• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

லவ் ஸ்டோரி 9

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
லவ் 9


"என்ன டா நடக்குது அங்க?" எடுத்தவுடன் எந்த முகவுரையும் இல்லாமல் சற்று கோவமாக பேசினார் ரோஜாவனம்..


"ஏன்? மனுஷன், ஆடு, மாடு எல்லாம் தான் நடக்குது….இத கேட்கவா எனக்கு போன் பண்ணீங்க? "

பொறுப்பில்லாமல் பதில் கூறினான்…


"அட என் அறிவுப்பிள்ளையே.. " நேரில் இருந்து இருந்தால் இரு கைகளையும் அவனின் முகத்தில் வைத்து திருஷ்டி கழித்து இருப்பார் ரோஜாவனம்..


"என்னோட அறிவுக்கு இப்போ என்ன பிரச்னை "?


"ஹ்ம்ம்... இப்போ உன் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் தான் பிரச்னை.. " நேரடியாக விஷயத்திற்கு வந்தார்…


"அதுல என்ன? … ஹாஹாஹா பாத்துட்டீங்களா? " முதலில் என்ன வென்று யோசிக்காமல் கேட்டவன் மறு நொடி விஷயம் புரிந்து அடக்க மாட்டாமல் சிரித்து வைத்தான்…


"பாத்துட்டு தான் கால் பண்ணேன்… " அவரால் கண்டதை நம்ப முடியாமல் போன் போட்டதை கூறினார்…


"அது எதுக்கு எனக்கு கால் பண்ணீங்க? உங்க பையன் கிட்ட பேச வேண்டியது தான என் ரோஸி மம்மி… "


ஆமாங்க இவ்ளோ நேரம் ரோஜாவனம் பேசிக்கொண்டு இருந்தது ஷியாமிடம் தான்…


"டேய் பல்ல தட்டி கைல கொடுத்துடுவேன்… ஒழுங்கா அம்மான்னு கூப்பிடு…. "


அவன் இப்படி அழைப்பதும் இவர் மிரட்டுவதும் இன்று நேற்று நடப்பது அல்ல…


"இப்போ அதுவா முக்கியம் உங்களுக்கு? "


"இதுவும் முக்கியம் தான் டா மகனே… " விடாமல் பேசினார்


"அடடா உங்க மகன் பாசத்துல பாசில சருக்கி விழுறாப்ல விழுந்துட்டேன் தாயே… " நாடக பாணியில் சுத்த தமிழில் பேசி ஜோஜவனத்தையே வெறுப்பேத்தினான் ஷியாம்..


"போதும் டா உன் நாடகம்…

சரி சரி மேட்டர்கு வா " அவனை அடக்கி பேச வேண்டியதை பேச சொன்னார்…


"இன்னிக்கு நாங்க எல்லாரும் மஹாபலிபுரம் போனோம்… அது தெரியும்ல… அரவிந்த் சொல்லி இருப்பானே… " தாய்க்கு தெரியாமல் எதுவும் செய்ய மாட்டான் என தெரிந்தே கேட்டான்..


அதெல்லாம் தெரியும்.. அந்த பொண்ணு யாருன்னு தான் தெரியல … " குரலில் அவ்வளவு ஆர்வம்…


"ஹ்ம்ம்ம்… உங்க வருங்கால மருமக…" பட்டென போட்டு உடைத்தான் ஷியாம்…


"என்னடா சொல்ற…? என் புள்ள அவ்ளோ விவரம் இல்லியே… லவ்வுலாம் அவனுக்கு அலர்ஜி ஆச்சே…" அவரால் நம்ப முடியவில்லை என்பது அவரின் குரலிலேயே தெரிந்தது…


"நீங்க அப்டியே நினைச்சிட்டு இருங்க.. சீக்கிரம் பொண்ணு கேட்க சொல்லி உங்க கிட்ட சொல்லுவான் அப்போ பேசிக்கறேன்… "


