• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

லவ் ஸ்டோரி 11(final )

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
லவ் 11....நிறைவு

இடம்: சென்னை விமான நிலையம்
நேரம் விடியற்காலை 3 மணி
நாள் : அவந்திகா இங்கிலாந்து சென்று.. 5 மாதம் கழித்து..

அரவிந்த் அவந்திகாவிற்காக 2:30 கே வந்து வெய்ட் செய்து கொண்டு இருந்தான்… 3 மணி ஆகியும் அவந்திகா வெளியே வரவில்லை.. கால் செய்தாலும் எடுக்கவில்லை… அவனுக்கு கொஞ்சமாக பதட்டம் வந்து ஒட்டிக்கொண்டு விட்டது…

இது அனைத்தையும் மறைவாக நின்று ரசித்து கொண்டு இருந்தாள் அவந்திகா… அவனை திடீரென தன்னால் சகஜமாக அணுக முடியாது என்பது அவள் அறிந்ததே… அதனாலேயே அவன் இருக்கும் இடம் தேடி மறைவாக நின்று 6 மாதமாக கிடைக்காத தரிசனத்தை இன்று நின்று தரிசித்து கொண்டு இருந்தாள்..

தினமும் போனில் அவனை அவனுக்கே தெரியாமல் பார்த்து இருந்தாலும் அவளுக்கு அதெல்லாம் போதவில்லை போல…

அதே ஏக்கம் அவனிடத்திலும் இருக்கும் என்பதை மறந்து நின்று இருந்தாள்…

அவனை காக்க வைத்தது போதும் என நினைத்தாளோ என்னவோ… அவளின் பயணப் பைகளுடன் வெளியே வந்தாள்…

பார்த்தவன் பார்த்த படியே நின்று விட்டான்… அவனால் அவளின் கண்களையோ அவளின் அழகையோ ஒரே நேரத்தில் ரசிக்க முடியவில்லை… இப்படியா ஒருவனை ஒருத்தி கொல்வது…

காதல் பொங்கும் கண்களை காண்பதா? அழகு பொங்கும் அவளின் முகத்தை காண்பதா என கொஞ்சம் திணறித்தான் போனான் அரவிந்த்…

அவளும் வந்ததும் அவனிடம் எதுவும் பேசாமல் அவன் கண்களையும் அவனின் திணறலையும் தான் ரசித்து கொண்டு இருந்தாள்…

பின்பு ஒருவாறு சமாளித்து அவந்திகா தான் "ஹாய் " சொன்னாள்…

"ஹாய் அவனி? ஹௌ வாஸ் தி ஜெர்னி? " தன்னுடைய உணர்வுகளை அடக்கி சகஜமாக கேட்க நினைத்து கேட்டான்…

அவனின் முயற்சி புரிந்து அவளும் சாதாரணமாக பதில் கூறினாள்.. "யா இட் வாஸ் பீஸ்புல் ஒன்… வேற யாரும் வரலியா? "

"இந்த டைம் பெரியவங்க யாரும் வேணாம் சொல்லிட்டேன்… உங்க அப்பா தான் என்னையே உன்ன ரிசீவ் பண்ண சொன்னார்.."

"ஹ்ம்ம் இப்பவே மாமனாரை கைக்குள்ள வச்சாச்சா? "

"இன்னும் அவர் பொண்ணே என் கைக்குள்ள வரலியாம்.. இதுல அவங்க அப்பா வந்து என்ன செய்ய? " மனதில் நினைத்ததை அப்படியே சொல்லி இருந்தான் அவனியின் அரவிந்த்..

"அடப்பாவி நீங்களா இப்டி பேசுறது? யார் கிட்டயும் சொன்னா என்னை நம்ப கூட மாட்டாங்க… " அவளுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் பக்கத்தில் யாராவது இருக்கிறீங்களா என பார்த்து பார்த்து சிரித்தாள்…

அவனுக்கும் தொத்திக்கொண்டது போல "ஹாஹாஹா வா நேரம் ஆச்சு.."

