• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராட்சசனின் இதயக்கைதி நீயே! 4

Rizka muneer "Rizii"

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 12, 2022
Messages
16
ராட்சசனின் இதயக்கைதி நீயே..


காற்றை கிழித்து புயல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது வீரேந்திர ஆதவனின் வண்டி.

இருக்கையில் ஒய்யாரமாய் அமர தாராளமாக இடம் இருக்கையிலும் அவளோ வெளிரும் கோழிக்குஞ்சியை போல் கதவை ஒட்டி அவளிற்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவனையே இமை மூடாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

இன்னும் நடந்த எதையும் யூகிக்க முடியாது பிரம்மை பிடித்தது போல் விழித்துக் கொண்டிருந்தாள். இருந்தும் அவன் அவளிற்கு தாலி கட்டியது அவளை பெரிதும் பாதிக்கவில்லை,, அவள் ஒன்றும் காதலித்து தன் மணவாளனுடன் கரம் கோர்க்க பல கனவுகளுடன் மணமேடையில் அமர்ந்திருக்கவில்லை... பெண்ணவள் மணமகனருகில் அமர்ந்திருந்தது என்னவோ தனக்கும் இந்த திருமணத்திற்கும் ஏதும் தொடர்பில்லை போலல்லவா,,, திடீரென அவன் வந்து தாலி கட்டியதே அவளின் இந்த நிலைக்கு காரணம்.. அது மட்டுமின்றி அவனின் ஆஜானு பாகுவான் தோற்றம் அவளுக்கு ஹல்க்கே அருகில் அமர்ந்திருப்பது போல் தோன்றியது...

அவனின் கடுகு போட்டாலும் பொரியும் உர்ரென்ர இறுகிய முகபாவனையை கண்டு பூனைகுட்டி மேலும் பயந்து விட்டது போலும்....

அவனோ தான் ஒருத்தியை தாலிகட்டி இழுத்து வந்தேன் என்ற எந்தவித சலனமுமின்றி எதுவும் நடவாதது போல் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாய் சாய்ந்தவாறு மொபைலை துருவிக் கொண்டிருந்தான்.

திடீரென வண்டி நிற்க அவன் இறங்கி செல்று கதவை டமார் என்று அறைந்து சாத்தவும் தான் பெண்ணவள் சுயஉலகுக்கு வந்தாள்... இப்பொழுது தான் தான் எங்கு இருக்கிறோம் என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு மிரட்ச்சியுடன் வண்டியை விட்டு இறங்கினாள்.

மான் விழிகள் அவள் பேச்சை மறுத்து படபடக்க அப்பொழுது தான் அந்த இடத்தை ஆராய்ச்சி செய்தாள்... விசாலமான் பெரிய நவீன விதமாய் அமைக்கப்பட்ட வீடு... புதியவர்கள் அங்கே வந்தால் வாயை பிளக்கும் அளவு அழகாகவும் விசாலமாகும் காணப்பட அவளுக்கு வாயை பிளக்கும் அளவுக்கு எல்லாம் அந்த வீடு ஒன்றும் அவளிற்கு காணாது கண்ட பொருள் போல் காட்சியளிக்கவில்லை,, அவளின் வீடும் இதே போன்று அனைத்து வசதிகளும் உடைய அரண்மனை போன்றதல்லவா... ஆடம்பரம் வசதியான வாழ்கையை எதிர்பார்க்குபவளில்லை மதி...

அந்த வீட்டை தோட்டம் பூந்தோட்டம் போல் அழகான பூமரங்கள் நடப்பட்டு கண்ணை கொய்தும் அளவு அழகாய் காட்சி அளித்தது ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் அவளில்லையே திருவிழாவில் தொலைந்து போன குழந்தையை போல் மலங்க மலங்க சுற்றும் முற்றும் பார்த்தவாரே விழித்துக் கொண்டிருக்க அவளருகே ஓர் பெண்மணி வந்து நின்றது கூட அவளுக்கு தெரியவில்லை.

