாகப் பார்த்தாள்.
 
Top