"இதெல்லாம் நம்புற மாதிரியா டா இருக்கு… ஆனாலும் அவங்க போட்டோலாம் வேற ஏதோ சொல்லுதே… அதுவும் அந்த பொண்ணு கண்ணுல அவ்ளோ ஆசை தெரியுது டா ஷியாம்… " பெண்ணின் மனம் படித்த ரோஜாவனம்.. மகனின் மனமும் தெரிந்தவர் ஆயிற்றே…


"பொண்ணு பொண்ணு சொல்லாதீங்க… அவங்க எங்க முதலாளி அம்மா… "


"என்ன டா சொல்லுற… முதலாளி கூடவா பிக்நிக் போனீங்க…? " மயக்கமே வரும் போல இருந்தது அவருக்கு…


"ஆமா மம்மி ஆனா அவங்க எங்களோட பிரண்ட் ஆகிட்டாங்க… அதுலயும் உங்க பையன் கூட ரொம்ப கிளோஸ் தான்… " எக்ஸ்ட்ரா தகவல் தரும் சிறப்பு செய்தியாளர் ரேஞ்சுக்கு பேசினான்…


"அப்டியா ஷியாம்? " !!!!


"அப்டியே தான்..


" சரி டா ஏதோ நல்லது நடந்தா சரி… "


"இப்படியும் ஒரு அம்மாவா? அப்டியே எங்க அம்மாக்கும் இதெல்லாம் சொல்லி குடுங்க… "


"கவல படாத ரெண்டு மூணு பிட் சேர்த்து போடறேன் உங்க அம்மா கிட்ட… "


"தெய்வமே உங்க சேவையை உங்க பையனோட வச்சிக்கோங்க… "


"சரி டா ரொம்ப வாயாடாம போன வை… "


"தேவைதான்" என புலம்பிக்கொண்டே போனை வைத்தான் ஷியாம்…


கார்த்திக் போனில் மிக பிசியாக சாட் செய்து கொண்டு இருந்தான்..


"மச்சி…... டேய் மச்சி… " அவனின் காதுக்கு மிக அருகில் சென்று கத்தினான் ஷியாம்…


"என்னடா? " காதை தேய்த்துக்கொண்டே எரிச்சலுடன் கேட்டான் கார்த்திக்.. அதுவும் கைகளில் இருந்த போனில் இருந்து கண்களை எடுக்காமல்…


"யார் கூட மச்சி இவ்ளோ நேரம் வறுத்துகிட்டு இருக்க? " கைகளை வறுப்பது போல் செய்து காட்டினான்…


"ஹ்ம்ம் உன் தங்கச்சி கூட தான் மச்சான்… " அவனை வெறுப்பேற்றும் வேலையை செவ்வனே செய்தான் கார்த்திக்


"டேய்" என கத்திகொண்டே டமால் டமால்னு முதுகுல துணி துவைச்சு எடுத்துட்டான் ஷியாம்…


"ஐயோ அம்மா என்னை யாராவது காப்பாத்துங்களேன்… டேய் போதும் டா நிறுத்து… எதுக்கு இப்போ முதுகுல சப்பாத்தி சுட்டுட்டு இருக்க? "


தன் மனைவி எப்படியும் அவனின் தங்கை முறை தானே என எண்ணியே அவ்வாறு கூறினான்… எதற்கு அடிக்கிறான் என யோசித்து கொண்டு இருந்தான் கார்த்திக்


"பின்ன என் தங்கச்சி கிட்ட கடல வருக்கறேன்னு என்கிட்டயே சொல்லுவயா? "


"டேய் இது உன் சொந்த தங்கச்சி இல்ல டா… பைரவி டா… " கார்த்திக் இதயத்தின் மேல் கைவைத்து அதிர்ச்சியுடன் கூறி பின் ஷியாமை முறைத்தான்..


"என்னது பைரவியா? அவங்க எப்போ என் தங்கச்சி ஆனாங்க? " அந்த அதிர்ச்சியை இவனும் பிரதிபலித்தான்..


"ஹீஹீஹீ மச்சான்…" கேவலமான ஒரு சிரிப்பு சிரித்தான் கார்த்திக்..


