" யாத்ரா..... தங்கச்சி யாத்ரா.... " கூவிக்கொண்டே வந்தான் இலங்கோ.
சமையலறையிலிருந்து ஓடி வந்தவள், "இலங்கோ அண்ணா ! என்ன, என்னைக்கு இல்லாத ஆர்பாட்டமா இருக்கு. " என்றபடி விராந்தையில் வந்து நின்றாள். அருகாமையில் வந்த ஔவியனைப் பார்த்து ஔவியனைப் பார்த்துவிட்டு " அண்ணாவ இவ்வளோ சந்தோசமா பார்த்ததே இல்லையே " என்றாள்.
முகம் நிறைந்த புன்னகையோடு வந்த இலங்கோ யாத்ராவின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். ஔவியன் பின்னாடியேச் சென்ன்றான்.
"என்ன இலங்கோ அண்ணா! என்ன ஆச்சி இன்னைக்கு உங்களுக்கு ? "
"உன்னோட கனவு, ஔவியனோட கனவு நனவாக போகுது. " என்றான்.
இருவரும் இலங்கோ சொல்லப்போகும் அந்த நற்செய்திக்காக காத்திருந்தார்கள்.
அந்த நேரத்தில் உள்ளே போகலாமா வேண்டாமா என்ற இரு மனதோடு தயங்கியப்படியே பெண்ணொருத்தி வெளியே நின்றுக்கொண்டிருந்தாள்.
இலங்கோ "இனியா" என்க அவள் உள்நுழைந்தாள்.
ஆச்சரியத்தில் வாய் பிழந்த யாத்ரா ,
"அண்ணா! சொல்லவே இல்ல, இதெல்லாம் எப்ப நடந்துச்சி ?"
என்று ஓரக்கண்ணால் இனியாவைப் பார்த்து ஒரு விதமான சிரிப்போடு உதட்டை ஒரு பக்கம் வளைத்து, சிரித்து நகையாடினாலும் எதையும் கண்டுகொள்ளாதவனாய் இலங்கோ இனியாவிற்கு சைகைகாட்ட இனியா காசோலை சீட்டொன்றை எடுத்து யாத்ராவின் கையில் வைத்தாள்.
" உன்னோட, ஔவியனோட கனவு நனவாகட்டும்" என்று வாழ்த்தி நின்ற இலங்கோவின் உதடுகள், ஆரவாரமற்ற நிறைந்த புன்னகையில் விரிந்து நின்றது.
யாத்ரா கையிலிருந்த காசோலையை எடுத்து பார்த்தாள். " ரொம்ப நன்றியண்ணா. மொத்த காசையும் எனக்கே கொடுத்துட்டிங்களே. கீதாவுக்கு உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. மத்த வீட்லயெல்லாம் எத்தன சகோதரர்மார் இருக்காங்களோ அத்தனை பங்கா பிரிச்சிதான் எடுப்பாங்க. ஆனால்.... வீட்ட விட்டு வந்த பிறகும்... உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் எடுத்துக்காமல் மொத்தத்தையும் எனக்கே கொடுத்துடிங்க. ரொம்ப நன்றி அண்ணா. " அவளின் குரல் சற்று தள்ளாடி அமைதியானது.