"ஐயா உங்கள வர சொன்னாரு" என்று அப்பெண் கூறவும் "அ" என அவர் குரல் கேட்டு திடுக்கிட்டு வரை பார்த்தாள்.

அப்பெண் மறுபடியும் "உங்கள ஐயா உள்ள வர சொன்னாரு" என்று கூறியவாறு வீட்டினுள் செல்ல மதி ஏதும் பேசாத விழித்தவாறு அவர் கூறியதற்கு தலையை ஆட்டியவாரே அந்த பெண்மணி பின்னே அந்த வீட்டினுள் நுழைந்தாள்.


-------


"டேட் என்ன டேட் இப்படி சும்மா சிட் பண்ணிட்டிருக்கீங்க.. ஏதாச்சும் பண்ணுங்க டேட் " என்று சோபாவில் கைகளை காலிற்கு முட்டு கொடுத்து அமர்ந்திருந்த ராகுல் நாத்தை நோக்கி இயலாமையுடன் கத்திக் கொண்டிருந்தாள் தேஜூ..

"யாருன்னே தெரியல ஒருத்தர் வந்தாரு,, தாலிய கட்டி அக்காவ இழுத்துட்டு போய்ட்டாரு,, நீங்க ரெண்டு பேரும் என்னடான்னா இப்படி உட்கார்ந்துட்டிருக்கீங்க"

"அக்கா பாவம்,, அவ குழந்த மாதிரி ரொம்ப வெகுளி.. அவ ரொம்ப பயந்து இருப்பா,," என்று தன் தமக்கையை நினைத்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள் தேஜூ.

ராகுல்நாத் மற்றும் சீதாவதி அவமானத்தில் கூனிக் குறுகி அமர்ந்திருந்தனர். பெரிய பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்திலிருந்த அனைவர் மத்தியிலும் பெண்ணளுக்கு வேறு மதனிற்கும் திருமணம் நடக்க இருக்க வேற ஒருவன் வந்து தாலியை கட்டி அழைத்து சென்றதால் தங்களது கவுரவம் அடி வாங்கி விட்டதல்லவா....

அது மட்டுமின்றி மதனோ கையிற்கு எட்டிய வெண்ணெய் நழுவி விட்டதில் காட்டு கத்து கத்தி விட்டு சென்றுவிட்டான்.

"என்ன அங்கிள் இங்க நடக்குது.. எனக்கு தானே அவள கட்டி தராதா எங்க அப்பாக்கு வாக்கு கொடுத்தீங்க ... இப்போ என்னன்னா எவனோ ஒருத்தன் வந்தான் தாலிய கட்டி இழுத்துட்டு போய்ட்டான்.." என்று வெறிபிடித்தவன் போல் கத்தினான்.

" இத நான் சும்மா விட போறது கிடயாது.. அவ எனக்கு தான் சொந்தம்,, நான் அவள எவனுக்கும் விட்டுக் கொடுக்குறதா கிடையாது.. அவ எனக்கு எனக்கு மட்டும் தான்" ராகுல் நாத், சீதாவதி முன் சொடக்கிட்டு கத்தயது இன்னும் சீதாவதியின் காதில் ஒளித்துக் கொண்டிருக்க தன் அருகில் அமர்ந்திருந்த கணவரை பார்த்து புலம்பத் துவங்கினார்.

"இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன்.. நீங்க தான் கேட்கல.. அவன் வந்து தாலி கட்டி கூட்டிட்டு போனான்னா இவளுக்கு எங்க போச்சு புத்தி.. அவன் இழுக்குற இழுப்புக்கு அவளும் எந்த வித எதிர்ப்பும் சொல்லாம போய்ட்டா" என்று பல்லை கடிக்க தேஜூ அவரை முறைத்தவாரே "அம்மா உனக்கு வேற வேலையே இல்லயா.. எப்போ பாரு அக்காவயே ஏதாச்சும் சொல்லிட்டு இரு,, இல்லன்னா உனக்கு தான் தூக்கம் வராதே"

சீதா தேஜூவை பார்த்து அதட்டலாக "நீ சும்மா இருடி.. " ராகுல்நாத் புறம் திரும்பி "நீங்க என்ன பண்ணுவீங்க ஏது பண்ணுவீங்கன்னு தெரியல இதுக்கு எப்படி சரி ஒரு முடிவு கட்டுங்க.." என்று மனதில் ஓர் கணக்கை போட்டவாறு கூற ராகுல்நாத் ஒரு முடிவுடன் தன் மொபைலை எடுத்தார்.