"தயவு செஞ்சி இப்டி வெக்க பட்டு கேவலமா இளிச்சி வைக்காத டா… முடியல…" இப்பொழுது ஷியாம் இதயத்தின் மேல் கை வைத்து வலிப்பது போல் சைகை செய்தான்..


"ஆனாலும் நீ ரொம்ப அடிச்சிட்ட மச்சான்… " முதுகை தேய்த்துக்கொண்டே புலம்பினான்..


"சரி சரி உன் லவ் ஸ்டோரிக்கு வா… "


"இப்போதைக்கு ஒன் சைடு தான் டா… நல்லா பேசுறா ஆனா எதுக்கோ தயங்குறா… அரவிந்த் கூட அவ கிட்ட பேசி இருப்பான் போல…" வெகு சாதரணமாக சொன்னான் கார்த்திக்..


"அரவிந்த் ஹா? உனக்கு சப்போர்ட் பண்ணியா?!!!!"


"ஆமா டா எனக்கும் அந்த டவுட் தான்… அவன் கிட்ட நிறைய மாற்றம் தெரியுது … "


"காரணம் அவந்திகா " சிம்பிளாக பதிலை கூறினான் ஷியாம்..


"சரியா சொன்ன…" உடனே ஒத்துக்கொண்டான் கார்த்திக்


"அங்க பாரு இன்னிக்கு பூரா அவங்க கூட தான் இருந்தான்… ரூம்க்கு வந்த பிறகும் அவங்க கூட தான் போன் பேசிட்டு இருக்கான்… "


ஷியாம் ஜன்னல் ஓரமாக நின்று கைகளை ஆட்டி ஆட்டி பேசி கொண்டு இருந்த அரவிந்த் காதுக்கு ஹெட் செட் போட்டு இருந்தான்… அதனால் தான் என்னவோ நேரில் பேசுவது போல் பேசினான்..


"ஹ்ம்ம்…. நல்ல ஜோடி தான்… ஆனா இவன் மனசுல என்ன இருக்கு தெரியலியே… அவங்க அம்மா எனக்கு போன் பண்ணி போட்டு வாங்குறாங்க…" ஷியாம்


"நீ என்ன டா சொன்ன" கார்த்திக்


"எனக்கு தெரிஞ்சத சொன்னேன்… " உண்மையை சொன்னேன்ற ரேஞ்சுக்கு பேசிவைத்தான்…


"பசிக்குது வாங்க டா போய் சாப்டு வருவோம்… " இவ்வளவு நேரமாக இவர்கள் பேசியதை அமைதியாக அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தவன் தன் வயிறு போட்ட சத்தத்தில் இவர்களை களைத்தான்…


"வா வருண் இப்போதைக்கு நீயும் நானும் தான் சிங்கிள்… இனிமே இந்த கமிட்டட் கிட்ட நமக்கு என்ன பேச்சு… " வருணின் தோளில் கை போட்டு கொண்டு கன்னத்தை பிடித்து கொஞ்சி பேசினான் ஷியாம்..


"ஆமா ஆமா வா போவோம்… " வருண் அழைக்க இருவரும் கிளம்பினர்…


"ஹேய் எங்க டா எங்களை விட்டுட்டு போறீங்க… " அரவிந்த் இப்பொழுது தான் இவர்களை திரும்பி பார்த்து கேட்டான்…


"நீங்கல்லாம் காதல் விருந்து சாப்பிடும் போது நாங்க ரெண்டு பரோட்டா கூட சாப்பிட கூடாதா? "


"வேணா ஷியாம் அதிகம் பேசுற… " அரவிந்த் கோவமாக பேசினான்


"நானா டா அதிகம் பேசுறேன்… ஒரு மணி நேரமா யாரு போன் பேசிட்டு இருந்தது? " ஷியாமும் கோவமாக பேசினான்…


"சாரி ஷியாம் ஏதோ இன்ட்ரெஸ்ட் ஹா பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல… ஆனாலும் நீ சொல்ற மாதிரி லவ்வுலாம் இல்ல டா… ஒரு பிரண்ட்லி டாக் தான்… இனி இப்டி சொல்லாத ஷியாம்… " அவனின் கோவத்தில் இவனின் கோவம் குறைந்து விளக்கம் அளித்தான்..