"யாத்ரா, இந்த காச மூனு பங்கா பிரிச்சால் பிரயோசனமா எதையும் செய்ய முடியாது. உங்க ரெண்டு பேர்ட எண்ணமும் நோக்கமும் நல்லது. சரியான திட்டம் இருக்கு. அஞ்சு தலைமுறையா கூலி தொழிலாளியா இருந்த நாம அதே தொழில சொந்தமா செய்றதுன்றது சாதாரண விஷயமில்ல. அந்த அசாதாரண செயல் வெற்றி பெறனும்னால் நானும் கீதாவும் என்ன வேணும்னாலும் செய்யலாம். அதோட நீ யென் தங்கச்சி. உன்னோட இலட்சியங்களுக்கு நா உதவதானே வேணும். இது நம்ம சமூகத்துக்கே தேவையான ஒரு மாற்றம். இதுல நானும் பங்கெடுத்துக்குறதுல எனக்கு பெருமதான். சகோதரர்கள் நாமளே ஒற்றுமையா செயற்படல்லனால் மற்றவங்க காலத்துக்கும் நம்மள மிதிச்சிகிட்டுதான் இருப்பாங்க. நாம உழைப்பாளிகள்தான். சோம்பேறிகளும் இல்ல, முட்டாள்களும் இல்ல. நாம நினைச்சா நாட்டோட பொருளாதாரத்தையே தலைகீழா மற்ற முடியும்." எனச் சொல்லி முடித்தான் இலங்கோ.
இலங்கோவின் பேச்சியில் வியந்த இனியா வைத்த கண் அகலாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். மறுபுறம் இப்படியொரு ஆரோக்கியமான சமூக சிந்தனை கொண்ட குடும்பத்தையும் நினைத்து வியந்தாள்.
"ம்க்று ம்க்று..." இருமல் சத்தத்தோடு இனியாவின் பார்வை தவத்தை களைத்த யாத்ரா. " மற்ற இடங்கள்ளயெல்லாம் காசு எழுதினதிலருந்து கைக்கு வரும் வரை அம்பது முறைகிட்ட ஆக்களையேதான் கூப்பிட்டு கூப்பிட்டு எடுப்பாங்க. உங்கட ஒபிஸ்ல அப்படி இல்லையோ. வீட்டுக்கே வந்துதான் ஹேண்டவ் பண்ணுவிங்க போல. ரொம்ப நன்றிங்க.." என்றாள்.
ஏதோ பொடிவைத்துதான் பேசுகிறாள் என்பதை தெரிந்துக்கொண்ட இனியா சமாளிக்க முயற்சித்தாள்.
" அது...அது...அது வந்து....அப்படி இல்லங்க. நான் இந்த பக்கம்தானே வரணும். அதுனாலதான் கையோட எடுத்துட்டு வந்துட்டன். "
"உங்கட வீடு இந்த பக்கமில்லலலையே? கோவிலடியோட திரும்பணும்தானே..." யாத்ரா விடுவதாயில்லை.
"யேண்டி யாத்ரா? வீட்டுக்கு வந்தவங்கள கேள்வி கேட்டு கொல்லுற. போ, போய் பெசன் ஜீஸ் போட்டு கொண்டு வா."
ஔவியன் யாத்ராவை இவ்விடத்தை விட்டு நகர்த்தி விட்டு அவர்கள் இருவரும் தனியாக பேசிக்கொள்ளட்டும் என்றெண்ணி மெதுவாய் அவனும் நகர்ந்து செல்ல இலங்கோ இனியாவோடு சிரித்து இன்பமாய் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான்.
பின்னால் நின்று இடுப்போடு கைப்போட்டு ஒரு இறுக்கு இறுக்கி விட்டு அவளது தோள்பட்டையில் தன் நாடியை வைத்தவன் அவளது கைகளிலிருந்த காய்களை பார்த்தான்.
"என்னாடி இது காய் மாதிரி இருக்கே. பழம் இல்லையா? பழமா பாத்து பிடுங்கியிருக்கலாமே? "
" நேத்து மலரக்கா வந்தப்ப நர்மதா வாராள்னு சொல்லி பழம் கொஞ்சம் கேட்டாங்க. இருந்த எல்லா பழத்தையும் பிடுங்கி கொடுத்துட்டென். இது பரவாயில்ல. அவ்ளோ பச்சன்னு இல்ல. கொஞ்சம் புளிப்போட நல்லாதான் இருக்கும். என்று சொன்னவள் ஒரு பக்கம் கண்களை திருப்பி "அங்க பாருங்க, எவ்ளோ நெருக்கமா சந்தோசமா பேசிகிட்டுருக்காங்கண்ணு. அவங்களுக்கு இப்ப எத கொடுத்தாலும் அமிர்தம்னு நெனச்சி மட மடன்னு குடிப்பாங்க. " என்க ஔவியன் சிரித்தான்.