-----


உள்ளே நுழைந்தவள் கண்ணில் பட்டது என்னவோ அவளின் ஹல்க்கே... சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவன் துளைத்தெடுக்கும் பார்வையில் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்... அவளோ அப்படி மிரட்ச்சியாய் கதவை ஒட்டியவாரு அவன் பார்வையின் வீரியம் தாங்காது தலையை கவிழ்ந்து நின்று விட்டாள்.

அவளை பார்த்தவாரே எழுந்தவன் தான் அணிந்திருந்த கோர்ட்டை கழட்டி சோபாவில் எரிந்துவிட்டு அழுத்தமான நடையில் அவளை நோக்கி வர மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு கைகால்கள் உதறலெடுக்கத் துவங்கி விட்டது... எரிக்கும் பார்வையுடன் சிங்கம் போல் கம்பிரமான நடையுடன் வந்தவன் தன் சூடான மூச்சுக் காற்று அவளை தீண்டுமளவு நெருங்கி நிற்க பெண்ணளோ தன் மிரண்ட மான் விழிகளை உருட்டி உருட்டி அவனை ஏறிட்டு நோக்கினாள்.

ஓர் ஆணை இன்று தான் இவ்வளவு நெருக்கத்தில் பார்க்கிறாள் சொல்லப் போனால் எந்த ஆண்மகனிடமும் அவள் தூரத்திலிருந்து கூட பேசியதே இல்லை.. ஏன் அவள் தன் தந்தையிடம் கூட வாய் திறந்து ஓரு வார்த்தை பேசியது கிடையாது.. இன்று இவனோ இவ்வளவு நெருக்கத்தில் வந்து நிற்கவும் மான் குட்டியின் கிலி கிழியாய் கிழிக்கத்துவங்கி விட்டது.

சட்டென வீர் கையை மேலே உயர்த்தி தட்டியவன் "எல்லாரும் இங்க வாங்க" என்று அதிகார குரலில் கர்ஜிக்க அவன் குரல் அந்த வீட்டில் சுற்றி எதிரொலிக்க மதியிற்கோ பக்கென்றாகி விட்டது.மான் குட்டி மேலும் கதலவோடு ஒட்டிக் கொண்டது.

வீரின் அழைப்பில் அங்கு வீட்டில் வேலை செய்யும் அனைவரும் மிரட்சியுடன் ஹாலில் வந்து கைகட்டி நின்றனர். பத்திற்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்தனர்.

வீர் மதியிடமிருந்து விழிகளை அகற்றாது இனி யாருக்கும் இங்க வேல கிடையாது... ஆல் ஒப் யூ கெட் லாஸ்.. என்று அதிகார குரலில் கூற அனைவரும் அவனை எதிர்த்து பேச தைரியமின்றி வெளியேறினர்.

"அப்புறம் நீ.." என்று மதியை நோக்கி ஒற்றை விரல் நீட்டியவன் "ஆமா உன் பேரென்ன.. நெற்றியை நீவியவாறு வினவ "அப்போ பேர் தெரியாம தான் வந்து தாலி காட்டினாரா.. " என்று மனதுக்குள் நினைக்க அவள் மௌனமாய் இருப்பதில் எரிச்சல் அடைந்தவன் "ஏய் உன்ன தான்" ஒற்றை புருவமுயர்த்தி மிரட்டும் தொனியில் அவன் குரல் வந்து விழ மதி எச்சிலை கூட்டி விழுங்கியவாரு " ரி..ரி.. ரிஸிமதி" மென்று விழுங்கி வார்த்தைகளை வரவழைத்து அவனிடம் கூற "ம்ம் நொட் பேட்" என்றவாறு சோபாவில் போய் தொப்பென விழுந்தான்.

