• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரிஷி - அவன் எனக்கு எதரி

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
“அவன் எனக்கு எதிரி!!!

"ஒர்க் டென்ஷன எதுக்கு வீட்ல உள்ளவங்க கிட்ட காட்றீங்க மாமா?" மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கணவனை கத்திக் கொண்டிருந்தாள் பாவை...

தீக்ஷி மகா!!!

"என் வீட்டு ஆளுங்க கிட்ட காட்டுனா உனக்கு என்னடி வந்துது... மூடி கிட்டு கிளம்பு" அவளுக்கும் கத்தி விட ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது பாவைக்கு...

"அப்போ இது உங்க குடும்பம் மட்டும் தான் இல்லையா... நான் வெளி ஆள்... அப்படித்தானே?" அவனிடம் கத்திவிட்டு அவள் வெளியேற தோளை குலுக்கிக் கொண்டவன் எதுவும் பேசாமல் ப்ரஷப்பாக சென்று விட்டான்.

......

நிமிடங்கள் கழித்தும் அவள் அறையில் நுழையாததை உணர்ந்தவனுக்கு அப்போது தான் அவள் கோபித்துக் கொண்டு சென்றிருப்பாளோ என்ற எண்ணமே தோன்றிற்று போலும்....

"பக்கத்துல இருக்க வீட்டுக்கு போறதுக்கு இவ்வளவு பில்டப்பு... போடி" சமாதானப்படுத்த தோன்றாமல் அப்படியே உறங்கி விட்டான்.

***

காலை....

நாட்காலியில் கண்களை மூடி சாய்ந்திருந்தான் அவன்.

ஆதித்யன்!!!


"எஸ்கியூஸ் மீ சார்"

"எஸ் கம் இன்..." அவனை முறைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தவள் அவனிடம் கோப்பை நீட்ட வாங்கி படித்தவன் மேசையில் தூக்கிப் போட்டு விட்டு செல்ல எத்தனித்தவளை தடுத்து நிறுத்தினான்.

"மிஸ்.தீக்ஷி "

"கால் மீ மிஸஸ். சஞ்சய் ஆதித்யன்" அவள் அழுத்திச் சொன்னதில் அவனுதடுகள் புன்னகையில் விரிந்து சாதாரணமானது.

"அவரு தான் உங்க எதிரியாச்சே மேடம்.... அப்பிடி தானே சின்ன வயசுல இருந்து சொல்லி கிட்ருக்கீங்க?"

"ஆமா அவன் எனக்கு எதிரி தான்... அதுக்கு இப்போ என்ன பாஸ்?"

"ஒன்னில்லயே மிஸ்..."

"மிஸஸ். சஞ்சய் ஆதித்யன்" மீண்டும் திருத்தி விட இம்முறை அடக்க மாட்டாமல் சிரித்தவனை ஆன மட்டும் முறைத்தாள் பெண்.

"ஓகே ஓகே நோ டென்ஷன்... மிஸ்.. "

"யோவ் மரமண்ட நானும் மிஸஸ் மிஸஸ்னு சொல்லுன்னு சொல்லி கிட்ருக்கேன்... சும்மா கடுப்பேத்தி கிட்டு"

"சொல்லலன்னா என்னடி பண்ணுவ?"

"இன்னிக்கு கேக்க போற ட்ரெண்டர கிடைக்க முடியாத படி பண்ணுவேன் டா எரும"

"கால் மீ பாஸ் ஆர் சார்"

"அதே லாஜிக்ல நீங்களும் நான் சொல்றா மாதிரி பண்ணுங்க பாஸு..." உதட்டை சுழித்தவள்

"இன்னிக்குள்ள என்ன சமாதானப்படுத்தல... அப்பறம் உனக்கு எதிரியா தான் டா நிப்பேன்" உரிமையை கூட கோபமாய் வெளிப்படுத்தி விட்டு செல்லும் மனைவியை பார்த்து பக்கென சிரித்து வைத்தான் சஞ்சய் ஆதித்யன்!!!

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் எனினும் எப்போதும் ஊடல் இருந்து கொண்டே இருந்தது கூட சுவாரஷ்யமாகத் தான் இருந்தது அவனுக்கு...

