கையிலிருந்த பழரசத்தை மிகவும் ரசித்து அருந்திக் கொண்டிருந்தான் விஜய ஆதித்யன். தனக்குப் பிடித்த ஆப்பிள் ஜூஸ் என்பதால் மிடறு மிடறாக உள்ளெடுத்து, நிதானமா விழுங்கினான்.
அவனைக் கடுப்புடன் ஏறிட்ட வர்ஷினி, "நான் சொல்லுறது உனக்கு புரியுதா இல்லையா விஜய்.." என்று கத்த, பார்வையை தூக்கி அவளைப் பார்த்தவன், "ஆமா நீ என்ன சொன்ன?" என்று கேட்டான்.
டென்ஷனில் வெடித்துச் சிதறவிருந்த தலையை அழுத்தமாகப் பற்றியவள், "ப்ளீஸ் லிஸன் விஜய். டாடி இப்போல்லாம் என்னோட கலியாணத்தைப் பத்தி பேசிட்டே இருக்காரு. எனக்கு வரன் பார்க்கக் கூட ஸ்டார்ட் பண்ணிட்டாராம்.. வேற ஒரு புது மெம்பர் என்னோட லைஃப்ல என்டர் ஆகுறது எனக்குப் பிடிக்கல. அவனால என்னோட ஃப்ரீடம் தொலைஞ்சு, என்னோட நிம்மதி கெட்டுப் போய்டுமோனு ரொம்ப பயப்படறேன். நான் உன்கிட்ட ஆல்ரெடி சொன்னது தான். நம்ம பிரண்ட்ஷிப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டு போய் லைஃப்ல செட்டில் ஆகினா நல்லதுன்னு நினைக்கிறேன்.. நீ என்ன சொல்லுற?" இழுத்துப் பிடித்த பொறுமையுடன் கேட்டாள்.
"ஒருவேளை உன்னோட ஃப்ரீடம், நிம்மதி எல்லாம் என்னால தொலைஞ்சு போச்சுன்னா.."
"இட்ஸ் இம்போசிபிள்! என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சு வைச்சிருக்கிறது நீதான். உன்னை மிஸ் பண்ண எனக்கு மனசில்லை.. இது லவ்வானு கேட்டா சத்தியமா இல்லைனு தான் சொல்லுவேன். நம்மளோட லவ், ஆஃப்டர் மாரேஜ் லவ்வா கூட இருக்கலாம் இல்லையா.. ஐம் சுயூர், உனக்கு நல்ல ஒய்ஃப்பா இருப்பேன்.. உன் கேரியருக்கு பொருத்தமாக, தைரியமான பொண்ணா இருப்பேன். எல்லா விதத்துலயும் சப்போர்ட்டா இருப்பேன்.."
நெற்றியில் கீறிட்டபடி யோசித்தான் விஜய். அவனது வாழ்விலும் வர்ஷினியைத் தவிர வேறெந்த பெண்ணுக்கும் இத்தனை இடம் கொடுத்ததில்லை அவன். கொடுக்கவும் தயாராய் இல்லை.. அதற்கென்று தூய்மையான நட்பை கலங்கம் செய்யவும் மனம் வரவில்லை அவனுக்கு.
"இல்ல வர்ஷ்.. என்னைக்கும் நீ என்னோட ஃப்ரண்ட் மட்டும் தான்.. பியூர் பிரண்ட்ஷிப்பை பிரேக் பண்ணிக்க நினைக்காத.." இதற்கு மேல் பேசுவதற்கு எதுவுமில்லை என்பது போல் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து நின்றான்.
வர்ஷினி எதுவும் பேசவில்லை. அவன் முடியாது முடியாது என்று மறுக்கும் போது அவனைக் கட்டாயப்படுத்துவதில் விருப்பமில்லை அவளுக்கு.
"அன்ட், யூ நோ ஒன்திங், உங்க டாடி கிட்ட நான்தான் உங்க பொண்ணுக்கு எப்போ கலியாணம்னு கேட்டேன் வர்ஷ்.. அவரு கூட நீ பேசுன அதே லைன்ஸை அவரும் என்கிட்டே சொன்னாரு. நீயும் வர்ஷினியும் லைப்ல செட்டில் ஆகினா பேர்ஃபேக்டா இருக்கும்னு வேற சொன்னாரு.. உனக்கு சொன்ன அதே பதிலை தான் உன் டாடிக்கும் சொன்னேன். ஸோ டாடி கை காட்டுற பையனை கட்டிக்கோ.. இல்லேன்னா சொல்லு, நானே உனக்கு நல்ல பையனா தேடித் தரேன்.."