"ஓய் பேப்ஸ் நான் எதுக்கு உன்ன தாலி கட்டி இங்க கூட்டிட்டு வந்தேன் தெரியுமா.. " என்று எள்ளல் புன்னகையுடன் வினவ அவளோ இல்லை என்னும் விதமாய் தலையை இரண்டு பக்கமும் ஆட்டி வைத்தாள்.

"தாலி கட்டி சந்தோசமா குடும்பம் நடத்தி குழந்த பெத்துகிட்டு நாம் இருவர் நமக்கிருவர்ன்னு வாழன்னு நீ நெனச்சிருந்தா சுத்தமா அப்படி எதுவும் கிடையவே கிடையாது" ஒற்றை புருவம் தூக்கி திமிராய் கூறியவன் மேலும் "அப்புறம் எதுக்குன்னு பாக்குறியா.." என்றவனி கண்கள் சிவப்பேற "உன் அப்பன பலி வாங்க மட்டும் தான்.. அவன் கூட ஒரு பழைய கணக்கிருக்கு அத தீத்துக்க வேணாமா.. இங்க அடிக்கும் போது அங்க வலிக்கனும்.." என்று கோபத்திலில் வார்த்தைகளை கொப்பளிக்க அவன் கூற்றை கேட்டு அவள் இதழ்களில் விரக்தியாய் ஓர் புன்னகை சிந்தியது.

அவள் புன்னகையை பார்த்தவன் எழுந்து ஒரே எட்டில் அவளை நெருங்கி அவளின் கூந்தலை கொத்தாக கையில் பிடிக்க அவன் கொடுத்தவலியில் "ஸ்ஆ" என்று பெண்ணவள் கத்த அதை கணக்கில் கொள்ளாது "என்னடி திமுரா.." பல்லை கடித்தவன் பின் நக்கல் சிரிப்புடன் "பின்ன இருக்காம இருக்குமா என்ன.. போர்த் வித் கோல்ட் ஸ்பூன் ஆச்சே"

அவன் பிடி இறுகிக் கொண்டே இருக்க அவன் பிடியை விளக்கும் அளவு பலசாலி அல்லவே அந்த மான்குட்டி... வலியை தாங்க முடியாது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கன்னத்தில் தவழ்ந்து உருண்டோட அப்படியே அவனை ஏறிட்டு பார்த்தவளின் வதனத்தைக் கண்டவன் என்ன நினைத்தானோ சட்டென அவளின் முடியிலிருந்து கையை எடுத்தவன் தன் பிடரியை அழுத்த நீவித் தன்னை சமப்படுத்தி கொண்டான்.

"இனி இந்த வீட்டுல எல்லா வேலையும் நீ தான் செய்யனும்... நான் சொல்றத தான் கேட்கனும்.. என் பேச்ச மீறனும்னு நெனச்ச பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.. " தீவிரமான கூறியவன் மேலும் எல்லளாக "இவ்வளவு காலம் உங்க வீட்டுல சொகுசா வாழ்ந்த உனக்கு இதெல்லாம் கஷ்டமா தான் இருக்கும் என்ன பண்ண அதான் எனக்கு பொண்டாட்டி ஆகிட்டியே எல்லாம் பழகிக்க.. " என்று கூறியவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் மதி.

அதே நேரம் வெளியே போலீஸ் வண்டியில் சைரன்ஸ் சத்தம் கேட்க வீரின் இதழ்களிளோ லேசாய் இடதுபுறமாக கடைபுன்னகை குடியேறியது.


துடிக்கும்...

Wʀɪᴛᴇʀ : Rɪᴢɪɪ
 
Top