" அது சரி... இந்த நர்மதா குட்டி இன்னும் அந்த வீட்டுக்கு வேலைக்கு போய்கிட்டா இருக்காள்? அந்த ஒரு மாசம் மட்டும்தான் அங்க நிப்பா. அப்பறம் ஸ்கூல் போட்டுறுவேன்னு சொன்னிச்சே மலரக்கா. இன்னமுமா அந்த வீட்லருந்து வரல்ல? "
" ஆமா, கொற மாசத்துல ஸ்கூல் போய் சேர்ரதுல என்ன பிரயோசனம். ஒரேடியா ஜனவரியிலேயே போகட்டுமேனும், அதுவர நர்மதா எங்கூடவே இருக்கட்டுமேன்னும் சொன்னாங்களாம். " என நர்மாதாவை விட்டு பிரிய மனமின்றி இருப்பதாகவும் அவள் கூட இருந்தால் நேரம் போவதே தெரியாது... கலகலன்னு பேசி சிரித்துக்கொண்டு சந்தோசமாக இருப்பாள். அதனால் அவளை விட்டு பிரிய மனமில்லை.உடனே போய்விட்டால் மனசு கஷ்டபடும். அதனால் ஜனவரி வர இருக்கட்டும் என்றும் அதுவரை தானே அவளுக்கு படிபிப்பதாகவும் அன்பும் பாசமும் கலந்த வார்த்தைகளைக் கூறி நர்மதாவை அனுப்ப மறுத்த கதையை மலர் சொன்னதாக ஔவியனிடம் கூறினாள் யாத்ரா.
ஔவியனுக்கோ ஆத்திரம் தலைக்கேறியது. விறுவிறுவென வெளியே நடந்தவன் ஏறி அமர்ந்து ஒரு மிதி மிதிக்க புறப்பட்ட பைக் மலரின் வீட்டின் முன்புதான் நின்றது.
" நர்மதா.... நர்மதா...." இவன் சத்தத்தில் அனைத்து வாயில்களலிருந்தும் ஒவ்வொரு தலையாக வரிசையா வெளியே வந்து நின்றது. மலரும் வந்தாள்.
"என்ன? என்ன ஔவியன் தம்பி என்னாச்சி?"
"ஏதாவது ஆகும் வரதான் பாத்துகிட்டுருக்கிங்களா ? நர்மதா எங்க? அவள் கூப்பிடுங்க. "
" அவ நேத்து அந்தியபோல வந்து இன்னைக்கு காலையிலயே அந்த வீட்டுக்கு போய்ட்டா. "
"அப்படியா ? ரொம்ப நல்லது. மேன் அந்த சின்ன பிள்ளைய வீட்டு வேலக்கி அனுப்புறிங்க? ஒரு மாசத்துல வந்துருவான்னு சொன்னிங்க. ஆனா இன்னும் அங்கதான் இருக்காள். உங்களுக்கு அறிவே இல்லையா மலரக்கா? அவளுக்கு ஏதாவது ஆனால் என்ன பண்ணுவிங்க ஹா? " படபடவென வார்த்தைகளை அவிழ்த்தான்.