வர்ஷினி அவனை முறைத்தாள். கீழுதட்டை வளைத்தபடி சிரித்தவன் கண் சிமிட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட, "இவனை!.." என பற்களை அறைத்தாள் வர்ஷினி.
•••°•°•••
என்றும் போல் அழகாய் தான் அந்த விடியல் விடிந்தது கௌதமிக்கு.
எழுந்ததும் வாசலுக்கு வந்தவளை ஓடோட விரட்டிய பழனி, "மரியாதையா போய் பிரெஷ் ஆகிட்டு வா பாப்பா.." என்று கூற, சலிப்புடன் சென்று குளித்து விட்டு வந்தவள் பழனி ஊட்டிய உப்புமாவை சாப்பிட்டுக் கொண்டே பேச்சை ஆரம்பித்தாள்.
"பப்பு.."
"சொல்லுடா பாப்பா.."
"பப்லுவை எப்படியாவது இங்கே வர வைக்கிறதாவும், என்னையும் அவரையும் எப்படியாவது சேர்த்தி வைக்கிறதாவும் கார்த்தி எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்தான் பப்பு. ஆது வேற நேத்து நைட்டு வீட்டுக்கு வந்திருந்தா... அவ கூட, அவரு இனி எப்போ இங்க வரப் போறாரோனு ரொம்ப கவலைப்படறா.."
பழனி பெருமூச்சு விட்டார். அதன் பிறகு கௌதமியும் எதுவும் பேசவில்லை. ஊட்டி விட்டதை அமைதியாய் உண்டு முடித்தவள் கார்த்திக்கைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு வெளியேறி சென்றாள்.
"இவன் ஏன் ஃபோனை எடுக்க மாட்டேங்கறான்?" என முனகியபடி அவர்களின் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள், வீடு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருப்பது கண்டு யோசனையானாள்.
மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைப்பு விடுத்துப் பார்த்தவள் அவன் அழைப்பை ஏற்காமல் போனதும், "சதுவுக்கு கால் பண்ணிப் பார்ப்போமா.. வீட்டுல யாரையும் காணும். எங்காவது போய்ட்டாங்களா தெரியலையே.." என்று யோசித்தாள். சாதுர்யாவுக்கு அழைப்பு விடுக்க மனம் இடம் தரவில்லை என்றாலும் அதை விட்டால் வேறு வழியில்லை என்பதால் அவளுக்கு அழைப்பு விடுத்தாள்.
அழைப்பு சென்று நின்று போகும் தருணத்தில் அழைப்பு ஏற்கப்பட்டது.
"கௌதமி.. அ.. அண்ணாவுக்கு ஆக்சிடண்ட்.. நீ.. நீ மேகா ஹாஸ்பிடலுக்கு வந்திடு.." இவள் பேசும் முன்பே பதட்டமாக பேசி விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள் சாதுர்யா. கௌதமியில் கையிலிருந்த ஃபோன் நழுவி கீழே விழுந்து உடைந்து போனது.
'அண்ணனுக்கு என்றாளே! அந்த அண்ணன் யார்.. கார்த்தியா.. இல்லையென்றால் என்னோட பப்லுவா.. சது கார்த்தியை மட்டும் தானே அண்ணானு கூப்பிடுவா.. அப்படின்னா.. அப்படின்னா கார்த்தி..' நினைக்கும் போதே கால்கள் இரண்டும் வலுவிழந்து கைகள் நடுங்க ஆரம்பித்தது.
'கார்த்தி', 'கார்த்தி' என புலம்பியபடி தன் வீட்டை நோக்கி ஓடியவள் விடயத்தை பழனியிடம் கூறக் கூட நேரமின்றி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கொண்டு ஹாஸ்பிடலை நோக்கி விரைந்தாள். போகும் வழி முழுதும் தனக்குத் தெரிந்த எல்லாக் கடவுள்களையும் துணைக்கு அழைத்து உதவி வேண்டினாள்.
ஹாஸ்பிடல் முன் ஸ்கூட்டியை நிறுத்தி இறங்கிக் கொண்டவள் ஸ்டாண்ட் போட்டு அதை நேராக நிறுத்த நேரமின்றி அதை அப்படியே விட்டு விட்டு உள்ளே ஓடினாள். ரிசெப்ஷனில் கார்த்திக் இருக்கும் அறையை கேட்டறிந்தவள், அவன் ஐசீயூவில் என்றதும் அவசரப் பிரிவை நோக்கி ஓடினாள்.
