• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அத்தியாயம் - 9


நாட்கள் வேகமாக மறைய… ஆதர்ஷ், தீட்சண்யா வாழ்க்கையில் ஒரு சின்ன மாற்றமாக ஆதர்ஷ் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்தது.


ஆஃபிஸில் நடந்துக் கொண்டிருந்த முக்கியமான ப்ராஜக்டில் அவனும் இருந்தான். அது முடியும் தருவாயில் இருந்ததால், எல்லோரும் நேரம், காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருந்தது. ஆதர்ஷும் காலையில் சீக்கிரமாக ஆஃபிஸுக்கு செல்பவன், இரவு தாமதமாக தான் திரும்புவான்.


தீட்சண்யாவிற்கும், ராகவியின் வீட்டிற்கு செல்வதால் பொழுது போனது. தினமும் மாலையில் ராகவியின் வீட்டிற்கு சென்று விடுவாள். கவினிடம் பேச முயன்றாலும் அவன் பேச மாட்டான். ஆனால் சின்ன முன்னேற்றமாக அறைக்குள் சென்று கதவை அடைக்காமல் தீட்சண்யாவும், ராகவியும் பேசும் இடத்திலேயே அவன் ஃபோனில் விளையாடிக் கொண்டிருப்பான்.


அவளோ ஜாடைமாடையாக அவனை கிண்டல் செய்வது போல பேசுவாள். இன்றும் அதே போல தான் செய்துக் கொண்டிருந்தாள்.


" என்ன தான் சொல்லுங்க கா. இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் சோம்பேறி. நம்ம அப்போ எப்படி ஓடி, ஆடி விளையாடுவோம். நம்மக் கிட்ட இருக்கிற எனர்ஜியெல்லாம், இப்போ உள்ளவங்களுக்கு சுத்தமா கிடையாது. நாம ஓங்கி ஒரு அடி அடிச்சாலே சுருண்டு விழுந்திடுவாங்க.


கேம்ல வேணும்னா, அடி டா… உதைடானு உதார் விட்டுட்டு இருப்பாங்க." என்றுக் கூறி நக்கலாக சிரித்தாள்.


ஃபோனில் விளையாடிக் கொண்டிருந்த கவின், பாதியில் வைத்து விட்டு எழுந்து அவள் அருகே வந்து," நானும் பார்த்துகிட்டே இருக்கேன். ஒரு வாரமா வந்து என்ன கிண்டல் பண்ணிட்டே இருக்கீங்க. இப்ப உங்களுக்கு என்ன வேணும்? ஃபோன் கேம்ல மட்டும் தான் நான் ஜெயிப்பேன் என்று நினைக்கிறீர்களா? நிஜத்திலேயும் நான் ஜெயிப்பேன். வேணும்னா நமக்கு போட்டி வைக்கலாமா? ரன்னிங் ரேஸ் வைப்போம். யார் ஜெயிக்கிறாங்கனு பார்க்கலாமா?" என்றான்.


" ஓ… பார்க்கலாமே… எப்ப வர?"

"இப்பவே ரன்னிங் ரேஸ் வைப்போம்."என்றான் கவின்.


"சரி வா போகலாம்…" என்ற தீட்சண்யா அவனை அழைத்துக் கொண்டு பார்க்குக்குச் சென்றாள்.


" இது தான் ஸ்டார்டிங் பாயிண்ட். யார் ஃபர்ஸ்ட் இந்த கிரவுண்டை சுத்திட்டு வரோமோ, அவங்க தான் வின்னர்." என்றாள் தீட்சண்யா.


தீட்சண்யாவையும், வெளியவே வராத கவினையும் ஆச்சரியமாக பார்த்து அவர்கள் அருகே சதானந்தம் பரமேஸ்வரி தம்பதியினர் வந்தனர். கூடவே நிகிலனும் வந்தான்.


போட்டி நடப்பதை அறிந்த பெரியவர்களோ, தீட்சண்யாவிற்கு சப்போர்ட் செய்ய..

நிகிலனோ, அவனது வயதான கவினுக்கு சப்போர்ட் செய்தான். ராகவியோ புன்னகையுடன் வேடிக்கைப் பார்க்க துவங்கினாள்.


தீட்சண்யா புடவையை நன்றாக தூக்கி சொருகிக் கொண்டு, கவினுடன் ஓடினாள். முதலில் வேகமாக ஓடிய கவின், நேரம் ஆக, ஆக அவனது வேகம் குறைந்தது. தீட்சண்யாவோ, சீரான வேகத்தில் ஓடி முதலாவதாக வந்தாள். அவளுக்கு பின்னே மூச்சு வாங்க கவின் வந்தான். எல்லோரும் தீட்சண்யாவிற்கு கைக் கொடுத்து ஆரவாரம் செய்தனர்.