"நீ ஒத்துக்க மாட்ட… வாங்க போலாம் இதுக்கு மேல பேசினா எக்ஸ்ட்ரா ரெண்டு பரோட்டா தேவைபடும்… "

(எவ்வளவு நேரமாக எத்தனை பேருடன் மல்லுக்கட்டுவது ஷியாம் உனக்கு கண்டிப்பா ரெண்டு பரோட்டா எக்ஸ்ட்ரா உண்டு டா )


"ஜித்து கண்ணா… இங்க வந்து உட்காரு…" அவ்வளவு ஆசையாக மருமகனை அழைத்து பக்கத்தில் அமர்த்தினார் தாமரை…


"என்ன அத்தை? ஆட்ட மந்திரிச்சி நடு வீட்ல உட்கார வைக்குற? கண்டிப்பா விருந்து வைக்க இல்ல… விருந்துக்கு போட தான்னு நல்லா தெரியுது" தாமரை தன்னை இன்றைய நாளைப் பற்றி விசாரிக்க தான் என தெரிந்து பேசினான் ஜித்தேஷ்…


"என்ன டா உளறல் இது? எங்க கத்துக்கிட்ட இப்டி பேச? " பெங்களூரில் பிறந்து வளந்தவன் இப்படி பேசுவது அவருக்கு உளறலாக தான் தெரிந்தது..



"ஹாஹாஹா அதுவா நம்ம அவந்தி பிரண்ட்ஸ் கிட்ட தான்.. " சிரித்துக்கொண்டே கூறினான்..


"ரொம்ப லோக்கல் பசங்களா இருப்பாங்களோ? " விசாரிப்பை தொடங்கினார் தாமரை


"நீ கேட்க வந்தத தெளிவா கேளு அத்தை அத விட்டுட்டு சுத்தி வளைச்சி பேசிகிட்டு… உனக்கு அதெல்லாம் செட் ஆகல… "


"சரி டா சொல்லு அவங்க எந்த ஊர்? என்ன மனுசங்க? வசதி எப்படி? வீட்ல இருக்க மக்க மனுசங்க எப்படிபட்டவங்க? " மொத்தமாக கேட்டார்


"அத்தை உண்மைய சொல்லனும்னா எனக்கு அவங்க பேர் மட்டும் தான் தெரியும்… ஊர் பேர் ஏதோ சொன்னாங்க… மறந்துட்டேன்… " உண்மையில் அவனுக்கு எந்த விவரமும் தெரியவில்லை..


"என்ன கமல் இது இப்படியா மாப்ள கிட்ட உட்கார வச்சி என்கொய்ரி பண்ணுவ? " மனைவி செய்யும் தவறை சுட்டி காட்டினார் மணிவாசகம்..


"அது இல்லங்க… இன்னிக்கு எல்லாம் ஒன்னா சேர்ந்து நல்லா ஆட்டம் போட்டுட்டு வந்து இருக்குங்க… இதுல பாதி போட்டோ அந்த தம்பியும் நம்ம பொண்ணும் இருக்கற போட்டோஸ் தான்… அத தான் விசாரித்தேன்…"


(அட போங்கடா 4 போட்டோ எடுத்ததுக்கு இவங்க பண்ற அக்கபோர் தாங்கல.. 4 போட்டோ வா? 400 கு மேல போகுமே போட்டோ எண்ணிக்கை.. அட என் மைண்ட் வாய்ஸ் தான்ங்க)


"ஹ்ம்ம் நானும் பாத்தேன்.. இந்த பையன் நம்ம அவந்தி வழிக்கு வருவான்னு எனக்கு தோணல..

நம்ம பெண்ணுக்காக நாமளே அவங்க வீட்ல முறையா பேசிடலாம் என்ன சொல்ற?" மணிவாசகம் ஏற்கனவே யோசித்ததை கூறினார்..


