• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 8

எப்போது போல காலையில் எழுந்த தீட்சண்யா, ஆதர்ஷுக்கு டிஃபன், லஞ்ச் எல்லாம் ரெடி செய்து டேபிளில் வைத்தாள்.

குளித்து தயாராகி வந்த ஆதர்ஷோ, தீட்சண்யாவை கண்டுக் கொள்ளாமல்
ஆஃபிஸுக்கு கிளம்பி சென்று விட்டான்.


அவளோ செய்து வைத்த டிஃபனையும், லஞ்ச் பாக்ஸையும் சற்று கோபத்துடன் பார்த்தவள், எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு, பாத்திரங்களை கழுவினாள்.

காலிங் பெல் சத்தம் கேட்க…

' ஒரு வேளை அவர் தான் திரும்ப வந்துட்டாரோ.' என்று எண்ணி, மகிழ்ந்தவள், வேகமாக கைகளைத் துடைத்துக் கொண்டு வந்து கதவை திறந்தாள்.

ஆனால் அங்கிருந்ததோ ராகவி. தீட்சண்யாவின் முகத்தில் ஏமாற்றம் பரவ, அதை எதிரே நின்றிருந்த ராகவி கவனிப்பதற்குள் மறைத்து புன்னகைத்தாள்.

" வாங்க கா." என்று உள்ளே அழைக்க.

" பிஸியா இருக்கீங்களா தீட்ஷு. நான் வேணும்னா அப்புறம் வரட்டுமா?" என்று தயக்கமாக கேட்டாள்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லைக்கா. நீங்க வாங்க…" என்று கதவை திறந்து விட்டாள்.

" சாப்பிடுங்க கா."

" இல்லை இப்போ தான் நான் சாப்பிட்டேன்."

" ஓ… அப்போ இருங்க கா.காஃபி போட்டுட்டு வரேன்." என்றவள், இருவருக்கும் காஃபி எடுத்துக் கொண்டு வந்தாள்.

ஒரு வாய் அருந்திய ராகவி, " தீட்ஷு எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?" என்று தயங்கித் தயங்கி கேட்க.

" என்ன விஷயம் சொல்லுங்க கா?"

" அது வந்து… பரமு ஆன்ட்டி சொன்னாங்க… நிகிலன் இப்போ ரொம்ப ஹாப்பியா இருக்கான். அவனோட டிஃப்ரஷன் கூட குறைஞ்சிடுச்சு. அதுக்கு நீதான் காரணம்னு சொன்னாங்க. அதே போல என் பையன் இப்போல்லாம் ஒழுங்கா யார் கிட்டேயும் பேசுறதே இல்லை. எப்ப பார்த்தாலும் ஃபோன்ல விளையாடுறதே வேலையா வச்சிட்டுருக்கான்.

அவன் நல்லா படிச்சிட்டு, ஆக்டிவா இருந்தான். இந்த கொரோணா வந்து, லாக்டவுன் போட்டதிலிருந்து இவனோட ஆக்டிவிட்டிஸே மாறிடுச்சு. எப்ப பாரு ஃபோன் தான் யூஸ் பண்றான். இவர் கிட்ட சொன்னா எல்லாம் பிள்ளைகளும் இப்படித்தான் இருக்காங்க. நீ சும்மா இருன்னு சொல்றாரு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. நீ தான் அவனை பழைய படி மாத்தணும்." என்றவர் கண்கலங்க அவளது கையை பற்ற.

" கவலைப்படாதீங்க கா. அவன் ஸ்கூல் விட்டு வந்ததும் நான் வீட்டுக்கு வரேன். அவன் கிட்ட பேசினாலே எல்லாம் சரியாகிடும். நான் பேசி புரிய வைக்கிறேன்." என்று ஆறுதலாக கூறினாள் தீட்சண்யா.

" ரொம்ப தேங்க்ஸ் தீட்ஷு… " என்று விட்டு ராகவி அவர் வீட்டிற்கு கிளம்பினார்.