அவன் பத்து வயதாக இருக்கும் போது அவர்கள் வீட்டுக்கு முன் வீட்டில் குடி இருக்க வந்தவர்கள் அவளுடைய குடும்பத்தினர்.

அவள் மட்டுமே அவள் பெற்றோருக்கு குழந்தையாக இருக்க பிடிவாதமும் திமிரும் கொஞ்சம் என்ன சற்றே அதிகம் தான்!

அந்த திமிர் தான் அவள் பால் அவனை சாய்த்ததுவோ???

அப்படித்தான் கூறியது மனசாட்சி.

அவனுக்கு பத்து வயதாக இருக்க அவளுக்கு எட்டு.

வாய் துடுக்கு அதிகம் என்பதால் இவனுக்கு ஏதாவது சொல்லி விட்டு ஓடி விடுபவளை பலி வாங்க இவன் காத்திருந்து ஆப்பு வைத்தால் அடுத்த நாள் அவனுக்கு அவளிடமிருந்து ஆப்பு கிடைத்திருக்கும்.

அக்கம் பக்கத்திலிருக்கும் அனைவரும் அவளுடன் நண்பர்களாயிருக்க இவன் யாரென்று கேட்டால் "அவன் எனக்கு எதிரி" என்ற சொல்லே அவள் தாரக மந்திரம்.

அப்படி இருந்தவளுக்கு எப்படி காதல் வந்து திருமணம் வரை வந்தது என்று இன்று கேட்டாலும் முழிப்பாள் தான்... ஆனால் அவன் மீது அப்படி ஒரு காதல் அவளுக்கு!

எதிலுமே நிதானம் என்பது இல்லவே இல்லை அவளுக்கு...

நான் உன்னை காதலிக்கிறேன் என மொட்டையாய் சொல்லி விட்டு சென்றவளை பார்த்து அவன் தான் அந்த நாள் விழி பிதுங்கி நின்றான்.

அதன் பிறகு அவளிடமிருந்து எந்த பதிலுமே வராததில் குழப்பம் வேறு அவனுக்கு...

பின்னே காதல் சொல்லி விட்டு சென்றவள் அதன் பிறகு அவனை திரும்பி கூட பார்க்காமல் இருந்தால் குழம்பாமல் என்ன செய்வான் அவனும்???

வீட்டில் திருமணம் பற்றி பேச சம்மதித்து விட்டவன் அறைக்குள் சென்று நிற்க இடுப்பில் கை வைத்து முறைத்தவாறு நின்றிருந்தவளை பார்த்து அதிர்ந்து தான் போனான் உண்மையில்....

அப்போது சொன்னது அவனுக்கு இன்றும் அச்சு பிசகாமல் நினைவிருக்கிறது.

"அதான் நான் உன்ன லவ் பண்றேன்னு சொன்னேன்ல... எதுக்குடா இன்னொருத்திய கல்யாணம் பண்ண ஒத்து கிட்ட... என்ன பாத்தா எப்பிடி தெரியுது உனக்கு?" ஹை டெசிபலில் கத்தியவள் அதிரடியாய் அவனதரங்களில் தன் அதரங்களை பொருத்தி விலக அதிர்ச்சியில் உறைந்திருந்தவனிடம்

"கல்யாணம் பிடிக்கல எனக்கு மகா தான் வேணும்னு சொல்லு போ" அவள் சென்றும் எத்தனை நேரம் அப்படியே இருந்தானோ?

அதை நினைத்து இப்போது இளம் முறுவலொன்று அவன் உதடுகளில்...

முன் தினம் தான் அவன் காதலே உணர்ந்திருக்க அவள் பேசாததில் வீம்புக்காய் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டவன் அவளிடமிருந்து அப்படி ஒரு அதிரடியை எதிர்பாராமல் திகைத்து நின்று பின் சிரித்து விட்டான்.

தன் எண்ணங்களில் சுழன்றிருந்தவனை திடுக்கிட்டு நிமிர வைத்தாள் அவன் மனையாள்.

புன்னகையுடன் இருந்த உதடுகள் அவளை கண்டு முறைக்க உதட்டை சுழித்தவள் தானும் முறைத்துக் கொண்டே நின்றாள்.

"சொல்லுங்க மிஸ்.."

"எனக்கு லீவு வேணும்"

" எதுக்காக?"