கவின் முகம் வாடி சோகமாக நின்றான். அவனால் அந்த தோல்வியை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.


சற்று நேரம் யோசனையாக இருந்தவன், தீட்சண்யாவிடம், " வந்து… நாளைக்கும் போட்டி வைக்கலாமா?" என்று வினவினான்.


அவள் புன் சிரிப்புடன் அவனைப் பார்க்க.


" நாளைக்கு கண்டிப்பா ஜெயிச்சிடுவேன்." என்ற கவினின் குரலில் உறுதி தெரிந்தது.


அவன் தலையை லேசாக களைத்து விட்ட தீட்சண்யா, "ஒரே நாளில் எல்லாம் ஓடி ஜெயிக்க முடியாது கவின். கொஞ்சம், கொஞ்சமா தான் முயற்சி பண்ணனும். வேணும்னா அடுத்த மாசம் இதே போட்டியை வைப்போம். நீ அது வரைக்கும் ப்ராக்டிஸ் பண்ணு. அப்ப தான் இப்படி மூச்சு வாங்காம இருக்கும். நீ ஈஸியா ஜெயிக்கலாம்." என்றுக் கூற.


கவினோ, "ஓகே"என்றான்.


அன்றைய பொழுது தீட்சண்யாவிற்கு சுவாரசியமாக போனது.


அங்கே ஆஃபீஸுலோ ஆதர்ஷின் ப்ராஜெக்ட்டும் வெற்றிகரமாக முடிய… எல்லாரின் முகத்திலும், "அப்பாடா." என்ற எண்ணமே தோன்றியது.


கிட்டத்தட்ட ஒரு வாரமாக வேலை மண்டைய பிச்சுக்க வைத்திருந்தது.


தருணோ, " ஹாய் கைஸ்… நம்ம ப்ராஜெக்ட் சக்சஸ் ஆயிடுச்சு. இவ்வளவு நாள் ஸ்ட்ரெஸ்ஸா இருந்திருப்பீங்க. சோ ரிலாக்ஸ் பண்ண இந்த தடவை சின்னதா டூ டேஸ் பாண்டிச்சேரி ட்ரிப் போயிட்டு வரலாமா?"

என்று வினவ.


" வாவ் சூப்பர்… தேங்க்ஸ் டா நண்பா..

செம…" என்று ஆளாளுக்கு ஏதேதோ கூறினர்.எப்பொழுதுமே ப்ராஜெக்ட் முடிந்தால் பக்கத்தில் எங்காவது போவார்கள். இந்த முறை வெளியூர் செல்லலாம் என்று முடிவு எடுக்க, எல்லோரும் உற்சாகமாகினர்.


ஆதர்ஷின் அமைதியை பார்த்த ஒருவன், "ஏன் டா ஆதி அமைதியாகிட்ட? பேமிலி ட்ரிப் தானே. வைஃபையும் தானே கூட்டிட்டு வரப் போற? அப்புறம் ஏன் இப்படி இருக்க?" என்று வினவ.


' தீட்சண்யா வருவாளா? மாட்டாளா?' என்று யோசித்த ஆதர்ஷ், " வர மாட்டா?" என்றான்.


" என்னடா சொல்ற?" என்று தருண் வினவ.


" அது என் வொய்ஃப் ட்ரிப்பெல்லாம் அவ்வளவா பிடிக்காது."


" ஆமாம் டா… சிஸ்டருக்கு நம்மளோட பழகுவதற்கும் கஷ்டமா தான் இருக்கும். பரவால்ல விடு டா. நீ சிங்கிளா வந்திடு. ஆனா மச்சான்… கல்யாணம் ஆகியும் சிங்கிளா இருக்குறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்." என்று வருண் அவனை கேலி செய்து கொண்டிருந்தான்.


அதை பார்த்தும், பார்க்காதது போல ஓரமாக அமர்ந்திருந்தாள் அக்ஷரா.


அவளருகே இருந்த பவ்யாவோ, "அக்ஷி… இந்த ட்ரிப் உனக்கு ஒரு நல்ல சான்ஸ். ஆதர்ஷ் வைஃபை கூட்டிட்டு வர்ற போறதில்லை. நம்ம டீம்ல உள்ள எல்லோரும் குடிச்சிட்டு மட்டை ஆயிடுவாங்க. ஆதிக்கு அந்த பழக்கம் கிடையாது. நீ ஆதிக்கிட்ட மனசு விட்டு பேசுறதுக்கு நல்ல வாய்ப்பு. நீ அந்த தனிமையான நேரத்தில் அவனோட இனிமையா பழகி ஆதர்ஷோட மனசுல இடம் பிடிக்கலாம்." என்றாள்.


