• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மௌனக் குரலோசை..3

Oct 31, 2021
323
15
63
29
Sri Lanka Jaffna
வெண்ணிற மலர்களை மலர விட்டிருந்த கோவில் மரத்திலிருந்து நிறைய மலர்கள் கீழே விழுந்து பரவிக் கிடக்க, அதில் ஒன்றிரண்டு சித்திராவின் தலையில் விழுந்து சிதறியது.

கோவில் கோபுரத்தில் இருந்த அவளது பார்வை மலர்கள் மீது தாவ, அவள் மீண்டும் மௌனம் அனுஷ்டிக்க, சித்திராவை பிடித்து தன் பக்கமாக திருப்பினாள் அம்பிகா.

"சொல்லு சித்து.. உனக்கும் சிவாண்ணாவை பிடிக்கேலையோ.. அவர் மெக்கானிக் எண்டதால தான் உங்கடை அக்கா அவரை உனக்கு வேண்டாம் எண்டு சொன்னாவோ.. ஒரு வேளை உனக்கும் அவரை பிடிக்காததுக்கு அது தான் காரணமோ.."

"............."

"ஆனா நீ அந்த மாதிரி எல்லாம் தகுதி தராதரம் பாக்குற ஆள் இல்லையே.. பிறகு அவரை உனக்கு ஏன் பிடிக்கேலை சித்து.. ஒரு வேளை பொருளாதாரம் நாளைக்கு எப்புடி இருக்குமோ எண்டு யோசிச்சியோ.."

"............."

"என்ன சித்து.. வாயே திறக்க மாட்டன் எண்டுறாய்.."

"கேள்வியைக் கேட்டிட்டு பதிலையும் நீயாவே சொன்னால்.. நான் பிறகு என்ன சொல்றது அம்பி.."

"ஓ சாரி சாரி சித்து.. நான் ஒரு அறுந்த வால் ஏதவோ எனக்கு மட்டும் தான் வாய் இருக்குது எண்ட போல கதைச்சுக் கொண்டே இருப்பன் என்ன.. சரி அதை விடு இப்ப நீ சொல்லு.. சிவாண்ணாவை உனக்கும் பிடிக்கேலையோ.."

"உனக்கும் பிடிக்கலையோவோ.. போடி இவளே நான் அந்த மனுஷனை காதலிக்கிறன்டீ காதலிக்கிறன்.."

"சித்தூ உண்மையாவோடி.."

"சத்தியமா அம்பி.. சத்தியமா நான் சுதாவைக் காதலிக்கிறன்.. ஆனா நான் காதலிக்கிறது அவருக்கு தெரியாது.."

"என்னடி சொல்லுறாய்.."

"ம்ம்.. எல்லாம் என்ரை தலையெழுத்து.."

"புரபோஸ் பண்ணின நேரம் சொல்ல வேண்டியது தானே.."

"அவர் என்னட்டை புரபோஸ் பண்ணின நேரம்.. நான் பதிலே வராமல் திகைச்சு போய் நிண்டிட்டன்.. அதுக்குள்ள பெரியக்கா வந்து எல்லாத்தையும் கவிட்டு கொட்டீட்டாள்.."

"சரி இனியாவது சொல்லலாம் தானே நீ.."

"என்ன சொல்ல சொல்லுறாய் எப்புடி சொல்ல சொல்லுறாய்.. அந்த நேரம் பதிலே சொல்லாமல் நிண்டிட்டு.. அக்கா அவரைப் பாத்து வார்த்தையைக் கொட்டினதையும் கையைக் கட்டிக் கொண்டு பேசாமல் பாத்துக் கொண்டு நிண்டிட்டு இப்ப போய் என்ன சொல்லுறது.. அவரிந்தை மனசு காயப் பட்டிருக்குமோ இல்லையோ நீயே சொல்லு அம்பி.."

"அதெல்லாம் சரி தான் சித்து.. ஆனா ரெண்டு பேருக்குமே ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குது.. பிறகு என்னத்துக்கு உந்த கண்ணாமூச்சி ஆட்டம் சொல்லு.."

"நீ கேக்கிற கேள்வியளுக்கோ இனிமேல் கேக்க போற கேள்வியளுக்கோ என்னட்டை பதிலே இல்லை அம்பி.."