"எனக்கு ரொம்ப தலை வலியா இருக்கு பாஸ்.. என்னால சத்தியமா முடில.. ப்ளீஸ் " படபடவென பொரிந்து கொட்டுபவளின் முகம் என்றுமல்லாமல் வேதனையில் கசங்கி இருக்க அவள் சோர்வை அப்போது தான் அவனும் உணர்ந்து கொண்டான் போலும்.

"ஏய் மகி என்னாச்சு... வா ஹாஸ்பிடல் போலாம்... ரொம்ப வலிக்குதா?" தன் கோர்ட்டை அவசரமாக மாட்டியவன் பதறியபடி அவளருகில் வர அவனையே கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மாது.

"என்ன எதுக்குடி பாத்துட்ருக்க.. வா போலாம்"

"உங்களுக்கு ஏன் பாஸ் என் மேல அக்கறை... நானே பாத்துக்குவேன்" தோளிலிருந்த அவன் கையை வெடுக்கென தட்டி விட்டவள் முகத்தை திருப்பிக் கொள்ள புருவம் நெறித்தான் அவன்.

"என்னாச்சு மகி... எதுக்கிப்போ என் மேல கோபம்?"

"நான் பேசுனாலும் கோபப்பட்டாலும் உங்களுக்கு என்ன பாஸ்... லீவு வேணும்... கொடுக்க முடியுமா முடியாதா? "

"என்னாச்சுன்னு கேக்குறேன்ல மகி... லீவு தானே... ச.." அவனை தடை செய்தது யாரோ ஒருவரின் அனுமதி வேண்டல் குரல்.

"கம் இன்" என்றவன் கேள்வியாய் பார்த்திருக்க உள்ளே நுழைந்தாள் அவள்.

மேக்னா!!!

அவனை ஒரு தலையாக காதலித்து திருமணம் செய்து கொள்ள கேட்டிருந்தவள், அவன் தோழியும் கூடவே....

"வா மேகி... என்ன இந்த பக்கம்?" அவன் அவளிடம் பேச்சு கொடுக்க கணவனை உறுத்து விழித்தவள் வந்தவளையும் முறைத்தாள்.


"பாஸ்..." மனைவியின் அழுத்தத்தில் உதடுகள் சிரிப்பில் துடித்தாலும் கண்டு கொள்ளாமல் மேக்னாவிடமே திரும்பி இருந்தான் ஆதி.

"நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் பத்தி டிஸ்கஸ் பண்ணும்... ஷேல் வீ?" அவள் பார்வை தீக்ஷியிடம் நிலைக்க
"எஸ்கியூஸ் மீ " ஏனோ கணவன் தன்னை விலக்குவது போலிருந்ததில் சட்டென அவள் வெளியேறி விட புருவம் நெறித்தவன்

"மேகி அப்பறமா பேசலாம்... எனக்கு ஒர்க் இருக்கு ப்ளீஸ்" அவள் பதிலை எதிர்பாராமலேயே வெளியேறி விட பல்லை கடித்தாள் அவள்.

.....

தலை தாங்கி அமர்ந்திருந்தவள் அருகில் அரவம் உணர்ந்து நிமிர கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் ஆதி.

"கிளம்பு"

"நான் வர்ல பாஸ்"

"உன் கிட்ட வர்றியானு கேக்கல கிளம்புன்னு சொன்னேன்" அவன் வார்த்தைகளில் தெறித்த நிதானம் அவளை தூக்கி வாரிப் போட வைக்க சட்டென எழுந்து கொண்டவள் எதுவும் பேசாமல் நடக்கவும் மனைவியின் பின் சென்றான் காளை.

....

ஹாஸ்பிடல் சென்று வீடு வரும் வரை அவள் எதுவுமே பேசவே இல்லாதது அவனுள் ஏனோ போல் இருந்தது.

வீட்டுக்குள் நுழையாமல் அவர்கள் வீட்டுக்குள் செல்ல எத்தனித்தவளின் கையை பிடித்து இழுத்து தங்களறைக்கு சென்ற பிறகே கையை விட எதுவும் பேசாமல் நின்றவளை யோசனையாய் தொடர்ந்தவன் கதைவை தாழிட்டு விட்டு அவளை இழுத்து அணைத்துக் கொள்ள எதுவும் பேசாமல் அடங்கி நின்றவளின் கண்ணமேந்தினான் கணவன்.