"எங்க போறோம்? என்ன பிளான்? " ஆர்வம் பொங்க கேட்டாள் அவனி

ஆர்வத்தில் தண்ணீர் தெளித்தான் "உங்க வீட்டுக்கு தான் போறோம்.. ஒரு பிளானும் இல்ல… "

"அவ்ளோதானா? " பொங்கியது அடங்கியது அவந்திகாவிற்கு

"என்ன அவ்ளோதானா? எப்டி இருக்க பாரு.. ஒழுங்கா போய் நல்லா ரெஸ்ட் எடு… டே நைட் டிபேரென்ஸ் வேற… அம்மா அப்பா உனக்காக வெயிட் பண்ணுவாங்க… இந்தா இத மட்டும் இப்போ சாப்டு கார்ல சாஞ்சி கண்ண மூடிட்டு வாய் பேசாம வரணும்… என்னை 6 மாசம் தவிக்க விட்டல்ல… "

உரிமையாக அவளின் முகத்திற்கு நேராக விரலை நீட்டி அவளின் சோர்வை அவளுக்கு எடுத்து கூறினான்… கூடவே அவளுக்கு தேவையான உணவையும் கொடுத்து ஆசுவாசப்படுத்தினான்… மேலும் அவனின் ஆதங்கத்தையும் கூறிவிட்டான்..

"நீங்க உங்களை.. உங்களுக்குள்ள இருக்க என்னை உணரணும்னு தான் பேசாம இருந்தேன்…. கோவமா அர்விந்த்? " கோவித்து கொண்டானோ என அவனை பாவமாக பார்த்து கேட்டாள்..

"ஹ்ம்ம்.. இப்டி பேசினா கோவம் இருந்தா கூட பறந்து போய்டும்"

அவன் இப்படி சொன்னது தான் தாமதம் அவனை எட்டி அணைத்து இருந்தாள் அவந்திகா…

"ஹே ஹே என்ன செய்ற… யாராவது பாக்க போறாங்க… இது இங்கிலாந்து இல்ல… அவனி ப்ளீஸ்… "

அவனால் இந்த இன்ப அதிர்ச்சியை தாங்க முடியாமல் அவள் மேலே தன் பாரத்தை ஒரு நொடி தாக்கி பின் நிலைக்கு வந்தான்…

"நீங்க தான சொன்னிங்க? " அவனின் மேலே பாரத்தை வைத்ததும் இல்லாமல் பாவத்தையும் போட்டாள்…

"என்ன சொன்னேன்? " அவனுக்கு இப்பொழுது இருக்கும் நிலையில் அவன் யார் என்று கேட்டாலே முழிப்பான்… அவனிடம் போய் கேள்வி கேட்கும் இவளுக்கு மனசாட்சியே இல்லை என நினைத்தான்…

"நான் உங்க கைக்குள்ள இன்னும் வரலன்னு அதான்.. நான் எப்பவோ வந்துட்டேன்னு சொல்றதுக்கு தான் இது…"

என்ன ஒரு விளக்கம்

"ஹ்ம்ம்.. " அவனுக்கு பதில் சொல்ல வார்த்தை இன்றி வாய்க்குள் முனகினான்…

"இது இந்தியா… பப்லிக் பிளேஸ்.. பரவாலியா? மிஸ்டர் அர்விந்த்.. " அவனை நடப்புக்கு கொண்டு வர அவனை வம்புக்கு இழுத்தாள்

"ஹே நான் ஒன்னும் பண்ணல.. எல்லாம் நீதான்… " இன்னும் அணைப்பை விலக்காமல் பதில் கூறினான்..

"ஹாஹாஹா… ஆமா ஆமா… நேரம் ஆகலியா ஹ்ம்ம்? "

சத்தமாக சிரித்து அவனை மாய வலையில் இருந்து மீட்டாள் அவந்திகா… அவனும் நடப்பு புரிந்து சாதாரணமாக பேசினான்..

"வா போலாம்… என்ன திடீர்னு கட்டி புடி வைத்தியம்லாம்? "

"அதெல்லாம் அப்டித்தான்… நானும் உங்கள போல இருந்தா அப்புறம் ரொமான்ஸ்லாம் யார் பண்றதாம்… இதுல லவ் ஸ்டோரின்னு வேற பேர் வச்சிட்டு கடைசி எபில கூட ஒரு ஹக்கிங் இல்லனா ரொம்ப அசிங்கம்… அதான் நானே செஞ்சிட்டேன்… "

"அம்மா தாயே போதும் வா போலாம்… 11 எபில ஒரு எபில கூட என்னை கெத்தா காட்டல… ஹ்ம்ம் எல்லாம் பெண்ணாதிக்க சமுதாயம்… "