தீட்சண்யா டைரியை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

'மெட்டாவெர்ஸில் காவ்யா

முக்கியமான ஃபைல்களை எடுத்துக் கொண்டு காரில் இருந்து கீழே இறங்கினாள் காவ்யா. அவளை நக்கலாக பார்த்தனர் அங்கிருந்த அனைவரும். அதை அவள் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. உலகமே ஒரு வழியில் செல்லும் போது அது தப்பு என்று வேறு வழியில் அழைத்து செல்ல நினைக்கும் காவ்யாவை எல்லோரும் பைத்தியமாக தான் பார்ப்பார்கள்.

காவ்யாவின் முறை வரும் வரை அமைதியாக காத்திருந்தாள். அவள் பேரையும், கேஸையும் சொல்லவும் நீதிபதி முன் சென்று நின்றாள் காவ்யா.

"சார், எல்லாமே முன்னாடியே சொன்னது தான். இந்த உலகத்துக்கு மெட்டாவெர்ஸ் தேவை இல்லை. அது மக்கள் இனத்தை அழிச்சிட்டே வருது. அதில் உள்ள குறைகளை கருத்தில் கொண்டு மெட்டாவெர்ஸை முதலில் இந்தியாவில் தடை செய்ய வேண்டும்." என்றாள் காவ்யா.

"மெட்டாவெர்ஸ் இல்லாதப்ப கூட நீங்க சொல்லும் குற்றம் நடந்துக்கிட்டு தான் இருக்கு. மெட்டாவெர்ஸ் பயன்படுத்துவதால் மட்டும் ஏற்படும் குற்றங்களுக்கு ஆதாரம் இருந்தா தாங்க." என்றார் நீதிபதி.

முதலில் மெட்டாவெர்ஸில் தனியாக பேசும் இளைஞர்கள் பின் மெட்டாவெர்ஸ் இல்லாமலும் தனியாக பேசும் வீடியோ. வீட்டில் உள்ளவர்களிடம் கூட பேசமுடியாமல் கஷ்டப்படும் பலரின் வீடியோவை தந்தாள் காவ்யா.

அதை எல்லோரும் பார்க்க.

"அப்ஜக்ஷன் யுவர் ஹானர்" என்றார் எதிர்கட்சி வக்கீல்.

"என்ன?" என்றார் நிதிபதி.

"ஐயா… என்கிட்டையும் சில வீடியோ இருக்கு. அதையும் நீங்க பார்க்கணும்." என்றார் எதிர்கட்சி வக்கீல்.

அந்த வீடியோவில் எல்லோரும் மகிழ்ச்சியாக மெட்டாவெர்ஸில் படிப்பது, வேலை செய்வது பின் குடும்பத்துடன் சிரித்து பேசுவது போல் வீடியோ முடிகிறது‌.

"சார்… இது ஸ்கிரிப்ட்டட் வீடியோ போல இருக்கு. உண்மையில் யாரும் மெட்டாவெர்ஸ் பயன்படுத்திட்டு இவ்வளவு சந்தோஷமா இருப்பதில்லை. அதிலிருந்து வெளியில் வரும்போது எல்லோருக்கும் சோர்வும் தலைவலியும் தான் கிடைக்கும்."

"நீதிபதி அவர்களே அப்போ எதிர்கட்சி சமர்ப்பித்த வீடியோவும் ஸ்க்ரிப்ட்டட்னு சொல்லலாம்."

"நோ யுவர் ஹானர். நான் காண்பித்த வீடியோ என்னோட பேஷண்ட் ஒவ்வொருவரின் உண்மை நிலையும், அதிலிருந்து தன்னை காத்துக் கொள்ள என்னிடம் உதவி கேட்பவரின் மனவேதனை." என்றாள் காவ்யா.

"யுவர் ஹானர்… மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருந்து படிப்பதாலும், வேலை செய்வதாலும் நிறைய குற்றங்கள் குறைந்துவிட்டது. மாசுபாடும் குறைந்துவிட்டது. மெட்டாவெர்ஸில் சில தீமைகள் இருந்தாலும் அதை விட பல நன்மைகள் இருப்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே. பள்ளி, கல்லூரி, அலுவலகம் எல்லாம் மெட்டாவெர்ஸில் மாறிவிட்ட நிலையில் இந்திய அரசாங்கமே மீதி உள்ள அரசாங்க அலுவலகங்களையும் மெட்டாவெர்ஸில் மாற்ற முயற்சி செய்துக் கொண்டிருக்கும் போது, டாக்டர் காவ்யாவிற்கு வந்திருப்பது தவறான பயம். உலக நாடுகள் அனைத்தும் பயன்படுத்தும் மெட்டாவெர்ஸ் என்றுமே மக்களுக்கு நன்மையை தான் தரும்."