"என்ன விட்டு போக மாட்டீங்கல்ல மாமா?" அவள் கேள்வியில் மீண்டும் யோசனையாய் புருவம் நெறித்தவன் அவள் நெற்றியில் இதழ் பதிக்க கண்களை மூடிக் கொண்டாள் பெண்.

"என் அராத்து பொண்டாட்டிக்கு என்னாச்சு ம்..?"

"கனவு மாமா"

"இதுக்கா பயந்து போயிருக்க...?"

"மாமா ப்ளீஸ்... என்ன விட்டு போயிடாதிங்க"

"சும்மா மனச போட்டு குழப்பிக்காம இரு... நான் டீ போட்டு எடுத்து கிட்டு வர்றேன்... ஓகே வா? " அவள் கண்ணம் தட்டியவன் அவளை சாய்வாக அமர வைத்து விட்டு கீழே செல்ல மெதுவாக கண்களை மூடினாள்.

....

ட்ரெண்டர் எஸ். எ (சஞ்சய் ஆதித்யன்) கன்ஸ்ட்ரக்ஷனுக்கே கிடைத்து விட்டிருந்தாலும் பக்கத்தில் அமர்ந்திருந்த மனைவியை முறைத்துப் பார்த்தான் ஆதி.

அவன் கீழே வருவதற்கு முன்னே வீட்டில் நிறுத்தியிருந்த அவள் டூவிலரை எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தவள் சன நெரிசலில் ஊர்ந்து அதி வேகத்தில் தான் அந்த ஹாலை அடைந்திருக்க அவன் இருபது நிமிடங்கள் கழித்தே வந்து சேர்ந்திருந்தான்.

அப்படி என்றால் எவ்வளவு வேகத்தில் வண்டியை செலுத்தி இருப்பாள்??

அந்த கோபத்தில் தான் பக்கத்தில் அமர்ந்திருந்தவளை ஆன மட்டும் முறைத்துப் பார்த்தான் கணவன்.


"எதுக்குடி அவ்வளவு ஸ்பீடுல வந்த?"

"ஸ்பீட்டை விடுங்க பாஸ் ட்ரெண்டர் கிடைச்சத கொண்டாடுங்க"

"கொண்டாடணுமா... எனக்கு நல்லா வந்துடும்... மூடி கிட்டு இரு"

"ஓகேய்ய்ய்ய்" வாயில் விரலை வைத்தவளை பார்த்து பல்லை கடித்தவன்

"தலை வலி எப்பிடி இருக்கு மகி?" என்றான் காரியமே கண்ணாக...

வாயிலிருந்து கையை எடுத்தவள் சைகையில் பதில் கூற கடுப்பாகி விட்டவன்

"வாயில என்ன கொழுக்கட்டயா வெச்சிருக்க... பேசுடி" அதற்கும் கத்தினான்.

"வாய மூடுங்குறீங்க... பேசுங்குறீங்க... என்ன தான் பாஸ் பண்ண சொல்றீங்க என்னை? "

"ஆமா இது மட்டும் விளங்கிடும்.. தலை வலியா இல்லையா?"

"நீங்க போட்டு தந்த டீ ல பறந்து போயிடுச்சு மாம்ஸ்"

"சரி வா உன்ன வீட்டுல விட்டுட்டு நான் ஆபிஸ் கிளம்பறேன்" கோர்ட்டை சரி செய்தவாறு இருக்கையிலிருந்து எழுந்தவன் வந்திருந்த அனைவரும் சென்று விட்டிருப்பது கண்டு மீண்டும் மனைவியை பார்த்தான்.

"நானும் ஆபிஸ் வ... "

"நீ ஒன்னும் கிழிக்க தேவையில்ல... கிளம்பு" அவளை இனையிட்டவன் அவன் பாடி கார்டுக்கு அழைத்து அவள் டூவீலரை எடுத்துக் கொண்டு வருமாறு பணித்து விட்டு அவளை இழுத்துக் கொண்டு கிளம்பினான்.

....

இரவு...

பால்கனியில் நின்றிருந்தவளின் நினைவுகள் அன்று மாலையில் நடந்த விடயத்திலேயே உழன்று கொண்டிருந்தது.

