• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராட்சனின் இதயக்கைதி நீயே 3

Rizka muneer "Rizii"

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 12, 2022
Messages
16
இதயம் : 3

புயல் வேகத்தில் காற்றை கிழித்துக் கொண்டு கருப்பு நிற பீ எம் டபுள்யூ கார் வந்து அந்த மண்டபத்தின் முன் நிற்க வண்டியியை ஒட்டி வந்த டிரைவர் வேகமாய் இறங்கி வந்து பின் கதவை திறந்து விட தன் காலடியை அழுத்தமாய் அவன் பதித்தவுடன் நிலத்திலுள்ள புழுதிகளே மிரண்டனவோ என்னவோ மேலெழுந்து ஒடுங்கின.

காரிலிருந்து இறங்கியவனை கண்டவுடன் அங்கு இன்றிருந்த காவலர்களே இரு அடி பின்னால் தள்ளி நின்றனர்.

கருப்பு நிற உயர்ரக ஷூ அவனது தராதரத்தை எடுத்துக் காட்ட அவனணிந்திருந்த வெள்ளை நிற சர்ட் அவன் கட்டுமஸ்தான அவனிற்கே அடங்க மறுக்கும் திண்ணிய உடம்பில் கட்சிதமாய் பதிந்திருக்க அதன் மேல் அணிந்திருந்த வெள்ளைநிற கோர்ட் அவனது கம்பிரத்தை அழகையும் இன்னும் பலமடங்கு கூட்டி எடுத்துக்காட்டியது....

டிரிம் செய்யப்பட்ட தாடை அப்பொழுதும் போல் இறுகியே காணப்பட அதற்கு பொறுத்தினாற் போல் அவனது அதரங்களும் இறுகிக் காணப்பட்டது....

பார்த்தவுடன் அனைவரையும் ஓரிரு அடி தள்ளி நிற்கச் செய்யும் அவனது கூரிய வேல்விழிகள் கூலர்ஸ் அணிந்திருந்ததால் மறைந்து அனைவரிற்கும் தென்படாது இருப்பினும் அவனது கூரிய விழிகளுக்கு ஒவ்வொருவரின் ஒவ்வொரு சிறு அசைவு கூட துள்ளியமாய் தென்பட்டது.

கையிலிருந்த ரோலக்ஸ் வாட்ச்சை ஓர் சூழற்று சூழற்றி சரி செய்தவாறு அழுத்தமான சுவடுகளை வைத்து முன்னேறினான். அவனே வீரேந்திர ஆதவன்.
த கிரேட் நொம்பர் ஒன் பிஸ்னஸ் மேன் வீர்....


அவனை தடுக்கவோ பரிசோதனை செய்யவோ எந்த ஒரு காவலரும் முன் வரவில்லை.. அவனை பற்றி தான் அவர்கள் அறிவார்களே,,
அவன் நினைத்தால் தங்களை சுவடுகள் தெரியாது அழித்து விடுவான் என்றும் அறிவார்கள்,,

தனது கோர்ட்டை ஓர் பக்கத்தை முன்னால் இழுத்து விட்டவாறு ஓர் எட்டில் படிக்களில் ஏறி மண்டபத்திற்குள் நுழைய அனைவரும் அவனிற்கு மிரட்சியில் வழிவிட்டு நின்றனர்.

முதலமைச்சர் மகளின் திருமணம் என்பதால் அங்கு மீடியாக் காரர்கள் கேமராவுடன் குவிந்திருக்க ஐயர் மந்திரங்களை உச்சரித்தவாரே தாலியை எடுத்து மதனின் நோக்கி நீட்டிய நேரம் ஆண்மை ததும்ப கம்பிரமாய் ராஜ தோரனையில் வாசலில் வந்து நின்றவனை கண்டு கேமராவுடன் நின்றிருந்த மீடியா காரர்களில் ஒருத்தன் "டேய் அங்க பாருடா வீர் சார்" என்று அவனைக்கண்டு ஆச்சரியமாய் தன் சக மீடியா நண்பர்களிடம் கூற அனைவரும் பரபரப்பாக இரைச்சல் உண்டாக்கியவாறு தங்களுக்குள் கிசுகிசுவென பேசியவாறு அவன் புறம் திரும்பி கண்ணில் மின்னல் வெட்ட கேமராவை அவனை நோக்கி போகஸ் செய்தனர்.