"முன்பெல்லாம் பேஷண்ட்டை நேரில் பார்த்து அவர்களின் உடல்நிலையை தொட்டு பார்த்து தெரிந்து கொள்வோம். இப்போ மெட்டாவெர்ஸில் அவர்களை தொட முடியும். ஆனால் அவர்களின் நிலையை உணர முடியாது. இது தான் நன்மை தரும் மெட்டாவெர்ஸ்ஸா?" என்றாள் காவ்யா.

"மெட்டாவெர்ஸில் உங்களால் பேஷண்ட்டின் நிலையை உணர முடியாது. அது உண்மை தான். ஆனால் மெட்டாவெர்ஸிற்கு முன்பே நிறைய டாக்டர் அப்ளிகேஷன்ஸ் மூலம் பேஷன்ட் எங்கோ இருக்க, டாக்டர்ஸ் எங்கோ இருந்துக் கொண்டு வைத்தியம் பார்க்கும் முறை வந்துவிட்டது. சொல்ல போனால் அந்த முறையை விட மெட்டாவெர்ஸை பயன்படுத்தும் போது இன்னும் டாக்டர், பேஷண்ட் இடையே நல்ல புரிதல் வந்திருக்கு‌. இந்த துறையில் மட்டும் இல்லை, எல்லா துறையிலும் மெட்டாவெர்ஸ் மக்களுக்கு நன்மையோடு வாழ்வியலை எளிமைபடுத்தியிருக்கு." என்றார் எதிர்கட்சி வக்கீல்.

"இதுவரை பேசியதை வைத்தும், சமர்ப்பித்த ஆதாரங்கள் வைத்து பார்க்கும் போது மெட்டாவெர்ஸ் எங்கும் கட்டாயப்படுத்தி மக்கள் மேல் திணிக்கப்படவில்லை. மக்களே அதன் நன்மை கண்டு அதை விரும்பி பயன்படுத்துகிறார்கள். இருந்தும் ஒரு மருத்துவராக நீங்கள் சொல்வதும் சரி தான். நீங்கள் பேஷண்டை நேரில் பார்த்து மருத்தவம் செய்ய நினைப்பது தவறில்லை. நீங்கள் மெட்டாவெர்ஸில் இருந்து வெளியே வந்து நிஜத்தில் டாக்டர் பணியை தொடரலாம். அதை யாராலும் தடுக்க முடியாது. அதே போல் பள்ளி, கல்லூரி, அலுவலகம் எதிலும் மெட்டாவெர்ஸ் கட்டாயம் இல்லை. நீங்கள் விரும்பினால் மெட்டாவெர்ஸில் நடத்தலாம். இல்லை எனில் நிஜத்தில் நடத்தலாம். மெட்டாவெர்ஸ் என்பது மிகப்பெரிய டெக்னாலஜி. இப்படி சின்ன சின்ன குறைகளுக்காக அதை தடை செய்ய முடியாது‌." என்ற நீதிபதி தன் தீர்ப்பை கூறிவிட்டார்.

கண்களில் கண்ணீர் வழிய அமைதியாக வெளியே வந்தாள் காவ்யா.

"காவ்யா மேடம்… நாளைக்கு ஈ ஓட்ட ரெடியா இருங்க." என்றார் எதிர்கட்சி வக்கீல்.

காவ்யா புரியாத பார்வை பார்க்க.

"அதான் மேடம்… நாளைக்கு நிஜத்தில் கிளினிக் பக்கம் போனா எவனும் வரமாட்டான். எல்லாரையும் சோம்பேறியா மாற்றிட்டோம். இனி எவனும் மெனக்கெட்டு கிளினிக் வந்து பொழுதன்னைக்கும் உங்களை பார்க்க காத்திருக்க மாட்டான். இரண்டு நாள் பாருங்க. ஒன்னும் வேலைக்கு ஆகலைனா மெட்டாவெர்ஸிற்கே திரும்ப வந்துடுங்க. அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க? அதுக்கு தான் சொல்றேன். மெட்டாவெர்ஸ் எப்பவும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கும்." என்றான் எதிர்கட்சி வக்கீல்.