கணவன் வலுக்கட்டாயமாக வீட்டில் விட்டு விட்டு போய் விட்டதில் எதுவும் செய்ய தோன்றாமல் உறங்கி விட்டிருந்தவளுக்கு மாலை தான் விழிப்புத் தட்டியது.

அவனுடைய பெற்றோர் இருவரும் கோயிலுக்கு சென்று விட்டிருக்க கொஞ்ச நேரம் டீ.வி ஐ போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவள் அலுப்புத் தட்டவும் கணவனுக்கு அழைத்திருந்தாள் பாவை.

"மாமா ஷாப்பிங் போலாமா?"

"மகி நான் மீட்டிங்ல இருக்கேன்... இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல வந்துடுவேன்டா" அவள் பதிலை எதிர்ப்பாராமல் அவன் துண்டித்து விட பெரு மூச்சு விட்டவள் தானே கிளம்பி விட்டாள்.

....

கணவனுக்கென ஷர்ட்டை ஒன்றை பார்வையிட்டுக் கொண்டிருந்தவளை கலைத்தது மேக்னாவின் குரல்...

கூடவே கணவனதும்....

சட்டென திரும்பியவளுக்கு கணவன் அவளுடன் வந்திருந்தது கண்டு ஏனென்றே தெரியாமல் கண்கள் குளம் கட்டியது.

அவன் பதினைந்து நிமிடங்கள் கழித்து வீட்டுக்கு செல்ல எத்தனித்த வேளையில் தான் மேக்னா வந்திருக்க அன்றிரவு அவள் தந்தைக்கு பிறந்த நாள் என்பதால் ஏதாவது பரிசு வாங்கவும் அதற்கு துணையாக வருமாறு அவள் கேட்க அவனால் மறுக்க முடியாமல் கிளம்பி இருந்தான்.

....

பால்கனியில் நின்றிருந்தவளை பின்னாலிருந்து அணைக்க வழமையாய் புன்னகைக்கும் உதடுகள் அன்று சாதாரணமாக இருந்ததில் அவள் மனநிலை புரிவதாய்...

"பேபி..." சட்டென விலகியவன் மனைவியை தன்னை நோக்கி திருப்ப சலனமே இல்லா அவள் பார்வை அவனை ஏதோ செய்தது.

"என்னாச்சு மகி?"

"ஒன்னில்ல சஞ்சய்... தூக்கம் வருது" விலகி சென்றவளின் கையை இறுக்க பிடித்தவன் தன்னை நோக்கி இழுக்க வந்து மோதியவளின் கழுத்தில் தன் இரு கைகளையும் மாலையாய் கோர்த்தவன் அவள் கண்களை ஊடுருவ அவன் பார்வையை சலைக்காமல் எதிர் கொண்டாள் பெண்.

"ஷாப்பிங் வந்துட்டு ஏன் எதுவும் வாங்கல தீக்ஷி? " அழுத்தமாய் வந்து விழுந்த கேள்வியின் திடுக்கிட்டு அவனை பார்த்தவளுக்கு அவன் அழைப்பு மாற்றம் பயத்தை கிளப்பியிருந்தது தான் உண்மை.

"பிப்டீன் மினிட்ஸ் வெயிட் பண்ணு நான் வர்றேன்னு சொன்ன என் வார்த்தைகள்ல உனக்கு நம்பிக்கை இல்ல... ஆனா அதையும் மீறி வந்துட்டு நான் மேகி கூட வந்திருந்தத தப்பா "

"இல்ல சஞ்சய்... நான் வந்து..."

"என் மகியா இருந்தா அப்போவே என் கிட்ட வந்து, மீட்டிங்ல இருக்கேன்னு சொல்லிட்டு இப்போ இவ கூட எதுக்குடா வந்திருக்கன்னு என் சட்டைய பிடிச்சு கேள்வி கேட்ருப்பா... " அவன் குற்றச்சாட்டில் சட்டென கணவனை அணைத்துக் கொண்டவள் பொங்கி வந்த அழுகையை அவனுக்காகவே அடக்கிக் கொண்டாள்.