"பவி… இதெல்லாம் தப்பில்லையா? அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சு. எப்படி இருந்தாலும் அவங்க தான் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்." என்றாள் அக்ஷரா.


" அதெல்லாம் ஒன்னும் தப்பு கிடையாது எப்படியும் ஆதர்ஷுக்கும், அந்த தீட்சண்யாவிற்கும் ஒத்து வராது. இந்த ட்ரிப்புக்கு தீட்சண்யா வர மாட்டாங்கன்னு சொன்னது கூட ஆதர்ஷோட முடிவா தான் இருக்கும். நீ வேணா பாரு, கூடிய சீக்கிரமே இவங்க டைவர்ஸ் கேட்டு கோர்ட்ல நிக்க தான் போறாங்க. அந்த டைம்ல உன்னை பத்தி நினைக்க ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கோ. நீயும் ஆதர்ஷை மறக்க முடியாமல் தவிச்சுட்டு இருக்க. அதுக்காகத்தான் சொல்றேன்." என்றாள்.


'அப்படியும் இருக்குமோ. பவி சொல்றது சரியானு நம்ம செக் பண்ணிடலாம். நம்ம கிட்ட தான் தீட்சண்யாவோட நம்பர் கூட இருக்கே. அன்னைக்கு பார்ட்டியில் வாங்கினது நல்லதா போச்சு.' என்று எண்ணிய அக்ஷரா, " ஒன் மினிட் பவி."என்று விட்டு ரெஸ்ட் ரூமுக்கு சென்றாள்.


தீட்சண்யாவிற்கு அழைத்தவள்," ஹாய் தீட்சண்யா. நான் அக்ஷரா பேசுறேன். என்ன ஞாபகம் இருக்கா?" என்று வினவினாள்.


"சொல்லுங்க அக்ஷரா… ஆதர்ஷோட ஆஃபிஸ்ல வொர்க் பண்றவங்க தானே." என்றாள் தீட்சண்யா.


பார்க்கில் பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவள், ஃபோன் வரவும் சற்று தள்ளி நின்றுக் கொண்டாள்.


" சும்மா தான் கால் பண்ணேன். சீ ரிஸார்ட் உங்களுக்கு பிடிக்குமா?"என்று வினவினாள்.


' இவங்க எதுக்கு கேட்கிறாங்க.' என்று யோசனையாக எண்ணியவள், " ஓ… எனக்கு ரொம்ப பிடிக்குமே‌. கடலலை சத்தம் எனக்கு சங்கீதம்." என்றாள்.


" ஓ… அப்போ ஆதி ஏன் பாண்டிச்சேரி ட்ரிபுக்கு நீங்க வர மாட்டீங்கன்னு சொன்னாரே." என்று லேசாக சிரித்துக் கொண்டே வினவினாள்.


" நீங்க எப்போ ட்ரிப்புக்கு போறீங்க?"


"நாளைக்கு…"


" எனக்கு இப்போ கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதனால நான் வர மாட்டேன்னு சொல்லி இருப்பாரு. அடுத்த தடவை போகும் போது என்னை கூட்டிட்டு போவார்." என்று விட்டுக்கொடுக்காமல் பேசினாள் தீட்சண்யா.


" ஓ… டேக் கேர் தீட்சண்யா." என்று அவள் போனை வைத்தவளின் முகமோ மலர்ந்திருந்தது. ' பவி சொல்றது சரி தான் போல… நம்முடைய காதலை ஆதர்ஷுக்கு உணர்த்த வேண்டும்.' என்று தனக்குள் ஏகப்பட்ட திட்டங்களை போட்டுக் கொண்டாள் அக்ஷரா.


******************************


தீட்சண்யாவோ, முகம் வாட பார்க்கில் இருந்து வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.


லிஃப்டில் ஒரு இளம் பெண் நின்றுக் கொண்டிருந்தாள். இவளைப் பார்த்ததும் புன்னகையுடன்," ஹாய் சிஸ்… நான் ஷர்மிதா. உங்க ப்ளோர் தான்… டெய்லி உங்க வீட்டை கிராஸ் பண்ணும் போது உங்க சமையல் வாசனை ஆள தூக்குது." என்று பேச்சை ஆரம்பித்தாள்.


"வாசனையை வைச்சு ஏமாந்துடாதீங்க." என்றாள் தீட்சண்யா.