" அப்படிலாம் ஒன்னும் ஆகாது ஔவியன் தம்பி. அந்த அம்மா நர்மதாவோட ரொம்ப நல்ல மாதிரி. நர்மதானால் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். பாசமா பாத்துக்குறாங்க. படிக்க வக்கிறன்னும் சொலலியிருக்காங்க. போன கிழம கூட அவக்கு காய்ச்ல்னு சொல்லி மருந்தெல்லாம் எடுத்துகொடுத்துருக்காங்க. நல்லாதான் பாத்துக்குறாங்க ஔவியன் தம்பி. "
" நல்லா பாத்துக்குறாங்கன்னால்.... ஓடியாடி விளையாட வேண்டிய வயசுல வீட்டுவேலை செய்யணும்னு அவளுக்கு என்ன தலையெழுத்தா? மொதல்ல உங்களதான் பொலிஸ்ல பிடிச்சிகொடுக்கணும். " சனமே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது.
"மலரக்கா உங்களுக்கு நா கடைசியாக சொல்லிட்டெ. நாளைக்கே போய் நர்மதாவ கூட்டிகிட்டு வந்துருங்க. இல்லன்னால் நான் பொலிஸ்ஸோடதான் வந்து நிப்பெ. " அவன் வார்த்தைகள் கடுமையாகவும் உறுதியாகவும் வந்து விழுந்தன. பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். இடி முழங்க மழை பெய்து ஓய்ந்தாற் போல ஆனது அந்த இடம்.
சுற்றியும் பார்க்க ஒவ்வொரு முகமும் அவளை பேய்களாய் பிடித்து ஆட்டுவது போல் இருந்தது. வீட்டினுள்ளே சென்று தொலைபேசியை எடுத்தாள்.
" ஹலோ மெடம்... நான் நாளைக்கே வந்து நர்மதாவ கூட்டிகிட்டு போற. அவள ரெடியாகி இருக்கச்சொல்லுங்க."
" ஹலோ மலர் என்னாச்சி? யேன் திடிர்ணு இப்படி பேசுற நீ?"
" இல்ல இல்ல, நீங்க அவள விட்டுங்க. யென் மகள் இனி என்னோடயே இருக்கட்டும்."
"என்ன நடந்துச்சின்னுதானே கேட்குற. உனக்கு நா கேட்குறது விளங்கலயா? ஓ பாட்டுக்கு பேசிட்டே போற? மொதல்ல என்னா நடந்துச்சின்னு சொல்லு. "
"ஒன்னும் நடக்கல மெடம். நீங்க நர்மதாவ அனுப்பிவிடுட்டுருங்க. இல்ல நானே நாளைக்கு வந்து கூட்டிட்டு வந்துர்ரென் "
" ஒன்னும் நடக்காமல் நீ திடிர்ணு இப்படி பேச மாட்டாய். "
" இல்ல மெடம்....ஔவியன் தம்பி வீட்டுக்கே வந்து சத்தம் போட்டுட்டு போகுது. பொலிஸ்க்கு போவென்னும் சொல்லுது. அதுதா...."
" நா நினைச்சேன். அவந்தான் ஏதாவது குழப்பியிருப்பினான்னு. யேன் அவ இங்க நல்ல சாப்பாடு சப்பிட்டுகிட்டு இருக்கது பிடிக்கலயாமாம் ? அங்க வந்து நீங்க சாப்பிட்ற அந்த பிச்சக்கார சாப்பாட்ட சாப்பிடனும்னுனா இப்படி பண்றிங்க. அவள படிக்க வக்கிறன்னும் சொன்னேன்தானே. உங்களுக்கெல்லமா நல்லது செய்யகூடாது. அதானே சொல்லுவாங்க... 'அட்டைய கொண்டுவந்து மெத்தையில வச்சாலும்...." என்று சொல்லி மீதியை முழுங்கினாள்.