"ஐ அம் சாரி மாமா...ஏனோ சட்டுனு அழுகை வந்துடுச்சு அதான் வந்துட்டேன் சாரி மாமா ப்ளீஸ் சாரி"

இன்னும் ஆழமாய் அவனுள் ஒன்றியவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு எம்பி அவனதரங்களை சிறை செய்ய கண்களை மூடி அதை அனுபவித்தவன் கரங்கள் அவள் இடையை இறுகப் பற்றி இருந்தது.

.....

காலை...

"அத்தை..." மாடியிலிருந்து இறங்கி வந்தவள் ஆதியின் தாய் லக்ஷ்மியை கட்டிக் கொண்டு முத்தமிட ஹாலை பார்க்குமாறு கண்களை காட்டினார் மாமனார் ராஜ்குமார்.

"ஏன் யாரு மாமா?" ஹஸ்கி குரலில் கேட்டுக் கொண்டே திரும்பியவள் அங்கே ராஜின் தங்கை குடும்பம் முழுதும் அமர்ந்திருப்பது கண்டு அசடு வழிய விலகிக் கொண்டவள் நமுட்டுச் சிரிப்புடன் கீழிறங்கி வந்த கணவனை முறைத்தவாறே ஹாலுக்கு சென்று ஓரமாக நின்று கொண்டாள்.

ராஜின் தங்கை தேவிக்கு இரண்டு பிள்ளைகள்.

மூத்தவன் அஜய் இரண்டாமவள் ஆர்த்தி... அஜய்க்கும் ஆதிக்கும் எப்போதும் ஆவதே இல்லை...

ஊரில் உள்ள பெரிய ஜமீன் பரம்பரை ராஜினது... அதனாலோ என்னவோ ராஜின் மகன் ஆதிக்கு கிடைக்கும் மரியாதை அஜய்க்கு கிடைக்காமல் இருப்பதில் தேவிக்கு எப்போதும் பிடித்தம் இல்லை... தன் இளைய மகள் ஆர்த்தியை ஆதிக்கு திருமணம் முடித்து வைத்து அந்த இடத்தை பிடித்துக் கொள்ள திட்டம் தீட்டி இருந்தவருக்கு அவன் தீக்ஷியை திருமணம் செய்து கொண்டது இன்னும் பொறாமை தீயை கொழுத்தி விட அவளை கண்டாலே வார்த்தைகளால் குதறி விடுவார்.


தாயை போலவே குணம் கொண்டவன் அஜய்... ஆதியை கண்டாலே அவனுக்கு பற்றிக் கொண்டு வரும்... அதுவும் கண்ட நாள் முதல் அவன் மனதில் காதலியாய் எண்ணியிருந்தவளை அவன் திருமணம் முடித்துக் கொண்டது வேறு அவன் வன்மத்தை அதிகரிக்க காரணமாய் இருந்தது.


கணவனை வெறுப்பேற்றவென்றே அவள் பேசினாலும் காளைக்கு தெரியுமே அஜய்யின் பார்வை மாற்றம்!

நேரெதிர் ஆர்த்தி. அதிர்ந்து கூட பேசாதவளுக்கு தீக்ஷி என்றால் அவ்வளவு பிடித்தம்.

"ஆர்த்திக்கு திருமணம் ஏற்பாடாகி இருக்கு ராஜ்..." ஆர்த்தியின் தந்தை ராமின் குரலில் சட்டென கலைந்தாள் பாவை...

"வாவ் கங்கிராட்ஸ் ஆர்த்தி" துள்ளிக் குதித்து அணைக்க வந்தவள்

"மகி பசிக்குது சாப்பாடு எடுத்து வை " அலட்சியமாய் தேவியை பார்த்தவன் அவளை இழுத்துக் கொண்டு டைனிங் டேபிளுக்கு செல்ல

"அது.. அவங்களுக்கு ஆபிஸுக்கு நேரமாச்சு அதான்" சகஜமாக்க முயன்றார் லக்ஷ்மி.

"சாப்பிட்டு பேசலாமே ராம்" ராஜும் நிலைமை புரிந்து கலைய அனைவரும் எழுந்து சாப்பாட்டு மேசை நோக்கி நடந்தனர்.