ஆதர்யாவின் தோளில் சாய்ந்தபடி சாதுர்யா அழுது கொண்டிருக்க, செல்வநாயகம் தன் மனைவி யமுனாவை தோளில் சாய்த்து ஆறுதல்ப்படுத்திக் கொண்டிருந்தார்.
"கா.. கார்த்தி'க்கு என்னாச்சு ஆது.." பதட்டமாக கேட்டபடி அவர்களை நெருங்கி வந்த கௌதமி, ஆதர்யாவின் தோளில் கை வைத்து வேகமாக உலுக்கினாள்.
"அவனோட பைக் கார்ல மோதிடுச்சு கௌதமி.." விம்மி வெடித்த அழுகையுடன் கூறியவள், "என்ன யோசனைல போனான்னு தெரியல. முச்சந்தியைக் கடக்கும் போது ஆக்சிடண்ட் நடந்திருக்கு போல.. அந்த கார் காரன் ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு வண்டியை ஓட்டி இருக்கான்.. யாரோ.. யாரோ ஒருத்தங்க சதுவோட நம்பருக்கு கால் பண்ணி கார்த்திக்கை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணதா சொல்லி இருக்காங்க.. " என்றாள். அடிக்கடி கண்களில் வழிந்த கண்ணீரை புறங்கைகளால் துடைத்துக் கொண்டாள்.
"டாக்டர் என்ன சொ.. சொன்னாரு.."
'கார்த்தி.. உனக்கு எதுவும் ஆகாதுடா..: என்றபடி கதறி அழுத மனதை ஆறுதல்ப் படுத்த முடியாமல் வாயில் கை வைத்து அழுதபடி கேட்டாள் கௌதமி.
"இன்னுமே டாக்டர் வெளிய வரல கௌதமி.."
யமுனாவின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்ட கௌதமி, யாமினியின் தோளை வருடி விட்டபடி, "ப்ளீஸ் அழாதீங்க ஆண்ட்டி. கார்த்திக்கு எதுவும் ஆகாது.." என்று அழுதுகொண்டே கூற,
"காலைலயே எங்க போறேன்னு கூட சொல்லாம புறப்பட்டு போனான்மா. உன்னைப் பார்க்க தான் வரானா இருக்கும்னு நானும் பெருசா கண்டுக்காம விட்டுட்டேன். என் பையன் பாவம். அவனுக்கு எதுவும் ஆகக் கூடாது.." கண்களை துடைத்தபடி, உள்சென்ற குரலில் கூறினாள் யமுனா..
அரைமணி நேரம் கடந்த போது, ஐசீயூ வார்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார் வைத்தியர். செல்வநாயகம் வேகமாக எழுந்து நின்று அவரை பதட்டத்துடன் ஏறிட்டார். 'அவன் எப்படி இருக்கிறான்.. ' என்று கேட்கக் கூட நா எழவில்லை அவருக்கு..
கையில் இருந்த க்ளவுஸைக் கழற்றியபடி விழிகளை சுழற்றிய வைத்தியர், "கம் டு மை கேபின் சார்.." என்று கூறிவிட்டு முன்னே நடக்க, என்னவோ ஏதோவென்று அவரைப் பின் தொடர்ந்தார் செல்வநாயகம். சிறு விடயத்துக்கும் அதிகளவில் உடைந்து போவது யமுனாவின் குணம். அதைப் பற்றி அறிந்திருந்தபடியால் செல்வநாயகத்தின் பின்னாலே செல்லப் போனவளின் கையைப் பிடித்து தன்னருகே அமர வைத்துக் கொண்டாள் கௌதமி.
இருக்கையைக் கண் காட்டி விட்டு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார் வைத்தியர்.
"டாக்டர் என் பையன்.." தயக்கமாக இழுத்தார் செல்வநாயகம். வைத்தியரின் அமைதி ஏதோவொன்றை தன்னிடம் கூற வருவதாய் உணர்ந்தார்.
"ஒரு டாக்டரா இருந்துக்கிட்டு நான் இப்டி சொல்லுறது நல்லதில்ல தான். எல்லாமே கடவுள் கைல இருக்கு. நாம என்ன பண்ண முடியும் செல்வநாயகம் சார்.."
"பையனுக்கு.." படபடப்புடன் கேள்வி எழுப்ப,
"வெளியால அவ்ளோ பெருசா காயங்கள் எதுவுமில்லாத மாதிரி தெரிஞ்சுது. ஆனா உள்காயங்கள் நிறைய ஏற்பட்டு, இரத்தம் மூளைக்கு இறங்கியிருக்கு. எவ்ளோ ட்ரை பண்ணிட்டோம். எங்களால உங்க பையனை.."