பின்னே இருக்காத என்ன,, அவனை எளிதில் எவராலும் காணமுடியாது அல்லவா அதையும் மீறி கண்டாலும் அவன் அவர்களை ஓர் அற்ப பொருளாய் நினைத்து கடந்து செல்பவனாயிற்றே,,

இவர்களின் சலசலப்பு கேட்டு அங்கிருந்த அனைவரும் அவர்கள் புறம் திரும்பி அவர்கள் விழிகள் போன திசையை பார்த்தவர்கள் கண்களை விரித்து இவன் எங்கே இங்கே எனும் விதமாய் நோக்கியவாறு தங்கள் இருக்கையிலிருந்து தானாய் எழுந்து நின்றனர். ராகுல் நாத் மற்றும் சிதாதேவியும் அதில் அடங்குவர்.

ஐயர் கரம் அந்தரத்தில் தாலியை தாங்கியவாறு நிற்க மதனோ அதை பெற்றுக் கொள்ளாது அனைவரும் நோக்கும் திசையை நோக்கிக் கொண்டிருக்க பாவையவளோ எதிலும் நாட்டம் இல்லாதவாறு தலையை குனித்து கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தவள் நிமிர்ந்து அங்கு நின்றிருந்தவனை அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

கூலிங்கிளாஸ் வழியாக வீர் மணக் கோலத்தில் அமர்ந்திருந்த பேதையை ஓர் அழுத்தமாக பார்வை பார்த்துவிட்டு இதழோரம் ஓர் இகழ்ச்சியான புன்னகையை சிந்தியவாறு அரிமாவாய் அழுத்தமான காலடிகளை வைத்து மணமேடையை நோக்கிச் சென்றான்.

ராகுல் நாத்தின் அருகே வந்தவன் தன் கூலர்ஸ்சை கழட்டி தன் சேர்ட்டின் முன்புறம் சொருவியவாறு "மிஸ்டர் ராகுல்நாத் எப்படி இருக்கீங்க ஓ.. நான் மறந்தே போய்ட்டேன் ல.. என்ற நக்கல் தொனியில் சீர்ப் மினிஸ்டர் ஒப் சென்னை ராகுல்நாத்... என்று ஏளனமாய் இதழை வளைக்க ராகுல்நாத் அவனையே முறைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

"பார்த்து ரொம்ப வருசமாச்சுல்ல,, ஆனாலும் பழைய கணக்கு சோல்ட் பண்ண வேண்டியது இன்னும் நிறைய இருக்கு" அழுத்தமாய் கூறியவன் கண்களில் அனல் தெறித்தது.அவன் விழிகளில் தெறித்த அனல் அவரை தாக்கியதோ என்னவோ ஓரடி தன்னால் அவர் கால்கள் பின்னே சென்றது.

வீரின் கண்ணில் கர்வம் மின்ன அவரின் காதருகே குனிந்து "சிங்கம் இருக்குல அது எப்பொழுதும் அதோட இரைய ஸ்ட்ரைட்டா தாக்காது பதுங்கி அதோட நேரம் வரும்வர பொறுமையா காத்திட்டிருக்கும் அதுக்கான நேரம் வந்ததும் ஓரே பாய்ச்சல் தான்... என்று செய்கையில் தீவிரமாய் செய்து காட்டியவன் கண்களில் வெறி மின்ன தன் தாடையை நீவியவாறு இடது பக்கமாய் இதழை வளைத்து கடை சிரிப்பை தவழவிட்டவன் ", இருந்தாலும்.. அவ்ளோ சீக்கிரத்துல விட்டுடாது கொஞ்சம் கொஞ்சமாக அதோட இரத்தத்த உறிஞ்சி அணுஅணுவா சித்றவத பண்ணி அத தானும் ரசிச்சு ருசுச்சிதான் தன்னோட வெறிய தீத்துக்கும்,, இத ஏன் உன்கிட்ட சொல்றேன்னு உனக்கே புரிஞ்சிருக்கும்.. " என்று கூறியவனின் கண்களில் அப்பட்டமாய் வெறி தெரிய சிவந்த நரம்புகள் கண்களில் தெரிய அதை கண்டு ராகுல்நாத் மிரள அதன் விளைவாய் அவர் முகத்தில் வியர்வை முத்துமுத்தாய் உருண்டன.

அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவாறு "பொடிகார்ட்ஸ்" என்று உரக்க கத்தி அழைக்க அதை கேட்டு இகழ்ச்சியாய் சிரித்து வைத்தான் வீர்.

தங்கள் எஜமானனின் குரல் கேட்டு காவலர்கள் உள்ளே ஓடி வந்தவர்கள் வீரின் ஓர் அழுத்தப் பார்வையில் அங்கேயே நின்றனர்.

வீர் அங்கு இருக்கும் அனைவரையும் ஒரு பொருட்டாக கவனத்தில் கொள்ளாது தான் வந்த வேலை செய்முறை படுத்த மணமேடையில் ஏற மதன் எழுந்து எதுவும் புரியாது புதியவனை நோக்க பெண்ணவளோ தன் அருகில் வந்து நின்றவனை அசையாது விக்கித்துப் பார்த்துக் கொண்டிருக்க வீர் அதை ஒரு பொருட்டாக கொள்ளாது ஐயர் கையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலி ஓர் பிடுங்கியவன் குனிந்து பாவையவளின் சங்குக் கழுத்தில் ஏற்றி எந்த ஒரு மந்திரமுமின்றி அக்கினியை சாட்சியாய் எரிய மூன்று முடுச்சுக்களை இட்டான்.

பெண்ணவளோ தன் கழுத்தில் தவழும் மஞ்சள் கையிரையும் இமை சிமிட்ட மறந்து பார்த்துக் கொண்டிருக்க அவனோ அடுத்த செயலாய் அருகில் தட்டிலிருந்த குங்குமத்தை தன் நுனி விரலால் எடுத்து நெற்றி வகுட்டில் சூடி விட பெண்ணவளோ கன்னத்தில் ஓர் துளி கண்ணீர் உருண்டோட அவனை ஏறிட்டு நோக்கினாள்.

வீர் மதியின் ஓர் கையை பிடித்து எந்திரிக்கச் செய்தவன் அவள் கையை பிடித்துக் கொண்டு நடக்க அவளோ அவனையும் அவன் கையையும் மாறி மாறி நோக்கியவாறு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காது அவனின் இழுப்பிற்கு இசைந்து அவன் பின்னே சென்றாள்.

அங்கிருந்த அனைவரும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.. அனைவரும் அதிர்ச்சியாக நடந்த சம்பவத்தை நம்பமுடியாது ஸ்தம்பித்து நின்றிருக்க ராகுல்நாத் மற்றும் சீதாதேவியிற்கு அதிர்ச்சி மற்றும் இல்லாது அனைவர் முன்னிலையிலும் அவமானமாய் போக எதுவும் செய்ய முடியாது இருந்த இடத்திலே நின்றிருந்தனர்.
அந்த சிங்கத்தை எதிர்க்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை போலும்...

வாசலை நோக்கிச் சென்ற வீரின் கண்ணில் பட்ட சீதாதேவி பஸ்பமாகத் தவறவில்லை.

தேஜூவோ நடந்த சம்பவத்தில் அதிர்ந்திருந்தவள் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவர்கள் பின்னேயே கத்தி கொண்டே ஓடினாள்.

"அக்காவ எங்க இழுத்துட்டு போறீங்க.. அவள விடுங்க.. அவ பாவம்"

"அக்காஆ... " கத்தியவாரே வீரின் காரை நோக்கிச் செல்ல அவள் செல்ல முன் மதியை பின் சீட்டில் தள்ளியவன் தானும் அமர அவன் கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டது.

காரின் பின்னே "அக்காஆஆஆஆ... " எனும் அழைப்புடன் ஓட அவன் காரோ அவள் அதிவேகமாய் சென்று மறைய இயலாமையுடன் அதற்கு மேல் ஓட முடியாது மூச்சு முட்ட பெரியமூச்சுக்களை விட்டவாறு முட்டியில் கையை வைத்து அவன் கார் சென்று மறைந்த திசையையே கண்ணீருடன் வெறித்து நோக்கினாள்.



துடிக்கும்....
 
Top