"உன்ரை வாழ்க்கையை நீ எப்ப தான் வாழப் போறாய் சித்து.. நீ என்னை குறை நினைச்சாலும் பரவாயில்லை.. ஆனா உன்ரை வீட்டு ஆக்களை நினைக்க கடுப்பு கடுப்பா வருகுது.. அதுல உங்கடை அப்பாவை மட்டும் விட்டிட்டு பாத்தால் மத்தவை எல்லாம் சரியான சுயநலவாதியளா இருக்கினம்.."

".............."

"நீ அமைதியா இருக்கிறதால உண்மை பொய்யாப் போகாது சித்து.. ஒரு வெளியாள் எனக்கே உன்ரை வீட்டுக்காரரிந்தை குணமும் நடத்தையும் தெளிவா தெரியுது.. அந்த வீட்டுக்குள்ளயே குப்பை கொட்டுற உனக்கு அவையிந்தை குண நடத்தை தெரியாதோ சொல்லு.. தெரியாமல் எல்லாம் இருக்காது நீ தான் வாய் இருந்தும் ஊமையாச்சே.. ஏதோ நீ அந்த வீட்டுக்கு சேவகி மாதிரி கையைக் கட்டிக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டு எல்லா வேலையையும் செய்யிறாய்.. உன்ரை அக்கா தங்கச்சி தான் உன்னட்டை எடுபிடி வேலை வாங்குறாளுகள் எண்டு பாத்தால்.. உன்ரை அம்மா அதுக்கும் மேலால.. என்னத்தை சொல்ல.."

"ஏன் அம்பி.. எங்கடை வீட்டாக்கள் தானே அவைக்காக வேலை செய்றது தப்போ.."

"ஐயோ என்ரை சிவபெருமானே.. இந்த ஆத்மாவை ஏன் இவ்வளவு அப்பாவியா வாயில்லாத பூச்சியா படைச்சு விட்டனீ.. தான் வேலை செய்து குடுக்கிறது தான் குடும்ப பாசம் எண்டு நினைச்சுப் கொண்டு இருக்கிறாளே.."
என தலையில் அடித்துக் கொண்ட அம்பிகா, தோழிக்கு நேராக அமர்ந்து கொண்டு அவளது கண்களைப் பார்த்தபடி
"என்ரை கண்ணை பார்த்து சொல்லு சித்து.. ஒரு நாள் ஒருநாளாவது மனசுல எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் நிம்மதியா அந்த வீட்டுல நீ வேலை செய்து இருக்கிறியோ.. இல்லாட்டிக்கு உன்ரை அக்கா அம்மா தங்கச்சியில யாராவது ஒருத்தர் உனக்காக ஏதாவது ஒரு துரும்பை கிள்ளி போட்டிருக்கினமோ சொல்லு.."
என்று கேட்க, சித்திராவின் தலை தானாகவே கவிழ்ந்து போனது.

"ஏன் பதிலே இல்லை சித்து.. ஏனெண்டால் உனக்கே உன்ரை வீட்டாக்களை பத்தியும் தெரியும்.. அவை உன்னோட எப்புடி நடந்து கொள்ளினம் எண்டதும் தெரியும்.. நீயாவே உன்னை சமாதானப் படுத்திக் கொண்டு ஒரு நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழுறாய்.."

"அம்பி என்னடி.."

"குடும்பத்துக்காக உழைக்கிறதையோ அவைக்காக உதவிகள் செய்றதையோ எதையுமே நான் பிழை சொல்லேலை சித்து.. ஆனா அதெல்லாத்தையும் சித்திரா மட்டும் தான் செய்யோணும் எண்டு உன்ரை தலையில திணிக்கிறது தான் பிழை எண்டு சொல்லுறன்.. ஒருவேளை நீ செய்றது எல்லாம் சரி எண்டோ உன்ரை அக்கா அம்மா செய்றது சரி எண்டோ இருந்தால்.. உங்கப்பாவுக்கு ஏன் அவையளில கடுப்பு எரிச்சல் வரோணும் சொல்லு.."

"................."

"சரி அதெல்லாம் போகட்டும்.. சிவாண்ணா புரபோஸ் பண்ணினார் அதை உன்ரை அக்கா தடுத்தவள் தானே.. ஏதவோ தங்கச்சி மெக்கானிக்கை கட்டினால் அவள் பிறகு கஷ்டப் படுவாள் எண்டு அவா சொல்லுறா சரி அதை விடு.. நான் கேக்கிற இந்த கேள்விக்கு பதில் சொல்லு.. உன்னை பொம்பிளை கேட்டு லண்டனில இருந்தும் கொழும்பில இருந்தும் ரெண்டு வசதியான வரன் வந்ததே அதை ஏன் உன்ரை அக்கா வேண்டாம் எண்டவள்.. அது வேணுமோ வேண்டாமோ எண்டு யார் தீர்மானிக்கோணும்.."