" அப்படி எல்லாம் சொல்லாதீங்க சிஸ். நீங்க சுமாரா சமைச்சா கூட பரவாயில்லை. எனக்காக ஒரு டிஷ் செஞ்சு தர்றீங்களா? நான் ஒரு ஃபுட் வ்லாக் யூட்யூப் சேனல் வச்சிருக்கேன். அதுல வீடியோ போடனும்‌‌. ப்ளீஸ் உங்களுக்கு இன்னைக்கு டைம் இருந்தா எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா? ப்ளீஸ்… ப்ளீஸ்…" என்று கெஞ்ச.


அவளுக்கு இருக்கும் மனநிலையில் செய்ய முடியுமானு தெரியவில்லை. இருந்தாலும் எதிரே இருக்கும் பெண்ணின் ஆசையை நிராசையாக்க முடியாமல், " சரி ." என்று தலையாட்டினாள் தீட்சண்யா.


" ஓ… ரொம்ப தேங்க்ஸ் சிஸ்." என்றவளோ அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.


கதவைத் திறக்கும் சத்தத்தைக் கேட்டு அங்கு முகம் முழுவதும் ஃபேஸ் மாஸ்க் போட்டு கொண்டு கண்களில் வெள்ளரிக்காயை வைத்து படுத்திருந்த ஒரு பெண்ணோ, "ஷர்மி வந்துட்டியா?" என்றாள்.


" ஹேய் என்ன இந்த நேரத்துல ஃபேஸ் மாஸ்க் போட்டுருக்க?"


" அதுவா ஷர்மி? நம்ம ப்ளோர்ல ஒரு ஹேண்ட்சம் கை இருக்காரு தெரியுமா? அவர் நம்மளை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாங்குறார். அதான் அவரை கரெக்ட் பண்றதுக்காக நான் பேஸ் மாஸ்க் போட்டு இருக்கேன். உனக்குத் தெரியுமா ஷர்மி அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சாம். ஏன் ஷர்மி இப்படி ஹேண்ட்சமா இருக்கவங்களாம் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நம்ம இப்படியே ஸிபின்ஸ்டரா இருக்க வேண்டியது தான்." என்று சொல்ல.


ஷர்மிதாவோ, அவளை தடுக்கப் பார்க்க. அவளோ அதை கவனிக்கவில்லை. மேலும் ஏதோ கூற வர, ஷர்மிதா அவளை கிள்ளினாள்.


" ஹா…" என்று கத்திய அந்த பெண்ணோ, கண்களிலிருந்து வெள்ளரிக்காயை எடுத்து பார்க்க…


அங்கு தீட்சண்யா நின்று கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் திருதிருவென விழித்தவள், பிறகு அசடு வழிய சிரித்து விட்டு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்‌.


ஷர்மிதாவோ, " சாரி சிஸ். அவ என் ஃப்ரெண்ட். சும்மா ஜாலிக்காக தான் பேசுனா…" என்று சமாளித்தாள்.


" பரவாயில்லை விடுங்க. கிச்சன் எங்க இருக்கு." என்று வினவியவள், அங்கு சென்று கும்பகோணம் ஸ்பெஷலான கடப்பாவை செய்து கொடுத்தாள்.


ஷர்மிதாவோ அதை வீடியோ எடுத்தாள்.


" ரொம்ப தேங்க்ஸ் சிஸ்."என்று சொல்ல.


" பரவாயில்ல. இதுக்கு இட்லி ஊத்தி சூடா சாப்பிட்டா நல்லா இருக்கும். " என்ற தீட்சண்யா கிளம்பி விட்டாள்.


அவள் சென்றதும், இட்லியை ஊத்தி வைத்து விட்டு வர்ஷாவின் அறைக் கதவைத் தட்டினாள்.


" போயிட்டாங்களா." என்று பயந்து கொண்டே வெளியே வந்தாள்.


" ஏன் டி வர்ஷி… இப்படியா யார் வீட்டுக்கு வர்றாங்கன்னு பார்க்காமல் பேசுவ." என்று ஷர்மிதா கடிந்துக் கொள்ள.


" அவங்க இன்னைக்கு வருவாங்கன்னு எனக்கு என்ன தெரியுமா?" என்றாள் வர்ஷா‌.


" சரி விடு. அவங்க ரொம்ப நல்லவங்களா இருக்காங்க‌. நான் கேட்டதும் எனக்காக ஒரு ரெசிபி செய்து கொடுத்துட்டு போயிருக்காங்க. வா நாம ரெண்டு பேரும் டேஸ்ட் பார்க்கலாம்." என்று இருவரும் சாப்பிட.


