அந்த நான்கு மாடிக் கட்டடத்தின் முன், தன் ராயல் என்ஃபீல்டு பைக்கை நிறுத்தி வைத்திருந்தான் கார்த்திக். இன்டெர்வியூ முடியும் வரை இங்கிருந்து நகர்ந்து விடாதே.. மீறினால் உன்னைக் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டுச் சென்றவள் இரண்டரை மணி நேரம் கடந்தும் இன்னும் வந்த பாடில்லை.
"இவள் ஒருத்தி! எங்க தான் போய்த் தொலைஞ்சாளோ.." வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் வாய் விட்டே புலம்பியவன் ஃபோனைப் பார்த்தபடி அலுவலக வளாகத்தில் இருந்த ஒரு மரத்தினடியில் நின்று கொண்டான்.
"போனவ இன்னும் வரல.. ஆபிஸ்க்குள்ள என்ன ஏழரையை கூட்டி வைச்சிருக்காளோ தெரியல.." என்றவனுக்கு, அவளைத் தேடி அலுவலகத்தினுள் புகவே பயமாக இருந்தது, என்றும் அவள் செய்யும் அரட்டைகளின் திட்டல்களை தானே சுமந்து கொள்ள வேண்டி வருவதால்..
கடுப்புடன் நின்றிருந்தவன் கண்களைக் கசக்கியபடி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவளைக் கண்டு அதிர்ந்து, அவளருகே ஓடினான்.
"என்னடி ஆச்சு.. எதுக்கு அழறே?"
"அந்த எம்.டி பொறுக்கி என்னை திட்டிட்டான்.. வெளியே போ'னு கழுத்தைப் பிடிச்சு தள்ளாத குறையா விரட்டி விட்டான்.." மூக்கை உறிஞ்சியபடி கூறினாள் கௌதமி.
அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்த கார்த்திக், "நீ என்னமா பண்ண.." என்று கேட்டபடி அவளின் கண்களை துடைத்து விட,
"நான் எதுவுமே பண்ணல.." விம்மியபடி கூறியவள், "நீயும், நான்தான் எதையாவது பண்ணி இருப்பேன்னு சந்தேகப் படறே இல்லையா.." என்று கோபமாகக் கேட்டாள்.
"அச்சோ.. அப்டி இல்லடி.." என்றவன், தன் கைகளைத் தட்டி விட்டு அங்கிருந்து நகர முயன்றவளின் முன்னால் வந்து நின்று, "நான் அப்டினு சொல்ல வரல.. அங்க என்ன நடந்துச்சுனு கேட்க வந்தேன்.. நியாயம் உன் பக்கம் இருந்தா அந்த எம்.டியை சும்மா விட்டுருவேனா சொல்லு.." என்று கேட்டான்.
"ஆமால்ல.." கண்கள் மின்னக் கேட்டவள், "என்ன நடந்துச்சுனு தெரியுமா.. அந்த இன்டெர்வியூக்கு நெறய பேர் வந்திருந்தாங்க கார்த்தி.. நான் கடைசி கட்டத்துல தான் அங்க போனேன். எனக்கு பின்னால ஒருத்தனோ ரெண்டு பேரோ தான் வந்திருந்தாங்க.. சரிதான்.. எனக்கு முன்னால இருக்கிறவங்க போய் வர வரைக்கும், இப்டி சும்மா உக்காந்து இருக்கிறதை விட கொஞ்சமா தூங்கி எழும்புவோம்னு நினைச்சேன்.. அது தப்பா?" என்று பாவமாக கேட்டாள்.
"போச்சுடா.." என்ற முனகியவன் அவளின் அப்பாவி முகத்தைப் பார்த்து திட்டக் கூட மனமின்றி, "இதுல என்ன தப்பிருக்கு? இதுக்கா அவன் உன்னை திட்டுனான்.." என்று கேட்டான். அந்த எம்டி மேல் நிஜமாவே எந்தவொரு தப்பும் இருக்காது என்ற சந்தேகம் இப்போது ஊர்ஜிதமாகி விட்டது போல் தோன்றியது அவனுக்கு.