"ஹாஹாஹா.. "

பேசிக்கொண்டே கார் நிறுத்துமிடம் வந்தனர்…

"ஒழுங்கா கண்ண மூடு.. தூங்கு.. வீடு வந்ததும் எழுப்பறேன்.. "

"ஹ்ம்ம்.. "

வீடு வந்து சேர்ந்ததும் அவளை எழுப்பினான்… அவளோ கண்களை மூடி வேண்டும் என்றே அசையாமல் இருந்தாள்…

"அவனி அவனி எழுந்திரு .. இங்க பாரு… நான் தூக்கிட்டுலாம் போக மாட்டேன்… அந்த சீன்லாம் இந்த கதைல இல்ல… " என கூறினான்..

"ஹ்ம்ம் ரொம்ப பேட் பாய்பிரண்ட் எனக்கு… டிக்கி ஓபன் பண்ணுங்க லக்கஜ் எடுக்கணும்… " தங்கு தங்கு என காலை ஊனி நடந்து பின் பக்கம் சென்றாள் அவந்திகா..

"அதெல்லாம் நான் எடுத்துட்டு வர்றேன் நீ போ… " லக்கஜ்களை எடுத்துக்கொண்டு கூறினான்

"அதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல… " வாயை நீட்டி முழக்கி அழகு காட்டினாள்…

"கல்யாணம் ஆகட்டும் எதுக்கும் கொறச்சல் வைக்க மாட்டேன்.. " சிரிப்புடன் ஒரு கண் சிமிட்டி கூறினான்…

"அடப்பாவி… நீ உண்மையா பேட் பாய் தான்.. " அவளுக்கு வெட்கம் வந்து விட்டது அதனால் வீட்டுக்கு உள்ளே ஓடினாள்… அவன் சிரிப்பு அவளை தொடர்ந்தது…

"ஹாஹாஹா… "

சிரிப்பு சத்தம் கேட்டு ஹாலில் இருந்த தாமரை "என்ன தம்பி ஒரே சிரிப்பா இருக்கு? "

அவளை பார்த்துக்கொண்டே கேட்டான் "அதுவா அத்தை… சொல்லவா அவனி? "

"என்னது அத்தையா? " அவன் அத்தையில் சாக் ஆகி விட்டாள்..

அவளின் சாக்கை பார்த்து அவளின் தாய் "நீ எதுக்கு சாக் ஆகுற உட்காரு மொதல்ல… "என கூறினார்..

"ஹாஹாஹா அத்தை அவங்க எல்லாத்துக்கும் சாக் ரியாக்ஷன் தான் கொடுக்கறாங்க…
இந்தாங்க லக்கஜ் நான் அப்புறம் வர்றேன்.. பாய் அவனி… பாய் அத்தை மாமா… "

"இருப்பா காபி டீ ஏதாவது சாப்டு போலாமே…" மணிவாசகம் தான் அவனை உபசரித்தார்…

"இல்ல மொதல்ல அவங்க தூங்கட்டும்… நான் வர்றேன்… "

அவளிடம் கண்களால் விடை பெற்று கிளம்பிவிட்டான்…

இரண்டு நாட்கள் கழித்து :

"ஹலோ அர்விந்த் " அவந்திகா மிகவும் உற்சாகமாக அழைத்தாள்

"அப்பாடா இப்போதான் உனக்கு விடிஞ்சிதா? ஒருத்தன் தூங்கு ரெஸ்ட் எடுன்னு சொன்னா போன் ஆப் பண்ணிட்டு ரெண்டு நாளாவா தூங்கறது? " அவளுக்கு ஹலோ கூட திருப்பி கூறாமல் பொங்கி விட்டான்..

"செம தூக்கம் பா… இப்போதான் போன் எடுத்து ஆன் பண்ணி முதல் கால் உங்களுக்கு தான்… இன்னும் வீட்ல கூட யார்கிட்டயும் சரியா பேசல… இந்த ஜிக்கி கண்ணுல கூட படல… "

"ஜித்தேஷ் பெங்களூரு போய் இருக்கார்… மாமியார் வீட்ல ஏதோ பிரச்னைன்னு அதனால உன் கண்ணுல பட மாட்டாரு… சரி சொல்லு இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்? "

"ஒரு ப்ரோக்ராமும் இல்ல… அம்மா நான் வெஜ் செய்றாங்க நல்லா சாப்டு எல்லார் கிட்டயும் போன் பேசிட்டு ஒரு குட்டி தூக்கம் போடணும்… அவ்ளோதான்… "

"சரி நாளைக்கு? "

"நாளைக்கு ஆபிஸ் போகணும்…"

"சரி நான் அப்புறம் பேசுறேன்… பாய்… "

"ஹாஹாஹா சும்மா வெறுப்பேத்தி பாத்தேன்… வீட்ல யாரும் இல்ல… சர்ப்பிரைஸ் ஹா உங்களை தான் பாக்க வரலாம்னு இருந்தேன்… "

"ஹே சூப்பர்… சைட்டுக்கு வேண்டாம் ரொம்ப டிஸ்டன்ஸ் கூடவே ரொம்ப டிஸ்டர்பென்ஸ்…

"ஹே அவந்திகா அவன் எங்களை தான் டிஸ்டபன்ஸ்னு சொல்றான்.. " கோரஸாக கார்த்திக், ஷியாம், வருண் பேசினர்

"ஹாஹாஹா கைஸ் எப்டி இருக்கீங்க? "

"நாங்க நல்லா இருக்கோம்… எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க? "

"எல்லாரும் இந்த சண்டே வீட்டுக்கு வாங்க கொடுக்கறேன்… "

"மாடுலேஷன் சரி இல்லியே.. "

"ஹாஹாஹா வாங்கிட்டு வந்து இருக்கேன்… நோ ஓர்ரிஸ் … "

"இங்க ஒருத்தன் எங்களை மொறைக்குறான்… இந்தாங்க பேசுங்க… "

"என்ன? ஏன் அவங்களை மொறைக்கறீங்க? "

"ஹ்ம்ம் சும்மா ஜாலிக்கு மொறச்சி பாத்தேன் … "

"சரி சரி… இங்க கிண்டி பார்க் வந்துடுங்க… லொகேஷன் ஷேர் செஞ்சிடுங்க… அதுக்கு ஏத்த மாதிரி நா கிளம்பறேன்… "

"ஓகே ஓகே சீ யூ தேர்… "

கால் கட் செய்து விட்டு உடனடியாக பைக் எடுத்து கிளம்பி விட்டான்… லொகேஷன் ஷேர் செய்யவும் மறக்க வில்லை.. இவன் சென்று சேர்ந்த நேரம் நல்ல வெயில்.. அவள் அவனுக்கும் முன் வந்து காத்திருந்தாள்…

வந்ததும் "நல்ல வெயில் நேரம் இங்க எதுக்கு அவனி ? " ஹெல்மெட் கழட்டி தலை முடியை கண்ணாடி பார்த்து விரல்களால் சீவினான்…

அவனின் இந்த மேனரிஸத்தை ரசித்து கொண்டே பேசினாள்" இது எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்.. இங்க ஒரு பெரிய மரம் இருக்கு… அங்க உட்காந்தா அவ்ளோ அமைதியா நிம்மதியா இருக்கும்… அதான் உங்களை இங்க கூட்டிட்டு வரணும்னு ரொம்ப நாள் ஆசை… "

"ஹ்ம்ம் ரொம்ப நாள் ஆசை எல்லாத்தையும் ஒரு லிஸ்ட் போடு ஒவ்வொண்ணா நிறைவேத்தி விடலாம்… "

"உங்க கையை நா பிடிச்சிக்கறத விட என் கையை நீங்க பிடிச்சிக்கறது ரொம்ப பிடிக்கும்… அன்னைக்கு என்னை பாறை மேல ஏத்துறதுக்கு புடிச்சீங்களே அந்த மாதிரி… " இவளே அவன் கைகளை பற்றி நடந்து கொண்டே கூறினாள்

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல அவனி… இவ்ளோ ஆசை வச்சி இருக்கியா என் மேல…? ஒரு மாதிரி கர்வமா இருக்கு எனக்கு… இதுக்கு மேல எதுவும் வேணாம்னு ஒரு பீல்… எல்லாம் நிறைவா இருக்க மாதிரி இருக்கு…. " இப்பொழுது இவனின் கைகள் அவள் கைகளை பற்றி இருந்தது இறுக்கமாக