" வாவ் சூப்பரா இருக்கு." என்று ரசித்து உண்டனர்.


" ஹேய் வர்ஷி… நாளைக்கு அவங்களைப் பார்த்தா ஒரு சாரி சொல்லிடுடி."


" சாரியா, எதுக்கு சொல்லணும் சாரி? சைட் அடிப்பது எனது உரிமை.அதை யாராலும் தடுக்க முடியாது." என்று கூற…


" அடியே வர்ஷி… அவங்க நல்லவங்களா இருக்கிறதுனால தான், நீ அப்படி பேசியும் அவங்க நமக்காக ஒரு நல்ல டிஷ் செய்து கொடுத்துட்டு போயிருக்காங்க. ஒழுங்கு மரியாதையா நாளைக்கு சாரி கேட்குற."


" சரி டி. நான் நாளைக்கு சாரி கேட்குறேன். அப்புறம் மறுபடியும் அவரை சைட் அடிச்சா திரும்பவும் கேட்கணுமா?" என்று அப்பாவியாக வர்ஷா வினவ.


" உன்னை இன்னைக்கு கொள்ளாமல் விடப் போறதில்லை…" ஷர்மிதா துரத்த…


வீடே ரணகளமானது.


தீட்சண்யாவோ, சோர்வாக வீட்டிற்கு வந்தாள். அங்கு ஆதர்ஷ் வந்து இருந்தான்.


" கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஹாஃபனவர்ல டிபன் செஞ்சுடுறேன்." என்றாள்.


"அது இருக்கட்டும் தீட்ஷு… நீ ஏன் என்னமோ போல இருக்க? வாட் ஹேப்பண்ட்?"


" அது ஒண்ணும் இல்ல. பக்கத்து வீட்டுல உள்ள பொண்ணுங்க, அவங்க ஃபுட் பிளாக்குகாக ஒரு டிஷ் செஞ்சு கேட்டாங்க. அதான் அங்க போயிட்டு வரேன். கொஞ்சம் டயர்டா இருக்கு."


"ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே தீட்ஷு. டின்னருக்கு வேணும்னா வெளில ஆர்டர் பண்ணிக்கலாம்."


" சரி." என தலையாட்டிய தீட்சண்யா மனதிற்குள், 'நேத்து தான் வெளி சாப்பாடு புடிக்கலை. என்னோட சமையல் தான் பிடிச்சிருக்குன்னு சொன்னாரு… அதுக்குள்ள அலுத்துடுச்சு போல.' என்று எண்ணியவளுக்கு, ஆதர்ஷ் அவளுக்காக தான் பார்க்கிறான் என்பது புரியவில்லை.


சாப்பிடும் போது, " நாளைக்கு ஆஃபீஸ்ல பாண்டிச்சேரிக்கு ஒரு ட்ரிப் போறாங்க. காலையில பத்து மணிக்கு கிளம்புறேன். வர ரெண்டு நாள் ஆகும். தனியா இருந்துப்பியா? " என்று ஆதர்ஷ் வினவினான்.


" நான் எப்பவும் தனியா தானே இருக்கேன்." என்று ஒரு மாதிரியான குரலில் தீட்சண்யா கூற.


அவனோ குழப்பமாக பார்த்தான். ' ஏன் தீட்ஷு என்னமோ போல பேசுறா? கோபமாக இருந்தாலும் கூட இப்படியெல்லாம் இருக்க மாட்டாளே. நல்லா தானே பேசுவா?' என்று எண்ணியவனோ, " தீட்ஷு ரொம்ப முடியலைன்னா ஹாஸ்பிடலுக்கு போகலாமா?" என்று வினவினான்.


" அதெல்லாம் ஒன்னும் இல்லை. எப்பவும் வர்றது தான். மன்த்லி பிராப்ளம்."


"ஓ… சாப்பிட்டுட்டல்ல‌… அப்ப நீ போய் படு. மத்ததையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். முதல்ல ரெஸ்ட் எடு. இந்த மாதிரி டைம்லெல்லாம் ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதே." என்று அவளை வலுக்கட்டாயமாக அறைக்கு அனுப்பி வைத்தான்.


தீட்சண்யாவோ, ' ஃபோன் காலில் கேட்டது உண்மையா? இல்லை நம்மளை இப்படி கேரிங்கா பார்த்துக் கொள்வது உண்மையா?' என்று குழம்பிக் கொண்டே உறங்க முயன்றாள்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
ரெண்டுபேரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம இருக்காங்க 😊😊😊😊😊
 
Top