இல்லை என்பது போல் இருபுறமும் மறுப்பாக தலை அசைத்தவள், "என்னோட டர்ன் வந்ததும் மேனேஜர் வந்து என்னைத் தட்டி எழுப்பி இருக்காரு, நான் அது என் பப்புத் தான்னு நினைச்சு.."
"அடிப் பாவி.. அவரைப் போய் ஹக் பண்ணிட்டியோ.." அதிர்ச்சியும் கலக்கமுமாய் கேட்டான்.
"அடச்சை! அப்டி எதுவும் நடக்கல டா.. அவரோட முடியைப் பிடித்து ஆட்டு ஆட்டுனு ஆட்டினேன். அப்றம் அந்தாளு கத்து கத்துனு காது சவ்வு கிழியிற அளவுக்கு கத்தினாரு.. பயந்து போய் கண்ணை திறந்தா அந்தாளு என்னை முறைச்சுட்டு நின்னுருந்தாரு.."
"ஹாஹா.."
"சிரிக்காதடா பன்னிப்பயலே.. நான் அவன் என்னைத் திட்டிட்டாங்கற கடுப்புல இருக்கேன்.." என்றவள், "அப்பறம் நான் எம்.டி நடக்குற ரூம்க்கு போனேன். அந்த எம்.டி என்ன சொன்னான் தெரியுமா.. வந்த வழியில அப்டியே திரும்பிப் போய்டு. உன்னை மாதிரி பொறுப்பு இல்லாதவளுக்கு இங்க வேலை இல்லேனு மனசாட்சியே இல்லாம சொன்னதும், என்னைப் பார்த்து எப்படி நீ பொறுப்பில்லாதவனு சொல்லுவனு கேட்டேன்.. அப்பறம் தான் ஒரு சின்ன வாய்த் தகராறு ஆகிடுச்சு.."என்றாள் கவலையுடன்.
'பாவம் அந்த எம்.டி..' மனதினுள் நினைத்தவன், "இதான் நடந்துச்சா.. எப்படியும் அந்த வாய்த் தகராறுல நீதான் வின் பண்ணி இருப்ப.. அப்பறம் அந்த எம்.டி உன் கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளாத குறையா விரட்டி விட்டாரு.. ரைட்?" என்று கேட்க, பெருமூச்சுடன் ஆமென்று தலை அசைத்தாள் கௌதமி.
"அப்பறம் எதுக்கு நீ இப்போ அழுத?"
"அழாம வேற என்ன பண்ண முடியும்? அவன் எப்படி என்னைப் பார்த்து பொறுப்பில்லாதவனு சொல்ல முடியும்.. என்னைப் பார்த்தா அப்டி தான் தெரியுதாமா அவனுக்கு.. அதான் கவலைல அழுதேன்.."
"அடிப்பாவி! ஒரு நிமிஷம் நீ விம்மி விம்மி அழறதை பார்த்து அவர் உன்னை அடிச்சிட்டாரோனு நினைச்சேன். கருமம்! இதுக்கு தான் நீ அழுது தொலைச்சியா?" மூக்கு விடைக்கக் கோபமாகக் கேட்டவன், "நின்னது போதும். வந்து தொலை.." என்று கொண்டு அவளை பைக்கருகே இழுத்து சென்றான்.
"நீ அவனை சும்மா விட மாட்டேன்னு சொன்னியே.. இப்போ கண்டுக்காம போற.."
"வாயை கிளராதடி எருமமாடு. உன்கிட்ட மாட்டிக்கிட்ட அந்த எம்டியை நினைச்சு நான் ரொம்பக் கவலைல இருக்கேன்.. இதுல நீ வேற கடுப்பேத்தாத.."
"என்னை நினைச்சு கவலைப்படாம, அவனை நினைச்சு நீ எதுக்குக் கவலைப்படனும்? அவன் என்ன உன் ஃப்ரண்டா?" என்று கேட்டவளை முறைத்தவன், "கௌதமி.." என்று கத்த,
"சரிடா கத்தாத.." என்றபடி அப்பாவியாய் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டாள் கௌதமி. இவளை சமாளிப்பதற்கு பதிலாக தலையை எங்காவது முட்டிக் கொள்ளலாம் என்று தோன்றியது அவனுக்கு.
"பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு, எதுவும் தெரியாத மாதிரி மூஞ்சை அப்படியா தூக்கி வைச்சுக்க வேண்டியதும், விம்மி விம்மி அழ வேண்டியதும்.." வாய்க்குள் முனகியபடி பைக்கை எடுத்தான் கார்த்திக்.
"எங்க போறோம்?" பாதி தூரம் வரை வந்து விட்ட பிறகு, அவன் மேலிருந்த கோபத்தை ஒரு புறமாக தள்ளி வைத்து விட்டு அவளே கேள்வி எழுப்ப,
"சுடுகாட்டுக்கு.." என முனகினான் கார்த்திக்.
"ஏதாவது சொன்னியாடா நல்லவனே.. எனக்கு சரியாக் கேட்கல.." அவன் முனகியது கேட்காததால் அவள் கேட்க
"வீட்டுக்கு போறேன்னு சொன்னேன்டி.." என்றான்.
"ப்ச்! இப்போவே வீட்டுக்கு போகாதடா.. பப்புக் கிட்டயும் இங்க ஆபீஸ்ல நடந்த விஷயத்தை சொல்லணும் இல்லையா.. அதுக்கு கொஞ்சம் எனர்ஜி தேவைப்படுது.. உனக்கும் வண்டி ஓட்ட எனர்ஜி தேவைப்படும் இல்லையா.. ஸோ வண்டியை அந்த ஐஸ் கடை பக்கத்துல நிறுத்து.. வெயிலுக்கு இதமா, ஐஸ் சாப்பிடுவோம்.."
"இவ்ளோ பெருசா லெட்ச்சர் கொடுக்குறதை விட நீ நேரடியாவே ஐஸ் சாப்பிடணும் கார்த்தினு சொல்லி இருக்கலாம்.." என்றபடி பைக்கை ஐஸ் வண்டி முன்னால் நிறுத்தினான் கார்த்திக்.
அவனைக் கண்டு கொள்ளாமல் பைக்கில் இருந்தபடியே ஐஸ் கடைக்காரனின் புறமாக திரும்பியவள், "அண்ணா ரெண்டு சாக்லேட் ஐஸ் கொடுங்கணா.." என்று கூறிவிட்டு, "நீயும் சாப்பிடறதா இருந்தா கூச்சப்படாம வாங்கிக்க நல்லவனே.." என்று பல்லைக் காட்டியபடி கூறினான்.
"ஓஓ, மேடம் தான் காசு கொடுப்பீங்களாக்கும்.." என கேலியாகக் கூறியவன் தனக்கும் ஒரு ஐஸ் க்ரீமை வாங்கி சுவைக்க தொடங்கினான்.
"வண்டியை நிழல் இருக்கிற மரத்தடியில நிறுத்து" என்றவள் அவனின் கையிருந்த ஐஸையும் பறித்துக் கொள்ள
"இன்னைக்கு என்னோட வால்லட்டை காலியாக்காம விட மாட்ட போல இருக்கு.." என்றபடி பைக்கை தள்ளிக் கொண்டு மரத்தடிக்கு சென்றவன் மறக்காமல் அவள் தன்னிடமிருந்து பறித்தெடுத்த ஐஸ் க்ரீமை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான்.
"என்னோட பப்லு எப்போடா ஊருக்கு வருவாரு?" சில நொடிகள் கழிந்த போது அவள் கேட்டாள்.
சட்டென முகம் சுருக்கி சோகமானவன், "எனக்கு எங்கேடி தெரியும்? வரேன் வரேன்னு சொல்றாரே தவிர வரவே மாட்டேங்கறாரு.. அவரு ஊருக்கு வந்தே ரெண்டு வருஷம் ஆகிடுச்சு. நானாகவே போய் அவரைப் பார்த்துட்டு வந்ததோட முடிஞ்சுடும்.." எனக் கூறினான்.
"நிலைமை இப்டியே போச்சுன்னா நான் எப்போதைக்குடா அவரை இம்ப்ரெஸ் பண்ணி, லவ் பண்ணி, ப்ரொபோஸ் பண்ணி கலியாணம்லாம் பண்ணிக்கிறது?" தன் மனதில் தோன்றியதை வெளிப்படையாகவே கூறியவளுக்கு அழுகை வந்து விடுவது போல் இருந்தது. தன் மனம் கவர்ந்தவனைக் காண சந்தர்ப்பம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் வந்த அழுகை அது!
"எனக்கு தெரியல கௌதமி.. டிரான்சர் வாங்கிட்டு இங்கயே வந்திடுன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாரு.."
கௌதமி எதுவும் பேசாமல் அமைதியாக ஐஸ் க்ரீமை சுவைத்தாள். ரசித்து சாப்பிடும் ஐஸ் கூட கசப்பது போல் தோன்றியது. அவளின் அமைதியான முகம் அவனுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.
"உன்கிட்ட அவரோட நம்பர் தான் இருக்குல்ல? இவ்ளோ ஏக்கம், எதிர்பார்ப்புகள் உனக்குள்ள இருக்குன்னா ஒரு வாட்டியாவது அவனுக்கு கால் பண்ணி பேசிடு கௌதமி.. அவரோட குரலைக் கேட்டாலும் போதும்னு சொல்லுறியே.. அப்பறம் எதுக்கு நான் அவர்கிட்ட நேர்ல தான் பேசுவேன்னு அடம் பிடிக்கிற.. பேசாம அவருக்கு கால் போட்டு ரெண்டு வார்த்தை பேசிட்டு ராங் நம்பர்னு சொல்லி ஃபோனைக் கட் பண்ணிடு.."
அவன் கூறியது அவளுக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை. இன்னொரு முறை தன் மனம் கவர்ந்த காளையை நேரில் கண்டதும் அவனிடம் தன் காதலை உணர்வுபூர்வமாக கூறி முடிக்க வேண்டும் என்ற பேராவலில் இருப்பவளுக்கு, அவனிடம் ஃபோனில் பேச மனம் ஒப்பவில்லை.
"சரிடா நல்லவனே.." சுரத்தையில்லாத குரலில் கூறிய கௌதமி, அமைதியாக பைக்கில் ஏறி அமர்ந்து கொள்ள
"ரெண்டே ரெண்டு ஐஸ் தான் சாப்பிட்ட.. போதுமா.. இன்னும் இரண்டு வாங்கித் தரவா?" என்று கேட்டான் கார்த்திக். என்று ஐஸ் க்ரீம் சாப்பிடவென்று இந்த இடத்துக்கு வந்தாலும் நாலைந்து ஐஸ் க்ரீம்களை சாப்பிடாமல் நகராதவள், இன்று வெறும் இரண்டே ஐஸோடு நிறுத்திக் கொண்டது கூட அவனுக்கு கவலையை வரவழைத்தது.
"ரொம்ப பண்ணாதடா நல்லவனே.. எனக்கு இப்போவே பப்புவை பார்க்கணும் போல இருக்கு.. சீக்கிரம் வண்டியை எடுத்தா மட்டும் போதும்.." சிரிப்புடன் கேலியாகக் கூறியவள், நடு பாதையென்றும் பாராமல் அவனின் தலை முடியை கொத்தாகப் பிடித்து ஆட்டினாள்.
அவளின் புன்னகையில் முகம் மலர்ந்தவன் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டான். ராயல் என்ஃபீல்டு காற்றை கிளப்பிக் கொண்டு அங்கிருந்து பறந்தது.
தொடரும்.