"டேய்…" என்ற காவ்யா எதோ கோபமாக பேச வர.

"காவ்யா… வா போகலாம். அவன் சொன்னதுக்கு ரியாக்ட் பண்ணாதே." என்ற நிரஞ்சன் அவளை காரில் ஏற்றினான்.

"காவ்யா… இது தான் நடக்கும்னு முன்னாடியே தெரியும்ல. மனசை கஷ்டப்படுத்திக்காதே" என்றான் நிரஞ்சன்.

ஆள் நடமாட்டம் இல்லாத சாலையை பார்க்கும் போது மனம் வலிக்க,கண்களை துடைத்தவள் ஒரு முடிவை எடுத்தாள்‌.' டைரியை மூடி வைத்து விட்டு, மற்ற வேலைகளை பார்க்க சென்றாள்.

மாலையில் ராகவியின் வீட்டிற்குச் செல்வதற்காக கீழே இறங்கினாள் தீட்சண்யா.

அப்போது மேல் ப்ளோரில் இருந்து நிகிலனின் சகோதரி கீழே இறங்கினாள். அவளை யோசனையாக பார்த்த தீட்சண்யா, அவளோடு சேர்ந்து கீழே இறங்கிக் கொண்டே, " நீ நிதிஷா தானே." என்று வினவ.

"ஆமாம்." என்று தலையசைத்தாள்.

" ஓ… நேத்து ஒரு பையனோட உன்னை கேட் கிட்ட பார்த்தேனே. அவன் யாரு?" என்று எடுத்த எடுப்பிலேயே கேள்வி கேட்க.

" அது வந்து…" என்று அந்த பெண்ணோ தயங்கினாள்.

"இப்போ சொல்றியா? இல்ல உங்க அம்மா கிட்ட நான் சொல்லவா?"

" அம்மா கிட்ட சொல்லாதீங்க கா. அவர் என்னோட லவ்வர்." என்று பயத்துடன் கூறினாள்.

" என்னது லவ்வரா? உங்க அம்மா பின்னாடியே தானே இருப்ப? அப்புறம் எப்படி? அவனைப் பார்த்தாலும் காலேஜ்ல படிக்கிற மாதிரி தெரியலையே…" என்று யோசனையாக வினவினாள் தீட்சண்யா.

"அது வந்து இன்ஸ்டாகிராமில் பழக்கம்." என்று அவள் சொல்லும் போதே கீழே இறங்கியிருக்க… ஸ்வேதாவும் அங்கே வந்து விட்டார்.

" ஐயோ மம்மி…" என்ற நிதிஷா வேகமாக நகர்ந்து கொண்டாள்.

"சோசியல் மீடியாவுல பழகுறது எல்லாம் தப்பு." என்று சொல்ல வந்த தீட்சண்யாவின் வார்த்தைகள் அப்படியே நின்று விட்டது.

ஸ்வேதா வழக்கம் போல தீட்சண்யாவை அலட்சியமாக பார்த்து விட்டு மகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

தீட்சண்யாவோ யோசனையாகவே ராகவியின் வீட்டிற்குச் சென்றாள்.

" வா தீட்ஷு‌." என்று அழைத்தாள் ராகவி.

அங்கே சென்றதும் மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு ராகவியிடம், "எங்க கா உங்க பையன்?" என்று வினவினாள்.

சோஃபாவில் அமர்ந்திருந்த அவரது மகனை கண்களால் காட்ட.

அவனோ யூனிபார்ம் கூட மாற்றாமல் ஃபோனில் மும்முரமாக கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.

" கவின்…" என்று ராகவி அழைத்தாள்.
அவனோ திரும்பாமலே இருக்க… " டேய் கவின்…" என்று சத்தமாக அழைத்தாள்.

" என்னம்மா…" என்று சலிப்புடன் நிமிர்ந்த கவின் திடீரென்று, " ஐயோ! ஶ்ரீராம் என்னை போட்டுட்டான்…. டேய் காசி… என்னை ரிவேவ் பண்ணுடா." என்று கத்தினான்.

" டேய் கவின்… இந்த ஆன்ட்டி உன்னை பார்க்கத் தான் வந்திருக்காங்க. முதல்ல அவங்களை வெல்கம் பண்ணு." என்று ராகவி கோபமாக கூற.