"அதுவும் கரெக்ட் தான்… ஆனா நான் கேட்ட கேள்விக்கு யாருமே பதில் சொல்லலியே… " எதுவும் தெரியாமல் எப்படி ஒத்துக்கொள்வது எனும் குரல் தாமரையிடம்


"நான் சொல்றேன் மாம்… " அப்பொழுது தான் அரவிந்திடம் பேசி முடித்து கீழே வந்தவளுக்கு இவர்கள் பேச்சு காதில் விழ தானாகவே பதில் பேசினாள் அவந்திகா..


"அவர் பேர் அர்விந்த், அப்பா ராமராஜன் மிலிட்டரில இருந்து குண்டடி பட்டு வீட்டுக்கு வந்துட்டாரு, அம்மா ரோஜாவனம் பிளான்ட் நர்சரி வச்சி நடத்தறாங்க.. அவங்களுக்கு துணையா அவங்க கணவரும் பாத்துக்கறாங்க.. ஊரு தாம்பரம் டு செங்கல்பட்டு ரோட்ல பொத்தேரி… சொந்த வீடு இருக்கு… " சுருக்கமாக கூறினாள்


எல்லோரும் அவளை ஆஆஆஆ வென வாய் பிளந்து பார்த்தனர்…


"என்ன அப்டி பாக்குறீங்க? இதெல்லாம் பேசிக் இன்பர்மசன் மாம்… இன்னும் நிறைய தெரியும் எனக்கு… "


"அவந்தி… என்ன நினைக்குறார் மிஸ்டர் அரவிந்த் ? எனி ஐடியா?" மணிவாசகம் தான் கேட்டார்


"அவருக்கு லவ்வ புடிக்காம போக ஏதோ ஒரு ஸ்ட்ரோங் ரீசன் இருக்கு டாட்… அது என்னனு எனக்கு மட்டும் இல்ல அவர் கூட இருக்கற யாருக்குமே தெரியல"


"நீ என்ன யோசிக்கற அவந்தி? நாங்க என்ன செய்யணும்னு சொல்லு… வெயிட் பண்ணா ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் வருமா அவரோட மனநிலைல? " மணிவாசகம் தன் மகளுக்கு ஒரு காதல் வாழ்க்கை அமைய விரும்பினார்..


"கண்டிப்பா வராது டாட்… நீங்க எனக்கு ஒன்னு செய்யணுமே டாட்… "


"சொல்லு மா… "


"அவங்க வீட்ல பேசுறீங்களா? " கொஞ்சம் தயக்கமாக கேட்டாள்


"நானும் அத தான் செய்யனும் நினைச்சன்… "


"நல்ல விஷயம்ங்க… சீக்கிரம் பேசலாம்… நீ என்ன சொல்ற ஜித்து? " கணவனிடம் ஒத்துக்கொண்டு அதுவரை அமைதியாக இருந்த ஜித்தேஷிடம் கருத்து கேட்டார் தாமரை


"சூப்பர் அத்தை நானும் கூட வர்றேன்… இத பத்தி அரவிந்த் கிட்ட பேசணுமா அவந்தி? " அத்தையிடம் பதில் கூறி அத்தை மகளிடம் கேள்வி கேட்டான்


"இப்போ எதுவும் சொல்ல வேண்டாம் ஜிக்கி… இது அரேன்ஜ்ட் மேரேஜ் ஹா பண்ண முடியுமா டாட்? " அவளும் ஜித்தேஷை பாலோ செய்து பேசினாள்


"கண்டிப்பா டாம்மா… " வாஞ்சையாக தலையை தடவி பேசினார்…


"தேங்க்ஸ் டாட் தேங்க்ஸ் மாம்… " தாய் தந்தை இருவரையும் கட்டி அணைத்து சந்தோசத்தை காட்டினாள்..


"எனக்கு கிடையாதா? பூச்சி? " அத்தை மகளை வம்பிற்கு இழுத்தான் ஜித்தேஷ்


"உனக்கு கிடையாது போடா… " அவனை அணைப்பது போல் அருகே சென்று அணைக்காமல் வெறுப்பேற்றி சென்றாள்…


சந்தோசமாக பேசி சிரித்து உண்டு மகிழ்ந்து அனைவரும் அவரவர் ரூம் சென்றனர்…


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சந்தோஷம் அன்றைய பொழுதில் கிடைத்தது..