" அப்படிலாம் பேசாதிங்க மெடம். ஔவியன் தம்பி சொன்னா சரியாத்தான் இருக்கும். "
"சரி சரி. திடிர்ணு கூட்டிட்டு போய்ட்டால் எப்படி? நா வேறாக்கள பாக்கணும்தானே. ஒருத்திய தேடிபிடிக்கும்வர அவ இங்கதான் இருந்தாகணும். ஒரு கிழம பொருத்து வந்து கூட்டிட்டு போ. அதுக்குள்ள இன்னொருத்திய பாத்துருவன். இப்பதான் ஒடம்பு வச்சி பாக்க லச்சணமா இருக்கா. திரும்பவும் அந்த லயத்துக்கு வந்து ஓணான் மாதிரி ஆகதான் போறா. எனகீகென்ன. " என்று அழைப்பை அவளே துண்டித்துவிட்டாள்.
"ஔவியன் பேசிட்டு போனமாதிரிக்கு சில வேல நாளைக்கு பொலிஸோட வந்துட்டால் ? இந்தம்மா வேற இப்படி பேசிட்டு போன கட் பண்ணிட்டாங்க. ம்... படிப்பும் பணமும் இல்லன்னா இப்படித்தான் ஒரு ஒருத்தர்டயும் ச்சிபட்டுகிட்டு கெடக்கணும். "
சிறியவளுக்கு மட்டும் இரவு உணவை கொடுத்துவிட்டு நாளைய நாள் என்ன நடக்குமோ என்ற யோசனையிலேயே தூங்கிப் போனாள்.
வழமை போலதான் விடிந்தது. ஆனால் மலரின் செவிகளில் மட்டும் அன்றைய சேவலின் கூவல் ஆஹிரி இராகத்திலேயே ஒலித்தது.
" ஐயோ மலரக்கா.....மலரக்கா.... " அலறியடித்துக்கொண்டு ஓடி வந்துக்கொண்டிருந்தாள் ஒருத்தி.
என்ன என்று பார்ப்பதற்காக வெளியே வந்தாள் மலர்.
"மலரக்கா....நர்...நர்மதா....நர்மதா..."
என்ன சொல்ல வருகிறாள் புரியாமல் பொறுமையாய் நின்றாள் மலர்.
" ஐயோ மலரக்கா.... இப்படி நடக்கும்னு நெனச்சி பாக்கலயே....யேன் அக்கா நர்மதாவ அந்த வீட்டுக்கு அனுப்புனிங்க? "
"ஏண்டி...என்னாச்சி... அந்தம்மா வேறொரு ஆள பேசிட்டு நர்மதாவ அடுத்த கிழம மாதிரி வீட்டுக்கு அனுப்புறன்னுதான் சொன்னாங்கடி. கண்டிப்பா யே மக அடுத்தக்கிழம வந்துருவா. " வந்தவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி பதறுகிற விதத்தில் இவளின் இதயம் வேகமாய் அடித்துக்கொள்ள உதடுகள் நடுங்க எந்த கற்பனையுமே இன்றி பேசினாள்.
"ஐயோ அக்கா நம்ம நர்மதா இனிமேல் வரவே மாட்டா போல. நம்ம புள்ளைய அந்த வீட்டாக்கள் ஏதோ செஞ்சிட்டாங்க. ஆமா ஏதோ செஞ்சிட்டாங்க. மாடியிலருந்து கீழ விழுந்துட்டாள்னு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய்கிட்டுருக்காங்க அக்கா. பாவம் புள்ள தலையில ரத்தம் கொட்டுது. நா பாத்தென். தூக்கிகிட்டு போறாங்க. "
பேரிடியே விழுந்தது மலரின் இதயத்தில். மயங்கியே விழுந்தாள்.
ஔவியனுக்கும் தகவல் போய்ச்சேர , கொதிக்கும் தீக்குழம்பாய் பைக்கை எடுத்தவன் புறப்பட்டான். அவன் பின்னாடி சில இளைஞர்களும் பைகிள் சென்றார்கள். புழுதி பறக்க பாதையில் வீழ்ந்து கிடந்த இலைச் சருகுகள் எல்லாம் பறக்க சென்றன அந்த வண்டிகள்.
....விஞ்ஞானம் தீண்டாத கலைகள் தொடரும்....

Last edited: