• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

லவ் ஸ்டோரி 3

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
லவ் 3

அர்விந்த் தன் நண்பர்களிடம் இருந்து விடைபெற்று வீட்டிற்கு சென்றான்…. அவன் சென்ற நேரம் தாமரை மட்டுமே மதிய நேரம் சமையலில் இருந்தார்…

இவன் குளித்து விட்டு வரும் பொழுது தாமரை தயாராக வைத்திருந்த உணவுடன் தானும் அவனுடன் அமர்ந்தார்...

எப்பொழுதும் வளவள என பேசிக்கொண்டு இருக்கும் தன் அம்மா அமைதியாக இருப்பதை நம்ப முடியவில்லை அவனால்…

"என்ன அம்மா ஏதாவது பேசணுமா? என்கிட்ட பேச எதுக்கு இவ்வளவு யோசனை…"

"யோசனை எல்லாம் ஒன்னும் இல்லடா அரவிந்தா… உனக்கும் 26 வயது ஆகி போச்சு... நீ இப்போ வேலைக்குப் போய் செட்டில் ஆனா தான் அடுத்த ரெண்டு வருஷத்துல உனக்குன்னு ஒரு இடத்தை உன் வேலைல எட்ட முடியும்…

உனக்காக உன்னை நம்பி வரப்போறவளுக்கு இது தான் பெருமை, கௌரவம்…"

தாயாகவும் ஒரு பெண்ணாகவும் மகனுக்காக யோசித்தார் ரோஜா.. அது புரிந்த மகன் வாக்குவாதம் செய்யாமல் தன்னை விவரித்தான்..

"புரியுது மா… நீங்க சொல்றது எல்லாத்தையும் நானும் யோசிக்காம இருப்பேனா?... வேலை கிடைக்கல மா… நானும் ரொம்ப சின்ன சின்ன காண்ட்ராக்டர் கிட்டலாம் கூட கேட்டு வச்சிருக்கேன்…. அடுத்த வாரத்துல ரெண்டு இண்டர்வியூ இருக்கு மா…. கண்டிப்பா வேலை வாங்க பாக்குறேன் நீங்க கவலைப்படாதீங்க…."

"உன் பிரண்டு வருணுக்கு வேலை போயிடுச்சாமே…அப்புறம் அந்த கார்த்திகோட லவ்வு கூட புட்டுக்கிச்சாமே… உபயம் நீதான்னும் கேள்விப்பட்டேன் டா… அப்படி என்னடா கொலவெறி அவன் மேல "

வம்பு பேச ஆரம்பித்தார் ரோஜா.. தாய்க்கு ஈடு கொடுக்க முடியாமல் புலம்பினான் அர்விந்த்..

"அம்மா…. இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான் என்கிட்ட சொன்னான் …. பாவி வருண் அதுக்கு முன்னாடி உங்ககிட்ட சொல்லிட்டானா? !!!..அப்புறம் என்ன கார்த்திகோட விஷயம்லாம் உனக்கு எப்படி தெரிய வருது… "

"டேய் இப்போதான் அவங்க அம்மா எனக்கு போன் பண்ணி புலம்பி தீர்த்தாள்… அப்புறம் கார்த்திக் கிட்ட நேத்து மார்க்கெட்ல பேசினேன் அப்போதான் சொன்னான்… நா கூட.. விடு டா கார்த்தி உனக்கு இத விட பெட்டரா ஒன்னு கிடைக்கும்னு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன் " சொல்லி முடித்து அவனை பார்த்து கண் சிமிட்டினார்..

"உங்ககிட்ட இருக்கிற போன முதல்ல புடுங்கணும்…நல்லா பிரலி பேசிட்டு இருக்கீங்களா? அப்புறம் அம்மா... கார்த்திக் பண்ணதெல்லாம் காதல்ன்னு சொல்லாத " அவன் செய்தது எல்லாம் காதல் லிஸ்ட் இல் சேர்க்க முடியவில்லை அவனால்...

காட்டு தீயை விட வேகமாக பரவும் செய்திகள் இவர்களால் மட்டுமே என்பது இவன் எண்ணம்… இவன் வீட்டில் முகப்புத்தகம் பயன்படுத்தும் ஒரே ஆள் ரோஜாவனம் தான்…

"ஏன்? எதுக்கு? என் புருஷன் எனக்கு ஆசையா வாங்கி கொடுத்தது... நீ புடுங்கிக்குவியா போடா... போடா ஏதாவது எடுத்து படிடா இன்டர்வியூக்கு… வந்துட்டான் என்கிட்ட வாயாட…டேய் உனக்கு லவ்வு பிடிக்கலன்னு அடுத்தவன் மைதானத்துல ஆட்டம் போட கூடாது டா மகனே.. " என வம்பு செய்தார் ரோஜாவனம்...

இவரிடம் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்க விரும்பாமல் சரண் அடைந்து விட்டான் மகன்

"அம்மா நீ சான்ஸே இல்லம்மா... உனக்கு சப்ஸ்டிடுட் நீ மட்டும் தான்... ஹா ஹா ஹா…"

அவரும் அவன் பேசியதை கேட்டுக்கொண்டே மதிய உணவை அவனுக்கு தனியாகவும், கணவனுக்கும் தனக்கும் தனியாகவும் எடுத்து வைக்கத் தொடங்கினார்…

அவரிடம் வந்து அரவிந்த் "அம்மா எனக்கும் சேர்த்து எடுத்து வைங்க நானும் இன்னைக்கு நர்சரி வரப் போறேன்... வேலை கிடைக்கிற வரைக்கும் நானும் வரேன்…."

"சரிடா அரவிந்தா வா கிளம்பலாம்... எவ்வளவு நாளாச்சு உன் கூட பைக்ல வந்து... உங்க அப்பா சைக்கிள் மாதிரி ஓட்டுறார் டா.. என்ன மிலிட்டரில இருந்தாரோ.. தைரியமில்லை வேகமாக ஓட்ட…"

சிரித்துக்கொண்டே கணவனை கலாய்த்தார் ரோஜா… அர்விந்தால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே நடுநடுவே பேசினான்

"அம்மா அவருக்கு கைல குண்டடிபடலனா நீ அவரை சோல்ஜர்னு ஒத்துக்க மாட்ட போல…

அங்க என்னமோ சப்பாத்தி சுட்டவர் மாதிரியேதான் அவரைப்பார்த்து வைப்ப... கரெக்டா மா…? "

" ஹாஹாஹா எனக்கு இந்த டவுட்டு ரொம்ப வருஷமா இருந்துச்சுடா... நான் சப்பாத்தி சுட்டால் ரவுண்டா வரலைன்னு அக்கப்போரு பண்ணுவாரு அப்போல்லாம்…. அப்போ இப்டி தோணும் டா எனக்கும் …"

இப்பொழுதும் ரவுண்டாக சப்பாத்தி சுடமாட்டார் அது வேறு விஷயம்… ராம் தான் குறை கூறுவதை நிறுத்தி விட்டார்… ஹாஹாஹா…

"ஹாஹாஹா… நீ ரொம்ப சேட்டை மா... அப்பா உன்னை எப்படி தான் சமாளிக்கிறாரோ போ… "

"அவர் என்னடா என்னை சமாளிக்கிறது?.. நான் தாண்டா அவரை சமாளிகிறேன்…"

மகனுடன் நெடுநாள் கழித்து அதிகம் வாயாடினார் ரோஜா.. இவன் வீட்டில் இருக்கும் சொற்ப நேரமும் வீணாக்காமல் பேசுவார் ரோஜா…

"இரு இரு ஒரு வாரம் உங்க கூடவே இருந்து உண்மையை தெரிஞ்சுக்கிறேன்.."

" ஆஹாஹாஹா போடா போ…"

"ஆசையா ரோஜாவனத்துக்கு வந்தவனை இப்படி துரத்துறியே மா…"

"வாடா வாலு... அங்க அந்த பெரிய மரநிழலில் வண்டியை நிறுத்திட்டு உள்ள வா…"

பேசிக்கொண்டே ரோஜாவனம் வந்து சேர்ந்தனர் நடமாடும் ரோஜாவனமும் அவரின் புதல்வனும்…

ராமிற்கு இருப்பு கொள்ளவில்லை மகன் வந்ததில் அவ்வளவு மகிழ்ச்சி அவருக்கு..

வந்தவனும் சும்மா இல்லாமல் வரும் வாடிக்கையாளர்களை அவர்கள் கேட்கும் வகை செடிகள் இருக்கும் இடத்திற்கு கூட்டி சென்று விட்டு வருவான்… கூடவே புன்னகையுடன் பேசிக்கொண்டே வேறு இருந்தான் … அவ்வளவு தான் அவனால் இங்கு செய்ய முடிந்தது… வேறு எதுவும் தெரியாது… தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை...
………..

திருமண மண்டபத்தில் இருந்து கிளம்பி அலுவலகம் செல்ல இருந்தவள் பைரவியை அனுப்பிவைத்து விட்டு நேராக கிண்டி உயிரியல் பூங்காவில் வந்து தஞ்சம் அடைந்து விட்டாள்..

அங்கொன்றும் இங்கொன்றுமாய் காதல் பேசும் ஜோடிகள், மற்றபடி பெரிதாக கூட்டம் இருக்காது வார நாட்களில்…

அவளுக்கு இப்பொழுது தேவை தனிமை தான்…

கல்லூரி படிக்கும் போது நட்பூக்கள் அனைவரும் ஒன்றாய் பேசி வைத்தது இப்பொழுதும் பசுமை நீங்கா நினைவுகள் அவளிடம்…

கண்டிப்பா எல்லாருமே காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதே அது…

பைரவி, ரம்யா, வினிதா, சஞ்சனா, அவந்திகா… ஐவருக்கும் அப்படி ஒரு தோழமை… பஞ்சவர்ண கிளிகள்ன்னு இவங்களை கிண்டல் பேசும் மற்ற நண்பர்கள் என வண்ண மயமான நாட்கள் அவை...

வினிதா, சஞ்சனா, ரம்யா மூவரும் சொன்னபடியே காதல் திருமணம் செய்து கொண்டனர்..

பைரவி, அவந்திகாவின் திருமணத்திற்கு பின்பே என கூறிவிட்டாள்… அதிலும் பைரவியிடம் இதுவரை யாரும் காதல் கதை சொல்லிக்கொண்டு அணுகியது இல்லை…

அப்படி நடக்காமல் பார்த்துக்கொண்டது அவளின் பார்வையே… பெண்களுக்குள் இருக்கும் ஒரு வித முன்னெச்சரிக்கை உணர்வு… இவளிடம் கொஞ்சம் கூடுதலாக இருந்தது தான் காரணம்…

இவையெல்லாம் தன்னைப்போல மனதில் ஓடிக்கொண்டு இருந்தது அவந்திகாவிற்கு… நிழல் தரும் மரமாக பார்த்து காலை நீட்டி அமர்ந்து விட்டாள்…

இது அவளுக்கு அடிக்கடி தேவைப்படும் டானிக்… தனிமையில் அவளை அவளே செதுக்கி கொள்வாள்…

இன்றும் அவளுக்கு.. தான் என்ன நினைக்கிறோம்...ஏன் தன்னால் திருமணத்தை எண்ண முடியவில்லை என யோசிக்க வேண்டி இருந்தது…

இதற்கு காரணம்… இன்று திருமணம் முடிந்து காரில் வரும் பொழுது மணிவாசகத்தின் வாசகம் தான்…

"என்ன அவந்தி மா? உன்னோட கல்யாணத்தையும் இப்டி பாக்கணும்னு இப்போல்லாம் அதிகமா தோணுது மா… நீ என்ன நினைக்கற? உன் மனசுல யாரவது இருக்காங்களா? எதுவா இருந்தாலும் சொல்லு..அப்பா கண்டிப்பா எதிர்ப்பு சொல்ல மாட்டேன் மா..… ".

மகளிடம் பொறுமையாக பேச வேண்டியதை சில முறை மனனம் செய்தே பேசினார் மணிவாசகம்… அவளும் அவரை சமாதானம் செய்ய முயற்சித்தாள்

"அப்பா… அப்டிலாம் ஒன்னும் இல்லங்க பா… எனக்கு கல்யாணம் செஞ்சிக்க தோணல… வேற காரணம் எதுவும் இல்ல… நீங்க ஒர்ரி பண்ணிக்காதிங்க சீக்கிரம் சொல்றேன் என்ன செய்லாம்னு… "

"உனக்கு 24 ஆகி போச்சு அவந்தி.. சீக்கிரம் கல்யாணம் பண்ணா தான் சீக்கிரம் குழந்தை பெத்துக்க முடியும்… இல்லனா இடுப்பு எலும்பு வலஞ்சி குடுக்காதுனு சொல்வாங்க… நாங்க மாப்பிளை பாக்க ஆரம்பிக்கொறோம்… உனக்கு எப்போ ஓகேவோ அப்போ செய்லாம்… "

தாயின் எண்ணம் இதுதான்… அது அவந்திகாவிற்கு புரியவும் செய்தது… காதல் கல்யாணம் குழந்தைகள் என ஒரு பெருவாழ்வு வாழ அவளுக்கும் ஆசை இருக்கிறது… இவர்கள் சொல்பவனை திருமணம் செய்தால் தான் விரும்பும் காதல் கிட்டுமா என்பது அவளுக்குள் பெரிய சந்தேகம்…

"கொஞ்சம் பொறுங்க மா… நானே சொல்றேன்… இதுக்கு மேல இத பத்தி பேச வேண்டாம்… எனக்கு வெளிய வேலை இருக்கு… இங்கயே நிறுத்துங்க… ரெண்டு பேரும் இறங்கிக்கறோம் "என கூறிவிட்டு கிண்டியில் இறங்கி கொண்டாள்..

நடந்ததை மனதில் ஓட்டி பார்த்த அவந்திகாவால் அவ்வளவு சீக்கிரம் தோல்வியை ஒப்புக்கொண்டு கல்யாணம் செய்ய முடியாது… பொறுப்போம் இன்னும் காலம் நீண்டு இருக்கிறது காதல் என்னை காதல் செய்யாமல் வேறு யாரையும் காதல் செய்யாது எனும் தீர்மானத்திற்கு வந்தாள்…

அவள் உள்ளுணர்வு என்ன சொல்லியதோ… சீக்கிரம் எனக்கானவன் என் எதிரில் வருவான் என உள்ளுக்குள் கூறிக்கொண்டே எழுந்தாள்…

ஆமாம் அவளுக்கு காதல் மேல் காதல்…

சினிமாவில் காட்டுவது போல் மணி அடிக்கும், பல்பு எரியும், காற்று வீசும் என எண்ணவில்லை தான்… இருந்தாலும் தன் மனம் தனகானவனை பார்க்கும் பொழுது ஏதாவது அதிசயம் நிகழும் என நம்பினாள் அவந்திகா…

தெளிந்த மனதுடன் கிளம்பி கிண்டியில் உள்ள தனது அலுவலக கட்டிடத்தை அடைந்தாள்… அக்கட்டிடம் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வாசன் கன்ஸ்டருக்ஷன்ஸ் என்று பெரிய எழுத்துக்களில் பார்ப்பவர் கண்களை சுண்டி இழுக்கும் வண்ணம் வடிவமைக்க பட்டிருந்தது…

இந்த யோசனை அவந்திகாவினுடையது… அதற்கு முன் மிக சாதாரணமாக பெயிண்ட் பண்ண பட்டு இருந்தது…

உள் நுழைந்ததும் பைரவி தான் அவளை எதிர் கொண்டாள்…

அன்று செய்து முடிக்க வேண்டிய அனைத்தையும் கூறிக்கொண்டே இருந்தாள்…
இடையிடயே அவளின் டவுட்ஸ் எல்லாத்தையும் கேட்டு தெளிவு படுத்தி கொண்டாள் அவந்திகா..

பேசிக்கொண்டே அவளின் அறை அடைந்து அன்றைய வேலைகளை தொடங்கினாள் …

வேலைகள் நடந்துகொண்டே இருந்தாலும்...

இவளின் அசைக்க முடியாத அந்த காதல் எண்ணம் மட்டும் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது…

காதலும் காதலுக்கானவனும் இவளுக்கு என்ன வைத்திருக்கிறார்கள்? ….

வடபழனி முருகன் வரும் வாரம் இவர்களுக்கு அப்பாயின்மென்ட் குடுத்து இருக்கிறார்..அதை யார் எப்படி உபயோகபடுத்த போகிறார்கள் என அடுத்த எபியில் தெரியும் .…

பார்ப்போம் மணி அடிக்கிறதா இருவருக்கும் இல்லை ஒருவருக்கு மட்டுமா? என….
 
Top