"டாக்டர்.." வேகமாக இருக்கையை விட்டு எழுந்து நின்றார். தன் காதால் கேட்டது பொய்யாக இருக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது அவருக்கு.
"ஐம் சாரி.. இன்னும் ஒருமணி நேரத்துக்கு மேல பேஷன்ட் உயிரோட இருப்பாரான்னு நம்மளால சொல்ல முடியல. பேச வேணுமானதை, பேஷன்ட் கண்ணு முழிச்சதும் பேசுங்க. அவரு பிழைக்கிறதும் பிழைக்காததும் கடவுள் கைல தான் இருக்கு"
கண்களை துடைத்தபடி அறையை விட்டு வெளியேறினார் செல்வநாயகம். இதைத் தன் காதால் கேட்பதற்கு பதில் செத்தே போயிருக்கலாம் என அவரது தந்தை மனம் விம்மியது. உடைந்து அழுது விட்டால் மற்றவர்களை ஆறுதல்படுத்துவது யாரென்று எண்ணி கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.
வெளியே வந்ததும் அவரது கையைப் பற்றிக் கொண்ட யமுனா, "நம்ம பையனுக்கு எதுவும் ஆகலல.. அவன் நல்லாத்தான் இருக்கான்னு டாக்டர் சொன்னாங்க தானே.." என்று கெஞ்சலாகக் கேட்டாள். அவர் ஆமென்று கூறி விட வேண்டுமென்று அவளது தாய் மனம் துடித்தது. மற்ற மூவரும் அவரின் பதிலை எதிர்ப் பார்த்து அவரையே பார்த்திருந்தனர்.
"அவனுக்கு எதுவும் ஆகலையாம் யமுனா. அவன் கண்ணு முழிச்சதும் போய் பேசுங்கன்னு சொன்னாரு. நீங்களும் அழுது அவனையும் டென்ஷன் ஆக்கிடாதிங்கனு சொன்னாரு. ப்ளீஸ் கண்ணை துடச்சிட்டு போய் கார்த்தி கூட பேசிட்டு வா.."
நெஞ்சில் கை வைத்து கடவுளுக்கு நன்றி செலுத்திய யமுனாவைக் குற்ற உணர்ச்சி மேலிட நோக்கினார் செல்வநாயகம். கார்த்திக் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் நம்முடன் இருக்கப் போவதில்லை என்று கூறினால் முற்றாக உடைந்து விடுவாள். அதன் பிறகு இறுதியாய் அவனிடம் கூட இரண்டு வார்த்தைகளை பேசாமல் போய் விடுவாள் என்பதை அறிந்திருந்தபடியால் இப்படியொரு பொய்யைக் கூறினார்.
கடவுள் இரக்கப்பட்டு கார்த்திக்கின் வாழ்நாளை நீடித்து விடக்கூடாதா என ஏங்கியபடி மனைவியின் கரத்தைப் பற்றி அழுத்த, மலர்ந்த புன்னகையுடன் ஐசீயூ வார்டினுள் உள்நுழைவதற்கான பச்சை நிற உடையை, தான் அணிந்திருந்த சேலைக்கு மேலால் அணிந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
தன்னருகே அரவம் கேட்டுக் கண்களை திறந்த கார்த்திக், தாயைப் பார்த்து புன்னகைக்க முயன்றான். வைத்தியர் விடயத்தை முதலில் அவனிடம் தான் கூறியிருந்தார். இந்தக் குடும்பத்துடன் ஒன்றாய் இருக்காமல் இறந்து விடப் போகிறோமே.. என்னை விட அபாக்கியசாலி இவ்வுலகில் வேறு யாருமே இருக்க மாட்டார்கள் என நினைக்கும் போது அழுகையாய் வந்தது கார்த்திக்கிற்கு!
கார்த்திக்கின் கன்னத்தை வருடி முத்தமிட்ட யமுனா, "கொஞ்ச நேரத்துல ரொம்ப பயம் காட்டிட்ட கண்ணா.. ஆனா எனக்கு தெரியும். நீ நம்ம யாரையும் தனியா விட்டுட்டு எங்கயும் போக மாட்டேனு.." என்று கூற, அவளின் பேச்சை வைத்தே அவளுக்கு இந்த விடயம் பற்றித் தெரியாது என்பதை புரிந்து கொண்டவன் லேசாக புன்னகைத்தான்.
அப்போது கதவை திறந்து கொண்டு புயலென உள்ளே நுழைந்தான் விஜய ஆதித்யன்.
தொடரும்.