"அது.. தூரம் எண்டு.."

"லூசுக்கதை கதைச்சாய் எண்டால் வாயை இழுத்துப் பிடிச்சு தைச்சுப் போடுவன் சித்திரா.. கொஞ்சமாவது சொந்தமா தெளிவா யோசி.. நீ கலியாணம் கட்டிக் கொண்டு போனால் அவளிந்தை பிள்ளையை யாரு பாக்கிறது எண்டுற எண்ணம் அவளுக்கு.."

"இல்லை அம்பி நீ தப்பா புரிஞ்சு வைச்சிக்காய்.."

"நான் தப்பா புரிஞ்சு கொள்ளேலை.. நீ தான் தப்பா புரிஞ்சு கொண்டிட்டாய்.. சரி விடு நான் உன்ரை பாதையாலயே வாறன்.. நான் கேக்கிற கேள்விக்கு வடிவா பதில் சொல்லு.. உன்ரை அக்காவுக்கு எத்தினை வயசுல கலியாணம் நடந்தது.."

"இருபத்தஞ்சு வயசுல.."

"கலியாணத்தை பேசி முடிச்சு ஒப்பேத்தினது யாரு.."

"அம்மா.."

"சரி.. எத்தினை வயசுல உன்ரை அக்காவுக்கு உன்ரை அம்மா வரன் பாக்க வெளுக்கிட்டவா.."

"இருபத்திமூண்டுல.."

"உனக்கு இப்ப எத்தினை வயசு.."

"ஏன் உனக்கு தெரியாதோ.."

"உந்த வாயை உன்ரை வீட்டுல காட்டி போடாத என்னட்டை மட்டும் காட்டு.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.."

"முப்பது.."

"சரி.. உன்ரை குறிப்பு புரோக்கரிட்டை போயிட்டுதோ.."

"அது.."

"அது அதுதான்.. அதை தான் கேக்கிறன்.. உன்ரை அம்மா உன்ரை குறிப்பை புரோக்கரிட்டை குடுத்திட்டாவோ.."

"இல்லை.."

"உன்ரை தங்கச்சிக்கு எப்ப கல்யாணம்.."

"இந்த வருஷம் ரிஜிஸ்டர் பண்ற பிளான்.."

"உனக்கு எப்ப கல்யாணம்.."

"எனக்கு இப்போ அதுல இன்ரஸ்ட் இல்லை அம்பி.."

"இருங்கோ அம்மிணி.. உங்களுக்கு இன்ரஸ்ட் இருந்தாலும் உங்கடை வீட்டாக்கள் உங்களுக்கு கட்டி வைச்சிட்டு தானே மற்ற வேலை பாக்க போகினம்.. ஏன்டி ஏன்டி இப்புடி இருக்கிறாய்.."

"அப்ப நான் என்ன செய்யிறது அம்பி.."

"சொன்னா மட்டும் செய்யிற மாதிரி கேள்வியை பாரன்.."

"சொல்லு அம்பி முயற்சி செய்றன்.. என்னில அக்கறை உள்ள ரெண்டு ஜீவனில ஒண்டு நீ தானே.."

"இப்புடி சொல்ற நீ பிறகேன்டி இப்புடி இருக்காய்.."

"அம்பீ.."

"சரி சரி சொல்லுறன் கேள்.. நீ சிவாண்ணாவோட கதை அவர் தான் உனக்கான ஜோடி.. உன்ரை வாழ்க்கையை வாழ பாரு.."

"ஐயோ போடி.. அவரிட்டை என்னத்தை கதைக்கிறது.."

"சரி.. அவர் உனக்கு வேணுமோ வேண்டாமோ.."

"என்னடி கேள்வி இது.. அது தான் அவரைக் காதலிக்கிறன் எண்டு சொல்லீட்டனே.."

"எப்புடி மேடம்.. காலம்பூராக் காதலிச்சுக் கொண்டே இருக்க போறீங்களோ.. சரி உன்னையும் போட்டு வதைக்க ஏலாது.. இதுக்கு பதில் சொல்லு.. அண்ணா வந்து திரும்ப கதைச்சா கதைப்பியோ.."