கணவனுக்கு பரிமாறி விட்டு தானும் அமரப் போனவள் அனைவரும் வருவது கண்டு அப்படியே நிற்க இழுத்து அமர வைக்க முயன்றவனை தடுத்து விட்டு எல்லோருக்கும் பரிமாறவும் மனைவியை முறைத்தான் சஞ்சய்.

"மகி வந்து சாப்புடு.. ஆபிஸுக்கு லேட் ஆகுது பாரு..." அவனிடம் கண்களால் இறைஞ்சியவள் அஜய்கும் பரிமாற ஆதியை பார்த்து நக்கலாய் சிரித்தான் அவன்...

"ஆதி... இப்போ எதுக்குடா கோபப்பட்ற... நீ சாப்புடு அவ வருவா" மருமகளை தாங்கி பேசிய தாயை முறைத்தவன் மீண்டும் அஜய்யை பார்க்க அவன் இன்னும் அதே நக்கல் பார்வையில் தான் அமர்ந்திருந்தான்.

"மகா... இன்னும் எடுத்து வை" வேண்டுமென்றே அஜய் கூற மனைவியும் அவனுக்கு வளைந்து கொடுத்துக் கொண்டிருந்ததில் சாப்பிடாமல் எழுந்து கொள்ள அவனை கவனிக்க விடாதவாறு அஜய் மகாவை ஒவ்வொன்று வைக்குமாறு சொல்லிக் கொண்டே இருந்ததில் கணவன் பாதியில் எழுந்தது தெரியாமற் போனது பேதைக்கு....

"மாம் டாட் நான் கிளம்புறேன்...." வாசல் தாண்டிய அவன் குரலில் சட்டென கலைந்தவள் அவன் பின்னே ஓட அதற்குள் அவன் சென்று விட்டிருக்க கண்களை இறுக மூடித் திறந்தவள் மீண்டும் வீட்டுக்குள் வந்து விட்டாள்.

"அத்தை நான் ஆபிஸ் போகல இன்னிக்கு... உங்களுக்கு உதவியா இருக்கேன்" அவர் மறுத்தும் கேளாமல் பிடிவாதமாய் இருந்து விட்டவளுக்கு தேவியின் குடும்பம் வந்தால் அத்தை மட்டும் தனியே கஷ்டப்படுவார்கள் என்பது தெரிந்தே தான் இருந்தது.

.....

இரவு பத்து மணி தாண்டியும் கணவன் வராததில் தவித்துப் போனாள் பாவை....

"அஜய் அப்பிடி பண்ணுவாருன்னு எனக்கு எங்கே தெரியும்" வாய் விட்டுப் புலம்பியவள் கதவை திறந்து கொண்டு கணவன் அறையில் நுழைந்தது கண்டு அவனருகே ஓடினாள்.

"சஞ்சய் சா..." அவளை தவிர்த்தவன் நேரே குளியலறைக்குள் சென்று மறைய அவன் வரவுக்காக காத்திருந்தாள் பெண்.

.....

ப்ரஷப்பாகி விட்டு வந்தவன் அவள் ஒருத்தி இருப்பதே கண்டு கொள்ளாமல் லேப்பை எடுத்துக் கொண்டு அமர எத்தனிக்க அவனிடமிருந்து வழுக்கட்டாயமாய் அதை எடுத்து வைத்தவள் தன் முகம் நோக்கி திருப்ப அவளையே பார்த்தான் காளை...

"மாமா ப்ளீஸ் பேசுங்க"

"நான் சாப்டேனா இல்லையாங்குறது உனக்கு கவலையில்ல அவனுக்கு சாப்பாடு போட்றது தான் உனக்கு பெருசா போயிடுச்சு... அவன் தான் உன் புருஷன் மாதிரி அவன் கிட்ட போய் நிக்குற? அப்போ எல்லாம் நடிப்பு தானே? " அவனையே தீர்க்கமாய் பார்த்தவள்

"உங்களுக்கான என் காதலை கூட நடிப்புன்னு தான் சொல்றீங்களா மாமா? " என்றாள் உணர்ச்சியற்ற குரலில்....

"ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் மகி... நான் அப்பிடி சொல்லல... ஆல்ரைட் நீ தப்பா எடுத்து கிட்டன்னா ஐ டோன்ட் கேர்" தோளை குழுக்கினான்.