"என்ன ஓவர் சென்டியா இருக்கு…
வாங்க வாங்க அந்த மரம் தான்…"

"நா உனக்கு இன்னும் ப்ரொபோஸ் பண்ணவே இல்ல…" ப்ரொபோஸ் செய்ய வேண்டுமா? அவள் எதிர் பார்ப்பாளோ என எண்ணியே கேட்டான்…

"ஹாஹாஹா யார் சொன்னது இல்லனு?
நீங்க பலமுறை என்கிட்ட பலவிதமா ப்ரொபோஸ் பண்ணிட்டீங்க… "

"என்னது நானா? "

"ஆமா ஆனா காலையில எனக்காக வந்து வெயிட் பண்ணது ரொம்ப பிடிச்சி இருந்தது… அந்த தவிப்பு ரொம்ப ரொம்ப பிடிச்சி இருந்தது… " ரசித்து கூறினாள்

"ஹ்ம்ம் நா.. நீ எப்போ வருவேன்னு பாத்துட்டே இருந்தது எவ்ளோ கொடுமைன்னு எனக்கு தான் தெரியும்… " இன்பமாய் அலுத்துக்கொண்டான்

"ஹாஹாஹா அதையும் பாத்தேன்…"

"நல்லா சிரி… சரி சொல்லு எப்போ கல்யாணம் செஞ்சிக்கலாம்… நம்ம சொல்றதுக்காக தான் வீட்ல வெயிட் பன்றாங்க… " இதற்கு மேல் இவளை விட்டு இருக்க முடியாது என எப்பவோ தோன்றியதை இன்று கூறிவிட்டான்

"எப்போ வேணாலும் செஞ்சிக்கலாம்… அதுக்கு முன்னாடி கொஞ்சம் பேசணும்…"

"சொல்லு அவனி.. "

"நா பொத்தேரி தான் வருவேன் உங்க கூடலாம் தங்க முடியாது…"

"அடிப்பாவி ஏன்…"

"நா என் ரோஜாம்மா கூட இருக்க போறேன்… நீங்க வாரம் ஒரு முறை வந்து போங்க இல்லனா டெயிலி என்னை மாதிரி வந்து போங்க… "

"டெயிலி உன்னால முடியுமா? "

"அதெல்லாம் பாத்துக்கலாம்… "

"அப்புறம் என்ன எல்லாமே முடிவு பண்ணிட்ட உன் ரோஜாம்மா கூட சேர்ந்து… "

"செம்ம கேரக்டர் உங்க அம்மா.. ஐ லவ் ஹெர்… " கண்கள் மூடி லயித்து கூறினாள்

"இன்னும் என்கிட்டயே லவ் சொல்லலியாம் என் அம்மாக்கு சொல்ற… "

"ஹாஹாஹா உங்களுக்கு சொல்லனுமா என்ன? "

"அம்மா தாயே வேணவே வேணாம்… "

"அப்டி வாங்க வழிக்கு… நேரம் ஆச்சு வாங்க போய் சாப்பிடுவோம்… "

"ஹ்ம்ம்.. "
…..
அதன் பின்னர் இருவர் வீட்டிலும் ஒன்றாக பேசி அடுத்த ஒரு மாதத்தில் கல்யாணம் நடத்த முடிவு செய்தனர்…

அதற்கு நடுவே பைரவிக்கும் கார்த்திக்கும் நிச்சயம் மட்டும் நடத்த பேசினர்…

வேலனை அரவிந்த் தன்னுடன் அழைத்து கொள்வதாக பைரவியிடம் கூறி விட்டான்..

ஷியாமும் வருணும் நாங்க மொரட்டு சிங்கிள் என கூறிக்கொண்டே கெத்து காட்டினர் …

ஒரு மாதம் கழித்து… நல்ல முகூர்த்த நாளில் அரவிந்த் அவந்திகா கல்யாண வைபோகம் ஏகபோகமாக நடை பெற்றது…

இருவரும் அனைவருக்கும் பொதுவாக கை கூப்பி வணக்கம் தெரிவித்து தங்கள் லவ் ஸ்டோரியை தொடங்கினர்…

ஆமாம் இனி வாழப்போவது தான் காதல் வாழ்க்கை…

இந்த கதைக்கு விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என்னோட நன்றிகள்….

N
 
Top