"ம்ம்.."

"சத்தமா ஓமெண்டு சொல்லடி.. உனக்கு முதல்ல சத்துக் கஞ்சி காச்சிப் பருக்கோணும்.. ஊருல பத்து பதினைஞ்சு பிரெண்டு வைச்சிக்கவள் எல்லாம் கல்யாணம் காதுகுத்து எண்டு என்ஜோய் பண்றாளுகள்.. ஒரேயொருத்தியை வைச்சுக் கொண்டு இவளுக்கு கலியாணம் கட்டி வைக்கிறதுக்குள்ள நான் கிழவியாயிடுவன் போலயே.."

"சாரி அம்பி.. நான் உன்னை ரொம்பக் கஷ்டப் படுத்திறன் போல.."

"அடியே இவளே.. நீ கஷ்டப் படுத்தினாக் கூட சந்தோஷமடி.. ஆனா வாயே திறக்கமாட்டன் எண்டுறியே அதை தான்டி என்னால தாங்க முடியேல்லை.."

"சாரி அம்பி.."

"உடன வந்திடுவாள் சாரியம்பி பூரிக்கம்பி எண்டு கொண்டு.. வா உனக்கு லெக்சர் எடுத்ததில எனக்கு பசி கிளம்பினது தான் மிச்சம்.. போய் சாப்பிடுவம்.."

"அச்சோ முதலே சாப்பிட்டு இருக்கலாமேடி வா வா.."

"எங்க விட்டனி நீ.. வாசுவாச்சும் ரெண்டு பூரி வாங்கி தந்திருக்கும்.. அதையும் நீ வாங்கி தர விடாமல் பாதியில வந்திட்டியே.."

"சரி சரி வா.. நான் வாங்கி தாறன்.."

"பாதியில எழும்பி வந்திட மாட்டியே.."

"வர மாட்டன் வா.."

"அதையேன் உம்மெண்டு கொண்டு சொல்லுறாய்.."

"அப்புடியோ சொல்லுறன்.."

"அப்புடி தான் சொன்னி.."

"அப்ப எப்புடி சொல்ல.."

"கொஞ்சம் ஈ எண்டு கொண்டு சொல்லன்.."

"பல்லுத் தீட்டேல்லை பரவாயில்லையோ.."

"ஹா ஹா நல்ல ஜோக்கு.. நான் நாளைக்கு சிரிக்கிறன் எழும்பு முதல்.. பூரிக்கடைக்கு போவம்.. ஆனா ஒண்டடி உனக்கு கூட காமெடி வருகுது பாரன்.."

"ஏன்டி நான் ஏதும் வித்தியாசமான ஜந்தோ.."

"அதுல எனக்கு அப்போ அப்போ டவுட்டு வாறது தான்.."

"உனக்கு தானே வரும் வரும்.. நல்லா வரும் நட முதல்ல.. வெயில் ஏற முதல் சாப்பிட்டுட்டு வீட்டை போவம்.."

"ஏன் அங்க போய் விட்டுட்டு வந்த பத்துபாத்திரம் தேய்க்க போறியோ வெளுப்பன் உனக்கு.. இண்டைக்கு ஈவினிங் நாலுமணி வரை என்னோட தான் நீ இருக்கோணும்.."

"அச்சோ அம்பீ.."

"தும்பீ.. வாயை மூடிக் கொண்டு வா.. வீட்டை போகப் போறன்.. துணி ஊற வைச்சனான் பருப்பு அவிய வைச்சனான் எண்டியோ.. குரல்வளையை கடிச்சு துப்பீருவன் சொல்லீட்டன்.."
என்ற அம்பிகாவின் கன்னத்தை பிடித்து ஆட்டிய சித்திராவின் முகம் லேசான புன்னகையை தத்தெடுத்துக் கொண்டது.

உண்மையிலுமே சித்திராவுக்கு அம்பிகா ஒரு நல்ல தோழி தான், சித்திராவின் வீட்டினரது நடவடிக்கைகள் அவளுக்கு என்றுமே அதிருப்தி தான், அதில் இருந்து தன் தோழியை வெளியே எடுத்து விட வேண்டும் என்று, அவள் பண்ணாத தில்லுமுல்லு இல்லை.
 
Last edited:

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,167
683
113
Tirupur
இப்படியும் சில குடும்பங்கல் ள்
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
155
108
43
Dindigul
இதுங்க எல்லாம் என்னத்த சொல்ல