"இட்ஸ் ஓகே என்னோட காதல் நடிப்புன்னா உங்க காதல் பொய்"

"ஆமா பொய் தான் என் காதல் பொய் தான்... நானும் பொய்யாகவே இருக்கேன்... பொய்யான ஒருத்தன் கூட வாழறதுக்கு உனக்கு என்ன தலையெழுத்தா.... கெட் அவுட்" அவன் சீற

"அஜய் பண்ண வேலைக்கு என் மேல கொபப்படுறதுல என்ன நியாயம் மிஸ்டர். சஞ்சய்?"

"ஐ செட் கெட் அவுட்"

"முடியாது" கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டவளை உறுத்து விழித்தவன்

"ஏன் முடியாது... இது என் ரூம் வெளிய போடி" பல்லை கடித்தான்.

"முடியாது... இது என் புருஷன் ரூம்..."

"வர்றே வாஹ்... உங்களுக்கு எதிரியானவரு எப்போ மேடம் புருஷன் ஸ்தானத்துக்கு வந்தாரு?"

"அவன் எனக்கு எப்போவும் எதிரி தான் பாஸ்... எனக்கே எனக்கேயான எதிரி.. அதுல உங்களுக்கு என்ன வந்துது?" அவள் வார்த்தைகளில் வெளிவரத் துடித்த புன்னகையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டவன்

"க்கும்... மிஸ். தீக்ஷி..."

"மிஸஸ். சஞ்சய் ஆதித்யன் பாஸ்" அவள் இடையூடு கையிட்டு தன்னை நோக்கி இழுக்க கணவன் மேல் வந்து மோதினாள் காரிகை...

"இப்போ சொல்லுடி அவன் யாரு உனக்கு? "

"அவன் எனக்கு எதிரி"

"உன் இடுப்புல கை வெச்சிருக்கானே... இன்னுமா எதிரியா இருக்கான்?"

"ஆமா எதிரி தா..." அவளை அடுத்த வார்த்தை பேச விடாமல் அவளதரங்களை சிறை செய்தவன்

"இப்போ யாருடி அவன்?" மீண்டும் கேட்டான்.

"அவன் எனக்கு எதிரி... இப்போ மட்டுமில்ல பாஸ்.... எப்போவும் அவன் எனக்கு எதிரி தான்" கண்களை சிமிட்டியவள் அதிரடியாய் அவனிதழ்களை இம்முறை தான் முற்றுகையிட்டிருந்தாள்.

***
நன்றி.
 

Fa. Shafana

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
38
Storyline அழகு ❤️❤️❤️
(ஆனால் இடையில் சில தடுமாற்றம் இருக்கு அதை நீக்கி விட்டு பார்த்தால் நல்லா இருக்கு டா... ❤️❤️)
இளமைக்கால ஊடல் காதலாகி வாழ்கிறது..
All the best டா 💐💐💐
 

Rishi24

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
14
Storyline அழகு ❤️❤️❤️
(ஆனால் இடையில் சில தடுமாற்றம் இருக்கு அதை நீக்கி விட்டு பார்த்தால் நல்லா இருக்கு டா... ❤️❤️)
இளமைக்கால ஊடல் காதலாகி வாழ்கிறது..
All the best டா 💐💐💐
ஹி.. ஹி... கொஞ்சம் தடுமாற்றம் கா.. மிக்க நன்றி 😍
 

Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
Sila idangalil confuse akuthu.. otherwise super da.. Rishi.. and spelling mistakes check paniko..da .
 

Dharsini

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
20
தீக்ஷி ஆதியின் ஒவ்வொரு ஊடலும் ரசிக்கும்படி இருந்தது..வாழ்த்துக்கள் சிஸ்
 

Rishi24

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
14
Sila idangalil confuse akuthu.. otherwise super da.. Rishi.. and spelling mistakes check paniko..da .
பெருசா எழுதிட்டு குறைச்சது கா... கொஞ்சம் சொதப்பிடுச்சு... கண்டிப்பா கா ❤️ ரொம்ப ரொம்ப நன்றி கா 🤗
 

Rishi24

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
14
தீக்ஷி ஆதியின் ஒவ்வொரு ஊடலும் ரசிக்கும்படி இருந்தது..வாழ்த்துக்கள் சிஸ்
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் 🤩
 
Top