" வாங்க ஆன்ட்டி." என்றவன், தீட்சண்யா பேசுவதற்குள் வேகமாக ரூமிற்குள் சென்று விட்டான்.

" சாரி தீட்ஷு. அவன் இப்படி பிகேவ் பண்றானு தான் எனக்கு கவலையே. நீ எதுவும் நினைச்சுக்காத." என்று மகனுக்காக மன்னிப்பு கேட்டார்.

" பரவாயில்ல கா… உடனே எல்லாம் சரியாகிடாது. கொஞ்சம், கொஞ்சமாக பேசி தான் சரிப்படுத்தணும். நான் டெய்லி வந்து அவன் கிட்ட பேசி பார்க்குறேன். நீங்க கொஞ்சம் ஃபோன்ல சார்ஜ் இல்லாமல் பார்த்துக்கோங்க. நாளைக்கு வரேன் கா." என்று விட்டு கிளம்பினாள் தீட்சண்யா.

கொஞ்ச நேரம் பார்க்கிற்கு சென்று பெரியோர்களிடம் பேசி விட்டு வீட்டிற்கு சென்றாள்.

ஆஃபிஸிலிருந்து வந்த ஆதர்ஷோ, தீட்சண்யாவைப் பார்த்து முறைத்துக் கொண்டே அறைக்குச் சென்றான்.

தோளை குலுக்கிய தீட்சண்யாவோ, தட்டெடுத்து உணவருந்தினாள்.

ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு வந்த ஆதர்ஷோ, தட்டை எடுத்து டேபிளில் உள்ள ஹாட்பாக்ஸை திறந்து பார்க்க…. அதுவோ காலியாக இருந்தது.

" தீட்சண்யா… டின்னர் எங்க?" வினவ.

" நீங்க கோபமாக இருந்ததால காலையிலும் சாப்பிடலை. லஞ்சும் எடுத்துட்டு போகலை. இப்பவும் சாப்பிட மாட்டீங்கனு நினைச்சுட்டு உங்களுக்கு டின்னர் செய்யலை." என்றாள்.

அவனோ வேகமாக எழுந்திருக்க…

' ஐயோ! ரொம்ப கோபப்படுத்திட்டேன் போல.' என்று அவள் பயத்துடன் அவனைப் பார்த்தாள்.

ஆதர்ஷோ அவள் முன் வந்து நின்று," ஐ அம் சாரி தீட்சண்யா… சாப்பாட்டு மேல கோபத்தை காண்பிச்சு இருக்க கூடாது. ஐயம் ரியலி சாரி. இனி இந்த தப்பு நடக்காது. இப்ப எனக்கு ரொம்ப பசிக்குது. ப்ளீஸ் எதாவது இருந்தா எடுத்துட்டு வர்றியா? எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே." என்று கெஞ்சினான்.

உள்ளே சென்ற தீட்சண்யாவோ, செய்து வைத்திருந்த இரவு உணவை எடுத்து வந்து வைத்தாள்.

ஆதர்ஷோ வேக, வேகமாக சாப்பிட்டான். அப்பொழுது தான் அவளுக்கு, ஆதர்ஷ் காலையிலிருந்து சாப்பிடாமல் பசியோட இருப்பது புரிந்தது.

" காலையிலிருந்து சாப்பிடவே இல்லையா? கேண்டீன்லயாவது
சாப்பிட வேண்டியது தானே." என்று அவனுக்கு பரிமாறிக் கொணாடே கேட்க.

தன் வாயில் வைத்திருந்த கிச்சடியை விழுங்கியவன், " உன் சாப்பாடு சாப்பிட ஆரம்பிச்சதுல இருந்து, எனக்கு கேன்டீன் சாப்பாடெல்லாம் பிடிக்க மாட்டேங்குது." என்றான்.

அவன் தீட்சண்யாவின் சாப்பாடு நல்லா இருக்கு என்பதை உணர்ந்து கூறாமல், கேஷுவலாக தான் கூறினான்.

ஆனால் தீட்சண்யாவின் முகமோ சந்தோஷத்தில் மலர்ந்தது.

அவள், ஆதர்ஷ் சாப்பிடுவதையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க… அவனோ சாப்பாட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
Top