பைரவி கார்த்திக்கை கன்சிடர் செய்ய ஆரம்பித்து இருந்தாள்…


வேலன் தனக்கு ஒரு பெரிய பலம் கிடைத்தது போன்ற மனநிலையில் இருந்தான்.. அரவிந்தை அண்ணனுக்கும் அடுத்த ஸ்தானத்தில் வைத்து இருந்தான்… என்னதான் பைரவி அவனை தாய் போல் பார்த்துக்கொண்டு இருந்தாலும்… அவனுக்கு வயதுக்கு ஏற்ற அறிவுரைகள், அடுத்து என்ன என ஆலோசனை வழங்க என சிலவற்றிற்கு அரவிந்த் தேவை பட்டான்…


கார்த்திக்கு இதுவரை எப்படியோ இனி தனக்கு கல்யாண வாழ்க்கை என்றால் அது பைரவியுடன் தான் என தீர்க்க முடிவு கொண்டான்…


ஷியாம் வருண் இருவருக்கும் வித்தியாசமான ஒரு பிக்நிக் டே..

அனைவருடனும் நன்கு பழக கிடைத்த வாய்ப்பாகவே உணர்ந்தனர்…


ரேஷ்மி அவளுக்கு இதுவரை இப்படி ஜாலியாக பழகும் நண்பர்களை பார்த்ததே இல்லை எனலாம்… பணக்கார நண்பர்கள் தான் அவளுக்கு… ஒரு அளவுக்கு தான் பேசி பழகுவர்… இப்படி ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்து, காலை வாரி என அடித்த லூட்டிகள் இதுவே முதல் முறை… அதனால் தான் ஜித்தேஷை கூட டீலில் விட்டுவிட்டு மற்றவர்களிடம் ஒட்டிக்கொண்டாள்…


ஜித்தேஷிடமும் அன்று இரவு முழுசும் இதையே தான் பேசிக்கொண்டு இருந்தாள்…


ஜித்தேஷ்… அவனுடைய மன டைரியில் இதுவரை நிரப்பபடாத அனைத்து பக்கங்களும் ஒரே நாளில் நிரப்ப பட்டது போன்ற ஒரு மன நிறைவு அவனிடத்தில்…


அவந்திகா… என்ன சொல்வது இவளின் மனநிலையை நிறைய நிறைய சந்தோஷம் நிரம்பி வழிந்தாலும் ஒரு ஓரத்தில் அவனும் தன்னை விரும்பினால் நன்றாக இருக்குமே எனும் எண்ணம் எழாமல் இல்லை…


திருமண விஷயம் தெரிய வந்தால் எப்படி உணர்வான் அதை எப்படி தன்னிடம் உணர்த்துவான் என பல விதமாக யோசித்து யோசித்து அன்றைய இரவை பாதி தூங்கியும் பாதி கனவிலும் கழித்தாள்…


அரவிந்த்… இப்படி ஒரு பெண்ணை தன் வாழ்வில் சந்தித்ததே இல்லை என்று அடித்து கூறுவான்.. ரொம்பவும் அலட்டல் இல்லாமல், முதலாளி எனும் எண்ணம் இல்லாமல், சகஜமாக தன்னிடம் பேசியதை நிறைய நிறைய விரும்பினான்…


அவள் தன்னிடம் காட்டும் அன்பு பாசம் நட்பை… கட்டாயம் நேசமாக எண்ணவில்லை..


அவள் இது நேசம் தான் என அடித்து கூறும் பொழுது என்ன செய்வானோ? நேசத்தை ஏற்பானா? பாசம் மட்டும் போதும் என விலகி நிற்பானா? அன்றைய இரவின் குளிரில் நடுங்கும் வெண்ணிலாவும் இவர்களுடன் யோசித்து யோசித்து காலையில் காணாமல் போனது…
 
Top